சமீப காலங்களில் அரபுலகத்தில் ஏற்பட்டுவருகிற புரட்சி உலகமக்களின் கவனத்தை
பெற்று
வருகிறது.
அரபுலக வசந்தம் என்ற ஒரு சொல்லாடல் அங்கு சர்வாதிகார ஆட்சி செய்து வந்த
ஆட்சியாளர்
களுக்கு பயத்தை உண்டுபன்னுகிறது.
ஒரு பத்தாண்டுக்கு முன் வரையும் தங்களின் ஆட்சியாளர்களுக்கு எதிரான சிந்தனை
தங்களின் கனவில்கூட வந்துவிடக்கூடாது என கவனமாக இருந்த அம்மக்களின் வாழ்வில் ஒரு
புரட்சிப்பு
யல் வீசத்துவங்கியது.
துனிசியா,எகிப்து,லெபனான் என அனைத்துநாடுகளையும் அந்த அரபுலக வசந்தப்புயல்
ஆக்கிரமிக்கத்துவங்கியது.
அரபியர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கும் சந்தர்ப்பங்கள் உருவாகி வருகிறது.
அந்த வரிசையில் சமீபத்திய இரண்டு ஆண்டுகாலமாக அப்புயல் சிரியாவை மையம்
கொண்டுவருவதை நாமறிவோம். மற்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளுடன் ஒப்பிடும்போது, சிரியாவில் ஏற்பட்ட புரட்சி
முற்றிலும் வேறுபட்டதாகும். இப்புரட்சி இஸ்லாத்தை மையமாக கொண்டுள்ளதால் சிரியாவின் புரட்சியை இஸ்லாமிய புரட்சி என்றே அழைக்கலாம்.
அங்குள்ள மக்கள் பஸ்ஸார் அல் அசதின் ஆட்சிக்கு எதிராக போராடி
வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ம் தேதி ராணுவத்தினர் ரசாயன குண்டுகளை
வீசியதில் குழந்தைகள் உள்பட 1,400–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவ்வாறு தடை செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களை
சிரியா பயன்படுத்தியது சட்டவிரோதமானது என்றும், சிரியா சிவப்புக்கோட்டை
தாண்டிவிட்டது என்றும் அந்நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முயற்சித்து
வருகிறது.
அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன்
ஆகிய மூன்று சாத்தான்கள் மீண்டும் தங்களின் அழிச்சாட்டியங்களை துவக்கப்போகின்றனர்.
உண்மையில் சிரியாவில் நடப்பது என்ன?
மனிதாபிமான காரணங்களை சொல்லி கள்ளத்தனமாக
அமெரிக்கா சிரியாவுக்குள் நுழைய முயற்சி செய்துவருவதின் பின்னனி என்ன?
இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி மக்கள் 1400 பேரை அஸத் கொலை செய்தார்
என்று அமெரிக்கா முன்வைத்த காரணம்.
சிரியா மக்கள் மீது அஸத் ஷைத்தான் தாக்குதலை தொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு
மேலாகி விட்டது.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்றுகுவித்து பல லட்சம்
மக்கள் அகதிகளாகி வெளியேறி விட்டனர்.அப்பொழுதெல்லாம் வாய் திறக்காத அமெரிக்கா
இப்போது வாய் திறக்க காரணம் என்ன?
சிரியாவில் ஆடு நனைகிறது.அமெரிக்கா ஓநாய் கவலைப்படுகிறது.
இவர்களின் மனிதாபிமான இலட்சணத்தை ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நாம் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.
சாத்தான் வேதம் ஓதுகிறது என்பார்கள்.அதை இதுபோன்ற நிகழ்வுகள் மூலம்
பார்க்கமுடிகிறது.
பஸ்ஸார் ஒரு மாபெரும் கிரிமினல்.சர்வாதிகார ஷைத்தான் என்பதில் நமக்கு
மாற்றுக்கருத்து இல்லை.அஸத் என்ற நஜீஸை சுத்தம் செய்ய அமெரிக்கா என்ற இன்னொரு
நஜீஸ் எதற்கு?
நஜீஸை நஜீஸால் சுத்தம் செய்ய முடியாது.
இந்த விஷயத்தில் அமெரிக்காவின் சூட்சுமத்தை,தந்திரத்தை,நரித்தனத்தை இஸ்லாமிய
சமூகம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
உண்மையில், அங்கு ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவருகிற போராளிகளான
முஜாஹிதீன்களின் கை ஓங்கிவருகிற
து.எந்தளவென்றால் அங்குள்ள நிலத்தில் சுமார் 70%
அதிகமாக முஜாஹிதீன்கள் கைப்பற்றி விட்டனர்.
மேலும் மேற்கத்திய நாடுகள் கடந்த காலங்களில்
சிரியா அரசுக்கு கொடுத்து வந்த பெரும் ஆயுதங்களும் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில்
வந்துவிடும். சிரியா முழுவதுமாக அவர்களின் கட்டுப்பாட்டில் வருவதோடு நிலையான அரசின் அனைத்து அங்கங்களும் இராணுவ தளங்களையும்
அவர்கள் கைப்பற்றும் காலம் நெருங்கிவிட்டது.
கடந்த சில வாரங்களில் புரட்சியாளர்களுக்கு கிடைத்துள்ள வெற்றியும் அமெரிக்காவின்
கைப்பாவை அரசான பஸ்ஸாரின் வீழ்ச்சியும் தான் அமெரிக்காவின் போலியான அனுதாபத்திற்கு
காரணம் என்பதை முஸ்லிம் கள் சரியாக
புரிந்துகொள்ளவேண்டும்.
இதில் அமெரிக்கா படையெடுப்பின் மூலம் இரண்டு தன்னுடைய இரண்டு திட்டங்களை
நிறைவேற்ற விரும்புகிறது.
1.மிக வேகமாக முன்னேறிக்கொண்டிரூகின்ற சிரியா போராளிகளை பலஹீனப்படுத்துவது
2.பஸ்ஸாரை வீழ்த்திவிட்டு அந்த இடத்தில் ஒரு பொம்மை அரசை நிறுவுவது.
எனவே இராசாயன ஆயுதம் பயன்படுத்தல்,
சட்டமீறல் என்பதெல்லாம் வெறும் போலியான
குற்றச்சாட்டுக்கள்.ஏனெனில் வளைகுடாப்
போருக்கு முன்பு சதாம் ஹுசைன், குவைத்தை கைப்பற்ற அமெரிக்கா எவ்வாறு அனுமதித்ததோ, அதைப்போன்றே அமெரிக்காவின் அனுமதியின்றி கண்டிப்பாக கொடுங்கோலன் பஸார் இரசாயன ஆயுதத்தை
பிரயோகித்திருக்க முடியாது.
அமெரிக்காவின் இராணுவ தலையீடு என்பது ஒபாமா சொல்வதைப்போல் அப்பாவி சிரிய மக்களுக்கு
உதவி புரிவதற்காக அல்ல. மாறாக இராக், ஆஃப்கானிஸ்தானைப்போல அதையும் சுடுகாடாக மாற்றுவதற்கான முயற்சியே தவிர
வேறில்லை.
இந்தச்சூழலில் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் சிரியாவை பற்றி முஸ்லிம்கள்
தெரிந்துகொள்
வது காலத்தின் கட்டாயமாகும்.
சிரியா அது அல்லாஹ்வால் பரக்கத் செய்யப்
பட்ட பூமியாகும்.
அல்லாஹ் தஆலா மிஃராஜ் பற்றி குறிப்பிடும்போது-
سُبْحَانَ الَّذِي
أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى
الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ
الْبَصِيرُ
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும்
பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்
நபி ஸல் அவர்களால் பரக்கத்திற்காக துஆச்செய்யப்பட்ட பூமியாகும்.
قال عبدالله بن عمرو رضي الله تعالى عنه:
صلى بنا النبي عليه الصلاة والسلام ثم أقبل على القوم فقال: "اللهم بارك لنا في
مدينتنا، وبارك لنا في مدنا وصاعنا، اللهم بارك لنا في حرمنا، وبارك لنا في شامنا"
حديث صحيح.
நபி ஸல் அவர்கள்
எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.பின்பு கூட்டத்தை முன்னோக்கி, யா அல்லாஹ்! எங்கள்
மதீனாவில் பரக்கத் செய்வாயாக! எங்களுடைய முத்து மற்றும் ஸாஃவு விலும் பரக்கத் செய்வாயாக!
யா அல்லாஹ்!எங்களின் சிரியா பூமியிலும் பரக்கத் செய்வாயாக என நபி ஸல் அவர்கள் துஆ
செய்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சிரியாவைப்பற்றி நபி ஸல் அவர்களின் முன்னறிவிப்புக்கள்
உலகில் போர்கள் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகிறது.மண்ணுக்காக, பெண்ணுக்காக, ஆட்சிக்காக, அதிகாரத்திற்காக
ஆனால் சிரியாவில் எல்லா காலத்திலும் ஈமானுக்காக மட்டுமே போர்கள் நடைபெறும்.
சிரியாவில் ஆட்சி வேண்டுமானால் சர்வாதிகார ஆட்சியாக இருக்கலாம்.அங்கு வாழும்
மக்கள் ஈமானிய உணர்வு மேலோங்கியவர்கள் எனபதை மறந்து விடக்கூடாது.
சிரியா உண்மையான முஜாஹிதீன்கள் வாழும் பூமி
عن عبدالله بن
حوالة رضي الله عنه قال، قال النبي عليه الصلاة والسلام: "ستجدون أجنادًا جندًا
بالشام وجندًا بالعراق وجندًا باليمن"، قال عبدالله فقلت: يا رسول خِرْ لي – يعني
اختار لي هل أكون بالعراق أم بالشام أم باليمن؟-، فقال عليه الصلاة والسلام:
"عليكم بالشام، عليكم بالشام، فمن أبى فليلحق بيمنه، وليسق من غدره؛ فإن الله
عز وجل قد تكفل لي بالشام وأهله" رواه أحمد وصححه الألباني.
ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஹவாலா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சிரியா படை,ஈராக் படை, யமன் படை என்று
நீங்கள் பல ராணுவப்படைகளை பார்ப்பீர்கள்..என நபி ஸல் அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர்
அவர்களே!நான் எதை வசிப்பதற்கு தேர்வு செய்யட்டும் என கேட்டேன்.
அதற்கு நபி ஸல் அவர்கள் சிரியாவில் தங்குங்கள்.சிரியாவில் தங்குங்கள்
என்றார்கள்.ஏனெனில் அல்லாஹ் சிரியாவையும் அதன் மக்களையும் எனக்காக பாதுகாக்கும்
பொருப்பை ஏற்றுள்ளான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
சிரியா ஈமான் மற்றும் கல்வி அடைக்கலமாகும் பூமியாகும்.
وقال عليه الصلاة والسلام مبينًا أن أرض
الشام هي أرض العلم والإيمان، قال عليه الصلاة والسلام: "إني رأيت عمود الكتاب
انتُزع من تحت وسادتي فنظرت فإذا هو عمود ساطع عمد به إلى الشام، ثم قال: ألا إن الإيمان
إذا وقعت الفتن في الشام" أخرجه الحاكم وصححه الألباني.
என் தலையனைக்கு
கீழ் இருந்த வேதத்தின் கழட்டப்பட்டு சிரியாவில் அது ஜொலிப்பதாக காண்கிறேன்.
தெரிந்துகொள்ளுங்கள். ஈமானுக்கு சோதனை வந்தால் அது சிரியாவில் போய் ஒளிந்து
கொள்ளும் என்றார்கள்.என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நாளை மஹ்ஷர்
பூமியும் அந்த சிரியாதான்.
சுவனத்தின்
பொருட்களை காண வேண்டுமானால் மக்காவுக்கும் மதீனாவுக்கும் செல்லவேண்டும்.
நாளை மஹ்ஷர்
மைதானத்தை காண வேண்டுமானால் சிரியா செல்ல வேண்டும்.ஆம்! அது தான் நாளை மஹ்ஷர்
களம்.
في حديث أبي ذر أن النبي صلى الله عليه
وسلم قال: قال عليه الصلاة والسلام: "الشام أرض المحشر والمنشر" رواه أحمد
وهو صحيح.
சிரியா மஹ்ஷர்
பூமி என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
وعن معاوية بن حيدة قال: إن النبي عليه
الصلاة والسلام أخبرنا فقال: "إنكم تحشرون رجالاً وركبانًا، وتجرون على وجوهكم
ها هنا "قال: وأومأ بيده نحو الشام. صححه الألباني.
நீங்கள்
நடந்தவர்களாகவும் வாகனித்தவர்
களாகவும் எழுப்பப்படுவீர்கள். மேலும் நீங்கள் இதன்
பக்கம் இழுத்து கொண்டுவரப்படுவீர்கள்
என்று தம் கையால் சிரியாவை சமிக்கை செய்தார்கள்.
وعن فهد بن حكيم عن أبيه عن جده أن النبي
صلى الله عليه وسلم قيل له: يا رسول الله أين تأمرني ؟ الجد سأل النبي صلى الله عليه
وسلم، أين تأمرني؟ أين أسكن؟ إلى أين أسكن؟ قال "هاهنا" وأومأ بيده نحو الشام.
قال: "إِنّكُمْ محْشورُونَ رِجَالاً وَرُكْبَاناً ومجرون علَى وُجُوهِكُم".
أخرجه الإمام أحمد وصححه الألباني.
இவ்வாறு ஒருவர் தான் எங்கு வசிப்பது?என
நபி ஸல் அவர்களிடம் கேட்டபோது,சிரியாவை சுட்டிக்காட்டினார்கள்.ஏனெனில் நீங்கள்
நடந்தவர்களாகவும் வாகனித்தவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். மேலும் நீங்கள் இதன்
பக்கம் இழுத்து கொண்டுவரப்படுவீர்கள் என
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
وسئلت جارية لعبد الله بن عمر رضي الله
تعالى عنهما قالت له: اشتد عليّ الزمان وإني أريد أن أخرج إلى العراق -يعني أن تسكن
في العراق- فقال لها ابن عمر: فهلا إلى الشام أرض المنشر. رواه الترمذي وصححه الألباني.
ஹழ்ரத் இப்னு
உமர் ரலி அவர்களின் அடிமைப்பெண் தன் எஜமானரான இப்னு உமர் ரலி அவர்களிடம் தனக்கு நெருக்கடியாக இருக்கிறது,எனவே இராக்
செல்ல நாடுகிறேன் என்றதும் நீ சிரியாவுக்குச்செல் அது தான் மஹ்ஷர் பூமி
என்றார்கள்.
கியாமத்தின்
நெருக்கத்தில் வெளிப்படும் நெருப்பிலிருந்து தப்பிக்கவே சிரியாவே அடைக்களம்
وعن سالم بن عبدالله عن أبيه أن النبي صلى
الله عليه وسلم قال: "ستخرج نار في آخر الزمان من حَضْرمَوْت تحشر الناس"
قلنا: بما تأمرنا يا رسول الله ؟ - ماذا تأمرنا استعدادًا لخروج هذه النار، ماذا تأمرنا
استعدادا لقرب قيام الساعة؟ - فقال عليه الصلاة والسلام: " عليكم بالشام.. عليكم
بالشام" صححه الألباني ورواه الإمام أحمد.
ஸாலிம் ரலி
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கியாமத்தின்
நெருக்கத்தில் ஹழ்ரமவ்த் என்ற ஊரிலிருந்து ஒரு நெருப்பு மக்களை விரட்டும் என நபி
ஸல் அவர்கள் கூறியபோது- அப்போது நாங்கள் எங்கு தங்கட்டும்?என நாங்கள்
கேட்டோம்.அதற்கு ஸல் அவர்கள் நீங்கள் சிரியாவில் தங்குங்கள் என்று கூறினார்கள்
நபி இப்ராஹீம்
அலை அவர்கள் ஹிஜ்ரத் செய்த பூமி.
عن عبدالله بن عمرو رضي الله تعالى عنه
أن النبي صلى الله عليه وسلم قال: "ستكون هجرة بعد هجرة، فخيار أهل الأرض ألزمهم
مهاجر إبراهيم -يعني الشام- قال: ويبقى في الأرض شرار أهلها تلفظهم أرضوهم وتقذرهم
نفس الله، وتحشرهم النار مع القردة والخنازير". رواه أبو داوود وصححه الألباني.
ஹிஜ்ரத்துக்கு
பின் ஹிஜ்ரத் தொடர்ந்து நடைபெறும்.இறுதியில் நல்லவர்கள் யாவரும் இப்ராஹீம் அலை
அவர்கள் ஹிஜ்ரத் செய்த பூமியான சிரியாவுக்கு ஹிஜ்ரத் செய்து அடைக்கலமாகி
விடுவார்கள். பூமியில் கெட்டவர்கள்
மட்டும் வசிப்பர்.அவர்களை நெருப்பு துரத்தும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வால்
தேர்வு செய்யப்பட்ட பூமி
ومن حديث عبدالله بن حوالة في رواية من
هذا الحديث قال عليه الصلاة والسلام: "عليك بالشام فإنها خيرة الله من أرضه"
يعني اختاره الله من أرضه "يجتبي إليه خيرته من عباده" رواه أبو داود وهو
حديث صحيح
சிரியாவை
பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.அது அல்லாஹ் தேர்வு செய்த பூமியாகும் என நபி ஸல்
அவர்கள் கூறினார்கள்.
சிரியா தஜ்ஜால்
அழிந்து நாசமாகும் பூமி
ويأتي المسيح من قبل المشرق -يعني المسيح
الدجال- وهمته المدينة حتى إذا جاء دبر أحد تلقته الملائكة، فضربوا وجهه قبل الشام
هنالك يهلك.. هنالك يهلك"كررها هو بأبي وأمي صلوات ربي وسلامه عليه.. ففي الشام
يقتل الدجال وهو الذي يسفك فيه دمه. رواه الترمذي.
கிழக்கு
பக்கத்திலிருந்து தஜ்ஜால் வருவான்.அவன் மதீனாவை நாடி வரும்போது மலக்குகள் அவனை
தடுத்து நிறுத்தி சிரியாவின் பக்கம் அனுப்பி வைப்பார்கள்.அந்த பூமியில் தான் அவன்
அழிந்து நாசமாகுவான். என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
இறுதி யுத்த
பூமி.
وفي رواية قال عليه الصلاة والسلام:
"يوم الملحمة الكبرى فسطاط المسلمين بأرض يقال لها
الغوطة فيها مدينة يقال لها دمشق خير منازل المسلمين يومئذ" رواه أبو داوود وصححه
الألباني.
முஸ்லிம்களுக்கும்
இறைமறுப்பாளர்களுக்கும் நடைபெறும் இறுதி மாபெரும்
யுத்தம் அந்த சிரியா பூமியின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள கவ்தா எனும்
நகரத்தில் நடைபெறும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
தஜ்ஜாலின் கதையை
முடிப்பதற்காக இந்த பூமியி ஹழ்ரத் ஈஸா அலை அவர்கள் இறுதிகாலத்தில் இந்த பூமியில்
இறங்குவார்கள் என்பது நாம் அறிந்ததே!
அவர்கள் இறங்கும்
பூமி சிரியாவின் தலை
நகரான டமாஸ்கஸில் தான்.
عن النواف بن سمعان قال سمعت النبي صلى
الله عليه وسلم يقول: "ينزل عيسى ابن مريم عند المنارة البيضاء شرقي دمشق"
رواه الإمام مسلم.
ஈஸா அலை அவர்கள்
கிழக்கு திமிஷ்கில் உள்ள ஒரு வெள்ளை மினாராவில் இறங்குவார்கள் என நபி ஸல் அவர்கள்
கூறினார்கள்.
சிரியா
மலக்குமார்கள் இறக்கை விரித்திருக்கும் புனித பூமியாகும்.
நபி ஸல்
அவர்களின் ஆட்சியில் சிரியாவுக்கான பொருப்பில் ஹழ்ரத் முஆவியா ரலி அவர்கள்
அமர்த்தப்பட்டார்கள்.
அன்றைய இஸ்லாமிய
நாடுகளில் பெரும் பலம் பொருந்திய வல்லரசாக சிரியா செயல்பட்டது.அப்படிப்பட்ட
வரலாற்றுச்
சிறப்புமிக்க அந்த சிரியாவின் பாரம்பரியம் தெரியாமல் அமெரிக்கா தன்
விஷச்செடியை அந்த பூமியில் நட்டத்துடிக்கிறது.
அவர்கள்
தஜ்ஜாலுக்கே சமாதி கட்டுபவர்கள்.
அவர்கள் சத்தியவழியில் ஸ்தரமாக காலூன்றி
நிற்பவர்கள்.
அமெரிக்க
அழிச்சாட்டிய கூட்டணியின் கொட்டம் அங்கு தான் அடக்கப்பட வேண்டுமென்றால் அதை
ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
alhamdhu lillah..arumai hajrath..intha vaaram intha thalaipu irunthal nandaraga irukkume endru ninaithirunthen..alhamdhu lillah athaye thanthu vitteergal..
ReplyDeleteஅமெரிக்காவின் அழிவு நெருங்கி விட்டது அதன் மிகப்பெரிய அடையாலம்தான் சிரியா
ReplyDeletealhamthulillah mika arputha mana kadduray kalangi pooiruntha enkalin kalpukalokku kalakkaththai neekki kampeeraththai alli thanthu viddeerkal,,,, vhellai maalikail irukkum karumpina thalaivan ikkaddurayai kandu than kanniyam kaththuk kolladdum
ReplyDeletemaasha allah ungal maarkapanihal menmelum sirandhu vilanga allah thoufeeq seivaanaaha aameen
ReplyDeletemaasha allah ungal maarkapanihal menmelum sirandhu vilanga allah thoufeeq seivaanaaha aameen
ReplyDeletemaasha allah ungal maarkapanihal menmelum sirandhu vilanga allah thoufeeq seivaanaaha aameen
ReplyDeleteAlhamdulillah samudaythuku thevaiyana news arumayaga sonnirgal allah innum ungalukku barakath seivaanaga aameen
ReplyDelete