Wednesday 20 March 2013

அச்சம் தவிர்


அல்லாஹ்வின் அருட்கொடைகளில் மாபெரும் அருட்கொடையான ஆரோக்கியத்தைக்குறித்து கடந்தவாரம் பார்த்தோம்.

ஆரோக்கியத்தை விடவும் அவசியமான ஒரு பேருபகாரம் குறித்து இவ்வாரம் பார்ப்போம்.

அதுவே பயமற்ற அமைதியான வாழ்க்கை.

அரபியில் இதை அம்ன் الأمن என்றுச்சொல்வார்கள்.
அமைதியும், பாதுகாப்பும் இல்லாத வாழ்வில் எந்த நிஃமத்தும் பலன் தராது.   அதனால் தான் ஒவ்வொரு படைப்பும் தன்னை பாதுகாப்பதில்,தன் இருப்பிடத்தை பாதுகாப்பதில், தன்னைச்சார்ந்தவர்களை பாதுகாப்பதில் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறது.

இறைவன் படைப்பில் எறும்பு போன்ற ஊர்வணங்கள் தனக்கான இருப்பிடத்தை பூமியின் அடிபாகத்தில் பாதுகாப்புடன் அமைத்துக்கொள்கிறது.மனிதர்கள்,  மற்ற உயிரிணங்களை விட்டும் தன்னையும் தன் இனத்தையும் பாதுகாப்பதில் எறும்புக்கு அதிகமாக எச்சரிக்கை உணர்வு உண்டு என அல்குர்ஆன் கூறுகிற  வசனத்தை இங்கு சிந்திக்கவேண்டும்.

பறவைகள் தனக்கான கூடுகளை யாருடைய தீங்குகளிலிருந்து தன்னை பாதுகாக்கவே மரத்தின் உச்சியில் கட்டுகிறது.

விலங்கினங்கள் மனிதநடமாட்டம் இல்லாத காடுகளை தனக்கான பாதுகாப்
புள்ள வசிப்பிடமாக தேர்வு செய்கிறது.
அந்த அடிப்படையில் மனிதனும் தனக்கான பாதுகாப்பில் அதிக அக்கரை எடுத்துக்கொள்கிறான்.

ஒருநாட்டின் பொருளாதாரத்தில் அதிக பகுதி பாதுகாப்பிற்காகவே செலவிடப்படுகிறது.எனவே பயமின்றி வாழ்வது பசியுடன் வாழ்வதை விடவும் அவசியமானதாகும்.

نعمة الأمن التي كانت أولَ دعوةٍ لأبينا الخليل إبراهيم عليه الصلاة والسلام ، حينما قال: (رَبِّ اجْعَلْ هَـَذَا بَلَداً آمِناً وارزق أهله من الثمرات) .. فقدّم إبراهيم نعمة الأمن ، على نعمة الطعام والغذاء ، لعظمها وخطر زوالها . و والله وتالله إن أشهى المأكولات ، وأطيبَ الثمرات ، لا تُستساغ مع ذهابِ الأمن ونزولِ الخوف

நபி இப்ராஹீம் அலை அவர்கள் தன் குடும்பத்தை விவசாயம் இல்லாத பாலைவனபூமியில் விட்டுவிட்டு தன் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக அல்லாஹ்விடம்  கேட்ட துஆ-

ரப்பே!இந்த ஊரை அச்சமில்லாத ஊராக ஆக்கிவைப்பாயாக!இந்த ஊர் மக்களுக்கு உணவளிப்பாயாக.

உணவை விடவும் அமைதியை முன்னிலைப்படுத்தி கேட்டதற்கான காரணத்  தை விளக்கும் முபஸ்ஸிரீன்கள்,
அச்சமும், ஆபத்தும் சூழ்ந்திருக்கும்போது ஆசையான உணவுகள் இருந்தாலும் அதை அனுபவிக்க முடியாது.என்று கூறுகிறார்கள்.


ونعمة الأمن أعظم من نعمة الصحة. قال الرازي رحمه الله: "سئل بعض العلماء: الأمن أفضل أم الصحة؟ فقال: الأمن أفضل، والدليل عليه أن شاة لو انكسرت رجلها فإنها تصح بعد زمان، ثم إنها تقبل على الرعي والأكل. ولو أنها ربطت في موضع وربط بالقرب منها ذئب فإنها تمسك عن العلف ولا تتناوله إلى أن تموت، وذلك يدل على أن الضرر الحاصل من الخوف أشد من الضرر الحاصل من ألم الجَسَد

உடல் ஆரோக்கியத்தை விடவும் அச்சமில்லாத வாழ்க்கை மிகப்பெரும் பாக்கியம் என்று இமாம் ராஸி ரஹ் அவர்கள் தங்களின் தப்ஸீரில் ஒரு செய்தியை கூறுகிறார்கள்.

அச்சமற்ற வாழ்வா?ஆரோக்கியமா?எது சிறந்தது?என சில அறிஞர்களிடம் கேட்கப்பட்டபோது-அச்சமற்ற வாழ்வே அனைத்தை விடவும் சிறந்தது,எப்படி என்றால்,ஒரு ஆடு கால் ஒடிந்து வேதனையான நிலையிலும் அது தனக்கான ரிஸ்கை தேடி மேயசென்றுவிடும்.

அதே நேரம் ஒரு ஆரோக்கியமான ஆட்டை கட்டிப்போட்டு அதன் பக்கத்தில் அதற்கு தேவையான உணவையும் வைத்துவிட்டு, ஒரு ஓநாயை விட்டுப்பாருங்கள்.உயிர் போகும்வரை அந்த உணவை அது திரும்பியும் பார்க்காது.காரணம் ஓநாயின் மீது அதுகொண்டிருக்கும் பயமே காரணம்.

أن النبي صلى الله عليه وسلم لما خرج إلى الحديبية كان معه خمسمائة وألف من أصحابه، فلمَّا انعقد الصُّلح وكان من بنوده: وقف الحرب عشر سنوات يأمن فيها الناس، دخل كثير منهم في دين الله، فبعد عامين وبضعة أشهر خرج مع النبي صلى الله عليه وسلم لفتح مكة عشرة آلاف من المسلمين.

நபி ஸல் அவர்கள் 1500 ஸஹாபாக்களுடன் உம்ராச்செய்யும் எண்ணத்துடன் மக்கா நோக்கி வந்தபோது ஹுதைபிய்யா எனும் இடத்தில் மக்கத்து காபிர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

அப்போது தான் வரலாற்று சிறப்புமிக்க அந்த அமைதி உடன்படிக்கை நடைபெற்றது.

அந்த அமைதி உடன்பாட்டில் எழுதப்பட்ட அனைத்தும் முஸ்லிம்களுக்கு பாதகமாக இருந்தாலும் நபி ஸல் அவர்கள் அதை ஏற்று ஒப்புக்கொண்டார்கள்.

இந்த ஒப்பந்தம் பத்தாண்டுக்கான ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தத்தை அல்லாஹ் மகத்தான வெற்றி என்று கூறுகிறான்.காரணம் அதன் மூலம் அமைதி நிலவியது.அதுவே மக்கள் இஸ்லாத்தின் பக்கம் கூட்டம் கூட்டமாக வருவதற்கு காரணமானது.

பக்கத்து நாடுகளுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்புக்கொடுத்து கடிதம் எழுதவும் துணை செய்தது.
மக்களுக்கு இஸ்லாத்தை பற்றிய பாதுகாப்பு நம்பிக்கை வந்தபோது கூட்டம் கூட்டமாக முஸ்லிமானார்கள்.

இரண்டே ஆண்டுகளில் மக்காவாசிகள் அந்த ஒப்பந்தத்தை முறித்தபோது நபி ஸல் அவர்கள் பத்தாயிரம் பேர்களுடன் மக்காவின் மீது படையெடுத்தார்கள்.

1500 பேர்கள் இருந்த முஸ்லிம்கள் இரண்டு ஆண்டுகளில் பத்தாயிரமாக மாறியது இஸ்லாத்தை பற்றிய அச்சமற்ற நம்பிக்கையே காரணமாகும்.

மக்காவை வெற்றி கொண்ட ஸல் அவர்களின் வரலாற்றை உலகம் வியந்து போனது.நீங்கள் சப்தமிட்டுக்கொண்டு மக்காவில் நுழையக்கூடாது,மேடான பகுதி வழியாக உள்ளே நுழையக்கூடாது.காரணம் இதுவெல்லாம் அம்மக்களை அச்சப்படுத்திவிடும் என்றார்கள்.மேலும்

فقال: «من دخَل دارَ أبي سفيان فهو آمن، ومن ألقَى السّلاحَ فهو آمن، ومن دخل المسجدَ فهو آمن» رواه مسلم.

அபூஸுப்யான் வீட்டில் நுழைந்தவர் பாதுகாப்பு பெறுவார்.
ஆயுதங்களை கேழே போட்டவர் பாதுகாப்பு பெறுவார்
மஸ்ஜித் ஹராமில் நுழைந்தவர் பாதுகாப்பு பெறுவார் என்று அம்மக்களின் அச்சத்தை போக்க இவ்வாறு அறிவிப்புச்செய்தார்கள்.

இதில் அபூ ஸுப்யான் அவர்களின் இல்லத்தை சேர்த்து சொன்னதற்கு காரணம்,நபி ஸல் அவர்களின் மிகப்பெரும் எதிரியான அபூஸுப்யானையே மன்னித்து விட்டார்கள் என்று மக்கள் தைரியமாக இருப்பார்கள் என்பதே காரணமாகும்.

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் தன் நிஃமத்துக்களை சொல்லும் இடங்களில் பாதுகாப்பையே முற்படுத்திக்கூறுகிறான்.

சபா நகர மக்களுக்கு அல்லாஹுத்தஆலா அவனின் அருட்கொடைகளை அள வின்றி அள்ளிவீசியிருந்தான்.திரும்பிய பக்கமெல்லாம் பசுமையான தோட்டங்கள்,நீரூற்றுக்கள் என்று பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் காட்சிகள்.  அதை விவரிக்கும்போது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருந்த அச்சமற்ற வாழ்வையே பிரதானமாக கூறுகிறான்.

سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ

அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்" (என்று கூறினோம்)

அவ்வாறு நபி யூஸுப் அலை அவர்களின் சகோதரர்கள் மிஸ்ர் தேசத்தில் யூஸுப் அலை அவர்களை சந்திக்க வந்தபோது -

فَلَمَّا دَخَلُواْ عَلَى يُوسُفَ آوَى إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ ادْخُلُواْ مِصْرَ إِن شَاء اللّهُ آمِنِينَ { (يوسف: 99).

(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் "அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்" என்றும் கூறினார்.


மக்காவிலிருந்து துறத்தப்பட்ட முஸ்லிம்கள் உம்ராவுக்கு வந்தபோது திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.அந்த நேரத்தில் அவர்களுக்கு அல்லாஹ் சொன்ன ஆறுதலான வார்த்தைகள்.

لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِن شَاء اللَّهُ آمِنِينَ

அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள்.என்று கூறுகிறான்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையாக பாதுகாப்பான வாழ்க்கை அவசியம்.
அதனால் தான் தனக்கோ,தன் குடும்பத்திற்கோ,தன் தீனுக்கோ பாதுகாப்பில்லா   ஊரிலிருந்து இடம்பெயர்ந்து ஹிஜ்ரத் செய்வதை மார்க்கம் அனுமதிக்கிறது.

مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ، مُعَافًى فِي جَسَدِهِ، عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا» رواه الترمذي.

அமைதியான இல்லம்,ஆரோக்கியமான உடல்,அன்றைய நாளை கழிக்க உணவு இம்மூன்றும் பெற்றவர் துன்யா அனைத்தையும் பெற்றவராவார் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
எந்த சூழலிலும் தொழுகையின் முறைகள் மாறாது.பயணத்தில் தொழுகை சுறுக்கப்படுமே தவிர அதன் தன்மைகளில் மாற்றம் ஏற்படாது.ஆனால் அச்சமான சூழலில் தொழுகையின் தன்மைகள் கூட மாறும்.

அச்சகாலங்களில் தொழுகும் முறை பற்றி


وَإِذَا كُنتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلاَةَ فَلْتَقُمْ طَآئِفَةٌ مِّنْهُم مَّعَكَ وَلْيَأْخُذُواْ أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُواْ فَلْيَكُونُواْ مِن وَرَآئِكُمْ وَلْتَأْتِ طَآئِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّواْ فَلْيُصَلُّواْ مَعَكَ وَلْيَأْخُذُواْ حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُواْ لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُم مَّيْلَةً وَاحِدَةً

(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்;. அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்;


فَإنْ خِفْتُمْ فَرِجَالاً أَوْ رُكْبَانًا

ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்;


انَ نبينا صلى الله عليه وسلم إِذَا رَأَى الْهِلَالَ قَالَ: «اللَّهُ أَكْبَرُ. اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ، رواه الترمذي.

நபி ஸல் அவர்கள் பிறையை காணும்போது ஓதும் துஆவில் அமைதியை கேட்டுள்ளார்கள்.
இஸ்லாம் அமைதியை நிலைநிறுத்த வந்த மார்க்கமாகும்.


وقال صلى الله عليه وسلم: «وَاللَّهِ لَا يُؤْمِنُ، وَاللَّهِ لَا يُؤْمِنُ، وَاللَّهِ لَا يُؤْمِنُ». قِيلَ: وَمَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الَّذِي لَا يَأْمَنُ جَارُهُ بَوَائقَه» رواه البخاري ومسلم.

தன் பக்கத்து வீட்டாருக்கு அமைதி தராது ஒருவன் உண்மையான முஃமினாக இருக்க முடியாது என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

لا يحل لمسلم أن يروع مسلماً

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை பயம் காட்ட வேண்டாம் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

لا يأخذن أحدكم متاع أخيه لاعباً ولا جاداً

விளையாட்டுக்காக அல்லது உண்மையாக உங்களில் ஒருவர் மற்றவரின் பொருளை எடுத்து பயம் காட்டவேண்டாம் என்றார்கள்.

குழப்பம் செய்து முஸ்லிம்களின் அமைதியை குழைப்பது கொலையை விட பெரும்பாவமாகும் என்று அல்குர்ஆன் கூறுகிறது.


حديث أنس بن مالك رضي الله عنه أنهم كانوا في المدينة فسمعوا صريخاً من قِبَلِ سلع، وسلع هو الجبل الذي في غرب المدينة، فكان رسول الله صلى الله عليه وسلم أشجع الناس فخرج إلى الصريخ يشتد، فمر بفرسٍ لأبي طلحة يسمى المندوب كان يبطأ فنزع قيده وعلاه فأجراه حتى عرق، ثم جاء باديةً فخذه يقول: "لن تراعوا لن تراعوا، إنها جارية لكعب بن مالك كانت ترعى غنماً على سلع فتردت عليها شاة فذبحتها" الحديث أصله في الصحيحين، وفيه روايات كثيرة جداً، وأخرجه البخاري


மதீனாவில் ஒரு நாள் கடும்சப்தம் கேட்டு மக்கள் பயத்தில் ஆழ்ந்தனர்.
அப்போது நபி ஸல் அவர்கள் அபூ தல்ஹா ரலி அவர்களின் குதிரை மீது ஏறி சப்தம் வந்த திசைநோக்கி புறப்பட்டார்கள்.
திரும்பி வந்த நபி ஸல் அவர்கள் மக்களே!பயப்படாதீர்கள்.ஸில்வு என்ற மலையில் கஃபின் அடிமைப்பெண் ஆடுமேய்த்துக்கொண்டிருக்கிறாள். அதில் ஒரு ஆட்டை அவள் அறுத்தபோது அந்த ஆடு போட்ட சப்தம் அது என்று கூறி மக்களின் அச்சத்தை போக்கினார்கள்.


وَقَالَ يَزِيدُ فِي حَدِيثِهِ حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ عَوْفٍ الشَّيْبَانِيُّ عَنْ رَجُلٍ قَالَ
كُنَّا قَدْ حَمَلْنَا لِأَبِي ذَرٍّ شَيْئًا نُرِيدُ أَنْ نُعْطِيَهُ إِيَّاهُ فَأَتَيْنَا الرَّبَذَةَ فَسَأَلْنَا عَنْهُ فَلَمْ نَجِدْهُ قِيلَ اسْتَأْذَنَ فِي الْحَجِّ فَأُذِنَ لَهُ فَأَتَيْنَاهُ بِالْبَلْدَةِ وَهِيَ مِنًى فَبَيْنَا نَحْنُ عِنْدَهُ إِذْ قِيلَ لَهُ إِنَّ عُثْمَانَ صَلَّى أَرْبَعًا فَاشْتَدَّ ذَلِكَ عَلَى أَبِي ذَرٍّ وَقَالَ قَوْلًا شَدِيدًا وَقَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى رَكْعَتَيْنِ وَصَلَّيْتُ مَعَ أَبِي بَكْرٍ وَعُمَرَ ثُمَّ قَامَ أَبُو ذَرٍّ فَصَلَّى أَرْبَعًا فَقِيلَ لَهُ عِبْتَ عَلَى أَمِيرِ الْمُؤْمِنِينَ شَيْئًا ثُمَّ صَنَعْتَ قَالَ الْخِلَافُ أَشَدُّ


 ரபதா எனும் இடத்தில் தங்கியிருந்த ஹழ்ரத் அபூதர் ரலி அவர்களை சந்தித்து,அவர்களுக்கு ஏதாவது அன்பளிப்பு கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் நாங்கள் சென்றோம்.ஆனால் அவர்கள் அங்கு இல்லை.விசாரித்தபோது அவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றிருப்பதாக கேள்விப்பட்டு நாங்களும் சென்றோம்.அவர்களை மினாவில் சந்தித்தோம்.
அப்போது அவர்களிடம்,கலிபா உஸ்மான் ரலி அவர்கள் மினாவில் நான்கு இரக்கஅத்துள்ள தொழுகைகளை கஸ்ர் செய்யாமல் நான்காகவே நிறைவேற்றினார்கள் என்று சொல்லப்பட்டது.அதைக்கேட்ட அபூதர் ரலி அவர்கள் கண்டிப்பான வார்த்தையுடன் -நான் நபி ஸல் அவர்களுக்கு பின் தொழுதுள்ளேன்.அபூபக்கர் ரலி அவர்களுக்கு பின்னால் தொழுதுள்ளேன்.உமர் ரலி அவர்களுக்கும் பின்னாலும் தொழுதுள்ளேன்.இவர்கள் அனைவர்களும் மினாவில் நான்கு இரக்கஅத் தொழுகையை இரண்டு இரக்கஅத்தாக கஸ்ர் செய்து தான் தொழுதார்கள். என்றார்கள்.
பின்பு தொழுகையின் நேரம் வந்ததும் அவர்கள் நான்கு இரக்கஅத் தொழுதார்கள்.இதை பார்த்த அவர்களின் தோழர்கள்,இது விஷயத்தில் கலீபா உஸ்மான் ரலி அவர்களை கண்டித்துவிட்டு தாங்களே அவ்வாறு தொழ காரணம் என்ன?வென கேட்கப்பட்டபோது- குழப்பத்தை உண்டாக்கும் கருத்து வேறுபாடு ஆபத்தானது (அதன் மூலம் மக்கள் அமைதி கெட்டுப்போகும்) என்றார்கள்.
காஸிம் இப்னு அவ்ப்.
அஹ்மது:20487
முஸ்லிம்களுக்கு மத்தியில் அமைதியை பாதுகாப்பதற்காக தங்களின் ஆட்சியை ஹழ்ரத் ஹஸன் ரலி அவர்கள் விட்டுக்கொடுத்தார்கள்.என்பது வரலாறு.
யா அல்லாஹ்!ஆரோக்கியமான வாழ்வத்தா!
அந்த ஆரோக்கியத்தை அனுபவிக்க அச்சமற்ற வாழ்வைத்தா!






6 comments:

  1. alhamdullillath mikaum arumai.jalahudeen yusufi-pudukai

    ReplyDelete
  2. அல்லாஹ் நம் அனைவரையும் சாந்தமாக வாழ வைப்பானாக

    ReplyDelete
  3. இப்படியொரு வலைப்பூ இருப்பதை மிக தாமதமாகத் தான் அறிந்து கொண்டேன் .,மிக பிரயோசனமான தகவல்களை உள்ளடக்கிய ஆழமான அறிவுப்போர்வமான கட்டுரைகள் .
    வாழ்த்துக்கள் உச்மாநிகளே! millath riyazi

    ReplyDelete