அல்லாஹுத்தஆலா தன் அடியார்களில் மிகச்சிறந்தவர்களைத்தான் தூதர்களாக அனுப்பி வைக்கிறான்.
அந்த தூதர்களின் அப்பழுக்கற்ற வாழ்கைக்கு அவனே சாட்சியாளனாக இருக்கிறான்.
இறைதூதர்களின் மரியாதை,கண்ணியம் குறித்து திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்கள் பேசுகிறது
.
اللَّهُ يَصْطَفِي مِنَ الْمَلَائِكَةِ رُسُلًا وَمِنَ النَّاسِ
அல்லாஹ் –வானவர்களிலிருந்தும்,மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுக்கிறான்.
அவன் அனுப்பிய தூதர்கள் ஒவ்வொருவரையும் ஈமான் கொள்வதும்,கண்ணி யப்படுத்துவதும்.அன்பு வைப்பதும் முஸ்லிமான அனைவரின் மீதும் கடமையாகும்
.
உலகில் மிகச்சிறந்த வாழ்கையை மனிதர்களுக்கு கற்றுத்தருவதற்க்காக அனுப்பிவைக்கப்பட்ட இறைதூதர்களின் இறுதிதூதராக,ம்ணிமகுடமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள்.
குறைந்த காலத்தில் உலகில் அவர்கள் ஏற்ப்படுத்திய புரட்சி அபாரமானது.
அது மண்ணையோ,பொன்னையோ,பெண்ணையோ குறிக்கோளாக கொண்டதில்லை.அது ஒரு நற்குணப்புரட்சி.
إِنَّمَا بُعِثْتُ لأُتَمِّمَ صَالِحَ الأَخْلاَقِ
முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தங்களது உயிரினும் மேலாக மதிப்பவர்கள். அவரது புகழ் மீது தூசு படிவதை கூட சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
இதை எல்லாம் தெரிந்து கொண்டே வேண்டுமென்றே முஸ்லிம்களை ஆத்திரப்படுத்துகிறநோக்கில், அமெரிக்கா நாட்டின்கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்ற யூதச் சாத்தான் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம்தயாரித்து அதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்தஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளான்.
இதுபோன்ற மட்டமான செயல்பாடுகளால் பெருமானாருக்கு எந்த இழிவும் ஏற்படப்போவதில்லை. அவர்களின் புகழுக்கு குர்ஆன் ஒன்றே போதுமானது.
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى
وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى
وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيم
ஆனாலும் முஸ்லீம்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையில் உள்ள உறவு ஈமானிய உறவாகும்.
அந்த உத்தம நபியின் புகழுக்கு களங்கம் வருமானால் முஸ்லீம்கள் ஒருபோதும் அதை பொருத்துக்கொள்ளமாட்டார்கள்.
சம்பவம் 1:
ولما كان في معركة احد وقتل اكثر اصحابه بين يديه صلى الله عليه وسلم,وجلس صلى الله
عليه وسلم بعد المعركه ينظر في شأنهم وهو صلى الله عليه وسلم به جروح ودماء ,قال عليه الصلاة والسلام [ من ينظر لي ماذا فعل سعد ابن الربيع ] ,رجل تاجر من سادة الأنصار له زوجتان وابناء ,ومال وزع ,قال: [من ينظر لي ماذا فعل سعد ابن الربيع ,ما فعل احي هو ام في الاموات ] , فمضى بعض الصحابة ينظر في القتلى فوجد سعد ابن الربيع قد وطئته الخيل وقد اصابته الجراح ,وسلاحه بجانبه وهو يلفظ انفاسه , فحركه قال: [ ياسعد ان رسول الله صلى الله عليه وسلم امرني أن انظر هل انت في الاحياء أم في الاموات ,فقال سعد : ابلغ رسول الله صلى الله عليه وسلم عني السلام وقل له : ان سعد في الاموات وقل له : جزاك الله خير ما جزاء نبيا عن امته ,وقل لقومي من الانصار لا عذر لكم عند الله إن خلص إلى رسول الله صلى الله عليه وسلم وفيكم عين تطرف ],ثم فاضت روحه إلى باري
ويعود الصحابي ويبلغ النبي صلى الله عليه وسلم الرسالة ويقول: يا رسول الله، مات سعد بن ربيع ويبلغك السلام، ويبلغ الأنصار السلام، ويقول لهم لا عذر لكم إن خلص إلى رسول الله وفيكم عين تطرف، فقال النبي صلى الله عليه وسلم: رحمك الله يا سعد نصحت لله حيا وميتا
உஹது போர்களம்.ஸஹாபாக்களில் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.போருக்குப்பின் நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களிடம்,சஃது இப்னு ரபீஃ என்ன ஆனார்?அவரைப்பற்றி செய்தி கொண்டுவாருங்கள் எனஉத்தரவிட, ஒரு ஸஹாபி அவரை தேடிச்சென்றார்கள்.
(யார் அந்த சஃது?அவர் ஒரு வியாபாரி.மதீனாவின் தலைவர்களில் ஒருவர்.அவருக்கு இரு மனைவிமார்களும்,பிள்ளைகளும்,விவசாய நிலங்களும் உண்டு)
அப்பொழுது தேடிச்சென்ற அந்த சஹாபி, குதிரையால் மிதிபட்ட நிலையில் கொலைசெய்யப்பட்டவர்களில் சஃதை(ரலி) காண்கிறார்.உடலில் அதிக காயங்கள்.அவருக்கருகில் அவரின் ஆயுதங்கள்.
மூச்சு விட போராடிக்கொண்டிருந்த சஃது (ரலி) அவர்களை தேடிச்சென்ற அந்தசஹாபி, அவர் உடலை அசைத்து,
சஃதே! நபி ஸல் அவர்கள், நீங்கள் உயிருடன் இருக்கிறீரா? அல்லது மரணித்து விட்டீரா? என பார்த்துவிட்டு வரச்சொன்னார்கள்.என்று கூறினார். அப்போது சஃது (ரலி) அவர்கள்,
அல்லாஹ்வின் தூதருக்கு என் சலாமை எத்திவையுங்கள். சஃது மரணித்தவர்களில் சேர்ந்துவிட்டார் என்று சொல்லுங்கள்.அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு நபிக்கும் அவர்களின் உம்மத்துக்காக கொடுக்கும் கூலிகளில் மிகச்சிறந்த கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான் என்று என் கண்மணியிடம் சொல்லுங்கள்.குறிப்பாக என் சமுதாயமான அன்ஸாரிகளிடம் சொல்லிவிடுங்கள். உங்கள் கண் முன் அல்லாஹ்வின் தூதருக்கு ஒரு இழிவும் ஆபத்தும் வருமானால் எந்த காரணத்தை சொல்லியும் அல்லாஹ்விடமிருந்து நீங்கள் தப்பிக்கவே முடியாது
இந்த செய்தியை பெருமானாரிடம் எத்திவைத்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஃதே!அல்லாஹ் உமக்கு ரஹ்மத் செய்வானாக.நீர் வாழும்போதும் மரணித்தபோதும் நல்லதையே சொன்னீர்.என்று கூறினார்கள்.
உலகில் எங்கும் தோழர்கள் தம் தலைவர் மீது இந்தளவு அன்பு கொள்வதை பார்த்திருக்க முடியாது.
நாயகத்தை அவமரியாதை செய்பவர்களுக்கு அல்லாஹ்வின் கடுமையான எச்சரிக்கை.
وَالَّذِينَ يُؤْذُونَ رَسُولَ اللَّهِ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُهِينًا
சம்பவம்2
وعن انس رضي الله عنه أن رجلا كان نصرانيا فأسلم وكان يكتب الوحي لرسول الله صلى الله عليه وسلم ,فذهب إلى جمع من اليهود فارتد عن الدين وجعل يتنقص النبي عليه الصلاة والسلام ,ويتنقص كتابته الوحي ,ويقول مايعرف محمد إلا ماكتبت له ,فدعاء النبي صلى اله عليه وسلم عليه قال [ اللهم اجعله آية فلم يلبث أن مات فدفنوه فأصبحوا وقد لفضته الارض ,قالوا هذا من فعل محمد واصحابه ,ثم دفنوه واعمقوا فأصبحوا قالوا : هذا من فعل محمد واصحابه فأعمقوا اكثر ما استطاعوا في الأرض ودفنوه فلما اصبحوا وإذا قد لفظته الأرض فوقها قالوا والله هذا ماهو بفعل بشر ,فتركوه تمر به الكلاب وتفتح رجليها على وجهه وتبول على وجهه , نعم هذا جزاء من يؤذي الله ورسوله صل الله عليه وسلم
ஹழ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கிருஸ்துவராக இருந்த ஒருவர் இஸ்லாத்தை தழுவி,வஹியை எழுதும் காதிபுல் வஹ்யாகவும் இருந்தார்.
அவர் ஒரு யூத கூட்டத்திடம் சென்று மதம் மாறி,பெருமானாரை குறித்து இழிவாக பேசினார்.
முஹம்மதுக்கு நான் எழுதியதை தவிர வேறு எதுவும் தெரியாது என்றார்.
அதை கேள்விப்பட்ட பெருமானார், யா அல்லாஹ்!என்னை கேலி செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு இவனை அடையாளமாக ஆக்குவாயாக!என பத்துஆச்செய்தார்கள்.
அவன் மரணித்தான்.மக்கள் அவன் உடலை புதைத்தபோது பூமி துப்பிவிட்டது. இது முஹம்மத் மற்றும் அவரின் தோழர்களின் செயல் என்று மக்கள் சொன்னார்கள்.
மீண்டும் ஆழமாக குழி தோண்டி புதைத்தார்கள்.மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவன் உடல் பூமிக்கு மேல் கிடந்தது.
மூன்றாவது தடவையும் புதைத்தபோது அவன் உடலை பூமி ஏற்றுக்கொள்ளவில்லை.அப்போது மக்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது மனித செயல் அல்ல.என்று கூறி அப்படியே விட்டுவிட்டார்கள். அவன் உடல் மீது நாய்கள் சிறுநீர் கழித்தது.
அல்லாஹ்வின் ரஸூலை நோவினை செய்பவர்களின் உலக முடிவு கெட்டதாகும்.
إنا كفيناك المستهزئين
நபியே!உம்மை கேலி செய்பவர்களை நாம் பார்த்துக்கொள்வோம் என்று அல்லாஹ் வாக்களித்தான்.
சூரியனை பார்த்து குரைக்கும் நாய்களைப்போல் பரிசுத்தமான அந்த பூமான் மீது சேற்றை அள்ளிவீசப்பார்கின்றனர்.
சம்பவம்3:
وفي مكة كان رجل اسمه ابن خطل يسب النبي صلى الله عليه وسلم وينشد الاشعار في ذلك
وتسير بها الركبان ,وكان ينهى فلا ينتهي ,ويزجر فلا ينزجر ,وكان له جاريتان يدفع اليهما
الاموال لتسب رسول الله عليه الصلاة والسلام وتغنيان بأشعاره ,فلما فتح النبي صلى
الله عليه وسلم مكة وقال :[من دخل المسجد فهو آمن ,ومن دخل داره فهو آمن ,
اقبل احد الصحابة فقال يارسول الله إن ابن خطل ذلك الذي يسبك ويشتمك وتغني
العرب بأشعاره ,وقد قلت من دخل المسجد فهو آمن ,إن ابن خطل متعلق بأستار
الكعبة يعني دخل المسجد وتعلق بأستار الكعبة فرفع النبي صلى الله عليه وسلم
صوته وقال : اذهبوا فاقتلوه , ليس له ذمه ,وليس له عهد ,وليس له كرامه
மக்காவில் இப்னுகதல் என்ற ஒருவன் இருந்தான்.நபி ஸல் அவர்களை திட்டி கவிகள் பாடுவான்.அதற்க்காக பணம் கொடுத்து இருஅடிமை பெண்களை ஏற்பாடு செய்தான்.
நபி ஸல் அவர்கள் மக்கா வெற்றி கொண்டபோது, கஃபாவில் நுழைந்தவர் பாதுகாப்பு பெற்றார்.தன் வீட்டில் நுழைந்தவர் பாதுகாப்பு பெற்றார்.என்று பொதுமன்னிப்பு வழங்கியபோது, ஒரு ஸஹாபி வந்து,யாரஸூல்லாஹ்!தங்க ளை திட்டிய இப்னுகதல் கஃபாவின் திரை பிடித்து பாதுகாப்பு தேடுகிறான்.என்று கூறினார். அப்போது நபி ஸல் அவர்கள் தன் சப்தத்தை உயர்த்தி, செல்லுங்கள் அவனை கொலை செய்யுங்கள்.அவனுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.எந்த ஒப்பந்தமும் இல்லை.என்றார்கள்.
முஸ்லீமாக இருக்கும் ஒருவர் தன் சொல்லால்,அல்லது செயலால் நாயகத்தின் கண்ணியத்திற்க்கு குறைவு ஏற்ப்படுத்துவாரேயானால் அவரின் கடந்த கால அமல்கள் அழிக்கப்பட்டு,அவரின் ஈமான் பறிக்கப்படும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلا تَجْهَرُوا لَهُ
بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَن تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنتُمْ لا تَشْعُرُونَ
சம்பவம்4:
وذكر الشيخ احمد شاكر رحمه الله ,عن خطيب كان بمصر وكان فصيحا متكلما مقتدرا ,فصلى معه يوما أحد امراء مصر بعدما كرموا "طه حسين " فاراد هذا الخطيب أن يمدح هذا الأمير فقال ..
جاءه الاعمى فما عبس وما تولى
.يمدح هذا الأمير ويتنقص نبينا صل الله عليه وسلم قال :فلما انتهت الخطبة والصلاة قام الشيخ محمد شاكر رحمه الله , ابو احمد شاكر , قال : ايها الناس حسبكم لا تخرجوا من المسجد ,اعيدوا صلاتكم فإنكم صليتم وراء رجل مرتد ,إذ تنقص رسول الله صل الله عليه وسلم أو عرض به ارتد عن الدين ..قد صليتم خلف مرتد ,فأعيدوا صلاتكم , قال احمد شاكر : فوالله مازالت الايام بذلك الخطيب حتى اذله الله ,ورأيت بعيني يقف عند باب جامع من جوامع مصر يستلم احذية الناس يحفظها لهم بالقرش والقرشين , صار يشتغل اقل من خادم ! يحمل احذيتهم ويحفظها لهم حتى تنتهي الصلاة بالقرش والقرشين قال والله لقد رايته بعيني
அஹ்மத் ஷாகிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
எகிப்தில் திறமையான கதீப் ஒருவர் இருந்தார்.அற்புதமான பேச்சாளர். ஒரு நாள் எகிப்தின் அதிகாரிகளுக்கு தொழுகை நடத்தினார்.தொழுகை முடிந்து அதிகாரிகளை புகழ்ந்து ஒரு பிரசங்கம் செய்தார்.அதில் இந்த அமீர் எப்படிப்பட்டவர் என்றால் அவரிடம் பார்வை தெரியாதவர் வந்தார்.அவரை கடிந்து கொள்ளவுமில்லை,புறக்கனிக்கவுமில்லை.என்றார்.
(அதாவது நாயகத்தை குறைத்தும் அமீரை உயர்த்தியும் பேசினார்) அப்போது தொழுகையும் குத்பாவும் முடிந்தபோது அபூ அஹ்மத் ரஹ் அவர்கள் எழுந்து மக்களே!யாரும் பள்ளியை விட்டு வெளியாக வேண்டாம்.நீங்கள் ஒரு முர்தத்துக்கு பின் தொழுதிருக்கிறீர்கள்.உங்கள் தொழுகையை திருப்பி தொழுங்கள்.நாயகத்தை அவமரியாதையாக பேசியவன் சந்தேகமின்றி மதம் மாறியவன்.என்றார்கள்.
நாட்கள் கழிந்தது.அந்த கதீப் எகிப்தின் பள்ளிவாசல்களில் ஒருசில காசுகளுக்காக மக்களின் செருப்புகளை சுத்தம்செய்து, பாதுகாக்கும் இழிவான நிலையை என் கண்ணால் கண்டேன் என அஹ்மத் ஷாகிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلأَبْتَرُ
இஸ்லாமிய எதிரிகள் மூன்று வகையான ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்
1.இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் தீவிரவாதிகளாக,பயங்கரவாதிகளாக சித்தரிப்பது. 2.திருக்குர்ஆனை அவமதித்து,தீயிட்டு கொளுத்தி முஸ்லீம்களை கோபப்படுத்துவது. 3.முஸ்லீம்கள் தங்களின் உயிரினும் மேலாக மதிக்கிற நாயகத்தை இழிவு படுத்துவது.
நேற்று.... கேலிச்சித்திரங்கள்,குரும்படங்கள். இன்று.....திரைப்படங்கள். நாளை.....என்ன?
இதுபோன்ற மட்டமான விமர்சனங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கு போராட்டங்களும்,ஆர்ப்பாட்டங்களும் மட்டும் தீர்வல்ல என்பதை முஸ்லீம்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
தீர்வு என்ன?
1: முஸ்லீம்கள் நாயகத்தின் வரலாறுகளை தெரிந்து கொள்வது.
2: அவர்களின் சுன்னத்துக்களை வாழ்க்கையாக்குவது.
3: அண்ணலாரின் குடும்பத்தை நேசிப்பது.
4:நபி (ஸல்) அவர்களின் வரலாறுகளை தன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து,நாயகத்தை பிரியம் கொள்ளச்செய்வது.
5:பெருமானார் பற்றிய நூட்களை அதிகமாக வெளியிடுவது.
6:இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு தக்கபதிலளிக்கும் விதத்தில் உலமாக்களை மதரசாக்கள் உருவாக்குவது.
7:மீடியாக்கள் மூலம் முஸ்லீம்கள் தங்கள் தரப்பு நியாயத்தை தெரிவிப்பது.
No comments:
Post a Comment