Wednesday, 14 August 2013

இறுதி வரை ஈமான்


நாம் வாழும் காலங்கள் நம்முடைய அடையாளங்களை பதிவு செய்கிறது.  அந்த அடையாளங்கள் தான் நம் மரணத்திற்கு பின்னும் நம்மை பற்றி பேசப்படுவதற்கு காரணமாகிறது.

إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ) [يَس: 12].
நம்மை விடைபெற்ற ரமலான் நமிடம் சில அடையாளங்களை விட்டுச்செல் கிறது.அந்த அடையாளங்களை எடுத்துக்கொண்டு காலமெல்லாம் ரமலானாக நினைத்துக்கொண்டு அமல் செய்ய வேண்டும்.
அமலுக்கு ஓய்வு என்பது கிடையாது.அமலுக்கான ஓய்வு மரணம் மட்டும் தான்.

ஒரு அமலின் முடிவில் இன்னும் உற்சாகமாக அமல்செய்ய தயாராக வேண்டும்.
فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ * وَإِلَى رَبِّكَ فَارْغَبْ) [الشَّرْحَ: 7- 8]

அல்லாஹ்விடம் தவ்பா செய்தபிறகு பாவத்தை தொடர்ந்து செய்வது எழுபது பாவங்களை விடவும் அறுவறுப்பானதாகும்
அவ்வாறு வணங்களை செய்தபிறகு பாவமான வாழ்வை துடர்வது மிகவும் துர்ப்பாக்கியமாகும்.

(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلا تُبْطِلُوا أَعْمَالَكُمْ)

முஃமின்களே! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்.     இன்னும் உங்களின் அமல்களை அழித்துவிடாதீர்கள்.
அமல்கள் செய்யும் பருவகாலங்கள் விடைபெற்றாலும் அமல்கள் நம்மிடமிருந்து விடைபெறாது.


قال علي -رضي الله عنه-: "كونوا لقبول العمل أشدّ اهتمامًا منكم بالعمل

அமல்கள் செய்வதைவிடவும் அது அதுகபூலாக வேண்டும் என்ற கவலையை அதிகமாக்குங்கள் என அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.


قال سلمة بن دينار -رحمه الله-: "الخوف على العمل أن لا يُتقبّل أشد من العمل

அமலைவிடவும் அங்கீகரிக்கப்படும் விஷயத்தில் அதிகமாக பயப்பட வேண்டும் என சல்மா இப்னு தீனார் ரஹ் அவர்கள் கூறுகிரார்கள்.
ரமலானை மட்டும் வணக்கவழிபாடுகளால் அழங்கரித்தவர்கள் பற்றி ஸாலிஹீன்களான நல்லோர்களிடம் வினவப்பட்டபோது
அவர்கள் அல்லாஹ்வை ரமலானில் மட்டும் அறிந்துகொண்டார்கள் என்று கூறினர்.

كما قال بعضهم: ثواب الحسنة الحسنة بعدها. كما أن من عمل حسنة ثم أتبعها بسيئة كان ذلك علامة على رد الحسنة التي عملها وعدم قبولها.

ஒரு நன்மையை தொடர்ந்து நன்மை செய்வதே அந்த முதல் நன்மைக்கான கூலியாகும்.அதைப்போலவே ஒரு நன்மையை தொடர்ந்து பாவம் செய்வது அந்த நன்மை ரத்து செய்யப்பட்டுவிட்டது,மேலும் அது கபூல் இல்லை என்பதற்கான அடையாளமாகும் என சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ما تكلم أهل العلم عن معنى قول النبي -عليه الصلاة والسلام-: "الحج المبرور ليس له جزاء إلا الجنة"، قالوا: والحج المبرور هو الذي يكون حاله بعد الحج خيرا من حاله قبل الحج، يعني في صلاته وعبادته ولسانه وسلوكه، وهذا من علامات قَبول الحج.

மப்ரூரான ஹஜ்ஜிக்கான கூலி சுவனத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்ற ஹதீஸின் விரிவுரையில் முஹத்திஸீன்கள் கூறும்போது-
ஹஜ்ஜுக்கு பின் உள்ள வாழ்க்கை ஹஜ்ஜுக்கு முன் உள்ள வாழ்வை விடவும் வணக்க வழிபாடுகள் அதிகமானால் அதுவே ஹஜ் மப்ரூரான அடையாளமாகும் என்று கூறுகின்றனர்.

كذلك من علامات قبول الصيام أن يؤثر رمضان فيك، وإن كنت خلال رمضان امتنعت عن مشاهد أشياء محرمة فينبغي أن تستمر على ذلك بعد رمضان، وإن كنت خلال رمضان تشهد صلاة الفجر في المسجد فينبغي ان تستمر عل هذا العمل الصالح بعد رمضان.
அவ்வாறு நோன்பு கபூலான அடையாலம் என்ன வெனில் ரமலான் உன் வாழ்வில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுத்தவேண்டும்.உதாரணமாக ரமலானில் ஹராம் விஷயத்தில் கவனமாக பேனுதலாக இருந்தாய்.அதேநிலை ரமலான் அல்லாத காலத்திலும் தொடரவேண்டும்.
ரமலானில் பஜ்ர் தொழுகையை விடவில்லை.அதைப்போலவே ரமலான் அல்லாத காலத்திலும் பஜ்ரை தவறவிடாமல் தொடர்ந்தால் ரமலான் கபூலிய்யத்தின் அடையாளமாகும்.
ரமலான் காலத்தில் வித்ரு மற்றும் இரவுத்தொழுகையில் மிகுந்த பேனுதலை கடைபிடித்து வந்தோம்.
இன்ஷா அல்லாஹ் மற்ற காலத்திலும் தஹஜ்ஜுத் மற்றும் வித்ரில் அதே நிலையை பேணவேண்டும்.

وقال -صلى الله عليه وسلم-: "لا يحافظ على الوتر إلا مؤمن وعليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وقربة إلى ربكم وإن قيام الليل مطردة للداء عن الجسد".

ஒரு முஃமின் வித்ர் தொழுகையில் பேணுதலை கடைபிடிக்க வேண்டும். இன்னும் இரவுத்தொழுகையையும் வழமையாக்குங்கள்,ஏனெனில் அது உங்களின் முன்னோர்களான நல்லோர்களின் வழமையாகும்.உங்களின் இறைவன் பக்கம் உங்களை நெருக்கமாக்கி வைக்கும்.மேலும் நோயில்லாத ஆரோக்கியமான வாழ்வை தரும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.


قِيلَ لِلْحَسَنِ الْبَصْرِيِّ -رَحِمَهُ اللَّهُ تَعَالَى-: مَا بَالُ الْمُتَهَجِّدِينَ مِنْ أَحْسَنِ النَّاسِ وُجُوهًا؟! قَالَ: "لِأَنَّهُمْ خَلَوْا بِالرَّحْمَنِ فَأَلْبَسَهُمْ مِنْ نُورِهِ نُورًا".

தஹஜ்ஜுத் தொழுபவர்களின் முகம் பிரகாசமாக இருக்க காரணம் என்ன என இமாம் ஹஸன்பஸரி ரஹ் அவர்களிடம் கேட்டபோது-
அல்லாஹ்வை அவர்கள் இரவில் தனியாக சந்திப்பதால் அவனின் ஒளியை அவர்களுக்கு ஆடையாக அணிவிக்கிறான் என கூறினார்கள்.
உலகில் அமல் செய்தவர்கள் எல்லாம் பாக்கியவான்கள் அல்ல.அந்த அமலை தன் மரணம் வரை நீடிக்கச்செய்தவர்களே பாக்கியசாலிகள்.
இதோ தன் வாழ்வில் அமல் செய்யும் நஸீப் கிடைத்தும் ஈமானுடன் தன் இறுதி மூச்சை அடையும் நஸீப் கிடைக்காதவர்கள்.
அல்லாஹ் பாதுகாப்பானாக!

وعن انس رضي الله عنه أن رجلا كان نصرانيا فأسلم وكان يكتب الوحي لرسول الله صلى الله عليه وسلم ,فذهب إلى جمع من اليهود فارتد عن الدين وجعل يتنقص النبي عليه الصلاة والسلام ,ويتنقص كتابته الوحي ,ويقول مايعرف محمد إلا ماكتبت له ,فدعاء النبي صلى اله عليه وسلم عليه قال [ اللهم اجعله آية فلم يلبث أن مات فدفنوه فأصبحوا وقد لفضته الارض ,قالوا هذا من فعل محمد واصحابه ,ثم دفنوه واعمقوا فأصبحوا قالوا : هذا من فعل محمد واصحابه فأعمقوا اكثر ما استطاعوا في الأرض ودفنوه فلما اصبحوا وإذا قد لفظته الأرض فوقها قالوا والله هذا ماهو بفعل بشر ,فتركوه تمر به الكلاب وتفتح رجليها على وجهه وتبول على وجهه , نعم هذا جزاء من يؤذي الله ورسوله صل الله عليه وسلم

ஹழ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கிருஸ்துவராக இருந்த ஒருவர் இஸ்லாத்தை தழுவி,வஹியை எழுதும் காதிபுல் வஹ்யாகவும் இருந்தார்.
அவர் ஒரு யூத கூட்டத்திடம் சென்று மதம் மாறி,பெருமானாரை குறித்து இழிவாக பேசினார்.
முஹம்மதுக்கு நான் எழுதியதை தவிர வேறு எதுவும் தெரியாது என்றார்.
அதை கேள்விப்பட்ட பெருமானார், யா அல்லாஹ்!என்னை கேலி செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு இவனை அடையாளமாக ஆக்குவாயாக!என பத்துஆச்செய்தார்கள்.
அவன் மரணித்தான்.மக்கள் அவன் உடலை புதைத்தபோது பூமி துப்பிவிட்டது.  இது முஹம்மத் மற்றும் அவரின் தோழர்களின் செயல் என்று மக்கள் சொன்னார்கள்.
மீண்டும் ஆழமாக குழி தோண்டி புதைத்தார்கள்.மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவன் உடல் பூமிக்கு மேல் கிடந்தது.
மூன்றாவது தடவையும் புதைத்தபோது அவன் உடலை பூமி ஏற்றுக்கொள்ளவில்லை.அப்போது மக்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது மனித செயல் அல்ல.என்று கூறி அப்படியே விட்டுவிட்டார்கள்.      அவன் உடல் மீது நாய்கள் சிறுநீர் கழித்தது.
அல்லாஹ்வின் ரஸூலை நோவினை செய்பவர்களின் உலக முடிவு கெட்டதாகும்.
إنا كفيناك المستهزئين

நபியே!உம்மை கேலி செய்பவர்களை நாம் பார்த்துக்கொள்வோம் என்று அல்லாஹ் வாக்களித்தான்.
சூரியனை பார்த்து குரைக்கும் நாய்களைப்போல் பரிசுத்தமான அந்த பூமான் மீது சேற்றை அள்ளிவீசப்பார்கின்றனர்.

وذكر الشيخ احمد شاكر رحمه الله ,عن خطيب كان بمصر وكان فصيحا متكلما مقتدرا ,فصلى معه يوما أحد امراء مصر بعدما كرموا "طه حسين " فاراد هذا الخطيب أن يمدح هذا الأمير فقال ..
جاءه الاعمى فما عبس وما تولى

.يمدح هذا الأمير ويتنقص نبينا صل الله عليه وسلم قال :فلما انتهت الخطبة والصلاة قام الشيخ محمد شاكر رحمه الله , ابو احمد شاكر , قال : ايها الناس حسبكم لا تخرجوا من المسجد ,اعيدوا صلاتكم فإنكم صليتم وراء رجل مرتد ,إذ تنقص رسول الله صل الله عليه وسلم أو عرض به ارتد عن الدين ..قد صليتم خلف مرتد ,فأعيدوا صلاتكم , قال احمد شاكر : فوالله مازالت الايام بذلك الخطيب حتى اذله الله ,ورأيت بعيني يقف عند باب جامع من جوامع مصر يستلم احذية الناس يحفظها لهم بالقرش والقرشين , صار يشتغل اقل من خادم ! يحمل احذيتهم ويحفظها لهم حتى تنتهي الصلاة بالقرش والقرشين قال والله لقد رايته بعيني


அஹ்மத் ஷாகிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
எகிப்தில் திறமையான கதீப் ஒருவர் இருந்தார்.அற்புதமான பேச்சாளர்.      ஒரு நாள் எகிப்தின் அதிகாரிகளுக்கு தொழுகை நடத்தினார்.தொழுகை முடிந்து அதிகாரிகளை புகழ்ந்து ஒரு பிரசங்கம் செய்தார்.அதில்  இந்த அமீர் எப்படிப்பட்டவர் என்றால் அவரிடம் பார்வை தெரியாதவர் வந்தார்.அவரை கடிந்து கொள்ளவுமில்லை,புறக்கனிக்கவுமில்லை.என்றார்.
(அதாவது நாயகத்தை குறைத்தும் அமீரை உயர்த்தியும் பேசினார்)       அப்போது தொழுகையும் குத்பாவும் முடிந்தபோது அபூ அஹ்மத் ரஹ் அவர்கள் எழுந்து மக்களே!யாரும் பள்ளியை விட்டு வெளியாக வேண்டாம்.நீங்கள் ஒரு முர்தத்துக்கு பின் தொழுதிருக்கிறீர்கள்.உங்கள் தொழுகையை திருப்பி தொழுங்கள்.நாயகத்தை அவமரியாதையாக பேசியவன் சந்தேகமின்றி மதம் மாறியவன்.என்றார்கள்.
நாட்கள் கழிந்தது.அந்த கதீப் எகிப்தின் பள்ளிவாசல்களில் ஒருசில காசுகளுக்காக மக்களின் செருப்புகளை சுத்தம்செய்து, பாதுகாக்கும் இழிவான நிலையை என் கண்ணால் கண்டேன் என அஹ்மத் ஷாகிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلأَبْتَرُ




Thursday, 8 August 2013

தொடர்ந்து அமல் செய்யுங்கள்


وَلَا تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِن بَعْدِ قُوَّةٍ أَنكَاثًا


நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் இவ்விஷயத்தில் மதிகெட்ட) ஒரு பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள் - அவள் நூலை நூற்று நன்கு முறுக்கேற்றிய பிறகு, தானே அதைத் (தறித்து) துண்டு துண்டாக்கி விட்டாள்;

عن سفيان بن عبد الله الثقفي رضي الله عنه قال:قلت يا رسول الله قل لي في الإسلام قولاً لا اسأل عنه أحداً بعدك قال : ( قل آمنت بالله ثم استقم ) رواه مسلم .

சுப்யான் இப்னு அப்துல்லாஹ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் நபி ஸல் அவர்களிடம் வந்து,அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு இஸ்லாம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்.உங்களுக்கு பின்னால் வேறு யாரிடமும் கேட்கமாட்டேன் என்று கூறினேன்.
அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்டேன்.என்று கூறி,அதில் நிலைத்து உறுதியாக நின்று விடு என்றார்கள்.

புனிதமிக்க ரமலான் மூன்று வகையான முஃமின்களை பார்த்திருக்கிறது.

முதலாவது:இவர்கள் ரமலானுக்கும் முன்னும் வணக்காசாளிகள்.ரமலானையு  ம் வணக்கத்தில் கழித்தவர்கள்.ரமலானுக்கு பின் இன்னும் அதிகமாக தங்களை வணக்கத்தில் ஈடுபடுத்திக்கொள்வார்கள்.

இரண்டாவது:இவர்கள் ரமலானுக்கு முன் வணக்கம் செய்ய மாட்டார்கள். ஆனால் ரமலானை பயனுள்ள இபாதத்தில் கழிப்பவர்கள்.ரமலான் இவர்களை விடைபெற்று விட்டால் தங்களின் அமலுக்கும் விடை கொடுத்துவிடுவார்கள் இப்படிப்பட்டவர்கள் பற்றியே நான் கூறிய முதல் வசனம் எச்சரிக்கிறது.
சுறுக்கமாகச்சொன்னால் இவர்கள் ரமலானை தந்த ரப்பை வணங்காமல் ரமலானை வணங்கிய கூட்டம்.

மூன்றாவது:இவர்களுக்கு ரமலானும் ரமலான் அல்லாத காலமும் ஒன்றே.   எந்த வித்தியாசமுமின்றி பாவத்தில் தங்கள் வாழ்வை கழிப்பவர்கள்.   இப்படிப்பட்டவர்கள் படுநாசத்திற்குறியவர்கள் என ஹதீஸ்களில் எச்சரிக்கை வந்துள்ளது.

எந்த அமலை செய்தாலும் அதை நிறந்தரமாக செய்யும்போதே அதன் பலனை பெற்றுக்கொள்ள முடியும்.ஆனால் இன்று நிரந்தரத்தன்மை என்பது எல்லா காரியத்திலும் அரிதாகி வருகிறது.

عن أنس ابن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: «يأتي على الناس زمان، الصابر فيهم على دينه كالقابض على الجمر»,

மக்களுக்கு ஒருகாலம் வரும் அதில் தன் தீனில் நிலைத்திருப்பது நெருப்பு கங்கை கையில் பிடித்திருப்பது போல கடினமானது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

نَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّـهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ

நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.

இந்த தீனில் நாம் இஸ்திகாமத்தாக இருப்பதற்கு நாம் ஒரு உறுதி எடுக்க வேண்டும்.அது ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் எடுத்த உறுதிமான
மாகும்.

அந்த உறுமானம் இதுதான்:

اينقص الدين وانا حي  நான் உயிருடன் இருக்கும் வரை என் தீனுக்கு எந்த குறைபாடு ஏற்பட விடமாட்டேன்.

இதை நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுக்கவேண்டும்.

அல்லாஹ் நாம் விரும்பாமல், கேட்காமல், எந்த தியாகமும் செய்யாமல் இந்த தீனை வழங்கினான்.அந்த தீனின் கண்ணியத்தை பாதுகாப்பது நாம் அனைரின் மீதும் கடமையாகும்.

நம் சொல்லால்,செயலால்,நடத்தையால் இந்த தீனுக்கு எந்த இழுக்கையும் ஏற்படுத்திவிடக்கூடாது.ஒரு முஃமின் தன் கண்ணியத்தை பாதுகாப்பது எவ்வளவு கடமையோ அவ்வாறு தன் ரப்பின் கண்ணியத்தையும்,அல்லாஹ்வின் தூதரின் கண்ணியத்தையும் பாதுகாப்பது கடமையாகும்.

உஹது போரில் முதல் காட்சி:

في غزوة أحد عصا الرماة أمر رسول الله صلى الله عليه وسلم، فانقلبت الدائرة على المسلمين، وصعد رسول الله صلى الله عليه وسلم فوق جبل أحد، وأشرف أبو سفيان فقال: أفي القوم محمد؟ فقال الرسول صلى الله عليه وسلم: «لا تجيبوه». فقال: أفي القوم ابن أبي قحافة؟ قال: «لا تجيبوه». فقال: أفي القوم ابن الخطاب؟ فقال: إن هؤلاء قتلوا، فلو كانوا أحياء لأجابوا.

فلم يملك عمر نفسه، فقال: كذبت يا عدو الله، أبقى الله عليك ما يخزيك. قال أبو سفيان: اُعْلُ هُبَل. فقال النبي صلى الله عليه وسلم: «أجيبوه». قالوا: ما نقول؟ قال: «قولوا الله أعلى وأجل». قال أبو سفيان: لنا العزى ولا عزى لكم. قال النبي صلى الله عليه وسلم: «أجيبوه». قالوا: ما نقول؟ قال: «قولوا الله مولانا ولا مولى لكم». قال أبو سفيان: يوم بيوم بدر، والحرب سجال، وتجدون مُثْلةً لم آمر بها ولم تسؤني(

صحيح البخاري

உஹது போர்க்களத்தில் ஒரு காட்சி:

நபி ஸல் அவர்களின் கட்டளைக்கு சஹாபிகளில் ஒரு சின்ன கூட்டம் மாறு செய்தபோது போரின் போங்கு முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பி  விட்டது.

நபி ஸல் அவர்களும் அவர்களின் தோழர்களும் உஹது மலைக்குமேல் ஏறி,ஒரு பாறைக்கு பின் மறைந்திருந்தார்கள்.

இப்போது எதிரிகளின் தலைவரான அபூஸுப்யான் அவர்கள்-
முஹம்மத் இருக்கிறாரா?என்று சப்தமிட்டார்.நபி ஸல் அவர்கள் பதில் சொல்ல வேண்டாம் என தம் தோழர்களுக்கு கூறினார்கள்.

அபூ குஹாபாவின் மகன் அபூபக்கர் இருக்கிறாரா?என அபூ ஸுப்யான் மீண்டும் குரல் கொடுத்தார்.

இப்போதும் பதில் சொல்ல வேண்டாம் என நபி ஸல் அவர்கள் தடுத்து விட்டார்கள்.

கத்தாபின் மகன் உமர் இருக்கிறாரா?என மூன்றாவது சப்தமிட்டார்.  இதற்கும் பதில் இல்லாத போது –இவர்கள் அனைவரும் மரணித்துவிட்  டார்கள்,இவர்கள் உயிருடன் இருந்தால் பதில் சொல்லி இருப்பார்கள் என அபூ ஸுப்யான் அவர்கள் இறுமாப்புடன் கத்தியதும்-

பொறுக்க முடியாத உமர் ரலி அவர்கள்,

அல்லாஹ்வின் விரோதியே!நீ பொய் சொல்கிறாய்.நாங்கள் மடிந்துபோ  கவில்லை.அல்லாஹ் உம்மை இழிவுபடுத்த எங்களை உயிருடன் தான் வைத்துள்ளான் என சப்தமிட்டார்கள்.

ஹுபல் எனும் தெய்வம் உயர்ந்துவிட்டது.என அபூ ஸுப்யான் சப்தமிட்டார்.அதைக்கேட்ட நபி ஸல் அவர்கள்-இப்போது அவருக்கு பதில் சொல்லுங்கள் என்று தம் தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

எப்படி பதில் சொல்வது?என ஸஹாபாக்கள் கேட்டார்கள்.

அல்லாஹ்வே உயர்ந்தவன்,கண்ணியமானவன் என்று கூறுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அவ்வாறு கூறியதும்-எங்களுக்கு உஸ்ஸா எனும் தெய்வம் இருக்கிறது உங்களுக்கு இல்லை என அபூ ஸுப்யான் சொன்னார்.

இதைக்கேட்ட நபி ஸல் அவர்கள் அவருக்கு பதில் சொல்லுங்கள் என மீண்டும் தம் தோழர்களுக்கு உத்தரவிட்டபோது-எப்படி பதில் சொல்வது  என ஸஹாபாக்கள் கேட்டனர்.

எங்களுக்கு அல்லாஹ் மவ்லாவாக இருக்கிறான்,உங்களுக்கு இல்லை என்று சொல்லுங்கள் என கூறினார்கள்.

அவ்வாறு சொன்னதும் அபூஸுப்யான்,

இது பத்ருக்கு பகரமாக பழி தீர்க்கும் நாள்,போர் என்பது இருபக்கமும் சாதகமான தன்மை கொண்டது,மேலும் இந்த போரில் எங்கள் தொண்டகள் உங்களின் தோழர்களை சித்திரவதை செய்தனர், அவ்வாறு செய்யச்சொல்லி நான் உத்தரவிடவில்லை.இதில் என்னை தவறாக எண்ணவேண்டாம் என கூறினார்.

இதன் மூலம் ஒரு செய்தியை அழுத்தமாக முஸ்லிம்கள் தங்களின் மனங்களில் பதிய வைக்கவேண்டும்.அது என்னவெனில்,
உஹது போரில் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கடியானநிலை ஏற்பட்டபோதும்-அல்லாஹ்வின் கண்ணியத்திற்கு அவமையாதை செய்யப்படுவதை முஸ்லிம்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ளகூடாது என தம் தோழர்களுக்கு கட்டளையிட்டார்கள்,
தம் உயிரை கொடுத்தேனும் அல்லாஹ்,ரஸூலின் கண்ணியத்தை காப்பது முஸ்லிம்களின் மீது கடமையாகும்.

உஹதில் இரண்டாவது காட்சி:

ولما كان في معركة احد وقتل اكثر اصحابه بين يديه صلى الله عليه وسلم,وجلس صلى الله
عليه وسلم بعد المعركه ينظر في شأنهم وهو صلى الله عليه وسلم به جروح ودماء ,قال عليه الصلاة والسلام [ من ينظر لي ماذا فعل سعد ابن الربيع ] ,رجل تاجر من سادة الأنصار له زوجتان وابناء ,ومال وزع ,قال: [من ينظر لي ماذا فعل سعد ابن الربيع ,ما فعل احي هو ام في الاموات ] , فمضى بعض الصحابة ينظر في القتلى فوجد سعد ابن الربيع قد وطئته الخيل وقد اصابته الجراح ,وسلاحه بجانبه وهو يلفظ انفاسه , فحركه قال: [ ياسعد ان رسول الله صلى الله عليه وسلم امرني أن انظر هل انت في الاحياء أم في الاموات ,فقال سعد : ابلغ رسول الله صلى الله عليه وسلم عني السلام وقل له : ان سعد في الاموات وقل له : جزاك الله خير ما جزاء نبيا عن امته ,وقل لقومي من الانصار لا عذر لكم عند الله إن خلص إلى رسول الله صلى الله عليه وسلم وفيكم عين تطرف ],ثم فاضت روحه إلى باري
 ويعود الصحابي ويبلغ النبي صلى الله عليه وسلم الرسالة ويقول: يا رسول الله، مات سعد بن ربيع ويبلغك السلام، ويبلغ الأنصار السلام، ويقول لهم لا عذر لكم إن خلص إلى رسول الله وفيكم عين تطرف، فقال النبي صلى الله عليه وسلم: رحمك الله يا سعد نصحت لله حيا وميتا

உஹது போர்களம்.ஸஹாபாக்களில் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.போருக்குப்பின் நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களிடம்,சஃது இப்னு ரபீஃ என்ன ஆனார்?அவரைப்பற்றி செய்தி கொண்டுவாருங்கள் எனஉத்தரவிட, ஒரு ஸஹாபி அவரை தேடிச்சென்றார்கள்.
(யார் அந்த சஃது?அவர் ஒரு வியாபாரி.மதீனாவின் தலைவர்களில் ஒருவர்.அவருக்கு இரு மனைவிமார்களும்,பிள்ளைகளும்,விவசாய நிலங்களும் உண்டு)
அப்பொழுது தேடிச்சென்ற அந்த சஹாபி, குதிரையால் மிதிபட்ட நிலையில் கொலைசெய்யப்பட்டவர்களில் சஃதை(ரலி) காண்கிறார்.உடலில் அதிக காயங்கள்.அவருக்கருகில் அவரின் ஆயுதங்கள்.
மூச்சு விட போராடிக்கொண்டிருந்த சஃது (ரலி) அவர்களை தேடிச்சென்ற அந்தசஹாபி, அவர் உடலை அசைத்து,
சஃதே! நபி ஸல் அவர்கள், நீங்கள் உயிருடன் இருக்கிறீரா? அல்லது மரணித்து விட்டீரா? என பார்த்துவிட்டு வரச்சொன்னார்கள்.என்று கூறினார்.  அப்போது சஃது (ரலி)  அவர்கள்,
அல்லாஹ்வின் தூதருக்கு என் சலாமை எத்திவையுங்கள்.  சஃது மரணித்தவர்களில் சேர்ந்துவிட்டார் என்று சொல்லுங்கள்.அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு நபிக்கும் அவர்களின் உம்மத்துக்காக கொடுக்கும் கூலிகளில் மிகச்சிறந்த கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான் என்று என் கண்மணியிடம் சொல்லுங்கள்.குறிப்பாக என் சமுதாயமான அன்ஸாரிகளிடம் சொல்லிவிடுங்கள். உங்கள் கண் முன் அல்லாஹ்வின் தூதருக்கு ஒரு இழிவும் ஆபத்தும் வருமானால் எந்த காரணத்தை சொல்லியும் அல்லாஹ்விடமிருந்து நீங்கள் தப்பிக்கவே முடியாது
இந்த செய்தியை பெருமானாரிடம் எத்திவைத்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஃதே!அல்லாஹ் உமக்கு ரஹ்மத் செய்வானாக.நீர் வாழும்போதும் மரணித்தபோதும் நல்லதையே சொன்னீர்.என்று கூறினார்கள்.
உலகில் எங்கும் தோழர்கள் தம் தலைவர் மீது இந்தளவு அன்பு கொள்வதை பார்த்திருக்க முடியாது.
அல்லாஹ் இந்த தீனின் கண்ணியத்தை பாதுகாப்பானாக!ஆமீன்.




Wednesday, 7 August 2013

பெருநாள் சிந்தனை-ஏழைகளின் திருநாள்


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமலான் மாத நோன்பை  நோற்று, அதனை பூரணப்படுத்தி, இன்றைய தினம் நோன்பு பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் உஸ்மானிகள் பேரவை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து
க்கொள்கிறோம்.

முஸ்லிம்கள் தம்மிடையே உள்ள கருத்துவேறுபாடுகளை கடந்து ஒற்றுமை, சகோதரத்துவத்தை நிலைநிறுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இன்றைய தினத்தில் யூத,கிருத்துவ,இணைவைப்புச்சக்திகள் இஸ்லாத்திற்கு எதிராக கைகோர்த்து களமிறங்கியிருக்கிறது.அதேசமயம் சர்வதேச அளவில் இஸ்லாத்திற்கான எதிர்காலம் பிரகாசமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது.  அதன் முன் காட்சிகள் தான் அரபுலக வசந்தம்!

எகிப்தின் அரசியல் மாற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் இஸ்லாத்திற்கான பின்னடைவு அல்ல.எகிப்தின் அரசியல் சூழ்ச்சிக்கு பின்புலத்தில் அமெரிக்க,  இஸ்ரேலிய சக்திகள் இருக்கலாம்.மறுப்பதற்கில்லை.

இஸ்லாம் வாகை சூடும் அந்த பொன்னாளை தள்ளி போடலாம்,ஒருகாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.இன்ஷா அல்லாஹ் இனி இஸ்லாம் வெல்லும் என்ற நற்செய்தியை இப்பெருநாள் வாழ்த்தாக கூறிக்கொள்கிறோம்.

உலக நாடுகளிலும் உள்நாட்டிலும் நோய்,வறுமை,சிறைவாழ்க்கை,அச்சுறுத்தல் போன்ற பல்வேறு காரணங்களினால் துன்பத்திலும் துயரத்திலும் அல்லல்படும் முஸ்லிம்களின் வாழ்வு நலன்பெற இப்பெருநாள் தினத்தில் துஆச்செய்யுமாறு பேரவை உங்களை கேட்டுக்கொள்கிறது.ஏனெனில் பலஸ்தீனத்திலும், மியன்மாரிலும் மட்டுமன்றி அரபுலக நாடுகளிலும் வாழும் பல முஸ்லிம்கள், ஆட்சியாளர்களினாலும், கிளர்ச்சிகளினாலும் பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

اللهم لا تسلط علينا من لا يخافك و لا يرحمنا

யா அல்லாஹ்!உன்னை அஞ்சாத, எங்கள் மீது இறக்கம் காட்டாத ஆட்சியாளர்களை எங்களின் மீது சாட்டிவிடாதே! ஆமீன்

இஸ்லாமிய பார்வையில் ஈதுப்பெருநாட்கள் மிக உயர்ந்த லட்சியத்தையும்,மகத்தான நோக்கத்தையும் அடிப்படையாக கொண்டதாகும்.

ஒவ்வொரு முஸ்லீமும் தன் சந்தோஷத்தை மட்டுமே பிரதான நோக்கமாக கொள்ளாமல் பிறரையும் மகிழ்ச்சிப்படுத்தும் பின்னனி கொண்டது.

இஸ்லாமிய பண்டிகைகளில் ஆட்டம் பாட்டத்திற்கோ,வீண்கேளிக்கைகளுக்கோ,விரயங்களுக்கோ இடமில்லை.

இஸ்லாத்தில் இரு ஈதுப்பெருநாட்களும் கடமையான வணக்கத்தின் முடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

நோன்பை நிறைவு செய்கிறபோது ஈதுல்பித்ரையும்,ஹஜ்ஜை நிறைவு செய்கிறபோது ஈதுல்அள்ஹாவையும் அல்லாஹுத்தஆலா இந்த உம்மத்துக்கு தந்துள்ளான்.

அவனை வணங்குவதற்கு வாய்ப்பளித்த அந்த வல்ல நாயனை பெருமைப்படுத்தவும்,நன்றிகூறவும்,நினைவுகூறவுமே முஸ்லீம்கள் ஒன்று கூடுகின்றனர்.
அதனால் தான் ரமலானை நிறைவு செய்யும்போது அல்லாஹுத்தஆலா,

وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ [البقرة: 185

எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது) என்று கூறுகிறான்.

அதைப்போல ஹஜ்ஜை நிறைவு செய்யும்போது,

وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ) [البقرة: 203]

குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள் என்று கூறுகிறான்.

புத்தாடைகள் அணிவதோ,நறுமணங்களை பூசிக்கொள்வதோ மட்டும் ஈதின் நோக்கமல்ல,மாறாக படைத்தவனையும்,படைப்புக்களையும் சந்தோஷப்படுத்துவதே உண்மையான நோக்கமாகும்.
அதனால் தான் இமாம் ஹஸன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
                      
يقول الحسن -رحمه الله-: "كل يومٍ لا نعصِي اللهَ فيه فهو عيد، وكلُّ يومٍ نقضِيه في طاعة الله -جل وعلا- فهو عيدٌ

அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாத ஒவ்வொரு நாளும்,அவனுடைய வணக்கத்தில் கழிகிற ஒவ்வொரு நாளும் உனக்கு ஈது தான்.
இஸ்லாம் மகிழ்ச்சிக்கு தடைபோடவில்லை,அல்லாஹ்வை மறக்கடிக்கிற சந்தோஷம் வேண்டாம் என்று தான் சொல்கிறது.
ஒரு அறிஞன் சொன்னான்: இந்த உலகில் நீ எதை இழந்தாலும் அதற்கு பகரம் உண்டு!ஆனால் நீ அல்லாஹ்வை இழந்துவிட்டால் அதற்கு பகரமே கிடையாது.

பெருநாள் என்பது ஒரு முஸ்லிம் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவிக்கும் நாளல்ல!மேலும் அல்லாஹ்வுடன்  உள்ள நம் உறவை முறித்துக்கொள்ளும் நாளுமல்ல.தக்பீர்தான் பெருநாள் தினத்தின் பெரு முழக்கமாகும்.அதுவே நம் கொள்கையின் பிரகடனமாகும்.

அதனால் தான் ஒரு முஸ்லிமின் வாழ்வின் முக்கிய தருனங்களில் தக்பீருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
பாங்கில்,இகாமத்தில்,தொழுகையில்,போராட்டத்தில்,போர்களத்தில், அனைத்திலும் தக்பீர்மயம்.

زينوا أعيادكم بالتكبير உங்களின் ஈதுப்பெருநாட்களை தக்பீரக் கொண்டு அழகுபடுத்துங்கள் என நபி ஸல்  அவர்கள் கூறினார்கள்.
எனவே இன்றய தினத்தில் முதலாவதாக அல்லாஹ்வை பெருமைப்படுத்துவோம்.

அல்ஹம்து லில்லாஹ்!அல்லாஹ்வின் அளவிலா கருணையாலும் நிகரில்லா கிருபையாலும் ரமலான் மாதத்தை அடைந்து கொண்டோம்.அமல் செய்தோம்.
அமலுக்கான கூலியை எதிர்நோக்கி இருக்கிற இந்த நாளில் அல்லாஹ்விடம் இருகரமேந்தி மனமுருகி கேட்கவேண்டிய ஒன்று உண்டு.

அது அமலுக்கான அங்கீகாரம்!

ஒவ்வொரு இபாதத்தின் முடிவிலும் கபூலிய்யத்தின் கவலை வேண்டும்.நாம் செய்யும் வணக்கத்திற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையானால் வணக்கம் பயனற்றுப்போய்விடும்.

அமல் என்பதும் அங்கீகாரம் என்பதும் தனித்தனியான நிஃமத்தாகும். அல்லாஹ் சிலருக்கு அமல் செய்யும் நஸீபை வழங்குவான் ஆனால் அங்கீகாரம் வழங்கமாட்டான்.

ஆயிரம் ஆண்டுகள் வணக்கம் புரிந்த இப்லீஸின் வணக்கத்திற்கு அல்லாஹ் விடம் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது.

அல்லாஹ்வின் கபூலிய்யத் கிடைக்காமல் தங்களின் ஈமானை இழந்த வணக்கசாலிகள் பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது.
ஸஃலபா எனும் நபித்தோழர் முதல் பல்ஆம் இப்னு பாஊரா எனும் இறைநேசர் வரை பட்டியல் நீளமானது.

அல்லாஹ்வின் அங்கீகாரம் கிடைக்க சிலநேரங்களில் ஒரு சின்ன அமலும் காரணமாக ஆகிவிடலாம்.தாகித்த நாயிக்கு தண்ணீர் புகட்டிய ஒரு விபச்சாரியின் அமல் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்றதால் அவளுக்கு சுவனத்தை பெற்றுத்தந்தது.

அமலுக்கான அங்கீகாரம் யாருக்கு கிடைக்கும்?
இதோ அல்லாஹ்வின் வசனத்தை கவனியுங்கள்...

إِنَّمَا يَتَقَبَّلُ اللَّـهُ مِنَ الْمُتَّقِينَ

"மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்" என்று (ஹாபீல்) கூறினார்.

அச்சமுள்ளவருக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என்பதை புரிந்துகொள்ள இவ்வசனம் ஒன்றே போதுமானது.அதனால் தான் நபிமார்கள்,ஸஹாபாக்கள் ஸாலிஹீன்கள் ஒரு அமலை துவக்கும்போதும் முடிக்கும்போது அல்லாஹ் ஏற்றுக்கொள்வதை கேட்பார்கள்.

عَنْ وُهَيْبِ بْنِ الْوَرْدِ، قَالَ: قَرَأَ { وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا }  زَادَ ابْنُ خُنَيْسٍ فِي حَدِيثِهِ، ثُمَّ يَبْكِي، فَقَالَ وُهَيْبٌ: يَا خَلِيلَ الرَّحْمَنِ تَرْفَعُ قَوَائِمَ بَيْتِ الرَّحْمَنِ وَأَنْتَ مُشْفِقٌ أَنْ لا يَقْبَلَ مِنْكَ"

அல்லாஹ்வின் நண்பரே!பைத்துல்லாஹ்வின் பணியை துவக்கும்போதே கபூலிய்யத்தை கேட்டீர்களே! என ஹழ்ரத் வுஹைப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال ابن رجب : في ( لطائف المعارف 323 ) : بعض السلف كانوا يدعون الله ستة أشهر أن يبلغهم شهر رمضان ثم يدعون الله ستة أشهر أن يتقبله

ஸலபிய்யீன்களில் சிலர் ஆறுமாதம் ரமலானை அடைவதை கேட்பார்கள்.   ரமலானை அடுத்த ஆறுமாதம் ரமலானின் கபூலிய்யத்தை கேட்பார்கள் என இப்னு ரஜப் கூறுகிறார்

خرج عمر بن عبد العزيز رحمه الله في يوم عيد فطر فقال في خطبته : أيها الناس إنكم صمتم لله ثلاثين يوما و قمتم ثلاثين ليلة وخرجتم اليوم تطلبون من الله أن يتقبل منكم

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் தங்களின் ஈது கொத்பாவில் மக்களே!நீங்கள் முப்பது நாள் பகல் காலத்தில் நோன்பு நோற்றீர்கள் இரவு காலத்தில் நின்று வணக்கம் செய்தீர்கள்.இப்போது அல்லாஹ்விடம் அது அங்கீகரிக்கப்படவேண்டும் என துஆ வேண்டி வந்துள்ளீர்கள் என கூறுவார்களாம்.

ரமலான் நமக்கு கற்றுத்தந்த முத்தான மூன்று பாடங்கள்.

1.ஹலால் ஹராமில் பேனுதலை கடைபிடித்தல்.
இது ரமலானின் நோன்பு நமக்கு கற்றுத்தரும் பயிற்சியாகும்.ஹலாலான உணவு,குடிபானம்,மனைவி இருந்தும் அல்லாஹ்வுக்காக அதை பயன்படுத்தா  மல் விலகியிருந்தோம்.ஹலாலையே அல்லாஹ்வின் திருப்திக்காக ஒதுக்கி வைக்கும் ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் எங்கும் எப்போதும் ஹராமின் பக்கம் போகக்கூடாது.
பத்தில் ஒன்பது ஹலாலாக இருந்தும் ஹராமுக்கு பயந்து நாங்கள் விலகி இருந்தோம் என உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

2.திருக்குர்ஆனுடன் உள்ள நம் தொடர்பை அதிகப்படுத்துதல்.
இந்த உம்மத்துக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆனை ரமலானில் ஓதினோம், கேட்டோம்,அதன் கருத்துக்களை சிந்தித்தோம்.
இந்த தொடர்பை ரமலான் அல்லாத காலங்களிலும் தொடரவேண்டும்.

3.நம்முடைய நேரங்களை திட்டமிட்டு அமல்களில் கழித்தல்.

ரமலான் காலங்களில் ஸஹர்,தஹஜ்ஜத்,தராவீஹ்,தொழுகை,இப்தார்,போன்ற வணக்கங்களுக்காக நம்முடைய நேரங்களை சரியாக திட்டமிட்டு அமைத்துக் கொண்டோம்.

எனவே ஈது தொழுகையின் மூலம் படைத்தவனையும்,பித்ராவின் மூலம் படைப்புக்களையும் மகிழ்ச்சிப்படுத்துவதே இப்பெருநாளின் பிரதான நோக்கமாகும்.

ஈதுல் பித்ர் ஏழைகளின் கண்ணீர் துடைப்புநாள்.ஒருநாள் வறுமை ஒழிப்பு திட்டம்.
ஏழைகளை சந்தோசப்படுத்தி அல்லாஹ்வைன் அங்கீகாரத்தை பெறுவோம்.
இதோ வரலாற்றில் ஒரு பொக்கிஷம்:

وحينما كان علي ذاهبا ليشتري طعاما قابله بعض الفقراء, فتألم لحالهم, وتصدق عليهم بالدراهم الستة التي معه, وهى ثمن الإزار(الشال) الذي باعه
و في أثناء ذهابه إلي بيته, لقيه جبريل عليه السلام في صورة إنسان ومعه ناقة من الجنة, فقال له: يا أبا الحسن اشتر منى هده الناقة.
فقال له علي: ليس معي ثمنها, ولا يمكنني شراؤها.
قال البائع: يمكنك أن تشتريها, وتدفع ثمنها فيما بعد.
فسأله علي: بكم تبيعها ?
قال البائع: بمائة درهم
فرضي علي, وقبل شراءها منه بدلك الثمن المؤجل , و اخدها, ودهب .
فقابله ميكائيل علي صورة رجل أعرابي وسأله: هل تبيع هده الناقة يا أبا الحسين ?
قال علي: نعم, أبيعها?
قال: بكم اشتريتها
أجاب علي: اشتريتها بمائة درهم.
قال ميكائيل:أنا اقبل شراؤها منك بمائة وستين درهما, فيكون ربحك ستين درهما.
فباعها علي له بدلك الثمن, ودفع له المشتري مائة وستين درهما.
فاخدها علي, ومشي إلى بيته, فلقيه في الطريق البائع الأول وهو جبريل, فسأله هل بعت الناقة يا أبا الحسن ?
أجاب علي: نعم, بعتها.
قال جبريل:اعطني حقي.
فدفع له المائة درهم, وبقي معه ستون درهما.
فدهب بها إلى بيته, ووضعها بين يدي السيدة فاطمة "رضي الله عنها".
فسألته من أين لك هدا المال !
أجاب علي تصدقت بستة دراهم على قوم الفقراء, فأعطاني الله ستين درهما, فكان ربح كل درهم عشرة دراهم."من جاء بالحسنة فله عشرة أمثالها."
ثم قابل علي الرسول صلى الله عليه و سلم, واخبره القصة.
فقال له الرسول الكريم: يا علي, البائع جبريل و المشتري ميكائيل, والناقة مركب فاطمة يوم القيامة, ثم قال له أعطيت ثلاث لم يعطها غيرك لك زوجة سيدة نساء أهل الجنة, ولك ولدان هما سيدا شباب أهل الجنة,ولك صهر هو سيد المرسلين .فاشكر الله علي ما أعطاك, وحمده فيما أولاك.

ஹழ்ரத் அலி ரலி அவர்களின் குடும்பத்தில் கடுமையான வறுமை.மூன்று தினங்கள் வீட்டில் யாரும் சாப்பிடவில்லை.இந்நிலையில் தன் பிள்ளைகளின் பசியை போக்குவதற்கு வீட்டில் இருந்த ஒரு ஆடையை விற்க முடிவு செய்தனர்.

அந்த ஆடையை 6 திர்ஹத்துக்கு விற்று உணவு வாங்குவதற்காக வந்துகொண்டிருந்த அலி அவர்களை சில ஏழைகள் சந்தித்து தங்களின் வறுமையை முறையிட்டனர்.உடனே அலி ரலி அவர்கள் தங்களின் பசியை விட மற்றவர்களின் பசிக்கு முக்கியத்துவம் அளித்து அதை ஸதகா செய்து விடுகிறார்கள்.

இந்நிலையில் ஒட்டகத்துடன் வந்த ஒருவர் அலியே!ஒட்டகத்தை விலைக்கு வாங்கிக்கொள்கிறீரா?என கேட்டபோது,என்னிடம் அதற்கு பெருமானமான விலை இல்லை என்று அலி ரலி அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒட்டகத்தின் உரிமையாளர்,இப்போது இதை வாங்கிக்கொள்ளும். உமக்கு வசதி வரும்போது பணம் கொடுங்கள் என்றார்.

அப்படியானால் ஒட்டகத்தின் விலை என்ன?என்று அலி ரலி அவர்கள் கேட்ட போது 100 திர்ஹம் என பதிலளித்தார்.எனவே தவனை சொல்லிவிட்டு அதை பெற்றுக்கொள்கிறார்கள்.

அந்த ஒட்டகத்தை பெற்றுக்கொண்டு ஹழ்ரத் அலி ரலி அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்.
அப்போது அவர்களை சந்தித்த இன்னொருவர்,அலியே!ஒட்டகம் விலைக்கு தருகிறீர்களா?என கேட்டபோது ஆம் !என்று அலி ரலி பதில் கூறினார்கள்.

நீங்கள் எவ்வளவுக்கு வாங்கினீர்?என்று கேட்டபோது 100 தீனாருக்கு என பதில் கூறினார்கள்.
அப்போது அம்மனிதர், எனக்கு இதை 160 திர்ஹத்துக்கு கொடுங்கள்.உங்களுக்கு 60 லாபம் என்றார்.
இறுதியாக வியாபாரம் நல்லபடியாக முடிந்து அதில் 100 திர்ஹத்தை ஒட்டகத்தை வாங்கிய கடன் காரருக்கு கொடுத்துவிட்டு 60 திர்ஹம் லாபத்துடன் தன் இல்லம் சென்றார்கள் அலி ரலி அவர்கள்.
வீட்டிற்கு சென்ற அலி ரலி அவர்களிடம் இந்த பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது?என அன்னை பாத்திமா ரலி அவர்கள் வினவியபோது,விபரத்தை  அலி ரலி அவர்கள் கூறினார்கள்.
அதைக்கேட்ட பாத்திமா ரலி அவர்கள் இது ஹலாலா இல்லையா?என நபி ஸல் அவர்களிடம் கேட்டபின்னர் நாம் பயன்படுத்துவோம்.என்று கூறி பெருமானாரிடம் வந்து விஷயத்தை கூறினார்கள்.
அதை முழுவதுமாக செவிதாழ்த்தி கேட்ட ஸல் அவர்கள் ,அலியே!நீங்கள் ஏழைகளுக்கு 6 கொடுத்தீர்கள்.அதை அல்லாஹ் 60 தாக திருப்பி தந்துள்ளான்  உம்மிடம் ஒட்டகத்தை விற்றவர் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள்.உம்மிடம்  இருந்து ஒட்டகத்தை வாங்கியவர் மீகாயீல் அலை அவர்கள்.அந்த ஒட்டகம் பாத்திமாவின் சுவனத்து வாகனம்.
அலியே!அல்லாஹ் உங்களுக்கு மூன்று சிறப்புக்களை தந்துள்ளான்.
1.சுவனத்து பெண்களின் தலைவியை உங்களுக்கு மனைவியாக தந்துள்ளான்.
2.சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாக உங்களின் இரு மகன்களும் உள்ளனர்.
3.ரஸூல்மார்களின் தலைவரின் மருமகனாக நீங்கள் உள்ளீர் என்று கூறினார்கள்.
அல்லாஹ் இந்த நாளின் மகிழ்சியை நம் வாழ்வு முழுவதும் விசாலமாக்கி வைப்பானாக


 குறிப்பு:இன்ஷா அல்லாஹ் நம் தளத்தில் வாரம் தோறும் வியாழக்கிழமைக்குள் ஜும்ஆ பயான் வெளியிடப்படும்.செல்போனில் மெஸ்ஸேஜ் அனுப்பப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோ  ம்.மேலும் இன்ஷா அல்லாஹ் இந்த வார ஜும்ஆ பயான் குறிப்பு இன்று இரவுக்குள் வெளியிடப்படும்.