Thursday, 13 March 2014

மலக்குகளின் பாதுகாப்பு.


அல்லாஹ்வின் படைப்புகளில் ஒளியால் படைக்கப்பட்ட ஆற்றல்மிகு படைப்புகள் மலக்குமார்கள். மனிதர்களை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் இவர்களிடம் ஒப்படைத்து இருக்கின்றான் இந்த உண்மையை குர்ஆன் அழகாக கூறுகின்றது.

لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ

மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர்(வானவர்)உள்ளனர்.அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனை (இடி, மின்னல், விபத்துகள் போன்ற சகல ஆபத்துகளிலிருந்து இறைவனின் விதி வருவது வரை) காப்பாற்றுகின்றனர்.
    
  அல்குர் ஆன்   (13:11)

ஒவ்வொரு மனிதனுடனும் இரு மலக்குகள் இருப்பதாகவும் ஒருவர் முன்னும் வேறொருவர் பின்னும் இருந்து பாதுகாப்பதாகவும். பகலில் இருமலக்குகளும் இரவில் வேறு இரு மலக்குகளும் பாதுகாப்பதாக தப்ஸீர் இப்னு கஸீரில் சொல்லப்பட்டிருக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு மலக்குகளின் உதவியும் பலமும் கிடைக்க துஆ செய்திருக்கின்றார்கள்.
عن
 عائشة قالت : كان رسول الله صلى الله عليه وسلم يضع لحسان منبرا في المسجد يقوم عليه قائما يفاخر عن رسول الله صلى الله عليه وسلم أوينافح . ويقول رسول الله صلى الله عليه وسلم : " إن الله يؤيد حسان بروح القدس ما نافح أو فاخر عن رسول الله صلى الله عليه وسلم " . رواه البخاري

நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான்(ரலி) அவர்களிடம் என் சார்பில் எதிரிகளுக்கு பதில் கூறுங்கள் என்று சொல்லிவிட்டு இறைவா நீ பரிசுத்த ஆத்மாவான ஜிப்ரீல்(அலை) அவர்களை கொண்டு வலிமை படுத்து என்று துஆ செய்தார்கள்.

நூல். புகாரி. மிஸ்காத். பக்கம் 409.

மனிதனை மலக்குகள் பாதுகாக்கும் விஷயத்தில் ஸஹாபாக்களிடம் இருந்த உறுதியான நம்பிக்கை.

وأخرج ابن جرير ، عن أبي مجلز - رضي الله عنه - قال : جاء رجل من مراد إلى علي رضي الله عنه - وهو يصلي فقال : احترس؛ فإن ناساً من مراد يريدون قتلك . فقال : إن مع كل رجل ملكين يحفظانه مما لم يقدر! فإذا جاء القدر ، خليا بينه وبينه ، وأن الأجل جنة حصينة

அலி(ரலி) அவர்களிடம் ஒருவர் சந்தித்து சொன்னார். எங்கள் பகுதியில் வாழும் சிலர் உங்களை கொலை செய்யும் திட்டத்துடன் உள்ளனர் எனவே நீங்கள் உங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திகொள்ளுங்கள் என்றார். அப்போது அலி(ரலி) அவர்கள் அவரிடம் சொன்னார்கள் எனக்கு எந்த பாதுகாவலரும் தேவயில்லை ஏனெனில் ஒவ்வொரு மனிதனுடனும் இரு மலக்குகள் உள்ளனர் விதியில் உள்ளது அவனிடம் வராதவரை அவனை பாதுகாக்கின்றனர். விதியில் முடிவானது வந்துவிட்டால் அவனை விட்டும் அவர்கள் விலகி விடுகின்றனர்.

நூல். தப்ஸீர் குர்துபி

நபியை பாதுகாத்த மலக்குகள்.

روى ان كفار مكة اجتمعوا على قتل النبى عليه السلام فبينما هم كذلك اذ دخل عليهم ابليس فقال لماذا اجتمعتم فاخبروه بالقصة فقال لابى جهل يا ابا الحكم لو انك حملت صنمك وآلهك الذى تعبده ووضعته بين يدى محمد وسجدت له ربما يسمع محمد منه شيأ وكان صنمه مرصعا بالجوهر والياقوت فحمل ابو جهل صنمه ووضعه بين يدى النبى عليه السلام وسجد لهوقال الهى نعبدك ونتقرب اليك هذا محمد شتمنا بسببك ونطمع منك ان تنصرنا وتشتم محمدا فاخذه الصنم يتحرك ويتكلم ويشتم فدخل فى قلب النبى عليه السلام ورجع الى بيت خديجة فلم يلبث ان دق الباب فاذا شاب دخل وبيده سيف فلم وقال مرنى يا رسول الله حتى امتثل امرك فقال عليه السلام « من انت » قال انا من الجن قال « كم تبلغ قوتك » قال اقدر ان اقلع جبلى حراء وابى قبيس وارميهما فى البحر قال « من اين اقبلت الساعة » قال كنت فى جزيرة البحر السابع اذ اتانى جبرائيل فقال ادرك فلانا الشيطان دخل فى الصنم وشتم النبى عليه السلام فاقتله بهذا السيف فادركته فى الارض الرابعة فقتلته فقال له عليه السلام « ارجع فانى استعين بربى من عدوى » وقال الشاب لى اليك حاجه هى ان ترجع الى مكان كنت فيه امس فانهم يستخبرون ذلك الصنم ثانيا فرجع فى الغد ومعه ابو بكر الصديق فجاء ابو جهل مع صنمه ففعل كما فعل بالامس فاخذ الصنم يتحرك ويقول لا الله الا الله محمد رسول الله وانا صنم لا انفع ولا اضر ويل لمن عبدنى من دون الله فلما سمعوا ذلك قام ابو جهل وكسر صنمه وقال ان محمدا سحر الاصنام فظهر ان الله تعالى يقول الحق من ألسنة المظاهر ولكن لا يسمع المنافق والكاف

ஒரு நாள் மக்காவின் காபிர்கள் நபியை கொலைசெய்யும் நோக்கத்துடன் ஒன்றினைந்து ஆலோசனை செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களிடம் மனித தோற்றத்தில் ஷைத்தான் வந்து அபூஜஹ்லிடம் சொன்னான் நீ வணங்கும் உனது கடவுளான உன் சிலையை சுமந்துகொண்டு முஹம்மது (ஸல்) அவர்களின் முன்னால் வைத்துக்கொண்டு அதற்கு நீ ஸஜ்தா செய் அப்போது அந்த சிலை பேசும் அந்த செய்தியை கேட்கும் நிலை ஏற்படும் என்று சொன்னான். அதைக்கேட்ட அபூஜஹ்ல் சிலையை தூக்கிகொண்டு நபியின் முன்னிலையில் வைத்துவிட்டு அதற்கு ஸஜ்தா செய்தான் பிறகு அதை பார்த்துசொன்னான். கடவுளே உன்னை நாங்கள் வணங்குகின்றோம் உனது நெருக்கத்தையும் தேடுகின்றோம் ஆனால் உன்னை வணங்குவதை இவர் தடுக்கின்றார். எனவே அவருக்கு எதிராக உன்னுடைய உதவியை தேடுகின்றோம் நீ இப்போது முஹம்மதை திட்டவேண்டும் என்று கூறிவிட்டு சிலையைபிடித்து அசைத்தான். அப்போது சிலை பேசியது நபியையும் திட்டியது. இதைக்கேட்ட நபியின் உள்ளத்தில் வேதனை ஏற்பட்டது உடனே அவர்கள் கதிஜா(ரலி) அவர்களின் வீட்டிற்கு சென்று கதவை அடைத்துக்கொண்டார்கள். சற்று நேரத்தில்நபியின் வீட்டிற்கு ஒரு வாலிபர் வந்தார் அவர் கையில் வாள் இருந்தது அவர் சொன்னார் நாயகமே எனக்கு ஆனை இடுங்கள் நான் கட்டுப்படுகின்றேன் என்றார் நபி அவர்கள் அவரிடம் நீ யார் என்று அவரிடம் கேட்ட பொழுது அவர் நான் ஜின் இனத்தைச் சார்ந்தவன் என்றார் நபி அவர்கள் அவரிடம் உனது பலத்தின் அளவு எப்படி என்று கேட்ட பொழுது அந்த ஜின் சொன்னது நான் பெரிய மலைகளான ஹர்ரா என்ற மலையையும் அபீ குபைஸ் என்ற மலையையும் பூண்டோடு களற்றி கடலில் எரிந்து விட முடியும் என்றது நபி அவர்கள் அதனிடம் நீ எங்கிருந்து வருகின்றாய் என்று கேட்ட பொழுது நான் 7 வது கடல் பகுதியில் இருந்து வருகின்றேன் என்னிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் சொன்னார்கள் சிலையின் உள்ளிருந்து நபியை திட்டும் ஷைத்தானை நீ பிடித்து இந்த வாளைக் கொண்டு அவனை கொலை செய்து விடு என்றார்கள் நான் 4 வது வானத்தில் அந்த ஷைத்தானைப் பார்த்தேன் அவனைக் கொன்று விட்டேன் என்றது அதைக் கேட்ட நபி சொன்னார்கள் என் விரோதியை விட்டும் அல்லாஹ்விடம் நான் உதவி தேடுவேன் நீ சென்று விடு என்றார்கள்
நாயகமே தாங்கள் நேற்று சென்ற அதே இடத்திற்கு மீண்டும் செல்லுங்கள் அவர்கள் அந்த சிலையிடம் செய்தியைத் தேடுவார்கள் என்று கூறியது நபி அவர்கள் மறுநாள் அபூபக்கருடன் சென்றார்கள் அப்பொழுது அபூ ஜஹ்ல் நேற்று போன்று இன்றும் சிலையைக் கொண்டு அதை வணங்கி விட்டு அது பேசும் என்று எதிர்பார்த்து சிலையைப் பிடித்து அசைத்தான் அப்பொழுது அந்த சிலை லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று கலிமாவைக் கூறியது தொடர்ந்து இவ்வாறு பேசியது நான் வெறும் சிலை தான் நன்மையும் செய்யமாட்டேன் தீங்கும்  செய்ய மாட்டேன் அல்லாவை விட்டு விட்டு என்னை வணங்குபவனுக்கு நாசம் உண்டாகட்டும் என்று கூறியது இந்த அதிசயத்தை கண்ட அபூ ஜஹ்ல் சிலையை உடைத்து விட்டு முஹம்மத் சிலைக்கு சூனியம் செய்து விட்டார் என்று கூறி விட்டு தலை குனிவுடன் அவ்விடத்தை விட்டும் சென்றான் இன்று சிலைக்குள் பேசியது அந்த வாலிப ஜின்

நூல். தப்ஸீர் ரூஹுல் பயான்.

عن أبي هريرة، قال: قال أبو جهل: هل يعفر محمد وجهه بين أظهركم؟ قال: فقيل نعم، قال: فقال: واللات والعزى لئن رأيته يصلي كذلك، لأطأنّ على رقبته، لأعفرنّ وجهه في التراب، قال: فأتى رسول الله صلى الله عليه وسلم وهو يصلي ليطأ على رقبته، قال: فما فجأهم منه إلا وهو ينكص على عَقبيه، ويتقي بيديه؛ قال: فقيل له: مالك؟ قال: فقال: إن بيني وبينه خَنْدقا من نار، وهَوْلا وأجنحة؛ قال: فقال رسول الله صلى الله عليه وسلم: "لَوْ دَنا مِنِّي لاخْتَطَفَتْهُ المَلائِكَةُ عُضْوًا عُضْوًا" قال: وأنزل الله، لا أدري في حديث أبي هريرة أم لا( كَلا إِنَّ الإنْسَانَ لَيَطْغَى أَنْ رَآهُ اسْتَغْنَى إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى أَرَأَيْتَ الَّذِي يَنْهَى عَبْدًا إِذَا صَلَّى أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَى أَوْ أَمَرَ بِالتَّقْوَى أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّى ) يعني أبا جهل( أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَى كَلا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعَنْ بِالنَّاصِيَةِ نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ فَلْيَدْعُ نَادِيَهُ ) يدعو قومه( سَنَدْعُ الزَّبَانِيَةَ ) الملائكة( كَلا لا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ).

அபூஹுரைரா (ர-லி) அவர்கள் கூறியதாவது :   (மக்காவில் ஒரு முறை) அபூஜஹ்ல், "உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?'' என்று கேட்டான். அப்போது "ஆம்' என்று சொல்லப்பட்டது. அவன், "லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்'' என்று சொன்னான். அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தபோது,
அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதி-லிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், "உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவன், "எனக்கும் அவருக்கும் இடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைக(ள் கொண்ட வானவர்)களையும் கண்டேன்'' என்று சொன்னான். (இதைப் பற்றிக் கூறுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்'' என்று சொன்னார்கள். ஆகவே, வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "அவ்வாறில்லை! தன்னைத் தன்னிறைவு பெற்றவன் எனக் கருதியதால் மனிதன் எல்லை மீறுகிறான். உம்முடைய இறைவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.
தொழும் அடியாரைத் தடுப்பவனை நீர் பார்க்கவில்லையா? அவர் நல்வழியில் இருப்பதையோ, அல்லது இறையச்சத்தை ஏவுவதையோ அவன் (அபூஜஹ்ல்) பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கின்றான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை. அவன் விலகிக்கொள்ளாவிட்டால் முன்நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்துப் பொய் கூறிய (மனிதனின்) முன்நெற்றி. அவன் தன் சபையோரை அழைத்துப் பார்க்கட்டும்! நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்'' (96:6-19) எனும் வசனங்களை அருளினான்.

ஆதாரம் : முஸ்லி-ம் (5390

மலக்குகளின் விசேஷமான உதவியையும் தொடர்பையும் பெற்றுத் தரும் உன்னத அமல்கள்

1)            குரான் ஓதுதல்

أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ حَدَّثَهُ
أَنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ بَيْنَمَا هُوَ لَيْلَةً يَقْرَأُ فِي مِرْبَدِهِ إِذْ جَالَتْ فَرَسُهُ فَقَرَأَ ثُمَّ جَالَتْ أُخْرَى فَقَرَأَ ثُمَّ جَالَتْ أَيْضًا قَالَ أُسَيْدٌ فَخَشِيتُ أَنْ تَطَأَ يَحْيَى فَقُمْتُ إِلَيْهَا فَإِذَا مِثْلُ الظُّلَّةِ فَوْقَ رَأْسِي فِيهَا أَمْثَالُ السُّرُجِ عَرَجَتْ فِي الْجَوِّ حَتَّى مَا أَرَاهَا قَالَ فَغَدَوْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بَيْنَمَا أَنَا الْبَارِحَةَ مِنْ جَوْفِ اللَّيْلِ أَقْرَأُ فِي مِرْبَدِي إِذْ جَالَتْ فَرَسِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَأْ ابْنَ حُضَيْرٍ قَالَ فَقَرَأْتُ ثُمَّ جَالَتْ أَيْضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَأْ ابْنَ حُضَيْرٍ قَالَ فَقَرَأْتُ ثُمَّ جَالَتْ أَيْضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَأْ ابْنَ حُضَيْرٍ قَالَ فَانْصَرَفْتُ وَكَانَ يَحْيَى قَرِيبًا مِنْهَا خَشِيتُ أَنْ تَطَأَهُ فَرَأَيْتُ مِثْلَ الظُّلَّةِ فِيهَا أَمْثَالُ السُّرُجِ عَرَجَتْ فِي الْجَوِّ حَتَّى مَا أَرَاهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِلْكَ الْمَلَائِكَةُ كَانَتْ تَسْتَمِعُ لَكَ وَلَوْ قَرَأْتَ لَأَصْبَحَتْ يَرَاهَا النَّاسُ مَا تَسْتَتِرُ مِنْهُمْ

உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஓர் இரவில் எனது பேரீச்சங்(கனிகளை உலரவைக்கும்) களத்தில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தேன். அப்போது எனது குதிரை கடுமையாக மிரண்டது. நான் தொடர்ந்து ஓதிக்கொண்டே இருந்தேன். மீண்டும் குதிரை மிரண்டது. தொடர்ந்து நான் ஓதிக் கொண்டேயிருந்தேன். மீண்டும் அது மிரண்டது. (அங்கு படுத்திருந்த என் மகன்) யஹ்யாவை அந்தக் குதிரை மிதித்துவிடுமோ என்று நான் அஞ்சிய போது அதை நோக்கி எழுந்து சென்றேன். அங்கு மேகம் போன்றதொரு பொருளை என் தலைக்கு மேலே கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து (என் கண்ணைவிட்டு மறைந்து)விட்டது; பிறகு நான் அதைக் காணமுடியவில்லை.
காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று "அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு பாதி இரவில் எனது பேரீச்சங்களத்தில் குர்ஆன் ஓதிக்கொண்டி ருக்கையில் என் குதிரை கடுமையாக மிரண்டது" என்று (நடந்ததைச்) சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே?" என்று கேட்டார்கள். "நான் தொடர்ந்து ஓதினேன். மீண்டும் எனது குதிரை மிரண்டது" என்று நான் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே?" என்று கேட்டார்கள். "நான் தொடர்ந்து ஓதினேன். மீண்டும் எனது குதிரை மிரண்டது" என்று சொன்னேன். "இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே!" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்) கூறியபோது, "(என் மகன்) யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். அவன் அதன் அருகில் இருந்தான். எனவே, நான் திரும்பிச் சென்றேன். நான் (எனது தலையை உயர்த்தி வானைப் பார்த்தபோது) அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து (என் கண்ணைவிட்டு மறைந்து)விட்டது; பிறகு நான் அதைக் காணவில்லை" என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த வானவர்கள்தாம் அவர்கள். நீர் தொடர்ந்து ஓதியிருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள். மக்களைவிட்டும் அது மறைந்திருக்காது" என்று கூறினார்கள்

நூல். முஸ்லிம்.1460

2)            திக்ரு செய்யும் இடத்திற்கு மலக்குமார்கள் வருகின்றனர்

 ورواه الطبراني عن سهل ابن الحنظلية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا يذكرون الله عز وجل فيه فيقومون حتى يقال لهم قوموا قد غفر الله لكم وبدلت سيئاتكم حسنات 

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ஒரு சபையில் ஒரு கூட்டம் அல்லாஹ்வை திக்ரு செய்தால் அந்த கூட்டத்தார் எழுந்து செல்லும் போது மலக்குகள் அவர்களைப் பார்த்து இவ்வாறு சொல்வார்கள் உங்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதுடன் அவைகள் நன்மைகளாகவும் மாற்றப்பட்டுவிட்டது

 நூல் தப்ரானி

وقال النبي صلى الله عليه وسلم لجبريل: (يا جبريل أخبرني بثواب من قال: سبحان ربي الاعلى في صلاته أو في غير صلاته).
فقال: (يا محمد، ما من مؤمن ولا مؤمنه يقولها في سجوده أو في غير سجوده، إلا كانت له في ميزانه أثقل من العرش والكرسي وجبال الدنيا، ويقول الله تعالى: صدق عبدي، أنا فوق كل شئ، وليس فوقي شئ، اشهدوا يا ملائكتي أني قد غفرت له

நபி அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்      سبحان ربي الاعلى     என்று சொல்பவனுக்கு கிடைக்கும் நன்மை குறித்து அறிவியுங்கள் என்ற பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்னார்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எந்த ஒரு முஃமினும் தொழுகையிலோ அல்லது தொழுகையின் வெளியிலோ அந்த தஸ்பீஹை சொல்கின்ற பொழுது அதனுடைய நன்மை அவனுடைய மீஸானில் அர்ஷை விடவும் குர்ஷியை விடவும் உலகத்தின் அனைத்து மலைகளை விடவும் மிகப் பெரிய கனத்தை உண்டாக்கி விடும் அப்பொழுது அல்லாஹ் சொல்கின்றான் எனது அடியான்ண்மையை சொன்னான் நான் எல்லா வஸ்துக்களை விடவும் உயர்ந்து இருக்கின்றேன் எனக்கு மேல் எதுவும் இல்லை என்று கூறி விட்டு மலக்குகளை அழைத்து என்னுடைய இந்த அடியானை நான் மன்னித்து விட்டேன் அவனை சொர்க்கத்திலும் நுழைத்து விட்டேன் அதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறுகின்றான்
.
நூல். தப்ஸீர் குர்துபி

من قرأ " شهد الله أنه لا إله إلا هو الاية خلق الله سبعين ملكا يستغفرون له إلى يوم القيامة ".

எந்த மனிதன் இந்த வசனத்தை ஓதுகின்றானோ அல்லாஹ் 70 ஆயிரம் மலக்குகளைப் படைக்கின்றான் அவர்கள் கியாமத் நாள் வரை அவனுக்காக பாவமன்னிப்பு தேடுவார்கள்

நூல். தப்ஸீர் குர்துபி

ان لله تعالى ملكا موكلا بمن يقول : يا ارحم الراحمين فمن قالها ثلاثا قال له الملك : إن أرحم الراحمين قد أقبل عليك ، فسل (ك عن أبي أمامة).

   நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அல்லாவுக்கு சில மலக்குமார்கள் இருக்கின்றனர் அவர்கள்     يا ارحم الراحمين    என்ற வார்த்தையை சொல்பவர்களைக் கொண்டு சாட்டப்பட்டுள்ளனர் அதை 3 தடவை இருவர் துஆவில் சொன்னால் மலக்கு அவரிடம் சொல்கின்றார் நிச்சயமாக அருலாளன் அல்லாஹ் உன்னை முன்னோக்கி நீ வேண்டியதைக் கேள் என்கின்றார் .

நூல். கன்சுல் உம்மால்.

மலக்குகளின் வருகையை தடுக்கும் பாவங்கள்

وعن ابن
 عمر قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا كذب العبد تباعد عنه الملك ميلا من نتن ما جاء به " . رواه الترمذي

ஒரு அடியான் பொய் சொன்னால் அவனிடம் இருந்து பொய்யின் காரணமாக ஏறபடக்கூடிய துர்வாடையினால் மலக்கு ஒரு மைல் தூரம் விலகி விடுகிறார்   என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நூல். மிஸ்காத்.

وعن علي قال : قال رسول الله صلى الله عليه وسلم : " لا تدخل الملائكة بيتا فيه صورة ولا كلب ولا جنب " . رواه أبو داود والنسائي
 
உருவப்படம் நாய் உள்ள வீட்டிலும்  குளிப்பு கடமையானவன் வீட்டிலும் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்று நபி அவர்கள் சொன்னார்கள்

நூல். நஸயி

لا تدخل الملائكة بيتا فيه جرس ، ولا تصحب ركبا فيه جرس
لا تصحب الملائكة رفقة فيها جلجل

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் எந்த வீட்டில் சலங்கை சப்தம் இருக்குமோ நெத வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் எந்த வாகனத்தில் சலங்கை ஒளி கேட்குமோ அதை மலக்குகள் தோழமை கொள்ள மாட்டார்கள் சலங்கை சப்தம் இசைக்கு ஒப்பாக இருப்பதால் தான் மலக்குகளின் வருகை தடைப்படுகிறது  என்று                  சொன்னார்கள்

நூல். கன்சுல் உம்மால்.

இதற்கே இப்படி என்றால் சதா நேரமும்  டிவி ஓடுகிற வீட்டுக்கும்.     பாட்டுப படிக்கும் வியாபாரக் கடைகளுக்கும் வீடியோ ஓடுகின்ற வாகனங்களுக்கும் மலக்குகளின் பாதுகாப்பும் உதவியும் எப்படி கிடைக்கும் கவலையுடன் சிந்தியுங்கள்

இந்த உம்மத்துக்கு உதவி செய்வதில் மலக்குகளின் ஆர்வம்

فقال عليه السلام « يا جبريل هل لك من حاجة الى ربك قال يا محمد سل الله لى ان ابسط جناحى على الصراط لامتك حتى يجوزوا عليه

மிஃராஜ் பயணத்தில் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் உங்களுக்கு இறைவனிடம் ஏதேனும் தேவை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் என்ற பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்னார்கள் நான் மறுமையில் உங்கள் சமுதாய மக்கள் சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடந்து போக என் இறக்கையை நான் விரித்து வைக்க வேண்டும் இந்த பாக்கியம் எனக்கு கிடைக்க அல்லாவிடம் கேளுங்கள் என்றார்கள்

நூல். ஹாகிம்.

وأخرج أبو داود في القدر ، وابن أبي الدنيا وابن عساكر ، عن علي بن أبي طالب - رضي الله عنه - قال : لكل عبد حفظة يحفظونه ، لا يخر عليه حائط أو يتردى في بئر أو تصيبه دابة ، حتى إذا جاء القدر الذي قدّر له ، خلت عنه الحفظة فأصابه ما شاء الله أن يصيبه

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஒவ்வொரு அடியானுடனும் மலக்குகள் உள்ளனர். அவர்கள்தான் அவர் விழாமலும். கிணற்றில் தடுமாறி விழாமலும். சிங்கம் போன்றவை சாப்பிட்டுவிடாமலும்.நெருப்பில் கறிந்துவிடாமலும்.நீரில் மூழ்கிவிடாமலும் பாதுகாக்கின்றனர்

நூல். தப்ஸீர் துர்ருல் மன்சூர்       

6 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ் மிக அருமை

    ReplyDelete
  2. அருமையான தகவல்கள் அல்ஹம்துலில்லாஹ்
    by s.இஸ்ஹாக் அஹ்மத் பாகவி

    ReplyDelete
  3. அற்புதமான படைப்பு! மலக்குமார்கள் மட்டுமல்ல. உங்கள் கட்டுரையும் தான் முமின்களுக்கு.அவசியம் சென்றடைய வேண்டிய செய்திகள். துஆக்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. ஹழ்ரத் இந்த வார பதிவுக்காக கார்திருக்கிறோம் (20:3:14)

    ReplyDelete
  5. பிரோஜனமான தகவல்கள் நன்றிகள்!

    ReplyDelete