Thursday 13 November 2014

மனமே கலங்காதே

அல்லாஹுத்தஆலா மனிதனை பளஹீனமாக படைத்துள்ளான்.அவசரம், நோய்,பசி,தாகம்,தூக்கம் ஆசை என மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய பளஹீனங்களின்  வரிசையில் துக்கமும் ஒன்று.கவலை இல்லாத மனிதன் யார்?

இவ்வுலக வாழ்வில் கவலை,துக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எவருமில்லை.கவலைக்கான காரணங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடலாமே தவிர கவலை இல்லா மனிதன் இங்கே கிடையாது
சிலருக்கு பணம் கவலையை தரலாம்.வேறு சிலருக்கு பணமின்மை கவலையை தரலாம்.சிலருக்கு கூட்டு வாழ்க்கை சிரமத்தை தரலாம்.அதே சமயம் வேறு சிலருக்கு தனி வாழ்க்கை வெறுப்பை தரலாம்.நோய்,ரிஸ்க், மனைவி,மக்கள்,தொழில் என மனிதனை கவலைகொள்ளச்செய்யும் விஷயங்கள் இங்கே ஆயிரம் உண்டு.

இந்த துன்யாவில் மனிதன் எட்டு அத்தியாயங்களை கடந்தாக வேண்டும்.  இன்பம்,துன்பம்,கூடுதல்,பிரிதல்,இலேசு,கஷ்டம்.ஆரோக்கியம்,நோய் ஆகிய வைகள் என ஒரு அரபிக்கவிஞன் கூறினான்.

துக்கமே இல்லாத உலகம் அது சுவனலோகம் மட்டுமே.இதை பின் வரும்  இறைவசனம் அற்புதமாக சுட்டிக்காட்டுகின்றது

وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ) [فاطر:34]

எங்களை விட்டும் துக்கத்தை போக்கிவைத்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்,நிச்சயமாக எங்களின் ரப்பு மிக்க மன்னிப்பவன் நன்றியுள்ள வன் என்று சுவனத்தில் நுழைந்தவுடன் சுவனவாசிகள் கூறுவார்கள் என அல்லாஹ் கூறுகின்றான்.

இந்த ஆயத்தை அடிப்படையாக கொண்டு அல்லாமா இப்ராஹீம் அத்தைமி ரஹ் அவர்கள் கூறும்போது- அல்லாஹ் எவருக்கு துக்கத்தை வழங்கவில் லையோ அவர் நரகத்தை அஞ்சட்டும்,ஏனெனில் கவலை சுவனவாசிகளின் அடையாளமாகும் என்று கூறுகிறார்கள்.

மனித சமுதாயத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட அனுப்பப்பட்ட நபிமார்கள் தங்களின் வாழ்வில் எத்துனையோ சோதனைகளையும் கஷ்டங் களையும் சந்தித்துள்ளனர்.நபிமார்களும் ஸாலிஹீன்களும் கவலைப்பட்ட தருனங்கள் உண்டு.கவலை நல்லவர்களின் கேடயம் என்று சொல்வது பொருத்தமாகும்.

நபி யஃகூப் அலை அவர்கள் தங்களின் பிரியமான மகன் யூஸுப் அலை அவர்கள் பிரிந்த போது துக்கத்தால் துவண்டுபோனார்கள்.

كما قال تعالى عن يعقوب -عليه السلام- في فَقدِ ابنه يوسف -عليه السلام-: (وَقَالَ يَا أَسَفَى عَلَى يُوسُفَ وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ) [يوسف:84]

யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!" என்று (கவலைப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.


ما فعل النبي -صلى الله عليه وسلم- حينما مات ولده إبراهيم فقال: "إن العينَ لتدمع، وإنّ القلب ليحزن، ولا نقول إلا ما يرضِي الربَّ، وإنّا على فراقك -يا إبراهيم- لمحزونون". رواه البخاري ومسلم.

நபி ஸல் அவர்களின் மகனார் இப்ராஹீம் ரலி அவர்கள் இறந்த்போது-
கண் கண்ணீர் வடிக்கிறது.கல்பு கவலை கொள்கிறது.இப்ராஹீமே! உன் பிரிவால் நாம் துக்கத்தில் வாடுகின்றோம்.ஆனாலும் அல்லாஹ் பொருந்தாத எந்த வார்த்தையையும் நாம் சொல்லமாட்டோம் என்று கூறினார்கள்




كما في قصّة أبي الدرداء -رضي الله عنه- حينما بكى وحزن وقد رأى دولةَ الأكاسرة تهوي تحتَ 

أقدام المسلمين، وقد قال له رجل: يا أبا الدرداء: تبكي في يومٍ أعزّ الله الإسلامَ وأهله؟! فقال أبو

 الدرداء -رضي الله تعالى عنه-: "ويحك يا هذا، ما أهونَ الخلق على الله إذا أضاعوا أمرَه، بينما هي أمة قاهرة ظاهرةٌ ترَكوا أمرَ الله فصاروا إلى ما ترى".

பாரசீகம் வெற்றிக்கொள்ளப்பட்டு அதன் கருவூலங்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டுவரப்பட்டபோது இஸ்லாமிய உலகமே கொண்டாடியது, ஆனால் அந்த நேரத்தில் அபுத்தர்தா ரலி அவர்கள் அழுது கவலைப்பட்டார்கள். அப்போது அவர்களிடம் ஒருவர்-
அல்லாஹ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கண்ணியப்படுத்திய இன்றைய தினத்தில் ஏன் கவலைகொள்கிறீர்?என கேட்டார்,
அதற்கு ஹழ்ரத் அபுத்தர்தா ரலி அவர்கள் -எத்துனை பெரும் பலமிக்க சமுதாயமாக இருந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்தால் அவர்களை கேவலப்படுத்து  வான் என்பதற்கு பரசீகர்களின் வரலாறு ஒரு பாடமாகும் என்று கூறினார்கள்.

துன்யாவுக்காக ஏன் கவலை?

مر إبراهيم بن أدهم على رجل مهموم فقال له: "إني سائلك عن ثلاثة فأجبني، قال: أيجري في هذا الكون شيء لا يريده الله؟ أو ينقص من رزقك شيء قدره الله؟ أو ينقص من أجلك لحظة كتبها الله؟ فقال الرجل: لا، قال إبراهيم: فعلام الهم إذن"؟

ஹழ்ரத் இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் கவலயுடன் அமர்ந்திருந்த ஒரு மனிதரை கடந்து சென்றார்கள்.அப்போது அந்தரிடம், உன்னிடம் மூன்று கேல்விகளை கேட்கின்றேன்.அதற்கு நீ பதில் சொல்.முதலாவது அல்லாஹ் நாடாமல் இவ்வுலகில் ஏதாவது நடக்குமா? இரண்டாவது அவன் உனக்கு நிர்ணயம் செய்த ரிஸ்கிலிருந்து குறையுமா?மூன்றாவது அல்லாஹ் உனக்கு நிர்ணயம் செய்த ஆயுளிலிருந்து ஒரு நொடி குறையுமா? என கேட்டபோது அந்த மனிதர் இல்லை என்று பதில் கூறினார். அப்படியானால் நீ கவலப்பட்டு என்ன ஆகப்போகிறது?என்று அறிவுரை வழங்கினார்கள்


ذكره علي بن أبي طالب -رضي الله عنه- حينما سئل: "من أشد جند الله؟ فقال: الجبال، والجبال يقطعها الحديد؛ فالحديد أقوى، والنار تذيب الحديد؛ فالنار أقوى، والماء يطفئ النار؛ فالماء أقوى، والسحاب يحمل الماء؛ فالسحاب أقوى؛ والريح تعبث بالسحاب؛ فالريح أقوى، والإنسان يتكفأ الريح بيده وثوبه؛ فالإنسان أقوى، والنوم يغلب الإنسان؛ فالنوم أقوى، والهم يغلب النوم؛ فأقوى جند الله هو الهم يسلطه الله على من يشاء من عباده"

அல்லாஹ்வின் படைகளில் பலமிக்கது எது என ஹழ்ரத் அலி அவர்களிடம் கேட்கப்பட்டபோது-
மலைகள் பலமிக்கவை.ஆனால் அந்த மலைகளை இரும்பு தகர்த்து விடும்,எனவே இரும்பு பலமிக்கவை,ஆனால் அந்த இரும்பை நெருப்பு உருக்கிவிடும் எனவே நெருப்பு பலமிக்கவை,ஆனால் அந்த நெருப்பை தண்ணீர் அணைத்துவிடும் எனவே தண்ணீர் பலமிக்கவை,ஆனால் அந்த தண்ணீரை மேகம் சுமக்கும்.எனவே மேகமே பலமிக்கவை ஆனால் அந்த மேகத்தை காற்று ஓட்டிச்செல்லும் எனவே காற்றே பலமிக்கவை ஆனால் அந்த காற்றை மனிதன் வசப்படுத்துவான்.எனவே மனிதனே பலமிக்கவன்.ஆனால் அந்த மனிதனை தூக்கம் மிகைத்துவிடும்.எனவே தூக்கமே பலமிக்கது.ஆனால் அந்த தூக்கத்தை மிகைக்கும் ஒரு பொருள் உண்டு அதுதான் துக்கம்.துக்கம் இருந்தால் தூக்கமும் பறந்துபோகும்.எனவே துக்கம் அதிபலமிக்கவை என்று கூறினார்கள்.

கவலை நீங்குவதற்கான வழிமுறைகள்

وقال -صلى الله عليه وسلم-: "مَنْ قال إذا أصبحَ وإذا أمْسى: حَسبِي الله لا إلَه إلا هو عليه توكلتُ وهو ربُّ العرشِ العظيم سبع مرات، كفاه الله ما أهمه" رواه أبو داود.

எவர் காலையும் மாலையும் 
 حَسبِي الله لا إلَه إلا هو عليه توكلتُ وهو ربُّ العرشِ العظيم  என்று 7 தடவை ஓதுவாரோ அவருடைய கவலைக்கு அல்லாஹ் போதுமானவன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

قال -صلى الله عليه وسلم-: "مَنْ لزِم الاستغفارَ جعلَ الله له من كلِّ ضيقٍ مخرجَا، ومنْ كلِّ همٍّ فرَجا، ورزقَه من حيث لا يحتسب" رواه أبو داود والنسائي.
எவர் பாவமன்னிப்பை பற்றிப்பிடிப்பாரோ அல்லாஹ் அவருக்கு நெருக்கடியான வாழ்வை விட்டும்விசாலத்தை வழங்குவான்.கவலையை விட்டும் மகிழ்ச்சியை வழங்குவான்.கணக்கின்றி ர்ஸ்கை வழங்குவான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்


دخل رسول الله -صلى الله عليه وسلم- المسجد ذات يوم، فإذا هو برجل من الأنصار يقال له أبو أمامة، فقال: "يا أبا أمامة مالي أراك جالساً في المسجد في غير وقت الصلاة؟ قال: هموم لزمتني وديون يا رسول الله، قال: أفلا أعلِّمك كلاماً إذا قلته أذهب الله همك وقضى عنك دينك؟ قال: بلى يارسول الله، قال: قل إذا أصبحت وإذا أمسيت: اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلَبة الدين وقهر الرجال، قال أبو أمامة: ففعلت ذلك، فأذهب الله همي، وقضى عني ديني" رواه أبو داود.

ஒருநாள் நபி ஸல் அவர்கள் மஸ்ஜித் நபவிக்குள் நுழைந்தபோது ஹழ்ரத் அபூ உமாமா ரலி அவர்களை கண்டார்கள்.
அபூ உமாமா! தொழுகைநேரம் இல்லாத இப்போது பள்ளியில் அமர்ந்திருக்க காரணம் என்ன? என வினவினார்கள்.
அதற்கு அபூ உமாமா ரலி அவர்கள்.அல்லாஹ்வின் தூதர் அவர்களே!கடனும்  கவலை யும் என்னை இங்கே வரவைத்தது என்று பதில் கூறினார்கள்.உன் கவலை போகவும் கடன் அடையவும் ஒரு கலிமாவை நான் கற்றுத்தரவா?என நபி ஸல் அவர்கள் கேட்டபோது அவசியம் கூறுங்கள் என்று அந்த நபித்தோழர் கூறினார்.
அதற்கு நபி ஸல் அவர்கள், நீ காலையிலும் மாலையிலும்

اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلَبة الدين وقهر الرجال

 என்று ஓதிவருவீராக என்று கூறினார்கள்.நானும் அவ்வாறு ஓதிவந்தேன்.அதன் பொருட்டால் அல்லாஹ் என் கடனையும் அடைத்தான்.கவலையையும் போக்கினான்.  என அபூஉமாமா ரலி அவர்கள் கூறுகின்றார்கள்.



قَالَ أُبَيِّ بْنُ كَعْبٍ كما في الحديث الحسن: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ: إِنِّي أُكْثِرُ الصَّلاةَ عَلَيْكَ، فَكَمْ أَجْعَلُ لَكَ مِنْ صَلاتِي؟! فَقَالَ: "مَا شِئْتَ"، قَالَ: قُلْتُ: الرُّبُعَ؟! قَالَ: "مَا شِئْتَ، فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ"، قُلْتُ: النِّصْفَ؟! قَالَ: "مَا شِئْتَ، فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ"، قَالَ: قُلْتُ: فَالثُّلُثَيْنِ؟! قَالَ: "مَا شِئْتَ، فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ"، قُلْتُ: أَجْعَلُ لَكَ صَلاتِي كُلَّهَا؟! قَالَ: "إِذاً تُكْفَى هَمَّكَ وَيُغْفَرُ لَكَ ذَنْبُكَ".

ஹழ்ரத் உபை இப்னு கஃப் ரலி அவர்கள் கூறுகிறார்கள்

அல்லாஹ்வின் தூதர் அவர்களே!நான் உங்கள் மீது ஸலவாத் அதிகமாக ஓதிவருகின்றேன்,ஒருநாளைக்கு எவ்வளவு ஸலவாத் ஓதட்டும் என நான் நபி ஸல் அவர்களிடம் வினவியபோது நீ விரும்பிய அளவு என்று பதில் கூறினார்கள்.
ஒருநாளில் நான்கில் ஒரு பகுதியை ஸலவாத்திற்கு ஒதுக்கவா?என கேட்டபோது நீ விரும்பிய அளவு நீ அதிகமாக்கினால் அது உனக்கு நல்லது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
ஒருநாளில் பாதியை  ஸலவாத்திற்கு ஒதுக்கவா?என கேட்டபோது நீ விரும்பிய அளவு நீ அதிகமாக்கினால் அது உனக்கு நல்லது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
ஒருநாளில் மூன்றில் இரண்டு பகுதியை ஸலவாத்திற்கு ஒதுக்கவா?என கேட்டபோது நீ விரும்பிய அளவு நீ அதிகமாக்கினால் அது உனக்கு நல்லது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அப்படியானால் என்நாள் முழுவதும் உங்கள் மீது ஸலவாத் ஓத துக்குகின்றேன் என்று நான் கூறியபோது அப்படியானால் உன் கவலையை அது போக்கும் உன் பாவமும் மன்னிக்கப்படும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்


جاء عن أنس -رضي الله عنه- أن رسولنا -صلى الله عليه وسلم- كان إذا حَزَبه أمر -يعني أقلقه وأفزعه أمر- قال: "يا حيُّ يا قيُّومُ، برحمتِكَ أستغيثُ".

அல்லாஹ்நபி ஸல் அவர்களுக்கு ஏதேனும் ஒரு விஷயம் கவலையை தருமானால்
يا حيُّ يا قيُّومُ، برحمتِكَ أستغيثُ".  என்று ஓதுவார்கள்.


ومن ذلك ما ورد عن أسماء بنت عميس -رضي الله عنها- قالت: قال لي رسول الله -صلى الله عليه وسلم-: "ألا أعلمكِ كلمات تقولينهن عند الكرب -أو في الكرب-: اللَّهُ اللَّهُ رَبِّى لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا" رواه أبو داود وصححه الألباني.
கஷ்டமான நேரத்தில்  اللَّهُ اللَّهُ رَبِّى لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا   என்று ஓதச்சொல்லி நபி ஸல் அவர்கள் எனக்கு கற்றுத்தந்தார்கள் என அஸ்மா ரலி அவர்கள் கூறுகின்றார்கள்.

2 comments: