Thursday 22 August 2013

கொள்கையில் உறுதி வேண்டும்

இஸ்லாத்தின் கொள்கைகள்,கோட்பாடுகள் சுத்தமானதும் தெளிவானதுமாகும்.எந்தவிதமான குழப்பத்திற்கும் தடுமாற்றத்திற்கும் அதில் இடமில்லை.

அகீதாக்கள் எனப்படும் கொள்கைகள் தான் இஸ்லாத்தின் அடித்தளம்.

அமல்களில் குறைவு ஏற்படலாம்.ஆனால் கொள்கையில் குழப்பம் வரக்கூடாது.
ஒரு முஃமின் எந்த சூழ்நிலையிலும் தன் கொள்கையை இழக்கக்கூடாது.

 ஈமான் மூன்று பிரிவுகளை கொண்டது.

الإيمان اصطلاحًا: "اعتقاد بالجنان، وإقرار باللِّسان، وعمل بالأركان"؛ ينظر: "شرح الطحاوية"

அதில் முதன்மையானது கொள்கையுடன் சம்பந்தப்பட்டது.ஈமானின் சொல்வடிவமும் செயல்வடிவமும் நாம் ஏற்றிருக்கிற அகீதாவைக்கொண்டு முடிவு செய்யப்படுகிறது.அதனால் தான் அகீதாக்கள் கெட்டுப்போனால் அமல்களும் கெட்டுப்போகும் என்று குர்ஆன் எச்சரிக்கிறது.

قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا (103) الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا (الكهف: 103 104)

செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.


நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த முனாபிகீன்களிடம் ஈமானும் வணக்கமும் இருந்தது.ஆனால் அவர்களிடம் கொள்கை கெட்டுப்போய்விட்டது.எனவே அவர்களின் ஈமானும் அமலும் அவர்களுக்கு எந்த பலனும் அளிக்கவில்லை.
அதைபோலவே இறைமறுப்பளர்களின் நல்ல காரியங்கள் நாளை மறுமையில் அவர்களுக்கு எந்தபலனையும் தரப்போவதில்லை, காரணம் அடிப்படையான ஈமானிய கொள்கையில் அவர்கள் கோட்டைவிட்டுவிட்டார்கள்.

وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا} [الفرقان: 23]،

இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.

கொள்கை சரியில்லாத அமல்களுக்கு அல்லாஹ்விடம் எந்த மதிப்பும் இல்லை.

مر أبو بكر -رضي الله تعالى عنه- براهب يتعبد في كنيسة وقد ترك الناس وزهد في الدنيا؛ لكنه يعتقد أن الله
ثالث ثلاثة، يتقرب إلى عيسى وإلى روح القدس كما يتقرب إلى ربنا -جل وعلا- يعمل وينصب؛ لكنه على
الشرك. فلما رآه أبو بكر دمعت عيناه وقال: صدق الله! (عَامِلَةٌ نَاصِبَةٌ * تَصْلَى نَارًا حَامِي

ஹழ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஒரு கிருஸ்துவ ஆலயத்தை கடந்துசெல்கிறபோது அதில் மிகுந்த பக்தியுடன் வணக்கம் செய்யும் ஒரு பாதிரியை கண்டார்கள்.மக்களிடமிருந்து தனிமை,உலகில் பற்றின்மை.  வணக்கம்.எல்லாம் இருக்கிறது ஆனாலும் கொள்கை கெட்டுப்போய்விட்ட து.காரணம் மூன்று தெய்வ கொள்கை மூலம் ஷிர்க்கும் கலந்துவிட்டது. அவரைப்பார்த்து கண்ணீர் வடித்த அபூபக்கர் (ரலி) அவர்கள்,

அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்  88:3,4

என்ற அல்லாஹ்வின் வார்த்தை உண்மைதான் என்று கூறினார்கள்.

உலகில் முதலாவதாக கொள்கை கெட்டவன் இப்லீஸ்தான்.அவன் அல்லாஹ்வையும்,மறுமையையும்,சுவர்க்கத்தையும்,நரகத்தையும் நம்பிக்கை கொண்டவன்.அவன் கெட்டுப்போனது கொள்கையில் தான்.

الحجر:35]،: (قَالَ رَبِّ فَأَنْظِرْنِي إِلَى يَوْمِ يُبْعَثُونَ)

என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!என்று இப்லீஸ் கூறினான்

இதில் இப்லீஸ் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பிக்கை கொண்டிருந்தான் என்று தெளிவாக விளங்குகிறது.
நபி ஸல் அவர்கள் தங்களின் ஸஹாபாக்களின் சிந்தனையை தீய கொள்கையைவிட்டும் பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
அன்றைக்கு யூதர்கள் முஸ்லிம்களுடன் கலந்து வாழ்ந்ததால் அவர்களின் வியாபார கொடுக்கல் வாங்கள்களை தவிர்க்க முடியாத  சூழல், அதேசமயம் யூதர்களின் கொள்கை குழப்பத்தை விட்டும் தன் தோழர்களை கவனமாக பாதுகாத்தார்கள்.
இணைவைப்பிலிருந்து வந்த அந்த அரேபிய கூட்டம் மீண்டும் அதற்கு திரும்பிவிடாமல் பாதுகாத்ததில் தான் அண்ணலாரின் மகத்தான வெற்றி அமைந்திருக்கிறது.
அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று பழைய தவ்ராத் பிரதியை படிக்க கூடாது.சில காலம் கப்ர் ஜியாரத் தடுக்கப்பட்டிருந்தது.
   
لما جلس عمر رضي الله -تعالى- عنه إلى رجل من اليهود، وكان اليهود يخالطون المسلمين، وربما شاركوهم في تجارتهم وجاوروهم في منازلهم ومشوا معهم في أسواقهم، فلما جلس عمر إلى ذلك اليهودي قال ذلك اليهودي شيئاً من التوراة إلى عمر وإذا فيها حكم وأمثال وبلاغة وآداب، فأعجب عمر بهذا الكلام..
فلما وضعه بين يدي النبي -عليه الصلاة والسلام- وقرأه عليه غضب النبي -صلى الله عليه وسلم.
قال -عليه الصلاة والسلام- له، وقد غضب: "أمتهوكون فيها يا ابن الخطاب؟"، أنت عندك شك في الشريعة التي جئت بها فذهبت تبحث في كتب القوم عن شريعة أخرى أو عن مكمل لها؟ "أمتهوكون فيها؟"، هل تشكون فيها يا ابن الخطاب؟ "والله لقد جئتكم بها بيضاء نقية!"، والله إنها بيضاء ليس فيها شك، وليس فيها ضلال، لم تعبث بها يد عالِمٌ، ولم تغير فيها يدُ مُفْسِد، قال: "لقد جئتكم بها بيضاء نقية!"، ثم أخذها النبي -صلى الله عليه وسلم- ومحاها بيده، ثم قال: "يا ابن الخطاب، والله لو كان موسى حيا ما وسعه إلا أن يتبعني".
ஒரு யூதரிடமிருந்து தவ்ராத் பிரதியை பெற்றுக்கொண்ட உமர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களின் சபையில் வைத்து படித்தபோது நபி ஸல் அவர்கள் கடுமையாக கோபம் கொண்டார்கள்.
கத்தாபின் மகனே! உங்களுக்கு வழங்கப்பட்ட ஷரீஅத்தில் சந்தேகம் கொள்கிறீரா?என கேட்டார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உங்களுக்கு தெளிவான தீனை கொண்டு வந்துள்ளேன்.ஒருவேளை நபி மூஸா அலை அவர்கள் உயிருடன் இருந்தாலும் என் தீனையே பின்பற்றுவார்

எனவே ஒரு முஸ்லிம் தன் ஈமானை பாதுகாக்க இஸ்லாத்தின் கொள்கை களை அடிப்படையாக பாதுகாப்பது அவசியமாகும்.அதனால் தான் இஸ்லாமிய அறிஞர்கள்,கொள்கைகள் பற்றி சரியான அறிவின்றி பேசவோ, விவாதம் செய்யவோ, அதைபற்றிய கட்டுரைகளை படிக்கவோ கூடாது என்று கூறுகிறார்கள்.
இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

اعْلَمْ أنَّ الفِقْهَ في الدّينِ أفضَلُ مِنَ الفِقْهِ في الأحْكام

மார்க்கத்தின் கொள்கைகளை தெரிந்துகொள்வது இஸ்லாத்தின் சட்டங்களை தெரிந்துகொள்வதைவிட முக்கியமானது.
தீர்க்கமான அறிவு பெற்றவர்கள் கூட

وَالرَّاسِخُونَ فىِ الْعِلْمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِ كلُ‏ٌّ مِّنْ عِندِ رَبِّنَا

கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். 3:7 என குர்ஆன் கூறுகிறது.


أقبل رجل إلى الإمام مالك رحمه الله تعالى، وقال له: يا إمام (الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى) [طه: 6]، كيف استوى؟ قالوا: فتغير الإمام مالك حتى علته الرحباء يعني أخذه شعور بالهيبة والخوف والرعب من السؤال وعظمته حتى تصبب منه العرق، تغير الإمام ثم التفت إلى الرجل وقال ويحك أتدري ما تقول ؟ أنت تسأل عن أمر عظيم، الاستواء معلوم والكيف مجهول .. نحن نعلم أن الله استوى على عرشه جل وعلا لكن طريقة الاستواء لم يخبرنا بها جل وعلا فلا نتكلم بها بغير علم فإنها تختص بأمر يخص العظيم جل وعلا
قال: "الاستواء معلوم، والكيف مجهول، والسؤال عنه بدعة، والإيمان به واجب"، ثم أمر بإخراج الرجل بين يديه .
 الأسماء والصفات للبيهقي (ج2 ص305-306)،


இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து,இமாம் அவர்களே!  அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.என்று அல்லாஹ் கூறுகிறான் அவன் அர்ஷில் எப்படி அமர்ந்திருக்கிறான்?என்று கேட்டார்.அப்போது அந்த கேள்வியின் பயத்தால் இமாம் அவர்களுக்கு தன்னிலைமாறி வியர்க்க ஆரம்பித்தது.

பின்னர் அந்த மனிதர் பக்கம் திரும்பி, நீ எதைப்பற்றி கேள்வி கேட்கிறாய் என்று தெரிகிறதா?மிகப்பெரிய விஷயம் பற்றி கேட்கிறாய்.
   அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்தான் என்று தெரியும் ஆனால் எப்படி அமர்ந்திருக்கிறான் என்று தெரியாது.ஏனெனில் அதைப்பற்றி அவன் கூறவில்லை.அவன் கூறாத விஷயம் பற்றி நாம் பேசமாட்டோம்.

ஆகவே இதைப்பற்றிய நம்முடைய கொள்கை இது தான்:
அவன் அர்ஷில் அமர்ந்தான் என்பது தெரியும்.
எப்படி அமர்ந்தான் என்று தெரியாது.அதைப்பற்றி கேள்வி கேட்பது பித்அத்.அதை ஈமான் கொள்வது கட்டாயக்கடமையாகும்.


لما ترجم الذهبي لعمرو بن عبيد في كتابه سير أعلام النبلاءكان عمرو بن عبيد مع ضلاله وكثرة الشبهات في قلبه إلا أنه كان عابدا حتى إنه مرة التقى بالخليفة فقال له الخليفة وهم في الحرم قال: هل لك إلي حاجة؟ فقال له عمرو: هذا مقام لا يسأل فيه إلا الله. وتركه وذهب، مع أنه ضال في عقيدته ينكر أن الله في السماء، أن الله مستو على العرش، ينكر أن الله يتكلم وأنه سميع بصير، يسجد ويقول: سبحان ربي الأسفل!
لما ترجم له الذهبي قال: عمرو بن عبيد الزاهد العابد الورع الزنديق الفاجر، فكان زاهد في الدنيا، ورعا عن المحرمات، كان متعبداً، لكن لما أكثر السماع لأهل البدع ومجالستهم وأكثر الاستماع والنظر إلى شبهاتهم خلصت إلى قلبه حتى ضل ضلالا عظيما.ا.


இமாம் சஹபி (ரஹ்) அவர்கள் தங்களின் சியரு அஃலாமிந்நுபலா என்ற நூலில், அம்ர் இப்னு உபைத் என்பவர்  பற்றி விமர்சனம் செய்கிற
போது, அவர் உலக மோகம் இல்லாதவர்,மிகவும் பேனுதலுள்ளவர்,மிகச்சிறந்த வணக்கசாலி.
.ஒரு தடவை ஹறம் ஷரீபில் வைத்து அக்காலத்து கலீபா அவர்கள் அம்ரை சந்தித்து,உங்களுக்கு என்ன தேவை சொல்லுங்கள் நான் நிறைவேற்றுகிறேன் என்றார்.அப்போது அம்ர் அவர்கள், இது அல்லாஹ்விடம் கேட்கும் இடம்.வேறு யாரிடமும் நான் தேவையாகமாட்டேன் என்று பதில் கூறினார்கள்.
அந்தளவுக்கு பேனுதளுல்லவர் இறுதியில் கொள்கை கெட்டுப்போய் அல்லாஹ் வானத்தில் இல்லை,அவன் அர்ஷிலும் இல்லை,பூமியில் தான் இருக்கிறான்,அவன் பேசுவதில்லை,கேட்பதில்லை,   பார்ப்பதில்லை என்று உளற ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலைக்கு அவர் சென்றதற்கு காரணம் அகீதாக்கள் பற்றி அதிகம் விவாதம் செய்ததும்,அதுபோன்ற சபைகளில் பங்கெடுத்ததும்,வஹ்ஹாபிகளின் நட்புமே அவரின் வழிகேட்டிற்கு காரணம் என்று இமாம் சஹபி குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் அறிவுக்கு சுதந்திரம் கொடுக்கிறது,ஆனால் அந்த சுதந்திரத்திற்கு ஒரு எல்லை உண்டு.
எந்த இடத்தில் அறிவு தடுமாறுமோ  அந்த இடத்தில் ஈமான் முன்னிலைப்படுத்தப்படும்.

இதுநாள்வரை முஸ்லீம்களுக்கிடையில் சட்டஙக்குழப்பங்கள் செய்துவந்த வஹ்ஹாபிகள் கொள்கை குழப்பங்களில் இறங்கியுள்ளனர்.
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்றும்,குர்ஆனில் பிழை உண்டு என்றும் கூற ஆரம்பித்துள்ளனர்.

தமிழகத்தை பொருத்தவரையில் ஒற்றுமையுடனும்,கொள்கைப்பிடிப்புடனும் வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் மத்தியில் தூய தவ்ஹீத் எனும் போர்வையில் போலி தவ்ஹீத் தோன்றியது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் குமரிமாவட்டம் கோட்டாரிலிருந்து அந்த வெசச்செடி வேர்பிடித்து வளரத்துவங்கியது.   சூரிய உதயத்திற்கு பிரபலமான அந்த குமரி மாவட்டத்தில் அன்று சூரியன் உதயமானபோது ஷைத்தான் தன் மூன்றாவது கொம்பையும் வெளியே நீட்டி விட்டான்.
இஸ்லாமிய சமூகத்தில் மண்டிக்கிடக்கிற அனாச்சாரங்களையும்,மூடநம்பிக்  கைகளையும் ஒழித்துக்கட்ட வந்தவர்களாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்டவர்கள்,காலப்போக்கில் தங்களின் உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தினர்.
பன்னெடுங்காலமாக பின்பற்றி வாழ்ந்துவந்த சுன்னத் வல்ஜமாஅத்தின் வழி முறைகளைகளை விட்டும் முஸ்லிம் இளைஞர்களை திசைதிருப்பும் முயற்சி  யில் ஈடுபட்டனர்.தங்களின் குறுமதிக்கு எட்டிய ஊனமான கருத்துக்களையும் உண்மைக்குபுறம்பான செய்திகளையும் மார்க்கம் என்ற பெயரால் உளர ஆரம்பித்தனர்.
தமிழகத்தில் தாங்கள் தான் தவ்ஹீதை குத்தைகைக்கு எடுத்தவர்கள் போல தோற்றத்தை உருவாக்கிய அவர்கள்,அமைதியாக,ஒற்றுமையாக வாழ்ந்த இஸ்லாமிய குடும்பங்களில் குழப்பத்தையும்,பிளவையும் ஏற்படுத்தினர்.
பெற்றோர்களையும்,சமுதாய பெரியவர்களையும் தன் மார்க்கத்தின் எதிரியாக  வும்,இணைவைப்பாளராகவும் சித்தரித்தனர்.அவர்களின் மூலைச்சலவைக்கு ஆட்படுத்தப்பட்ட துடிப்புள்ள இளைஞர்கள் பெற்றோர்களிடமும்,பெரியவர்களிடமும் அவமரியாதையாக பேச ஆரம்பித்தனர்,செயல்படத்துவங்கினர்.
அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் பயப்படாதே என்ற கருத்தின் ஊடே வேறு யாருக்கும் மரியாதை செய்யாதே  என்ற விஷக்கருத்தை இளையசமுதாயத்தின் உள்ளத்தில் விதைத்தனர்.

கொலை செய்வதை விடவும் பெரும்பாவமான குழப்பம் செய்வதை தங்களின் ஆயுதமாக கையிலெடுத்தனர்.அன்பு தவழவேண்டிய குடும்பங்கள் குழப்பங்களி  ன் கூடாரங்களாயின.அமைதி தவழவேண்டிய பள்ளிவாசல்கள் போர்க்களங்கள் போல் காட்சி தந்தன.

அல்லாஹ்வின் நம்பிக்கையில் சந்தேகங்களை உண்டாக்கினர்.                        அல்லாஹ்வின் மகத்துவத்தை குறைத்துப்பேசினர்.                          
கண்மனி நாயகத்தின் கண்ணியத்தை குழி தோண்டி புதைத்தனர்.
                                     அல்குர்ஆனின் நம்பகத்தன்மையை குறைத்து,அதில் சந்தேகத்தை கிளப்பினர்.       நபி மொழிகளை முரண்பாடுகளாக்கினர்.    ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் அவர்களின் கொள்கைக்கு ஒத்துவராதபோது பலஹீனமாக்கினர்.தேவைப்பட்டால் மறுக்கவும் செய்தனர். அல் குர்ஆனையும்,நபிமொழியையும் இந்த உம்மத்தின் கைகளுக்கு பாதுகாப்பாக கொண்டுவந்துசேர்த்த ஸஹாபாக்களை இழிவாகவும் கேவலமாகவும் பேசி வருகின்றனர்.சுருங்கச்சொல்லவேண்டுமானால்-  தங்களின் மனோ இச்சைக்கு இணங்க மார்க்கத்தை வளைத்தனர்.
தன் மனோ இச்சையை இறைவனாக ஆக்கிக்கொண்டவனை நபியே நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?என்ற அல்லாஹ்வின் அர்த்தமுள்ள கேள்விக்கு இவர்கள் அத்துனை பொருத்தமானவர்கள்..(அல்குர்ஆன்:45:23)

நாளுக்கொரு சட்டமும்,நேரத்திற்கொரு நிலைப்பாட்டையும் கொண்ட அவர்கள் முரண்பாடுகளின் மொத்த உருவமாக காட்சி தருகிறார்கள்.
மத்ஹபுகளையும்,இமாம்களையும் புறக்கணித்து தான்தோன்றித்தனமாக சட்டம் இயற்றியதின் விளைவாக முன்னுக்குப்பின் முரண்பாடுகளான சட்டங்களை கூறிவந்தனர்.
இமாம்களையும்,இறையச்சத்துடன் அவர்கள் இயற்றிய பிக்ஹ் நூட்களையும் கொச்சைப்படுத்தி பேசியும் எழுதியும் வந்தனர்.
இனி அடுத்தகட்டமாக புனிதமான ஸஹாபாக்களை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்தார்கள். நபிமார்களுக்குப்பின்னர் இந்த உலகில் வாழ்ந்த மனிதர்களில் மிகச்சிறந்த மனிதர்களான ஸஹாபாக்கள் பற்றி அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய எதிகளையும் மிஞ்சி நிற்கிறது.
அல்லாஹுத்தஆலா இந்த கொள்கை கெட்ட கூட்ட்த்தை விட்டும் நம் சமுதாய இளவல்களை பாதுகாப்பானாக!


4 comments:

  1. طلحة مصباحي22 August 2013 at 06:59

    جزاك الله خيرا كثيرا

    ReplyDelete
  2. Innum konjam virivaana thahavalhalai searthirukkalam
    جزاك الله خيرًا..

    ReplyDelete
  3. எத்தனையோ எதிர்ப்புகளையும் தாண்டிய சுன்னத் வல் ஜமாஅத்துக்கு .இதுவா சவால் ........

    ReplyDelete
  4. Ungal karuhukkalil velli aruviyin thullalum thelivum irukirathu. Alhamthulillah

    ReplyDelete