Wednesday 3 December 2014

மஷ்வரா


முஸ்லிம்கள் தங்கள் வாழ்வில் ஒரு காரியத்தை செய்யலாமா?வேண்டாமா?என்ற தடுமாற்றம் வரும்போது அதிலிருந்து தெளிவான முடிவு எடுப்பதற்கு இரண்டு வழிமுறைகளை இஸ்லாம் கற்றுத்தருகிறது.
ஒன்று:இஸ்திகாரா மற்றொன்று இஸ்திஷாரா (அதாவது மஷ்வரா)

அல்லாஹ் திருக்குர்ஆனில் நபி ஸல் அவர்களின் மகத்தான வெற்றிக்கு பின் இருக்கும் செயல்பாடுகளை கூறும்போதும்,முஸ்லிம்களின் தனித்துவங்களை விவரிக்கும் போதும் மஷ்வராவை பிரதானமாக எடுத்துரைக்கின்றான்

. وَشَاوِرْهُمْ فِي الْأَمْرَ

சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக என நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ் உதரவிடுகின்றான்.

وَالَّذِينَ اسْتَجَابُوا
 لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ 

இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.
இல்முல் அவ்வலீன் வல் ஆகரீன் கொடுக்கப்பட்ட நபி ஸல் அவர்களை தங்களின் காரியங்களில் மஷ்வரா செய்துகொள்ளும்படி அல்லாஹ் உத்தரவிடும்போது நம்மைப்போன்ற குறுமதிகொண்டவர்கள் கட்டாயமாக ஆலோசனை செய்துகொள்ளவேண்டும் என்பதை இந்த வசனம் அழுத்தமாக பேசுகின்றது.

يقول أبو هريرة _رضي الله عنه_: "ما رأيت أكثر مشورة لأصحابه من رسول الله _صلى الله عليه وسلم_ لأصحابه
நபி ஸல் அவர்கள் தம் தோழர்களிடம் மஷ்வரா செய்ததுபோல வேறு யாரும் தம் தோழர்களிடம் மஷ்வரா செய்ய நான் கண்டதில்லை என ஹழ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் மீது நயவஞ்சகர்கள் இட்டுக்கட்டியபோது ஹழ்ரத் அலி ரலி.உஸாமா ரலி போன்ற சின்னவயதினர்களிடம் நபி ஸல் அவர்கள் ஆலோசனை செய்தார்களென்பதை ஹதீஸ்களில் காணக்கிடைக்கிறது.

وشاور علياً وأسامة فيما رمى به أهل الإفك عائشة رضي الله عنها، فسمع منهما

குழந்தையின் பால் குடியை நிறுத்துவது போன்ற சின்ன விஷயங்களில் கூட ஆலோசனை அவசியம் என்று திருக்குர்ஆன் போதிப்பதை பார்க்க முடிகின்றது.

إِنْ أَرَادَا فِصَالاً عَنْ تَرَاضٍ مِنْهُمَا وَتَشَاوُرٍ فَلا جُنَاحَ عَلَيْهِمَا"(البقرة: من الآية
233)
தன் மகனை அறுக்கச்சொல்லி கனவின் முலம் இறைக்கட்டளையை அறிந்துகொண்ட நபி இப்றாஹீம் அலை அவர்கள்-
மகனே! கனவில் உன்னை அறுக்கக்கண்டேன்,உன் அபிப்ராயம் என்ன? என்று  தன் மகனிடம் ஆலோசனை செய்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.

وإبراهيم _عليه السلام_ عندما رأى في الرؤيا الأمر بذبح ابنه ـ ورؤيا الأنبياء حق ـ 

استشار ابنه فقال: "... يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَا 

أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ"(الصافات: من الآية102).

ஸபா நாட்டின் அரசி தம் அமைச்சர்களிடம் நபி ஸுலைமான் அலை அவர்கள் விஷயத்தில் ஆலோசனை செய்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது

فإن ملكة سبأ قالت لقومها: "يَا أَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي أَمْرِي مَا كُنْتُ قَاطِعَةً أَمْراً حَتَّى تَشْهَدُونِ"(النمل: من الآية32).

எனவே பிரமுகர்களே! "என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல" என்று கூறினாள்.
அதற்கு பதில் கூறிய அமைச்சர்கள் இவ்வாறு சொன்னார்கள்

 "قَالُوا نَحْنُ أُولُو قُوَّةٍ وَأُولُو بَأْسٍ شَدِيدٍ وَالْأَمْرُ إِلَيْكِ فَانْظُرِي مَاذَا تَأْمُرِينَ" (النمل:33)

"நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்;(ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்" என்று அவர்கள் சொன்னார்கள்.
அவர்களின் ஆலோசனை திருப்தியளிக்காதபோது அந்த அரசி இப்படிச்சொன்னாள்

"قَالَتْ إِنَّ الْمُلُوكَ إِذَا دَخَلُوا قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً

وَكَذَلِكَ يَفْعَلُونَ" (النمل:34)

அவள் கூறினாள்; "அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப்படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.
அந்த அரசியின் ஆலோசனையின் பரக்கத்தால் அவளுக்கு ஈமான் கிடைக்கிறது.

 فأنجاها الله من الكفر والضلال إلى الإسلام والهداية

இந்த மஷ்வரா முறை இஸ்லாத்தின் தனித்துவமாகும்.
இன்று உலகில் நடைமுறையில் இருக்கும் ஜனநாயக முறைக்கும் இஸ்லாமிய ஆட்சித்தேர்வு முறைக்கும் இடையில் உள்ள வித்தியாசம் மஷ்வரா தான்.இஸ்லாமிய ஆட்சித்தேர்வுமுறை மஷ்வராவை அடிப்படை  யாக கொண்டது.
ஜனநாயகத்தில் பெரும்பான்மைக்கு முதலிடம் வழங்கப்படும் .மஷ்வரா முறையில் அறிவுக்கே முதலிடம்வழங்கப்படும்.

            மஷ்வராவின் ஒழுங்குகள்

1.மஷ்வராவின் முதலாவது ஒழுங்கு துறைசார்ந்த அறிஞர்களிடம் ஆலோசனை தேடுவது.மருத்துவம் பற்றி டாக்டரிடமும் மார்க்கம் பற்றி ஆலிம்களிடமும் ஆலோசனை தேடவேண்டும்.சுறுக்கக்கூறின் நாம் ஆலோசனை தேடுபவர் அதற்கு தகுதியானவராக இருக்க வேண்டும்.தீனு  டைய காரியங்களில் கண்டிப்பாக உலமாக்களிடம் தான் மஷ்வரா செய்ய வேண்டும்.ஏனெனில் பொறியியல் துறைச்சார்ந்த வேலைகளுக்கு டாக்டரை யோ,நோயாளிகளை குணப்படுத்த இஞ்சினியரோ நாம் அனுகுவதில்லை.அப்படி செய்தால் அது எவ்வளவு பெரும் மடத்தனம் என்பதை புரிந்து வைத்திருக்கின்றோம்.

2.ஷரீஅத்தில் எது பர்ள்,வாஜிப்,ஹராம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளதோ அவைகளில் மஷ்வரா கூடாது.
தொழலாமா?வேண்டாமா? மதுவை நிறுத்தலாமா?வேண்டாமா? போன்ற விஷயங்களில் ஆலோசனை அவசியம் இல்லை.ஏனெனில் அல்லாஹ்வும் ரசூலும் முடிவு செய்துவிட்ட விஷயத்தில் முஃமினகளுக்கு எந்த விருப்ப மும் கிடையாது என்று அல்லாஹ் கூறிவிட்டான்.

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّـهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை

3.எவரிடம் ஆலோசனை செய்யப்படுகிறதோ அவர் நம்பிக்கைக்குரியவராக இருக்கவேண்டும்.
ஆலோசனை செய்யப்பட்ட அந்த விஷயம் அமானிதம் என்பதை விளங்க வேண்டும்.
மஷ்வராவின் போது சில நன்மைகளை கருத்தில்கொண்டு புறம்பேசுவது கூடும் என மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.அதேசமயம் ஒருவரைப்பற்றி அபிப்ராயம் கூறும்போது கூடுதல் குறைவின்றி உள்ளதை உள்ளபடி கூற வேண்டும்.

4.எவரிடம் மஷ்வரா தேடப்படுகிறதோ அவர் தேடுபவரின் நன்மையை கருத்தில்கொண்டு சரியான ஆலோசனை வழங்க முற்படவேண்டும்.எந்த ஒரு மனிதன் தன் சகோதர முஸ்லிமிடம் ஆலோசனை தேடி,அவருக்கு தவறான ஆலோசனை வழங்குவாரானால் அவர் அவருக்கு மோசடி செய்துவிட்டார் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

5.ஆலோசனை கேட்கப்படுபவர் கேட்பவரைவிட வயதில் அல்லது அறிவில் மூத்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை.
6.மஷ்வராவை முடிவு செய்யும் உரிமை கேட்பவருக்குச்சொந்தமானது. நான் வழங்கிய மஷ்வராவை தான் முடிவு செய்ய வேண்டுமென நிர்பந்தி க்க கூடாது.

ما خاب من استخار ولا ندم من استشار، ولا عال من اقتصد.
 رواه الطبراني

இஸ்திகாரா செய்தவன் நஷ்டப்படமாட்டான்.ஆலோசனை செய்தவன் வருத்தப்படமாட்டான்.பொருளை நடுநிலையாக செலவு செய்தவன் ஏழையாக மாட்டான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

في قصة الحديبية لما صالح النبي صلى الله عليه وسلم قريشاً على الرجوع وعدم دخول مكة عامهم هذا، ثم قال لأصحابه: "قوموا فانحروا" حتى قال ذلك ثلاث مرات فلم يقم أحد منهم، فدخل صلى الله عليه وسلم على أم سلمة رضي الله عنها فذكر لها ما لقي من الناس، فقالت له: يا نبي الله، اخرج ثم لا تكلم أحداً منهم كلمة حتى تنحر بدنك وتدعو حالقك فيحلقك. فلما فعل ذلك قاموا فنحرو

ஹுதைபிய்யாவில் நபி ஸல் அவர்கள் இஹ்ராமை தாங்கள் இவ்வாண்டு மக்காவின் உள்ளே நுழையாமல் திரும்பிச்செல்வதாக குரைஷிகளிடம் உடன்படிக்கை செய்தபோது- அதை தம் தோழர்களிடம் பலிப்பிராணியை அறுத்துவிட்டு இஹ்ராமை கலைந்துவிடுங்கள் என மூன்று தடவை கூறினார்கள்.ஆனாலும் அவர்களில் யாரும் தயாராக இல்லை.இந்நிலை யில் இது பற்றி தம் மனைவி உம்மு ஸலமா ரலி அவர்களிடம் ஆலோசனை தேடுகிறார்கள்.அல்லாஹ்வின் நபி அவர்களே! நான் ஒரு மஷ்வரா கூறுகின்றேன்.நீங்கள் யாரிடமும் எதுவும் கூறாமல் உங்களின் பலிப்பிராணியை அறுத்து உங்களின் முடியையும் கலைந்துவிடுங்கள் என்று கூறினார்கள்.
நபி ஸல் அவர்களும் அவ்வாறு செய்தபோது எதுவும் பேசாமல் அனைத்து ஸஹாபாக்களும் அவ்வாறு இஹ்ராமை கலைந்துவிட்டனர்.
மனைவிமார்களிடம் ஆலோசனைசெய்வது நபி ஸல் அவர்களின் சுன்னத் என்பதை இதன் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.அதைப்போல சில நேரங்களில் நம்மை விட சின்னவர்களிடமும்  நல்ல ஆலோசனைகள் பெற முடியும்.இதுவே மஷ்வராவின் பரக்கத்.



No comments:

Post a Comment