அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய வாழ்வில்
அனைத்து வசதிகளையும் பெற்றவர்கள் யாரும் இல்லை.
உடல் ரீதியாக சுகம் பெற்றவர்கள் உள்ள ரீதியாக
பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
பொருளாதார வளம் பெற்றவர்கள் உடல் ரீதியாக பலம்
இழந்திருப்பார்கள்.
எல்லா வகையான உணவு இருந்தும் சாப்பிடும்
பாக்கியம் பெற்றிருக்க மாட்டார்கள். உயர்ந்த வசதியுள்ளவர்கள் சுவையான உணவு வகைகளை
சாப்பிடும் நஸீபை பெறவில்லை.ஆரோக்கியமான உடல் அமைப்பை பெற்றிருந்தும் வறுமையின்
கோரப்பிடியால் ஆசைப்பட்டதை அனுபவிக்க முடியாதவர்கள் நிறைய உண்டு.
அனைத்தையும் அடைந்தால் அல்லாஹ்வை
மறந்துவிடுவான்.உலகில் அதிகமாக சுகம் பெற்றவர்கள் அல்லாஹ்வின் நினைவை விட்டும்
தங்களை தூரமாக்கிக்கொண்டனர்.
நீண்ட கால ஆரோக்கியமான வாழ்வை பெற்ற
பிர்அவ்ன்,விசாலாமான பொருளாதார வளம் பெற்ற காரூன்,உலகை தன் ஆட்சியில் வைத்திருந்த
நம்ரூத் இவர்கள் அனைவர்களும் அல்லாஹ்வை மறந்து,தங்களை இறைவனுக்கு நிகராக
எண்ணிக்கொண்டதற்கு காரணம் இவர்கள் அனுபவித்து வந்த சுகபோகங்களே!
وَلَوْ بَسَطَ اللَّهُ الرِّزْقَ
لِعِبَادِهِ لَبَغَوْا فِي الْأَرْضِ وَلَكِنْ يُنَزِّلُ بِقَدَرٍ مَا يَشَاءُ
அல்லாஹ் தன் அடியார்களுக்கு ரிஸ்கை
விசாலப்படுத்தினால் பூமியில் அவர்கள் அநியாயம் செய்கின்றனர்.என்று அல்லாஹ்
கூறுகிறான்.
எனக்குபின்னால் என் உம்மத்தை வறுமை
பிடித்துக்கொள்ளும் என்று நான் அஞ்சவில்லை,மாறாக செல்வமும்
வசதியும் அவர்களை பிடித்துக்கொள்ளும் என்றே நான் அஞ்சுகிறேன் என நபி ஸல் அவர்கள்
கூறினார்கள்.
சோதனைகள் மனிதனை பாவங்களிலிருந்து
சுத்தப்படுத்துவதற்கான மிகச்சிறந்த சாதனமாகும்.
சோதனைகளை சந்திக்காமல் சுவர்க்கம்
கிடைத்துவிடும் என்றா எண்ணிக்கொ ண்டீர்கள்?என
அல்லாஹ் தன் வான்மறையில் வினா தொடுக்கிறான்.
﴿ وَتِلْكَ الأيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ﴾ [آل عمران
சோதனையான நாட்களை மக்களுக்கிடையில் சுழற்றி
சுழற்றி நாம் வரவைப்போம் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
போராளிகளும் பொருமைசாளிகளும் சோதனைகள் மூலமே தேர்வு செய்யப்
படுகின்றனர்.
நாம் சந்திக்கும் எந்த சோதனைகளிலும் நம்
உள்ளத்தில் அழுத்தமாக பதிய வைக்கவேண்டிய விஷயம் என்னவெனில், நம்மை
எதிர்நோக்குகிற எந்த முஸீபத்தும் அல்லாஹ் நாடாமல் வருவதில்லை என்பதை உறுதியாக நம்ப
வேண்டும்.அதனால்தான் நாம் சந்திக்கும் கஷ்டங்களை மற்றவர்களிடம் சொல்லாமல் மறைப்பது
சுன்னத்தான வழிமுறையாகும்.
சோதனைகளில் மனிதன் மற்றவர்களிடம் புலம்பி
தீர்க்கும்போது,அல்லாஹ் தன் வானவர்களிடம் இந்த அடியானை
பாருங்கள்.இவன் எவ்வளவு பாவம் செய்கிறான்,நான் உங்களிடம்
இவனை பற்றி குறை கூறியிருக்கிறேனா? ஆனால்
இவன், நான் கொடுக்கும் சோதனை பற்றி என் அடியார்களிடம் முறையிடுகிறான்
என்று அல்லாஹ் கூறுவானாம்.
கஷ்டங்களை பிறரிடம் புலம்புவதால் எந்த பலனும்
கிடைக்கப்போவதில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
عن ابن عباس - رضي الله عنهما -
قال: قال رسول الله صلى الله عليه وسلم: (من أصيب بمصيبة بماله أو في نفسه فكتمها،
ولم يشكها إلى الناس كان حقا على الله أن يغفر له) رواه الطبراني
ஒருவர் தன் உடலில் அல்லது பொருளில் சோதிக்கப்பட்டு,அதை யாரிடமும்
முறையிடாமல் மறைத்துவிட்டால் அல்லாஹ் அவரின் பாவத்தை மன்னிப்பான் என்று நபி ஸல்
அவர்கள் கூறினார்கள்.
قال رسول الله صلى الله عليه
وسلم: (قال الله تعالى: إذا ابتليت عبدي المؤمن فلم يشكني إلى عواده أطلقته من أسارى،
ثم أبدلته لحما خيرا من لحمه، ودما خيرا من دمه، ثم يستأنف العمل). رواه الحاكم
முஃமினான என் அடியானை நான் சோதிக்கும்போது,அவன்
தன்னை நோய் விசாரிக்க வருபவரிடம் என்னைபற்றி முறையிடாமல் இருந்தால் அவரை
நரகத்திலிருந்து விடுதலை செய்கிறேன்,மேலும் அவரின் உடலில் புது இரத்தமும்,சதையும்
மாற்றப்படும்.அதன் மூலம் அவர் புத்துணர்ச்சியடன் இனிவரும் காலங்களில்
அமல்செய்வார்.என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணல் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
قال الأحنف بن قيس: أصبحت
يوماً أشتكي ضرسي، فقلت لعمي: ما نمت البارحة من وجع الضرس حتى قلتها ثلاثاً،
فقال: لقد أكثرت من ضرسك في ليلة واحدة، وقد ذهبت عيني هذه منذ ثلاثين سنة ما علم
بها أحد.
ஹழ்ரத் அஹ்னப் இப்னு கைஸ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு நாள் கடுமையான பல் வலியால் அவதிப்பட்டேன்.ஒரு இரவு பூராவும்
தூங்கவில்லை.இதைப்பற்றி என் சச்சாவிடம் மூன்று தடவை கூறினேன்.
அப்போது என் சச்சா அவர்கள் என்னிடம்,ஒரு இரவு பல் வலியை இத்தனை தடவை
என்னிடம் முறையிடுகிறாய்.ஆனால் எனக்கு பார்வை பறிபோய் முப்பது வருடம்
ஆகிவிட்டது.நான் யாரிடமும் சொன்னதில்லை.முறையிட்ட துமில்லை என்றார்கள்.
قال صلى الله عليه وسلم:
" في الصبر على ما تكره خير كثير
நீ எதிர்பார்த்ததற்கு மாற்றமாக ஒன்று நடந்தால், அதில் நீ
பொருமையாக இருந்தால் உனக்கு அதில் நிறைவான நன்மையுண்டு என்று நபி ஸல் அவர்கள்
கூறினார்கள்.
فقد وجد في رسالة عمر بن
الخطاب رضي الله عنه إلى أبي موسى الأشعري: عليك بالصبر واعلم أن الصبر صبران
أحدهما أفضل من الآخر، الصبر في المصيبات حسن وأفضل منه الصبر عما حرم الله تعالى.
உமர் ரலி அவர்கள் அபூ மூஸா ரலி அவர்களுக்கு
எழுதிய கடிதமொன்றில் பொருமையை
கடைபிடியுங்கள்.பொருமையில் இருவகை உண்டு.அதில் ஒன்று மற்றதை விட உயர்ந்தது.
1.சோதனைகளில் பொருமையை கடைபிடிப்பது.இது
நல்லது,2.இதை விடவும் சிறப்பான பொருமை என்னவென்றால் அல்லாஹ் ஹராமாக்கியதை
தவிர்ந்து கொள்வதில் பொருமை கொள்வது என்றார்கள்.
சோதனைகளால்
மனிதன் அடையும் நன்மைகள்:
.
பாவமன்னிப்பு
கிடைக்கும்.
قال رسول الله صلى الله عليه
وسلم: " إن العبد إذا أذنب ذنباً فأصابته شدة أو بلاء فالله أكرم من أن يعذبه
ثانياً
அல்லாஹ் ஒரு பாவத்திற்காக துன்யாவில்
சோதித்துவிட்டால் மீண்டும் அதற்காக மறுமையில் வேதனைசெய்யமாட்டான் என்று நபி ஸல்
அவர்கள் கூறுகிறார்கள்.
من وعك ليلة فصبر ورضي بها عن
الله عز وجل خرج من ذنوبه كيوم ولدته أمه). رواه ابن أبي الدنيا
ஓர் இரவு காய்ச்சலை பொருமையுடன் பொருந்திக்கொண்டால் அல்லாஹ் அவரின்
பாவங்களை மன்னிப்பான் என்று நபி சல் அவர்கள் கூறினார்கள்.
عن ابن عمر - رضي الله عنهما - أن
رسول الله صلى الله عليه وسلم قال: (من صدع راسه في سبيل الله فاحتسب غفر له ما
كان قبل ذلك من ذنب). رواه الطبراني والبزار بإسناد حسن
ஒருவருக்கு தலைவலி ஏற்பட்டு அதை நன்மையை நாடி பொருத்துக் கொண்டால்
அவரின் கடந்த கால பாவத்தை மன்னிப்பான்.
عن عائشة - رضي الله عنها - قالت:
قال رسول الله صلى الله عليه وسلم: (إذا كثرت ذنوب العبد ولم يكن له ما يكفرها
ابتلاه الله بالحزن ليكفرها عنه) رواه أحمد
ஒரு அடியானின் பாவங்கள் அதிகமாகிவிடும்போது,அதை அழிக்கும் நன்மைகள்
அவனிடம் இல்லாதபோது, அல்லாஹ் கவலைமூலம் அவனை சோதித்து அவனின் பாவத்தை அழிப்பான்
என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
عن أبي هريرة - رضي الله عنه -
قال: قال رسول الله صلى الله عليه وسلم (ما من عبد يمرض مرضا إلا يأمر الله الله
تعالى حافظه أن ما عمل من سيئة فلا يكتبها، وما عمل من حسنة أن يكتبها عشر حسنا،
وأن يكتب له من العمل الصالح كما كان يعمل وهو صحيح). رواه أبو يعلى
ஒரு அடியான் நோயாளியாகும்போது அல்லாஹுத்தஆலா அவனின் நன்மை தீமை
எழுதும் வானவர்களிடம் இப்படி கூறுகிறான்.
என் அடியான் செய்யும் தீமையை எழுதவேண்டாம்.நன்மையை பத்து மடங்காக
எழுதுங்கள்.மேலும் அவன் ஆரோக்கியமாக இருந்த காலங்களில் செய்த நல்லமலை இப்போதும்
எழுதுங்கள் என்று கட்டளையிடுகிறான்.என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
சொர்க்கம்
கிடைக்கும்.
أَمْ حَسِبْتُمْ أَنْ
تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ
قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ
وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آَمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ
اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
من أذهب اللّه كريمته لم يرضَ
له ثواباً دون الجنة، قال: فقد رأيت الأنصار يتمنّون العمى
அல்லாஹுத் தஆலா யாருடைய பார்வையை பறித்து சோதித்தானோ அவருக்கு சுவனத்தை கூலியாக வழங்குவான் என்று
நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.
இதைக்கேட்ட அன்ஸாரி ஸஹாபிகள் தங்களின் பார்வை குருடாகுவதை
ஆசைப்பட்டார்கள்.
أنّ موسى عليه السلام نظر إلى
عبد عظيم البلاء فقال: ياربّ ارحمه، فأوحى اللّه عزّ وجلّ إليه: كيف أرحمه؟ ممّا
به أرحمه؟
கடுமையாக சோதிக்கப்பட்ட ஒருவரை பார்த்த நபி மூஸா அலை அவர்கள்
அல்லாஹ்விடம், யா அல்லாஹ் இவர்மீது இரக்கம் காட்டுவாயாக! என துஆச்செய்தார்கள்.
அதற்கு அல்லாஹு தஆலா, நான் இரக்கம் காட்டியதால்தான் சோதனையை அவருக்கு
வழங்கியுள்ளேன் என்று கூறினானாம்.
كان رجل يأتي إلى النبي صلى الله
عليه وسلم ومعه ولده، وقد تعلق قلب هذا الأب بولده، فسأله النبي صلى الله عليه
وسلم يوم قال له: "هل تحبه " فقال الرجل: يا رسول الله أسأل الله أن
يحبك كما أحبه.." هل رأيت وصفًا أعظم من هذا؟! يقول مقدار المحبة التي في
قلبي لولدي أنا أسأل الله سبحانه وتعالى أن يحبك محبة عظيمة ولا يكاد الوالد يفارق
ولده، الأب لا يصبر عن ولده كلما خرج خرج الولد معه
فأقبل يومًا إلى النبي عليه
الصلاة والسلام وقد تغير وجهه وبدا عليه الحزن والكآبة والهم والغم، فسأله النبي
صلى الله عليه وسلم عن حاله،
قال: يا رسول الله: مات ولدي، حبة
قلبه وثمرة فؤاده يا رسول الله..
فقال له عليه الصلاة والسلام
ألا يسرك ألا تأتي بابًا من أبواب
الجنة إلا وجدت الولد ينتظرك عند هذا الباب، قال: بلى قال عليه الصلاة والسلام:
فذلك لك. فكأنما رفع النبي صلى الله عليه وسلم جبل من الهم رفعه عن قلب هذا الرجل..
நபி ஸல் அவர்களிடம் ஒரு மனிதர் தன் மகனுடன்
வந்தார்.அவர் தன் மகன் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்.நபி சல் அவர்கள்
அம்மனிதரிடம், உனக்கு
உன் மகன் மீது அன்பு உண்டா என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மனிதர்,அல்லாஹ்வின்
தூதர் அவர்களே! நான் என் மகன் மீது கொண்ட அன்பை போல அல்லாஹ் உங்கள் மீது அன்பு
அன்பு வைக்க வேண்டுமென அல்லாஹ்விடம் கேட்கிறேன் என்றார்.
ஒரு தந்தை தன்மகன் மீது கொண்டிருக்கும் அன்பின்
அளவை இவரை விட வேறு யாரும் விளக்கி கூறிவிடமுடியாது.
இவர் எப்போதும் தன் மகனை பிரிந்து இருக்க
மாட்டார்.இவர் வெளியே எங்கு சென்றாலும் தன்னுடன் தன் மகனையும்
அழைத்துச்செல்வார்.அந்தளவு தன் மகன் மீது பிரியம் கொண்டிருந்தார்.
ஒரு நாள் இவர் நபி ஸல் அவர்களின் சபைக்கு வாடிய
முகத்துடன், கவலையுடன்
வந்தார்.அவரின் மாறுதலை கண்ட நபி ஸல் அவர்கள் அதற்கான காரணத்தை விசாரித்தார்கள்.
அப்போது அம்மனிதர்,அல்லாஹ்வின்
தூதர் அவர்களே! என் இதயக்கனியான என் மகன் இறந்துவிட்டார்.அதை செவியுற்ற அண்ணல் நபி
ஸல் அவர்கள் சுவனத்தின் வாசல்களில் ஒன்றில் உங்கள் மகன் உங்களுக்காக
எதிர்பார்த் திருந்தால் அது உங்களுக்கு
சந்தோஷம் தருமா?
என்றார்கள்.அதற்கு அவர், நிச்சயமாக
நான் சந்தோஷப்படுவேன் என்றார்கள்.
அதை கேட்ட நபி ஸல் அவர்கள் உங்கள் மகன்
அப்படிப்பட்ட அந்தஸ்தில் இருக்கிறார் என்று கூறியதும் மலைபோல் இருந்த அவரின் கவலை
பனிபோல விலகியது.
இறையன்பு
கிடைக்கும்
أن رجلاً قال: يا رسول الله
إني أحبك، فقال صلى الله عليه وسلم: " استعد للفقر " فقال: إني أحب الله
تعالى، فقال: " استعد للبلاء
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் தங்களை
நேசிக்கிறேன் என்று ஒருவர் நபி ஸல் அவர்களிடம் கூறினார்.
அதை கேட்ட நபியவர்கள்-அப்படியானால் வறுமைக்கு
உன்னை தயார்படுத்திக்கொள் என்று கூறினார்கள்.என்னை நேசிப்பவர்களுக்கு கட்டாயம்
வறுமை வரும் என்றார்கள்..
நான் அல்லாஹ்வையும் நேசிக்கிறேன் என்று
அந்நபித்தோழர் மீண்டும் கூறினார்.அப்போது நபி ஸல் அவர்கள்-உன்னை சோதனைக்கு தயார்
படுத்திக்கொள் என்று சொன்னார்கள்.
حبس الشبلي رحمه الله في
المارستان فدخل عليه جماعة فقال: من أنتم؟ قالوا: أحباؤك جاؤوك زائرين، فأخذ
يرميهم بالحجارة فأخذوا يهربون فقال: لو كنتم أحبائي لصبرتم على بلائي
அல்லாமா ஷிப்லீ ரஹ் அவர்களை சந்திக்க ஒரு கூட்டம் வந்தார்கள். அவர்களிடம் நீங்கள் யார்?என ஷிப்லி ரஹ்
அவர்கள் கேட்டபோது,நாங்கள் உங்களை சந்திக்கவந்த உங்களின் நேசர்கள் என்று கூறினர்.உடனே ஷைக்
அவர்கள், கல்லைக்கொண்டு எறிந்து அவர்களை விரட்ட ஆரம்பித்தனர்.
அவர்களின் இச்செயலுக்கு காரணம் கேட்டபோது என்னை உண்மையாக நேசித்தால்
என் சோதனையில் பொருமையாக இருக்கவேண்டும் என்றார்கள்.
أن زكريا عليه السلام لما هرب من
الكفار من بني إسرائيل واختفى في الشجرة فعرفوا ذلك، فجيء بالمنشار فنشرت الشجرة
حتى بلغ المنشار إلى رأس زكريا، فأن منه أنة، فأوحى الله تعالى إليه: يا زكريا لئن
صعدت منك أنة ثانية لأمحونك من ديوان النبوة، فعض زكريا عليه السلام على إصبعه حتى
قطع شطرين
யூதர்கள் நபி ஸகரிய்யா அலை அவர்களை கொலைசெய்ய விரட்டியபோது ஒரு
மரத்திற்குபின் மறைந்தார்கள்.
அதை த்ரிந்துகொண்ட யூதர்கள் ஒரு பெரிய அறத்தைக்கொண்டு மரத்துடன்
சேர்த்து நபியையும் வெட்டியபோது வேதைனையில் ஆஹ் என்று நபி ஸகரிய்யா அலை அவர்கள்
கத்தினார்கள்.அப்போது அல்லாஹ் அவர்களுக்கு வஹி அறிவித்து-
இன்னொரு தடவை கத்தினால் நபித்துவ பட்டியலிலிருந்து உன் பெயரை
அழித்துவிடுவேன் என்று கூறினான்.உடனே தங்களின் விரலை கடித்துக்கொண்டார்கள்.
No comments:
Post a Comment