இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில்
ஒன்றான புனித ரமலான் மாத நோன்பை நோற்று,
அதனை பூரணப்படுத்தி, இன்றைய தினம் நோன்பு பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும்
உஸ்மானிகள் பேரவை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து
க்கொள்கிறோம்.
முஸ்லிம்கள் தம்மிடையே உள்ள
கருத்துவேறுபாடுகளை கடந்து ஒற்றுமை, சகோதரத்துவத்தை நிலைநிறுத்தவேண்டியது
காலத்தின் கட்டாயமாகும்.
இன்றைய தினத்தில்
யூத,கிருத்துவ,இணைவைப்புச்சக்திகள் இஸ்லாத்திற்கு எதிராக கைகோர்த்து
களமிறங்கியிருக்கிறது.அதேசமயம் சர்வதேச அளவில் இஸ்லாத்திற்கான எதிர்காலம் பிரகாசமாக
ஜொலித்துக்கொண்டிருக்கிறது. அதன் முன்
காட்சிகள் தான் அரபுலக வசந்தம்!
எகிப்தின் அரசியல் மாற்றங்கள் மற்றும்
பின்னடைவுகள் இஸ்லாத்திற்கான பின்னடைவு அல்ல.எகிப்தின் அரசியல் சூழ்ச்சிக்கு
பின்புலத்தில் அமெரிக்க, இஸ்ரேலிய
சக்திகள் இருக்கலாம்.மறுப்பதற்கில்லை.
இஸ்லாம் வாகை சூடும் அந்த பொன்னாளை
தள்ளி போடலாம்,ஒருகாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.இன்ஷா அல்லாஹ் இனி இஸ்லாம்
வெல்லும் என்ற நற்செய்தியை இப்பெருநாள் வாழ்த்தாக கூறிக்கொள்கிறோம்.
உலக நாடுகளிலும் உள்நாட்டிலும் நோய்,வறுமை,சிறைவாழ்க்கை,அச்சுறுத்தல்
போன்ற பல்வேறு காரணங்களினால் துன்பத்திலும் துயரத்திலும் அல்லல்படும் முஸ்லிம்களின்
வாழ்வு நலன்பெற இப்பெருநாள் தினத்தில் துஆச்செய்யுமாறு பேரவை உங்களை
கேட்டுக்கொள்கிறது.ஏனெனில் பலஸ்தீனத்திலும், மியன்மாரிலும் மட்டுமன்றி அரபுலக நாடுகளிலும்
வாழும் பல முஸ்லிம்கள், ஆட்சியாளர்களினாலும்,
கிளர்ச்சிகளினாலும் பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும்
ஆளாக்கப்பட்டுள்ளனர்.
اللهم لا تسلط
علينا من لا يخافك و لا يرحمنا
யா அல்லாஹ்!உன்னை அஞ்சாத, எங்கள் மீது இறக்கம் காட்டாத ஆட்சியாளர்களை எங்களின் மீது
சாட்டிவிடாதே! ஆமீன்
இஸ்லாமிய பார்வையில் ஈதுப்பெருநாட்கள் மிக
உயர்ந்த லட்சியத்தையும்,மகத்தான நோக்கத்தையும் அடிப்படையாக கொண்டதாகும்.
ஒவ்வொரு முஸ்லீமும் தன்
சந்தோஷத்தை மட்டுமே பிரதான நோக்கமாக கொள்ளாமல் பிறரையும் மகிழ்ச்சிப்படுத்தும் பின்னனி
கொண்டது.
இஸ்லாமிய பண்டிகைகளில் ஆட்டம் பாட்டத்திற்கோ,வீண்கேளிக்கைகளுக்கோ,விரயங்களுக்கோ இடமில்லை.
இஸ்லாத்தில் இரு ஈதுப்பெருநாட்களும் கடமையான
வணக்கத்தின் முடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
நோன்பை நிறைவு செய்கிறபோது ஈதுல்பித்ரையும்,ஹஜ்ஜை நிறைவு செய்கிறபோது ஈதுல்அள்ஹாவையும் அல்லாஹுத்தஆலா இந்த உம்மத்துக்கு
தந்துள்ளான்.
அவனை வணங்குவதற்கு வாய்ப்பளித்த அந்த வல்ல
நாயனை பெருமைப்படுத்தவும்,நன்றிகூறவும்,நினைவுகூறவுமே முஸ்லீம்கள் ஒன்று கூடுகின்றனர்.
அதனால் தான் ரமலானை நிறைவு செய்யும்போது
அல்லாஹுத்தஆலா,
وَلِتُكْمِلُوا
الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
[البقرة: 185
எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும்,
உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப்
பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும்
சலுகை வழங்கப்பட்டது) என்று கூறுகிறான்.
அதைப்போல ஹஜ்ஜை நிறைவு செய்யும்போது,
وَاذْكُرُوا اللَّهَ
فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ) [البقرة: 203]
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்
என்று கூறுகிறான்.
புத்தாடைகள் அணிவதோ,நறுமணங்களை பூசிக்கொள்வதோ மட்டும் ஈதின் நோக்கமல்ல,மாறாக படைத்தவனையும்,படைப்புக்களையும்
சந்தோஷப்படுத்துவதே உண்மையான நோக்கமாகும்.
அதனால் தான் இமாம் ஹஸன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
يقول الحسن -رحمه
الله-: "كل يومٍ لا نعصِي اللهَ فيه فهو عيد، وكلُّ يومٍ نقضِيه في طاعة الله
-جل وعلا- فهو عيدٌ
அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாத ஒவ்வொரு நாளும்,அவனுடைய வணக்கத்தில் கழிகிற ஒவ்வொரு நாளும் உனக்கு ஈது தான்.
இஸ்லாம் மகிழ்ச்சிக்கு தடைபோடவில்லை,அல்லாஹ்வை மறக்கடிக்கிற சந்தோஷம் வேண்டாம் என்று தான் சொல்கிறது.
ஒரு அறிஞன் சொன்னான்: இந்த உலகில் நீ எதை
இழந்தாலும் அதற்கு பகரம் உண்டு!ஆனால் நீ அல்லாஹ்வை இழந்துவிட்டால் அதற்கு பகரமே கிடையாது.
பெருநாள் என்பது ஒரு முஸ்லிம் கட்டுப்பாடுகளிலிருந்து
தன்னை விடுவிக்கும் நாளல்ல!மேலும் அல்லாஹ்வுடன்
உள்ள நம் உறவை முறித்துக்கொள்ளும் நாளுமல்ல.தக்பீர்தான் பெருநாள் தினத்தின்
பெரு முழக்கமாகும்.அதுவே நம் கொள்கையின் பிரகடனமாகும்.
அதனால் தான் ஒரு முஸ்லிமின் வாழ்வின் முக்கிய
தருனங்களில் தக்பீருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
பாங்கில்,இகாமத்தில்,தொழுகையில்,போராட்டத்தில்,போர்களத்தில்,
அனைத்திலும் தக்பீர்மயம்.
زينوا أعيادكم
بالتكبير
உங்களின் ஈதுப்பெருநாட்களை தக்பீரக் கொண்டு அழகுபடுத்துங்கள்
என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
எனவே இன்றய தினத்தில் முதலாவதாக அல்லாஹ்வை
பெருமைப்படுத்துவோம்.
அல்ஹம்து லில்லாஹ்!அல்லாஹ்வின் அளவிலா
கருணையாலும் நிகரில்லா கிருபையாலும் ரமலான் மாதத்தை அடைந்து கொண்டோம்.அமல்
செய்தோம்.
அமலுக்கான கூலியை எதிர்நோக்கி இருக்கிற
இந்த நாளில் அல்லாஹ்விடம் இருகரமேந்தி மனமுருகி கேட்கவேண்டிய ஒன்று உண்டு.
அது அமலுக்கான அங்கீகாரம்!
ஒவ்வொரு இபாதத்தின் முடிவிலும்
கபூலிய்யத்தின் கவலை வேண்டும்.நாம் செய்யும் வணக்கத்திற்கான அங்கீகாரம்
கிடைக்கவில்லையானால் வணக்கம் பயனற்றுப்போய்விடும்.
அமல் என்பதும் அங்கீகாரம் என்பதும்
தனித்தனியான நிஃமத்தாகும். அல்லாஹ் சிலருக்கு அமல் செய்யும் நஸீபை வழங்குவான்
ஆனால் அங்கீகாரம் வழங்கமாட்டான்.
ஆயிரம் ஆண்டுகள் வணக்கம் புரிந்த
இப்லீஸின் வணக்கத்திற்கு அல்லாஹ் விடம் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது.
அல்லாஹ்வின் கபூலிய்யத் கிடைக்காமல்
தங்களின் ஈமானை இழந்த வணக்கசாலிகள் பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது.
ஸஃலபா எனும் நபித்தோழர் முதல் பல்ஆம்
இப்னு பாஊரா எனும் இறைநேசர் வரை பட்டியல் நீளமானது.
அல்லாஹ்வின் அங்கீகாரம் கிடைக்க
சிலநேரங்களில் ஒரு சின்ன அமலும் காரணமாக ஆகிவிடலாம்.தாகித்த நாயிக்கு தண்ணீர்
புகட்டிய ஒரு விபச்சாரியின் அமல்
அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்றதால் அவளுக்கு சுவனத்தை பெற்றுத்தந்தது.
அமலுக்கான அங்கீகாரம் யாருக்கு
கிடைக்கும்?
இதோ அல்லாஹ்வின் வசனத்தை
கவனியுங்கள்...
إِنَّمَا يَتَقَبَّلُ
اللَّـهُ مِنَ الْمُتَّقِينَ
"மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது
பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்" என்று (ஹாபீல்) கூறினார்.
அச்சமுள்ளவருக்கு மட்டுமே அங்கீகாரம்
கிடைக்கும் என்பதை புரிந்துகொள்ள இவ்வசனம் ஒன்றே போதுமானது.அதனால் தான்
நபிமார்கள்,ஸஹாபாக்கள் ஸாலிஹீன்கள் ஒரு அமலை துவக்கும்போதும் முடிக்கும்போது
அல்லாஹ் ஏற்றுக்கொள்வதை கேட்பார்கள்.
عَنْ وُهَيْبِ
بْنِ الْوَرْدِ، قَالَ: قَرَأَ { وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ
وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا }
زَادَ ابْنُ خُنَيْسٍ فِي حَدِيثِهِ، ثُمَّ يَبْكِي، فَقَالَ وُهَيْبٌ: يَا
خَلِيلَ الرَّحْمَنِ تَرْفَعُ قَوَائِمَ بَيْتِ الرَّحْمَنِ وَأَنْتَ مُشْفِقٌ أَنْ
لا يَقْبَلَ مِنْكَ"
அல்லாஹ்வின் நண்பரே!பைத்துல்லாஹ்வின்
பணியை துவக்கும்போதே கபூலிய்யத்தை கேட்டீர்களே! என ஹழ்ரத் வுஹைப் ரஹ் அவர்கள்
கூறுகிறார்கள்.
قال ابن رجب :
في ( لطائف المعارف 323 ) : بعض السلف كانوا يدعون الله ستة أشهر أن يبلغهم شهر رمضان
ثم يدعون الله ستة أشهر أن يتقبله
ஸலபிய்யீன்களில் சிலர் ஆறுமாதம் ரமலானை
அடைவதை கேட்பார்கள். ரமலானை அடுத்த
ஆறுமாதம் ரமலானின் கபூலிய்யத்தை கேட்பார்கள் என இப்னு ரஜப் கூறுகிறார்
خرج عمر بن عبد
العزيز رحمه الله في يوم عيد فطر فقال في خطبته : أيها الناس إنكم صمتم لله ثلاثين
يوما و قمتم ثلاثين ليلة وخرجتم اليوم تطلبون من الله أن يتقبل منكم
உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள்
தங்களின் ஈது கொத்பாவில் மக்களே!நீங்கள் முப்பது நாள் பகல் காலத்தில் நோன்பு
நோற்றீர்கள் இரவு காலத்தில் நின்று வணக்கம் செய்தீர்கள்.இப்போது அல்லாஹ்விடம் அது
அங்கீகரிக்கப்படவேண்டும் என துஆ வேண்டி வந்துள்ளீர்கள் என கூறுவார்களாம்.
ரமலான் நமக்கு கற்றுத்தந்த முத்தான
மூன்று பாடங்கள்.
1.ஹலால் ஹராமில் பேனுதலை கடைபிடித்தல்.
இது ரமலானின் நோன்பு நமக்கு
கற்றுத்தரும் பயிற்சியாகும்.ஹலாலான உணவு,குடிபானம்,மனைவி இருந்தும் அல்லாஹ்வுக்காக
அதை பயன்படுத்தா மல் விலகியிருந்தோம்.ஹலாலையே
அல்லாஹ்வின் திருப்திக்காக ஒதுக்கி வைக்கும் ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் எங்கும்
எப்போதும் ஹராமின் பக்கம் போகக்கூடாது.
பத்தில் ஒன்பது ஹலாலாக இருந்தும்
ஹராமுக்கு பயந்து நாங்கள் விலகி இருந்தோம் என உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
2.திருக்குர்ஆனுடன் உள்ள நம் தொடர்பை
அதிகப்படுத்துதல்.
இந்த உம்மத்துக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆனை
ரமலானில் ஓதினோம், கேட்டோம்,அதன் கருத்துக்களை சிந்தித்தோம்.
இந்த தொடர்பை ரமலான் அல்லாத காலங்களிலும்
தொடரவேண்டும்.
3.நம்முடைய நேரங்களை திட்டமிட்டு
அமல்களில் கழித்தல்.
ரமலான் காலங்களில்
ஸஹர்,தஹஜ்ஜத்,தராவீஹ்,தொழுகை,இப்தார்,போன்ற வணக்கங்களுக்காக நம்முடைய நேரங்களை சரியாக
திட்டமிட்டு அமைத்துக் கொண்டோம்.
எனவே ஈது தொழுகையின் மூலம்
படைத்தவனையும்,பித்ராவின் மூலம் படைப்புக்களையும் மகிழ்ச்சிப்படுத்துவதே
இப்பெருநாளின் பிரதான நோக்கமாகும்.
ஈதுல் பித்ர் ஏழைகளின் கண்ணீர்
துடைப்புநாள்.ஒருநாள் வறுமை ஒழிப்பு திட்டம்.
ஏழைகளை சந்தோசப்படுத்தி அல்லாஹ்வைன்
அங்கீகாரத்தை பெறுவோம்.
இதோ வரலாற்றில் ஒரு பொக்கிஷம்:
وحينما كان علي
ذاهبا ليشتري طعاما قابله بعض الفقراء, فتألم لحالهم, وتصدق عليهم بالدراهم الستة التي
معه, وهى ثمن الإزار(الشال) الذي باعه
و في أثناء ذهابه
إلي بيته, لقيه جبريل عليه السلام في صورة إنسان ومعه ناقة من الجنة, فقال له: يا أبا
الحسن اشتر منى هده الناقة.
فقال له علي: ليس
معي ثمنها, ولا يمكنني شراؤها.
قال البائع: يمكنك
أن تشتريها, وتدفع ثمنها فيما بعد.
فسأله علي: بكم
تبيعها ?
قال البائع: بمائة
درهم
فرضي علي, وقبل
شراءها منه بدلك الثمن المؤجل , و اخدها, ودهب .
فقابله ميكائيل
علي صورة رجل أعرابي وسأله: هل تبيع هده الناقة يا أبا الحسين ?
قال علي: نعم,
أبيعها?
قال: بكم اشتريتها
أجاب علي: اشتريتها
بمائة درهم.
قال ميكائيل:أنا
اقبل شراؤها منك بمائة وستين درهما, فيكون ربحك ستين درهما.
فباعها علي له
بدلك الثمن, ودفع له المشتري مائة وستين درهما.
فاخدها علي, ومشي
إلى بيته, فلقيه في الطريق البائع الأول وهو جبريل, فسأله هل بعت الناقة يا أبا الحسن ?
أجاب علي: نعم,
بعتها.
قال جبريل:اعطني
حقي.
فدفع له المائة
درهم, وبقي معه ستون درهما.
فدهب بها إلى بيته,
ووضعها بين يدي السيدة فاطمة "رضي الله عنها".
فسألته من أين
لك هدا المال
!
أجاب علي تصدقت
بستة دراهم على قوم الفقراء, فأعطاني الله ستين درهما, فكان ربح كل درهم عشرة دراهم."من
جاء بالحسنة فله عشرة أمثالها."
ثم قابل علي الرسول
صلى الله عليه و سلم, واخبره القصة.
فقال له الرسول
الكريم: يا علي, البائع جبريل و المشتري ميكائيل, والناقة مركب فاطمة يوم القيامة,
ثم قال له أعطيت ثلاث لم يعطها غيرك لك زوجة سيدة نساء أهل الجنة, ولك ولدان هما سيدا
شباب أهل الجنة,ولك صهر هو سيد المرسلين .فاشكر الله علي ما أعطاك, وحمده فيما أولاك.
ஹழ்ரத் அலி ரலி அவர்களின்
குடும்பத்தில் கடுமையான வறுமை.மூன்று தினங்கள் வீட்டில் யாரும்
சாப்பிடவில்லை.இந்நிலையில் தன் பிள்ளைகளின் பசியை போக்குவதற்கு வீட்டில் இருந்த
ஒரு ஆடையை விற்க முடிவு செய்தனர்.
அந்த ஆடையை 6 திர்ஹத்துக்கு விற்று உணவு
வாங்குவதற்காக வந்துகொண்டிருந்த அலி அவர்களை சில ஏழைகள் சந்தித்து தங்களின்
வறுமையை முறையிட்டனர்.உடனே அலி ரலி அவர்கள் தங்களின் பசியை விட மற்றவர்களின் பசிக்கு
முக்கியத்துவம் அளித்து அதை ஸதகா செய்து விடுகிறார்கள்.
இந்நிலையில் ஒட்டகத்துடன் வந்த ஒருவர்
அலியே!ஒட்டகத்தை விலைக்கு வாங்கிக்கொள்கிறீரா?என கேட்டபோது,என்னிடம் அதற்கு
பெருமானமான விலை இல்லை என்று அலி ரலி அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒட்டகத்தின்
உரிமையாளர்,இப்போது இதை வாங்கிக்கொள்ளும். உமக்கு வசதி வரும்போது பணம் கொடுங்கள்
என்றார்.
அப்படியானால் ஒட்டகத்தின் விலை
என்ன?என்று அலி ரலி அவர்கள் கேட்ட போது 100 திர்ஹம் என பதிலளித்தார்.எனவே தவனை
சொல்லிவிட்டு அதை பெற்றுக்கொள்கிறார்கள்.
அந்த ஒட்டகத்தை பெற்றுக்கொண்டு ஹழ்ரத்
அலி ரலி அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்.
அப்போது அவர்களை சந்தித்த
இன்னொருவர்,அலியே!ஒட்டகம் விலைக்கு தருகிறீர்களா?என கேட்டபோது ஆம் !என்று அலி ரலி பதில்
கூறினார்கள்.
நீங்கள் எவ்வளவுக்கு வாங்கினீர்?என்று
கேட்டபோது 100 தீனாருக்கு என பதில் கூறினார்கள்.
அப்போது அம்மனிதர், எனக்கு இதை 160 திர்ஹத்துக்கு கொடுங்கள்.உங்களுக்கு 60 லாபம் என்றார்.
இறுதியாக வியாபாரம் நல்லபடியாக
முடிந்து அதில் 100 திர்ஹத்தை ஒட்டகத்தை வாங்கிய கடன் காரருக்கு கொடுத்துவிட்டு 60 திர்ஹம் லாபத்துடன் தன் இல்லம் சென்றார்கள் அலி ரலி அவர்கள்.
வீட்டிற்கு சென்ற அலி ரலி அவர்களிடம்
இந்த பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது?என அன்னை பாத்திமா ரலி அவர்கள்
வினவியபோது,விபரத்தை அலி ரலி அவர்கள்
கூறினார்கள்.
அதைக்கேட்ட பாத்திமா ரலி அவர்கள் இது
ஹலாலா இல்லையா?என நபி ஸல் அவர்களிடம் கேட்டபின்னர் நாம் பயன்படுத்துவோம்.என்று
கூறி பெருமானாரிடம் வந்து விஷயத்தை கூறினார்கள்.
அதை முழுவதுமாக செவிதாழ்த்தி கேட்ட ஸல்
அவர்கள் ,அலியே!நீங்கள் ஏழைகளுக்கு 6 கொடுத்தீர்கள்.அதை அல்லாஹ் 60 தாக திருப்பி
தந்துள்ளான் உம்மிடம் ஒட்டகத்தை விற்றவர்
ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள்.உம்மிடம்
இருந்து ஒட்டகத்தை வாங்கியவர் மீகாயீல் அலை அவர்கள்.அந்த ஒட்டகம்
பாத்திமாவின் சுவனத்து வாகனம்.
அலியே!அல்லாஹ் உங்களுக்கு மூன்று
சிறப்புக்களை தந்துள்ளான்.
1.சுவனத்து பெண்களின் தலைவியை உங்களுக்கு
மனைவியாக தந்துள்ளான்.
2.சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாக
உங்களின் இரு மகன்களும் உள்ளனர்.
3.ரஸூல்மார்களின் தலைவரின் மருமகனாக
நீங்கள் உள்ளீர் என்று கூறினார்கள்.
அல்லாஹ் இந்த நாளின் மகிழ்சியை நம்
வாழ்வு முழுவதும் விசாலமாக்கி வைப்பானாக
குறிப்பு:இன்ஷா அல்லாஹ் நம் தளத்தில் வாரம் தோறும் வியாழக்கிழமைக்குள் ஜும்ஆ பயான் வெளியிடப்படும்.செல்போனில் மெஸ்ஸேஜ் அனுப்பப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோ ம்.மேலும் இன்ஷா அல்லாஹ் இந்த வார ஜும்ஆ பயான் குறிப்பு இன்று இரவுக்குள் வெளியிடப்படும்.
nice
ReplyDeleteநல்ல காரியங்களில் அல்லாஹ் இஸ்திகாமத்தை தருவானாக வாழ் நாளில் பல ரமலானை அடையும் பாக்கியத்தை தருவானாக ஆமீன்
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteபெருநாள் உரை மிக.பொருத்தமாக உள்ளது
அல்லாஹ் இஸ்லாமிய ர்களுக்கு. பூரண வெற்றியை தருவானாக!
அல்லாஹ் உங்களுக்கு மிகுந்த நற்கூலியை நல்குவானாக .ஆமீன்
ReplyDeleteஅல்ஹம்து லில்லாஹ் அருமையான பயான்
ReplyDeleteAlhamdulillah
ReplyDeleteபெருநாள் கட்டுரை மிகவும் அருமை.ஷம்சுதீன்.காஷிஃபி.திருப்பத்தூர்
ReplyDelete