Thursday 27 September 2012

ஹஜ்-ஒரு ஆசைப்பயணம்



ஹஜ்ஜுடைய காலம் துவங்கிவிட்டது.உலகின் பல பகுதிகளிலிருந்தும் முஸ்லீம்கள் இறையில்லம் நோக்கி புறப்பட்டுவிட்டனர்.

இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் ஹஜ் தனிக்கவனம் பெறுகிறது.காரணம் அது உடல்,பொருள் இரண்டும் சார்ந்த கடமையாகும்.
ஹஜ் கடமயாகுவதற்க்கு உடல் பலமும்,பொருள் வளமும் தேவையாகும்.

  வசதி இருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாதவர்கள் பற்றி அல்லாஹ்வின் எச்சரிக்கை:

وجاء فيما يرويه الرسول صلى الله عليه وسلم عن ربه عز وجل قوله: « إن عبداً صححت له جسمه ووسعت عليه المعيشة يمضي خمسة أعوام لا يفد إليّ إنه لمحروم ». 
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஓர்  அடியானுக்கு உடல் ஆரோக்கியத்தைக்கொடுத்து, வாழ்க்கையில் பல பரக்கத்துக்களையும் செய்து,அதே நிலையில் 5 வருடங்கள் கழிந்தும் ஹஜ்ஜின் மூலமாக என்னை சந்திக்காவிட்டால் மறுமைநாளில் என்னை சந்திப்பதை விட்டும் அவன் துர்ப்பாக்கியவனாக மாறிவிடுகிறான்.
ஹஜ்ஜு கடமையாக இருந்தும் அதை நிறைவேற்றாதவரின் ஈமான் மறுபரிசீலனைக்குரியது.

இவர்கள் குறித்து நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை:

" من ملك زاداً وراحلة تبلغه إلى بيت الله، ولم يحج، فلا عليه أن يموت يهودياً أو 
نصرانياً

எவர் ஹஜ்ஜை நிறைவேற்றத் தேவையான அளவு பொருளை அல்லது வாகனத்தை பெற்றிருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லையோ அவர் ஒரு யூதனாக அல்லது கிருஸ்துவனாக மரணிக்கட்டும்.

உமர் ரலி அவர்களின் கடுமையான எச்சரிக்கயையும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்வது பொருத்தமாகும்.

وقال عمر بن الخطاب رضي الله عنه (لقد هممت أن أبعث رجالاً إلى هذه الأمصار  فينظروا كل من كان له جدةٌ ولم يحج  فيضربوا عليهم الجزية  ما هم بمسلمين  ما هم 
بمسلمين ) [رواه البيهقي

இந்த நகரங்களுக்கு சில நபர்களை அனுப்பி அங்கு வசதி இருந்தும் எவர் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லையோ அவர்களிடம் ஜிஸ்யாவை எடுக்க என் மனம் நாடுகிறது,ஏனெனில் அவர்கள் முஸ்லீம்கள் அல்ல.

ஹஜ் அது ஒரு ஆசை வணக்கம்.பரவசப்பயணம்.அது அல்லாஹ்வின் அருளோடு சம்பந்தப்பட்டது.                                               பணமிருந்தால் மட்டும் ஹஜ்ஜு செய்துவிடமுடியுமென்றால் உலகில் பணக்காரர்களெல்லாம் ஹாஜிகளாக ஆகியிருப்பார்கள். உலகில் எத்தனையோ வசதியுள்ளவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.     இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி செய்த முகலாய மன்னர்களுக்கு எவருக்கும் ஹஜ் நஸீப் இல்லை. அடுத்தவேலை சாப்பாட்டுக்கு வழியின்றி வறுமையில் வாடும் எத்தனையோ ஏழைகள் ஹஜ்ஜு செய்யும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள்.

ذكر ان محمد بن سيرين ـ رحمه الله ـ كان جالساً في الحرم ، قال فأقبل إليه رجل ثم سأله ، قال له يا ابن سيرين من أين أنت ؟
قال ابن سيرين أنا من بلاد بعيدة ، انا من العراق
فقال له ذلك الرجل سبحان الله انت من جيران الحرم ، أنت من جيران الحرم
قال له ابن سيرين فأنت من اين ؟
قال انا من بلاد ما وراء النهر ، "من أقصى بلاد روسياخرجت من عند اهلي منذ خمس سنين والآن وصل إلى مكه

இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் ஹரம் ஷரீபில் அமர்ந்திருந்தார்கள்.அப்போது அவரிடம் ஒருவர் வந்து,இப்னு சீரீன் அவர்களே!தாங்கள் எங்கிருந்து வருகிறீர்?என வினவினார். அதற்க்கு நான் தூரமான ஊரிலிருந்து வருகிறேன்.அதாவது நான் இராக்கிலிருந்து வருகிறேன்.என்றார்.
உடனே அந்த மனிதர் சுப்ஹானல்லாஹ்! நீங்கள் ஹரமுக்கு பக்கத்திலேயே இருக்கிறீர்.என்றார்.அதைக்கேட்ட இப்னு சீரீன் ரஹ் அவர்கள்(ஆச்சரியத்துடன்), நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்?என்று அந்த மனிதரிடம் கேட்டார்.அதற்கு அவர், நான் ரஷ்யாவிலிருந்து வருகிறேன். என் குடும்பத்தை விட்டு நான் பிரிந்து 5 ஆண்டு காலம் ஆகிவிட்டது.     இப்போது தான் மக்கா வந்தடைந்தேன்.என்றார்.

5 ஆண்டு காலம் ஏன்?

فإن احدهم كان يخرج من بيته ثم يظل وقتاً يسير في طريقه ولا يحمل معه ما يكفيه طوال سفره خوفاً من قطاع الطريق او ربما من شدة فقره ، وعدم قدرته ، فيأخذ معه ما يجعله يمشي لمدة شهرين وثلاثة ثم تفنى نفقته فيضطر الى ان يدخل الى بلد ويشتغل فيه ربما ستة اشهر او سبعة اشهر او اكثر فيجمع بعد ذلك مالاً ثم يكمل سفره، يكمل هذه الطريق الطويل،

ஒருவர் தன் வீட்டிலிருந்து இரண்டு மாதம் தேவையான பொருளை எடுத்துக்கொண்டு கால்நடையாக ஹஜ்ஜுக்கு புறப்படுவார்.அவர் கொண்டுவந்த பொருள் தீர்ந்தவுடன் ஒரு ஊரில் ஆறு மாதம் வேலை செய்து, தன் பயணத்திற்க்கு தேவையான பொருள் சேர்ந்தவுடன் மீண்டும் தன் பயணத்தை தொடர்வார்.

இது இறை காதலர்களின் ஆசைப்பயணம்.

يخرج إبراهيم بن أدهم إلى الحج ماشيا فرآه رجل على ناقته فقال له: إلى أين يا إبراهيم؟ قال: أريد الحج. قال: أين الراحلة فإن الطريق طويلة؟ فقال: لي مراكب كثيرة لا تراها. قال: ما هي؟ قال: إذا نزلت بي مصيبة ركبت مركب الصبر. وإذا نزلت بي نعمة ركبت مركب الشكر. وإذا نزل بي القضاء ركبت مركب الرضا. فقال له الرجل: سر على بركة الله، فأنت الراكب وأنا الماشي


இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் நடைப்பயணமாக ஹஜ்ஜுக்கு புறப்பட்டார்கள்.அப்போது ஒட்டகத்தில் சென்றுகொண்டிருந்த ஒருவர்,இப்ராஹீமே!எங்கு செல்கிறீர்?என கேட்டார்.அதற்கு ஹஜ்ஜுக்கு செல்கிறேன் என பதில் கூறினார்கள்.
பயணம் நீண்டது.வாகனம் எங்கே?என அந்த மனிதர் வினவினார்.அதற்க்கு இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் உன்னால் பார்க்க முடியாத அதிகமான வாகன ங்கள் என்னிடம் உள்ளது.எனக்கு சோதனை வந்தால் பொருமை எனும் வாகனத்தில் ஏறுவேன்.எனக்கு மகிழ்ச்சி வந்தால் நன்றி எனும் வாகனத்தில் ஏறுவேன்.அல்லாஹ்வின் கத்ர் வந்தால் பொருந்திக்கொள்ளுதல் எனும் வாகனத்தில் ஏறுவேன்.என பதில் கூறினார்கள்.இதனைக் கேட்ட அந்த மனிதர் அல்லாஹ்வின் அருளோடு புறப்படுங்கள். நான் நடந்து செல்கிறேன் நீங்கள் தான் உண்மையான வாகனத்தில் செல்கிறீர்கள் என கூறியவராக புறப்பட்டு விட்டார்.

ஒவ்வொரு எட்டுக்கும் இரண்டு ரக்கஅத் தொழுதவர்களாக நைஸாபூரிலி  ருந்து மக்கா வந்தடைய 2 ½ ஆண்டுகாலம் ஆகியது.இது நடைப்பயணம் அல்ல.ஸுஜூத் பயணம்.

ஹாஜி கடைபிடிக்கவேண்டிய நான்கு விஷயங்கள்

முதலாவது:  இறையச்சம் வேண்டும்.

அல்லாஹுத்தஆலா தன் அருள்மறையில் கூறுகிறான்

 وتزودوا فإن خير الزاد التقوى

ஒரு ஹாஜி ஹஜ்ஜின் எல்லா அமல்களிலும் பக்தியை கடைபிடிக்க வேண்டும்.

كان السلف -رحمهم الله- إذا حجّوا أصابهم من الخشوع والخضوع 

عن علي بن الفضيل أنه دخل الحرم ليطوف، فرأى سفيان الثوري ساجدًا عند الكعبة، فطاف شوطًا وسفيان لم يرفع رأسه، ثم طاف الثاني والثالث... حتى أكمل سبعة أشواط، وسفيان لم يرفع رأسَهُ من سجوده

அலி இப்னு புழைல் ரஹ் அவர்கள் தவாப் செய்வதற்க்காக ஹறமில் நுழைந்தபோது கஃபாவுக்கு பக்கத்தில் சுப்யானுஸ்ஸவ்ரி ரஹ் அவர்கள் ஸுஜூதில் இருக்க காண்கிறார்கள்.அவர்கள் ஏழு சுற்றை முடித்தும் அவர்கள் ஸுஜூதிலிருந்து எழவில்லை.

இரண்டாவது: நிய்யத்தை சரி செய்தல்.

قُلْ إِنَّ صَلاتِي وَنُسُكِي وَمَحْيَاي وَمَمَاتِي لِلَّهِ  رَبِّ الْعَالَمِينَ لا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ
أُمِرْتُ وَأَنَا أَوَّل الْمُسْلِمِينَ

எதற்காக ஹஜ்ஜுக்கு செல்கிறோம் என்ற எண்ணத்தை
சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

وقف عبد الله بن عمر مع أبيه عمر على جبل الصفا، فلما رأوا كثرة الناس والحجاج رأوا كثرة الملبين والمكبرين استبشر عمر بكثرتهم وفرح في عهده رضي الله عنه وقد كثر المسلمين وامتلأ الحرم بالحجاج..فرح.. فقال عبدالله بن عمر لأبيه: يا أبتِ ما أكثر الحاج! فقال له عمر: يا بني: الركب كثير لكن الحاج قليل..

ஹழ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் தன் தந்தை உமர் ரலி அவர்களுடன்
சபா மலையில் நின்றுகொண்டு ஹாஜிகளின் கூட்டத்தை பார்த்து மகிழ்ந்து,தன் தந்தையிடம்,ஹாஜிகளின் கூட்டம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது? என்றார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், மகனே! பயணிகள் அதிகம்.ஹாஜிகள் இதில் குறைவுதான்.என்றார்கள்.

அதாவது:
يا بني الركب كثير " لكن الله أعلم بالقلوب والنيات "لكن الحاج قليل

அவர்களின் உள்ளங்களின் எண்ணங்களை அல்லாஹ் அறிந்தவன்.

மூன்றாவது அல்லாஹ்வின் அடையாளச்சின்னங்களை கண்ணியப்படுத்துதல்.

وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

அந்த பூமி அல்லாஹ்வின் அருள் இறங்கிகொண்டிருக்கும் பூமியாகும்.ஒவ்வொரு நாளும் 120 ரஹ்மத்துக்கள் இறங்குகிறது.     எனவே நம்முடைய கண்களுக்கு காட்சி தரும் அந்த கஃபா நபிமார்களின் ஒதுங்குமிடமாகும்.
கஃபாவைச்சுற்றி 300 க்கும் மேற்பட்ட நபிமார்களின் கப்றுகள் உள்ளது.
ருக்னுல் யமானி,ஹஜருல் அஸ்வத் ஆகிய இரண்டுக்கும் மத்தியில் மாத்திரம் எழுபது நபிமார்களின் கப்றுகள் உள்ளன.
ஹழ்ரத் இஸ்மாயீல் அலை .மற்றும் ஹாஜரா அலை ஆகிய இருவரின் கப்ருகளும் மீஸாபே ரஹ்மத் எனும் இடத்திற்கு கீழே இருப்பதாக சொல்லப்படுகிறது.
உலகில் அல்லாஹ்வின் தூதர்களாக வந்த அனைத்து நபிமார்களின் காலடிப்பட்ட இடமாகும்.என்வே அந்த இடங்களின் கண்ணியத்தை மனதில் அழுத்தமாக ப்தியவைக்க வேண்டும்

நான்காவது:
அங்கு தங்கிருக்கும் காலமெல்லாம் பொருமையை கடைப்பிடிக்க வேண்டும்.ஏனெனில் ஹஜ் கடமையானவர்களுக்கு அல்லாஹ் முதலாவது செய்யும் உபதேசம்

الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلا رَفَثَ وَلا فُسُوقَ وَلا جِدَالَ فِي الْحَجِّ

ஹாஜிகளின் உணர்வுகள் கூட அல்லாஹ்விடம் உற்றுநோக்கி கவைக்கப்படுகின்றது.
ஹாஜிகள் அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டிய துஆ
 اللهم اجعل حجي مبرورا وذنبي مغفورا وسعيي مشكورا 

1 comment:

  1. Dear Imam,

    Please mention the Reference after the every Qur'anic verse and Hadith

    Jasakkallahu Khair!!
    Yousuf

    ReplyDelete