Thursday 5 September 2013

ஹஜ் அமல்களின் சங்கமம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹஜ்ஜுடைய காலம் துவங்கி விட்டது.
உலகெங்கிலும் இருந்து ஹாஜிகள் தங்களின் புனித பயணத்திற்கு தயாராகி வருகின்றனர்.
நாற்பதாண்டு கனவு,ஐம்பதாண்டு கனவு நினைவாகும் காலம் நெருங்கி வருகிறது.

ஹஜ்ஜின் அவசியம் பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் இந்த உம்மத்துக்கு விளக்கவேண்டிய தேவையில்லை எனும் அளவிற்கு பரிட்ச
யமானது.

இளமையில் ஹஜ்

ஹஜ் என்பது அவசரமாகவும் ஆரோக்கியமாகவும் செய்ய வேண்டிய அமல் என்பதை மட்டும் இப்போதைக்கு சமுதாயத்துக்கு சொல்ல
வேண்டியது மிகவும் கட்டாயமானதா
கும்.ஏனெனில் ஹஜ்ஜை இறுதிகாலத்தில் செய்யும் அமலாக இந்த உம்மத் ஆக்கிவிட்டது.

ஹஜ் கடமையாக்கப்பட்டதில் வேண்டுமானால் இறுதியாக இருக்கலாம் ஆனால் உண்மையில் ஹஜ் என்பது இறுதி அமல் அல்ல,இளமை அமல் என்பதை மறந்துவிடக்கூடாது.

இன்னும் வாழ்க்கை இருக்கிறது,நாம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.
குழந்தைகளின் திருமணத்தை பார்க்க வேண்டும்.வீடு கட்டி முடிக்க வேண்டும் பேரக்குழந்தைகளை காணவேண்டும். என்றெல்லாம் ஏமாற்று வார்த்தைகளை கொண்டு ஷைத்தான் இந்த உம்மத்தை ஏமாற்றிக்கொண் டிருக்கிறான்.

قال رسول الله صلى الله عليه وسلم : (( تعجلوا إلى الحج فإن أحدكم لا يدري ما يعرض له ))[رواه أحمد ]

ஹஜ்ஜை விரைந்து நிறைவேற்றுங்கள்.ஏனெனில் உங்களை சந்திக்கிற ஆபத்துக்கள் பற்றி உங்களுக்கு தெரியாது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

பொருளாதார மற்றும் உடல் சம்பந்தப்பட்ட இழப்புக்களை சந்திக்க நேரிடலாம்

ஹஜ் அமல்களின் சங்கமம்

ஹஜ் அனைத்து அமல்களின் சங்கமம்.இதில் தொழுகை நோன்பு ஜகாத் அனைத்தும் உண்டு.ஹஜ்ஜின் பயணத்தின்போதும், தவாபின் நிறைவின் போதும், தொழுகை உண்டு.
ஹத்யி கொடுக்க வசதியில்லாத போது நோன்பு உண்டு.மேலும் ஹஜ்ஜில் அல்லாஹ்வுக்காக செலவு செய்வதும் உண்டு,
ஒருவகையில் ஹஜ் ஜிஹாதுக்கு சமமான அமலாகும்.

ولذلك تقول السيدة عائشة رضي الله عنها: يا رسول الله ألا نغزو ونجاهد معكم؟ فقال: «لكن أحسن الجهاد وأجمله حج مبرور» فقالت عائشة: فلا أدع الحج بعد إذ سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم

 ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் அவர்களே!உங்களுடன் நாங்களும் ஜிஹாதுக்கு வரலாமா?என நபி ஸல் அவர்களிடம் நான் கேட்டபோது, ஜிஹாதில் அழகிய ஜிஹாத் ஹஜ் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
இதை நான் செவியுற்றதிலிருந்து ஹஜ்ஜை விட்டதில்லை என்று அன்னை ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

روى الذهبي في السير (5/97) قال نافع: سافرت مع ابن عمر بضعا وثلاثين حجة وعمرة.

 இமான் நாபிஉ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
நான் இப்னு உமர் ரலி அவர்களுடன் முப்பதுக்கும் மேற்பட்ட ஹஜ் மற்றும் உம்ரா செய்துள்ளேன் என கூறுகிறார்கள்.

وحج الحسن خمس عشرة مرة، وحج كثيرا منها ماشيا من المدينة إلى مكة ونجائبه تقاد معه
 
ஹழ்ரத் ஹஸன் ரலி 15  தடவை ஹஜ் செய்துள்ளார்கள்.அதில் அதிகமாக மதீனாவிலிருந்து மக்காவுக்கு நடந்துவந்து ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள்.


وعن هلال بن خباب، قال: كان سعيد بن جبير يحرم في كل سنة مرتين، مرة للحج ومرة للعمرة.)

ஹழ்ரத் ஸயீது இப்னு ஜுபைர் ரலி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தடவை இஹ்ராம் கட்டுவார்கள்.ஒன்று உம்ராவுக்கும் மற்றொன்று ஹஜ்ஜுக்காக என ஹிலால் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

قال ابن حبان: كان طاووس من عباد أهل اليمن، ومن سادات التابعين، مستجاب الدعوة، حج أربعين حجة.

 ஹழ்ரத் தாவூஸ் ரஹ் அவர்கள் யமன் வாசிகளில் மிகச்சிறந்த வணக்கசாலி களில் ஒருவர்.தாபியீன்களின் தலைவர்.துஆ ஒப்புக்கொள்ளப்படும் நபர். அவர்கள் 40 ஹஜ் செய்துள்ளார்கள்.

இன்றைக்கு சில அரைவேக்காடுகள் ஒரு ஹஜ் தான் செய்யவேண்டும். ஒரு உம்ரா தான் செய்யவேண்டும் என வாய்க்கு வந்தபடி உளறி வருகின்றனர். இவர்கள் ஹஜ்ஜின் உண்மையான தாத்பரியம் புரியாதவர்கள்.
மூன்று காரியங்கள் கடந்த கால பாவங்கள் அனைத்தையும் துடைத்துவிடும் 
ஒன்று. இஸ்லாம்.  இரண்டு ஹிஜ்ரத் மூன்று ஹஜ்.

ஹஜ்ஜின் நாட்கள் ஐந்து நாளாக இருக்கலாம்,ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் ஐம்பதாண்டையும் கடந்து நிற்கும்.காரணம் ஹஜ் ஒருமைப்பாட்டின் மொத்த உருவம்.
அல்லாஹ்வின் படைப்புக்கள் அத்துனையும் சங்கமிக்கும் இடம்.
மவ்த்தையும் மண்ணரையையும் மட்டுமின்றி மறுமையையும் மஹ்ஷரையும் நினைவு படுத்தும் மகத்தான களமாகும்.ஹாஜிகளிடம் மக்கள் பல்வேறு தேவைகளை முன்வைத்து பிரார்த்திக்கச்சொல்வார்கள்.ஹாஜி தன் ஒரே கோரிக்கையாக ஹஜ்ஜின் கபூலிய்யத்தை மட்டும் நோக்கமாக கொள்வார்.

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் தன்னுடைய உம்ரா பயணத்தை பற்றி நபி ஸல் அவர்களிடம் கூறிய
போது உங்கள் துஆவில் என்னை மறந்துவிடாதீர் என நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

உண்மையில் ஹஜ் செய்பவர்களும் உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் தூதுப்படைகள் என்பதாக ஹதீஸில் வருகிறது.

அது நபிமார்கள் பாதம் பட்ட பூமியாகும்.அவர்கள் வாழ்ந்த மண்ணாகும். ருக்னே யமானிக்கும் ஹஜ்ருல் அஸ்வதுக்கும் இடையில் சுமார் 70 நபிமார்களின் கப்ர் இருப்பதாக வரலாற்றா
ய்வாளர்கள் குறிப்பிடுவர்.
உலகில் வந்த அனைத்து நபிமார்கள் மூன்று காரியங்களை அவசியம் செய்வார்கள்.
1.திருமணம்.2.ஆடுமேய்ப்பது 3,ஹஜ் செய்வது.

ஆஷிகீன்களின் பயணம் ஹஜ்

உலகில் ஹாஜிகளைப்போல இறைக்காதல
ர்களை வேறு எங்கும் காண முடியாது.

ஹஜ் என்பது அறிவுள்ளவர்களால் புரிந்து கொள்ளப்படுவதல்ல,அல்லாஹ்வின் மீது அன்புள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும், காரணம் அது தவ்ஹீதின் இரகசியம்.

حدثنا عبد المجيد بن أبي رواد ، عن أبيه ، أنه قال : « خرجنا من خراسان ومعنا امرأة ، فلما دخلت الحرم جعلت تقول : أين بيت ربي ؟ أين بيت ربي ؟ فقيل لها : الآن تأتين بيت ربك ، فلما دخلت المسجد قيل لها : هذا بيت ربك ، قال : فاستندت إلى البيت فوضعت خدها على البيت ، فما زالت تبكي حتى ماتت » أخبار مكة للفكهاني 1/244 .
நாங்கள் குராஸான் என்ற ஊரிலிருந்து ஹஜ்ஜுக்கு புறப்பட்டோம்.அப்போது எங்களுடன் ஒரு பெண்ணும் சேர்ந்து கொண்டாள்.அவள் ஹறம் ஷரீபில் நுழைந்தபோது என் ரப்பின் இல்லம் எங்கே? என் ரப்பின் இல்லம் எங்கே? என புலம்பியவளாக ஓடினாள்.
உன் ரப்பின் இல்லம் இப்போது வந்துவிடும் என அவளிடம் சொல்லப்பட்டது.

மஸ்ஜித் ஹறாமிற்குள் அப்பெண் நுழைந்தபோது இதுதான் உன் ரப்பின் இல்லம் என்று சொல்
லப்பட்டது.உடனே அப்பெண் பைத்துல்லாஹ்வின் மீது சாய்ந்தவளாக தன் கண்ணத்தை அதன் மீது சேர்த்துவைத்து அழ ஆரம்பித்தாள்.அதேநி
லையில் அப்பெண் மரணித்துவிட்டாள்.


قال ابن القيم رحمه الله معلقاً على هذه الآية : ولو لم يكن له شرف إلا إضافته إياه إلى نفسه بقوله { وطهر بيتي } لكفى بهذه الإضافة فضلا وشرفا

அந்த இல்லத்திற்கான சிறப்பிற்கு என் வீடு என படைத்தவன் சொந்தம் கொண்டாடுவது ஒன்றே போதாதா? என அல்லாமாஇப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ذكر بعض أهل السير أن شقيق البلخي أبصر في طريق الحج مقعداً يتكأ على إليته يمشي حيناً و يضعن حيناً يرتاح حيناً و يمشي أخرى كأنه من أصحاب القبور مما أصابه من وعثاء السفر و كآبة المنظر قال له شقيق يا هذا أين تريد قال أريد بيت الله العتيق قال من أين أتيت ؟ قال من وراء النهر قال كم لك في الطريق ؟ فذكر أعواماً تربوا على عشر سنين قال فنظرت إليه متعجباً قال يا هذا مما تتعجب قال أتعجب من بعد سفرك و ضعف مهجتك قال أما بعد سفري فالشوق يقربه و أما ضعف مهجتي فالله يحملها يا شقيق أتعجب ممن يحمله اللطيف الخبير إذا شاء.

 ஷகீக் பல்கி ரஹ் அவர்கள் ஹஜ்ஜுக்கு செல்லும் வழியில் ஒரு ஊனமுற்ற வரை கண்டார்கள்.அவர் தரையில் தவழ்ந்தவராக செல்கிறார்.

சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.மீண்டும் தன் பயணத்தை தொடர்கிறார்.இவ்வாறு கடுமையா  ன சிரமத்திற்கிடையில் அவர் பயணம் செய்கிறார்.

அவரின் இந்த நிலையை கண்ட ஷகீக் ரஹ் அவர்கள்,நீங்கள் எங்கு செல்கிறீர்? என வினவியபோது நான் பைத்துல்லாஹ்வை நாடிச்செல்கிறேன் என்றார்.

அந்த பதிலை கேட்டு ஆச்சரியமுற்ற ஷைக் அவர்கள்,  எங்கிருந்து வருகிறீர்? எவ்வளவு காலம் பயணம் செய்து வருகிறீர்?என மீண்டும் கேட்டபோது-  நான் வராவுந்நஹ்ர் என்ற ஊரிலிருந்து சுமார் பத்து ஆண்டுகள் பயணித்து வருகிறேன் என்றபோது நான் ஆச்சரியப்பட்டேன்.

ஏன் ஆச்சரியப்படுகிறீர்?என அவர் என்னிடம் கேட்டார்.அதற்கு நான்  உன் பலஹீனமும் பயணத்தின் தூரமும் என்றேன்.

என் பயணத்தின் தூரம் என் இறைக்காதலால் நெருக்கமாக தெரிகிறது. என் பலஹீனம் மறந்து அல்லாஹ்வே என்னை சுமந்து செல்வதாக உணர்கிறேன் என்றார்.

இவ்வாறு ஆஷிகீன்களான இறைக்காதலர்கள் சங்கமிக்கும் இடமாகும்.

ஹஜ் என்றால் கட்டுப்படுதல்

ஈமான் என்பது வெறும் அறிவுக்கு மட்டும் சொந்தமானதல்ல.ஹஜ்ஜின் அமல்கள் அனைத்தும் கட்டுப்படுதல் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டதாகும்.

சுமார் 5000 ஆண்டுக்கு முன்னால் ஒரு பெண் தன் பச்சிளம் குழைந்தையின் தாகம் தீர்க்க ஓடுகிறாள்.இன்றைக்கு ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் முஃமின்கள் ஓடுகிறார்கள்.
இது என் இறைவனின் உத்தரவு என்பதை தவிர வேறு காரணம் எதையும் சொல்லத்தெரியாது.

فهذا عمر بن الخطاب يُتابع النبِيَّ في كلِّ شيء؛ حتَّى إنه لَمَّا أتى إلى الحجر الأسود قبَّله كما قبَّله رسول الله - صلَّى الله عليه وسلَّم - وقال: \"إنِّي لأَعْلم أنَّك حجر لا تضرُّ ولا تنفع، ولولا أنِّي رأيت النبيَّ - صلَّى الله عليه وسلَّم - يقبِّلك ما قبَّلتُك\

 ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் கல்லுக்கு அருகில் வந்து முத்தமிட்டு விட்டு  நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன்.எந்த பயனையும் இடையூறையும் உன்னால் தர இயலாது. நபி ஸல் அவர்கள் உன்னை முத்தமிட பார்க்காவிட்டால் நான் முத்தமிட்டிருக்க மாட்டேன் என்றார்கள்.

فقد رُوي أنَّ رجلاً جاء إلى الإمام مالكِ بن أنس، فقال له: \"يا أبا عبدالله! من أين أُحْرِم؟ قال: من ذي الحُلَيفة، من حيث أحرمَ رسولُ الله - صلَّى الله عليه وسلَّم - فقال: إنِّي أريد أن أُحرم من المسجد، فقال: لا تفعل، قال: فإنِّي أريد أن أحرم من المسجد من عند القبر، قال: لا تفعل؛ فإنِّي أخشى عليك الفتنة، فقال: وأي فتنة هذه؟! إنما هي أميال أَزِيدها، قال: \"وأي فتنة أعظم من أن ترى أنَّك سبَقْتَ إلى فضيلةٍ قَصُر عنها رسولُ الله - صلَّى الله عليه وسلَّم -؟! إني سمعتُ الله يقول: ﴿فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ﴾ [النور: 63]\"[16].

ஒருவர் இமாம் மாலிக் ரஹ் அவர்களிடம் வந்து நான் இஹ்ராம் எங்கிருந்து கட்ட வேண்டும்?என வினவினார்,
அதற்கு இமாம் அவர்கள் துல் ஹுலைபா என்ற இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என பதில் கூறினார்கள்.
உடனே அவர்- நான் மஸ்ஜித் நபவியிலிருந்து இஹ்ராம் கட்டுவதற்கு நாடுகிறேன் என்றார்.அதற்கு இமாம் மாலிக் ரஹ் அவர்கள்- நீர் அவ்வாறு செய்யாதீர் என்றார். அதற்கு அவரோ, நான் நபி  ஸல் அவ்ர்களின் அடக்கஸ்தலத்திலிருந்து இஹ்ராம் கட்ட நாடுகிறேன் என்றார்,அதையும் மறுத்த இமாம் அவர்கள் நீர் அவ்வாறு செய்யாதீர்.அது மிகப்பெரிய பித்னா என்றார்கள்.அதற்கு அம்மனிதர், இது எப்படி பித்னாவாகும்?என்று வினவினார்.   நபி ஸல் அவர்கள் எதை செய்யச்சொல்லி காட்டித்தந்தார்களோ அதை குறை படுத்துவதை விடவும் பெரிய பித்னா என்னவாக இருக்கும்?என்று இமாம் மாலிக் ரஹ் அவர்கள் கேட்டார்கள்.
நபி ஸல் அவர்களுக்கு மாறு செவதை விட்டும் அவர்கள் விலகிக்கொள்ளட்  டும்.அதையும் மீறி அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களை குழப்பம் பிடிக்கும் அல்லது மிகப்பெரும் அதாப் பிடித்துக்கொள்ளும் எனும் அல்லாஹ்  வின் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

இந்த உலகம் நிலைத்திருப்பதின் மூலதனம் அந்த பைத்துல்லாஹ் தான்.

، وجعل الله بيته الحرامَ قيامًا للنَّاس، فهو عمود العالَم الذي عليه بناؤه، فلو ترك النَّاس كلُّهم الحجَّ سنةً، لَخرَّت السماء على الأرض؛ هكذا قال ترجمان القرآن ابن عباس

ஹஜ் என்பது அல்லாஹ் பைத்துல்லாஹ்வை மக்களை நிர்வகிக்கும் இடமாகவும் இந்த உலகத்தின் அஸ்திவாரமாகவும் அமைந்துள்ளது.
ஒரு ஆண்டு மக்கள் அனைவரும் ஹஜ் செய்வதை விட்டுவிட்டால் வானம் பூமியின் மீது இடிந்து விழுந்துவிடும் என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் விளக்கம் தருகிறார்கள்.
.
 ஹஜ்ஜுக்கு செல்பவர்களுக்கு சில அறிவுரைகள்
 1. நிய்யத்தை சரி செய்து கொள்ளவேண்டும்
ஹஜ்ஜில் முதலாவது கெட்டுப்போவது நிய்யத் தான்.அதனால் தான் ஹஜ் கடமையாக்கும் வசனத்தின் துவக்கம் அல்லாஹ்வுக்காக என்று ஆரம்பிக்கிறது.

وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً وَمَن كَفَرَ فَإِنَّ الله غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ } [آل عمران :97]
 வசதியுள்ளவர்கள் அல்லாஹ்வுக்காக பைத்துல்லாஹ்வை ஹஜ் செய்வது கடமையாகும் என அல்லாஹ் கூறுகிறான்.

؛ فهذا إمام المخلصين - عليه الصَّلاة والسَّلام - لَمَّا عزَم على الحجِّ دعا ربَّه، قال: ((اللهم حجَّة، لا رياء فيها ولا سُمعة

நபி ஸல் அவர்கள் ஹஜ் பயணத்தை நாடியபோது யா அல்லாஹ்! முகஸ்துதி இல்லாத ஹஜ்ஜாக என் ஹஜ்ஜை ஆக்கிவைப்பாயாக என துஆ செய்வார்கள்.
கியாமத்தின் நெருக்கத்தில் ஹஜ்ஜின் நிய்யத் கெட்டுவிடும்
ஆலிம்கள் பெருமைக்காகவும், பணக்காரர்கள் சுற்றுலாவாகவும், வியாபாரிகள் வியாபார நோக்குடனும், ஏழைகள் யாசகம் கேட்கவும்ஹஜ் செய்வார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

2.தவ்பா செய்வது.ஒரு முஃமின் அங்கு போய் பாவங்களை துடைக்கும் முன்னர் இங்கு தவ்பாவை அதிகமாக்குவது.அல்லாஹ்வுக்கு  செய்த பாவங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாடி இஸ்திஃபார் செய்வதுடன், அடியார்களுக்கு செய்த பாவங்களுக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்பது,அத  னால் இழைக்கப்பட்ட பொருளாதார இழப்புக்களை சரிசெய்வது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக அந்த புண்ணிய பூமியில் வைத்து எந்த பாவமும் நடைபெற்றுவிடாமல் கவனமாக இருக்கவேண்டும்.ஏனெனில் அங்கு ஒரு பாவத்தை உள்ளத்தால் நினைப்பதும் பாவமாகும்.மேலும் அங்கு ஏற்படும் ஒவ்வொரு பாவமும் பன்மடங்கான தண்டனைக்கு காரணமாகும்.
ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் ஹறமுக்கு வெளியே ஒரு கூடாரம் அடித்து தங்குவார்கள்.தம் பணியாட்கள் தவறு செய்யும்போது அங்கு வரவைத்து கண்டிப்பார்களாம்.

3.குடும்பத்தினர்களுக்கான செலவினங்களை கொடுத்துவிடுவதுடன்,அவர்களு  க்கு இறையச்சத்துடன் வஸிய்யத் செய்வது.

4.ஹஜ் பயணத்திற்கு ஹலாலான வருமானத்தை பயன்படுத்துவது.

. ففي الحديث عن الرسول صلى الله عليه وسلم أنه قال: "إذا خرج الحاج بنفقة طيبة، ووضع رجله في الغرز فنادى : لبيك اللهم لبيك ، ناداه مناد من السماء : لبيك وسعديك، زادك حلال، وراحلتك حلال، حجك مبرور غير مأزور، وإذا خرج بالنفقة الحرام الخبيثة ووضع رجله في الغرز فنادى : لبيك اللهم لبيك. ناداه مناد من السماء: لا لبيك ولا سعديك. زادك حرام، وراحلتك حرام، وحجك مأزور غير مبرور" رواه الطبراني

ஒரு ஹாஜி தன் ஹலாலான வருமானத்தை கொண்டு தன் ஹஜ் பயணத்தை தொடர்ந்து லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்று கூறும்
போது வானத்திலிருந்து ஒரு அழைப்பாளர்  உம் லப்பைக் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உன் உணவு வாகனம் ஹலால்.எனவே உன் ஹஜ் மப்ரூர் என்
று கூறுகிறார்.   அவ்வாறு ஹராமான வருமானத்தால் இந்த பயணத்தை தொடர்ந்து  லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்று கூறும்போது வானத்திலிருந்து ஒரு அழைப்
பாளர்  உம் லப்பைக் ஒப்புக்கொள்ளப்படவில்லை. உன் உணவு வாகனம் ஹராம்.எனவே உன் ஹஜ் மப்ரூர் இல்லை என்று கூறுகிறார். என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

5.ஹஜ் பயணத்திற்காக நல்ல நட்பை தேர்வு செய்வது.

அல்லாஹ் இவ்வாண்டு ஹஜ் செல்லும் ஹாஜிகளின் பயணத்தை இலேசாக்குவானாக.அதை மக்பூலாக்குவானாக!ஆமீன்

5 comments:

  1. அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும் நஸிபை தருவானாக ஆமீன்

    ReplyDelete
  2. அல்லா நம்மில் ஒவ்வொரு வருக்கும் .ஹஜ்ஜை .நஸீபாக்குவானாக .ஆமீன் அல்லாவின் அருளால் ஹஜ் செய்ய நாடியுள்ளேன் .எனக்காக துஆச்செய்யுங்கள்

    ReplyDelete
  3. அல்லா நம்மில் ஒவ்வொரு வருக்கும் .ஹஜ்ஜை .நஸீபாக்குவானாக .ஆமீன் அல்லாவின் அருளால் ஹஜ் செய்ய நாடியுள்ளேன் .எனக்காக துஆச்செய்யுங்கள்

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும். மிகவும் நல்ல கட்டுரை. அல்லாஹ் நம் நல்ல அமல்களை ஒப்புக்கொள்ள துஆ செய்கிறேன். தயவு செய்து ஹதீஸ்களை எழுதும்பொழுது ஆதார நூல்களையும் எழுதவும். மற்றவர்களிடம் சொல்லும்பொழுது ஆதார நூல்களையும் சேர்த்து சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  5. மா ஷா அல்லாஹ்,
    பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete