Thursday 6 November 2014

ஆன்மாவை அழகுபடுத்துவோம்


மனித வாழ்க்கையில் ஏற்படுகிற பல்வேறு பிரச்சனைகள் இழப்புகள் இவற்றுக்கான அடிப்படை காரணம் என்னவெனில் மனிதன் தன்னுடைய நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதை அறியாமல் வாழ்கிறான். எனவே நாம் ஒவ்வொருவரும் நமது உண்மையான எதிரிகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக ஆன்மீக வாழ்க்கையில் நாம் நடக்கின்ற போது சரிகிவிடாமல் இறைவனின் தொடர்பில் நிலைக்க வேண்டுமானால் நிச்சயமாக நமது எதிரியை வென்றாக வேண்டும்.

நமது எதிரிகள் யார்?

திருமறையும் திரு நபி(ஸல்) அவர்களும் மனிதனுடைய மிகப்பெரிய எதிரிகளாக இரண்டு பேரை அடையாளம் காட்டுகின்றார்கள். 

1) ஒருவன் – ஷைத்தான்

2) இரண்டு - மனிதனை தீமையின் பக்கம் கொண்டு செல்லும் அவனுடைய நப்ஸ்

தாஹா நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

أعدى عدوك نفسك التي بين جنبيك

உன்னுடைய இரண்டு விலா பகுதிகளுக்கும் இடையில் இருக்கின்ற உன்னுடைய நப்ஸ் தான் உனது  மிகப்பெரியவிரோதியாகும்
                   
நூல் :  நூல் : இஹ்யாஉலூமுத்தீன் 

மிகப்பெரிய பலசாலி யார் ?

حدثنا علي بن عبد الحميد الغضائري قال : سمعت السري يقول : « أقوى القوة غلبتك نفسك ومن عجز عن أدب نفسه كان عن أدب غيره أعجز »

ஸிர்ரீ ஸிக்தீ (ரஹ்) அவர்கள் சொல்ல 'தான் கேட்டதாக அலி பின் அப்துல் ஹமீது (ரஹ்) அவர்கள் சொல்கின்றார்கள் உனது நப்ஸை நீ ஜெயிப்பது தான் மிகப் பெரிய வலிமையாகும் 'யார் தனது நப்ஸை நல்வழிபடுத்துவதை விட்டும் இயலாமையில் ஆகிவிட்டானோ அவன் பிறமனிதர்களை நல் வழிப்படுத்த  ஒருபோதும்சக்திபெறமாட்டான்' என்றார்கள் 

நூல் : (அஸ்சுஹ்து லில்பைஹகீ) 

சீர்க்கெட்ட உள்ளத்தை செம்மைப்படுத்த நாம் செய்யவேண்டியவை  எவை 

உள்ளத்தை பரிசுத்தப்படுத்தும் இந்த விஷயத்தில் மனிதன் கவனமும் தொடர் முயர்ச்சியும் மேற்கொண்டால் அவனுடைய வாழ்க்கையின் எல்லாப்  பகுதியும்சீராகவும்சிறப்பாகவும்அமையும் இதயத்தைபண்படுத்தும்இந்ததுறையில்சொல்லப்படவேண்டியசெய்திகள்கடல்போன்றுவிசாலமானதுஎன்றாலும்இங்கு 3 வழி முறைகள் சொல்லப்படுகிறது 

1) தினமும் நமது நப்ஸோடு நாம் பேசுவதற்கும் அன்று நாம் செய்த நன்மை தீமைகளை நமக்கு நாமே கணக்கு கேட்டு கொள்வதற்கும்  ஒருநேரத்தைஒதுக்குவது

அருள் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

أن النبي قال : ' من حاسب نفسه في الدنيا هون الله عليه الحساب في 
الآخرة

யார் இந்த உலகில் தனக்கு தானே கேள்வி கேட்டு தன்னை சரியாக்கி கொண்டானோ அவனுக்கு அல்லாஹ் மறுமையின் விசாரனைய இலகுவாக்கி  வைப்பான் நூல் தப்சீர் சம்ஹானி 

நப்ஸுடன் பேசிய  நல்லவர்கள் 
وقد حكي عن كهمس «1» أنه كان يصلي كل يوم وليلة ألف ركعة ، وكان يسلم بين كل ركعتين ، ثم يقول لنفسه : قومي يا مأوى كل شر ما رضيت عنك

கஹ்மஸ் (ரஹ்) அவர்கள் தினமும் ஆயிரம்  

ரக்அத்துக்கள் நபில்தொழுவார்கள்ஒவ்வொருஇரண்டுரக்அத்திற்குபிறகும்தனதுநப்ஸைபார்த்துசொல்வார்கள்தீமையின் ஒதுங்கும்  இடமாகஇருக்கின்ற நப்ஸேமீண்டும்நின்றுவணங்கு!  உன்னைநான்பொருந்திக்கொள்ளவில்லைஎன்றுசொல்வார்கள் .    

நூல் (தப்சீர்தஸ்துரீ)   

وكان يزيد الرقاشي يقول لنفسه ويحك يا يزيد من ذا الذي يصلي عنك بعد الموت من ذا الذي يصوم عنك بعد الموت من ذا الذي يرضي عنك ربك بعد الموت

அல்லாமா  யஸீதுர்ரக்காஷி (ரஹ்) அவர்கள்அதிகமாகஇவ்வாறுதன்நப்ஸைபார்த்துசொல்வார்கள்யஸீதேஉன்மரணத்திற்குபின்உனக்காகயார்தொழப்போகிறார்உனக்காகயார்நோன்புநோற்க்கப்போகிறார்உன்மரணத்திற்குப்பின்உனக்காகயார்இறைவனைதிருப்திபடுத்தபோகிறார். இவற்றையெல்லாம் வாழும் போதே உனக்கு நீ செய்து கொள்ள வேண்டும் 

وعن عمر رضى الله عنه انه كان يضرب قدميه بالدره إذا جنه الليل ويقول لنفسه ماذا عملت اليوم

உமர் (ரலி ) அவர்கள் இரவின் இருள் வந்து விட்டால் தனது சாட்டையால் தன் பாதத்தில் அடித்து கொள்வார்கள். அப்போது தனது நப்ஸை பார்த்து கேட்பார்கள் இன்று நீ என்ன காரியம் செய்தாய் என்று கேட்பார்கள் 

وروى عن عائشة رضى الله تعالى عنها أن أبا بكر رضوان الله عليه قال لها عند الموت ما أحد من الناس أحب إلي من عمر ثم قال لها كيف قلت فأعادت عليه ما قال فقال لا أحد أعز على من عمر

அபூபக்கர் (ரலி) அவர்கள் தனது மரண நேரத்தில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொன்னார்கள் மக்களில் எனக்கு உமரை விடவும் பிரியமானவரும் கண்ணியமானவரும் இல்லை அதற்கு காரணம் இது தான். அவர்கள் ஒவ்வொரு வார்த்தையும் பேசிய பிறகு தனது நப்ஸை பார்த்து கேட்ப்பார்கள் நீ என்ன பேசினாய் எப்படி பேசினாய் என்று இவ்வாறு கேட்டு வார்த்தையை சரியாக்கி கொள்வார்கள் இது தான் காரணம் என்றார்கள்       
 நூல் : இஹ்யா உலூமுத்தீன் 

நப்ஸை சீராக்க அவசியப்படும் இரண்டாவது  விஷயம்நப்ஸைபழிவாங்குவது

நமது மனது ஒரு தீமையை செய்து விட்டாலோ அல்லது ஒரு நன்மையை விட்டு விட்டாலோ அதை பழி வாங்குவதற்காக பல நன்மையான காரியங்களில் அதை ஈடுபடுத்த வேண்டும் 

ويحكى عن تميم الداري أنه نام ليلة لم يقم فيها يتهجد فقام سنة لم ينم فيها عقوبة للذي صنع

தமீமுத் தாரி (ரலி) அவர்கள் ஒரு நாள் தஹஜ்ஜத் தொழாமல் உறங்கி விட்டார்கள் அதற்காக தனது நப்ஸை தண்டிக்கும் நோக்கத்தில் ஒரு வருட முழுவதும் இரவில் நின்று வணங்கினார்கள்            

  (நூல் : இஹ்யாஉலூமுத்தீன்)

فقد عاقب عمر بن الخطاب نفسه حين فاتته صلاة العصر في جماعة بأن تصدق بأرض كانت له قيمتها مائتا ألف درهم
உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு முறை அஸர் ஜமாஅத் தப்பி போனது எனவே அதற்காக தனது நப்ஸை தண்டித்தார்கள் தண்டனையாக தன்னுடைய ஒரு இடத்தை விற்றார்கள் அதனுடைய மதிப்பு இரண்டு லட்சம் திர்ஹமாகும்       (நூல் : இஹ்யாஉலூமுத்தீன்)

நப்சை சீராக்க தேவையான 3 வது விஷயம் 

நபித் தோழர்களின் வரலாறை படிப்பதின் மூலம் இஸ்லாத்திற்காக போர்களத்திலும் மற்ற நிலைகளிலும் அவர்கள் புரிந்த ஈடு இணையற்ற தியாகத்தை அறிந்து நம்முடைய நப்சிடம் எடுத்து சொல்லி இவ்வாறு கேட்க வேண்டும். மறுமையில் அந்த சஹாபாக்கள் இறைவா! நான் உனக்கு உயிரை கொடுத்தேன் போரில் உறுப்புகளை இழந்தேன் என் கணவரை நான் போரில் இழந்து விதவை ஆனேன் உனக்காக என் பிள்ளைகள் அநாதை ஆனார்கள் என்று சொல்லி பெருமைபடுகின்ற போது உன்னிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லையே. தண்டனையையும்.  இழிவையும்பெற்றுத்தரும்பாவங்கள் தானே இருக்கின்றது என்று நப்ஸிடம் சொல்லவேண்டும். 

கண்ணை தியாகம் செய்த கண்ணிய மிக்க சஹாபி
وأخرج ابن عساكر عن سعيد بن عبيد الثقفي رضي الله عنه قال: رأيت أبا سفيان بن حرب رضي الله عنه يوم الطائف قاعداً في حائط أبي يعلى يأكل، فرميته فأصيبت عينه. فأتى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، هذه عيني أصيبت في سبيل الله. فقال النبي صلى الله عليه وسلم "إن شئت دعوتُ الله فرُدّت عليك، وإن شئت فالجنة

ஸஈத்பின் உபைத் (ரலி) சொல்கின்றார்கள் (நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே இவர் பிறகு இஸ்லாத்தை ஏற்றார்) தாயிபின் நாளில் நடந்த போரில் நான் அபூ சுப்யானைப் பார்த்தேன் அவர் அபூ யஹ்லா என்பவரின் தோட்டத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார் நான் அம்பு எறிந்தேன். அது அவர் கண்ணில் பட்டு கண் பரிக்கப்பட்டது. அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நாயகமே இதோ எனது கண் அல்லாஹ்வின் பாதையில் தாக்கப்பட்டது என்று சொன்னார். அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீங்கள் கண்ணை நாடினால் நான் துஆ செய்கிறேன் கண் மீண்டும் முன் போன்று உங்களுக்கு கிடைத்து விடும். நீங்கள் நாடினால் இதே நிலையில் பொறுமையை மேற்கொள்ளுங்கள் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்  என்றார்கள்அவர்சொர்க்கம்போதும்என்றுகூறி விட்டார். 

நூல் : ஹயாத்து ஸஹாபா  

மவ்த்தை அழைத்து வந்து மூத்தா போர் 

لما اصيب القوم قال رسول الله صلى الله عليه وسلم - فيما بلغني - : " أخذ زيد بن حارثة الراية فقاتل بها حتى قتل شهيداً، ثم أخذها جعفر بن أبي طالب فقاتل حتى قتل شهيداً " . ثم صمت رسول الله صلى الله عليه وسلم حتى تغيّرت وجوه الأنصار، وظنوا أنه قد كان في عبد الله بن رواحة ما يكرهون، فقال: ثم أخذه عبد الله بن رواحة فقاتل حتى قتل شهيداً، ثم لقد رفعوا لي في الجنة " فيما يرى النائم " على سرر من ذهب فرأيت في سرير عبد الله بن رواحة ازوراراً عن سريري صاحبيه، فقلت: عم هذا؟ فقيل لي: مضياً، وتردد عبد الله بعض التردد، ثم مضى فقتل

மூத்தா போரில் சஹாபாக்கள் தாக்கப்பட்ட போது மதீனாவில் இருந்த தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இப்போது ஸைது பின் ஹாரிஸா இஸ்லாமிய கொடியை எடுத்தார் சண்டையிட்டார் அவர் கொல்லப்பட்டு விட்டார். பிறகு ஜஃபர் பின் அபீ தாலிப் கொடியை எடுத்தார் போரிட்டார். அவரும் கொல்லப்பட்டு விட்டார். இத்துடன் நபி (ஸல்) அவர்கள் மெளனமாகி விட்டார்கள் இதனால் அன்சாரிகளின் முகம் சோகமாக மாறியது 3-ம் தளபதி அப்துல்லாஹ் பின் ரவாஹா விஷயத்தில் வெறுக்கும்  படியானஏதேனும் ஒன்றை நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிடுவார்களோ என்று எண்ணினார்கள். அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு இப்னு ரவாஹா கொடியை எடுத்து யுத்தம் செய்கிறார் அவரும் கொல்லப்பட்டார் இப்போது அந்த 3 பேரின் புனித ஆன்மாவும் தங்க கட்டிலில் வைத்து சுவனத்தின் பக்கம் எடுத்து செல்லப்படுகிறது அதில் இப்னு ரவாஹா அவர்களின் கட்டிலின் கால் கொஞ்சம் வலைந்திருப்பதை கண்டேன் காரணம் என்னவெனில் ஸைது, ஜஃபர் இருவரும் நான் சொன்னவுடன் தாமதிக்காமல் போருக்கு போனார்கள் ஆனால் இப்னு ரவாஹா அவர்கள் கொஞ்சம் தாமதித்து சென்றார்கள்          

 நூல் : உஸ்துல்கஃபா 


நபி (ஸல்) அவர்கள்  

இவர்கள்மூன்றுபேரையும்போருக்குதளபதிகளாகஅனுப்பும்போதுஇந்த3 தளபதிகளும் கொல்லப்பட்டால் நான்காவது உங்களில் ஒருவரை தளபதியாக நியமித்து கொள்ளுங்கள் என்று சொன்ன போதே அந்த மூன்று பேருக்கு தெரியும் நமக்கு இந்த போர் தான் கடைசி நாம் இதில் நிச்சயம் கொல்லப்படுவோம் இவ்வாறு உயிர் போகும் என்று தெரிந்தே போனது பெரிய தியாகமாகும்.  

பரிசுத்தம் பெற்ற உள்ளத்தின் அடையாளம் 

فقال رجل : وما زكى (2) المرء نفسه يا رسول الله ؟ قال : « يعلم أن
 الله عز وجل معه حيث كان »


ஒரு நபித் தோழர் நபி (ஸல்) அவர்களிடம் நாயகமே மனிதன் உள்ளத்தை பரிசுத்தப் படுத்துவது என்றால் என்ன? என்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நாம் எங்கு இருந்தாலும் நம்முடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று விளங்குவதாகும் என்றார்கள்.      

 நூல் : முஹ்ஜமுஸ்ஸஹாபா

உள்ளத்தின் நோயை போக்கும் மருந்து

وعن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء " . قيل يا رسول الله وما جلاؤها ؟ قال : " كثرة ذكر الموت وتلاوة القرآن "


பெருமானார் சொன்னார்கள் தண்ணீர் பட்டு இரும்பு துருபிடிப்பது போல் உள்ளமும், துரு பிடித்து அழுக்கு படிந்து காணப்படுகிறது.  துருவைபோக்கும்வழிஅதிகமாகமரணத்தைநினைப்பதும்குர்ஆன்ஓதுவதுமாகும்என்றார்கள்      
நூல் : மிஷ்காத 

No comments:

Post a Comment