மனிதன் இவ்வுலகில் செல்வந்தனாக இருப்பது மிகப் பெரும் நற்பாக்கியமும் அல்ல. ஏழையாக வாழ்வது துர்பாக்கியமும் அல்ல. ஏனெனில் இந்த உலகில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் வறுமையை போக்கவும் தேவையை நிறைவேற்றவும் முடியும் ஆனால் இப்படிபட்ட உதவியை மறுமையில் யாரும் யாருக்கும் செய்யவும் முடியாது அவ்வாறு செய்வதை யாரும் எதிர்பார்க்கவும் முடியாது எனவே மறுமைக்கு தேவையான நன்மைகளை மீஸான் நிறம்ப சேர்த்துக் கொண்டவனே மறுமையில் பணக்காரன் .
وَالْوَزْنُ يَوْمَئِذٍ
الْحَقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
அன்றைய
தினம் நன்மை தீமைகளை எடைபோடுவது சத்தியம் ஆகவே எவருடைய எடை (நன்மையால்) கனமானதோ அவர்கள்தான் வெற்றியாளர்கள். அல் குர் ஆன் : 7-8
وأخرج الطبراني في الأوسط
عن جابر عن النبي صى الله عليه وسلم قال « أول ما يوضع في ميزان العبد نفقته على أهله
மறுமையில்
அடியானின் மீஸானில் முதலாவது வைக்கப்படுவது அவன் தனது குடும்பத்தாருக்கு செய்த செலவாகும்..
மீஸான் தராஸின் பிரமாண்டம்
عن سلمان قال : يوضع الميزان
وله كفتان لو وضع في إحداهما السموات والأرض ومن فيهن لوسعه
மறுமையில்
மீஸான் தராசு வைக்கப்படும் அதிலே 7 வானங்களையும் 7 பூமிகளையும் வைக்கப்பட்டாலும் அதை அது விசாலத்தோடு தாங்கி கொள்ளும் என்று ஸல்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்
மீஸானில் நன்மைகளை பாதுகாப்பதில் சஹாபாக்களின் அச்சம்
عن عائشة
قالت : جاء رجل فقعد بين يدي رسول الله صلى الله عليه
وسلم فقال : يا رسول الله إن لي مملوكين يكذبونني ويخونونني ويعصونني وأشتمهم وأضربهم
فكيف أنا منهم ؟ فقال رسول الله صلى الله عليه وسلم : " إذا كان يوم القيامة يحسب
ما خانوك وعصوك وكذبوك وعقابك إياهم فإن كان عقابك إياهم بقدر ذنوبهم كان كفافا لا
لك ولا عليك وإن كان عقابك إياهم دون ذنبهم كان فضلا لك وإن كان عقابك إياهم فوق ذنوبهم
اقتص لهم منك الفضل فتنحى الرجل وجعل يهتف ويبكي فقال له رسول الله صلى الله عليه وسلم
: " أما تقرأ قول الله تعالى : ( ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس
شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين )
فقال الرجل : يا رسول الله ما أجد لي ولهؤلاء شيئا خيرا
من مفارقتهم أشهدك أنهم كلهم أحرار . رواه الترمذي
ஒரு
தோழர் நபி இடம் வருகை தந்து சொன்னார்.
நாயகமே எனது அடிமைகள் என்னிடம் பொய் கூறுகின்றனர் எனது பொருளில் மோசடி செய்கின்றனர் எனக்கு மாறு செய்கின்றனர் எனவே அவர்களை நான் திட்டுகின்றேன் அடிக்கின்றேன் நான் இவர்களுடன் இவ்வாறு நடந்து கொள்வதால் மறுமையில் எனது நிலை எப்படி இருக்கும் என்று கேட்டார் அப்பொழுது பெருமானார் சொன்னார்கள்
மறுமையில் உன் விசயத்தில் அவர்களின் மோசடிகளும் மாறுதல்களும் . பொய்களும் இத்துடன் அவர்களுக்கு நீ கொடுத்த தண்டனைகளும் அளந்து பார்க்கப்படும்.
அப்பொழுது அவர்களின் பாவங்களும் உனது தண்டனைகளும் சமநிலையில் இருந்தால் அது உனக்கு சாதகமும் அல்ல பாதகமும் அல்ல. அவர்களின் பாவங்களை விடவும் உனது தண்டனை குறைவாக இருக்குமானால்
அது உனக்கு சிறப்பு சேர்க்கும். அவர்களின் பாவங்களை விட உனது தண்டனை அதிகமாக இருக்குமானால்
அவர்களுக்காக உன்னை பழி வாங்கப்படும் என்றார்கள் இதை கேட்ட அம்மனிதர் அழுது விட்டார் அப்பொழுது நபி அவர்கள்
" أما تقرأ قول الله
تعالى : ( ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من
خردل أتينا بها وكفى بنا حاسبين
கியாமத் நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது.
ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (அல்குர்ஆன் 21:47)
இந்த வசனத்தை நீங்கள் ஓத வில்லையா? என்று கேட்டார்கள் நாயகமே அவர்களை நான் பிரிவது தான் எனக்கும் அவர்களுக்கும் நலமாகும் எனவே அவர்கள் அனைவரையும் உரிமை விட்டதற்கு நான் உங்களை சாட்சியாக்குகின்றேன் என்று கூறி விடுதலை செய்துவிட்டார்
நூல்;மிஸ்காத் பக்கம். 426
மீஸானை கனமாக்கும் நன்மைகள்
அவருடைய வெளிப்படைஅந்தரங்கத்தை விட ஏற்றமாக இருக்கும் (அந்தரங்க மோசம்) அவரின் தராசு லேசாகி விடும். எவருடைய அந்தரங்கம் வெளிப்படையை விட ஏற்றமாக இருக்குமோ அவருடைய மீஸான் கனமாகி விடும் மறுமையில் அடியானின் மீஸானில் முதலாவது வைக்கப்படுவது அவன் தனது குடும்பத்திற்கு
செய்த செலவாகும்
நூல்; துர்ருல்மன்ஸூர்.
ஜாபிர்(ரலி) கூறுகிறார்கள். பெற்றோருக்கும் மனைவிமார்களுக்கும்
நம்மிடம் ஜீவனாம்சம் பெற கடமைபட்டவர்களுக்கு வசதி இருந்தும் செலவு செய்யாமல் கஞ்சத்தனம் செய்வது மனிதனின் மீஸானையும் மறுமையையும் பாதிக்கும்…
عن عبد الله بن عمرو قال
: قال رسول الله صلى عليه وسلم « توضع الموازين يوم القيامة فيؤتي بالرجل فيوضع في
كفه ويوضع ما أحصى عليه فتمايل به الميزان فيبعث به إلى النار فإذا أدبر به ، صائح
يصيح عند الرحمن : لا تعجلوا لا تعجلوا فإنه قد بقي له . فيؤتى ببطاقة فيها : لا إله
إلا الله . فتوضع مع الرجل في كفة حتى تميل به الميزان
மறுமையில் மீஸான் ஏற்படுத்தப்பட்டு
அதில் ஒரு மனிதனையும் அவன் மீது பதிவான நன்மை தீமைகளையும் வைக்கப்படும் அப்பொழுது தராசு ஒரு பக்கமாக சாயும் அதாவது நன்மை தட்டு லேசாகும் உடனே அவன் நரகிற்கு அனுப்பப்படுவான் அவன் அங்கிருந்து செல்லும் போது அல்லாஹ்வின் அருகில் இருந்து சப்தமிட்டு ஒரு மலக்கு சொல்வார்.
அவசரப்படாதீர்கள் அவருக்கு ஒரு நன்மை இருக்கின்றது உடனே அங்கு ஒரு காகிதம் கொண்டு வரப்படும் அதில் லாஇலாஹ இல்லல்லாஹும் அதனுடைய நன்மையும் இருக்கும் அதை அந்த தட்டில் அம்மனிதனுடன் வைக்கப்படும் அப்பொழுது மீஸான் அதனுடன் சாயும் நன்மை
தட்டு கனமாகி அவன் சொர்க்கம் செல்வான்.
நூல் .துர்ருல் மன்சூர்
ان داود عليه السلام سأل
ربه ان يريه الميزان فاراه كل كفة كما بين الشمرق والمغرب فغشى عليه ثم افاق فقال الهى
من ذا الذى يقدر ان يملأ كفته حسنات فقال يا داود انى اذا رضيت عن عبدى ملأتها بتمرة
தாவூது நபி மீஸான் தராசை தனக்கு காட்டும் படி அல்லாஹ்விடம் சொன்னார்கள். அல்லாஹ் காட்டினான் அப்பொழுது அதனுடைய ஒவ்வொரு தட்டும் கிழக்குப் பகுதிக்கும் மேற்குப் பகுதிக்கும் இடையில் உள்ள அனைத்தையும் உள்ளடக்கும் அளவு இருந்ததைக் கண்டு மயங்கி விழுந்து விட்டார்கள்
இந்த தட்டுகளை நன்மையைக்கொண்டு
நிறப்பும் சக்தியை யார் பெறமுடியும். என்று கேட்டபொழுது அல்லாஹ் சொன்னான். எனது அடியானை நான் பொருந்தி கொண்டுவிட்டால்
அவன் வழங்கும் ஒரு பேரித்தகனியின் தர்மத்தைக் கொண்டே அதை நான் நிரப்பிவிடுவேன்
என்றான்.
عن ابن عمر قال : قال رسول
الله صلى الله عليه وسلم « من قضى لأخيه حاجة كنت واقفاً عند ميزانه ، فإن رجح وإلا
شفعت
யார் தனது சகோதரரின் ஒரு தேவையை நிறைவேற்றுகின்றாரோ அவனுடைய மீஸானுக்கு அருகில் நான் நிற்பேன் அது ஏற்றமானால் சரி. இல்லையனால் அவருக்காக நான் அல்லாஹ்விடம் ஷபாஅத் செய்வேன் என்றார்கள்.
நூல்: துர்ருல் மன்ஸூர்.
وأخرج ابن أبي الدنيا والبزار
وأبو يعلى والطبراني والبيهقي بسند جيد عن أنس قال : لقي رسول الله صلى الله عليه وسلم
أبا ذر فقال « ألا أدلك على خصلتين هما خفيفتان على الظهر وأثقل في الميزان من غيرهما؟
قال : بلى يا رسول الله . قال عليك بحسن الخُلق وطول الصمت ، فوالذي نفسي بيده ما عمل
الخلائق بمثلهما
நபி (ஸல்) அவர்கள் . அபூதர்ருல் கிபாரி (ரலி) அவர்களிடம் அமல் செய்வதற்கு இலகுவான மீஸானில் கனமானதுமான நன்மைகளை உங்களுக்கு நான் அறிவித்துதரவேண்டாமா என்று கேட்டுவிட்டு சொன்னார்கள். நீங்கள் நற்குணத்தையும்
மெளனத்தையும் பற்றி பிடித்துக்கொள்ளுங்கள்.
இறைவன் மீது ஆனையிட்டு கூறுகின்றேன் இவ்விரண்டையும்
போன்று படைப்புகள் வேறு எந்த அமலையும் செய்வதில்லை.
நூல் : துர்ருல் மன்ஸூர்.
عن أبي هريرة قال : قال
رسول الله صلى الله عليه وسلم « كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان
إلى الرحمن : سبحان الله وبحمده سبحان الله العظيم
நாவிற்கு இலகுவான மீஸானில் கனமான ரஹ்மானுக்கு பிரியமான வார்த்தைகள் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம் என்பதாகும் என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்
கனமான மீஸானும் கண்ணியமான கண்மனியும்
وأخرج ابن أبي الدنيا والنميري في كتاب الأعلام عن عبد
الله بن عمرو قال « إن لآدم عليه السلام من الله عز وجل موقفاً في فسح من العرش ، عليه
ثوبان أخضران كأنه سحوق ، ينظر إلى من ينطلق به من ولده إلى الجنة ، وينظر إلى من ينطلق
به من ولده إلى النار ، فبينا آدم على ذلك إذ نظر إلى رجل من أمة محمد صلى الله عليه
وسلم ينطلق به إلى النار ، فينادي آدم : يا أحمد . فيقول : لبيك يا أبا البشر . فيقول
هذا رجل من أمتك ينطلق به إلى النار ، فأشد المئزر وأسرع في أثر الملائكة وأقول : يا
رسل ربي قفوا . فيقولون : نحن الغلاظ الشداد الذين لا نعصي الله ما أمرنا ونفعل ما
نؤمر . فإذا أيس النبي صلى الله عليه وسلم قبض على لحيته بيده اليسرى واستقبل العرش
بوجهه ، فيقول : يا رب قد وعدتني أن لا تخزيني في أمتي؟ فيأتي النداء من عند العرش
: أطيعوا محمداً وردوا هذا العبد إلى المقام . فأخرج من حجزتي بطاقة بيضاء كالأنملة
، فألقيها في كفة الميزان اليمنى وأنا أقول : بسم الله . فترجح الحسنات على السيئات
، فينادي سعد وسعد جده وثقلت موازينه : انطلقوا به إلى الجنة ، فيقول : يا رسل ربي
قفوا حتى أسأل هذا العبد الكريم على ربه . فيقول : بأبي أنت وأمي ما أحسن وجهك وأحسن
خلقك من أنت؟ فقد : أقلتني عثرتي . فيقول : أنا نبيك محمد ، وهذه صلاتك التي كنت تصلي
علي ، وافتك أحوج ما تكون إليها
மறுமையில் ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் அர்ஸின் அருகில் ஒரு இடம் இருக்கும். அவர்கள் பச்சை ஆடை அணிந்திருப்பார்கள். தனது சந்ததிகளில் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும்
போகக்கூடிய ஆட்களை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அப்பொழுது ஆதம் நபி அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒருவர் நரகம் கொண்டு செல்லப்படுவதை கண்டு யா அஹ்மது என்று நபியை அழைப்பார்கள் நாயகம் பதில் கொண்டு என்ன வென்று கேட்பார்கள் அப்பொழுது நபி இடம் ஆதம் (அலை) அவர்கள் சொல்வார்கள் உங்கள் உம்மத்தில் ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றது
என்றார்கள் இதை கேட்டு நாயகம் அவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு மலக்குகளை பின் தொடர்ந்து விரைந்து சென்று நில்லுங்கள் அவரை விட்டு விடுங்கள் என்கிற பொழுது அவர்கள் நபி இடம் நாங்கள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு மாறு செய்ய முடியாது என்று உறுதியுடன் கூறி விட்டார்கள்..
நபி அவர்கள் மலக்குமார்களை
விட்டு நிராசை அடைந்து விட்ட நேரத்தில் தனது இடது கையில் தாடியை பிடித்துக் கொண்டு இறைவா என் உம்மத்தின் விசயத்தில் என்னை இழிவு படுத்த மாட்டேன் என்று எனக்கு வாக்களித்திருக்கின்றாயே என்று கூறும் பொழுது. அப்பொழுது அல்லாஹ்வின் அர்சில் இருந்து ஒரு சப்தம் வரும் முஹம்மதுக்கு கட்டுப்படுங்கள் இந்த அடியானை மீஸான் இருக்கும் இடத்துக்கு திரும்ப கொண்டு செல்லுங்கள் என்று சப்தம் வரும்.
அப்பொழுது நான் எறும்பை போல் இருக்கும் சிறிய பேப்பரை வெளியாக்குவேன்
அதில் மீஸானின் வலது தட்டில் பிஸ்மில்லா சொன்ன நிலையில் வைப்பேன் உடனே தீமைகளை நன்மைகள் மிகைத்து விடும் அப்பொழுது அழைப்பாளர் சொல்வார் இவரும் இவரின் முயற்சியும் சீராகி விட்டது இவரின் நன்மை கனமாகி விட்டது இவரை சொர்கத்திற்கு
அழைத்துச் செல்லுங்கள் அப்பொழுது அந்த அடியான் நபியை பார்த்து தங்களின் திருமுகமும் நற்குணங்களும் என்ன அழகாக இருக்கின்றது நீங்கள் யார் தாங்கள் தான் எனது தண்டனையை லேசாக்கினீர்கள்..
அப்பொழுது நான் உங்களின் நபி. இந்த தாளில் என் மீது நீங்கள் ஓதிய சலவாத்தின் நன்மைகள் உள்ளது. இதன் மூலம் நான் நீ எதன் பக்கம் தேவை உடையவனாக இருக்கின்றயோ அதை நான் நிறைவேற்றுவேன் என்று கூறுவார்கள்.
நூல்;(துர்ருல்மன்ஸூர்)
وأخرج المرهبي في فضل العلم
عن عمران بن حصين رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم « يوزن يوم
القيامة مداد العلماء ودماء الشهداء ، فيرجح مداد العلماء على دماء الشهداء
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். மறுமையில் உலமாக்களின் பேனா மையும் சுகதாக்களின் இரத்தமும் மீஸானில் அளக்கப்படும் அப்பொழுது சுஹதாக்களின் இரத்தத்தை உலமக்களின் பேனாமை மிகைத்து விடும்.
நூல் : துர்ருல் மனஸூர்
இவ்வாறு மறுமை நாளில் மனிதன் செய்த செயல்களை அளவிட்டு, அதற்கு ஏற்றவாறு கூலியும் தண்டனையும் வழங்கப்படும்.
மீஸான் (தராசு) மூலம் அளவிடப்படும் என்பதற்கு, இவ்வுலகில் நாம் பார்க்கும் தராசுகளை வைத்து அளவிடப்படும் என்று கருதத் தேவையில்லை. இப்போது உள்ள நவீன காலத்தில் மிக எளிதாக அளவிடும் மின்னணு இயந்திரங்கள் மிகத் துள்ளிமாகக் கணக்கிடுகின்றன. ஆனால் இவை நாம் செய்யும் அமல்களைக் கணக்கிடாது. வல்ல அல்லாஹ் மறுமை நாளில் நிறுவும் தராசு நமது நல்லமல்களையும் தீய அமல்களையும் மிக விரைவாகக் கணக்கிட்டுச் சொல்லி விடும் திறமை வாய்ந்தவையாக இருக்கும். இன்றைய தினம் ஒவ்வொருவரும் செய்ததற்குக் கூலி கொடுக்கப்படும்.
மீஸான் (தராசு) மூலம் அளவிடப்படும் என்பதற்கு, இவ்வுலகில் நாம் பார்க்கும் தராசுகளை வைத்து அளவிடப்படும் என்று கருதத் தேவையில்லை. இப்போது உள்ள நவீன காலத்தில் மிக எளிதாக அளவிடும் மின்னணு இயந்திரங்கள் மிகத் துள்ளிமாகக் கணக்கிடுகின்றன. ஆனால் இவை நாம் செய்யும் அமல்களைக் கணக்கிடாது. வல்ல அல்லாஹ் மறுமை நாளில் நிறுவும் தராசு நமது நல்லமல்களையும் தீய அமல்களையும் மிக விரைவாகக் கணக்கிட்டுச் சொல்லி விடும் திறமை வாய்ந்தவையாக இருக்கும். இன்றைய தினம் ஒவ்வொருவரும் செய்ததற்குக் கூலி கொடுக்கப்படும்.
நாம் அனைவரும் எண்ணற்ற நல் அமல்கள் செய்துஇவ்வுலகில் வளமான பொருளையும் அவ்வுலகில் கனமான அருளையும் பெறுவதற்கு அல்லாஹ் தவ்பீக் செய்வானாக ஆமீன்
அல்ஹம்துலில்லாஹ்.மிக அருமை
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்.மிக அருமை
ReplyDeleteஅருமையான பயான்
ReplyDeleteby. Zainul abideen usmani
Nice
ReplyDeleteஉங்கள் எழுத்துப்பணி சிறந்த முறையில் தொடர்ந்திட எமது துஆக்கல்,வாழ்த்துக்கள் .ஹாபிழ் செய்யது அலி மஹ்லரி மதரசா அந்நூர் மலேசியா
ReplyDeleteஅருமை மிக அருமை இருவரின் முயற்சிகளும் நன்முறையில் நடக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteIthan molam Thankalin meezanai Allah nirappuwanaka......
ReplyDeletemasha allah miga arputhana thedal marumaiyai nokkiya thalaippai thanthu thagavalgalaiyoum alli thantha ungalin marumaiyaiyoum immayaiyoum sirappakkovanaga AAMEEN AAMEEN YA RAPPAL AALAMEEN
ReplyDeletealhamthu lillah miga arumaiyana thagavalgal allah ungalukko ella lilailum baraqath seyvanaga
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஜஸாகல்லாஹ்
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteஅல்லாஹு ரப்புல் ஆலமீன் உங்களுக்கு நிரப்பமான நற்கூலியை வழங்கி நாளை மறுமையிலும் மீசான் என்னும் தராசை கனமாக்கி நன்மையால் ஆக்குவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்
ReplyDelete