Thursday 20 March 2014

எல்லாம் நமக்காக.



அல்லாஹ் வானம் பூமி சூரியன் சந்திரன் உள்ளிட்ட எல்லா படைப்புகளையும் மனிதனுக்கு உதவவும் பாதுகாக்கவும்தான் படைத்திருக்கின்றான். ஆனாலும் சில சமயங்களில் இறையச்சமின்றி மனிதன் வரம்பு மீறி நடக்கின்ற பொழுது அவனுக்கு படிப்பினைக்காகவும் பக்குவம் அடைவதற்காகவும் சுனாமி வெள்ளப்பெருக்கு பூகம்பம் போன்ற சில சோதனைகளை கொடுக்கின்றான் தன் அடியான் தனது பரிசுத்தமான வாழ்க்கையின் மூலம் தன்னுடைய நேசனாக உயரும் பொழுது தனது அனைத்து படைப்புகளையும் அவனுக்கு வசப்படுத்தி கொடுக்கின்றான்

வானத்தை வசப்படுத்துவான்

وفى الاحاديث القدسية « يا عيسى أتريد ان تطير على السماء مع الملائكة المقربين كن فى الشفقة كالشمس وفى الستر كاليل وفى التواضع كالارض وفى الحلم كالميت وفى السخاوة كالنهر الجارى

ஈஸாவே எனது நெருக்கம் பெற்ற மலக்குகளுடன் வானத்தில் பறக்க நாடுகின்றீர்களா அப்படியானால் மனிதனுக்கு கருணை காட்டுவதில் சூரியன் போன்றும். பிறர் குறைகளை மறைப்பதில் இரவைப் போன்றும், பணிவில் பூமியைப் போன்றும் சகிப்புத் தன்மையில் மய்யித்தைப் போன்றும். கொடைத்தன்மையில் ஓடுகின்ற ஆற்றைப் போன்றும் நீர் ஆகிவிடும்.

நூல். தப்ஸீர் ரூஹுல் பயான்.

பூமி வசப்படும்.

فضرب عمر الارض بدرته وقال لها اسكن انا عدل ان لم اكن انا عدلا فويل لعمر فسكنت ولم يات بعدها مثلها

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் உமர்(ரலி) அவர்கள் ஆட்சியில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது அதனால் மலைகள் சரிந்து விடும் அளவிற்கு நிலை உண்டானது அப்பொழுது உமர் அவர்கள் தனது சாட்டையைக் கொண்டு பூமியில் அடித்து சொன்னார்கள் நான் நீதி செலுத்தும் ஆட்சியாளனாக இருக்கின்ற பொழுது நீ எப்படி ஆடலாம் எனக்கு நீ கட்டுப்படு என்றார்கள் நான் நீதி உடையவனாக இல்லை என்றால் இந்த உமருக்கு நாசம் உண்டாகட்டும் உடனே பூமி அமைதியானது அதற்குப் பின் அவர்கள் ஆட்சியில் பூகம்பமே வரவில்லை

நூல்.    கிதாபுல் மஜாலிசுல் சுன்னா.

சூரியன் வசப்படும்.   

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لَا يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا وَلَا أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا وَلَا أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلَادَهَا فَغَزَا فَدَنَا مِنْ الْقَرْيَةِ صَلَاةَ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا فَحُبِسَتْ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ فَجَمَعَ الْغَنَائِمَ فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ إِنَّ فِيكُمْ غُلُولًا فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنْ الذَّهَبِ فَوَضَعُوهَا فَجَاءَتْ النَّارُ فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الْغَنَائِمَ رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا

. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர்களில் ஒருவர் புனிதப் போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், 'ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவன் அவளுடன் வீடு கூட விரும்பி இன்னும் கூடாமல் இருப்பானாயின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். வீடு கட்டி முடித்து, அதன் முகட்டை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, பெண் ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வரவேண்டாம்" என்று கூறிவிட்டுப் போருக்குச் சென்றார். ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக் குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக் கிழமை போரிடுவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப் போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, 'நீ இறைவனின் கட்டளைப்படி இயங்குகிறாய். நானும் இறை கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்" என்று கூறிவிட்டு, 'இறைவா! சூரியனை (உடனே மறைய விடாமல்) தடுத்து விடு" என்று பிரார்த்தித்தார். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கும் வரை அது தடுத்து நிறுத்தப்பட்டது. (வெற்றி பெற்ற) பிறகு அந்த இறைத்தூதர் போரில் கிடைத்த பொருட்களை ஒன்றாகச் சேகரித்தார். அப்போது அதை (எரித்துக் கருக்கி) உண்பதற்கு (வானிலிருந்து) நெருப்பு வந்தது. ஆனால், அவற்றை அது உண்ணவில்லை. எனவே, அந்த இறைத்தூதர் 'உங்களிடையே (இந்தப் பொருட்களிலிருந்து) திருட்டுப் பொருள் ஏதோ ஒன்று உள்ளது. எனவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவர் என்னிடம் உறுதி மொழி கொடுக்கட்டும்" என்று கூறினார். (உறுதி மொழி கொடுத்துக் கொண்டிருந்த போது) ஒரு மனிதனின் கை இறைத் தூதரின் கையோடு ஒட்டிக்கொண்டது. அப்போது இறைத்தூதர், 'உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது. எனவே, உன்னுடைய குலத்தார் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும்" என்று கூறினார். (அவ்வாறே அவர்கள் கொடுக்க) இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய கை அவரின் கையுடன் ஒட்டிக் கொண்டது. அப்போது அவர், 'உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது" என்றார். எனவே, அம்மக்கள் தங்கத்தாலான பசுமாட்டுத் தலை ஒன்றைக் கொண்டு வந்து அதை வைத்தனர். நெருப்பு வந்து அதைத் தின்றுவிட்டது. பிறகு அல்லாஹ், போரில் கிடைக்கும் பொருட்களை (எடுத்துக் கொண்டு பயன்படுத்த) நமக்கு அனுமதியளித்தான். நம்முடைய பலவீனத்தையும் இயலாமையையும் கண்டு அதை நமக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
     .
நூல். புகாரி. 3124 .

மிருகங்கள் வசப்படும்..

عَنِ ابْنِ الْمُنْكَدِرِ أَنَّ سَفِينَةَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْطَأَ الْجَيْشَ بِأَرْضِ الرُّومِ أَوْ أُسِرَ فِي أَرْضِ الرُّومِ فَانْطَلَقَ هَارِبًا يَلْتَمِسُ الْجَيْشَ فَإِذَا هُوَ بِالأَسَدِ فَقَالَ لَهُ : أَبَا الْحَارِثِ ، إِنِّي مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِنْ أَمْرِي كَيْتَ وَكَيْتَ فَأَقْبَلَ الأَسَدُ لَهُ بَصْبَصَةٌ حَتَّى قَامَ إِلَى جَنْبِهِ كُلَّمَا سَمِعَ صَوْتًا أَهْوَى إِلَيْهِ ثُمَّ أَقْبَلَ يَمْشِي إِلَى جَنْبِهِ فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى بَلَغَ الْجَيْشَ ، ثُمَّ رَجَعَ الأَسَدُ "(مشكاة-شرح السنة)صحيح

நபித் தோழர்களில் ஒருவர் போருக்குச் சென்று திரும்பும்போதோ அல்லது எதிரிகளிடமிரிந்து தப்பிய போதோ பாதை மாறி வன விலங்குகள் நடமாடும் பகுதிக்கு சென்று விட்டார். அப்போது ஒரு சிங்கம் எதிரில் வர, நபி ஸல் அவர்களுடன் தமது நெருக்கத்தையும், தாம் வழி மாறி வந்து விட்டதையும் கூற அந்த சிங்கம் அவரது வலது புறத்தில் வந்து அவருடன் சேர்ந்து நடந்த து. வழியில் ஏதேனும் வேறு மிருகத்தைக் கண்டால் இந்த சிங்கம் கர்ஜிக்கும். உடனே அந்த மிருகம் ஓடி விடும். இவ்வாறு காட்டுப் பகுதியை கடந்து படையினர் தங்கியிருக்கும் இடம் வரை கூடவே வந்து அவரை வழியனுப்பி விட்டுச் சென்றது..

நூல். மிஸ்காத் பக்கம்

قال : سمعت أنسا يقول : كان فزع بالمدينة فاستعار النبي صلى الله عليه وسلم فرسا من أبي طلحة يقال له : المندوب فركب فلما رجع قال : " ما رأينا من شيء وإن وجدناه لبحرا

அனஸ்(ரலி) அறிவித்தார்.

(ஒருமுறை, எதிரிகள் படையெடுத்து வருவதாக மதீனா நகர) மக்கள் பீதிக்குள்ளானார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான மெதுவாக நடக்கக்கூடிய குதிரை ஒன்றில் ஏறிக் கொண்டு, (அதை) உதைத்துப் பாய்ந்தோடச் செய்தபடி தனியாகப் புறப்பட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்கள் பாய்ந்து (வாகனங்களில்) ஏறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பீதியடையாதீர்கள். (பீதியடையும் யாரும் படையெடுத்து வரவில்லை.) இந்தக் குதிரை தங்கு தடையின்றி வேகமாக ஒடக் கூடியதாக உள்ளது" என்று கூறினார்கள். அந்த நாளுக்குப் பிறகு, அந்தக் குதிரையை யாராலும் முந்த முடிந்ததில்லை

நூல். புகாரி.   2969.

நெருப்பு வசப்படும்.

عياش، عن شرحبيل الخولاني، قال: بينا الأسود بن قيس ابن ذي الحمار العنسي باليمن فأرسل إلى أبي مسلم، فقال له: أتشهد أن محمداً صلى الله عليه وسلم رسول الله؟ قال: نعم، قال: فتشهد أني رسول الله؟ قال: ما أسمع، قال: فأمر بنار عظيمة فأججت وطرح فيها أبو مسلم فلم تضره، فقال له أهل مملكته: إن تركت هذا في بلدك أفسدها عليك، فأمره بالرحيل فقدم المدينة وقد قبض رسول الله صلى الله عليه وسلم واستخلف أبو بكر، فعقل على باب المسجد وقام إلى سارية من سواري المسجد يصلي إليها، فبصره به عمر بن الخطاب رضي الله تعالى عنه فأتاه فقال: من أين الرجل؟ قال: من اليمن، قال: فما فعل عدو الله بصاحبنا الذي حرقه بالنار فلم تضره، قال: ذاك عبد الله بن ثوب، قال: نشدتك بالله أنت هو؟ قال: اللهم نعم، قال: فقبل ما بين عينيه ثم جاء به حتى أجلسه بينه وبين أبي بكر، وقال: الحمد لله الذي يمتني من الدنيا حتى أراني في أمة محمد صلى الله عليه وسلم من فعل به كما فعل بإبراهيم خليل الرحمن عليه السلام، قال الحوطي: قال إسماعيل: فأنا أدركت قوماً من المدادين الذين مدوا من اليمن يقولون لقوم عن عنس: صاحبكم الذي حرق صاحبنا بالنار فلم تضره.

அல்லாஹ்வின் உதவியை பெற்ற அபூ முஸ்லிமுல் ஃகவ்லானீ {ரஹ்} அவர்கள்.அப்துல்லாஹ் இப்னு ஸவ்ப் {ரஹ்} என்பது அவர்களின் இயற்பேராகும்     அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். ஆனாலும், நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை.

நபிகளாரின் பரிசுத்த வாழ்வின் கடைசிக் காலத்திலே எமன் தேசத்தில் அஸ்வத் அனஸீ என்பவன் தன்னை நபி என்று அறிவித்தான். தான் நபி என்ற பொய்யை மக்களிடம் திணித்து ஏற்றுக் கொள்ளுமாறு நிர்பந்தித்தான்.மக்களில் பலரும் அவன் பின்னால் அணிவகுத்துச் செல்ல ஆரம்பித்தனர்.

இந்நேரத்தில், அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களின் ஈமானை அறிந்து கொண்ட அஸ்வத் அனஸீ, அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களை தன்னோடு வந்து சேர்ந்து கொள்ளுமாறு தூது விட்டான். ஆனால், அவர்கள் மறுத்து விட்டார்கள்.
ஒரு நாள் அவரை நேரில் சந்திக்க விரும்பிய அவன், நேராக அவரைச் சந்தித்து நீ முஹம்மது {ஸல்} அவர்களை நபி என்று ஈமான் கொண்டிருக்கின்றாயா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள் ஆம்! என்று பதில் கூறினார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த அஸ்வத் அனஸீ மாபெரும் நெருப்புக் குண்டத்தை தயார் செய்து, நபிய்யுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை, நம்ரூத் மன்னன் நெருப்புக் குண்டத்தில் வீசியது போன்று அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களை நெருப்புக் குண்டத்தில் போட்டு விட்டான்.

ஆனால், அல்லாஹ் நெருப்பை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பூஞ்சோலையாக மாற்றியது போன்று, அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களுக்கும் மாற்றிக் கொடுத்தான்.
அதிலிருந்து மிகச் சாதாரணமாக, சுகமாக வெளியே வந்ததைப் பார்த்த அஸ்வத் அனஸீயும், அவனை ஏற்றுக் கொண்ட மடையர்களும் திக்கித்துப் போய் நின்றனர்.
அவனின் நெருங்கிய தோழர்கள், ”அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களை நாடு கடத்திட வேண்டும். இல்லையென்றால், உம் பின்னால் இருக்கிற இந்தக் கூட்டம் உன் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் இருந்து தடம்புரண்டு அவரின் பின்னால் செல்ல ஆரம்பித்து விடுவர்.என்று ஆலோசனை வழங்கினார்கள்.
எமனுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். எனவே, எமனிலிருந்து வெளியானால் அடைக்கலம் புகும் இடம் அது மதீனாவாகத்தான் இருக்க வேண்டும். அங்கே தான், அண்ணலாரும் அவர் தம் அருமைத் தோழர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆகவே, எமனிலிருந்து மதீனா நோக்கி பயணம் மேற்கொண்டார் அபூ முஸ்லிம் அல் ஃகவ்லானீ {ரஹ்} அவர்கள்.மதீனாவின் எல்லையை அவர் அடைகிற போது, அவர் தம் வாழ்க்கையில் புதியதோர் அத்தியாயம் உதயமானதாக உணர்ந்தார்.

ஆனால், மதீனாவின் ஊருக்குள் நுழைந்த பின்னர் தான் அவருக்கு தெரிந்தது நபித்துவத்தின் அத்தியாயம் அஸ்தமனமாகி விட்டது என்று   ஆம்! அல்லாஹ்வின் தூதர் இவ்வுலகத்தை விட்டும் பிரிந்து சென்று விட்டார்கள். தற்போது அவர் தம் அருமைத் தோழர் அபூ பக்ர் {ரலி} அவர்கள் முஃமினீன்களின் தலைவராக அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று.நேராக மஸ்ஜிதுன் நபவீயின் அருகே தங்களது ஒட்டகத்தை அமர வைத்து விட்டு, உளூ செய்து ஒரு தூணுக்குப் பின்னால் நின்று தொழ ஆரம்பித்து விட்டார்கள்.தம்மை படைத்த இறைவனோடு நீண்ட நேரம் உரையாடி விட்டு தம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள்.அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்கள் உள்ளே நுழந்ததிலிருந்து அவர் தொழுது முடிக்கும் வரையிலான அத்தனையையும் பார்த்துக் கொண்டு அங்கே தான் உமர் {ரலி} அவர்களும் இருந்தார்கள்.
தொழுது முடித்ததும், நேராக அவருக்கு அருகாமையில் வந்த உமர் {ரலி} அவர்கள் தோழரே! எங்கிருந்து வருகிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கவர், “நான் எமனிலிருந்து வருகின்றேன் என்றார்கள்.
தங்களின் வரவு நல்வரவாகட்டும்! அல்லாஹ்வின் விரோதி அஸ்வத் அனஸீ என்பவன் நம்முடைய நண்பர் ஒருவரை நெருப்பில் போட்டானாம்! அல்லாஹ் அவரை நெருப்பின் தீங்கிலிருந்து பாதுகாத்து விட்டான். ஆனால், அதன் பிறகு அவர் என்ன ஆனார்? அவன் அவரை என்ன செய்தான்? இது குறித்து நீங்கள் ஏதும் அறிவீர்களா?” என்று உமர் {ரலி} அவர்கள் கேட்டார்கள்.அதற்கு அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்கள் அமைதியாக அவரின் பெயர் அப்துல்லாஹ் இப்னு ஸவ்ப் என்பதாகும் என்றார்கள்.
அதற்குள் ஏதோ உமர் {ரலி} அவர்களின் மனதினுள் தோன்ற அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கேட்கின்றேன்! சொல்லுங்கள்! நீங்கள் தானே அந்த எங்களின் நண்பர்!?” என்று கேட்டார்கள்.ஆம்! என்று ஆராவாரம் இன்றி இன்முகத்துடன் பதில் கூறினார்கள்.இதனைக் கேட்டவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்த உமர் {ரலி} அவர்கள் அபூ முஸ்லிம் அவர்களின் நெற்றியில் முத்தமிட்டார்கள்.
பின்பு அவர்களை நேராக அபூ பக்ர் {ரலி} அவர்களிடம் அழைத்துச் சென்று, அவர் குறித்த அறிமுகத்தைக் கூறி அபூ பக்ர் {ரலி} அவர்களின் முன்னால் அமர வைத்தார்கள்.

தனது நேசர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் நடந்து கொண்டது போன்று முஹம்மத் {ஸல்} அவர்களின் உம்மத்தில் ஒருவருடன் நடந்து காட்டிய ஒருவரை என் வாழ்நாளிலேயே சந்திக்கும் நற்பேற்றினை வழங்கிய எல்லாம் வல்ல ஏகனாம் அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!என கண்ணீர் மல்க கூறினார்கள் அபூ பக்ர் ஸித்தீக் {ரலி} அவர்கள்.

நூல்: ஹுல்யதுல் அவ்லியா

கனவு வசப்படும்..

قال أنس بن مالك: لما انكشف الناس يوم اليمامة قلت لثابت بن قيس بن شماس: ألا ترى يا عم؟ ووجدته يتحنط فقال: ما هكذا كنا نقاتل مع رسول الله صلى الله عليه وسلم، بئس ما عودتم أقرانكم، وبئس ما عودتكم أنفسكم؛ الله إني أبرأ إليك مما جاء به هؤلاء، يعني الكفار، وأبرأ إليك مما يصنع هؤلاء، يعني المسلمين، ثم قاتل حتى قتل، بعد أن ثبت هو وسالم مولى أبي حذيفة؛ فقاتلا حتى قتلا، وكان على ثابت درع له نفيسة فمر به رجل من المسلمين فأخذها، فبينما رجل من المسلمين نائم أتاه ثابت في منامه فقال له: إني أوصيك بوصية، فإياك أن تقول: هذا حلم، فتضيعه؛ إني لما قتلت أمس، مر بي رجل من المسلمين فأخذ درعي، ومنزله في أقص الناس، وعند خبائه فرس يستن في طوله وقد كفأ على الدرع برمة وفوق البرمة رحل، فأت خالداً، فمره فليبعث فليأخذها؛ فإذا قدمت الدينة على خليفة رسول الله صلى الله عليه وسلم، يعني أبا بكر، فق له: إن علي من الدين كذا وكذا، وفلان من رقيقي عتيق، وفلان؛ فاستيقظ الرجل فأتى خالداً فأخبره، فبعث إلى الدرع فأتى بها على ما وصف، وحدث أبا بكر رضي الله عنه برؤياه، فأجاز وصيته، ولا يعلم أحد أجيزت وصيته بعد موته سواه.

யமாமாவில் வசித்து வந்த, முஸைலைமா (தன்னை நபியென வாதிட்ட) வை நோக்கி அபூபக்ர் (ரலி) ல் காலித் பின் வலீத் (ரலி) தலைமையில் படையொன்று கிளம்பியது.அதில் கலந்து கொண்டு ஆனார்கள் ஸாபித் (ரலி) அவர்கள்.
அந்த யுத்தத்தில் ஸாபித் (ரலி) அவர்கள் புதிய உருக்குச்சட்டை அணிந்து கலந்து கொண்டார்கள்.
வீர மரணமடைந்த அந்த இரவில் சில முஸ்லிம்களின் கனவில் வந்து என்னுடைய உருக்குச் சட்டையை இன்ன வீட்டில் உள்ள ஒரு மனிதர் எடுத்துச் சென்று விட்டார்.காலித் (ரலி) அவர்களை அழைத்துச் சென்று அதை வாங்கி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கொடுத்து என் கடனை அடைக்கச் சொல்லுங்கள் என கூறினார்கள்.
படை மதீனா வந்ததும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கண்ட கனவை கூறப்பட்டது. மரணத்தின் பின்னால் செய்யப்பட்ட வஸியத்தை நிறைவேற்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்
மரணத்திற்கு பின்னால் ஒருவருடைய மரண சாஸனம் நிறைவேற்றப்பட்டதென்றால் அது ஸாபித் (ரலி) அவர்களின் மரண சாஸனம் மட்டுமே என கூறுகிறார்.
நூல். உஸ்துல் கஃபா
.


1 comment:

  1. Arumayana nigalvugal 2 jummakal pesalam zajakumullah

    ReplyDelete