Thursday, 27 March 2014

வாழ்நாள் வளம் பெற


மனிதனுக்கு எண்ணற்ற இன்னும் எல்லையற்ற விருப்பங்கள் உண்டு மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை பதவியாசை புகழாசை என்றுஅவனின் ஆசைப்பட்டியல் நீளமாகும். ஆனாலும் அவன் அதிகம் ஆசைப்படுவது தன் உயிரைத்தான். எனவேதான் அவனுடைய உயிருக்கோ உடலுக்கோ ஏதேனும் ஆபத்தென்றால் அதைவிட்டும் தன்னை தற்காத்துக்கொள்ள என்ன செய்யவும் தயாராகிவிடுகிறான். ஆனால் மனிதனின் விருப்பத்திற்கு மாறாக சமீக காலமாக மனிதனுடைய ஆயுள் வெகு விரைவில் முடிந்து திடீர் மரணம் நிகழ்ந்து இளம் வயது மரணங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது இந்த சூழ்நிலையில் நாம் விரும்பும் நீடித்த ஆயுள் பெற செய்ய வேண்டிய அமல்கள் என்ன? வாழ்வில் கொண்டு வர வேண்டிய குணங்கள் எவை? இவற்றை நாம் தெரிந்து கொள்வது காலத்தின் அவசியமாகும்

மனிதர்களில் சிறந்தவரும் பாக்கியசாலியும் யார்?

وعن عبد الله بن يسر قال : جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال : أي الناس خير ؟ فقال : " طوبى لمن طال عمره وحسن عمله

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் மனிதர்களில் சிறந்தவர் யார் என்று கேட்டார்? நபி அவர்கள் சொன்னார்கள் எவருடைய ஆயுளும் நீண்டு அவரின் அமல்களும் அழகானதோஅவர் தான் மனிதர்களில் சிறந்தவர் என்றார்கள் .

நூல்.  திர்மிதி. 2252 .
  
நீடித்த ஆயுளை விரும்புவது குற்றமல்ல. மாறாக அது வரவேற்கப்படவேண்டிய ஒன்று எனவே தான் எல்லா ஸாலிஹீன்களும் இதை விரும்பி இருக்கின்றார்கள் .

நபிமார்களும் கூட இந்த பேற்றினை ஆசைப்பட்டிருக்கின்றார்கள்

عن
 أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " لما خلق الله آدم ونفخ فيه الروح عطس فقال : الحمد لله فحمد الله بإذنه فقال له ربه : يرحمك الله يا آدم اذهب إلى أولئك الملائكة إلى ملأ منهم جلوس فقل : السلام عليكم . فقال : السلام عليكم . قالوا : عليك السلام ورحمة الله . ثم رجع إلى ربه فقال : إن هذه تحيتك وتحية بنيك بينهم . فقال له الله ويداه مقبوضتان : اختر أيتهما شئت ؟ فقال : اخترت يمين ربي وكلتا يدي ربي يمين مباركة ثم بسطها فإذا فيها آدم وذريته فقال : أي رب ما هؤلاء ؟ قال : هؤلاء ذريتك فإذا كل إنسان مكتوب عمره بين عينيه فإذا فيهم رجل أضوؤهم - أو من أضوئهم - قال : يا رب من هذا ؟ قال : هذا ابنك داود وقد كتبت له عمره أربعين سنة . قال : يا رب زد في عمره . قال : ذلك الذي كتبت له . قال : أي رب فإني قد جعلت له من عمري ستين سنة . قال : أنت وذاك . قال : ثم سكن الجنة ما شاء الله ثم أهبط منها وكان آدم يعد لنفسه فأتاه ملك الموت فقال له آدم : قد عجلت قد كتب لي ألف سنة . قال : بلى ولكنك جعلت لابنك داود ستين سنة فجحد فجحدت ذريته ونسي فنسيت ذريته " قال : " فمن يؤمئذ أمر بالكتاب والشهود " رواه الترمذي

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களிடம் அவனுடைய இரு கைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் இரு கைகளில் எது வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள் என்றான் அப்பொழுது ஆதம் நபி இறைவனின் வலது கையை தேர்வு செய்து விட்டு என் ரப்பின் இரு கைகளிளுமே பரக்கத்தானது. வலது கைதான் என்றார்கள் அப்பொழுது அல்லாஹ் அந்த கையை விரித்தான் அதிலே ஆதம் நபியின் தோற்றமும் அவர்களின் சந்ததிகளின் தோற்றங்களும் இருந்தன இவர்கள் அனைவரும் உனது சந்ததிகள் என்றான் . அதிலே ஒவ்வொரு மனிதனின் வயதும் இரு கண்களுக்கு இடையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவற்றில் ஒரு மனிதருடைய தோற்றம் மிக பிரகாசமாக இருந்தது அதை கண்ட ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் இந்த மனிதர் யார் என்று கேட்ட பொழுது அல்லாஹ் சொன்னான் இவர் உன்னுடைய சந்ததியில் பிறக்கவிருக்கும் தாவூது என்பவராவார் நான் அவருக்கு 40 வயதை எழுதி இருக்கின்றேன் அப்பொழுது ஆதம் அல்லாஹ்விடம் அவரின் ஆயுளை அதிகப்படுத்து என்றார்கள் அல்லாஹ் சொன்னான் நான் அவரின் ஆயுளை தீர்மானித்து விட்டேன் எனவே நான் அதை அதிகப்படுத்த மாட்டேன் என்றான் உடனே ஆதம் அல்லாஹ்விடம் ரப்பே என் வயதில் 60 வயதை அவருக்கு நான் கொடுக்க தயாராக இருக்கின்றேன் என்று கூறிய பொழுது அல்லாஹ் அதை ஏற்றுக் கொண்டான் ஆதமின் 60 வயதை தாவூதுக்கு கொடுப்பதாக சொல்லி விட்டான் இதற்குப் பின் ஆதம்நபி  சொர்க்கத்தில் தங்கினார்கள் பின்பு அதை விட்டும் இறங்கி உலகத்திற்கு வந்து விட்டார்கள் உலகம் வந்த பின் தனது வயதை கணக்கிட்டுக் கொண்டே இருந்தார்கள் அவர்களின் வயது 940 அடைந்த பொழுது மலக்குல் மவ்த் அவர் உயிரை கைப்பற்ற வந்தார்கள் அவரிடம் ஆதம் (அலை) அவர்கள் எனக்கு ஆயிரம் வயது எழுதப்பட்டிருக்கின்றது ஆனால் நீர் அவசரப்பட்டு முன்னாடியே வந்துவிட்டீர் என்று கூறினார்கள். மலக்கு சொன்னார் அது உண்மைதான் ஆனாலும் நீங்கள் உங்கள் மகன்  தாவுதுக்கு 60 வயதை கொடுத்துவிட்டீர்கள் என்று கூறினார்.அதை ஆதம் நபி மறுத்தார் மறந்துவிட்டார். எனவே அவரின் சந்ததிகளித்திடலும் மறுக்கவும் மறதி நிலையும் உண்டானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதற்கு பின் தான் மக்கள் ஒப்பந்தம் உடன்படிக்கை போன்றவற்றை எழுதவும் சாட்சிகளை நியமிக்கவும் ஏவப்பட்டார்கள்.

நூல். திர்மிதி. மிஸ்காத்.

ஆதம் (அலை) அவர்களுக்கு 1000 வயதை பூர்த்தியாக்கியதாகவும். தாவூத் நபிக்கு 100 வயதை பூர்த்திசெய்ததாகவும் மஜ்மவுஸ் ஸவாயித் எனும் நூலில் ஒரு ஹதீஸ் வந்துள்ளது..


َنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَام فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَفَقَأَ عَيْنَهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ إِلَيْهِ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَهْ قَالَ الْمَوْتُ قَالَ فَالْآنَ فَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ يُدْنِيَهُ مِنْ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الْكَثِيبِ الْأَحْمَرِ -  النسائي

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

'மலக்குல் மவ்த்' (உயிரை எடுத்துச் செல்லவரும் வானவர்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்தபோது மூஸா(அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்துவிட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, 'மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்" என்று கூறினார். இறைவன், 'நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரின் கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவிற்கு) அவரின் கரம் மூடுகிறதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.)' எனக் கூறினான். (அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூஸா(அலை) அவர்களிடம் கூறியபோது) அவர், 'இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்?' என்று கேட்டார்கள். இறைவன், 'மரணம் தான்" என்று பதிலளித்தான். மூஸா(அலை) அவர்கள், 'அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள்" என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத் தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.

(இதை எடுத்துரைத்த போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாக செம்மணல் குன்றின் கீழே அவரின் மண்ணறை இருப்பதை உங்களுக்கு காட்டியிருப்பேன்" என்று கூறினார்கள்.
நூல். நஸயி.   2063

ஆயுளை அதிகப்படுத்தும் குணங்களும் அமல்களும்.

من قرأ سورة التغبان رفع عنه موت الفجاءة

எந்த மனிதன் தகாபுன் சூராவை வலமையாக ஓதுகின்றானோ அந்த மனிதன் திடீர் மரணத்தை விட்டும் பாதுகாக்கப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..

நூல். தப்ஸீர் ரூஹுல் பயான்.

وعن معاذ بن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من بر والديه طوبى له زاد الله في عمره


எந்த மனிதன் பெற்றோருக்கு உபகாரம் செய்வானோ அவனுக்கு சோபனமும்  கிடைக்கும். இங்கு அல்லாஹ் அவனுக்கு ஆயுளையும் அதிகப்படுத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல். தர்ஙீப். தர்கீப். பக்கம். 317.

من سره أن يبسط له في رزقه ، وأن ينسأله في أثره فليصل رحمه.

எந்த மனிதன் வாழ்வாதாரம் விசாலமாக்கி தரப்படுவதற்கும் தனது ஆயுள் நீளமாகுவதற்கும் விரும்புகின்றானோ அவன் தனது உறவுகளை சேர்ந்து வாழட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல். புகாரி.முஸ்லிம்.

إن المرء ليصل رحمه وما بقي من عمره إلا ثلاثة أيام فينسئه الله ثلاثين سنة ، وإن الرجل ليقطع الرحم وقد بقي من عمره ثلاثون سنة فيصيره الله إلى ثلاثة أيام.
(أبو الشيخ عن ابن عمرو).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக ஒரு மனிதன் உறவை சேர்ந்து வாழ ஆரம்பிப்பான் அப்போது அவனுடைய ஆயுளில் 3 நாட்கள் மிச்சமிருக்கும் ஆனாலும் உறவை சேர்ந்து கொண்டதால்  அல்லாஹ் அவனுக்கு 3 நாளை 30 வருடமாக்கிவிடுவான்.

நூல். கன்சுல் உம்மால். ஹதீஸ் எண்.6920


وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُسَمًّى


நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்.

   அல் குர் ஆன் 11:3

இந்த வசனத்தில் அல்லாஹ் ஒரு விஷயத்தை சொல்கின்றான். எந்த மனிதன் பரிசுத்தமான முறையில் தவ்பா செய்கின்றானோ அவனை அல்லாஹ் குறிப்பிட்ட தவனை வரை சுகமான வாழ்க்கையை சுவைக்க செய்வான்.

இந்த வசனத்திற்கு தப்ஸீர் குர்துபியில் இப்படியும் ஒரு விளக்கம்சொல்லப்பட்டுள்ளது.

وقيل: يمتعكم يعمركم

அல்லாஹ் உங்களுக்கு ஆயுளை அதிகப்படுத்துவான் ஏனெனில் சுகமான வாழ்க்கையை கொடுப்பதின் அடிப்படையே ஆயுளை அதிகப்படுத்துதான் என்று கூறப்பட்டுள்ளது.

عن علي انه سمع النبي صلى الله عليه وسلم يقول : من سره أن ينسأ في عمره ، وينصر على عدوه ، ويوسع عليه في رزقه ، ويوقى ميتة السوء فليقل حين يمسي ، وحين يصبح ثلاث مرات : سبحان الله ملء الميزان ومنتهى العلم ، ومبلغ الرضا ، وزنة العرش ، ولا إله الا الله ملء الميزان ومنتهى العلم ، ومبلغ الرضا ، وزنة العرش ، والله أكبر ملء الميزان

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த மனிதன் தனது ஆயுள் நீடித்து கொடுக்கப்படுவதற்கும் விரோதிகளுக்கு எதிராக உதவி செய்யப்படுவதற்கும் செல்வம் விசாலமாக்கி தரப்படுவதற்கும் தீய மரணத்தை விட்டும் காப்பாற்றப் படுவதற்கும் யார் விரும்புகிறாரோ அவர் காலை மாலை 3 தடவை இவ்வாறு சொல்லட்டும்

عن علي - رضي الله عنه - أنه سأل رسول الله صلى الله عليه وسلم عن هذه الآية فقال له « لأقرن عينيك بتفسيرها ، ولأقرن عين أمتي بعدي بتفسيرها ، الصدقة على وجهها ، وبر الوالدين ، واصطناع المعروف؛ يحول الشقاء سعادة ويزيد في العمر ويقي مصارع السوء

இந்த வசனத்தின் விளக்கம் பற்றி நபி இடம் அலி (ரலி) அவர்கள் கேட்ட பொழுது நபி அவர்கள் சொன்னார்கள் நிச்சயமாக நான் இந்த வசனத்தின் விளக்கம் குறித்து உமது கண்களையும் என் உம்மத்தாரின் கண்களையும் குளிரச் செய்வேன் என்று கூறி விட்டு சொன்னார்கள் (கடைசி வரை) முறைப்படி தர்மம் செய்வதும் பெற்றோருக்கு உபகாரம் செய்வதும் நன்மையான காரியங்கள் செய்வதும் மனிதனின் மூதேவி தன்மையை நன்மையாக மாற்றும் ஆயுளை அதிகப்படுத்தும் சோதனையில் விழுவதை விட்டும் பாதுகாக்கும் என்றார்கள்

நூல். தப்ஸீர் குர்துபி

ஆயுளை அதிகமாக்கும் பிறருடைய துஆ.


قَالَتْ أُمُّ سُلَيْمٍ أَنَسٌ خَادِمُكَ قَالَ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ

அனஸ்(ரலி) அறிவித்தார்.

என் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் சேவகர் அனஸுக்காகப் பிரார்த்தியுங்கள்' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ள (ஆயுள் முதலான) வற்றில் வளம் சேர்ப்பாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தபடியே அனஸ் (ரலி) அவர்களின் செல்வம் பெருகியது இராக் நகரில் அவர்களுக்கு ஒரு தோட்டம் இருந்த்தாகவும் அது ஆண்டுக்கு இரு முறை மகசூல் அளித்து வந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதைப் போன்றே அவர்களுக்கு குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் சுமார் 120 பேர் இருந்தனர் அவர்களுடைய ஆயுளிலும் அல்லாஹ் பரக்கத் செய்தான் அன்னார் 100 வயது வரை வாழ்ந்தார்கள்

நூல்.   (உம்தத்துல் காரீ இர்ஷாதுஸ் ஸாரீ)
 
ஆயுளை நீளமாக்கும் தர்மம்


وعن أنس قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء " . رواه الترمذي


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக தர்மம் அல்லாஹ்வின் கோபத்தை தனித்துவிடும். கெட்ட மரணத்தையும் தடுத்துவிடும்.
நூல். திர்மிதி.

ان عيسي مر بقرية وفي تلك القرية قصار  فقال اهل القرية

ஈஸா நபி ஒரு கிராமத்தின் வழியாக சென்றார்கள் அந்த ஊரில் சலவை தொழிலாளி இருந்தான் அவ்வூர் மக்கள் நபி இடம் சொன்னார்கள் எங்களின் இந்த ஊரில் உள்ள சலவை தொழிலாளி எங்களின் தேவையை பூர்த்தி செய்யும் தண்ணீரை தடுக்கின்றான் அதில் எச்சியை துப்புகின்றான் இன்னும் அதை அசுத்தப்படுத்துகின்றான் ஆற்றுக்குப் போகும் அவன் திரும்பாமல் இருக்க அவனுக்கு எதிராக துஆ செய்யுங்கள் என்றார் உடனே நபி அவர்கள் அவனுக்கு எதிராக இவ்வாறு துஆ செய்தார்கள் இறைவா நீ அவன் மீது பாம்பை சாட்டி அவனை கொன்று விடு உயிருடன் அவனை திருப்பி விடாதே இந்த நிலையில் சலவை தொழிலாளி துணிகள் துவைக்க ஆற்றுக்கு சென்றான் அவன் சாப்பிட 3 ரொட்டிகள் கொண்டு சென்றிருந்தான் அந்நேரத்தில் மலைப் பகுதியில் வணங்கிக் கொண்டிருந்த ஒரு வணக்கசாலி அங்கு வந்தார் அவர் ஸலாம் கூறி விட்டு தனக்கு சாப்பிட உணவு கேட்டார் தொடர்ந்து 3 ரொட்டிகளையும் அவருக்கு வழங்கினான் அவர் முதல் ரொட்டியை சப்பிட்ட பின் அல்லாஹ் உனது மாவங்களை மன்னித்து உன் இதயத்தை பரிசுத்தப்படுத்துவானாக என்றும் 2வது ரொட்டியை சாப்பிட்ட பின் இறைவன் உனது முன் பின் பாவங்களை மன்னிப்பானாக என்றும் 3 வது ரொட்டியை சாப்பிட்ட பின் அல்லாஹ் உனக்கு சொர்க்கத்தில் மாளிகை கட்டுவானாக என்றும் துஆ செய்தார் இதற்குப் பின் அவன் நிம்மதியாக ஊர் திரும்பினான் ஊர் மக்கள் ஈஸா நபி இடம் சொன்ன போது அவர்கள் அவனை அழைத்து வரச் சொன்னார்கள் அவன் உடனே வந்தான் அவனிடம் ஆற்றில் நடந்ததை சொல் என்றார்கள் அவனும் அப்படியே சொன்னான் நபி அவனிடம் உனது துணி மூட்டையை அவிழ்த்துக் காட்டு என்றார்கள் அவன் அதை திறந்தான் அதில் ஒரு கருப்பு பாம்பு இரும்பு கடிவாளம் போடப்பட்ட நிலையில் இருந்தது அவர்கள் அதனிடம் அல்லாஹ் உன்னை இவனிடம் அனுப்பவில்லையா? என்று கேட்டார்கள் அது சொன்னது அல்லாஹ் என்னை அனுப்பினான் நானும் அவனை கொல்ல வந்தேன் அப்பொழுது ஒரு யாசகர் வந்தார் அவருக்கு இவன் 3 ரொட்டிகளை அவர் முதல் ரொட்டியை சப்பிட்ட பின் அல்லாஹ் உனது மாவங்களை மன்னித்து உன் இதயத்தை பரிசுத்தப்படுத்துவானாக என்றும் 2வது ரொட்டியை சாப்பிட்ட பின் இறைவன் உனது முன் பின் பாவங்களை மன்னிப்பானாக என்றும் 3 வது ரொட்டியை சாப்பிட்ட பின் அல்லாஹ் உனக்கு சொர்க்கத்தில் மாளிகை கட்டுவானாக என்றும் துஆ செய்தார்  அதற்கு ஆமீன் சொன்னார் அப்பொழுது அல்லாஹ் என் பக்கம் ஒரு மலக்கை அனுப்பினான் அவர் எனக்கு கடிவாளம் போட்டுவிட்டார் இதை கேட்ட நபி அவனிடம் கூறினார்கள் அல்லாஹ் உனது பாவங்களை மன்னித்து விட்டான் நீ இனிமேல் உனது அமல்களை புதுப்பித்துக் கொள் என்றார்கள் 
.
நூல்.துர்ரத்துன்னாஸிஹீன்.