Wednesday 26 November 2014

முன்மாதிரி முஸ்லிம்




இஸ்லாமிய உலகம் உருவாக்கிய மகத்தான மாமனிதர்களில் முதன்மையானவர் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள்.
நபி மூஸா அலை அவர்களை முதன்மையான முஃமின் என்று அல்குர்ஆன் கூறுகிறது.


قَالَ سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ الْمُؤْمِنِينَ


(இறைவா!) நீ மிகவும் பரிசத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார்.

நபி இப்ராஹீம் அலை அவர்களை சரியான முஸ்லிம் என்று அல்லாஹ் தன் திருமறையில் பதிவு செய்தான்.


مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَـٰكِن كَانَ حَنِيفًا مُّسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ


இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
நபி ஸல் அவர்களை முதன்மையான முஸ்லிம் என்று பெருமையோடு பேசுகிறது அல்குர்ஆன்.


لَا شَرِيكَ لَهُ ۖ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ 


அவனுக்கு யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லீம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).

அந்த வரிசையில் முன்மாதிரி முஸ்லிம் என்று இஸ்லாம் முன்னிலைப்படுத்தும் மகத்துவமிக்க வாழ்க்கைக்கு சொந்தக்காரர் ஸய்யிதுனா அபூபக்கர் ரலி அவர்கள்.


இந்த உம்மத்துக்கும் அவர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.காரணம் நெருக்கடியான காலக்கட்டங்களில் இந்த உம்மத்துக்கு தோள்கொடுத்தவர். குறிப்பாக நுபுவ்வத்,மிஃராஜ்,ஹிஜ்ரத்,வஃபாத் போன்ற தருனங்களில் அவர்களின் பங்களிப்பும் சேவையும் மறுக்க முடியாத உண்மை.

அவர்களின் ஈமானுக்குச்சான்று

சூரியன் உதயமாகும் போது அதன் ஒளி முதலாவதாவதாக உயரமான இடத்தின் மீது படும்.அப்படி நுபுவ்வத் எனும் சூரியன் உதித்தபோது முதலாவ தாக பட்ட அந்த உயர்ந்த மாமனிதர் சித்தீக் ரலி அவர்கள்.
நான் யாருக்கு முன்னால் ஈமானை எடுத்துரைத்தபோதும் ஒரு சின்ன தடுமாற்றத்திற்கு பின்னரே அதை ஏற்க முன்வந்தனர்.
ஹழ்ரத் அலி ரலி அவர்கள் ஆலோசனை செய்ய அவகாசம் கேட்டார்கள். ஹழ்ரத் உமர் ரலி அவர்களை நான் பிடித்த கடுமையான பிடி அவர்களுக்கு தெளிவை தருகிறது.ஆனால் என் அபூபக்கர் எந்த தடுமாற்றமுமின்றி நுபுவ்வத்தை ஏற்றார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அவர்களின் பெயரை கூட முதன்மைக்கு சான்றாக அல்லாஹ் தேர்வு செய்கின்றான்.
அபூ பக்ரில் உள்ள பா, காஃப், ரா, ب ك رஆகிய மூன்று எழுத்து எங்கு வந்தாலும் அது முதன்மையை காட்டும்.
உதாரணமாக புக்ரத் எனும் அரபுச்சொல்லுக்கு அதிகாலை என்று பொருள்.புகூர் எனும் அரபுச்சொல்லுக்கு ஒவ்வொரு பழத்தின் சீசனிலும் முதலாவது காய்க்கும் பழத்துக்கு பெயர்.பாகிரா எனும் அரபுச்சொல்லுக்கு முதலாவதாக திருமணமாகும் கன்னிப்பெண்ணுக்கு சொல்லப்படும்.அந்த பொருளில் அல்லா ஹ்வின் அழைப்புக்கு முதலாவதாக பதில் சொன்னார் என்பதை கவனத்தில்  கொண்டே நபி ஸல் அவர்கள் அந்த பெயரை அவர்களுக்கு சூட்டிமகிழ்ந்தார்கள்.

முதன்மையானவர்

ஆண்களில் இஸ்லாத்தை ஏற்றதில் முதலாமவர்.திருக்குர்ஆனுக்கு முஸ்ஹஃப் என்று பெயர் சூட்டியதில் முதலாமவர்.நபித்துவத்துக்கு பின் கிலாபத்தை ஏற்றதில் முதலாமவர்.ஸித்தீக் எனும்  பட்டம் பெற்றதில் முதலாமவர்.திருக்குர்ஆனை ஒன்றுசேர்த்ததில் முதலாமவர்.தன் தந்தை ஹயாத்தாக வாழும்போதே கிலாபத் பெற்றவரில் முதலாமவர்.பைத்துல் மாலை நிறுவியதில் முதலாமவர்.இப்படி முழு முதலுக்கும் சொந்தக்காரர் அவர்.இந்த முதல் போய் முடியும் இடத்தையும் அண்ணல் நபி ஸல் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
என் உம்மத்தில் எல்லோருக்கும் முதலாவதாக சுவனம் செல்பவர் சித்தீக் ரலிஅவர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறுகின்றார்கள்.

அவர்களின் தஃவாவுக்குச்சான்று

தான் முதலாவதாக இஸ்லாத்தை ஏற்றார் மாத்திரமல்ல,பல நூற்றுக்கணக்காவர்களை இந்த தீனுக்கு சொந்தமாக்கினார்கள்.

நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லும் முன் மக்காவில் மட்டும் அவர்களின் கரத்தால் இஸ்லாத்தை தழுவியவர்கள் முப்பதை தாண்டுகிறது   அவர்களில் ஆறுபேர் சுவனத்தைக்கொண்டு சுபச்செய்தி சொல்லப்பட்ட பத்து பேர்களில் உள்ளவர்கள்.குறிப்பாக ஹழ்ரத் உஸ்மான் ரலி அவர்களும் உள்ளடக்கம்.நபி ஸல் அவர்களின் துஆவுக்கு ஹழ்ரத் உமர் ரலி கிடைத்தார்கள்.அபூபக்கர் ரலி அவர்களின் தியாகத்துகு ஹம்ஸா ரலி கிடைத்தார்கள் என்று ஒரு வரலாற்றாசிரியர் கூறுகின்றார்.

ஹழ்ரத் அபூபக்கர் அவர்களின் இந்த அந்தஸ்துக்கு காரணம் தொழுகையொ நோன்போ அல்ல,மாறாக அவர்களின் உள்ளத்தில் எப்போதும் இந்த தீனின் வளர்ச்சிப்பற்றிய கவலை இருந்துகொண்டே இருக்குமென அவர்களின் மனைவி கூறுகின்றார்கள்.

ஸாஹாபிகளில் நான்கு தலைமுறை ஈமானுக்குச்சொந்தக்காரர். ஆம்!  ஹழ்ரத் அபூபக்கர் ரலி,அவர்களின் தந்தை அபூ குஹாஃபா ரலி,அபூபக்கர் ரலி அவர்களின் மகன் அப்துர்ரஹ்மான் ரலி.அபூபக்கர் ரலி அவர்களின் பேரன் முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான் ரலி.ஆகிய நான்குபேரும் ஸஹாபிகள்.
அவர்களின் சிறப்புக்களை பற்றி பேசும் ஹதீஸ்கள் சுமார் 181 உண்டு.
அந்த ஹதீஸ்களில் முழு உம்மத்தின் ஈமானை அபூபக்கர் ரலி அவர்களின் ஈமானுடன் நிறுத்தால் அவர்களின் ஈமானே ஜெயிக்கும்  என்று பைஹகியில் அறிவிப்பு உள்ளது.

அவர்களின் அமல்களுக்கான சான்று:

ஒரு தடவை அன்னை ஆயிஷா ரலி அவர்கள் படுத்திருந்தபோது அவர்களின் பார்வை வானத்தின் நட்சத்திரங்களின் பக்கம் திரும்பியது.அப்போது வானத்தின் நட்சத்திரங்கள் எண்ணிக்கை அளவுக்கு யாரேனும் அமல் செய்திருப்பார்களா?என்ற எண்ணம் தோன்றியது.
அந்த கேள்வியை நபி ஸல் அவர்களிடம் கேட்டுவிட்டார்கள்.அதற்கு நபி சல் அவர்கள் ஆம்!என் தோழர்களில் உமர் அவ்வளவு நன்மைக்கு சொந்தம் என்றார்கள்.
சிறிது நேரம் கழித்து அன்னயவர்கள் அப்படியானால் என் தந்தை அபூபக்கர் பற்றி உங்களின் அபிப்ராயம்?என வினவ,தவ்ர் குகையில் அபூபக்கர் என்னுடன் ஒரு இரவு தங்கிய நன்மை நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விடவும் அதிக மானது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.


- في مسلم :" من أصبح منكم اليوم صائما ؟" قال أبو بكر رضي الله عنه: أنا. قال "فمن تبع منكم اليوم جنازة." قال أبو بكر رضي الله عنه: انا. قال فمن أطعم منكم اليوم مسكينا ؟" قال أبو بكر رضي الله عنه. أنا. قال "فمن عاد منكم اليوم مريضا." قال أبو بكر رضي الله عنه: أنا. فقال رسول الله صلى الله عليه وسلم: "ما اجتمعن في أمريء، إلا دخل الجنة " . 


உங்களில் யாராவது இன்று நோன்பு நோற்றுள்ளீர்களா? என நபி ஸல் அவர்கள் ஒரு தடவை வினவினார்கள்.ஆம் நான் நோன்பு நோற்றுள்ளேன் என அபூபக்கர் ரலி அவர்கள் கூறினார்கள்.
பின்னர் கொஞ்சம் நேரம் கழித்து, உங்களில் யாரேனும் இன்று ஜனாஸாவில் கலந்து கொண்டீர்களா?என நபி ஸல் அவர்கள் மீண்டும் வினவியபோது அதற்கும் ஸித்தீக் ரகி அவர்கள் ஆம் நான் கலந்துகொண்டேன் என்றார்கள்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து உங்களில் யாரேனும் இன்று மிஸ்கீன்களுக்கு உணவளித்தீர்களா?என மூன்றாவதாக வினவினார்கள்.அதற்கும் நான் இன்று உணவளித்தேன் என்று அபூபக்கர் ரலி அவர்கள் பதில் கூறினார்கள்.பிறகு நான்காவது முறையாக நபி ஸல் அவர்கள் உங்களில் யாரேனும் இன்று நோயாளியை நலம் விசாரித்தீரா?என வினவ அதற்கும் நான் நோயாளியை சந்தித்தேன் என்று அபூபக்கர் அவர்களே கூறினார்கள்.இவ்வாறு நான்கு தடவையும் அவர்களெழுந்து பதில் கூறியபோது இந்த தன்மைகள் எவரிடம் உள்ளதோ அவர் சுவர்க்கவாதி என்று நபி ஸல் அவர்கள் சுபச்செய்தி கூறினார்கள்.
இந்த ஹதீஸின் மூலம் அந்த நான்கு அமல்கள் அவர்கள் மட்டுமே செய்தார்கள் மற்றவர்கள் செய்யவில்லை என்று புரிந்துகொள்ளக்கூடாது.  ஒட்டு மொத்த ஸஹாபாக்களின் சார்பாக அபூபக்கர் ரலி பதில் சொல்ல மற்ற ஸஹாபிகள் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கினார்கள்.
எப்படி அல்லாஹ் திருக்குர்ஆனில் ஒட்டுமொத்த ஸஹாபாக்களின் அங்கீகார மாக சித்தீக் ரலி அவர்களை ஸஹாபி தேர்வு செய்தானோ அதைப்போல அவர்களும் தேர்வு செய்தார்கள்.

ஹிஜ்ரத்தில் அவர்களின் பங்களிப்பு

வரலாற்றுச்சிறப்பு மிக்க அந்த பயணத்தில் அபூபக்கர் ரலி மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தார்களின் பங்களிப்பை இந்த மறக்க கூடாது.
அபூபக்கர் ரலி அவர்களின் ஒட்டகம்,அவர்களின் மகள் அஸ்மா,அவர்களின் மகன் அப்துர்ரஹ்மான் ,அவர்கள் அடிமை ஆமிர் அத்துனைபேர்களும் இதற்கு பயன்படுத்தப்பட்டார்கள்.
இந்த பயணத்தின் இடையில் நபி ஸல் அவர்கள் நடக்க சிரமப்பட்டபோது ஹழ்ரத் அபூபக்கர் அவர்கள் தங்களின் முதுகில் நபியை சுமந்து செல்கிறார் கள்.நபித்துவத்தின் கனத்தை உன்னால் சுமக்கமுடியாது என நபி ஸல் அவர்கள் ஹழ்ரத் அலி ரலி அவர்களைப்பார்த்து கூறியதை இங்கு ஞாபகப் படுத்துவது பொருத்தமாகும்.
நபியை பாதுகாக்க முன்னால்,பின்னால்,வலது,இடது என நாலாபக்கமும் ஓடுகின்ற காட்சியை கண்ட நபி ஸல் அவர்கள் அபூபக்கரே!எனக்காக உயிரையும் கொடுப்பீரோ?என கேட்க ஆம்!நாயகமே என் மரணம் ஒரு முஸ்லி மின் மரணம்.உங்களின் மரணம் இந்த உம்மத்தின் மரணம் என்றார்கள்.
இந்த உம்மத்தின் அமானிதமான அந்த பூமானை பாதுகாத்து கொண்டுவந்து அந்த மதீனா மக்களிடம் ஒப்படைத்தார்கள்.
இந்த இடத்தை ஒப்பிட்டு பேசும் சில கவிஞர்கள் இப்படி சொன்னார்கள்.
மிஃராஜ் பயணமும் ஹிஜ்ரத் பயணமு சில உடன்பாடுகளும் சில முரண்பாடு களும் கொண்டது.இரு பயணத்திலும் வாகனம் உண்டு,இரண்டிலும் பயண தோழர் உண்டு.மிஃராஜில் இமாமுல் மலாயிகா,ஹிஜ்ரத்தில் இமாமுஸ்ஸ  ஹாபா.மிஃராஜின் பயண தோழர் இடையில் நின்று விட்டார் (ஸித்ரதுல் முந்த ஹாவுடன்)ஹிஜ்ரத் தோழர் இறுதிவரை உடன் இருந்தார்.அதற்கு அல்லாஹ் வழங்கிய சன்மானம் மரணத்திலும் அவர்களை ஒன்றுசேர்த்தான்.இன்னொரு வித்யாசமும் உண்டு.மிஃராஜ் தோழர் நபியின் இல்லம் தேடி வந்தார்.ஆனால் ஹிஜ்ரத்தில் நபி ஸல் அவர்களின் பயண தோழரின் இல்லம் தேடிச்செல்கி றார்.
பிந்தங்கிய ஹலீமா ஸஃதியாவின் ஒட்டகம் அண்ணலை ஏற்றியபோது அனைத்தை விடவும் முன்னுக்கு வருகின்றது.அவ்வாறு நபியின் ஹிஜ்ரத் பயணத்தில் ஸித்தீக் ரலி கலந்தபோது அனைத்து ஸஹாபாக்களையும் முந்துகிறார்.

நபி ஸல் அவர்களின் வஃபாத்தில் ஸித்தீக் ரலி பங்கு

நபி ஸல் அவர்களின் வஃபாத்தில் இந்த உம்மத் எவ்வளவு பெரிய நெருக்கடி யை சந்திக்கிறது.இனி இஸ்லாத்திற்கு எதிர்காலம் இல்லை என்று சந்தோஷ ப்பட்ட முனாபிகீன்கள் ஒரு புறம்.நபி ஸல் அவர்களை யார் குளிப்பாட்டுவது? எங்கு அடக்கம் செய்வது?எப்படி தொழவைப்பது?என்பது ஒருபுறம் என்றால்
நபியின் மரணத்தை ஜீரணிக்க முடியாத ஸஹாபாக்களின் கூட்டம்மறுபுறம், அடுத்த கலீபா யார்?எனும் விடையை நோக்கி இன்னொரு கூட்டம்,ஜகாத்தை மறுக்கும் கூட்டம்.மதம் மாறிய கூட்டம் என பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் துவண்டுபோய் இருந்த இஸ்லாமிய உலகத்தை மீட்டெடுத்த பெருமை ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்களையேச்சாரும்.
நபி ஸல் அவர்களின் வஃபாத்துக்கு பின்னர் சுமார் இரணடரை ஆண்டுகாலம் மிக அற்புதமான ஆட்சியை நிறுவி இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத் துகின்றார்கள்.








1 comment: