அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஆரோக்கியமான வாழ்வே கிடைப்பதற்கரிய மாபெரும்
பொக்கிஷமாகும்.ஆனால் மனிதன் இதைப்பற்றிய தெளிவான விழிப்புணர்வுடன்
நடந்துகொள்வதில்லை.
பொதுவாக அல்லாஹ் நமக்கு அருளிய எந்த நிஃமத்தையும் நாம் தக்கவைத்
துக்கொள்வதற்கும்,அவன் வழங்கிய அருளே அதாபாக மாறிவிடாமல் பாதுகா
த்துக்கொள்வதற்கும் மூன்று நிபந்தனைகள்
கவனிக்கப்படவேண்டும்.
முதலாவது:அதை நிஃமத் என்று விளங்குவது
இரண்டாவது:அதற்காக நன்றி செலுத்துவது
மூன்றாவது:அதை பாதுகாப்பது.
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ
اللَّهُ عَنْهُمَا قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ
الصِّحَّةُ وَالْفَرَاغُ
بخارى
ஆரோக்கியமும்,ஓய்வும் மனிதன் பெற்றுள்ள பெரும் அருளாகும்.ஆனால்
மக்களில் அதிகமானோர் அதை விளங்கிக்கொள்வதில்லை என்று நபி ஸல் அவர்கள்
கூறுகிறார்கள்.(புகாரி)
ஆரோக்கியமான வாழ்வை அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.அவன்
அதை தருகிறபோது நன்றி செலுத்தவேண்டும்.நோயை அல்லாஹ்விடம் கேட்கக் கூடாது.ஆனால் நோயை அவன்
தருகிறபோது பொருத்து க்கொள்ளவேண்டும்.இதுவே
ஒரு முஸ்லிமின் நிலைபாடாகும்.
நோயும்
நன்மையே
அனைத்திலும் உனக்கு நன்மை உண்டு என மிக ஆளமான தூரநோக்குப்பார்வையுடன் பெருமானார் ஸல் அவர்கள் கூறிய வரிகள்
இங்கே கூர்ந்து கவனிக்கப்படவேண்டும்.
عن أبي هريرة - رضى الله عنه -
قال: "دخل أعرابي على رسول الله - صلى الله عليه وسلم - فقال له رسول الله -
صلى الله عليه وسلم -: هل أخذتك أم ملدم قط؟ قال وما أم ملدم؟ قال: حر يكون بين
الجلد واللحم، قال: ما وجدت هذا قط. قال: فهل أخذك هذا الصداع قط؟ قال: وما
هذا الصداع؟ قال: عرق يضرب على الإنسان في رأسه. قال: ما وجدت هذا قط. فلما ولى
قال النبي- صلى الله عليه وسلم -: من أحب أن ينظر إلى رجل من أهل النار فلينظر إلى
هذا" رواه أحمد، وصححه الألباني
ஒரு கிராமவாசி நபி ஸல் அவர்களிடம் வருகிறார்.அவரிடம் நபி ஸல் அவர்கள்
உனக்கு காய்ச்சல் வந்திருக்கிறதா?என்று வினவினார்கள்.அதற்கு அவர்
காய்ச்சலா?அப்படியென்றால் என்ன?என்று ஆச்சரியமாக கேட்டார். தோலுக்கும் சதைக்கும் இடையில் ஏற்படும் சூடு
என்று நபியவர்கள் பதில் கூறினார்கள்.
உனக்கு தலைவலி வந்திருக்கிறதா?என மீண்டும் கேட்டார்கள்.அதற்கும்
அக்கிராமவாசி தலைவலியா?அப்படியென்றால் என்ன?என கேட்டார்.அப்போது நபி ஸல் அவர்கள்
தலைவலி என்றால் தலையில் உள்ள நரம்பின் மூலம் ஏற்படும் ஒருவகையான வேதனை என்றார்கள்.
அப்படி எந்த வலியையும் நான் உணர்ந்ததில்லை என்றார்.அக்கிராமவாசி
சென்றபின்னர்,நபி சல் அவர்கள் தம் தோழர்களிடம்-நரகவாசியை பார்க்க விரும்பினால்
இவரை பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.
காய்ச்சலும்,தலைவலியும் ஒரு முஃமினின் அடையாளமாகும்.அது சுவனவாதிகளின் அடையாளம் என்றும் நமக்கு தெளிவுபடுத்தினார்கள்.
فيُبْتَلى الرجل على حَسب دينه،
فإن كان دينه صُلبًا، اشتدَّ بلاؤه، وإن كان في دينه رِقَّة، ابْتُلي على حسب دينه.
رواه الترمذي (2893)
ஒவ்வொரு மனிதனும் அவன் தீனை கவனித்து சோதிக்கப்படுவான்.அவன் தீனில்
அதிகமான பிடிப்புள்ளவனாக இருந்தால் கடுமையாக சோதிக்கப்படு வான்.அவன் தீனில் பலஹீனமாக இருந்தால் குறைவாக
சோதிக்கப்படுவான் என்று நபி சல் அவர்கள் கூறிதாக ஸஃது இப்னு அபீவகாஸ் ரலி அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
இந்த பின்னனியில்தால் நபிமார்களும் நல்லோர்களும் உலகில் மற்ற
யாவரைவிடவும் அதிகமான சோதனைகளை சந்தித்தார்கள்.
عن
جابر رضي الله عنه قال استأذنت الحمى على رسول الله صلى الله عليه وسلم فقال من
هذه قالت أم ملدم فأمر بها إلى أهل قباء فلقوا منها ما يعلم الله فأتوه فشكوا ذلك
إليه فقال ما شئتم إن شئتم دعوت الله فكشفها عنكم وإن شئتم أن تكون لكم طهورا
قالوا أوتفعله ؟ قال نعم قالوا فدعها .رواه أحمد ورواته رواة الصحيح وأبو يعلى
وابن حبان في صحيحه " صحيح الترغيب والترهيب
"
மதீனாவில் தங்கியிருந்த காய்ச்சல் நபி
ஸல் அவர்களிடம் வந்து- தான் மதீனாவை விட்டும் வெளியேறப்போவதாகவும்,எங்கு
செல்லவேண்டும்?என்று அனுமதி கேட்கிறது.
குபாவாசிகளிடம் செல் என்று அதற்கு
உத்தரவிட்டார்கள்.சிலநாட்கள் குபாவில் தங்கியிருந்தது.அப்போது குபாவாசிகள் நபி சல்
அவர்களிடம் வந்து அல்லாஹ்வின்
தூதரே!எங்கள் ஊர்வாசிகள் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.என்று
முறையிட்டனர்.
அதற்கு நபி ஸல் அவர்கள்-நீங்கள்
விரும்பினால் அல்லாஹ்விடம் துஆச்செய்கிறேன்.அல்லாஹ் உங்களை விட்டும் அந்த நோயை தூரப்படுத்துவான். அல்லது நீங்கள் பொருத்துக்கொள்ளுங்கள்.அதன்
மூலம் அல்லாஹ் உங்களை பாவங்களை விட்டும் சுத்தமாக்குவான் எப்படி செய்கிறீர்கள்?என
வினவினார்கள்.
அதற்கு பதிலளித்த குபாவாசிகள்-நாங்கள்
பொருத்துக்கொள்கிறோம்.என்று கூறினார்கள்.
எந்த நோயாளியை நலம்
விசாரிக்கச்செல்லும்போதும் இன்ஷாஅல்லாஹ் தஹூர் (அதாவது அல்லாஹ் உங்களை பாவங்களை
விட்டும் சுத்தப்படுத்து வான்) என்று சொல்வது நபியின் வழக்கமாக இருந்தது.
قال أبو هريرة: "ما مِن
وَجَعٍ يُصيبني أحبَّ إليّ من الْحُمَّى؛ إنَّها تدخلُ في كلِّ مَفْصِل من ابن
آدمَ، وإنَّ الله ليُعْطِي كلَّ مَفْصِل قِسْطًا من الأجْر"؛ رواه ابن أبي
شَيْبة (10922)، والبخاري في الأدب المفْرَد (503) بإسناد صحيح.
காய்ச்சல் எனக்கு பிரியமானது.காரணம்
அது மனிதனின் ஒவ்வொரு எழும்பு இணைப்புகளிலும் நுழைகிறது.அதற்காக அல்லாஹுத்தஆலா
ஒவ்வொரு மூட்டிற்கும் ஒருபகுதி நன்மை வழங்குகிறான் என்று அபூஹுரைரா ரலி அவர்கள்
கூறுகிறார்கள்.
எனவே நோய் அல்லாஹ்வின் வெறுப்பின்
அடையாளமல்ல.அவன் விரும்பிய பலர்களுக்கு நோயை கொடுத்திருக்கிறான்.
لما قطعت رجل عروة بن الزبير
-رحمه الله-، ومات ولده في نفس اليوم، قال: "اللهم لك الحمد أعطيتني من الولد
سبعة فأخذت واحدًا وأبقيت ستة، وأعطيتني أربعة أطراف فأخذت واحدة وأبقيت لي ثلاثة ".
ஹழ்ரத் உர்வத் இப்னு ஸுபைர் ரஹ்
அவர்களின் பிந்தியகாலத்தில் அவர்களின்
ஒரு கால் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.கால் துண்டிக்கப்பட்ட அன்றே அவர்களின் ஒரு
மகனும் இறந்துபோய்விட்டார்.அந்த சோதையான கட்டத்தில் உர்வா ரஹ் அவர்கள் கேட்ட துஆ:
யா அல்லாஹ்!எனக்கு ஏழு குழந்தைகளை கொடுத்து
ஒன்றை மட்டும் எடுத்து கொண்டு, மீத ஆறு குழந்தைகளை ஹயாத்தாக தந்துள்ளாய். மேலும்
எனக்கு இருகைகளையும் இரு கால்களையும் தந்து,அதில் ஒரு காலை மட்டும்
எடுத்துக்கொண்டு மீதியை தந்திருக்கிற உனக்கே புகழ் அனைத்தும் என்று
புகழ்ந்தார்களாம்.
நோயில் நன்மைகள் இருந்தாலும் ஆரோக்கியத்தை
அல்லாஹ்விடம் கேட்பதும் ஆரோக்கியமுடன் வாழும் வழிமுறைகளைகளை
தேர்ந்தெடுத்துக்கொள்வதும் ஒரு
முஸ்லிமின் பிரதான கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது.
நோயிலிருந்து ஒரு முஸ்லிம்
தன்னை தற்காத்துக்கொள்வதற்கு மூன்று வழிமுறைகளை இஸ்லாம் கூறுகிறது.
1.மருத்துவம் செய்வது.2.நோய் வராமல்
எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது.
3.ஓதிப்பார்ப்பதின் மூலம் ஷிபாவை தேடுவது.
روى الإمام أحمد، وابن ماجه،
والترمذي، عن أبي خزامةَ قال: قلت: يا رسول الله، أرأيتَ رُقى نسترقيها، ودواءً
نتداوى به، وتقاة نتقيها، فهل تَرُدُّ مِن قَدَرِ الله شيئًا؟ قال: ((هي مِن
قَدَرِ الله
நாங்கள் மருத்துவம்
செய்துகொள்வதோ அல்லது ஓதிப்பார்ப்பதோ,அல்லது எச்சரிக்கையாக இருப்பதோ
அல்லாஹ்வின் விதியை மாற்றிவிடுமா?என நபி ஸல் அவர்களிடம்
கேட்கப்பட்டது.அதற்கு நபி ஸல் அவர்கள்- நீங்கள் கூறிய இம்மூன்றும் அல்லாஹ்வின்
விதிதான் (அதாவது இதன் மூலம் தான் உங்கள் நோய் குணமாகும் என்று அல்லாஹ்வின் விதி
இருக்கும்) என்றார்கள்.
இம்மூன்று
வழிமுறைகளில் ஓதிப்பார்ப்பதின் மூலம் ஆரோக்கியத்தை நாடுவது முஸ்லிம்களின்
வாழ்விலிருந்து தூரமாகிவிட்டது.
ஓதிப்பார்ப்பது இஸ்லாத்தில் கூடுமா?பலன் தருமா?
يجيب الشيخ عبدالله صديق على هذا
فيقول: "إنَّ الله - سبحانه وتعالى - أنزل كتابَه لحِكمٍ؛ ومنها: إخراجُ
النَّاس من الظُّلمات إلى النُّور، ومنها بيانُ الشرائع والأحكامِ التي كلَّف الله
بها عبادَه، ومنها قراءَتُه في الصَّلاة، والتعبُّد بتلاوته، ومنها التداوي به؛
இதற்கு பதிலளித்த ஷைக் அப்துல்லாஹ் ரஹ் அவர்கள்-
அல்லாஹுத்தஆலா தன் வேதத்தை பல்வேறு நுட்பமான காரணங்களுக்காக
இறக்கிவைத்துள்ளான்.
இருளில் இருப்பவர்களுக்கு வழிகாட்டுவதற்கும்,மார்க்கச்சட்டங்களை
மக்களுக்கு தெளிவுபடுத்தவும்,தொழுகையில் ஓதுவதற்கும்,அதன் மூலம் நோயாளிகள்
மருத்துவம் செய்து கொள்வதற்கும் தான் இறக்கினான்.என்று கூறுகிறார்கள்
قال - تعالى -: {وَنُنَزِّلُ مِنَ
الْقُرْآَنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلاَ يَزِيدُ
الظَّالِمِينَ إِلاَّ خَسَارًا} [الإسراء: 82]
திருமறையை நாம் இறக்கியிருக்கிறோம்,அதில் ஈமான் கொண்டவர்களுக்கு
அருளும் ஆரோக்கியமும் உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான்.
நபி
ஸல் அவர்கள் நோயுற்றிருந்தபோது அவர்களுக்கு மற்றவர்கள் ஓதிப்பார்த்தது:
عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ
الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهَا قَالَتْ كَانَ إِذَا
اشْتَكَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقَاهُ جِبْرِيلُ
قَالَ بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ
حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ
صحيح مسلم
நபி ஸல் அவர்கள் நோயுற்றிருந்தபோது ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள்
நபிக்கு بِاسْمِ
اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا
حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ என்று ஓதிப்பார்த்தார்கள்
என்று ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
(கண்திருஷ்டியின் தீங்கை விட்டும்,பொறாமையின் தீங்கை விட்டும்,ஒவ்வொர் நோயைவிட்டும் அல்லாஹ்வின் பெயரால் உமக்கு
ஷிபாவை வேண்டுகிறேன்)
أَخْبَرَنِي عُرْوَةُ أَنَّ
عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَخْبَرَتْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اشْتَكَى نَفَثَ عَلَى نَفْسِهِ
بِالْمُعَوِّذَاتِ وَمَسَحَ عَنْهُ بِيَدِهِ
بخارى
நபி ஸல் அவர்கள் நோயுறும்போது குல் அஊது பிரப்பில் பலக் மற்றும் குல்
அஊது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை கொண்டு தாங்களே ஓதி ஊதி,தங்களின் கரத்தால்
உடலில் தடவிக்கொள்வார்கள். என்று ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி
ஸல் அவர்கள் நோயாளிகளை நலம் விசாரிக்கச்சென்றபோது நோயாளிகளுக்கு நாயகம்
ஓதிப்பார்த்தது:
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي فَقَالَ لِي أَلَا أَرْقِيكَ بِرُقْيَةٍ جَاءَنِي
بِهَا جِبْرَائِيلُ قُلْتُ بِأَبِي وَأُمِّي بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ
بِسْمِ اللَّهِ أَرْقِيكَ وَاللَّهُ يَشْفِيكَ مِنْ كُلِّ دَاءٍ فِيكَ
ابن ماجه
நபி ஸல் அவர்கள், நான் நோயுற்றிருந்தபோது நலம் விசாரிக்க வந்தார்கள். எனக்கு ஜிப்ரயீல் எதைக்கொண்டு ஓதிப்பார்த்தாரோ
அதைக்கொண்டு உனக்கு ஓதிப்பார்க்கட்டுமா?என்றபோது-அவசியம் ஓதுங்கள் என்று நான்
கூறினேன். அப்போது நபி ஸல் அவர்கள் بِسْمِ اللَّهِ
أَرْقِيكَ وَاللَّهُ يَشْفِيكَ مِنْ كُلِّ دَاءٍ فِيكَ என்று ஓதினார்கள்.என அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
(பொருள்:அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு உனக்கு நான்
ஓதிப்பார்க்கிறேன். அல்லாஹ் எல்லா நோயை
விட்டும் உமக்கு ஷிபாவை அளிப்பானாக)
عن عائشةَ بنتِ سعدٍ أنَّ أباها
قال: تشكَّيت بمكَّة شكوى شديدة، فجاءني النبيُّ - صلَّى الله عليه وسلَّم -
يعودني، قلت: يا نبيَّ الله، إنِّي أترك مالاً، وإنِّي لم أتركْ إلاَّ بنتًا
واحدة، فأوصي بثُلثي مالي، وأترك الثلث؟ فقال: ((لا))، قلت: فأوصي بالنِّصف، وأترك
النِّصف؟ قال: ((لا)) قلت: فأوصي بالثُّلث، وأترك الثُّلثَين؟ قال: ((الثلث،
والثلث كثير))، ثم وضع يدَه على جبهته، ثم مسح يدَه على وجهي وبطني، ثم قال:
((اللهمَّ اشف سعدًا، وأتممْ له هِجرتَه))؛ أخرجه البخاري في صحيحه
மக்காவில் கடும் நோயால் நான் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னை விசாரிக்க
நபி ஸல் அவர்கள் வந்தார்கள்.அல்லாஹ்வின் தூதரே! எனக்கு பொருள் நிறைய உண்டு.ஒரேஒரு
பெண்மகள் தான் உண்டு,எனவே என் பொருளில் மூன்றில் இரண்டு பகுதியை மார்க்கத்திற்கு
அளிக்கிறேன்.என்றபோது நபி ஸல் அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
என் சொத்தில் பாதியை தர்மம் செய்கிறேன்.என்றபோது அதற்கும் மறுத்து
விட்டார்கள்.
பின்னர், நான் மூன்றில் ஒரு பகுதியை தர்ம்ம் செய்கிறேன் என்றபோது –
மூன்றில் ஒரு பகுதியும் அதிகம் தான் என்று சொல்லி ஏற்றுக்கொண்டார்கள்.
பின்னர் நபி ஸல் அவர்கள் தங்களின் கரத்தை தன் நெற்றியில்
வைத்து,பின்னர் என் முகத்திலும்,வயிற்றிலும் தங்களின் முபாரக்கான கையை வைத்து யா
அல்லாஹ் !சஃதுக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக!
அவரின் ஹிஜ்ரத்தை பூர்த்தியாக்குவாயாக என்று ஓதினார்கள். என சஃது ரலி
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி
ஸல் அவர்கள் நோயாளிகளுக்கு ஓதிப்பார்க்கச்சொன்னார்கள்.
عن عثمان بن أبي العاص - رضي الله
عنه - أنَّه قال: أتاني رسول الله - صلَّى الله عليه وسلَّم - وبي وجعٌ قد كاد
يُهلكني، فقال: ((امسح بيمينك سبعَ مرَّات، وقل: أعوذ بعزَّة الله وقُدرتِه
وسُلطانه مِن شرِّ ما أجد))، قال: ففعلت فأذهبَ اللهُ ما كان بي، فلم أَزلْ آمرُ
به أهلي وغيرَهم؛ أخرجه الإمام مسلم في صحيحه
ஹழ்ரத் உஸ்மான் இப்னு அபுல் ஆஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் கடுமையான வேதனையால் அவதிப்பட்டபோது நபி ஸல் அவர்கள் என்னை
சந்திக்க வந்தார்கள்.
أعوذ بعزَّة
الله وقُدرتِه وسُلطانه مِن شرِّ ما أجد (அல்லாஹ்வின் கண்ணியத்தை கொண்டும்,அவனின் வல்லமையை கொண்டும்,அவனின்
ஆற்றலைக்
கொண்டும் நான் அனுபவிக்கும் வேதனையின் தீங்கை விட்டும் பாதுகாவல்
தேடுகிறேன்)என்று ஏழு தடவை ஓதி உன் வலது கையால் உன் உடலில் தடவிக்கொள் என்று எனக்கு
உபதேசம் செய்தார்கள்.
நானும் அவ்வாறு செய்தேன்.அல்லாஹ் என்னுடைய வலியை போக்கினான்.
அன்றுமுதல் என் குடும்பத்தினர்களுக்கும்,மற்றவர்களுக்கும் இதை
ஏவிக்கொண்டே இருந்தேன்.
عن ابن عبَّاس - رضي الله عنهما -
قال: قال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: ((ما مِن مُسلمٍ يعود مريضًا لم
يحضرْ أجلُه، فيقول - سبعَ مرَّات -: أسألُ الله العظيم، ربَّ العرش العظيم، أن
يَشفيَك - إلاَّ عُوفِي))؛ صحيح الجامع (5766).
எந்த ஒரு முஸ்லிம் ஒரு நோயாளியை சந்திக்கும்போது ஏழு தடவை
أسألُ الله العظيم،
ربَّ العرش العظيم، أن يَشفيَك( கண்ணியமான அர்ஷுடைய ரப்பான அல்லாஹ்விடம் உனக்கு ஷிபாவை
கேட்கிறேன்) என்று ஓதினால் அந்த நோயாளி ஆரோக்கியம் பெறுவார் என நபி ஸல் அவர்கள்
கூறினார்கள். என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபித்தோழர்களும்,நல்லோர்களும்
ஓதிப்பார்ப்பதை வலியுறுத்தி கூறியுள்ளனர்.
قال ابن كثير - رحمه الله -:
"وقد ورد أنَّ أمير المؤمنين عمر - رضي الله عنه - كان يُرقى ويحصَّن
بالفاتحة... وقد سمَّاها رسول الله - صلَّى الله عليه وسلَّم -: " بالرَّاقية
والشَّافية"؛ "تفسير القرآن العظيم، تفسير سورة الفاتحة".
உமர் ரலி அவர்கள் சூரதுல் பாத்திஹாவை கொண்டு ஓதிப்பார்ப்பார்கள்.
நபி ஸல் அவர்கள் அதற்கு ஷிபா தரக்கூடியது என்று பெயர் வைத்தார்கள்.
என இப்னு கஸீர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
والقرطبي في "الجامع لأحكام
القرآن" (9/316)، وغيرهم، وذكروا في تأييد رأيهم بأنَّ القرآن شفاءٌ من
الأمراض الجسمانيَّة؛ لأنَّ التبرك بقراءته يدفع كثيرًا من الأمراض.
குர்ஆனில் உடலியல் நோய்கள் அனைத்திற்கும் ஆரோக்கியம் உண்டு என்று அல்லாமா
குர்துபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
قال الأستاذ الدكتور يوسف
القرضاوي - حفظه الله - تحت عنوان: مِن أيِّ شيء تكون الرُّقية؟ ما نصُّه:
"أثبتتِ الأحاديث الصِّحاح: أنَّ الرُّقية مشروعةٌ من كلِّ الآلام والأمراض
التي تُصيب المسلم"؛ "موقف الإسلام من الإلهام والكشف والرؤى ومن
التمائم والكهانة والرُّقى" (ص: 167).
ஒரு முஸ்லிமை தாக்குகின்ற அனைத்துநோய்களுக்கும் ஓதிப்பார்ப்பது
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட்து என அல்லாமா யூஸுப் அல் கர்ளாவி ரஹ் அவர்கள்
கூறுகிறார்கள்.
روى الخطيب أبو بكر البغدادي -
رحمه الله - بإسناده قال: إنَّ الرماوي الحافظ الحُجَّة أبا بكر بن منصور كان إذا
اشتكى شيئًا، قال: هاتوا أصحاب الحديث، فإذا حضروا، قال: اقرؤوا عليَّ
الحديث"، قال الإمام النووي: "فهذا في الحديث، فالقرآن أولى"؛
تذكرة الحافظ (2/546)، وقد ذكره النووي في " التبيان في آداب حملة القرآن ".
அபூபக்ர் இப்னு மன்ஸூர் ரஹ் அவர்கள் நோயுறும்போது முஹத்திஸீன்க ளை அழைத்து எனக்கு ஹதீஸை படியுங்கள் என்று
கூறுவார்கள் என கதீபுல் பஃதாதி ரஹ் கூறுகிறார்கள்.
ஹதீஸுக்கே இவ்வளவு சிறப்பு இருக்குமானால் குர்ஆனுக்கு எவ்வளவு சிறப்பு
இருக்கும் என இமாம் நவவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
யா அல்லாஹ்!நோயில்லாத வாழ்வை தருவாயாக!
நோயுற்றவர்களுக்கு ஆரோக்கியத்தை தருவாயாக!
நோயில் பொருமையை தருவாயாக!
assalamu alaikkum miga arumai jazakallah.
ReplyDeleteassalamu alaikkum miga arumai jazakallah.
ReplyDeleteExcellent
ReplyDeleteassalamu alaikkum miga arumai arbutham nalla karuththu jazakallah.by salahuddeen yusufi.pudukai.
ReplyDelete