Thursday, 19 September 2013

மாண்புமிகு மதீனா


ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளின் உள்ளம் இறையில்லமான கஃபா தரிசித்த பின்னர் இறைத்தூதர் கண்மணி முஹம்மத் ஸல் அவர்களின் புனித உடலை தாங்கி நிற்கும் மதீனாவையே நாடும்.

மதீனா மாநபியின் மாநகரம்.இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நெருக்கடி  கள் சூழ்ந்தபோது அரவணைத்த பூமி மதீனா பூமியாகும்.

இஸ்லாமிய ஆட்சிக்கான தலை நகரம்.இந்த ஊருக்கும் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு.
உண்மை நகரம் என்று மதீனாவை திருக்குர்ஆன் புகழாரம் சூட்டுகிறது.
மதீனாவுக்கு பல சிறப்பு பெயர்கள் உண்டு. 

அவைகளில் சில:
الْمَدِيْنَةُ ، وَطَيْبَةُ ، وَطَابَةُ ، وَالدِّرعُ الْحَصِيْنَة ، وَأَرْضُ الْهِجْرَة ، وَالدَّارُ ، وَدَارُ الإِيْمَان ، وَدَارُ الْهِجْرَة ، وَدَارُ السُّنَّة ، وَدَارُ السَّلاَمَة ، وَقُبَّةُ الإِسْلاَم .
இவைகளில் தாபா,தைபா போன்றதை நபி ஸல் அவர்கள் விரும்பினார்கள்.
أخرج مسلم في صحيحه من حديث جابر بن سمرة قال صلى الله عليه وسلم: «إن الله سمى المدينة طابة
அல்லாஹ் மதீனாவுக்கு தாபா (மணமிக்கது) என்று பெயர் சூட்டியுள்ளான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அபூ ஹுமைத்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தபூக்கிலிருந்து (யுத்தம் முடிந்து) திரும்பினோம். மதீனாவை நெருங்கியதும். இது தாபா!’ (நலம் மிக்கது!)என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த பூமியில் ஆரம்பமாக வசித்த யூதர்கள் அதற்கு யஸ்ரிப் என்று பெயர் வைத்தனர்.ஆனால் அந்த பெயரை அல்லாஹ்வும் ரஸூலும் விரும்பாமல் மதீனா என்றே அழைத்தனர்,
مَنْ سَمَّى الْمَدِينَةَ يَثْرِب ، فَلْيَسْتَغْفِرْ اللهَ عز وجل ، هِيَ طَابَةُ ، هِيَ طَابَة
மதீனாவை எஸ்ரிப் என்று யாரேனும் கூறினால் அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடட்டும்.அது தாபா என்றார்கள்.
أخرج البخاري ومسلم من حديث أبي هريرة قال صلى الله عليه وسلم: «أُمرت بقرية تأكل القرى يقولون لها يثرب، وهي المدينة
நகரங்களை மிகைத்துநிற்கும் ஊருக்கு குடிபோகச்சொல்லி அல்லாஹ் எனக்கு ஏவுகிறான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யஸ்ரிப் என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன்! அதுதான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் மதீனா நகர் தீயவர்களை வெளியேற்றிவிடும்!என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மதீனாவின் தனித்தன்மைகள்
1.நபி ஸல் அவர்கள் நேசித்த பூமி
كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ فَأَبْصَرَ جُدُرَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ نَاقَتَهُ (أَيْ أَسْرَعَ) وَإِنْ كَانَتْ دَابَّةً حَرَّكَهَا مِنْ حُبِّهَا .
நபி ஸல் அவர்கள் எந்த பயணத்திலிருந்து திரும்பும்போது மதீனாவின் சுவர்களை கண்டுவிட்டால் விரைந்து வாகனத்தை ஓட்டுவார்கள்.ஏனெனில் மதீனாவின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பே காரணம்.
اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدّ )).
யா அல்லாஹ்.மக்காவை நாங்கள் நேசிப்பது போல மதினாவை எங்களுக்கு நேசமாக்குவாயாக என நபி ஸல் அவர்கள் துஆச்செய்தார்கள்
2.குழப்பமான காலத்திலும் கியாமத் நெருக்கத்திலும் அடைக்கமாகுவதற்கு மதீனாவே சிறந்தது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “யமன் வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு (யமன் நாட்டிற்குச்) செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் ஷாம்வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, ‘தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்; ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா?’ என சுப்யான்(ரலி) அறிவித்தார்

3.மதீனா நபி ஸல் அவர்களால் ஹறமாக்கப்பட்ட பூமி
كما أخرج البخاري مسلم من حديث علي بن أبي طالب قال النبي صلى الله عليه وسلم: «المدينة حرم ما بين عير إلى ثور، فمن أحدث فيها حدثًا أو آوى محدثًا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منه يوم القيامة صرفًا ولا عدلاً
 ஆயிர் என்ற மலையிலிருந்து ஸவ்ர் மலை வரை மதீனா புனிதமானதாகும். இதில் யாரேனும் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்தினால் அல்லது அவ்வாறு ஏற்படுத்துபவருக்கு அடைக்கலம் தந்தால், அல்லாஹ்வின் வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின்சாபம் அவன் மீது ஏற்படும்! அவன் செய்த கடமையான வணக்கம். உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “மதீனா நகர் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத்தின் பெயரால்) புதியது எதுவும் உருவாக்கப்படக் கூடாது! (மார்க்கத்தின் பெயரால்) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை ஏற்படுத்துகிறவர் மீது அல்லாஹ்வின்.. வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்!என அனஸ்(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மதீனாவில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்க நான் கண்டால், அவற்றை (விரட்டவோ, பிடிக்கவோ முயன்று) பீதிக்குள்ளாக்க மாட்டேன். (ஏனெனில்) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்டவை புனிதமானவை!என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

4.தஜ்ஜாலை விட்டும் பாதுகாக்கப்பட்ட பூமியாகும்
كما أخرج البخاري ومسلم في صحيحيهما من حديث أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم: «على أنقاب المدينة ملائكة لا يدخلها الطاعون ولا الدجال
மதீனாவின் தெருக்களில் மலக்குகள் நடமாடுவார்கள்.அங்கு காலராவும் தஜ்ஜாலும் நுழையமுடியாது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), ‘நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?’ என்று கேட்பான். மக்கள் கொள்ள மாட்டோம்!என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!என்று கூறுவார். தஜ்ஜால் நான் இவரைக் கொல்வேன்!என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!

என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். தஜ்ஜால் பற்றி நபி(ஸல்) அவர்கள் நீண்ட விளக்கம் தரும்போது இதைக் கூறினார்கள் என்றும் அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
5.கடும் நோயை விட்டும் பாதுகாக்கப்பட்ட புனித பூமியாகும்
யிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அபூ பக்ர்(ரலி), பிலால்(ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அபூ பக்ர்(ரலி) தமக்குக் காய்ச்சல் ஏற்படும்போது, ‘மரணம் தன்னுடைய செருப்பு வாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப் பொழுதை அடைகிறான்!என்ற கவிதையைக் கூறுவார்கள். பிலால்(ரலி) காய்ச்சல் நீங்கியதும் வேதனைக் குரலை உயர்த்தி, ‘இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க, ஒரு பள்ளத்தாக்கில் ஓர் இராப் பொழுதையேனும் நான் கழிப்பேனா? ‘மஜின்னாஎனும் (சுனையின்) நீரை நான் அருந்துவேனா? ஷாமா, தஃபீல் எனும் இரண்டு மலைகள் (அல்லது இரண்டு ஊற்றுகள்) எனக்குத் தென்படுமா?’ என்ற கவிதையைக் கூறுவார்கள். மேலும், பிலால்(ரலி) இறைவா! ஷைபா இப்னு ரபிஆ, உத்பா இப்னு ரபீஆ, உமய்யா இப்னு கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை (அப்புறப்படுத்தி) இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியது போல், அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி (சபித்து) விடுவாயாக!என்று கூறுவார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ஸாவு, முத்து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ பரக்கத் செய்! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கு! இங்குள்ள காய்ச்சலை ஜுஹ்ஃபாஎனும் பகுதிக்கு இடம் பெயரச் செய்!என்று பிரார்த்தித்தார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் நொடிகள் அதிகமான (பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) புத்ஹான்எனும் ஓடையில் மோசமான (கெட்டுப்போன) தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது!

6. ஷபாஅத் பூமி

وَقَالَ صلى الله عليه وسلم : (( مَنْ اسْتَطَاعَ أَنْ يَمُوتَ بِالْمَدِينَةِ فَلْيَفْعَلْ فَإِنِّي أَشْفَعُ لِمَنْ مَاتَ بِهَا
மதீனாவில் மரணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு மரணித்துவிடுங்கள் ஏனெனில் அங்கு மரணிப்பவருக்கு நான் ஷபாஅத் செய்வேன்.
عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ :
( اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ ، وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ )
رواه البخاري (رقم/1890)
யா அல்லாஹ்.உன் ரஸூலின் பூமியில் ஷஹாதத் மரணத்தை எனக்கு தருவாயாக என உமர் ரலி அவர்கள் துஆ செய்தார்கள்.
وقد علق عليه الإمام النووي رحمه الله بقوله :
" يستحب طلب الموت في بلد شريف " انتهى.
" المجموع " (5/106)
சிறப்பான ஊரில் மரணிப்பது முஸ்தஹப்பு என இமாம் நவ்வி ரஹ் அவர்கள் கூறுவார்கள்
குறிப்பு:உஸ்மானிகள் பேரவை சார்பாக வரும் 22.09.2013 ஞாயிற்றுக்கிழமை சென்னை பாலவாக்கம் மஸ்ஜித் மஹ்மூதில் வைத்து ஷரீஅத் மாநாடு நடைபெற உள்ளது.தாங்கள் அவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு இதன்மூல  ம் கேட்டுக்கொள்கிறோம்.
மாநாடு பணிகள் காரணமாக ஜும்ஆ உரைகள் நிறைவாகவும் விரைவாகவும் தர முடியவில்லை.இன்ஷா அல்லாஹ் வரும் வாரம் முதல் அந்த குறையை சரி செய்யப்படும்,


2 comments: