அல்லாஹுத்தஆலா
ஒரு முஃமினின் நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கு அதிகப்படியான
முக்கியத்துவம் வழங்குகிறான்.எந்தளவிற்கென்றால் நேற்றுவரை அந்நியத்தனமாக இருந்த ஒரு ஆண் பெண்ணுக்கு இடையில் கபில்து என்ற ஒரு வார்த்தை காலமெல்லாம்
இருவருக்குமான உறவை விசாலமாக்கி விடுகிறது.
அப்பெண்ணை பார்ப்பது,பேசுவது,தனிமையில்
இருப்பது அத்துனையும் ஒரு வார்த்தையால் ஹலாலாகி விடுகிறது.
அவ்வாறே,ஒரு
முஃமின் வெளிப்படுத்தும் கடும் சொற்களால் ஏற்படும் தீய விளைவுகளை பட்டியலிட்டு
கூறத்தேவையில்லை.
நேற்றுவரை
உயிருக்கு உயிராக இருந்த கணவன் மனைவிக்கான உறவுகள் தலாக் என்ற ஒரு வார்த்தையால்
சிதைந்து போய்விடுவதை பார்க்கிறோம்.
ஈமானையும்
இறைமறுப்பையும் தீர்மானிப்பதில் நாவுக்கும் அதிலிருந்து வெளியாகும்
வார்த்தை
களுக்கும் முக்கிய பங்குண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.
நாற்பது ஆண்டுகள்
இணைவைப்பிலும் இறை
மறுப்பிலும் காலத்தை கழித்துவிட்ட ஒருவர் அஷ்ஹது என்ற
வார்த்தையால் தன் கடந்த கால பாவங்கள் அனைத்தையும் விட்டு
விலகிக்
கொள்கிறார்.அப்பழுக்கற்ற வாழ்க்கைக்கு தன்னை
சொந்தமாக்கிக்கொள்கிறார்
அப்படியே அரைநூற்றாண்டு காலம் ஈமானிய வாழ்வை சொந்தமாக்கியவர் ஒரே ஒரு குஃப்
ரியத்தான வார்த்தையால் அத்துனையையும் இழந்து
விடுகிறார்.
இதனால் தான், ஒரு
வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும் என்று அனுபவசாலிகள் கூறுவார்கள்.
ஒரு முஃமினின்
நாவிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அல்லாஹ்விடம் மிகப்பெரும் மரியாதை உண்டு.அதனால்
தான் ஒவ்வொரு வார்த்தைகளும் மலக்குகளால் பதிவு செய்யப்படுகிறது.
நாளை மறுமையில்
நாம் வெளிப்படுத்திய வார்த்தைகளுக்கான விசாரனை உண்டு என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும்.
அல்லாஹ் வழங்கிய
ஒவ்வொரு நிஃமத்தையும் சரியாக முறையாக பயன் படுத்தவேண்டும் அதனடிப்படையில்
நாவும்,அதற்கு அல்லாஹ் வழங்கிய பேசும் திறனும் மாபெரும் அருட்கொ
டையாகும்.
நாவின் வீரியம்
பற்றி பெரியவர்கள்,
அளவில்
சிறியது.விளைவில் பெரியது என்று கூறுவார்கள்
நாம் பேசும்
வார்த்தைகளுக்கு நம் வாழ்க்கை சொந்தமாகவில்லையானால் அது அல்லாஹ்வின் மிகப்பெரும்
கோபத்திற்கு காரணமாகும் என அல் குர்ஆன் கூறுகிறது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ
مَا لَا تَفْعَلُونَ ﴿٢﴾ كَبُرَ مَقْتًا عِندَ اللَّـهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ
ஈமான் கொண்டவர்களே!
நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
நீங்கள் செய்யாததை
நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
பொய்,கோள்,புறம்
இட்டுக்கட்டல் போன்ற அல்லாஹ்வின் வெறுப்பிற்கு காரணமான அத்துனை பாவங்களையும் நாவே
விதைக்கிறது.
விபச்சாரத்தை விட
புறம் கடுமையான பாவம் என்று ஹதீஸில் வருகிறது அப்படிப்பட்ட புறம் எனும்
பாவத்திற்கு நாவே பிறப்பிடம்.
உலமாக்கள்
சொல்வார்கள்
பாவங்கள்
முஃமின்களை பாவிகளாக்கும்.ஆனால் சில வார்த்தைகள் முஃமின்களை காபிர்களாக்கிவிடும்.
உதாரணமாக இருவர்
பேசிக்கொண்டிருக்கிறார்
கள்.அதில் ஒருவர் இது ஷரீஅத் சட்டம் என்றார்.மற்றவரோ
ஷரீஅத்தை தூரபோடு (நவூது பில்லாஹ்) என்றால் அவனை உலமாக்கள் காபிர் என்று
கூறுவார்கள்.
மார்க்கத்தை
கேலிபேசுவதும் ஏளனமாக பேசுவதும் இறைமறுப்பாகும்.
யார் தன்னுடைய்
இரு உறுப்புக்களுக்கு பொருப்பேற்பானோ அவனின் சுவனத்திற்கு நான் பொருப்பு என்று நபி
ஸல் அவர்கள் கூறினார்கள்.
ஒன்று நாவு
மற்றொன்று மர்மஸ்தானம்.
ஹழ்ரத் அபூபக்கர்
ரலி தன் நாவை பிடித்து நாவே!அதிகமான ஜனங்கள் உன்னை காரணமாக கொண்டே நரகம்
செல்கின்றனர் என கூறுவார்களாம்
ஒரு மனிதனின்
சுபாவம் அவனின் நாவுக்கு கீழே மறைந்துள்ளது என்று ஹழ்ரத் அலி ரலி அவர்கள்
கூறினார்கள்.அதனால் தான் ஸாலிஹீன்கள் சொல்வார்கள்
நீ ஆலிம்களின்
சபையில் இருந்தால் உன் நாவை கட்டுப்படுத்து,இறை நேசர்களுடன் இருந்தால் உன் கல்பை
கட்டுப்படுத்து என்பார்கள்.
அல்லாஹுத்தஆலா
அவனின் படைப்புக்கள் அனைத்திலும் ஹிக்மத் எனும் ஞானம் இருக்கும்.
மனிதனுக்கு இரு
காதை தந்தான்.ஆனால் ஒரு நாவை தான் தந்திருக்கிறான்.ஏனெனில் அதிகமாக கேட்க
வேண்டும்.குறைவாக பேச வேண்டும்.
அறிவாளி பேசும்
முன் சிந்திக்கிறான்.முட்டாள் பேசிவிட்டு சிந்திக்கிறான்.
நல்லவர்களின்
நாவின் அசைவுக்கு அல்லாஹ்வின் அர்ஷ் செவி சாய்க்கிறது.
وإليك قصة الثلاثة الذين ذهبوا معا لزيارة
واحد من رجال الله.. كل منهم يحمل فى قلبه غير الذى يحمله الآخر.. فلقى كل منهم جزاءه
الذى يستحقه.
هى قصة مشهورة.. أوردها الإمام المناوى
فى طبقاته..وتناولها كثير من المؤرخين بالقبول.. "تكاد تتواتر فى المعنى بكثرة
ناقليها وعدالتهم – كما قال محمد فتحى أبو بكر محقق طبقات المناوى- وفيها أبلغ زجر
عن الإنكار على أولياء الله تعالى".
الولى هو الشيخ يوسف الهمدانى المشهور بالغوث..
قصد زيارته ثلاثة:
الأول عبد القادر الجيلانى.. وكان يومئذ
شاب.
والثانى ابن أبى عصرون.
والثالث ابن السقاء.
فقال ابن السقاء فى الطريق: اليوم أسأله
مسألة لا يعلم جوابها.
وقال ابن أبى عصرون: أسأله فأنظر ماذا يقول.
وقال عبد القادر الجيلانى: معاذ الله أن
أسأله.. بل أتبرك برؤيته.
فدخلوا عليه فلم يروه مكانه.. فمكثوا ساعة
فإذا هو جالس.. فقال لابن السقاء وهو لا يعرفه:
- يابن السقاء.. تسألنى مسألة لا أعرف جوابها؟.. هى
كذا.. وجوابها كذا.. إنى أرى نار الكفر تتلهب فيك.
ثم قال لابن أبى عصرون:
- تسألنى تنظر ما أقول؟ أردت أن تسأل عن كذا.. وجوابه
كذا.. لتغمرنّك الدنياإلى شحمتى أذنيك لإساءة أدبك.
وقال لعبد القادر:
- لقد أرضيت الله ورسولك بأدبك.. أراك قد صعدت الكرسى
متكلما على الناس وقلت: قدمى على رقبة كل ولى لله.
قال المحقق فى الهامش: وقد صدق قول الشيخ
فيهم جميعا.. قال ابن أبى عصرون:
- وأما الشيخ عبد القادر فقد ظهرت أمارة قربه من الله
تعالى.. وأجمع عليه الخاص والعام.. وقال: قدمى هذه على رقبة كل ولى (كناية عن علو مكانته
ومقامه).. وأقرت الأولياء بفضله فى وقته..
- وأما ابن السقاء فإنه اشتغل بالعلوم الشرعية حتى
برع فيها وفاق كثيرا من أهل زمانه.. واشتهر بقطع من يناظره فى جميع العلوم.. وكان ذا
لسان فصيح وسمت بهى.. فأدناه الخليفة منه.. وبعثه إلى ملك الروم رسولا (بالقسطنطينية)..
فرآه الملك ذا فنون وفصاحة وسمت فأعجب به.. وجمع له القسيسين والعلماء بدين النصرانية
وناظروه..فأفحمهم عجزا.. فعظم عند الملك.. ثم رأى بنتا للملك ففُتن بها.. وسأل الملك
أن يزوجها به.. فأبى الملك إلا أن يتنصر.. فأجابه إلى طلبه وتنصر.. فزوجه بها.. وكان
ابن السقاء يذكر كلام الغوث.. ويقول إنه أصيب فى دينه بسببه.
- وأما أنا فجئت دمشق.. وأحضرنى السلطان نور الدين
– الملك الشهيد- وأكرهنى على ولاية الأوقاف فوليتها.. وأقبلت علىّ الدنيا إقبالا كثيرا..
وقد صدق قول الغوث فينا كلنا.
யூஸுப் ஹம்தான்
எனும் ஒரு இறைநேசரை சந்திக்க பக்தாத் நிஸாமிய்யா மத்ரஸாவில் படித்துக்கொண்டிருந்த மூன்று மாணவர்கள் புறப்பட்டனர்.
முதலாமவர்.
அப்துல் காதிர் ஜைலானி ரஹ்.
இரண்டாமவர் இப்னு
அபீ அஸ்ரூன்
மூன்றாமவர் இப்னு
ஸகா
அப்போது போகும்
வழியில் இப்னு ஸகா,
நான் அந்த ஷைகை
ஒரு கேள்வியின் மூலம் திகைக்க வைக்கப்போகிறேன்.என்றார்.
அப்போது இப்னு
அபீ அஸ்ரூன்,
நான் அந்த பெரியவரிடம்
ஒரு கேள்வி கேட்பேன்.அதற்கு என்ன பதில் கூறுகிறார் என்று பார்ப்பேன் என்றார்.
அப்துல் காதிர்
ஜைலானி அவர்கள்
அல்லாஹ்
பாதுகாக்கட்டும்! நான் அவர்களிடம் கேள்வி கேட்பதைகூட அவமரியாதையாக
கருதுகிறேன்.எனவே நான் அவர்களை சந்தித்து பரக்கத் பெறமட்டுமே வருகிறேன்
என்றார்கள்.
இவ்வாறு
பேசிக்கொண்டு சென்ற அம்மூவர்,அந்த இறைநேசரின் சமூகத்தை அடைந்தபோது
இப்னு ஸகாவை
பார்த்த அந்த இறைநேசர் -
நீ என்னை மடக்கும் கேள்வி கேட்கப்போகிறீரோ? உன் கேள்வி
இது.அதற்கான பதில் இது என்று கூறிய அந்த பெரியவர் கடும் கோபமுற்றவராக உன்னிடம்
குஃப்ரிய்யத்தான நெருப்பு கொழுந்துவிட்டு எறிவதை பார்க்கிறேன் என்றார்கள்.அதாவது
உன் ஈமான் எப்போது பறிபோகலாம் என்றார்கள்.
இரண்டாமவரான
இப்னு அஸ்ரை பார்த்து-
நீ என்னிடம் கேள்வியை நாடி வந்துள்ளாய்.உன் கேள்வி
இது.அதற்கான விடை இது என்று கூறிவிட்டு
உன் தீய நடத்தையால் உலகம் உன்னை ஆக்கிரமிக்கும் என்றார்கள்.
மூன்றாமவரான
அப்துல்காதிர் ஜைலானியை பார்த்து,உன் அழகிய ஒழுக்கத்தால் அல்லாஹ்,ர
ஸூலை திருப்தி
படுத்திவிட்டாய்.மக்களிடம் மிக உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்.இறைநேசர்களின் தலைமையை
பெறுவீர் என்றார்கள்.
அந்த ஷைக் கூறிய
அத்துனை வார்த்தைகளும் அம்மூவரின் எதிர்காலத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்தன.
இப்னு அஸ்ர்
கூறுகிறார்.
அப்பெரியவர்
கூறியது போலவே அப்துல்காதிர் ரஹ் அவர்கள் உலகமே திரும்பி பார்க்ககும்
ஞானியானார்.மேலும் இப்னு ஸகா ஷரீயத் கல்வியில் தேர்ச்சிபெற்று அக்கால மக்களில்
மிகவும் திறமையானவராக வளம்வந்ததுடன், மிகச்சிறந்த தன் நாவன்மையால் தன்னிடம் வாதம்
செய்யும் அனைவரையும் வெற்றி கொள்வார்.
ஒருகட்டத்தில்
அக்கால கலீபா அவர்களின் மிகச்சிறந்த நம்பிக்கையை பெற்று அவரின் பிரதான தூதராக
தேர்வு செய்யப்பட்டார்.
இறுதியாக கலீபா
அவர்கள் இவர்களை ரோம் அரசபைக்கு தூதுவராக அனுப்பி வைத்தார்கள்.இவரின் அபாரமான
ஆற்றலை கண்ட ரோம் மன்னர் கிருஸ்துவ பாதிரிகளை வரவைத்து இவரிடம் விவாதம் செய்ய
வைத்தார், அவர் தம் வாதத்திறமையால்
அத்துனை பாதிகளையும் மண் கவ்வ வைத்துவிட்டார்.
இந்நிலையில்
ஒருநாள்...ரோம் மன்னனின் அழகான மகளை பார்த்த இப்னு ஸகா அவளால்
ஈர்க்கப்பட்டு,மணமுடிக்க ஆசை கொண்டு அரசரிடம் கேட்டபோது அதற்கு கிருத்துவராக தான்
மாறவேண்டும் என்று அரசர் கூறிவிட்டார்.இறுதியில் அப்பெண்ணுக்காக தன் மார்க்கத்தை
துறந்துவிட்டார்.
அவரின் பிந்திய
நாட்களை பற்றி பதிவு செய்யும் இப்னு அபீ அஸ்ர் அவர்கள்,இப்னு ஸகா பஃதாதின் வீதிகளில்
பிச்சை எடுத்து அலைந்ததை தான் கண்டதாகவும், அவரின் மரண நேரத்தில் கிப்லாவின்
பக்கம் முகத்தை திருப்பிய போது அவரின் முகம் கிழக்கு திசை பக்கம் திரும்பியதாகவும்
கூறினார்.மேலும் நான் சுல்தான் நூருத்தீன் அவர்களின் அரசபையில் தன் வாழ்நாள்
கழிந்த்தாகவும் உலக அலுவல்களில் ஈடுபட்டு தீனின் சேவைகள் செய்யும் நஸீபின்றி கழ்ந்துவிட்டது.
ஏக காலத்தில் ஒரே
மத்ரஸாவில் பயின்ற மூன்று நபர்களின் வாழ்க்கை அவர்கள் நாவுகள் வெளிப்படுத்திய வார்த்தைகளின்
விளைவுகளானது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
சில நேரங்களில்
நாம் பேசும் வார்த்தைகள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது.மறுமையையும்
தீர்மானிக்கிறது
'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப்
பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு
அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்!
ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக்
காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து
கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும்
நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய
மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக்
கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில்
கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும்
நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள்
கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக
இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ
ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
ஒரு அடியான்
ஒருவரை சாபமிட்டால் அந்த வார்த்தை வானத்தை நோக்கி செல்கிறது.அங்கு வானத்தின் கதவு
அடைக்கப்படுகிறது.உடனே அந்த கடும் சொல் பூமியில் பல இடங்களுக்ககும் சென்று சேரும்
இடம் இல்லாததால் அதை பயன்படுத்திவனை நோக்கி திரும்பி வந்துவிடுகிறது என நபி ஸல்
அவர்கள் கூறினார்கள்.
நல்ல எண்ணங்கள்
நல்ல வார்த்தைகளை உதயமாகச்செய்கிறது.நல்ல வார்த்தைகள் தான் நல்ல வாழ்வை
பெற்றுத்தருகிறது.
அல்ஹம்து லில்லாஹ் மிக அற்புதமாக இருக்கிறது. அல்லாஹ் தங்களின் சேவையை கபூல் செய்வானாக!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.அருமையான விஷயங்கள். ஜஜாகல்லாஹ்
ReplyDeleteAlhamthulillah. Payanulla Bayan.
ReplyDeleteஅல்ஹம்து லில்லா மிகவும் அற்புதம் நல்ல கருதுக்கள் புதுகை உலமா
ReplyDelete