وَلَا
تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِن بَعْدِ قُوَّةٍ أَنكَاثًا
நீங்கள் (சத்தியத்தை முறிக்கும்
இவ்விஷயத்தில் மதிகெட்ட) ஒரு பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள் - அவள் நூலை நூற்று
நன்கு முறுக்கேற்றிய பிறகு, தானே அதைத்
(தறித்து) துண்டு துண்டாக்கி விட்டாள்;
عن سفيان بن
عبد الله الثقفي رضي الله عنه قال:قلت يا رسول الله قل لي في الإسلام قولاً لا
اسأل عنه أحداً بعدك قال : ( قل آمنت بالله ثم استقم ) رواه مسلم .
சுப்யான் இப்னு அப்துல்லாஹ் ரலி
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் நபி ஸல் அவர்களிடம் வந்து,அல்லாஹ்வின்
தூதர் அவர்களே! எனக்கு இஸ்லாம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்.உங்களுக்கு
பின்னால் வேறு யாரிடமும் கேட்கமாட்டேன் என்று கூறினேன்.
அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வை
ஈமான் கொண்டேன்.என்று கூறி,அதில் நிலைத்து உறுதியாக நின்று விடு என்றார்கள்.
புனிதமிக்க ரமலான் மூன்று வகையான
முஃமின்களை பார்த்திருக்கிறது.
முதலாவது:இவர்கள் ரமலானுக்கும்
முன்னும் வணக்காசாளிகள்.ரமலானையு ம்
வணக்கத்தில் கழித்தவர்கள்.ரமலானுக்கு பின் இன்னும் அதிகமாக தங்களை வணக்கத்தில்
ஈடுபடுத்திக்கொள்வார்கள்.
இரண்டாவது:இவர்கள் ரமலானுக்கு முன்
வணக்கம் செய்ய மாட்டார்கள். ஆனால் ரமலானை பயனுள்ள இபாதத்தில் கழிப்பவர்கள்.ரமலான்
இவர்களை விடைபெற்று விட்டால் தங்களின் அமலுக்கும் விடை கொடுத்துவிடுவார்கள்
இப்படிப்பட்டவர்கள் பற்றியே நான் கூறிய முதல் வசனம் எச்சரிக்கிறது.
சுறுக்கமாகச்சொன்னால் இவர்கள் ரமலானை
தந்த ரப்பை வணங்காமல் ரமலானை வணங்கிய கூட்டம்.
மூன்றாவது:இவர்களுக்கு ரமலானும் ரமலான்
அல்லாத காலமும் ஒன்றே. எந்த
வித்தியாசமுமின்றி பாவத்தில் தங்கள் வாழ்வை கழிப்பவர்கள். இப்படிப்பட்டவர்கள் படுநாசத்திற்குறியவர்கள்
என ஹதீஸ்களில் எச்சரிக்கை வந்துள்ளது.
எந்த அமலை செய்தாலும் அதை நிறந்தரமாக
செய்யும்போதே அதன் பலனை பெற்றுக்கொள்ள முடியும்.ஆனால் இன்று நிரந்தரத்தன்மை என்பது
எல்லா காரியத்திலும் அரிதாகி வருகிறது.
عن أنس ابن مالك
رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: «يأتي على الناس زمان، الصابر
فيهم على دينه كالقابض على الجمر»,
மக்களுக்கு ஒருகாலம் வரும் அதில் தன்
தீனில் நிலைத்திருப்பது நெருப்பு கங்கை கையில் பிடித்திருப்பது போல கடினமானது
என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
نَّ الَّذِينَ
قَالُوا رَبُّنَا اللَّـهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ
أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ
நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன்
அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக
அவர்கள்பால் மலக்குகள் வந்து,
"நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் பட வேண்டாம் -
உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக்
கூறியவாறு) இறங்குவார்கள்.
இந்த தீனில் நாம் இஸ்திகாமத்தாக
இருப்பதற்கு நாம் ஒரு உறுதி எடுக்க வேண்டும்.அது ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள்
எடுத்த உறுதிமான
மாகும்.
அந்த உறுமானம் இதுதான்:
اينقص الدين وانا حي நான் உயிருடன்
இருக்கும் வரை என் தீனுக்கு எந்த குறைபாடு ஏற்பட விடமாட்டேன்.
இதை நாம் ஒவ்வொருவரும் உறுதி
எடுக்கவேண்டும்.
அல்லாஹ் நாம் விரும்பாமல், கேட்காமல்,
எந்த தியாகமும் செய்யாமல் இந்த தீனை வழங்கினான்.அந்த தீனின் கண்ணியத்தை பாதுகாப்பது
நாம் அனைரின் மீதும் கடமையாகும்.
நம் சொல்லால்,செயலால்,நடத்தையால் இந்த
தீனுக்கு எந்த இழுக்கையும் ஏற்படுத்திவிடக்கூடாது.ஒரு முஃமின் தன் கண்ணியத்தை
பாதுகாப்பது எவ்வளவு கடமையோ அவ்வாறு தன் ரப்பின் கண்ணியத்தையும்,அல்லாஹ்வின் தூதரின் கண்ணியத்தையும் பாதுகாப்பது
கடமையாகும்.
உஹது போரில் முதல் காட்சி:
في غزوة أحد عصا
الرماة أمر رسول الله صلى الله عليه وسلم، فانقلبت الدائرة على المسلمين، وصعد رسول
الله صلى الله عليه وسلم فوق جبل أحد، وأشرف أبو سفيان فقال: أفي القوم محمد؟ فقال
الرسول صلى الله عليه وسلم: «لا تجيبوه». فقال: أفي القوم ابن أبي قحافة؟ قال: «لا
تجيبوه». فقال: أفي القوم ابن الخطاب؟ فقال: إن هؤلاء قتلوا، فلو كانوا أحياء لأجابوا.
فلم يملك عمر نفسه،
فقال: كذبت يا عدو الله، أبقى الله عليك ما يخزيك. قال أبو سفيان: اُعْلُ هُبَل. فقال
النبي صلى الله عليه وسلم: «أجيبوه». قالوا: ما نقول؟ قال: «قولوا الله أعلى وأجل».
قال أبو سفيان: لنا العزى ولا عزى لكم. قال النبي صلى الله عليه وسلم: «أجيبوه». قالوا:
ما نقول؟ قال: «قولوا الله مولانا ولا مولى لكم». قال أبو سفيان: يوم بيوم بدر، والحرب
سجال، وتجدون مُثْلةً لم آمر بها ولم تسؤني(
صحيح البخاري
உஹது போர்க்களத்தில் ஒரு காட்சி:
நபி ஸல் அவர்களின் கட்டளைக்கு சஹாபிகளில்
ஒரு சின்ன கூட்டம் மாறு செய்தபோது போரின் போங்கு முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பி விட்டது.
நபி ஸல் அவர்களும் அவர்களின் தோழர்களும்
உஹது மலைக்குமேல் ஏறி,ஒரு பாறைக்கு பின் மறைந்திருந்தார்கள்.
இப்போது எதிரிகளின் தலைவரான அபூஸுப்யான்
அவர்கள்-
முஹம்மத் இருக்கிறாரா?என்று சப்தமிட்டார்.நபி
ஸல் அவர்கள் பதில் சொல்ல வேண்டாம் என தம் தோழர்களுக்கு கூறினார்கள்.
அபூ குஹாபாவின் மகன் அபூபக்கர் இருக்கிறாரா?என அபூ ஸுப்யான்
மீண்டும் குரல் கொடுத்தார்.
இப்போதும் பதில் சொல்ல வேண்டாம் என நபி
ஸல் அவர்கள் தடுத்து விட்டார்கள்.
கத்தாபின் மகன் உமர் இருக்கிறாரா?என மூன்றாவது
சப்தமிட்டார். இதற்கும் பதில் இல்லாத போது
–இவர்கள் அனைவரும் மரணித்துவிட்
டார்கள்,இவர்கள் உயிருடன் இருந்தால் பதில் சொல்லி இருப்பார்கள் என அபூ ஸுப்யான்
அவர்கள் இறுமாப்புடன் கத்தியதும்-
பொறுக்க முடியாத உமர் ரலி அவர்கள்,
அல்லாஹ்வின் விரோதியே!நீ பொய் சொல்கிறாய்.நாங்கள்
மடிந்துபோ கவில்லை.அல்லாஹ் உம்மை இழிவுபடுத்த
எங்களை உயிருடன் தான் வைத்துள்ளான் என சப்தமிட்டார்கள்.
ஹுபல் எனும் தெய்வம் உயர்ந்துவிட்டது.என
அபூ ஸுப்யான் சப்தமிட்டார்.அதைக்கேட்ட நபி ஸல் அவர்கள்-இப்போது அவருக்கு பதில் சொல்லுங்கள்
என்று தம் தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
எப்படி பதில் சொல்வது?என ஸஹாபாக்கள்
கேட்டார்கள்.
அல்லாஹ்வே உயர்ந்தவன்,கண்ணியமானவன்
என்று கூறுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அவ்வாறு கூறியதும்-எங்களுக்கு உஸ்ஸா எனும்
தெய்வம் இருக்கிறது உங்களுக்கு இல்லை என அபூ ஸுப்யான் சொன்னார்.
இதைக்கேட்ட நபி ஸல் அவர்கள் அவருக்கு பதில்
சொல்லுங்கள் என மீண்டும் தம் தோழர்களுக்கு உத்தரவிட்டபோது-எப்படி பதில் சொல்வது என ஸஹாபாக்கள் கேட்டனர்.
எங்களுக்கு அல்லாஹ் மவ்லாவாக இருக்கிறான்,உங்களுக்கு
இல்லை என்று சொல்லுங்கள் என கூறினார்கள்.
அவ்வாறு சொன்னதும் அபூஸுப்யான்,
இது பத்ருக்கு பகரமாக பழி தீர்க்கும் நாள்,போர் என்பது
இருபக்கமும் சாதகமான தன்மை கொண்டது,மேலும் இந்த போரில் எங்கள் தொண்டகள் உங்களின் தோழர்களை சித்திரவதை செய்தனர், அவ்வாறு செய்யச்சொல்லி
நான் உத்தரவிடவில்லை.இதில் என்னை தவறாக எண்ணவேண்டாம் என கூறினார்.
இதன் மூலம் ஒரு செய்தியை அழுத்தமாக முஸ்லிம்கள்
தங்களின் மனங்களில் பதிய வைக்கவேண்டும்.அது என்னவெனில்,
உஹது போரில் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கடியானநிலை
ஏற்பட்டபோதும்-அல்லாஹ்வின் கண்ணியத்திற்கு அவமையாதை செய்யப்படுவதை முஸ்லிம்கள் ஒருபோதும்
சகித்துக்கொள்ளகூடாது என தம் தோழர்களுக்கு கட்டளையிட்டார்கள்,
தம் உயிரை கொடுத்தேனும் அல்லாஹ்,ரஸூலின் கண்ணியத்தை
காப்பது முஸ்லிம்களின் மீது கடமையாகும்.
உஹதில் இரண்டாவது காட்சி:
ولما كان في معركة
احد وقتل اكثر اصحابه بين يديه صلى الله عليه وسلم,وجلس صلى الله
عليه وسلم بعد
المعركه ينظر في شأنهم وهو صلى الله عليه وسلم به جروح ودماء ,قال عليه الصلاة والسلام
[ من ينظر لي ماذا فعل سعد ابن الربيع ] ,رجل تاجر من سادة الأنصار له زوجتان وابناء
,ومال وزع ,قال: [من ينظر لي ماذا فعل سعد ابن الربيع ,ما فعل احي هو ام في الاموات
] , فمضى بعض الصحابة ينظر في القتلى فوجد سعد ابن الربيع قد وطئته الخيل وقد اصابته
الجراح ,وسلاحه بجانبه وهو يلفظ انفاسه , فحركه قال: [ ياسعد ان رسول الله صلى الله
عليه وسلم امرني أن انظر هل انت في الاحياء أم في الاموات ,فقال سعد : ابلغ رسول الله
صلى الله عليه وسلم عني السلام وقل له : ان سعد في الاموات وقل له : جزاك الله خير
ما جزاء نبيا عن امته ,وقل لقومي من الانصار لا عذر لكم عند الله إن خلص إلى رسول الله
صلى الله عليه وسلم وفيكم عين تطرف ],ثم فاضت روحه إلى باري
ويعود الصحابي ويبلغ النبي صلى الله عليه وسلم
الرسالة ويقول: يا رسول الله، مات سعد بن ربيع ويبلغك السلام، ويبلغ الأنصار السلام،
ويقول لهم لا عذر لكم إن خلص إلى رسول الله وفيكم عين تطرف، فقال النبي صلى الله عليه
وسلم: رحمك الله يا سعد نصحت لله حيا وميتا
உஹது போர்களம்.ஸஹாபாக்களில் அதிகமானவர்கள்
கொலை செய்யப்பட்டார்கள்.போருக்குப்பின் நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களிடம்,சஃது இப்னு
ரபீஃ என்ன ஆனார்?அவரைப்பற்றி செய்தி கொண்டுவாருங்கள் எனஉத்தரவிட, ஒரு ஸஹாபி
அவரை தேடிச்சென்றார்கள்.
(யார் அந்த சஃது?அவர் ஒரு வியாபாரி.மதீனாவின்
தலைவர்களில் ஒருவர்.அவருக்கு இரு மனைவிமார்களும்,பிள்ளைகளும்,விவசாய நிலங்களும்
உண்டு)
அப்பொழுது தேடிச்சென்ற அந்த சஹாபி, குதிரையால்
மிதிபட்ட நிலையில் கொலைசெய்யப்பட்டவர்களில் சஃதை(ரலி) காண்கிறார்.உடலில் அதிக காயங்கள்.அவருக்கருகில்
அவரின் ஆயுதங்கள்.
மூச்சு விட போராடிக்கொண்டிருந்த சஃது (ரலி)
அவர்களை தேடிச்சென்ற அந்தசஹாபி, அவர் உடலை அசைத்து,
சஃதே! நபி ஸல் அவர்கள், நீங்கள் உயிருடன்
இருக்கிறீரா? அல்லது மரணித்து விட்டீரா? என பார்த்துவிட்டு வரச்சொன்னார்கள்.என்று
கூறினார். அப்போது சஃது (ரலி) அவர்கள்,
அல்லாஹ்வின் தூதருக்கு என் சலாமை எத்திவையுங்கள். சஃது மரணித்தவர்களில் சேர்ந்துவிட்டார் என்று சொல்லுங்கள்.அல்லாஹுத்தஆலா
ஒவ்வொரு நபிக்கும் அவர்களின் உம்மத்துக்காக கொடுக்கும் கூலிகளில் மிகச்சிறந்த கூலியை
அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான் என்று என் கண்மணியிடம் சொல்லுங்கள்.குறிப்பாக என் சமுதாயமான
அன்ஸாரிகளிடம் சொல்லிவிடுங்கள். உங்கள் கண் முன் அல்லாஹ்வின் தூதருக்கு ஒரு இழிவும்
ஆபத்தும் வருமானால் எந்த காரணத்தை சொல்லியும் அல்லாஹ்விடமிருந்து நீங்கள் தப்பிக்கவே
முடியாது
இந்த செய்தியை பெருமானாரிடம் எத்திவைத்தபோது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஃதே!அல்லாஹ் உமக்கு ரஹ்மத் செய்வானாக.நீர் வாழும்போதும்
மரணித்தபோதும் நல்லதையே சொன்னீர்.என்று கூறினார்கள்.
உலகில் எங்கும் தோழர்கள் தம் தலைவர் மீது
இந்தளவு அன்பு கொள்வதை பார்த்திருக்க முடியாது.
அல்லாஹ் இந்த தீனின் கண்ணியத்தை
பாதுகாப்பானாக!ஆமீன்.
assalamu alaikkum. eid mubarak
ReplyDeletewalaikkumussalaam varahmathullaahi vabarakaathu.eid mubaarak.jazakallah
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும் ஈத் முபாரக் ஹழ்ரத் மிக அற்புதம்.அல்லாஹ் தங்களின் சேவைகளை கபூல் செய்வானாக
ReplyDeleteஈத் முபாரக் .அல்லாஹ் உங்கள் சேவையை பொருந்திக்கொள்வானாக.ஆமீன்
ReplyDelete