Wednesday, 27 February 2013

ஸஹாபாக்களை விமர்சிக்க கூடாது



நபிமார்களுக்குப்பின்னர் இந்த உலகில் வாழ்ந்த மனிதர்களில் மிகச்சிறந்த மனிதர்கள் ஸஹாபாக்கள் தான்.

அவர்கள் வாழ்ந்த காலங்கள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட புனித காலங்களாகும்.

இந்த தீனுக்கு உரமாக தங்களையே தந்துவிட்ட தலைவர்கள்.

கொண்டகொள்கையில் உயிர்மூச்சு உள்ள வரையும் உறுதியாக நின்றவர்கள்.

வாழும் காலங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெற்ற உத்தமசீலர்கள்.

தோழர்கள் எனும் புனிதச்சொல்லால் அழைக்கப்பட்ட அவர்கள்-தோழமையின் அத்தனை இலக்கணத்தையும் நிலைநிறுத்தியவர்கள்.

தலமைக்கு கட்டுப்படுவதை உலகம் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஸஹாபி என்றால் யார்?

كل من لقي محمد صلى الله عليه وسلم مؤمناً به ومات على ذلك

நபி ஸல் அவர்களை ஈமானுடன் சந்தித்து,அதிலேயே நிலைத்திருந்து மரணம டைந்தவர்.

இதில் மூன்று விஷயங்கள் பிரதானமானவை:

முதலாவது:  நபியின் சந்திப்பு.

இரண்டாவது: ஈமான் கொள்வது.

மூன்றாவது: அதேநிலையில் மரணிப்பது.

. فمن لم يلقى النبي صلى الله عليه وسلم فليس بصحابي. ومن لقيه حال كفره أو نفاقه أو ارتد بعد ذلك فهو لا يدخل في أصحاب النبي صلى الله عليه وسلم

நபி ஸல் அவர்களின் காலத்தில் வாழ்ந்தும்,ஈமான் கொண்டும்,நாயகத்தை சந்திக்காவிட்டால் அவர் ஸஹாபி அல்ல.

உதாரணமாக-உவைஸுல் கர்னீ ரஹ் அவர்கள் நபி ஸல் அவர்களின் காலத்தில் யமன் தேசத்தில் வாழ்கிறார்கள்.நாயகத்தை ஈமான் கொண்டார்கள் ஆனாலும் உடல் நிலை சரியில்லாத தன் தாயின் பணிவிடைக்காக அவர்களால் மதீனாவந்து அண்ணலாரை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

உவஸை பிற்காலத்தில் நீங்கள் சந்தித்தால் உங்களுக்காக பாவமன்னிப்பு தேடச்சொல்லுங்கள் என ஹழ்ரத் உமர் ரலி அவர்களுக்கு நபி ஸல் அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

இத்துனைபெரும் சிறப்புப்பெற்றிருந்தும் அவர்கள் ஸஹாபி எனும் அந்தஸ்தை பெறவில்லை.

அதைப்போலவே-நாயகத்தின் காலத்தில் வாழ்ந்தும்,நாயகத்தை சந்தித்தும் ஈமான் கொள்ளவில்லையானால்,அல்லது நயவஞ்சகராக வாழ்ந்தால்,அல்லது ஈமான் கொண்டு பின்பு மதம் மாறிவிட்டால் இவரும் ஸஹாபி அல்ல.

அவர்களின் கண்ணியமான வாழ்கைக்கு குர்ஆன் சான்று:

الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأَمْوَالِهِمْ

இந்த தீனுக்காக தங்களின் வீடுகளை விட்டும் சொத்துக்களை விட்டும் வெளி  யேற்றப்பட்டவர்கள்.


يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا

அல்லாஹ்வின் அருளையும் அவன் பொருத்தத்தையும் தேடுவார்கள்

وَيَنْصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ
நபி ஸல் ibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: AR-SA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">
அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் உதவி செய்பவர்கள்.

أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ

அவர்கள் உண்மையாளர்கள்.

تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا

ருகூவு செய்பவர்களாகவும் ஸுஜூது செய்பவர்களாகவும் அவர்களை காண்பீர்.

سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ

அவர்களின் முகங்களில் ஸுஜூதின் அடையாளமிருக்கும்.

இப்படி அல்லாஹுத்தஆலா அவர்களின் அடையாளங்கள் பற்றியும்,குணங்கள் பற்றியும் பல இடங்களில் கூறுகிறான்.

அந்த புனிதர்களை பற்றி நபித்தோழர் ஹழ்ரத் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

. أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على آثارهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم . رواه رزين

நபி ஸல் அவர்களின் தோழர்கள் இந்த உம்மத்தின் மிகச்சிறந்த சமுதாயம்.

நல்ல உள்ளம் கொண்டவர்கள்-ஆளமான அறிவாற்றல் பெற்றவர்கள்-அல்லாஹுத்தஆலா தன் நபியின் நட்புக்காகவும்,அவனின் தீனை நிலைநிறுத்தவும் அவர்களை தேர்ந்தெடுத்தான்.

ஆகவே அவர்களின் தகுதியை விளங்கிக்கொள்ளுங்கள்-அவர்களின் வழிமுறையை பின்பற்றுங்கள்-அவர்களின் குணங்களையும்,வரலாறுகளையும் உங்களால் முடிந்தமட்டும் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.அவர்கள் நேர்வழி பெற்ற கூட்டமாகும்.

உண்மை தான்!அவர்கள் இந்த தீனின் சாட்சியாளர்கள்.அவர்கள் மூலம் தான் நமக்கு குர்ஆன் கிடைத்தது.அவர்கள் மூலம் தான் நபி ஸல் அவர்களின் ஹதீஸும் கிடைத்தது.

எனவே அவர்களை குறை காண்பவர்கள் இந்த தீனின் ஆதாரத்தை அழிக்கப்  பார்ப்பவர்கள்.
அவர்கள் வழிகெட்டவர்கள் மாத்திரமின்றி அல்லாஹ் ரஸூலின் சாபத்திற்குறியவர்கள்.
ஸஹாபிகளை விமர்சிக்க கூடாது


وقال الرسول صلى الله عليه وسلم :" لا تسبوا أصحابي، فلو أن أحدكم أنفق مثل أُحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفة"
رواه البخاري

என் தோழர்களை திட்டாதீர்கள்,அவர்கள் கையளவு செய்த தர்மத்தின் அந்தஸ்தை நீங்கள் உஹது மலையளவு செய்தாலும் அடைய முடியாது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

وعن ابن عباس _رضي الله عنهما_ قال : قال رسول الله -صلى الله عليه وسلم- ( مَن سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين
رواه الطبراني في الكبير

என் தோழர்களை திட்டுபவர்கள் மீது அல்லாஹ்,மலக்குகள்,மக்கள் அனைவரின் சாபம் உண்டாகும்.என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

قال ابن عمر _رضي الله عنهما_ " لا تسبوا أصحاب محمد صلى الله عليه وسلم فلمقام أحدهم ساعة خير من عمل أحدكم عُمره
رواه أحمد في الفضائل

நபி ஸல் அவர்களின் தோழர்களை திட்டாதீர்,காரணம் அவர்கள் ஒருவரின் ஒருமணிநேர வாழ்நாள் உங்கள் ஆயுளை விடவும் சிறப்பானது.என இப்னு உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

وجاء رجل إلى عبد الله بن المبارك وسأله أمعاوية أفضل أو عمر بن عبد العزيز فقال " لتراب في منخري معاوية مع رسول الله -صلى الله عليه وسلم- خير وأفضل من عمر بن عبد العزيز
رواه ابن عساكر 59/208 وانظر : منهاج السنة 6/227 .

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ் அவர்களிடம் ஒருவர் வந்து நபித்தோழர் முஆவியா ரலி அவர்கள் சிறந்தவரா?அல்லது உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் சிறந்தவரா?என கேட்டபோது-
நபி ஸல் அவர்களுடன் ஹழ்ரத் முஆவியா ரலி அவர்கள் கலந்துகொண்ட போரில் அவர்களின் வாகனம் கிளப்பும் புழுதிமண் ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களை விட சிறந்ததாகும் என்று பதில் கூறினார்கள்.


وقال الإمام أحمد -رحمه الله تعالى- " إذا رأيت رجلا يذكر أصحاب رسول الله -صلى الله عليه وسلم- بسوء فاتهمه على الإسلام
لا يجوز لأحد أن يذكر شيئا من مساويهم ولا يطعن على أحد منهم بعيب ولا نقص فمن فعل ذلك فقد وجب على السلطان تأديبه وعقوبته ليس له أن يعفو عنه بل يعاقبه ويستتيبه فان تاب قبل منه وإن ثبت أعاد عليه العقوبة وخلده الحبس حتى يموت أو يراجع
شرح أصول الاعتقاد للالكائي

நபித்தோழர்களை குறைகூறும் ஒரு மனிதனை நீ பார்த்தால் அவனின் இஸ்லாம் சந்தேகத்திற்குறியது.

அவர்கள் மீது குறைகூறுபவனுக்கு இஸ்லாமிய சட்டப்படி அவனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

وقال بشر بن الحارث _رحمه الله تعالى_ " مَن شتم أصحاب رسول الله -صلى الله عليه وسلم- فهو كافر وإن صام وصلى وزعم أنه من المسلمين
رواه ابن بطة في الإبانة

நபித்தோழர்களை எவன் திட்டுகிறானோ அவன் தொழுதாலும்,நோன்பு வைத்தாலும் அவன் காபிர் தான் என ஹழ்ரத் பிஷ்ர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال أبو زرعة _رحمه الله تعالى_ " إذا رأيت الرجل ينتقص أحدا من أصحاب رسول الله -صلى الله عليه وسلم- فاعلم أنه زنديق وذلك أن الرسول حق والقرآن حق وإنما أدى إلينا هذا القرآن والسنة أصحابُ رسول الله -صلى الله عليه وسلم- وإنما يريدون أن يجرحوا شهودنا ليُبطلوا الكتاب والسنة والجرح بهم أولى وهم زنادقة
تاريخ بغداد 38/132 والكفاية /97

ஸஹாபாக்களை குறைபடுத்தும் ஒருவனை பார்த்தால் அவன் வழிகெட்டவன் என்று விளங்கிக்கொள்.ஏனெனில் நாம் பெற்றுள்ள குர்ஆனும் தூதரும் உண்மை.அந்த வேதத்தையும்,தூதரின் வழிமுறைகளையும் நம் வரை கொண்டு வந்து சேர்த்தது அந்த ஸஹாபாக்கள் தான்.அவர்களை குறைபடுத்து வது இந்த தீனின் சாட்சியை மறைக்கப்பார்ப்பதாகும் என அபூ ஸர்ஆ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال الإمام محمد بن صُبيح بن السماك _رحمه الله تعالى_ لمن انتقص الصحابة " علمتَ أن اليهود لا يسبون أصحاب موسى -عليه السلام- وأن النصارى لا يسبون أصحاب عيسى -عليه السلام- فما بالك ياجاهل سببت أصحاب محمد -صلى الله عليه وسلم
رواه المعافي في الجليس الصالح 2/392

இமாம் முஹம்மத் ரஹ் அவர்கள் ஸஹாபாக்களை விமர்சனம் செய்பவர்கள் விஷயத்தில் இப்படி ஒரு கேள்வியை முன் வைக்கிறார்கள்.
யூதர்கள் மூஸா அலை அவர்களின் தோழர்களை திட்டுவதில்லை.
கிருஸ்துவர்கள் ஈஸா அலை அவர்களின் தோழர்களை திட்டுவதில்லை
மடையா!உனக்கு மட்டும் என்ன வந்து விட்டது?நபித்தோழர்களை விமர்சனம் செய்கிறாய்.

இஸ்லாமியர்களில் ஸஹாபாக்களை திட்டுகிற கூட்டம் இரண்டு.

ஒன்று. ஷியாக்கள்.இரண்டாவது:தவ்ஹீத்வாதிகள் என தங்களுக்கு பெயர் சூட்டிக்கொள்ளும் தவறிப்போன கூட்டம்.

இந்த போலிவாதிகள் சமீபகாலங்களில் நபித்தோழர்களை குறித்து மிகவும் தரக்குறைவாக எழுதியும் பேசியும் வருகின்றனர்.

இவர்களின் ஈமானும் அதன் முடிவும் சந்தேகத்திற்குறியது,காரணம் ஸஹாபாக்கள் குறித்து அவர்கள் பேசிய வார்த்தைகளை எந்த முஸ்லிமாலும் சகித்துக்கொள்ள முடியாது.
ஸஹாபாக்கள் மீது அவர்கள் கூறும் விமர்சனங்கள்:
1.நாங்கள் ஸஹாபாக்களை மதிப்போம் ஆனால் பின்பற்ற மாட்டோம்.

ஸஹாபாக்களை பின்பற்றச்சொல்லி வலியுறுத்தும் திருக்குர்ஆன்

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّـهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்;

2.ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் பற்றி கொள்கை குழப்பவாதி.இவர் பித்அத்வாதி.

யார் அந்த உமர் ரலி?

இந்த தீனுக்கு கண்ணியம் தேடி தந்தவர்.உமர் ரலி அவர்களை பார்த்தால் ஷைத்தான் பயப்படுவான் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.

அப்படிப்பட்ட உமர் ரலி அவர்கள் பற்றி இந்த நவீனவாதி சொன்னதை பார்த்தால் ஷைத்தானே பயப்படுவான்.  (இவன் நம்மை மிஞ்சிய பெரிய ஷைத்தான் போல என்று.)


عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال: " إن الله تعالى عز وجل جعل الحق على لسان عمر وقلبه.
حلية الاولياء

உமர் ரலி அவர்களின் நாவிலும் உள்ளத்திலும் அல்லாஹ் சத்தியத்தை வைத்துவிட்டான் என்றும்,

هذا عمر بن الخطاب، وليس من الباطل في شيء
حلية الاولياء

இவரிடத்தில் அசத்தியம் இல்லை என்றும் புகழ்ந்து நபி ஸல் அவர்கள் கூறினார்கள்


3.அலி ரலி அவ்ர்களை பற்றி எடுப்பார் கைப்பிள்ளை என்றும்,போர் வெறியை தூண்டியவர் என்றும் கூறுகிறார்.

யார் அந்த அலி ரலி அவர்கள்?

சின்ன வயதில் ஈமானை சொந்தமாக்கிக்கொண்டவர்கள்.

فقال لهم: " يامعشر الأنصار ألا أدلكم على ما إن تمسكتم به لن تضلوا بعده أبداً؟ " قالوا: بلى يا رسول الله قال: " هذا علي فأحبوه بحبي، وأكرموه بكرامتي، فإن جبريل أمرني بالذي قلت لكم عن الله عز وجل.
حلية الاولياء

அன்ஸாரிகளே!நீங்கள் வழிதவறிவிடாமல் இருக்க ஒரு வழி சொல்லட்டுமா? என்று நபி ஸல் அவர்கள் சொன்ன போது அவசியம் சொல்லுங்கள் என்றார்கள்.
அப்போது நபி ஸல் அவர்கள்-அலியை நேசியுங்கள் அவருக்கு கண்ணியம் செய்யுங்கள் இது அல்லாஹ் ஜிப்ரயீல் மூலம் எனக்கு சொல்லியது என்றார்கள்.

عن علي قال: " والله ما نزلت أية إلا وقد علمت فيما أنزلت، وأين أنزلت، وإن ربي وهب لي قلباً عقولاً، ولساناً سؤولاً
حلية الاولياء

திருக்குர்ஆனின் எந்த வசனமும் எதற்காக இறக்கப்பட்டது?எங்கே இறக்கப்பட்டது? என்று எனக்கு தெறியும்.என்று அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

4.அம்ர் இப்னுல் ஆஸ் ரலி அவர்கள் பற்றி-இவர் ஒரு கிரிமினல்.

யார் அம்ர் இப்னுல் ஆஸ் ரலி அவர்கள்?

يقول والله ما كنت أستطيع أن أرفع عيني إليه هيبة وإجلالاً له ثم قال عمرو: ولو طلبتم مني أن أصفه لكم اليوم ما استطعت ذلك.لأني ما حفظت شكله.
حلية الاولياء

என் வாழ்நாளில் பெருமானின் மீது நான் வைத்திருக்கும் கண்ணியத்தால் அவர்களை தலைநிமிர்ந்துகூட பார்த்த்தில்லை என்று கூறுகிறார்கள்.

அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று என்னிடம் வர்ணிக்கச்சொன்னால் என்னால் முடியாது என்று அம்ர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

5.முஹம்மத் இப்னு அபீபக்ர் ரலி அவர்கள் பற்றி-இவர் ஒரு ரவுடி

6.ஹுஸைன் ரலி அவர்களை பற்றி-இவர் பதவி ஆசை பிடித்தவர்.

7.நபி ஸல் அவர்களின் வபாத்திற்கு பின் அண்ணன் எப்ப போவார் திண்ணை எப்ப காலியாகும் என்று பதவிக்காக அடித்துக்கொண்டார்கள்என்று கூறுகிறார்.

இப்படி இவர்கள் அருமை தோழர்கள் குறித்து பேசிய,அல்லது எழுதிய விமர்சனங்கள் பதிவுசெய்வதற்கு கூட கூசும் அளவுக்கு தகுதியற்றவை.

இந்த தீனுக்கு அரனாக நின்று பாதுகாத்த அந்த உத்தம தோழர்களின் வழியை பின்பற்றி நடப்போமாக.

Wednesday, 20 February 2013

இறைநேசர்களாக வாழுங்கள்! அல்லது இறைநேசர்களுடன் வாழுங்கள்.


மனிதன் அல்லாஹ்வுடன் நெருக்கம் பெறுவதற்கு இரண்டு வழிகளை மார்க்கம் கற்றுத்தறுகிறது.

ஒன்று:அல்லாஹ்வின் வேதம்.மற்றொன்று அல்லாஹ்வின் நேசர்கள்.

இறைவேதங்கள் முழுமையானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத ஒன்று,ஆனால் வேதத்தைக்கொண்டு மட்டும் மனிதன் அல்லாஹ்வை அடைந்துவிட முடியுமா?என்பது தான் இங்கே கவனிக்கப்பட வேண்டும்.

நபி மூஸா அலை அவர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் வேதத்தை பற்றி அல்லாஹுத்தஆலா கூறும்போது تَفْصِيلًا لِّكُلِّ شَيْءٍ அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தும் என்று கூறுகிறான்.ஆனால் அச்சமுதாய மக்களை நபி மூஸா அலை அவர்களை தான் பின்பற்
றச்சொன்னான்.

எனவே அவ்வேதத்தில் எல்லாமும் இருந்தாலும் இங்கே நபி மூஸா அலை அவர்களின் துணை தேவைப்படுகிறது.

அவ்வாறே நபி ஸல் அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது  تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ அனைத்து வஸ்துக்கள் பற்றிய விரிவுரை என்று புகழ்ந்து கூறுகிறான்.ஆனாலும் இச்சமூகத்தை நபி முஹம்மத் ஸல் அவர்களை தான் பின்பற்றி நடக்கச்சொன்னான்.

அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆன் முழுமையானது,அதேசமயம் அதை விளங்கிக்கொள்வதற்கும்,விளக்கிக்கொடுப்பதற்கும்,அதை வாழ்க்கையாக வடிவமைத்து
க்காட்டுவதற்கும் நபி ஸல் அவர்கள் தேவைப்ப  டுகிறார்கள்.அதனால் தான் நபி ஸல் அவர்களின் பணி குறித்து-

بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ ۗ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். என்று கூறுகிறான்.

இதன் அடிப்படையில் நாயகம் ஸல் அவர்கள் இன்றி குர்ஆனை விளங்கிக்கொள்ள முடியாது.அதை அமல் செய்யவும் முடியாது என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.

தொழுகையை நிலநிறுத்துங்கள்-ஜகாத்தை நிறைவேற்றுங்கள்.  என்று மட்டுமே குர்ஆனில் உண்டு.

எத்தனை வேலை தொழ வேண்டும்?எத்தனை இரக்கஅத் தொழ வேண்டும்?எந்த நேரத்தில் தொழ வேண்டும்?எப்படி தொழனும்?போன்ற முறைகளை நபி ஸல் அவர்கள் தான் கற்றுத்தறுகிறார்கள்,அவ்வாறு ஜகாத் யார் கொடுக்க கடமைப்பட்டவர்?யாருக்கு கொடுக்க வேண்டும்?  எவ்வளவு கொடுக்க வேண்டும்? பொன்ற சட்டங்களை நபி ஸல் அவர்கள் தான் நமக்கு சொல்லிந்தந்தார்கள்.

மனிதனுக்கும் மற்ற உயிரிணங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மனிதன் சுயமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது.  ஆனால் மற்ற உயிரிணங்கள் அப்படியல்ல!

மீன் குஞ்சு பிறந்தவுடன் நீரில் நீந்துகிறது.கோழிக்குஞ்சு பிறந்தவுடன் தானாக நடக்கிறது, இரை தேடச்செல்கிறது.

அதனால் தான் அல்ல்ஹுத்தஆலா மனிதன் பலஹீனமாக படைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறான்.

திருக்குர்ஆன் ஒரு ஒளி என்றால் அதை நமக்கு கற்றுத்தருகிற நபி ஸல் அவர்களும் ஒளிதான்.எனவே தான் அல்லாஹுத்தஆலா இரண்டையும் நூர் என்றே கூறுகிறான்.

ஒரு பொருளை பார்க்க இரு ஒளி தேவைப்படுகிறது

1.கண் ஒளி  2.வெளி ஒளி.

 கண் ஒளி இருந்தும் வெளியே ஒளியின்றி இருளாக இருந்தால் பார்க்க முடியாது,அவ்வாறு வெளியே வெளிச்சம் இருந்தும் கண்ணில் பார்வை இல்லாமலிருந்தாலும் ஒரு பொருளை பார்க்க முடியாது.

இறைவேதத்திற்கு பின் நல்லோர்களின் தொடர்பு ஒரு முஃமினை சீர்திருத்தம் செய்வதற்கு அவசியமாகும்.

உலக வரலாற்றில் மிக மோசமான பழக்கங்களை கொண்ட அறியாமை கால அரபியர்கள் உலகத்து உத்தமர்களாக அடையாளம் காணப்பட்டது நபி ஸல் அவர்களின் தொடர்பினால் தான் என்பதை மறக்க முடியாது.

மதுவும் மாதுவும் தான் அவர்களின் அன்றாட வாழ்க்கை!

கெளரவத்திற்காக வாழ்ந்த கூட்டம்.

உயர்ந்த இலட்சியத்திற்காகவும் அல்லாஹ்வின் திருப்திக்காகவும் அவர்களின் வாழ்வு மாறியது நாயகத்தின் தொடர்புக்கு பின்னால்தான்.

நாங்கள் எழுத,படிக்க தெரியாத உம்மி சமுதாயம் என ஸஹாபாக்கள் தங்களை பற்றி சொல்வார்கள்.அப்படிப்பட்டவர்கள் உலகத்தின் கணித மேதைகளானது எப்படி?

உலகத்தின் அரசியலை மாற்றியமைத்தது யாரால்?

ஒரு மனிதனின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் சக்தி மூன்று விஷயங்களுக்கு உண்டு.

1.அவன் படிக்கும் கல்வி  2.அவன் பார்க்கும் உலகம்  3.அவன் பழகும் நட்பு.

நல்ல நட்பை தேர்ந்தெடுக்காமல் தீய நட்பை தேர்வு செய்தவன் நாளை அல்லாஹ்விடம்

 يَا وَيْلَتَىٰ لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا

"எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?"
என்று கைசேதப்படுவான்.

இறைநேசர்களின் தோழமைபெற்றவர்கள் வாழ்வில் வழிகெட்டுப் போகமாட்டார்கள் என்று ஒரு ஹதீஸில் வருகிறது.

கண் திருஷ்டி ஒருவனை கப்ரில் நுழைத்துவிடும் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு தீயபார்வைக்கு ஒருவனை மவ்தாக்கும் சக்தி இருக்குமானால் இறைநேசம் பெற்ற இறைநேசர்களின் அன்புப்பார்வைக்கு அவன் வாழ்வை சீர்த்திருத்தம் செய்யும் ஆற்றல் இருக்காதா?

சுவனம் செல்ல கலிமா அவசியம்,வணக்கம் அவசியம்-

கலிமாவும் இல்லை!அமலும் இல்லை!அவ்வளவு ஏன்?மனித இணமே இல்லாத ஒரு நஜீஸான நாய் குகைவாசிகளின் நட்பால் சுவனம் செல்லும் அந்தஸ்தை பெறவில்லையா?

பூவுடன் சேர்ந்தால் நார் மணக்கும் என்பார்கள்,ஆனால் இங்கு நாய் மணக்கிற
து,நஜீஸ் மணக்கிறது.

குதிரை,ஒட்டகம்,ஆடு இவைகளுடன் பழகும் மனிதனிடம் இவைகளின் சுபாவம் வருவது இயற்கையே!

குதிரை வளர்ப்பவரிடம் பெருமை இருக்கும்.ஆட்டுடன் பழகுபவரிடம் பணிவும்,பொருமையும் இருக்கும்.அதனால் தான் நபிமார்கள் அனைவர்களையும் அல்லாஹ் ஆடுமேய்க்கச்செய்தான்.

எனவே எவ்வளவு கற்றாலும் நல்லோர்களின் தொடர்பு இல்லையெனில் கரைசேர முடியாது.

இமாம் சுப்யான் ஸவ்ரி ரஹ் அவர்கள் மிகப்பெரும் ஹதீஸ் கலை வல்லுனர்.அவர்கள் கூறுகிறார்கள்.

அபூ ஹாஷிம் சூபி ரஹ் அவர்களின் தொடர்பு எனக்கு கிடைக்காவிட்டால் முகஸ்துதியின் நுனுக்கங்களை பற்றி நான் தெரிந்திருக்க முடியாது.

இமாம் அபூ ஹனீபா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்

இமாம் ஜஃபர் ஸாதிக் ரஹ் அவர்களுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்பில் இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.அது மட்டும் கிடைக்காவிட்டால் நான் அழிந்திருப்பேன் என்று கூறுகிறார்கள்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் இமாம் பிஷ்ர் ஹாஃபி ரஹ் அவர்களின் தோழமையில் பலகாலம் கழித்தார்கள்.
பிஷ்ர் ரஹ் மக்களிடம் சாதாரணமான மனிதர் தான்.

இமாம் அஹ்மத் ரஹ் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது அவ்வழியாக இமாம்பிஷ்ர் ரஹ் அவர்கள் வருவதை பார்த்து இமாம் அஹ்மத் ரஹ் எழுந்து நின்றார்கள்.

மாணவர்கள் காரணம் கேட்ட போது-

நான் வேதம் படித்த ஆலிம்.அவர் அல்லாஹ்வை படித்த ஆரிஃப் என்று பதில் சொன்னார்களாம்.

அவ்வளவு ஏன்?இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் தங்களின் கிதாபில் -
நான் கவாஜா பூ அலி ரஹ் அவர்களின் தொடர்பில் ஆண்மீக பயிற்சி பெற்றேன். என்று கூறுகிறார்கள்.

இறைநேசர்களின் அடையாளம் கண்டு கொள்வது எப்படி?

அவர்களை பார்த்தால் அல்லாஹ்வின் ஞாபகம் வர வேண்டும்.

عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ الأَنْصَارِيَّةِ . قالت: قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: أَلاَ أُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ ؟ قَالُوا: بَلَى , قال : فَخِيَارُكُمُ الَّذِينَ إِذَا رُؤُوا ذُكِرَ الله تَعَالَى
أخرجه أحمد 6/ 459

உங்களில் மிகச்சிறந்தவர் யார்?என்று சொல்லட்டுமா? என நபி ஸல் அவர்கள் கேட்டபோது-ஆம்!சொல்லுங்கள் ஸஹாபாக்கள் சொன்னார்கள்.

அப்போது நபி ஸல் அவர்கள்-அவர்களை கண்டால் அல்லாஹ்வின் ஞாபகம் வரவேண்டும் என்றார்கள்.

அதாவது அல்லாஹ்,ரஸூலின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு பேனுதலுடன் வாழவேண்டும்.

அவ்வாறின்றி கராமத்கள் மட்டும் ஒரு இறைநேசரின் அடையாளம் அல்ல.

அதனால் தான் இமாம் அபூ எஸீத் பிஸ்தாமி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

وقال البسطامي : لَوْ رَأَيْتُمْ الرَّجُلَ يَطِيرُ فِي الْهَوَاءِ أَوْ يَمْشِي عَلَى الْمَاءِ فَلَا تَغْتَرُّوا بِهِ حَتَّى تَنْظُرُوا وُقُوفَهُ عِنْدَ الْأَمْرِ وَالنَّهْيِ . مجموع فتاوى شيخ الإسلام (1/83).

காற்றில் பறக்கும் ஒரு மனிதனை பார்த்து அல்லது தண்ணீரில் நடக்கும் ஒரு மனிதனை பார்த்து அவர் இறைநேசர் என்று ஏமாந்து விட வேண்டாம்.

அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுபவராகவும்,அல்லாஹ்  தடுத்ததை  தவிழ்ந்து கொள்பவராகவும் இருக்க வேண்டும் என்றார்கள்.

அது மட்டுமின்றி ஒரு இறைநேசர் அவர் அடையாளம் காணப்படுவதை விரும்ப மாட்டார்.

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ، أَنَّهُ خَرَجَ يَوْمًا إِلَى مَسْجِدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَوَجَدَ مُعَاذَ بْنَ جَبَلٍ قَاعِدًا عِنْدَ قَبْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَبْكِي ، فَقَالَ : مَا يُبْكِيكَ ؟ قَالَ : يُبْكِينِي شَيْءٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ، سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ:إِنَّ يَسِيرَ الرِّيَاءِ شِرْكٌ ، وَإِنَّ مَنْ عَادَى ِللهِ وَلِيًّا ، فَقَدْ بَارَزَ اللهَ بِالْمُحَارَبَةِ ، إِنَّ اللهَ يُحِبُّ الأَبْرَارَ الأَتْقِيَاءَ الأَخْفِيَاءَ ، الَّذِينَ إِذَا غَابُوا لَمْ يُفْتَقَدُوا ، وَإِنْ حَضَرُوا لَمْ يُدْعَوْا وَلَمْ يُعْرَفُوا ، قُلُوبُهُمْ مَصَابِيحُ الْهُدَى ، يَخْرُجُونَ مِنْ كُلِّ غَبْرَاءَ مُظْلِمَةٍ.
أخرجه ابن ماجة (3989) .

நபி ஸல் அவர்களின் வஃபாத்திற்கு பின்னர் ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய சென்றார்கள்.

அங்கு ஹழ்ரத் முஆவியா ரலி அவர்கள் கப்ருக்கு அருகே அமர்ந்து அழுதுகொண்டிருக்க கண்டார்கள்.

ஏன் அழுகிறீர்?என உமர் ரலி அவர்கள் கேட்டபோது-

நபி ஸல் அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்
முகஸ்துதியில் மிக இலேசானதும் இணைவைப்பில் கொண்டு சேர்த்து விடும்.
இறை நேசரை யார் நோவினை செய்வாரோ அவருடன் அல்லாஹ் போர் பிரகடனம் செய்கிறான்.

அல்லாஹுத்தஆலா நல்லோர்களை,இறையச்சமுள்ளவர்களை,அறி  முகமில்லாதவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.

யார் அவர்கள்?அவர்கள் ஊரில் இல்லாவிட்டால் மக்கள் தேட மாட்டார்கள்.

ஒரு சபையில் அவர்கள் இருந்தால் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.

அவர்களின் உள்ளங்கள் நேர்வழியின் விளக்குகள்.என்றார்கள்.

ஒரு நபி அடையாளம் காணப்படவேண்டும்,ஒரு இறைநேசர் அடையாளம் காணப்பட வேண்டிய அவசியமில்லை.அதனால் தனக்கே தெரியாத எத்தனையோ இறைநேசர்கள் உண்டு.

இதன் அடிப்படையில் அல்லாஹ்வினால் இந்த உம்மத்துக்கு அடையாளம் காட்டப்பட்ட மாபெரும் இறைநேசர்-இறைநேசர்களின் தலைவராக குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் விளங்கினார்கள்.

யார் அந்த மகான்?

وكان عبد القادر رحمه الله تعالى حسني نسبة إلى الحسن بن علي رضي الله تعالى عنهما ونشأ في منطقة جيلان هذه وولد سنة 471
 قرية تاريخية قرب المدائن 40 كيلو متر جنوب بغداد

ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரஹ் அவர்கள்  இமாம் ஹஸன் ரலி அவர்களின் வம்சத்தில் வருகிறார்கள்.

ஜீலான் எனும் நகரத்தில் ஹிஜ்ரி 471 ல் பிறக்கிறார்கள்.

இது பக்தாத் நகரத்திலிருந்து 40 கிலோமீட்டரில் உள்ளது.

 لما صار صبيا وقارب البلوغ أراد أن يرتحل إلى بغداد من أجل طلب العلم وبغداد آن ذاك عاصمة الدنيا
لما وصل إلى بغداد عاش في بغداد 73 سبحان الله العظيم هو قد عاش 90 سنة ولد سنة 470 أو 471 وتوفي سنة 561 قرابة 90 سنة لكن مع ذلك عاش في بغداد 73 سنة مدة طويلة وطويلة جدا 

தங்களின் சிறு வயதில் கல்வியை தேடி பக்தாதுக்கு பயணம் செய்தார்கள் 

 பக்தாது நகரம் அன்று உலகின் தலைநகரமாக விளங்கியது.

 73 ஆண்டு காலம் பக்தாதிலேயே வாழ்ந்து ஹிஜ்ரி 561 ல் தங்களின் 90 வது வயதில் அங்கேயே மரணித்தார்கள்.


كان العهد الذي قدم فيه الشيخ الجيلاني إلى بغداد تسوده الفوضى التي عمت كافة أنحاء الدولة العباسية، حيث كان الصليبيون يهاجمون ثغور الشام، وقد تمكنوا من الاستيلاء على أنطاكية وبيت المقدس وقتلوا فيهما خلقا كثيرا من المسلمين ونهبوا أموالاً كثيرة

அவர்கள் பக்தாதுக்கு வந்த சமயம் அப்பாஸிய கிலாபத் வீழ்ச்சியடைந்து சிலுவை தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் சிரியா முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட காலம்.

பைத்துல் முகத்தஸ் கிருஸ்துவர்களின் பிடியில் மோசமான விளைவுக ளை சந்தித்தது .
ஒரு பெரும் கூட்டம் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதுடன் அவர்களின் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் அவர்களின் தாவா புரட்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

كان الشيخ عبد القادر يطلب العلم في بغداد، وتفقه على مجموعة من شيوخ الحنابلة ومن بينهم الشيخ أبوسعيد المُخَرِمي، فبرع في المذهب والخلاف والأصول وقرأ الأدب وسمع الحديث على كبار المحدثين. وقد أمضى ثلاثين عاما يدرس فيها علوم الشريعة أصولها وفروعها.

பக்தாதில் கல்விப்புரட்சி செய்தார்கள்.ஹன்பலி மத்ஹப் இமாம்களிடம் மார்க்கச்சட்டங்களை கற்றார்கள்.

சுமார் முப்பது வருடம் மார்க்கக் கல்வியை கற்றார்கள்.

عقد الشيخ أبو سعيد المُخَرِمي لتلميذه عبد القادر مجالس الوعظ في مدرسته بباب الأزج في بداية 521 هـ، فصار يعظ فيها ثلاثة أيام من كل أسبوع، بكرة الأحد وبكرة الجمعة وعشية الثلاثاء. واستطاع الشيخ عبد القادر بالموعظة الحسنة أن يرد كثيراً من الحكام الظالمين عن ظلمهم وأن يرد كثيراً من الضالين عن ضلالتهم، حيث كان الوزراء والأمراء والأعيان يحضرون مجالسه، وكانت عامة الناس أشد تأثراً بوعظه، فقد تاب على يديه أكثر من مائة ألف من قطاع الطرق وأهل الشقاوة، وأسلم على يديه ما يزيد على خمسة الآف من اليهود والمسيحيين. وبحسب بعض المؤرخين، فإن الجيلاني قد تأثر بفكر الغزالي حتى أنه ألف كتابه "الغنية" على نمط كتاب "إحياء علوم الدين

குத்புல் அக்தாப் ரஹ் அவர்களின் உஸ்தாத் அபூ ஸயீத் ரஹ் அவர்கள் தங்களின் மாணவரான ஜீலானி ரஹ் அவர்கள் மக்களுக்கு மார்க்க உபதேசம் செய்வதற்காக ஒரு இடத்தை ஒதுக்கினார்கள்.

வாரத்தில் மூன்று தினங்கள் ஞாயிறு,வெள்ளி,புதன் ஆகிய தினங்கள் உபதேசம் செய்வார்கள்.

அவர்களின் அறிவுரைகளை கேட்டு எத்தனையோ அநியாயக்காரர்கள் திருந்தியுள்ளனர்,வழிகெட்டவர்கள் நேர்வழி பெற்றுள்ளனர்.

ஆட்சியாளர்களும்,அமைச்சர்களும் அவர்களின் உபதேசத்தை கேட்க அங்கு வருவார்கள்.

பொது மக்களிடம் ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தினார்கள்.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தியுள்ளனர்.

ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட யூத,மற்றும் கிறுஸ்துவர்கள் அவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.

அல்லாமா ஜீலானி ரஹ் அவர்கள் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களின் சிந்தனையால் கவரப்பட்டு,இஹ்யா உலூமுத்தீன் நூலை தழுவி குன்யா எனும் நூலை எழுதியதாக சில வரலாற்றாசியர்கள் குறிப்பிடுகின்றர்.

وكان عبد القادر الجيلاني بقي إلى 35 سنة لم يتزوج سبحان الله إلى 35 سنة ما تزوج ما عنده مال ليتزوج من أين فبعد 35 يقول رزقني الله سبحانه وتعالى بأربعة نسوة
 ورزقه الله تعالى بتسعة وأربعين ولدا ما بين ذكر وأنثى لكن مات منهم أربعة عشرة ذكرا وأحدى وعشرون أنثى

வறுமையின் காரணமாக 35 வயதுவரை திருமணம் செய்யவில்லை.
35 வயதுக்கு பின்னர் அல்லாஹ் எனக்கு நான்கு மனைவியையும் 49 பிள்ளைகளையும் கொடுத்ததாக ஹழ்ரத் அப்துகாதிர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال عنه الإمام الذهبي رحمه الله : الشيخ الإمام العالم الزاهد العارف القدوة شيخ الإسلام علم الأولياء .
" سير أعلام النبلاء " ( 20 / 439
.
அவர்களை பற்றி இமாம் ஸஹபி ரஹ் அவர்கள்
அவர் பெரிய ஷைக்,இமாம்,ஆலிம்,பற்றற்றவர்.ஷைகுல் இஸ்லாம்.


قال الإمام ابن حجر العسقلاني : كان الشيخ عبد القادر متمسكاً بقوانين الشريعة, يدعو إليها وينفر عن مخالفتها

அல்லாமா இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுகிரார்கள்.

ஆண்மீகத்தில் உச்சத்தை அடைந்தபோதிலும் ஷரீஅத்தின் நெறியிலிருந்து தவறாதவர்கள்.

ஷரீஅத்திற்கு மாற்றம் செய்பவர்களை கடுமையாக வெறுத்தார்கள்.

அவர்களின் உபதேசத்தில் ஒன்று:

كان الشيخ عبد القادر يقول : الخلق حجابك عن نفسك ، ونفسك حجابك عن ربك

படைப்பினங்கள் உன் நப்ஸுக்கு திரயிடும்.உன் நப்ஸ் உன் ரப்பை திரையிடும்.அதாவது உன் ரப்பை நீ அறிய விடாமல் தடை செய்யும்.

عاش الشيخ عبد القادر تسعين سنة وانتقل إلى الله في عاشر ربيع الآخر سنة إحدى وستين وخمس مائة وشيعه خلق لا يحصون ، ودفن بمدرسته -رحمه الله تعالى.

தங்களின் 90 வது வயதில்ஹிஜ்ரி 561  ரபீஉல் ஆகிர் பிறை 10 வஃபாத்தானார்கள்.அவர்களின் மத்ரஸாவில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

இறுதியாக:

இறைநேசர்களாக வாழுங்கள்! அல்லது 

இறைநேசர்களுடன் வாழுங்கள்.