ஒவ்வொரு மனிதனுக்கும் பல லட்சியங்களும் ஆசைகளும் உண்டுஅவற்றில்
மிக முக்கியமானது என்னெவெனில் வாழ்க்கை முடிவதற்கு முன் எப்பாடுபட்டாவது தன் குடும்பத்திற்கும்
சந்ததிகளுக்கும் ஒரு வீட்டை கட்டியாக வேண்டும் என்பது தான் அந்த ஆசை நம்மில் பலரும்
இந்த லட்சியத்தை அடைந்து கொள்கின்றனர் ஆனால் ஒரு பெரிய வேதனை என்னவென்றால்அந்த வீட்டின்
கட்டிய அமைப்பும் அதற்கு பூசப்பட்ட வண்ணங்களும் சுக வாழ்வுக்கு வேண்டிய எல்லா உயர்ந்த
பொருட்களும் இருக்கின்றன என்றாலும் வீட்டில் நிம்மதியோ மகிழ்ச்சியோ இல்லை..
வீடெல்லாம் வீடல்ல நிம்மதியான
வீடு தான் சிறந்த வீடு நமது இல்லங்கள் நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டு நிரப்ப நாம்
என்ன செய்ய வேண்டும் இதை அறிந்து கொள்வது தான் இன்றைய ஜூம்ஆவின் நோக்கமாகும் மனிதன்
சுற்றுலா. நண்பர்கள்
சந்திப்பு. விளையாட்டின்
மூலம் நிம்மதியை தேடி வீட்டை விட்டு வெளியேறுகின்றான்..
நிம்மதி எங்கே..
أنس بن مالك قال: أوصاني رسول الله صلى الله عليه وسلم
بخمس خصال، قال لي
يا أنس أسبغ الوضوء يزد في عمرك، وسلم على من لقيت من
أمتي تكثر حسناتك، وإذا دخلت فسلم على أهل بيتك يكثر خير أهل بيتك، وصل صلاة الضحى؛
فإنها صلاة الأوابين قبلك، يا أنس، ارحم الصغير ووقر الكبير تكن من رفقائي يوم القيامة
அனஸ்(ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்
எனக்கு வஸிய்யத் செய்கின்ற போது நாயகம் (ஸல்) சொன்னார்கள். ஒழுவை பரிபூரணமாக செய்யுங்கள் அது உங்களுக்கு
ஆயுளை அதிகப்படுத்தும் என் உம்மத்தில் நீ சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஸலாம் சொல்லுங்கள்
அது உனக்கு நன்மைகளை அதிகப்படுத்தும் வீட்டில் உள்ளே நுழைகின்ற பொழுது உனது வீட்டில்
உள்ளோருக்கும் ஸலாம் சொல் அது உனது வீட்டில் நலவுகளை அதிகப்படுத்தும் நீ லுஹா தொழுகையை
தொழுது கொள் அது இறைவனின் பக்கம் மீள்பவர்களின் தொழுகையாகும் என்றார்கள் சிறுவருக்கு
கருணை காட்டு பெரியவரை கண்ணியப்படுத்து நீ மறுமையில் எனது நண்பர்களில் ஒருவனாக ஆகி
விடுவாய் என்றார்கள்.
நூல். தப்ஸீர் இப்னு கஸீர்.
ஒரு மனிதர் நபி இடம் வந்து தனது வறுமையை பற்றி முறையிட்ட போது
நபி அவர்கள் சொன்னார்கள் நீங்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைகின்ற போது ஆட்கள் இருந்தால்
அவர்களுக்கும் எந்த ஒருவரும் இல்லாவிட்டால் உங்களை நீங்களே ஸலாம் சொல்லுங்கள் பிறகு
சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுங்கள் என்றார்கள் நாயகம் சொன்னதை அந்த மனிதர் செய்தார்
அதனால் அல்லாஹ் அவருக்கு ரிஸ்கை விசாலமாக்கினான் அந்த ரிஸ்கை அவருடைய அண்டை வீட்டாருக்கும்
பொழிந்தான்.
நூல். ரூஹுல் பயான்.
ஆயிஷா (ரலி) அவர்களின் வீடே சிறந்த
வீடு..
ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்
எனது அறையில் 3 சந்திரன்கள் வந்து விழுவதாக நான் கனவு கண்டேன்
அதற்கு விளக்கம் என்னவென்று அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் சொன்னார்கள் உனது கனவு பலித்தால் அதனுடைய
விளக்கம் இது தான் இந்த பூமியில் மிகச் சிறந்தவர்களான 3 பேர்
உனது வீட்டில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்றார்கள் நபி மரணித்த பொழுது அபூபக்கர்
ஆயிஷாவிடம் உனது 3 சந்திரன்களில் இது மிகச் சிறந்தது என்றார்கள்
இதற்கு பின் அபூபக்கர் உமர் இருவரும் ஆயிஷா வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார்கள் ஹயாத்துன்
நபியான நாயகத்தையும் மண்ணறையிலும் உயிருடன் வாழும் தகுதி பெற்ற ஷஹீத்களான அபூபக்கர்
உமர் (ரலி) இருவரையும் ஆயிஷாவின் வீடு சுமந்திருப்பதுடன்
ஹஜ் மற்றும் ஸியாரத்தின் மூலம் தினமும் எண்ணற்ற மக்களின் ஸலாமை கேட்கும் பாக்கியத்தை
பெற்றிருப்பதாலும் அந்த வீடு பாக்கியம் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது..
நூல். தப்ரானி.
இல்லத்திற்கு நிம்மதியை சுமந்துவரும் இனிய செயல்கள்.
إجعلوا
لبيوتكم نصيباً من القرآن ، فإِن البيت إِذا قرىءَ فيه القرآن يستع على أَهله وكثر
خيره ، وكان سكانه في زيادة ، وإِذا لم يقرأ فيه القرآن ضُيِّق على أَهله ، وقلَّ
خيره ، وكان سكانه في نقصان.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எந்த வீட்டில் குர்ஆன் ஓதப்படுகிறதோ அந்த வீட்டில் நலவுகள் அதிகமாகும்.எந்த வீட்டில் குர் ஆன் ஓதப்படவில்லையோ அந்த வீட்டில் நலவுகள் குறைந்துபோகும்.
நூல். துர்ருல் மன்ஸூர்
உம்மு ஹானி (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
என் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள்.
வந்ததும் என்னிடம் உன் வீட்டில் பரக்கத்தை என்னால் காண முடியவில்லையே
ஏன் என்றார்கள். அப்போது நான் நபியிடம் எனது வீட்டில் எந்த பரக்கத்தை
நீங்கள் மறுத்தீர்களோ அந்த பரக்கத் என்று கேட்ட பொழுது நாயகம் சொன்னார்கள் உனது வீட்டில்
நான் ஆடுகளை காணவில்லையே என்றார்கள்.
நூல். தப்ரானி.
கஸ்ராவே (பெண்) உனது பெற்றோருக்கு
உபகாரம் செய்வாயாக அது உனது வீட்டில் நலவுகளை அதிகப்படுத்தும்
பெற்றோருக்கு கொடுமை செய்து அவர்களின் இதயங்களை இடிந்து போக
செய்யும் இல்லங்கள் இறை சாபத்திற்கு ஆளாகும்..
நூல். உஸ்துல் கஃபா
أما صلاة الرجل في بيته تطوعاً فنور فنور بيتك ما استطعت
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். வீட்டில் தொழுகின்ற மனிதனுடைய நபில்
தொழுகையாகிறது வீட்டிற்கு ஒளியாக இருக்கின்றது எனவே முடிந்தவரை வணங்கி வீட்டை ஒளிமயமாக்கு.
நூல். மஜ்மவுஸ் ஸவாயித்
ومن
جلس في بيته لم يغتب أحداً بسوء كان ضامناً على الله عز وجل فيريد أن
يخرجني عدو الله من بيتي إلى المجلس. رواه الطبراني في الأوسط
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
யார் எவரையும் பற்றி புறம் பேசாத நிலையில் வீட்டில் இருக்கின்றாரோ அவனை
காப்பாற்றுவது அல்லாவின் மீது பொறுப்பாகி விட்டது..
நூல். மஜ்மவுஸ் ஸவாயித்.
நிம்மதியை மன அமைதியை காப்பதில் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு.
وعن أنس قال : كان النبي صلى الله عليه وسلم عند بعض نسائه فأرسلت إحدى
أمهات المؤمنين بصحفة فيها طعام فضربت التي النبي صلى الله عليه وسلم في بيتها يد الخادم فسقطت
الصحفة فانفلقت فجمع النبي صلى الله عليه وسلم فلق الصحفة ثم جعل يجمع فيها الطعام
الذي كان في الصحفة ويقول : " غارت أمكم " ثم حبس الخادم حتى أتي بصحفة من عند التي هو في بيتها فدفع الصحفة الصحيحة إلى
التي كسرت صحفتها وأمسك المكسورة في بيت التي كسرت . رواه البخاري
நாயகம் அவர்கள் தன்னுடைய ஒரு மனைவியின் வீட்டில் இருந்தார்கள்
அது உம்மு சலமா வின் வீடு என்றும் சொல்லப்படுகிறது அப்பொழுது மற்றொரு மனைவி அது மற்றொரு
மனைவி ஸைனப் என்று சொல்லப்படுகிறது அவர்கள் ஒரு உணவு தட்டை நபி இடம் பணியாளர்கள் மூலம்
அனுப்பி வைத்தார்கள் இதனால் கோபம் கொண்ட நபியின் மனைவி பணியாளர்களின் கையை தட்டினார்கள்
அந்த தட்டு கீழே விழுந்தது உணவும் சிதரியது உடனே நாயகம் பொறுமையுடன் அந்த தட்டின் உடைந்த
துண்டுகளை சேர்த்து ஒன்றாக்கி அதில் சிந்திய உணவுகளை எடுத்து வைத்து விட்டு உங்கள்
தாயிக்கு ரோஷம் வந்து விட்டதுஎன்று மட்டும் சொல்லி விட்டு தான் இருந்த மனைவி இடம் நல்ல
தட்டை பெற்று உடைந்த தட்டுக்கு பகரமாக பணியாளரிடம் வழங்கி விட்டு உடைந்த தட்டை இருந்த
வீட்டில் வைத்துக் கொண்டார்கள்.
நூல். புகாரி. மிஸ்காத்.
பக்கம். 255
இந்த நிகழ்வை போன்று நபியின் வாழ்வை பின் பற்றி விட்டு கொடுத்தல்
சகித்தல் மன்னித்தல் புரிந்து வாழ்தல் இப்படிப்பட்ட குணங்கள் பெறாத மனிதர்கள் வாழும்
வீடு மன அமைதியை விட்டு தூரமாகிவிடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் ஒரு வீட்டாரை பிரியப்பட்டால் அவர்களின் உள்ளத்தில் மென்மையை
நுழைப்பான்.
நூல். மிஸ்காத்.
أبو إمامة إن رسول الله صلى الله عليه وسلم قال " إن إبليس لما
نزل إلى الأرض قال
اجعل لي مؤذناً قال المزامير،
ஷைத்தானை அல்லாஹ் பூமிக்கு விரட்டிய போது அவன் அல்லாஹ்விடம்
நீ எனக்கு ஒரு அழைப்பாளரை கொடு என்று கேட்டபோது இசைக்கருவிதான் உனது அழைப்பாளன் என்று
அல்லாஹ் சொன்னான்.
நூல். இஹ்யா.
இறைத்தூதர்களையும் இறைநேசர்களையும் பழித்துப்பேசுவதும் அதை கேட்பதும்
அவர்களுக்கு துணையாக இருப்பதும் அமைதிக்கு ஆபத்தானதாகும்.
ابن جرير وابن أبي حاتم وأبو الشيخ عن السدي في قوله { وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعباً } قال : كان رجل
من النصارى بالمدينة إذا سمع المنادي ينادي : أشهد أن محمداً رسول الله . قال : أحرق
الله الكاذب ، فدخل خادمه ذات ليلة من الليالي بنار وهو قائم وأهله نيام ، فسقطت شرارة
فاحرقت البيت واحترق هو وأهله .
மதினாவில் ஒரு கிருஸ்தவன் வாழ்ந்தான் அவன் பாங்கு சப்தத்தை கேட்கும்போதெல்லாம்
அல்லாஹ் பொய்யரான முஹம்மது (ஸல்) அவர்களை கரிப்பானாக
என்று சொல்வான் ஒரு நாள் அவனுடைய பணியளன் இரவு வேலையில் நெருப்புடன் அந்த கிருஸ்தவனின்
வீட்டுக்கு வந்தான் அவனுடைய கையில் இருந்த நெருப்பு கங்கு கீழே விழுந்தது எனவே வீடு
முற்றிலும் எரிந்தது அந்த கிறிஸ்தவனும் அவனுடைய வீட்டாரும் எரிந்தனர்.
நூல். துர்ருல் மன்ஸூர்.
இறை தூதர்களையும் சஹாபாக்களையும் இறை நேசர்களையும் இழிவாக பேசக்கூடிய
வஹ்ஹாபிகளின் பேச்சை நேரடியகவோ டிவி கேசட் பத்திரிக்கை போன்ற ஊடகங்களின் வழியாகவோ கேட்பவர்களும்
இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment