இவ்வுலக வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் சில ஆசைகள் உண்டு.அதற்கு விருப்பங்கள்
எண்ணங்கள்,இலட்சியங்கள் என்று கூறப்படும்.அந்த ஆசைகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும்.
ஒரு நோயாளி ஆரோக்கியத்தை ஆசைப்
படுகிறான்.ஒரு ஏழை செல்வத்தை ஆசைப்படுகிறான்.ஒரு செல்வந்தன் செல்வாக்கை ஆசைப்படுகிறான்.மக்களிடம் செல்வாக்குமிக்க ஒருவன் பதவி அதிகாரத்திற்கு ஆசைப்படுகிறான்.
குழந்தை,வாலிபம்,வயோதிகம் என வாழ்வின் அத்துனை பருவங்களையும் ஆசை ஆக்கிரமி
க்கிறது.ஆடையில்லாதவன் மட்டுமல்ல,ஆசையில்லாதவனும் அரைமனிதனே!
உயர்ந்த மனிதர்களின் ஆசைகளும் உயர்வாகவே இருக்கிறது.மட்டமானவர்களின் ஆசையும் மட்டமாகவேஇருக்கிறது.
மனிதனின் ஆசைகளுக்கு எல்லை இல்லை.முடிவும் இல்லை.அது மனித வாழ்வின் எல்லைகோட்டினையும் தாண்டி நீண்டு இருக்கிறது என கல்பில் நிறைந்த கண்மணி ஸல் அவர்கள் அற்புதமாக விளக்கம் தந்தார்கள்.
முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும்.
1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம்.
2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.
ஒரு ஆசை நிறைவேறும்போது இன்னொரு ஆசை பிறக்கும்.இதுவே இந்த உலகத்தின் நியதியாகும்.படிக்கும் காலங்களில் நல்ல வேலையில் சேரவேண்டும் என்ற ஆசை.நல்லவேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கை துணைக்கு நல்ல மனைவி அமைய வேண்டும் என்ற ஆசை.நல்ல மனைவி அமைந்து விட்டால் குழந்தை பாக்கியத்திற்காக ஆசை.குழந்தையும் கிடைத்துவிட்டால் வீடுகட்ட ஆசை.வாகனம் வாங்க ஆசை என இந்த பட்டியலின் நீளம் கப்ர் வரை தொடர்கிறது.
நான் உலகில் எல்லா ஆசைகளையும் பெற்றுக்கொண்டேன் என்று மனம் நிறைந்து பேசுபவர்கள் மிக மிக குறைவு.காரணம் ஆசைகள் நஃப்ஸின் பிரதிப லிப்புக்கள்.நஃப்ஸின் ஆசைகளுக்கு தீனிபோட்டு வெற்றிபெற்றவர்கள் கிடையாது.
இமாம் பூஸிரி ரஹ் அவர்கள் நஃப்ஸுக்கு தீனி போடக்கூடாது,மாறாக அதற்கு கடிவாளமிட்டு கட்டுப்படுத்த வேண்டும் என்று அழகாக கூறுகிறார்கள்
والنفس كالطفل إن تهمله شب على ... حب الرضاع وإن تفطمه ينفطم
நஃப்ஸ் ஒரு குழந்தையை போல,தாயிடம் பால் குடிக்கும் ஒரு குழந்தைக்கு அந்த பழக்கத்தை தாய் நிறுத்தாவிட்டால் அக்குழந்தை தன் வாலிபம் வரை கூட அப்பழக்கத்தை நிறுத்தாது.அந்த தாய் அப்பழக்கத்தை துண்டித்தால் அக்குழந்தையும் நிறுத்திவிடும்.
இதையே நபி ஸல் அவர்கள்,
عن ( ابن عباس رضي الله عنهما يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول لو كان لابن آدم واديان من مال لابتغى ثالثاً ، ولا يملأ جوف ابن آدم إلا التراب ، ويتوب الله على من تاب
ஆதமின் மகனுக்கு இரண்டு நீரோடைகள் செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என கூறினார்கள்.
ஆசைப்படுங்கள்
சில நியாயமான மனித ஆசைகளை இஸ்லாம் வரவேற்கிறது.ஒரு முஃமின் அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் காரியங்களுக்கு ஆசைப்படவேண்டும்.
عن أبي هريرة – رضى الله عنه - قال : سمعت النبي صلى الله عليه وسلم يقول إذا تمنى أحدكم فلينظر ما يتمنى فإنه لا يدري ما يكتب له من أمنيته ) رواه احمد
உங்களில் ஒருவர் ஆசைப்பட்டால் அவர் எதை ஆசைப்படுகிறார் என்பதை சிந்தனை செய்து
கொள்ளட்டும், ஏனெனில் அவரின் ஆசைக்கும் கூலி எழுதப்படும்.
அதாவது- பாவம் செய்யும் ஒரு பணக்காரனைப்பார்த்து இவனைப்போன்று என்னிடமும் பணம் இருந்தால் நானும் இவனைப்போல நடப்பேன் என்று ஆசைப்பட்ட ஒருவன், பாவம் செய்யாவிட்டாலும் அவன் ஆசையால் பாவத்தின் கூலி பெறுவான்.இவ்வாறு -நன்மை செய்யும் ஒரு பணக்காரனைப் பார்த்து இவனைப்போன்று என்னிடமும் பணம் இருந்தால் நானும் இவனைப்போல நடப்பேன் என்று ஆசைப்பட்ட ஒருவன், நன்மை செய்யாவிட்டாலும் அவன் ஆசையால் நன்மையின் கூலி பெறுவான்.
وَفِي الحَدِيثِ: «إِذَا تَمَنَّى أَحَدُكُمْ، فَلْيَسْتَكْثِرْ، فَإِنَّمَا يَسْأَلُ رَبَّهُ»؛ رَوَاهُ عَبْدُ بْنُ حُمَيْدٍ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانٍ وَالأَلْبَانِيُّ
.
உங்களில் ஒவ்வொருவரும் அதிகமாக ஆசைப்படுங்கள்.ஏனெனில் அவர் கேட்கப்போவது தன் ரப்பிடம் தான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ஒரு விஷயத்தைஆசைப்படுவதால் விளையும் நன்மைகளில் ஒன்று: சில நேரங்களில் அதுவே துஆவாகவும் இலட்சியமாகவும் மாறிவிடும்
இந்த உலகில் சாதனைகள் படைத்த பலர்கள் தங்களின் ஆசைகளை விரிவாக ஆக்கிக்கொண்டவர்கள்தான்.ஆசைகள் தான் இலட்சியவாதிகளை உருவாக்குகிறது.
قال عمر بن عبد العزيز يا رجاء إن لي نفساً تواقة تاقت إلى فاطمة بنت عبد الملك فتزوجتها، وتاقت إلى الإمارة فوليتها، وتاقت إلى الخلافة فأدركتها، وقد تاقت إلى الجنة فأرجو أن أدركها إن شاء الله عز وجل .ابن خلكان : وفيات الأعيان
ரஜாவே! மன்னர் அப்துல்மலிக்கின் மகள் ஃபாத்திமாவை திருமணம் செய்ய என் மனம் ஆசைப்பட்டது.அப்பெண்ணை நான் நிகாஹ் செய்தேன்.
அதற்குப்பின் அதிகாரியாகவேண்டும் என்று என் மனம் ஆசைப்பட்டது. நான் அதிகாரியாக நியமிக்கப்பட்டேன்.
அதற்குப்பின் கலீபாக ஆகவேண்டும் என்று என் மனம் விரும்பியது.அப்பதவியும் எனக்கு கிடைத்தது.இப்போது என் நஃப்ஸ் சுவனம் செல்ல ஆசைப்படுகிறது.இன்ஷா அல்லாஹ் அதையும் நான் அடைவேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் என உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ் அவர்கள் கூறினார்கள்.
வாழும் காலங்களில் நிறைய ஆசைப்படுங்கள்,ஏனெனில் மரணித்தவர்கள் ஆசைப்படுவார்கள்.ஆனால் அது நிறைவேறும் சந்தர்ப்பம் மிக அரிது.
فعَنْ طَلْحَةَ بْنِ خِرَاشٍ ، قَالَ : سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يَقُولُ:لَمَّا قُتِلَ عَبْدُ اللهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ ، يَوْمَ أُحُدٍ ، لَقِيَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ، فَقَالَ : يَا جَابِرُ ، أَلاَ أُخْبِرُكَ مَا قَالَ اللهُ لأَبِيكَ ؟ (وَقَالَ يَحْيَى فِي حَدِيثِهِ : فَقَالَ : يَا جَابِرُ ، مَا لِي أَرَاكَ مُنْكَسِرًا ؟ قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، اسْتُشْهِدَ أَبِي وَتَرَكَ عِيَالاً وَدَيْنًا ، قَالَ : أَفَلاَ أُبَشِّرُكَ بِمَا لَقِيَ اللهُ بِهِ أَبَاكَ ؟) قَالَ : بَلَى ، يَا رَسُولَ اللهِ ، قَالَ : مَا كَلَّمَ اللهُ أَحَدًا قَطُّ إِلاَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ، وَكَلَّمَ أَبَاكَ كِفَاحًا ، فَقَالَ : يَا عَبْدِي ، تَمَنَّ عَلَيَّ أُعْطِكَ ، قَالَ : يَا رَبِّ ، تُحْيِينِي فَأُقْتَلُ فِيكَ ثَانِيَةً ، فَقَالَ الرَّبُّ سُبْحَانَهُ : إِنَّهُ سَبَقَ مِنِّي أَنَّهُمْ إِلَيْهَا لاَ يَرْجِعُونَ ، قَالَ : يَا رَبِّ ، فَأَبْلِغْ مَنْ وَرَائِي ، قَالَ : فَأَنْزَلَ اللهُ ، تَعَالَى : (وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ).أخرجه ابن ماجة (190) الألباني :حسن الظلال ( 602 ) ، التعليق الرغيب ( 2 / 190 - 191 ).
ஹழ்ரத் ஜாபி ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
என் தந்தை அப்துல்லாஹ் ரலி அவர்கள் உஹது போரில் கொல்லப்பட்ட போது நபி ஸல் அவர்கள் என்னை சந்தித்து-
ஜாபிரே! ஏன் கவலையாக இருக்கிறீர்?என விசாரித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் அவர்களே!என் தந்தை உஹதில் ஷஹீதாகிவிட்டார். அவர் குடும்பங்களையும் சில கடன்களையும் விட்டுச்சென்றுள்ளார்.அவரின் கடனை அழைத்து,குடும்பத்தை எப்படி நடத்துவது? என யோசனை செய்து கொண்டிருக்கிறேன் என்று நான் கூறினேன்.
அதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள், அல்லாஹ் உன் தந்தையை எப்படி சந்தித்தான் என்று கூறட்டுமா? என கேட்டார்கள்.
அவசியம் கூறுங்கள் என்றேன்.
அல்லாஹ் யாருடனும் திரையின்றி பேசமாட்டான்.ஆனால் உன் தந்தையுடன் நேரடியாக திரையின்றி பேசினான்.
என் அடியானே!உனக்கு என்ன வேண்டும்?.நீ ஆசைப்படு.அதை உனக்கு நான் கொடுக்கிறேன் என்று அல்லாஹ் கூறினான்.
அதற்கு உன் தந்தை-ரப்பே! எனக்கு மீண்டும் உயிர் கொடு, அதை உனக்காக (நான் கொல்லப்பட்டு) திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்றார்கள்.
அதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன், இங்கு வந்தவர்கள் யாரும் திருப்பி உலகுக்கு அனுப்பபடமாட்டார்கள் என்ற என் தீர்ப்பு முந்திவிட்டது.என்று கூறியபோது-
அப்படியானால் என்னைப்பற்றிய செய்திகளையாவது என்னை பிரிந்துவாடும் என் குடும்பத்திற்கு எத்திவைப்பாயாக என கூறினார்கள்.அப்போது அல்லாஹ்
وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ
(அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று எண்ணிவிடவேண்டாம்.அவர்கள் உயிருள்ளவர்கள்.அவர்கள் ரப்பிடம் உணவ ளிக்கப்படுகிறார்கள்)
என்ற ஆயத்தை இறக்கினான்.
அண்ணலாரின் ஆசைகள்
நபி ஸல் அவர்களுக்கும் இவ்வுலகில் சில ஆசைகள் இருந்தது,அந்த ஆசைகள் அத்துனையும் இந்த உம்மத்துடன் சம்பந்தப்பட்டது.
இந்த உம்மத்தில் ஈமான் கொள்ளாத யாரும் இருக்கக்கூடாது-இந்த உம்மத்தில் அனைவர்களும் சுவனம் செல்லவேண்டும் போன்ற ஆசைகள் உண்டு.
فَإِنَّ اللَّـهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۖ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ حَسَرَاتٍ ۚ إِنَّ اللَّـهَ عَلِيمٌ بِمَا يَصْنَعُونَ
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்;. மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் கவலைப்பட வேண்டாம்,நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.(சூரா ஃபாதிர் 8)
مَا يَسُرُّنِي أَنَّ عِنْدِي مِثْلَ أُحُدٍ هَذَا ذَهَبًا تَمْضِي عَلَيَّ ثَالِثَةٌ وَعِنْدِي مِنْهُ دِينَارٌ
என்னிடம் உஹதுமலை அளவுக்கு தங்கம் இருந்து, மூன்று தினங்களுக்குள் அதில் ஒரு தீனார்கூட மிச்சமின்றி அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தால் அது எனக்கு மகிழ்ச்சிதரக்கூடியது என்று நபி ஸல் அவர்கள் கூறி னார்கள்.(புஹாரி)
وددتُ أني قد رأيت إخواننا، قالوا : يا رسول الله ألسنا إخوانك ، قال : بل أنتم أصحابي، وإخواننا الذين لم يأتوا بعد
என் சகோதரர்களை பார்க்க நான் ஆசைப்படுகிறேன் என்று நபி ஸல் அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் உங்களின் சகோதரர்கள் இல்லையா?என நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபி சல் அவர்கள், நீங்கள் என் தோழர்கள்.என் சகோதரர்கள் என் காலத்திற்கு பின்னால் வருவார்களே அவர்கள்தான் என்று பதில் கூறினார்கள்
(முஸ்லிம்)
قَالَ وَاَلَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ
சுவனவாசிகளில் சரிபாதி நீங்கள் இருக்கவேண்டுமென நான் ஆசைப்படுகிறே ன் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.(புஹாரி)
அருமை தோழர்களின் ஆசைகள்
நபித்தோழர்களுக்கும் பல ஆசைகள் இருந்தது.
أن عمر بن الخطاب قال لأصحابة : تمنوا ، فقال : رجل أتمنى لو أن لي هذه الدار مملوءة ذهباً أنفقه في سبيل الله ، ثم قال : تمنوا ، فقال رجل : أتمنى لو أنها مملوءة لؤلؤاً وزبرجداً وجوهراً أنفقه في سبيل الله وأتصدق . ثم قال : تمنوا . فقالوا : ما ندري يا أمير المؤمنين . فقال عمر أما أنا فأتمنى لو أن هذه الدار مملوءة رجالاً مثل أبي عبيده بن الجراح .
ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் தம் தோழர்களிடம்-ஆசைப்படுங்கள் என்றார்கள். அப்போது ஒருவர்,இந்த வீடு முழுவதும் தங்கமாக இருந்து அதை அல்லாஹ் வின் பாதையில் செலவு செய்ய எனக்கு ஆசை என்றார்.
இன்னும் ஆசைப்படுங்கள் என உமர் ரலி அவர்கள் மீண்டும் கூறினார்கள்.
அப்போது இன்னொரு தோழர் எழுந்து,இந்த வீடு முழுவதும் முத்து பளமாக இருந்து அதை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய எனக்கு ஆசை என்று கூறினார்.
இன்னும் ஆசைப்படுங்கள் என உமர் ரலி அவர்கள் மூன்றாவது கூறினார்கள்.
அப்போது அமீருல் முஃமினீன் அவர்களே! எதை ஆசைப்படவேண்டும்? என அவர்களின் தோழர்கள் வினவினார்கள்.அதற்கு உமர் ரலி அவர்கள்
இந்த வீடு முழுவதும் அபூ உபைதா போன்ற நபித்தோழர்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்றார்கள். (ஹாகிம்)
اجتمع في الحجر عبد الله، ومصعب، وعروة – بنو الزبير – وابن عمر، فقال ابن عمر: تمنوا، فقال ابن الزبير: أتمنى الخلافة، وقال عروة: أتمنى أن يؤخذ عني العلم، وقال مصعب: أتمنى إمرة العراق، فقال ابن عمر: أما أنا فأتمنى المغفرة. قال أبو الزناد: فنالوا ما تمنوا، ولعل ابن عمر قد غُفر له. الذهبي : سير أعلام النبلاء (4/141).
ஹிஜ்ர் எனும் இடத்தில் இப்னு உமர் ரலி,அப்துல்லாஹ் ரலி,முஸ்அப் ரலி, உர்வா ரலி ஆகிய நான்குபேர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது இப்னு உமர் ரலி அவர்கள் மற்ற மூவரை நோக்கி,உங்களின் ஆசையை வெளிப்படுத்துங்கள் என்றார்கள்.
நான் கலீபாவாக ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று இப்னு
ஸுபைர் ரலி அவர்கள் கூறினார்கள்.
நான் கல்வியில் தேச்சிபெற்றுபெற்று மக்களுக்கு கல்வி போதிக்க ஆசைப்படு கிறேன் என்று உர்வா ரலி அவர்கள் கூறினார்கள்.
நான் ஈராக் தேசத்தின் அதிகாரியாக ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என முஸ்அப் ரலி அவர்கள் கூறினார்கள்.
அப்போது இப்னு உமர் ரலி அவர்கள்,நான் அல்லாஹ்வின் மன்னிப்பை ஆசைப்படுகிறேன் என்றாகள்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அபுஸ்ஸினாத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
அந்த மூன்றுபேர்கள் ஆசைப்பட்டது போலவே அல்லாஹ் அவர்களுக்கு கிலாபத்,கல்வி,அதிகாரத்தை கொடுத்தான்.இன்ஷா அல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்கள் ஆசைப்பட்ட மஃபிரத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான் என்று நம்பிக்கை கொள்கிறோம்.
எனவே ஆசைக்கு அப்பாற்பட்ட மனிதனும் இல்லை மலக்கும் இல்லை.என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?ஆம்!மலக்குகளுக்கும் ஆசை உண்டு.
மிஃராஜில் சித்ரதுல் முந்தஹாவில் வைத்து உமக்கு ஆசை இருக்கிறதா?என ஜிப்ரயீல் அலை அவர்களிடம் நபி ஸல் அவர்கள் வினவியபோது-
ஆம்!நாளை மறுமையில் உங்கள் உம்மத் ஸிராத்துல் முஸ்தகீமில் தவறி விழும்போது என் இரக்கையால் தாங்கிப்பிடித்து சுவனத்தில் சேர்க்கவேண்டும் என்றார்கள்.அதைச்செவியுற்ற நபி ஸல் அவர்கள் கண்ணீர் வடித்தார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِقَبْرٍ، فَقَالَ:\"مَنْ صَاحِبُ هَذَا الْقَبْرِ؟\"فَقَالُوا: فُلانٌ، فَقَالَ:\"رَكْعَتَانِ أَحَبُّ إِلَى هَذَا مِنْ بَقِيَّةِ دُنْيَاكُمْ\".
ஒரு கப்ரை கடந்துசென்ற பூமான் நபி ஸல் அவர்கள் இந்த கப்ரில் அடங்கப்பட்டிருப்பவர் யார்?என வினவினார்கள்.
அது இன்னார் என ஸஹாபாக்கள் கூறினார்கள்.
அப்போது நபி ஸல் அவர்கள்,
நீங்கள் சாதாரணமாக கருதும் இரண்டு இரக்கத் தொழுகையின் நன்மை இவருக்கு கிடைப்பது முழு துன்யாவும் அவருக்கு கிடைப்பதை விடவும் விருப்பமானது என்றார்கள்.(தப்ரானி)
ஓய்வு உலகில் அமல் செய்ய ஆசைப்படுவதும்,அமல் உலகி ஓய்வெடுக்க ஆசைப்படுவதும் துர்ப்பாக்கியமானது.அல்லாஹ் பாதுகாக்கட்டும்.
சுவனத்தை ஆசித்து ஆசையுடன் அமல் செய்வோம்!
Alhamdhu lillah
ReplyDeleteAasaippaduvadharkku aasaiyaha irukkiradhu alhamdhulillah.
ReplyDeleteMasha Allah
ReplyDelete