Thursday 26 September 2013

கண்ணியமிக்க கஃபா



إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ

மனிதர்களுக்காக உலகில் அமைக்கப்பட்ட முதல் இல்லம் பக்காவாகும்.

கஃபதுல்லாஹ்வின் இன்னொரு பெயர் பக்கா.அந்த நகரத்தின் பெயர் மக்கா.
கஃபா எனும் வார்த்தை திருக்குர்ஆனில் இரு இடங்களில் இடம் பெறுகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَقْتُلُواْ الصَّيْدَ وَأَنتُمْ حُرُمٌ وَمَن قَتَلَهُ مِنكُم مُّتَعَمِّدًا فَجَزَاء مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهِ ذَوَا عَدْلٍ مِّنكُمْ هَدْيًا بَالِغَ الْكَعْبَةِ أَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسَاكِينَ أَو عَدْلُ ذَلِكَ صِيَامًا لِّيَذُوقَ وَبَالَ أَمْرِهِ عَفَا اللّهُ عَمَّا سَلَف وَمَنْ عَادَ فَيَنتَقِمُ اللّهُ مِنْهُ وَاللّهُ عَزِيزٌ ذُو انْتِقَامٍ  [2] (سورة المائدة، الآية 95).
 جَعَلَ اللّهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ قِيَامًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْيَ وَالْقَلاَئِدَ (سورة المائدة، الآية 97).

இதை தவிர கஃபாவுக்கு திருக்குர்ஆன் பலசிறப்பு பெயர்களை கூறுகிறது. பைத்துல் அதீக், அவ்வல பைத் மஸ்ஜித் ஹராம் போன்ற பல சிறப்பு பெயர்களை கூறுகிறது

அல்லாஹுத்தஆலா அந்த கஃபாவை பூமியின் மையப்பகுதியில் அமைத்திருப்  பதாக ஹதீஸில் வருகிறது.
கஃபா கட்டப்பட்ட வரலாறு
கஃபா 6 தடவை கட்டப்பட்டுள்ளது
1.ஆதம் அலை அவர்கள் படைக்கப்படும் முன் அல்லாஹ் அவனது வானவர்க ளின் கரத்தால் கட்டவைத்தான்.
2. ஹழ்ரத் ஆதம் அலை அவர்கள் கட்டினார்கள்
3.நபி இப்ராஹீம் அலை,இஸ்மாஈல்லை அவர்கள் கட்டினார்கள்.
இந்த நிகழ்வு குறித்து அல்குர்ஆன் கூறுகிறது.
4.நபி ஸல் அவர்களின் இளமைப்பருவத்தில் மக்கா காபிர்கள் கட்டினார்கள்.  இந்த நிகழ்வின்போது நபி ஸல் அவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை எடுத்து அந்த கஃபாவில் பதித்தார்கள்.
குறைஷியர் காபாவைக் கட்டியது.நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித காபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன் காரணம்: காபா நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல் ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. காபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக குரைஷியர் அதைப் புதுப்பிக்கும் நிலைக்கு ஆளாயினர்.

குறைஷிக் குலத்தாரே! காபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின் வருமானமோ, வட்டிப் பணமோ, மக்கள் எவரிடமிருந்தாவது அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ சேரக்கூடாதுஎன்று சொல்லிக்கொண்டு, குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் தங்களுக்கிடையே அந்தப் பணியைப் பிரித்துக் கொண்டனர்.இறுதியாக அப்பணியை செய்துமுடித்தனர்.
5.நபி ஸல் அவர்களின் காலத்திற்குப்பின் ஹழ்ரத் அப்துல்லா இப்னு ஸுபைர் ரலி அவர்கள் கட்டினார்கள்.
குரைஷிகள் பணப்பற்றாக்குறையின் காரணத்தினால் ஹதீமை கஃபாவுடன் சேர்த்து கட்டாமல் விட்டுவிட்டனர்.ஹழ்ரத் இப்னு ஸுபைர் ரலி அவர்கள் அதை தங்களின் ஆட்சியில் சேர்த்து கட்டினார்கள்.
6.அவர்களுக்குப்பின் ஆட்சிக்கு வந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுப் கட்டினார்.
அவர் தன் காலத்தில் மீண்டும் பழையபடியே ஹதீமை கஃபாவுடன் சேர்க்காமல் தனியாக விட்டு கட்டினார்.

அதற்குப்பின்னர் வாழ்ந்த புகஹாக்கள் இனி எந்த ஆட்சியாளரும் இந்த அமைப்பை மாற்றக்கூடாது என பத்வா வழங்கிவிட்டார்கள்.அன்றிலிருந்து இன்றுவரை அதே அமைப்பே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த இல்லத்தை அல்லாஹ்வின் இல்லம் என்று அல்லாஹ் கூறுகிறான்.  காரணம் அல்லாஹ்வின் அர்ஷிலிருந்து வெளிப்படும் நூர் நேரடியாக அந்த இல்லத்தில் இறங்குவதால் அவ்வாறு கூறப்படுகிறது.

நான்கு பொருட்களை மனிதன் எத்தனை தடவை  அதை பயன்படுத்தினா
லும் அவனது உள்ளத்தின் ஆசை தீராது என உலமாக்கள் கூறுகிறார்கள்.
முதலாவது:வானம்- அதன் நிறம்,அதில் தோன்றும் சூரியன் சந்திரன் நட்சத்தி  ரம் போன்றவைகளை எத்தனை தடவை பார்த்தாலும் ஆசை தீராது,மாத்திரம  ல்ல ஒவ்வொரு தடவை காணும்போதும் புதிய தோற்றம் தரும்.
2.தண்ணீர்.  ஆயுள் பூராவும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கிறோம் ஆனாலும் கடும் தாகம் ஏற்பட்டு தண்ணீர் குடிக்கும் போது அதன் சுகமே தனிதான்.
மூன்றாவது:கஃபதுல்லாஹ்வை பார்ப்பது-எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.மேலும் ஒவ்வொரு தடவையும் ஒரு புது தோற்றம் தரும்.
அல்லாஹ் மனிதனுக்கு பார்வையை வழங்கியதின் பயன் அந்த இல்லத்தை பார்க்கும் போதே பூர்த்தியாகிறது என ஒரு கவிஞன் கூறுகிறான்.
இந்த பூமியின் மையத்தில் புள்ளி வைக்கவேண்டுமானால் அது கஃபாவின் மீது வைக்கவேண்டும் என்று காரி தய்யிப் ரஹ் கூறுகிறார்கள்.
ஹரம் எல்லைகள் அமைக்கப்பட்ட வரலாறு
ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் கஃபாவை கட்டிக்கொண்டிருக்கும்போது அல்லாஹ் ஒரு மேகத்தை அனுப்பினான். அந்த மேகம் அவர்களுக்கு நிழல் கொடுத்தது.
அப்போது அல்லாஹ் தஆலா-  இப்ராஹீமே! எந்த இடம் வரை இந்த மேகம் நிழல் கொடுக்கிறதோ அதுவே என் ஹரம் பூமியாகும் என கூறினான்.
அந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளை கண்ணியப்படுத்தவேண்டும்.இந்த இடங்களில் நபிமார்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.அதனால்தான் ஒவ்வொரு முஃமினின் உள்ளமும் அந்த இல்லத்தை நாடுகிறது.
அந்த புனித இடத்தில் நின்று இப்ராஹீம் அலை அவர்கள் ஹஜ்ஜுக்காக அழைப்பு கொடுத்தபோது அந்த சப்தத்தை அல்லாஹ் தஆலா அனைத்து ரூஹ்களுக்கும் கேட்கச்செய்தான்.எத்தனை தடவை பதில் சொன்னார்களோ அத்தனை தடவை ஹஜ் நஸீப் பெற்றார்கள்

கஃபத்துல்லாஹ் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் மிகவும் உன்னதமானதும், உயர்வானதுமாகும். இதன் உயரம் 53 அடியாகும். கிழக்கில் 49 அடி நீளமும், வடக்கில் 31 அடி நீளமும், மேற்கில் 45 அடி நீளமும், தெற்கில் 31 அடி நீளமும் உள்ளது. தென்கிழக்கு மூலை "ருக்னுல் ஹிந்த்" என்றும்வடகிழக்கு மூலை "ருக்னுல் இராக்கி" என்றும்,வடமேற்கு மூலை "ருக்னுல் ஷாமி" என்றும்தென்மேற்கு மூலை "ருக்னுல் யமானி" என்றும் அழைக்கப்படுகிறது.கஃபாவின் தென்கிழக்கு மூலையில் (ருக்னுல் ஹிந்த்) வெள்ளி வளையத்திற்குள் "ஹஜ்ருல் அஸ்வத்" உள்ளது. -
رواه الترمذي وأحمد وغيرهما، "نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضاً من اللبن فسودته خطايا بني آدم
 "இது சொர்க்கத்திலிருந்து உலகுக்கு இறக்கப்பட்டது என்றும், மனிதர்களின் பாவங்கள் அதனை கருப்பாக்கிவிட்டது" என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஹஜ்ருல் அஸ்வத்துக்கு அருகில் கஃபாவின் வாசல் உள்ளது. ஹஜ்ருல் அஸ்வத்துக்கும் கஃபாவின் வாசலுக்கும் இடையில் உள்ள பகுதி "முல்தஜிம்" ஆகும். கஃபத்துல்லாஹ "கிஸ்வா" என்னும் கருப்புத்துணியால் போர்த்தப்பட்டுள்ளது. இந்த பட்டுத்துணியில் திருக்குர்ஆன் வசனங்கள் தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் எழுதப்பட்டுள்ளன. ஓவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் பிறை 10 இல் புதிய போர்வை போர்த்தப்படுகிறது. இந்தக் கருப்புத் திரையை உருவாக்கு வதற்கென்றே - தனியாக ஒரு தொழிற்கூடம் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இந்தக் கருப்புத் திரை மாற்றப் பட்டு, புதிய திரை போர்த்தப் படுகின்றது. "மக்கா முகர்ரமாவின் மஸ்ஜிதுல் ஹராமில் (கஃபா அமைந்திருக்கும் பள்ளி) தொழுதால் 1 லட்சம் தொழுகையின் நன்மை கிடைக்கும் என்றும், அல்லாஹ்வின் 120 ரஹ்மத்துகள் தினமும் இவ்வீட்டின் மீது இறங்குகின்றன. 60 ரஹ்மத்துகள் ஃதவாபு செய்பவர்கள் மீதும், 40 ரஹ்மத்துகள் அங்கு தொழுபவர்கள் மீதும் இன்னும் 20 ரஹ்மத்துகள் கஃபாவை பார்ப்பவர்கள் மீதும் இறங்குகின்றன" என்று நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரலி  அவர்கள் அறிவிக்கிறார்கள்
கஃபா ஆண்டுக்கு மூன்று முறை திறக்கப்பட்டு ஸம்ஸமால் கழுகி சுத்தம் செய்யப்படும்
ஆண்டுக்கு ஒரு தடவை கஃபாவின் மீது ஏறி ஆடை போர்த்தப்படும்.
ஒரு படை காபாவின் மீது படையெடுக்கும், அப்படையை பூமி விழுங்கிவிடும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) காபாவை வன்முறையால் அழிக்கவருபவர்களை இறைவன் அழித்து விடுவான் என்பதை மேற்காணும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது. அப்படியானால் காபாவை எவராலும் இடித்து அழித்துவிட முடியாதா? என்றால் இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை!

அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் காபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

”(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி காபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கிறதுஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

காபாவை இடித்து அழிக்க வருபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று கூறும் இஸ்லாம், காபாவை வளைந்த, மெலிந்த கால்களையுடையர்கள் உடைத்து பாழ்படுத்தி விடுவார்கள் என்றும் கூறுகிறது. ஒரு காலகட்டம் வரை காபாவை எவராலும் அழிக்க முடியாது. ஒரு காலத்தில் காபாவை இடித்துப் பாழ்படுத்தி விடுவார்கள். முஸ்லிம்களாலும் அவர்களைத் தடுக்க இயலாமல் போகலாம். அப்போது காபாவை இடித்துப் பாழ்படுத்துபவர்களை இறைவனும் தடுக்கமாட்டான். (இது இறுதி நாளுக்கு நெருக்கமாக நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்)

யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும், உம்ராவும் செய்யப்படும்என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தாரின் வருகைக்குப் பிறகும் காபா ஆலயம் இருக்கும் என்பது நபியின் வாக்கு!


நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்விற்கு முன்னர் அரபு தீபகற்பத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு வரலாற்றுச் சம்பவம்:
நபித்துவ வாழ்விற்கு முந்திய கால கட்டத்தில் ரோமானியப் பேரரசு யமன் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதும், யமன் நாடு அபிசீனியாவின் ஆளுகைக்கு உட்பட்டது. அப்போது யமனில் அபிசீனியாவின் ஆளுநராக இருந்த அப்ரஹா என்பவன், அபிசீனியா மன்னரின் பெயரால் யமனில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை எழுப்பியிருந்தான். புனித makkaவில் இருந்த காபா ஆலயத்திற்குச் செல்லாதவாறு, அரபியர்களை அந்த தேவாலயத்தின்பால் ஈர்ப்பதற்காக அதில் பல்வேறு வகையான பகட்டான அலங்காரங்களையெல்லாம் செய்திருந்தான்.
அரபு தீபகற்பத்தின் மத்திய பாகத்திலும், அதன் வடபுலங்களிலும் வாழ்ந்திருந்த அரபியர்கள், அப்ராஹாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த யமன் நாட்டு மக்கள் அனைவரும் புனித காபா ஆலயத்தின் பக்கமே தங்களின் கவனத்தைத் திருப்பியவர்களாகவும், அதன்பால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருப்பதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தமது இந்த எண்ணத்தை அபிசீனிய மன்னருக்கு எழுதித் தெரிவித்தான்.
அவன் எவ்வளவோ பிரயத்தனங்களை மேற்கொண்டும், அரபிகளை அவர்களின் புனித ஆலயமான காபாவை விட்டுத் திருப்பிவிட முடியவில்லை. அப்போது அப்ரஹா காபா ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு மக்களின் கவனத்தை, தான் எழுப்பிய கிறிஸ்தவ தேவாலயத்தின் பால் திருப்பிவிடும் எண்ணத்தில் பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டான். அதில் ஏராளமான யானைகளும் இருந்தன. மிகப் பெரும் பட்டத்து யானை அவற்றிற்கெல்லாம் முன்னணியில் சென்றது.
இதற்கிடையே அவன் இந்த நோக்கத்துடன் புறப்பட்டு விட்ட செய்தி அரபு நாடு முழுவதும் பரவியது. தமது புனித ஆலயத்தைத் தமது கண் முன்பே இடித்துத் தகர்த்துவிட அவன் வந்து கொண்டிருக்கும் செய்தி அரபிகளுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.
இதன் காரணமாக அரபுகள் ஒவ்வொரு குலத்தாரும் அணிதிரளும்படி வேண்டியபின் படை திரட்டிக்கொண்டு அப்ரஹாவை makkaவிற்கு சென்று விடாமல் வழியிலேயே தடுக்க, அவன் படையுடன் போர் செய்தார்கள். எனினும் அவர்கள் தோல்வி கண்டார்கள். அப்ரஹா, தம்முடன் போர் செய்து தோல்வியடைந்தவர்களைச் சிறைப்பிடித்துக்கொண்டு, காபா ஆலயத்தை இடித்துத் தகர்க்க தொடர்ந்து இராணுவத்துடன் முன்னேறி வந்தான்.
காபாவை இடிக்க வந்த அப்ரஹாவின் யானைப்படையை இறைவன் என்ன செய்தான் என்பதை திருக்குர்ஆன், அல்ஃபீல் யானை 105வது அத்தியாயம் எடுத்துரைக்கிறது.
(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன், 105:001-005)









4 comments:

  1. நல்ல முயற்சி அல்லாஹ் உங்களுக்கு அருள் புறிய்ட்டும்

    ReplyDelete