إِنَّا
أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
﴿٢﴾ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை)
கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு
அறிவித்தது எது?
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம்
மாதங்களை விட மிக மேலானதாகும்.
கத்ருடைய இரவு இந்த உம்மத்தின்
பாக்கியமான இரவு.ஆயுளில் பரக்கத் செய்யப்படுவதை விடவும்
அமல்களில் பரக்கத்செய்யப்படுவதே மிகவும் சிறப்புக்குறியதாகும்.
முன் வாழ்ந்த சமுதாயமெல்லாம் ஆயுளில்
பரக்கத் செய்யப்பட்டு நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.ஆனால் நபி ஸல் அவர்களின் பாக்கியமான உம்மத் தன் ஆயுள் அறுபதுக்கும்
எழுபதுக்கும் இடைப்பட்ட குறுகிய காலத்தை பெற்றிருந்தாலும் அவர்கள் அமல்களில்
விசாலமாக பரக்கத் செய்யப்பட்டு விட்டனர்
قال الإمام مالك
رحمه الله : أَنَّهُ سَمِعَ مَنْ يَثِقُ بِهِ مِنْ أَهْلِ الْعِلْمِ يَقُولُ إِنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيَ أَعْمَارَ النَّاسِ قَبْلَهُ
أَوْ مَا شَاءَ اللَّهُ مِنْ ذَلِكَ فَكَأَنَّهُ تَقَاصَرَ أَعْمَارَ أُمَّتِهِ أَنْ
لا يَبْلُغُوا مِنْ الْعَمَلِ مِثْلَ الَّذِي بَلَغَ غَيْرُهُمْ فِي طُولِ الْعُمْرِ
فَأَعْطَاهُ اللَّهُ لَيْلَةَ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
நபி ஸல் அவர்கள் முன் சமுதாய மக்களின்
ஆயுளை தன் உம்மத்தின் ஆயுளோடு ஒப்பிட்டு குறைவாக இருப்பதாக உணர்ந்தார்கள்.நீண்ட
ஆயுள் பெற்று மற்ற சமுதாயம் புரியும் அமல்களை தன் சமூகம் செய்ய முடியாமல் போகுமோ
என்ற ஆதங்கத்தின் விளைவாக அல்லாஹ் கத்ர் இரவை கொடுத்தான்.என இமாம் மாலிக் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
நாங்கள் பிந்தி வந்தவர்கள்.ஆனால் நாளை மறுமையில் முந்தி செல்பவர்கள் என நபி ஸல் அவர்கள்
கூறுகிறார்கள்.
ஓர் இரவின் அமலின் நன்மை ஒரு
நூற்றாண்டை மிஞ்சி நிற்கும்.இதுவே இந்த உம்மத்தின்
தனித்தன்மையாகும்.
கத்ர் என்றாலே கண்ணியமானது என்றுதான்
பொருள்.ஆயுளில் ஒரு கத்ர் இரவை முழுமையாக
அடைந்து நிறைவாக அமல் செய்து விட்டால் அது அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க
காரணமாகிவிடும்.
இந்த இரவை பெறுவதற்காகவே இந்த
உம்மத்தில் பிறக்க ஆசைப்பட்ட நபிமார்கள் உண்டு.அப்படி அல்லாஹ்விடம் கேட்டு அந்த பாக்கியத்தை நபி ஈஸா அலை
பெற்று
விட்டார்கள்.
இறுதி காலத்தில் இந்த உம்மத்தின் ஒரு
சாதாரண பிரதிநிதியாக வருவார்கள் என நபி ஸல் அவர்கள் முன்னறிவிப்புச்செய்தார்கள்.
இந்த இரவின் சிறப்பிற்கு திருக்குர்ஆன்
ஒன்றே போதுமானது. திருக்குர்ஆன் அது சம்பந்தப்படுகிற
அத்துனையும் சிறப்பு பெறும்.காரணம் அது படைத்தவனின் வார்த்தை.படைப்புக்களை விட படைத்தவன் உயர்ந்து இருப்பதுபோல படைத்தவனின்
வார்த்தை படைப்புக்களின் வார்த்தைகளை விடவும் உயர்ந்தே நிற்கும்.
பேச்சில் சிறந்த பேச்சு பேச வைத்தவனின்
பேச்சு என்று பூமான் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
திருக்குர்ஆன் இறங்கியதால் அந்த பூமி
உலகிற்கு தாயானது.அதை கொண்டு வரும் பொருப்பை ஜிப்ரயீல்
அலை அவர்களிடம் வழங்கப்பட்டதால் அனைத்து
வானவர்களை விடவும் ஜிப்ரயீல் உயர்ந்து விளங்குகிறார்.
திருக்குர்ஆன் நபி ஸல் அவர்களுக்கு
இறக்கப்பட்டதால் நபிமார்களில் ஸல் அவர்களின் அந்தஸ்து விண்ணை தொடுகிறது.அவ்வாறே திருக்குர்ஆன் இறக்கப்பட்ட இரவான கத்ருடைய இரவின் சிறப்பு
பற்றி என்ன சொல்ல வேண்டியதுள்ளது?
இந்த இரவின் சிறப்பை பெறுவதற்காக
இஃதிகாப் என்ற ஒரு இபாதத்
அமைக்கப்பட்டிருக்கிறது. திருக்குர்ஆன்
இறக்கப்பட்ட இந்த இரவில் திருக்குர்ஆனை
பூர்த்தி செய்திருப்பது நூருன் அலா நூல் என்பது போல இன்னும் சிறப்பானதாகும்.
பாவம் செய்யாத பரிசுத்தமான மலக்குகள்
பூமிக்கு வருவதும், திருக்குர்ஆன் இறக்கப்பட்ட காலத்துடன்
இந்த பூமியுடன் உள்ள தொடர்பை முடித்துக்கொ
ண்ட ஜிப்ரயீல் அலை மீண்டும் இந்த பூமிக்கு வரும் அதிசயமும் நடக்கிறது.
إِنَّ الْمَلائِكَةَ
تِلْكَ اللَّيْلَةَ فِي الأَرْضِ أَكْثَرُ مِنْ عَدَدِ الْحَصَى
வானவர்கள் அந்த இரவில் பூமியில்
கணக்கின்றி சுற்றித்திரிகின்றனர்.
சுமார் திருக்குர்ஆனுக்காக சுமார் 24 ஆயிரம் தடவை பூமிக்கு வந்த ஜிப்ரயீல் அலை அவர்கள் இப்போது ஆண்டுக்கு
ஒரு தடவை வரும் விருந்தாளியாக வந்து செல்கிறார்கள்.
கிடைப்பதற்கறிய பாக்கியமான அந்த
விருந்தாளியை வரவேற்க வேண்டாமா?
எப்போது லைலத்துல் கத்ர்?
லைலத்துல் கத்ர் இரவு எது?என்பதில்
இமாம்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்கின்றனர்.சுமார் 40 கருத்துக்கு மேல்
உள்ளதாக இப்னுஹஜர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.ஆனாலும் அறுதியிட்டு உறுதியிட்டு
இதுதான் லைல த்துல் கத்ர் என்று சொல்பவர்களும் உண்டு.
ஜும்ஹூர்கள் எனும் பெரும்பான்மை
உலமாக்கள்,மற்றும் இமாம்களின் கருத்து 27 ம் இரவு என்பதே!அதை அடிப்படையாக கொண்டே
அன்றைய இரவில் திருக்குர்ஆன் கதம் செய்யும் வழக்கம் உள்ளது.
ரமலானின் அனைத்து இரவுகளையும்
பாக்கியமாக கருதி அமல் செய்யவேண்டுமென்ற முன் வஸிய்யத்தை கூறிய பின்னர், கத்ர்
இரவு குறித்து மூன்று முக்கிய முன்னனி ஸஹாபாக்களின் கருத்தை மட்டும் கொஞ்சம் செவி
தாழ்த்தி கேளுங்கள்.ஏனெனில் கத்ர் இரவில் அமல்செய்பவர் இது கத்ர் இரவுதான் என்ற
நம்பிக்கையுடன் அமல்செய்யவேண்டும்.
مَنْ يَقُمْ لَيْلَةَ
الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
கத்ருடைய இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை
நாடியும் இரவு நின்று வணக்கம் செய்தால் அவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்படும்.
முதலாவது:இப்னு மஸ்வூத் ரலி அவர்களின்
கருத்து.
عن زر بْنَ حُبَيْشٍ
قال : سَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقُلْتُ : إِنَّ أَخَاكَ
ابْنَ مَسْعُودٍ يَقُولُ مَنْ يَقُمْ الْحَوْلَ يُصِبْ لَيْلَةَ الْقَدْرِ ؟ فَقَالَ
رَحِمَهُ اللَّهُ : أَرَادَ أَنْ لا يَتَّكِلَ النَّاسُ ، أَمَا إِنَّهُ قَدْ عَلِمَ
أَنَّهَا فِي رَمَضَانَ وَأَنَّهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ ، وَأَنَّهَا لَيْلَةُ
سَبْعٍ وَعِشْرِينَ ، ثُمَّ حَلَفَ لا يَسْتَثْنِي أَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ
، فَقُلْتُ : بِأَيِّ شَيْءٍ تَقُولُ ذَلِكَ يَا أَبَا الْمُنْذِرِ ؟ قَالَ : بِالْعَلامَةِ
أَوْ بِالآيَةِ الَّتِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لا شُعَاعَ لَهَا
ஸிர் இப்னு ஹுபைஷ் ரஹ் அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
நான் உபையிப்னு கஃப் ரலி
அவர்களிடம்,உங்கள் சகோதரர் இப்னு மஸ்வூத் வருடம் முழுவதும் இரவு நின்று
வணங்கினால்தான் கத்ர் இரவு கிடைக்கும் என்று கூறுகிறாரே என கூறினேன்.
அதற்கு உபை ரலி அவர்கள்,அல்லாஹ் இப்னு
மஸ்வூத் அவர்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்.மக்கள் அமல் செய்வதில் சோம்பேறித்தனமாக
இருந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவ்வாறு கூறினார்.
லைலத்துல் கத்ர் ரமலானில்
இருக்கிறது.கடைசி பத்து இரவுகளில் இருக்கிறது.அது 27 ம் இரவு என்பதும் அவர்களுக்கு
உறுதியாக தெரியும்.
சத்தியமாக அது 27 ம் இரவு தான் என்று
மிகவும் உறுதியாக உபை இப்னு கஃப் ரலி அவர்கள் கூறினார்கள்.
எந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு
இவ்வளவு உறுதியாக சொல்கிறீர் என நான் கேட்டேன்.அதற்கு அன்றைய தினம் சூரியன்
சுடரின்றி உதயமாகும் என நபி ஸல் அவர்கள் எங்களுக்கு கூறினார்கள் என உபை ரலி
அவர்கள் கூறினார்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
இவ்வளவு உறுதியாக சொல்கிற உபை இப்னு
கஃப் ரலி அவர்கள் யார் தெரியுமா?
இவரின் இல்முக்கு நபி ஸல் அவர்கள்
வாழ்த்துச்சொன்னார்கள்.
பைய்யினா என்ற அத்தியாயம் இறக்கப்பட்ட
போது உபையிக்கு அந்த சூரா வை ஓதிக்காட்டச்சொல்லி நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ்
உத்தரவிட்ட தாக ஹதீஸில் வருகிறது.
இரண்டாவது:இப்னு அப்பாஸ் ரலி அவர்களின்
கருத்து:
قَالَ اِبْن عَبَّاس
: دَعَا عُمَر أَصْحَاب رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُمْ
عَنْ لَيْلَة الْقَدْر , فَأَجْمَعُوا عَلَى أَنَّهَا الْعَشْر الأَوَاخِر , قَالَ
اِبْن عَبَّاس : فَقُلْت لِعُمَر إِنِّي لأَعْلَمُ - أَوْ أَظُنُّ - أَيَّ لَيْلَةٍ
هِيَ , قَالَ عُمَر : أَيُّ لَيْلَةٍ هِيَ ؟ فَقُلْت : سَابِعَةٌ تَمْضِي أَوْ سَابِعَة
تَبْقَى مِنْ الْعَشْر الأَوَاخِر , فَقَالَ : مِنْ أَيْنَ عَلِمْت ذَلِكَ ؟ قُلْت
خَلَقَ اللَّه سَبْعَ سَمَوَاتٍ وَسَبْع أَرْضِينَ وَسَبْعَة أَيَّام وَالدَّهْر يَدُور
فِي سَبْع وَالإِنْسَان خُلِقَ مِنْ سَبْع وَيَأْكُل مِنْ سَبْع وَيَسْجُدُ عَلَى سَبْع
وَالطَّوَاف وَالْجِمَار وَأَشْيَاء ذَكَرَهَا , فَقَالَ عُمَر : لَقَدْ فَطِنْت لأَمْرٍ
مَا فَطِنَّا لَهُ
))
وأخرج هذه القصة
إِسْحَاق بْن رَاهْوَيْهِ فِي مُسْنَده وَالْحَاكِم وفيها : (( فَقَالَ عُمَر أَعْجَزْتُمْ
أَنْ تَكُونُوا مِثْلَ هَذَا الْغُلامِ الَّذِي مَا اِسْتَوَتْ شُؤُونُ رَأْسِهِ
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள்
கூறுகிறார்கள்.
உமர் ரலி அவர்கள் ஸஹாபாக்களை ஒன்று
கூட்டி லைலத்துல் கத்ர் இரவு எது?என வினவினார்கள்.அதற்கு அத்துனை ஸஹாபாக்களும்
இறுதிபத்தில் உள்ளது என்று கூறி நிறுத்திக்கொண்டனர்.
உடனே நான் உமர் ரலி அவர்களிடம் அது
எந்த இரவு என்று எனக்கு தெரியும் என்று கூறியபோது,அது எந்த இரவு?என
கேட்டார்கள்.அதற்கு நான்
கடைசி பத்தில் உள்ள 7 வது (அதாவது 27
ம்) இரவு என்று கூறினேன்.
எதை அடிப்படையாக வைத்து இதை கூறுகிறாய்
என உமர் ரலி அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.அதற்கு நான் இவ்வாறு பதில் சொன்னேன்.
அல்லாஹ் ஏழு வானங்களை படைத்தான்.ஏழு
பூமியையும் படைத்தான்.ஏழு நாட்களை படைத்தான்.காலம் ஏழில் சுழலுகிறது.மனிதன் ஏழு
மூலப்பொருட்களால் படைக்கப்பட்டுள்ளான்.பூமியில்
ஏழுவையான உணவுவகைகளை அல்லாஹ் கொடுக்கிறான்.ஸஜ்தாவின் உறுப்புக்களும்
ஏழுதான்.தவாபும் ஹஜ்ஜில் கல் எறிவதும் ஏழுதான்.
நான் இதை கூறியபோது உமர் ரலி அவர்கள்
நீங்கள் இந்த சிற்வர் அளவுக்கு சிந்திக்கவில்லையே?என்று கூறினார்கள்.
(ஹாகிம்)
மூன்றாவது:இப்னு உமர் ரலி அவர்களின்
கருத்து:
عَنْ ابْنِ عُمَرَ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَأَيْتُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ كَأَنَّ بِيَدِي قِطْعَةَ إِسْتَبْرَقٍ فَكَأَنِّي لا أُرِيدُ مَكَانًا مِنْ
الْجَنَّةِ إِلا طَارَتْ إِلَيْهِ وَرَأَيْتُ كَأَنَّ اثْنَيْنِ أَتَيَانِي أَرَادَا
أَنْ يَذْهَبَا بِي إِلَى النَّارِ فَتَلَقَّاهُمَا مَلَكٌ فَقَالَ لَمْ تُرَعْ خَلِّيَا
عَنْهُ فَقَصَّتْ حَفْصَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى
رُؤْيَايَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَ الرَّجُلُ
عَبْدُ اللَّهِ لَوْ كَانَ يُصَلِّي مِنْ اللَّيْلِ فَكَانَ عَبْدُ اللَّهِ رَضِيَ
اللَّهُ عَنْهُ يُصَلِّي مِنْ اللَّيْلِ وَكَانُوا لا يَزَالُونَ يَقُصُّونَ عَلَى
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرُّؤْيَا أَنَّهَا فِي اللَّيْلَةِ
السَّابِعَةِ مِنْ الْعَشْرِ الأَوَاخِرِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي الْعَشْرِ الأَوَاخِرِ فَمَنْ كَانَ
مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا مِنْ الْعَشْرِ الأَوَاخِر ِ
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்ட ஒரு
கனவில் என்னுடைய கையில் பட்டுத் துணி ஒன்று இருந்தது. நான் சொர்க்கத்தில் எந்த இடத்திற்குச்
செல்ல விரும்பினாலும் அது என்னைக் கொண்டு செல்லும்போது என்னிடம் இருவர் வந்து என்னை
நரகத்திற்குக் கொண்டு செல்ல முயன்றார்கள். அப்போது அவர்களை ஒரு வானவர் சந்தித்து
'இவரைவிட்டு விடுங்கள் என்று கூறிவிட்டு என்னிடம்
'பயப்படாதீர்!' என்று கூறினார்கள். என்னுடைய கனவ ஹஃப்ஸா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது
'அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் மனிதர்களில்
அவர் மிக நல்லவர்" என்று கூறினார்கள். அதன் பிறகு நான் இரவில் தொழுபவனாம் விட்டேன்.
நபித்தோழர்கள் லைலத்துல் கத்ர் இரவு இருபத்தி
ஏழாம் இரவு என்று கனவு கண்டு நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள்
'உங்கள் கனவைப் போல் கனவு கண்டேன். அது கடைசிப்
பத்து நாள்களில்தான் அமைந்துள்ளது. லைலத்துல் கத்ர் இரவை அடைய முயல்கிறவர் கடைசிப்
பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள்.
(புகாரி)
முப்பெரும் மூத்த ஸஹாபிகளான
அப்துல்லாக்கள் ரலி அவர்களின் கருத்து கத்ர் இரவை தெரிந்துகொள்ள போதுமானது.
சரி! கத்ர் இரவை தெரிந்த பின்பு இனி
அந்த இரவில் என்ன செய்ய வேண்டும்?
عَنْ عَائِشَةَ
رضي الله عنها قَالَتْ : قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ
لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا أَقُولُ فِيهَا ؟ قَالَ : قُولِي اللَّهُمَّ إِنَّكَ
عُفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
லைலத்துல் கத்ர் இரவை நான்
அறிந்துகொண்டால் என்ன ஓத வேண்டும்? என
ஆயிஷா ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கேட்டபோது-
اللَّهُمَّ إِنَّكَ
عُفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي யா அல்லாஹ்!நீ மன்னிப்பவன்.கண்ணியமானவன்.
மன்னிப்பதை நேசிக்கிறாய்,எனவே என்னை மன்னித்து விடுவாயாக ஆமீன்!
(திர்மிதி)
இந்த ஹதீஸை கொஞ்சம் உற்று நோக்கி
கவனியுங்கள்.கத்ர் உடைய இரவில் செய்ய வேண்டிய பிரதான அமல் துஆ என்பதை நபி ஸல்
அவர்கள் அழகாக கூறுகிறார்கள்.
துஆ வணக்கங்களின் மூலை:
இந்த இரவில் அல்லாஹ்வுடன் உள்ள நம்
முனாஜாத்தை தொடர்பை அதிகப்படுத்திக்கொள்ளவேண்டும்.
துஆ என்பது ஒரு இபாதத்.
நாம் செய்யும் துஆ கபூல் ஆகிறது,அல்லது
இல்லை அதை தாண்டி அது ஒரு தனி வணக்கம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
நபி சல் அவர்களுக்கு பல துஆக்கள்
உலகில் கபூலாகவில்லை என்பதை நாம் அறிந்த செய்தியே!
நான் என் ரப்பிடம் மூன்று துஆ
கேட்டேன்.இரண்டை தந்தான், ஒன்றை மறுத்துவிட்டான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
பிர்அவ்னுக்கு எதிராக நபி மூஸா அலை
அவர்கள்கேட்ட துஆ 40 ஆண்டுக்கு பின்னே கபூலானது.
துஆவின் அங்கீகாரம் மறுக்கப்படுவதும்
தாமிதமாகுவதும் துஆவின் மீது நமக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடக்கூடாது.
துஆ கபூலாகும் ஒழுங்குகளை கவனத்துடன்
பேண வேண்டும்.
அல்லாஹ்விடம் கவனத்துடன்
கேட்கவேண்டும்.கவனக்குறைவான உள்ளங்களின் பக்கம் அல்லாஹ் ஏறிட்டும் பார்க்க
மாட்டான்.துஆ கபூலாகும் என்ற உறுதியுடன் கேட்க வேண்டும்.ஹலால் ஹராமில் பேனுதலை
கடைபிடிக்க வேண்டும்.
ஸஃது ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் யா
ரஸூலல்லாஹ்!என் துஆ கபூலாக நான் என்ன
செய்ய வேண்டும்?என்று கேட்டபோது-
اطب مطعمك உன் உணவை ஹலாலாக்கு என்று உபதேசம் செய்தார்கள்.
துஆ என்பது மகத்தான ஆற்றல் கொண்டது.
நபி இப்ராஹீம் அலை அவர்களின் துஆவால்
நான் உங்களுக்கு கிடைத்தேன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நபி ஸல் அவர்கள் துஆவின் ஒழுங்கை தம்
தோழர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்
عن معاذ قال مر
النبي صلى الله عليه وسلم على رجل يقول اللهم إني أسألك تمام النعمة قال هل تدري ما
تمام النعمة قال تمام النعمة دخول الجنة والفوز من النار
நபி சல் அவர்கள் ஒருவரை கடந்து
சென்றார்கள்.அவர் யா அல்லாஹ் பரிபூர்ண நிஃமத்தை உன்னிடம் கேட்கிறேன் என
துஆச்செய்தார்.
அப்போது ஸல் அவர்கள் அம்மனிதரை அழைத்து
பரிபூர்ண நிஃமத் என்றால் என்னவென்று தெரியுமா?என கேட்டார்கள் அதற்கு அவர்
அல்லாஹ்வின் தூதர் அவர்களே!எனக்கு தெரியாது,என்ற போது சுவனத்தில் நுழைவதும்
நரகிலிருந்து வெற்றிபெறுவதுமாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ثم مر على رجل
يقول اللهم اني أسألك الصبر قال قد سألت ربك البلاء فسله العافية
இன்னொரு தோழர் யா அல்லாஹ் எனக்கு
பொருமையை கொடு என்று துஆச்செய்தார்கள்.அப்போது ஸல் அவர்கள் அம்மனிதரிடம்,நீர் உம்
ரப்பிடம் சோதனையை கேட்கிறாயா?என்று கண்டித்தார்கள்.அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள்
என்று கூறினார்கள்.
اللهم اني اعوذ بك من الفتنة யா அல்லாஹ்
என்னை பித்னாவை விட்டும் பாதுகாப்பாயாக என துஆச்செய்துகொண்டிருந்த ஒருவரை உமர் ரலி
அவர்கள் கடந்துசென்றபோது-யா அல்லாஹ் இவர் துஆவை விட்டும் என்னை பாதுகாப்பாயாக என
கூறினார்களாம்.
காரணம்
கேட்டபோது அல்லாஹ் தன் வான்மறையில் பொருளும் பிள்ளை யும் பித்னா என்று
கூறுகிறான்.பொருளும் பிள்ளையும் உனக்கு வேண்டாமா? என விளக்கம் தந்தார்கள்.
நபி
ஸல் அவர்கள் தம் தோழர்களுக்கு துஆவின் மீது அபாரமான நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள்.
دخل رسول الله صلى الله عليه وسلم، ذات يوم المسجد فإذا هو
برجل من الأنصار يقال له: أبو أمامة، فقال يا أبا أمامة: ما لي أراك جالساً في المسجد
في غير وقت الصلاة؟ قال: هموم لزمتني وديون يا رسول الله،
قال: أفلا أعلمك كلاماً إذا أنت قلته أذهب الله عز وجل همك
وقضى عنك دينك؟ قال: قلت بلى يا رسول الله، قال: قل إذا أصبحت وإذا أمسيت: اللهم إني
أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك
من غلبة الدين وقهر الرجال، قال: ففعلت ذلك فأذهب الله عز وجل همي وقضى عني ديني
அபூ
உமாமா ரலி என்ற நபித்தோழரை பள்ளிவாசலில் கண்ட நபி ஸல் அவர்கள்,த்ழுகை அல்லாத
நேரத்தில் இங்கு வர காரணம் என்ன?என கேட்டபோது கடன் சுமையும் கவலையும் என்று நபி ஸல் அவர்களிடம் கூறிய போது ஸல் அவர்கள் அவர்களுக்கு
கற்றுக்கொடுத்த துஆ இது:
اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل
وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال
அதற்கு
பிறகு எனக்கு கடன் பிரச்சனையும் தீர்ந்தது
கவலையும் போய்விட்டது என்று கூறுகிறார்கள்.
அலி
ரலி அவர்கள், அல்லாஹ்வின் கடமையில் குறைவு செய்துவிட்டேன் என்ன செய்யவேண்டும்? என
நபியிடம் கேட்டபோது இந்த துஆவை கற்றுக்கொடுத்தார்கள்.அந்த துஆ இது:
"اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ
سِوَاكَ
காலித்
ரலி அவர்கள் நபியிடம் கெட்ட கனவு வருகிறது என முறையிட்ட போது நபி ஸல் அவர்கள்
பின்வ்ரும் துஆவை ஓதச்சொன்னார்கள்.
بسم الله أعوذ بكلمات الله التامة من غضبه وعقابه وشر عباده
ومن همزات الشياطين وأن يحضرون
وَإِذَا سَأَلَكَ
عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا
لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம்
கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு
அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும்.
அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.
جزاك الله يا أخى الكرام..وأن ليس للإنسان إلا ما سعى
ReplyDeleteஅந்த இரவின் நன்மைகலை நம் அனைவருக்கும் தருவானாக ஆமீன்
ReplyDeleteJazakallahu khairan
Deleteஅருமையான தகவல்
ReplyDeleteலைலத்துல் கத்ருடைய இரவை அடையச்செய்வானாக
ReplyDeletejazakallah
ReplyDeleteநன்றி
ReplyDeleteபயனுள்ள தகவல்களை தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteجزاك الله خبرا.
Jazakkallah hu kairun jaza
ReplyDeleteஆழமானஅற்புதமானகருத்துக்கள்
ReplyDeleteجزآك الله خيرا كثيرا في الدارين
ReplyDeleteJazakallah
ReplyDeleteالحمدلله
ReplyDeleteجزاك الله خير
ReplyDeleteBaarakkallah
ReplyDelete