Thursday, 12 December 2013

வருமானத்தில் பேணுதல்.















அன்பிற்குரிய முஃமின்களே. இன்றைய காலகட்டத்தில் நாம் மிக முக்கியமான ஒரு விஷயத்தில் கவனமில்லாமல் இருக்கிறோம். அது அல்லாஹ் விரும்பக்கூடிய விஷயம்.நம்முடைய வணக்க வழிபாடுகளை தூண்டக்கூடிய விஷயம்.இன்னும் சொல்வதாக இருந்தால்.அது இருந்தால்தான் நம்முடைய வணக்கமே ஏற்றுக்கொள்ளப்படும்

 அதுதான் ஹலாலான வருமானம். நம்முடைய பொருளாதாரத்தில் எந்த வழியிலும் ஹராம் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.             அல்குர்ஆன்     2:172.

மேற்கூறிய வசனத்தில் நம்முடைய உணவு தூய்மையாக இருக்கவேண்டும் என்பதை அல்லாஹ் விரும்புகிறான். நம்முடைய உணவு தூய்மையாகவேண்டுமென்றால் நம்முடைய வியாபாரம். அதன் மூலமாக வரும் வருமானம் தூய்மையாக இருக்கவேண்டும்.

வணக்கத்தின் அடிப்படையே ஹலாலான வருமானம்தான்.

. وقال صلى الله عليه وسلم: " العبادة عشرة أجزاء: تسعة منها في طلب في طلب الحلال

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.வணக்கம் பத்து பாகம் என்றால் அதில் ஒன்பது பாகம் ஹலாலான வழியில் பொருளீட்டுவதாக இருக்கும்.
இன்று வியாபாரம் இல்லாமல் இருக்கமுடியாது. வியாபாரத்துக்கு  இன்று அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது விஷயத்தில்

நபியின் முன்னறிவிப்பு.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْ السَّاعَةِ تَسْلِيمُ الْخَاصَّةِ وَتَفْشُو التِّجَارَةُ حَتَّى تُعِينَ الْمَرْأَةُ زَوْجَهَا عَلَى التِّجَارَةِ وَتُقْطَعُ الْأَرْحَامُ

கியாமத் நிகழ்வதற்கு முன்.குறிப்பிட்டவருக்கு மட்டும் ஸலாம் சொல்வது. வியாபாரம் பெருகுவது எந்த அளவென்றால் ஒரு பெண் தன் கணவனுடைய வியாபாரத்திற்கு உதவிடுவாள். உறவு துண்டிக்கப்படுவது. போன்ற செயல்கள் ஏற்படும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

நூல்; அஹ்மத்.

عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ الْفِتَنُ وَيَكْثُرَ الْكَذِبُ وَيَتَقَارَبَ الْأَسْوَاقُ وَيَتَقَارَبَ الزَّمَانُ وَيَكْثُرَ الْهَرْجُ قِيلَ وَمَا الْهَرْجُ قَالَ الْقَتْلُ

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல் : அஹமத் 10306.

 இன்று இதைக் கண்கூடாகக் காண்கிறோம். வியாபார ஒப்பந்தத்தில் எத்தனை எத்தனையோ வகைகள். இண்டர்நெட் வியாபாரத்திற்கு ஈடு இணை இல்லை. இருந்த இடத்தில் இருந்துகொண்டு உலகின் எந்த பகுதியில் உள்ள பொருளையும் வாங்க முடிகிறது. விலை பேச முடிகிறது. விற்க முடிகிறது. உடனுக்குடன் சரக்கு கைமாறுகிறது. கிரடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவை வணிகத்தை மேலும் இலேசாக்குகிறது.
எனவே வியாபாரம் பல வழிகளில் வந்துவிட்ட இந்த காலத்தில் ஹலாலை பேணும் விஷயத்தில் மக்களிடம் அலட்சியம் வந்துவிட்டது.

நாயகம்(ஸல்) அவர்கள் எந்த காலத்தை எச்சரித்தார்களோ அந்த காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمْ مِنْ الْحَرَامِ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்
 
நூல். புகாரி  2059.

இன்று நம் நிலை இவ்வாறுதான் இருக்கிறது எப்படியோ பணம் வந்தால் சரி.

கொஞ்சம் ஹராம் இருந்தாலும் தொழுகை கூடாது.

وقال صلى الله عليه وسلم: " من اشترى ثوباً بعشرة دراهم وفي ثمنه درهم حرام لم يقبل الله صلاته مادام عليه منه شيء "

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.பத்து திர்ஹத்துக்கு வாங்கிய ஆடை.அதில் ஒரு திர்ஹம் ஹராமாக இருந்தாலும் அது இருக்கும் வரை தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது.

ஹராம் இருந்தால் தர்மம் கூடாது,

. وقال صلى الله عليه وسلم: من اكتسب مالاً من حرام فإن تصدق به لم يقبل منه
. وقال صلى الله عليه وسلم: " من أصاب مالاً من مأثم فوصل به رحماً أو تصدق به أو أنفقه في سبيل الله جمع الله ذلك جميعاً ثم قذفه في النار

ஹராமான வழியில் சம்பாதித்த பொருளைக்கொண்டு தர்மம் செய்தால் அத்தர்மம் ஏற்றுக்கொள்ளப்படாது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹராம் கலந்தால் நோன்பின் நன்மை வீணாகும்.

قال صلى الله عليه وسلم " كم من صائم ليس له من صومه إلا الجوع والعطش " فقيل هو الذي يفطر على الحرام
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.எத்தனையோ நோன்பாளிகளுக்கு பசி. தாகத்தை தவிர வேரெதுவும் இல்லை.( நோன்பின் நன்மை கிடைக்காது)

நம்முடைய துஆகூட ஏற்றுக்கொள்ளப்படாது.

عن ابن عباس قال: تُليت هذه الآية عند النبي صلى الله عليه وسلم: { يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الأَرْضِ حَلالا طَيِّبًا } فقام سعد بن أبي وقاص، فقال: يا رسول الله، ادع الله أن يجعلني مستجاب الدعوة، فقال. "يا سعد، أطب مطعمك تكن مستجاب الدعوة، والذي نفس محمد بيده، إن الرجل ليَقْذفُ اللقمة الحرام في جَوْفه ما يُتَقبَّل منه أربعين يومًا، وأيّما عبد نبت لحمه من السُّحْت والربا فالنار أولى به"

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், "சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்" என்று கூறினார்கள்.
   
(நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்,

قال رسول الله صلى الله عليه وسلم: ثم ذكر الرجل يطيلُ السفر أشعث أغبر، يمدُّ يديه إلى السماء: يا رب، يا رب، ومطعمه حرام ومشربه حرام، وملبسه حرام، وغُذي بالحرام، فأنى يستجاب لذلك"


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் நெடுந்தூரம் பயணம் செய்கிறான். (பிரயாணத்தில் துஆ ஏற்றுக்கொள்ளப்படுகிறது) பிரயாணத்தின் காரணத்தால், தலைமுடிகள்  பரட்டையாகவும் ஆடைகள் அழுக்காகவும் இருக்கின்றன.

 (சஞ்சலம் நிறைந்தவனாக) இருகைகளையும் வானத்தின் பக்கம் உயர்த்தி யா அல்லாஹ்! யா அல்லாஹ்! என்று அல்லாஹ்விடம் துஆ கேட்கிறான். ஆனால்அவன் உண்ணும் உணவு ஹராமானதாகவும், உடை ஹராமானதாகவும் அவன் குடிக்கும் பானம் ஹராkhனதாகவும் அவன் அணியும் உடை ஹராமானதாகவும் இருக்கின்றன. எப்பொழுதும் ஹராமானதையே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அவனுடைய துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்

(நூல்: பவாயித்)


ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.

ஹிஜ்ரி 261-ல் மரணித்த மாமேதை பாயஜீது புஸ்தாமீ(ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:

நான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.

ஆம்! ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது.    

ஆதாரம்: கல்யூபி, பக்கம்:37

எனவேதான் நாயகம் (ஸல்)அவர்கள் இப்படி துஆ கேட்பார்கள்.

اللَّهُمَّ اكْفِني بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ ، وَأغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِواكَ

யா அல்லாஹ்! உன் ஹலாலான ரிஜ்கைக் கொண்டு, உன் ஹராமான ரிஜ்கை விட்டும், எனக்குப் போதுமாக்கி வைப்பாயாக! உன்னைத் தவிர மற்றவரிடம் நான் தேவையாகுவதை விட்டும் , உன் அருட்கொடையைக் கொண்டு எனக்கு செல்வச் செழிப்பை அருள்வாயாக!

[ஆதாரம்: திர்மிதி, ரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் எண் 1486 ]

துஆ செய்ததோடு வாழ்விலும் வாழ்ந்து காட்டினார்கள்.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرَةٍ مَسْقُوطَةٍ فَقَالَ لَوْلَا أَنْ تَكُونَ مِنْ صَدَقَةٍ لَأَكَلْتُهَا

நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்கின்றார்கள். ஒரு பேரீத்தம்பழம் கீழே கிடக்கின்றது. அதைப் பார்த்த நபியவர்கள், ''இது ஸதகா தர்மப் பொருளாக இல்லாமலிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்'' என்று கூறினார்கள்
.
(நூல்: புகாரி)

ஸதகா பொருள் நபியவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே தான் தெருவில் கிடந்த பொருளைப் பார்த்த மாத்திரத்தில் அதைச் சாப்பிடாமல் விடுகின்றார்கள். காரணம் இது தடை செய்யப்பட்ட பொருளாக இருக்குமோ? இதனால் இறைவன் நம்மைத் தண்டித்து விடுவானோ? என்று அஞ்சி இவ்வாறு செய்கின்றார்கள்.
இவ்வளவு பாதிப்பு இருப்பதால்தான் நம்முன்னோர்கள் அதிக சிரமத்தை எடுத்துகொண்டார்கள்.

அபூ பக்ர்(ரலி) அவர்களின் பேணுதல்.

أن الصديق رضي الله عنه شرب لبناً من كسب عبده ثم سأل عبده فقال: تكهنت لقوم فأعطوني، فأدخل أصابعه في فيه وجعل يقيء حتى ظننت أن نفسه ستخرج، ثم قال: اللهم إني أعتذر إليك مما حملت العروق وخالط الأمعاء. وفي بعض الأخبار أنه صلى الله عليه وسلم أخبر بذلك فقال: " أو ما علمتم أن الصديق لا يدخل جوفه إلا طيباً "

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;

அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு (ஓர் எஜமானனுக்கு அடிமை செலுத்த வேண்டிய சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்த அடிமையொருவன் இருந்தான். அபூ பக்ர்(ரலி) அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டு வந்தார்கள்.

 ஒரு நாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூ பக்ர்(ரலி) சிறிது உண்டார்கள். அப்போது அந்த அடிமை அவர்களிடம், 'இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டான்

. அபூ பக்ர்(ரலி), 'இது என்ன?' என்று கேட்டார்கள். அவன், 'நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது; ஆயினும் (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்" என்று சொன்னான்.

 உடனே அபூ பக்ர்(ரலி) தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டார்கள். வாந்தியெடுத்த பிறகு கூறினார்கள். யாஅல்லாஹ் இதையும் தாண்டி என் குடலுக்குள் அதனுடைய சாறு கலந்திருந்தால் என்னை மன்னிப்பாயாக. இந்த செய்தியை நபியிடம் சொன்னபோது உண்மையாளரின் வயிற்றுக்குள் தூய்மையான உணவைத்தவிர வேரெதுவும் செல்ல முடியாது என்று கூறினார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 3842.மற்றும்.இஹ்யா உலூமித்தீன்.பாகம்.2

இந்த செய்தியில்அபூபக்கர்[ரலி] ,அவர்கள் தனது அடிமை மூலம் தனக்கு கிடைக்கவேண்டிய  அடிமை தொகையை உண்கிறார்கள். பின்பு அந்த அடிமை ஹராமான வழியில் பொருளீட்டியதைதான்நம்மிடத்தில் தந்துள்ளான். அதைத்தான் நாம் சாப்பிட்டுவிட்டோம் என்பதை அறிந்தவுடன் தனது வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுக்கிறார்கள் என்றால், அபூபக்கர்[ரலி] அவர்களின் வாய்மையை எண்ணிப்பாருங்கள்.



அதனால்தான் இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது.

இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். என்று கூறுகின்றான்.

அல் குர்ஆன் (63:10)

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.

 நூல். புகாரி

அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள்.

(நூல் : அஹ்மத்)

عن أبي سعيد قال : قال رسول الله صلى الله عليه وسلم : " التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء " . رواه الترمذي والدارقطني


உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களுடனும் இருப்பார்.

(நூல் : திர்மிதீ)

ஒருமுறை நபியவர்கள் தொழுகைக்காகச் செல்லும்போது மக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு, "வியாபாரிகளே" என அழைத்தார்கள்.அங்கிருந்த வியாபாரிகள் நபியவர்களின் அழைப்பை ஏற்று தமது தலைகளை உயர்த்திபார்வைகளை அன்னார்பக்கம் செலுத்தினர். அப்போது நபியவர்கள் அவர்களைப் பார்த்து

التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وبر وصدق " . رواه الترمذي وابن ماج

  "வியாபாரிகளில் அல்லாஹ்வைப் பயந்து உண்மை பேசி நன்மை செய்தவரைத் தவிர ஏனையோர் பாவிகளாகவே மறுமையில் எழுப்பப்படுவர்" என்றார்கள்.

(திர்மிதீ, இப்னு ஹிப்பான்)

பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம் : முஃஜம்)

உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :

நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.

அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.

பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை - மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.

எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.

நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்

நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்

நபி லூத்(அலை) அவர்கள்  - விவசாயம்

நபி யஸஃ (அலை) அவர்கள்  - விவசாயம்

நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்

நபி ஹாரூன்(அலை)அவர்கள் - வியாபாரம்

நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்

நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்

நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் - வேட்டையாடுதல்

நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்

நபி ஷுஐப்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி மூசா(அலை) அவர்கள் -  ஆடு மேய்த்தல

நபி லுக்மான்(அலை) அவர்கள் -  ஆடு மேய்த்தல்

நபி (ஸல்) அவர்கள்-  ஆடு மேய்த்தல்

 சரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர்(ரலி) அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே! நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள்.     
ஆதாரம்: ஜாமிஉ பயானில்  இல்மி,வஃபர்ளிஹி
அபூஹுரைராஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலுக்கருகே சென்றார்கள். தமது கையை அந்த குவியலில் விட்ட போது விரல்களில் ஈரம் பட்டது அப்போது உணவு வியாபாரியே இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே மழையில் நனைந்துவிட்டது என்றார்மக்கள் பார்க்கும் விதமாக உணவுக்கு மேல் பகுதியல் பார் மோசடி செய்கிறாரோ அவர்க நம்மைச் சார்ந்தவரல்லர் எனவும் கூறினார்கள்.
 (முஸ்லிம், திர்மிதி)

நேர்மையான வியாபாரிக்கு நபியின் துஆ

عن جابر قال : قال رسول الله صلى الله عليه وسلم :
 رحم الله رجلا سمحا إذا باع وإذا اشترى وإذا اقتضى
 رواه البخاري

"விற்கும்போதும் வாங்கும்போதும் தன் உரிமையைக் கோரும்போதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளும் மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக"  என்று நபியவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். (புஹாரி, திர்மிதீ)

நேர்மையான வியாபாரிக்கு அல்லாஹ்வின் அன்பு.

அபூதர் அறிவிப்பதாவது மூவரை அல்லாஹ் நேசிக் கிறான், மூவரை வெறுக்கிறான். (1) பகைவருக்கு நடு வில் அகப்பட்டபோதிலும் உறுதியாக நின்று நிலை குலையாமல் போரிடும் மனிதர். ஒன்று அவர் கொல் லப்படுவார் அல்லது அவருக்கும் அவருடைய தோழ ருக்கும் வெற்றி கிடைக்கும். வெற்றிபெற்று திரும்பு வார் (2) தொடர்ந்து கெடுதி விளைவிக்கும் அண்டை வீட்டாரை பெற்றவர் அவருடைய தொல்லைகளை தாங்கிக்கொண்டு பொறுமை காப்பார் (3) ஒரு குழு வினரோடு பயணத்தை மேற்கொள்பவர் பயணமோ நீள்கின்றது தங்குவதற்கு இடம் கிடைக்காதா என எதிர் பார்த்து ஓரிடத்தில் கூடாரமடித்து தங்குகிறார்கள் மற்றவர்கள் ஓய்வெடுக்க இவர்மட்டும் நின்று தொழு கிறார் நினைத்த நேரம் தொழுதபிறகு மற்றவர்களை எழுப்புகிறார்.

அல்லாஹ்வின் வெறுப்புக்கு உரிய மூவர் (1) சத்தி யம் செய்து பொருட்களை விற்கும் வியாபாரி, செருக் குடைய ஏழை, யாருக்கும் எதனையும் கொடுக்காத கொடுத்தால் சொல்லிக் காட்டுகின்ற கஞ்சன் (அஹ்மத்)

5 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்...அருமையான பதிவு.. அல்லாஹ் பரக்கத் செய்வானாக!!!!

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்...அருமையான பதிவு.. அல்லாஹ் பரக்கத் செய்வானாக!!!!

    ReplyDelete
  3. எம் ஐ முஹம்மது இப்ராஹிம் அல்லாஹ் உங்களுக்கு நற் நற்கிருபை செய்வானாகஆமென் யா ரப்பில் ஆலமீன்

    ReplyDelete