Wednesday, 31 July 2013

நரக விடுதலை வேண்டும்


அல்லாஹ்வின் அளவிலா கருணையினால் ரமலான் மாதத்தின் பிந்திய பகுதியை அடைந்திருக்கிறோம்.அல்ஹம்து லில்லாஹ்!இனி எஞ்சியுள்ள நாட்களையும் பூரண உடல் சுகத்துடனும்,நிறைவான அமலுடனும் கழிக்க அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் தவ்பீக் செய்வானாக!ஆமீன்.

ரமலானின் பிந்திய நாட்கள் நரக விடுதலையின் நாட்களாகும்.

நரகம்

திருக்குர்ஆனில் நரகம் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்ட அளவிற்கு வேறு எது குறித்தும் எச்சரிக்கைப்படவில்லை.

நரகத்தின் அத்துனை நிலைகளையும்,தன்மைக
ளையும் கண்ணுக்கு முன் கொண்டுவரும் காட்சிகள் திருக்குர்ஆனில் ஏராளமாக உள்ளன.

திருக்குர்ஆனில்   نار   என்ற வார்த்தை 121 வசனங்களில் இடம் பெறுகிறது.
جهنم  என்ற வார்த்தை 77 வசனங்களில் இடம்பெறுகிறது.அதை போல سعير  வார்த்தை 26 வசனங்களில் இடம்பெறுகிறது.
இவ்வாறு நரகம் குறித்த வார்த்தைகள் அதிகமாக திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டிருப்பதின் மூலம் அதன் ஆபத்துக்களை உணர்ந்து கொள்ள முடியும்.

பாவத்திலிருந்து முழுமையாக பாதுகாக்கப்பட்ட கண்மணி முஹம்மது ஸல் அவர்கள் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடாத நாட்கள் இல்லை.அப்படியானால் நம் போன்றவர்களின் நிலை குறித்து என்ன சொல்வது?

நரகம் அச்சத்தின் மொத்த உருவம்.மரணத்தையே மரணமாக்கிவிடும். பார்ப்பவர்களின் பார்வைகளையும் இதயங்களையும் குழை நடுங்கச்செய்து விடும்.
அல்லாஹ்வின் கோபத்தின் மொத்த காட்சிகள்.நெருப்பே நெருப்பிலிருந்து பாதுகாப்பு தேடும் விந்தை!

ஒவ்வொரு மனிதனுக்கும் சுவர்க்கம் மற்றும் நரகத்தின் முன் காட்சிகள் (டிரைலர்) மரணத்திலும் மண்ணரையிலும் காட்டப்படும்.

நரகத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டு சுவனத்தில் நுழையும் அந்த நாள் உண்மையில் வெற்றிக்குறிய நாளாகும் என்று திருக்குர்ஆன் புகழ்ந்து கூறுகிறது.
பொதுவாக நரகம் குறித்து எச்சரிக்கப்படும் போதெல்லாம் ஒரு முஃமினுக்கு ஷைத்தான் ஒரு வித மோசடியான நம்பிக்கையை தருவான்.அது என்னவென்றால் என்றாவது ஒரு நாள் சுவனம் சென்று விடலாம் தானே!
ஆம்! முஃமினான யாவரும் இன்ஷா அல்லாஹ் சுவனம் செல்வோம்.ஆனால் நரகத்தின் குறைந்த பட்ச நாள் என்பது ஒரு ஹுக்ப்.حقب
ஒரு حقب என்பது நாற்பது ஆண்டுகள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்அப்படியானால் நரகத்தில் கால்வைத்துவிட்ட ஒருவர் அதிலிருந்து வெளியேர குறைந்தபட்சம் நாற்பது ஆண்டுகள் ஆகும்.(அந்த கொடிய நரகை விட்டும் அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக. ஆமீன்.)

لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியி
ருக்கும் நிலையில்
இதனால் தான் ஸஹாபாக்களும் ஸாலிஹீன்களும் நரகத்தை நினைக்கும் போதெல்லாம் அழுது கண்ணீர் வடிப்பார்கள்.

     நல்லவர்களும் பயந்தார்கள்

ومر الحسن البصري رحمه الله بشاب وهو مستغرق في ضحكه جالس مع قوم، فقال له الحسن: "يا فتى هل مررت بالصراط؟ قال: لا، قال: فهل تدري إلى الجنة تصير أم إلى النار؟ قال: فما هذا الضحك؟ فلم ير الشاب ضحكًا مرة أخرى

ஹழ்ரத் ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் சிரித்துக்கொண்டிருந்த ஒரு வாலிபரை கடந்து சென்றபோது அந்த வாலிபரை நோக்கி, இளைஞனே! ஸிராத் பாலத்தை நீ கடந்து விட்டாயா?என்று கேட்டார்.
அதற்கு அந்த வாலிபர்- இல்லை என்று பதில் கூறினார்.
நீ சுவனம் செல்வாயா?நரகம் செல்வாயா?என்பதை நீ அறிந்துவிட்டாயா? என்று மீண்டும் ஹஸன் ரஹ் அவர்கள் கேட்க, அவ்வாலிபர் இல்லை என கூறினார்.
அப்படியானால் உன்னால் எப்படி சிரிக்க முடிகிறது?என்று கண்டித்தார்கள்.

وكان ميسرة يقول إذا أوى إلى فراشه: "ليت أمي لم تلدني، فقالت له أمه حين سمعته مرة من المرات: يا ميسرة! إن الله قد أحسن إليك، هداك إلى الإسلام؟ قال: أجل. ولكن الله تعالى بيَّن الله لنا أنا واردون على النار، ولم يبين لنا أنا صادرون منها"

மைஸரா ரலி அவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும்போது என் தாய் என்னை பெற்றெடுக்காமல் இருந்திருக்கலாமே!என்று கூறினார்களாம்.
இதை பலதடவை கேட்ட அவர்களின் தாய் ஒரு தடவை,மகனே!இப்போது என்ன கெட்டுவிட்டது? அல்லாஹ் உனக்கு அழகான வாழ்வை தந்திருக்கிறான்.இஸ்லாத்தை தந்திருக்கிறான் என்று கூறியபோது,ஹழ்ரத் மைஸரா ரலி அவர்கள் தாயே!உண்மைதான்.ஆனால் அல்லாஹ் நரகத்தை கடந்து தான் சுவனம் செல்ல வேண்டும் கூறுகிறானே.அதை நினைத்தால் எனக்கு பயமாக உள்ளது என்று கூறினார்கள்

وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا
மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்

وقال معاذ بن جبل:" إن المؤمن لا يسكن روعه حتى يترك جسر جهنم وراءه

நரகத்தின் பாலத்தை கடக்கும் வரை ஒரு முஃமினின் பயம் நீங்காது என்று ஹழ்ரத் முஆத் இப்னு ஜபல் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

وتفقد أحوال رعيته يوماً فمر بعجوز، فقالت:" يا هذا ما فعل عمر؟ قال: قد أقبل من الشام سالماً، فقالت: لا جزاه الله خيراً، قال: ولمَ؟ فقالت: والله ما نالني من عطائه منذ تولى أمر المسلمين، قال عمر: وما يدري عمر بحالك وأنت في هذا الموضع؟ فقالت: سبحان الله! والله ما ظننت أن أحداً يلي على الناس ولا يدري ما بين مشرقها ومغربها، فبكى عمر وقال: واعمراه! كل أحد أفقه منك يا عمر حتى العجائز؟ ثم قال لها: يا أمة الله، بكم تبيعيني ظلامتك من عمر فإني أرحمه من النار، فقالت: لا تستهزئ بنا يرحمك الله، فقال: لست بهزاء، فلم يزل بها حتى اشترى ظلامتها بخمسة وعشرين ديناراً، فبينما هو كذلك إذ أقبل علي وعبد الله بن مسعود، فقالا: سلام عليك يا أمير المؤمنين! فقالت العجوز: واسوأتاه! شتمت أمير المؤمنين في وجهه، فقال لها عمر: ما عليكِ يرحمك الله، ثم طلب رقعة من جلد، وكتب فيها: بسم الله الرحمن الرحيم. هذا ما اشترى به عمر من فلانة ظلامتها منذ ولي إلى يوم كذا وكذا بخمسة وعشرين ديناراً؛ فما تدعي عند وقوفه في الحشر بين يدي الله، فـعمر منه بريء، شهد على ذلك علي وابن مسعود"[سمط النجوم العوالي (3/68)]

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் தன் ஆட்சியின் நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக புறப்பட்டார்கள்.அப்போது வயதான மூதாட்
டியிடம் உமர் ஆட்சி எப்படி இருக்கிறது?என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மூத்தட்டி அல்லாஹ் அவருக்கு கைரான கூலி வழங்காமல் இருப்பானாக!என்றார்கள்.
அதைக்கேட்ட உமர் ரலி அவர்கள் ஏன்?என வினவினார்கள்.அவர் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றாள் அம்மூதாட்டி.

உன் நிலைகள் உமருக்கு எப்படி தெரியும்?என்று ஜனாதிபதி கேட்டபோது,
அப்பெண்,சுப்ஹானல்லாஹ்!மக்களின் ஆட்சியை பொறுப்பேற்றிருக்கிற ஒருவரின் ஆட்சிக்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு பற்றி தனக்கு தெரியாது என்று சொல்வாரா.என்று கேட்டபோது உமர் ரலி அழுதுவிட்டு,  உமரே!உம்மை விடவும் மிகச்சிறந்த அறிவாளிகள் எல்லாம் உண்டு என்றார்கள்.
பெண்ணே!உமர் உனக்கு செய்த அநீதிக்கு பகரமாக என்னிடம் விலை பெற்றுக்கொள்.அவரை நரகை விட்டும் நான் காப்பாற்றுகிறேன்.என்றார்கள்.  அதைக்கேட்ட அப்பெண்,என்னை கேலி செய்யாதீர் என்றாள்.அதற்கு உமர் ரலி, இல்லை, நான் கேலி செய்யவில்லை,உண்மையை தான் பேசுகிறேன் என்றபோது -ஒரு வழியாக உமரின் அநீதிக்கு 25 தீனாரை பகரமாக பெற்றுக்கொண்டார்கள்.
அப்போது எதார்த்தமாக அப்பக்கம் வந்த அலி ரலி,மற்றும் இப்னு மஸூத் ரலி ஆகிய இருவரும் அமீருல் முஃமினீன் அவர்களே!அஸ்ஸலாமு அலைக்கும் என்றார்கள்.
அதை செவியுற்ற அந்த மூதாட்டி,இவ்வளவு நேரம் அமீருல் முஃமினீன் அவர்களையா திட்டிவிட்டேன்.என்று பயந்து நடுங்கினாள்.
உடனே ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் நீங்கள் பயப்படவேண்டாம் என்று கூறி, ஒரு தோல் பேப்பரில் ஒரு ஒப்பந்தம் எழுதினார்கள்.அதில் எழுதப்பட்ட விஷயம்-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். உமர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல்  இன்று வரை எனக்கு செய்த அநீதிக்கு பகரமாக 15 தீனார் பெற்றுக்கொண்டு நான் அவரை விடுதலை செய்கிறேன்.மேலும் நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் அவரை விசாரனைக்கு நிறுத்தமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் என்று எழுதி, அலி ரலி மற்றும் இப்னு மஸ்வூத் ரலி ஆகிய இருவரையும் சாட்சியாக்கினார்கள்.

روى الإمام أحمد أن رَسُول اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِجِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ : " مَا لِي لَمْ أَرَ مِيكَائِيلَ ضَاحِكاً قَطُّ ؟ قَالَ : مَا ضَحِكَ مِيكَائِيلُ مُنْذُ خُلِقَتِ النَّارُ

மிஃராஜில் நபி ஸல் அவர்கள் கண்ட காட்சிகளில் ஒன்று:மீகாயீல் சிரிப்பதில்லை.அதைப்பற்றி நபி ஸல் அவர்கள் ஜிப்ரயீல் அலை அவர்களி டம் கேட்டபோது,நரகம் படைக்கப்பட்டதிலிருந்து மீகாயீல் சிரிக்கவே இல்லை என்று ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் கூறினார்கள்.

ومن حديث أبي بكر بن عياش قال [ صليت خلف فضيل بن عياض صلاة المغرب وإلى جانبي علي ابنه فقرأ الفضيل ألهاكم التكاثر فلما بلغ لترون الجحيم [ التكاثر الذي 6 ] سقط علي مغشيا عليه وبقي الفضيل لا يقدر يجاوز الآية ثم صلى بنا صلاة خائف قال ثم رابطت عليا فلما أفاق إلا في نصف الليل ]

அபூபக்கர் இப்னு இயாஷ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
நான் ஒருநாள் புழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களுக்கு பின்னே மஃரிப்  தொழுகையை தொழுது கொண்டிருந்தேன்.அப்போது என் பக்கத்தில் அவர்களின் மகனார் அலி ரஹ் அவர்கள் நின்றார்கள்.
புழைல் ரஹ் அவர்கள் சூரா தகாஸுர் ஆரம்பித்து ஓதினார்கள்.அதில் لترون الجحيم  நிச்சயமாக நீங்கள் நரகத்தை காண்பீர் என்ற வசனத்தை ஓதியதும் அவர்களின் மகன் அலி அவர்கள் மயக்கமுற்று கீழே விழுந்து விட்டார்கள்.
இமாம் அவர்களோ அல்லாஹ்வின் அச்சத்தால் அந்த ஆயத்தை கடக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு அந்த தொழுகையை முடித்தார்கள்.
மயக்கமுற்ற அவர்களின் மகனார் நடு இரவில் தான் மயக்கம் தெளிந்தார்.

 فقال: زدنا يا كعب،
قال: قلت: «يا أمير المؤمنين، لو فتح من جهنم قدر منخر ثور بالمشرق ورجل بالمغرب لغلى دماغه حتى يسيل من حرها» فأطرق عمر مليا ثم أفاق فقال: زدنا يا كعب، قال: قلت: " يا أمير المؤمنين، إن جهنم لتزفر يوم القيامة زفرة ما يبقى ملك مقرب، ولا نبي مرسل إلا خر جاثيا على ركبتيه، حتى أن إبراهيم عليه السلام خليله ليخر جاثيا ويقول: نفسي نفسي، لا أسألك اليوم إلا نفسي " قال: فأطرق عمر مليا،
حلية الأولياء (5/368) ، الزهد والرقائق (1/75)

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் கஃப் ரலி அவர்களிடம் உபதேசம் செய்யச்சொன்  னார்கள்.அப்போது கஃப் ரலி செய்த உபதேசம் இது:
கிழக்கு திசையில் இருக்கும் நரகம் இலேசாக திறக்கப்பட்டால் அதன் உஷ்னத்தால் மேற்கில் இருக்கும் மனிதனின் மூலை உருகிவிடும் என்றார்கள்
இன்னும் சொல்லுங்கள் என்று உமர் ரலி அவர்கள் கூறியபோது-
நரகம் நாளை மறுமையில் இலேசாக கொதிக்க ஆரம்பிக்கும் போது, இறைவனுக்கு நெருக்கமான மலக்கும்,ரஸூல் மார்களும் மண்டியிட்டு உட்கார்ந்து விடுவார்கள்.அல்லாஹ்விடம் இந்த நரகத்தை விட்டும் தன்னை காப்பற்றச்சொல்லி வேண்டுவார்கள்.எந்தளவென்றால் ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் கூட தனக்காக வேண்டுவார்கள்.என்று கஃப் ரலி அவர்கள் கூறியபோது உமர் ரலி தன் தலையை தொங்கவிட்டு நீண்டநேரம் இருந்தார்கள்.

அல்லாஹ்வுக்கு நெருக்கமான வானவர்களும்,நபிமார்களும்,ஸஹாபிகளும்,  ஸாலிஹீன்களும் இந்தளவிற்கு பயந்து நடுங்கினார்கள் என்றால் அப்படிப்பட்ட நரகத்தை பற்றி என்ன சொல்வது?

வாருங்கள் அதை சுற்றிப்பார்போம்....இல்லை...இல்லை...எட்டிப் பார்ப்போம். பரவசம் அடைவதற்கல்ல,பாதுகாப்பு தேடுவதற்கு.

நரகம் உருவான வரலாறு:

أُوقد على النار ألف سنة حتى احمرت، ثم أوقد عليها ألف سنة حتى ابيضت، ثم أوقد عليها ألف سنة حتى اسودت؛ فهي سوداء مظلمة

நரகம் ஆயிரம் ஆண்டு நெருப்பு மூட்டப்பட்ட்து.அப்போது அது சிகப்பு நிறத்தில் தோற்றம் தந்தது.
பின்பு மீண்டும் ஆயிரம் ஆண்டு தீ மூட்டப்பட்டது. அப்போது அது வெண்மை நிறத்தில் தோற்றம் தந்தது.
பின்பு மீண்டும் ஆயிரம் ஆண்டு நெருப்பு மூட்டப்பட்ட்து.அது கடும் இருளான கருப்பு நிறத்தில் மாறிவிட்டது.
மூவாயிரம் ஆண்டுகள் தீ மூட்டப்பட்ட ஒரு நெருப்புக்குண்டத்தை பற்றி எப்படி வர்ணிக்க முடியும்?

அந்த நெருப்பும் உலக நெருப்பும்:

عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال: «ناركم هذه التي يوقد ابن آدم جزء من سبعين جزءًا من حر جهنم،

ஆதம் அலை அவர்கள் பயன்படுத்திய நெருப்பு அதில் எழுபதில் ஒரு பகுதிதான்.என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

قال صلى الله عليه وسلم :" اشتكت النار على ربها, فقالت رب أكل بعضي بعضاً, فأذن لها بنفسين: نفس في الشتاء ونفس في الصيف, فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير

நெருப்பு அல்லாஹ்விடம் முறையிட்டது.ரப்பே!என்னில் சிலது சிலதை சாப்பிடுகிறது என்றபோது இரண்டு தடவை மூச்சு விட்டுக்கொள்ள அல்லாஹ் அனுமதி வழங்கினான்.குளிர் காலத்தில் ஒரு தடவையும் கோடைகாலத்தில் ஒரு தடவையும்.அதையே நீங்கள் கோடைகால கடும் வெப்பமாகவும் குளிர் கால கடும் குளிராகவும் உணர்கிறீர்கள் என்று ஸல் அவர்கள் கூறினார்கள்.

قال النبي صلى الله عليه وسلم : (( يؤتى بأنعم أهل الدنيا من أهل النار يوم القيامة ، فيُصبغُ في النار صبغة . ثم يقال : يا ابن آدم ! هل رأيت خيراً قط ؟ هل مرَّ بك نعيم قطُّ ؟ فيقول : لا والله يا رب

நாளை மறுமையில் உலகின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்தவனை கொண்டுவரப்பட்டு நரகில் ஒரு தடவை முக்கப்படும்.இப்போது சொல் உலகில் ஏதும் இன்பம் அனுபவித்தாயா?என்று கேட்கப்படும்.அல்லாஹ்வின் மீது சத்தியமாக!இல்லை என்பான்.

قَالَ صلى الله عليه وسلم : " يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ ، مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا " [ رواه مسلم

நாளை மறுமையில் நரகம் எழுபதாயிரம் கடிவாளம் இடப்பட்டு,அதன் ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் மலக்குகள் பிடித்து இழுத்துக்கொண்டு வருவார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

நரகத்தின் ஆளம்:

رواه أبو هريرة رضي الله عنه قال: كنا مع رسول الله صلى الله عليه وسلم , إذ سمع وجبة (أي سقطة) فقال النبي صلى الله عليه وسلم :" تدرون ما هذا؟ قلنا: الله ورسوله أعلم. قال: هذا حجر رمي به في النار منذ سبعين خريفاً, فهو يهوى في النار إلى الآن" [مسلم]
நபி ஸல் அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்தபோது ஒரு கல் விழும் சப்தம் கேட்டோம்.அப்போது ஸல் அவர்கள் இது என்ன தெரிகிறதா?என கேட்டார்கள் நாங்களோ,அல்லாஹ்வும் அவனின் தூதரும் மிக அறிந்தவர்கள் என்றோம்.
அதற்கு நபி ஸல் அவர்கள் இது எழுபது ஆண்டிற்கு முன் நரகை நோக்கி வீசப்பட்ட கல்லாகும் இப்போது தான் அதை அடைந்திருக்கிறது என்றார்கள்.

يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍ

நரகத்தை நோக்கி, "நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது "இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!

நரகத்தின் வேதனைகள்:

பசி.தாகம்.பயம்.நெருக்கடி.உஷ்னம்.கடும் புகை போன்ற பல்வேறு தண்டனைக்கு உட்படுத்தப்படும்.

وروى ابن عباس موقوفًا: "إذا جاع أهل النار استغاثوا من الجوع، فأغيثوا بشجرة الزقوم فأكلوا منها ".

நரகவாசிகளுக்கு பசி வந்து கத்தும்போது அவர்களுக்கு கள்ளி மரம் உணவாக வழங்கப்படும்.

يقول الرسول صلى الله عليه وسلم عن الزقوم: «لو أن قطرة من الزقوم قطرت في دار الدنيا لأفسدت على أهل الدنيا معايشهم؛ فكيف بمن تكون طعامه؟!».

ஒரு சொட்டு கள்ளிமரம் துன்யாவில் பட்டுவிட்டால் ஒட்டுமொத்த துன்யாவும் கெட்டுவிடும்.அதையே உணவாக சாபிட்டால் என்னாகும்?

وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ

"சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."

إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ ﴿٤٣﴾ طَعَامُ الْأَثِيمِ ﴿٤٤﴾ كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ ﴿٤٥﴾ كَغَلْيِ الْحَمِيمِ

நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே). பாவிகளுக்குரிய உணவு. அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும். வெந்நீர் கொதிப்பதைப் போல்.

مِّن وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَىٰ مِن مَّاءٍ صَدِيدٍ ﴿١٦﴾ يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِن كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ ۖ وَمِن وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ

அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.
அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّـهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.

ரமலானின் ஒவ்வொரு இரவுகளும் நரகிலிருந்து விடுதலை செய்யப்படும் இரவாகும்.
நபி ஸல் அவர்கள் ரமலான் காலத்தில் நான்கு விஷயங்கள் அதிகமாக செய்யச்சொன்னார்கள்
1.ஷஹாதத் கலிமா   இஸ்திஃபார்   3.சுவனத்தை வேண்டுதல்   4.நரகை விட்டும் பாதுகாப்பு தேடல்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلاَثًا قَالَتِ الْجَنَّةُ : اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ ، وَمَنِ اسْتَعَاذَ بِاللَّهِ مِنَ النَّارِ ثَلاَثاً قَالَتِ النَّارُ : اللَّهُمَّ أَعِذْهُ مِنَ النَّارِ " [ رواه أحمد وابن ماجة بإسناد صحيح

யார் அல்லாஹ்விடம் மூன்று தடவை சுவனத்தை வேண்டுவாரோ, யா அல்லாஹ்! அவரை சுவனத்தில் நுழைத்துவிடு என்று சுவனம் அவருக்காக துஆச்செய்யும்.அவ்வாறு மூன்று தடவை யார் நரகை விட்டும் பாதுகாப்பு தேடுவாரோ யா அல்லாஹ் அவரை நரகை விட்டும் பாதுகாப்பாயாக என நரகம் அவருக்காக துஆச்செய்யும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

   


Wednesday, 24 July 2013

ஸகாத் ஒரு வறுமை ஒழிப்புத்திட்டம்


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஸகாத் முக்கிய இடத்தை பிடிக்கிறதுஸகாத்திற்கும் ரமலான் மாதத்திற்கும் மட்டும் தொடர்பல்ல,
மாறாக அது எல்லா மாதங்களுடனும் சம்பந்தப்பட்டதாகும்.மக்கள் அதிகமான நன்மைகள் நாடி ரமலானில் ஸகாத்தை கொடுக்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தி கொண்டனர்.

இதனடிப்படையில் ஸகாத் பற்றிய ஷரீஆ கண்ணோட்டத்தை உங்களின் கவனத்திற்கு தரப்படுகிறது.

உண்மையில் நம் சமூகத்தில் தொழுகையின் விஷயத்தில் விழிப்புணர்வு பெற்ற அளவுக்கு ஸகாத் பற்றிய விழிப்புணர்வு இல்லை.

தொழுகைக்கும் ஸகாத்திற்கும் இடையில் ஒரு பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக பார்க்க முடிகிறது.எத்துனையோ பெரும் தொழுகையாளிகள் ஸகாத் என்றால் வெகு தூரத்தில் நிற்கின்றனர்.இதற்கு இரண்டு காரணங்களை சொல்ல முடியும்

முதலாவது:பணத்தின் மீது இருக்கும் மோகம்.

இரண்டாவது:தொழுகை அளவுக்கு ஸகாத் வலியுறுத்தி கூறப்பட்ட கடமை யல்ல என்று அவர் விளங்கிக்கொண்டது.

இன்றைக்கு பணம் சம்பாதிப்பதில் மனிதன் மிருகமாக மாறிக்கொண்டிருக்கிறான்.

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் பணத்தை இருமுகத்தன்மை கொண்டதாக வர்ணிக்கிறான்.

பொருளும் பிள்ளைகளும் உலகின் அழகுப்பொருட்கள்.

பொருளும் பிள்ளைகளும் சோதனைப்பொருட்கள்.

நாம் சம்பாதிக்கும் பொருள் அழகாக ஆகுவதும்,ஆபத்தாக மாறுவதும் நாம் பயன்படுத்துவதில் உள்ளது.
அளவோடும்.முறையோடும் இருந்தால் அது நன்மை பயக்கும்.அளவுக்கு அதிகமாக இருந்தால் பூமியில் அது குழப்பம் ஏற்படுத்த காரணமாகி விடும்.

இங்கே நாம் சம்பாதிக்கும் ஹலாலான வருமானத்திற்கும் அல்லாஹ்விடம் மறுமையில் கணக்கு காட்ட வேண்டும் என்று அறிஞர்கள் கூறுவார்கள்.

முஸ்லிம்களுக்கு பணத்தின் மீது ஆசையும் மரணத்தின் மீது வெறுப்பும் அதிகமானால் தங்களின் ஈமானின் பலத்தை இழப்பார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அதனால் தான் நபி ஸல் அவர்கள் தங்களின் தோழர்களுக்கு முன் சமூகத்தில் பேனுதலுடன் வாழ்ந்த நல்லவர்களின் வாழ்வை உதாரணமாக எடுத்துக்கூறுவார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ خُذْ ذَهَبَكَ مِنِّي إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الْأَرْضَ وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ وَقَالَ الَّذِي لَهُ الْأَرْضُ إِنَّمَا بِعْتُكَ الْأَرْضَ وَمَا فِيهَا فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ أَلَكُمَا وَلَدٌ قَالَ أَحَدُهُمَا لِي غُلَامٌ وَقَالَ الْآخَرُ لِي جَارِيَةٌ قَالَ أَنْكِحُوا الْغُلَامَ الْجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا  رواه البخاري ومسلم

ஒருவர் இன்னொருவரிடம் ஒரு நிலத்தை வாங்குகிறார்.நிலம் வாங்கியவர் அந்த நிலத்தின் அடியில் தங்க புதையல் இருப்பதை காண்கிறார்.உடனே அதை எடுத்துக்கொண்டு நிலம் வாங்கியவரிடம் ஓடிவருகிறார்.

உங்களிடம்  நான் நிலத்தை மட்டுமே வாங்கினேன்.அதில் தங்க புதையல் இருக்கிறது.அது எனக்கு சொந்தமானதல்
.உங்களுக்கே பாத்தியப்பட்டது.எனவே பெற்றுக்கொள்ளுங்கள் என்று நிலத்தை வாங்கியவர் கூறினார்.

அதற்கு நிலத்தை விற்பனை செய்தவரோ,நான் உங்களுக்கு அந்த பூமியை விற்றுவிட்டேன்.அதில் இருக்கும் அத்துனையும் உங்களுக்கே சொந்தமானது எனவே நீங்களே எடுத்துச்
செல்லுங்கள் என்று கூறிவிட்டார்.

இறுதியில் இருவருக்கிடையில் விவாதமாகி
ப்போனது.
நீதிபதியிடம் அந்த வழக்கை கொண்டுவந்தனர்.
இரு தரப்பையும் விசாரனை செய்த நீதிபதி,உங்கள் இருவருக்கும் குழந்தைகள் உண்டா?என்று கேட்டார்.
அதில் ஒருவர் எனக்கு ஆண்மகன் உண்டு என்றும், மற்றவர் எனக்கு ஒரு பெண்மகள் உண்டு என்றும் கூறினர்.
அதை கேட்ட நீதிபதி அவர்கள் உங்களின் மகனுக்கு உங்கள் மகளை நிகாஹ் செய்து வையுங்கள்.நீங்கள் இருவரும் சம்பந்தியாகி விடுங்கள். அந்த தங்கத்தை அவ்விருவருக்கும் சொந்தமாக்கி விடுங்கள் என்று தீர்ப்புச்செய்தார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

தங்களின் தோழர்களின் வாழ்வை பணம் ஆக்கிரமித்து விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற வரலாறுகளை சொல்லி வளர்த்தார்கள்.
எனவே இஸ்லாமிய சமூகத்தில் ஸகாத் பின்னுக்கு தள்ளப்பட்ட்திற்கு பண மோகம் காரணமாக இருக்குமானால் அவர்கள் இந்த வரலாற்றை கொஞ்சம் சிந்திக்கட்டும்.

தொழுகையும் ஸகாத்தும்

இரண்டாவது தொழுகை பற்றி வலியுறுத்தப்பட்ட அளவிற்கு ஸகாத் வலியுறு த்தப்படவில்லை என்று யார் சொன்னது?
திருக்குர்ஆனில் சுமார் 27 இடங்களில் தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்து கூறுகிறான்.30 இடங்களில் ஸகாத்தை தனியாக கூறுகிறான்சூரா தவ்பா முழுவதும் ஸகாத் பற்றிய வலியுறுத்தல் அதிகமாக கூறப்படுகி றது, மாத்திரமல்ல ஸகாத் கடமையாக்கப்பட்ட வசனமும் அதில் தான் உள்ளது.

 وقد قال عبد الله بن عباس رضي الله عنهما: (ثلاث مقرونة بثلاث، لا تقبل واحدة منهن إلا بالأخرى: لا تقبل طاعة الله إلا بطاعة رسوله، ولا تقبل الصلاة إلا بأداء الزكاة، ولا يقبل الله شكره إلا بشكر الوالدين

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹுத்தஆலா மூன்று அமல்களை மூன்று அமல்களுடன் சேர்த்து கூறுகிறான்.எந்த அமலை எந்த அமலுடன் சேர்த்து கூறுகிறானோ அதில் ஒன்றை செய்து மற்றொன்றை விட்டுவிட்டால் அந்த செய்த அமலையும் அல்லாஹ் கபூல் செய்யமாட்டான்.

முதலாவது:

قُلْ أَطِيعُوا اللَّـهَ وَأَطِيعُوا الرَّسُولَ

அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்பபடியுங்கள் என்று கூறுகிறான்.
ஒருவர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவனின் ரஸூலுக்கு கட்டுப்படவில்  லையானால் அல்லாஹ் அவரை ஏற்க மாட்டான்.

இரண்டாவது:

أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ

நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்று கூறுகிறான்.
ஒருவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார்.ஆனால் தன் பெற்றோருக்கு நன்றி செலுத்தவில்லையானால் அவரையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

மூன்றாவது:

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ

தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; என்று கூறுகிறான்.
ஒருவர் தொழுகையை நிறைவேற்றுகிறார்.ஆனால் ஸகாத் கொடுப்பதில்லை என்றால் அவரின் தொழுகையையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று கூறுகிறார்கள்.
நம் ஷரீஅத்தில் தொழுகையும் ஸகாத்தும் பிரிக்கமுடியா வணக்கமாகும். அதனால் தான் நபி ஸல் அவர்கள் மரணித்த சமயம் ஏற்பட்ட குழப்பங்களில் ஸகாத் பற்றிய பிரச்சனையும் ஒன்று.அனைத்து பிரச்சனைகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு ஸகாத்தை மறுக்கும் கூட்டத்தை என்ன செய்யலாம்? என்று உமர் ரலி அவர்களிடம் ஆலோசனை செய்கிறார்கள்.
உமர் ரலி அவர்கள், இப்போது கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம்.இந்த பிரச்சனை யை பிறகு பார்க்கலாம் என்றார்கள்.
இதைக்கேட்ட அபூபக்கர் ரலி அவர்கள்,அறியாமைக்காலத்தில் வீரராக வலம் வந்த உமர் இஸ்லாத்திற்கு வந்ததும் கோழையாகி விட்டாரோ?என்றார்கள்.

தொழுகையை போல ஸகாத்தும் முக்கியமான கடமை.தொழுகையை மறுத்தவர் எப்படி காபிராகி விடுவாரோ அவ்வாறு ஸகாத்தை மறுப்பவரும் காபிரே.

والله، لأقاتلنّ من فرق بين الصلاة والزكاة. والله، لو منعوني عقالاً كانوا يؤدونه لرسول الله لقاتلتهم عليه)
 அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தொழுகையையும் ஸகாத்தையும் யார் பிரித்து பேசுவாரோ அவருடன் நான் போர் செய்வேன்.நபி ஸல் அவர்கள் ஹயாத்தாக இருந்தபோது ஒட்டகத்தின் கயிற்றுக்கு ஸகாத் கொடுத்தவர் இப்போது அதை தருவதற்கு மறுத்தால் அவரின் மீது நான் போர் தொடுப்பேன் என்றார்கள்.

قال شیخ الإسلام ابن تیمیة رحمھ لله تعالى: "وقد اتفق الصحابة والأئمة بعدھم على قتال مانعي الزكاة وإن كانوا یصلون الخمس،
ویصومون شھر رمضان

 ஸகாத்தை மறுப்பவன் தொழுகையாளியாக இருந்தாலும் நோன்பாளியாக இருந்தாலும் அவனுக்கு எதிராக போர் தொடுக்கவேண்டும் எனபது ஸஹாபாக்களின் இஜ்மாவான கருத்தாகும் என இப்னு தைமிய்யா கூறுகிறார்கள்.

 தொழுகை உடல் வணக்கம் என்றால் ஸகாத் பொருள் வணக்கம்.

ஸகாத் வறுமை ஒழிப்பு திட்டம்

ஸகாத் ஹிஜ்ரி 2 ம் ஆண்டு கடமையாக்கப்படுகிறது.சமுதாயத்தின் வறுமை ஒழிப்புக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்திய அற்புதமான திட்டம் இந்த ஸகாத்.
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வறுமை ஆபத்தானது.எந்த சமூகத்தில் வறுமை தலைவிரித்தாடுமோ அந்த சமூகத்தில் நல்லொழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது.

சமுதாயத்தில் நடைபெறும் பெரும் குற்றங்களான திருட்டு,கொலை கொள்ளை அத்துனையும் வறுமைக்காகவே நடக்கிறது.
உச்சகட்டமாக வறுமை இறைமறுப்பில் சேர்க்கும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இஸ்லாம் கூறும் வழிமுறையில் ஸகாத் வசூலிக்கப்பட்டு,அதை முறையாக விணியோகம் செய்யப்பட்டால் நிச்சயமாக வறுமைக்கு முடிவு கட்டிவிட முடியும்.

أن النبي -صلى الله عليه وسلم- أرسله إلى اليمن وأمره أن يأخذ الزكاة من أغنيائهم ويردها على فقرائهم.
وكذلك نفَّذ معاذ وصية النبي -صلى الله عليه وسلم-، ففرّق زكاة أهل اليمن في المستحقين من أهل اليمن، بل فرّق زكاة كل إقليم في المحتاجين منه خاصة

நபி ஸல் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரலி அவர்களை யமன் தேசத்துக்கு ஆளுனராக அனுப்பி வைக்கும்போது செய்த உபதேசங்களில் ஒன்று:
அந்நகரத்தின் செல்வந்தர்களிடமிருந்து ஸகாத் வசூல் செய்து அந்நகரத்தின் ஏழைகளுக்கு கொடுத்து அவர்களின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றார் கள்.
ஹழ்ரத் முஆத் ரலி அவர்களின் அண்ணலாரின் உபதேசத்தை அவர்களின் காலத்துக்கு பின்னும் அமல்படுத்தி வந்தார்கள்.யமன் தேசத்தின் ஒவ்வொரு மாவட்ட்த்தில் உள்ள தேவையுள்ளவர்களுக்கு ஸகாத் பங்கு வைக்கப்படும்.

روى أبو عبيد: أن معاذ بن جبل لم يزل بالجند (الجند موضع باليمن). إذ بعثه رسول الله -صلى الله عليه وسلم- إلى اليمن حتى مات النبي -صلى الله عليه وسلم- وأبو بكر، ثم قدم على عمر، فرده على ما كان عليه، فبعث إليه معاذ بثلث صدقة الناس، فأنكر ذلك عمر، وقال: لم أبعثك جابيًا ولا آخذ جزية، ولكن بعثتك لتأخذ من أغنياء الناس فترد على فقرائهم، فقال معاذ: ما بعثت إليك بشيء وأنا أجد أحدًا يأخذه مني - فلما كان العام الثاني بعث إليه شطر الصدقة، فتراجعا بمثل ذلك، فلما كان العام الثالث بعث إليه بها كلها، فراجعه عمر بمثل ما راجعه قبل ذلك، فقال معاذ: ما وجدتُ أحدًا يأخذ مني شيئًا (نفس المرجع ص596،

உமர் ரலி ஆட்சியில் முஆத் ரலி அவர்கள் யமன் தேசத்தில் வசூல் செய்யப்ப ட்ட ஸகாத்தில் மூன்றில் ஒரு பகுதியை மதீனாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இது ஹழ்ரத் உமர் ரலி அவர்களுக்கு பிடிக்கவில்லை.அதனால் முஆத் ரலி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், உம்மை ஸகாத் வசூல் செய்து மதீனாவுக்கு அனுப்பவோ,அல்லது ஜிஸ்யா வரியை வசூல் செய்து அனுப்பவோ உம்மை நான் ஆளுனராக தேர்வு செய்யவில்லை.
அங்கு வசூல் செய்த ஸ்காத் நிதியை அங்குள்ள ஏழைகளுக்கு பங்கு வைப்பதே மிகவும் பொருத்தமாகும்.என்றார்கள்.
நான் இங்குள்ள ஏழைகளுக்கு கொடுக்காமல் மத்திய அரசான மதீனாவுக்கு அனுப்பி விட்டேன் என்று தாங்கள் தவறாக எண்ணிக்கொண்டீர்.ஆனால் உண்மை நிலை இங்கு ஸகாத் பெரும் ஆள் இல்லை என்றார்கள்.
மறு வருடம் ஸகாத் நிதியில் பாதியை அனுப்பினார்கள்.மூன்றாம் ஆண்டு முழு தொகையையும் மதீனாவுக்கு அனுப்பி வைத்து எமனில் ஏழைகள் இல்லை என்று கூறினார்கள்.
இஸ்லாம் கொண்டுவந்த ஸகாத் திட்டத்தை சரியாக விளங்காததும்,அதை சரியாக அமல்படுத்தாத்தும் தான் இன்னும் இஸ்லாமிய சமூகத்தில் ஏழ்மை ஒழிக்கப்படவில்லை.


 وليفيضنّ المالُ حتى يهمَّ الرجل مِنْ يقبلُ صدقتَهُ

ஸகாத் கொடுக்க ஆள் இருக்கும்.வாங்க ஆள் இருக்காது இப்படி ஒரு நிலை என் உம்மத்தில் வரும் என்று நபி ஸல் அவர்கள் முன்னறிவிப்புச்செய்ததை ஹழ்ரத் முஆத் ரலி அமல்படுத்திகாட்டினார்கள்.
இதை இன்னும் விசாலமாக அரபக முழுவதும் ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் செயல்படுத்தினார்கள்.

قال البيهقي : قد وقعت الثالثة في زمن عمر بن عبد العزيز ، ثم أخرج عن عبد الرحمن بن زيد بن الخطاب قال : إنما ولِيَ عمر بن عبد العزيز سنتين ونصفاً ، والله ما مات عمر بن عبد العزيز حتى جعل الرجل يأتينا بالمال العظيم فيقول : اجعلوا هذا حيث ترون في الفقراء ، فما يبرح حتى يرجع بماله ، نتذكر من يضعه فيهم فلا نجد فيرجع بماله
இரண்டரை ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் வஃபாத்தாகும்போது எங்களில் ஒவ்வொருவரும் ஒரு பெரும் தொகைக்கு சொந்தமாக இருந்தோம்.
ஏழைகள் இல்லாத அரபுலகத்தை அன்று நாங்கள் கண்டோம்.ஒருவர் தன் வீட்டை விட்டு ஸகாத் பணத்துடன் வருவார்.அதை வாங்கும் ஆளின்றி அத்துடன் திரும்பி செல்வார் என அப்துர்ரஹ்மான் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ஸகாத்தின் பயன்பாடுகள்:

1.அல்லாஹ் கொடுத்த பொருளுக்கு நன்றி செலுத்துவது.
திருக்குர்ஆனில் ஸகாத்தை வலியுறுத்தும்போது அல்லாஹ்வின் பொருளை கொடுங்கள் என்றும்,நாம் வழங்கியதிலிருந்து கொடுங்கள் என்றும் கூறுகிறான்.
காரூனுக்கு அல்லாஹ் ஸகாத்துக்கான கட்டளையிடும்போது அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போல நீ உபகாரம் செய் என்று கூறினான்.

2.ஸகாத் பொருளுக்கான பாதுகாப்பு.

وعَن الحسن بنِ عليّ رضي الله عنه قال: قالَ رسول الله : ((حصِّنوا أموالَكم بالزّكاةِ، وداووا مرضَاكم بالصّدقة، واستقبِلوا أمواجَ البلاءِ بالدعاء والتضرُّع)) رواه الطبرانيّ والبيهقيّ

உங்களின் பொருட்களை ஸகாத்தை கொண்டு பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
உங்களின் நோய்களுக்கு ஸதகாவை கொந்து மருந்திடுங்கள்.
உங்களின் சோதனைகளை துஆவின் மூலம் சரி செய்யுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

عن جابر رضي الله عنه قال: قال رجل: يا رسول اللهِ، أرأيتَ إن أدَّى الرجل زكاةَ ماله، فقال رسول الله : ((مَن أدَّى زكاةَ ماله فقد ذهبَ عنه شرُّه)) رواه الحاكم والطبرانيّ في الأوسط واللفظ له وابن خزَيمة.
தன் பொருளுக்கான ஸகாத்தை நிறைவேற்றிய ஒரு மனிதர் பற்றி உங்களின் அபிப்ராயம் என்ன?என நபி ஸல் அவர்களிடம் கேல்விகேட்டபோது- தன் பொருளின் ஸகாத்தை செலுத்தியவர் அந்த பொருளை விட்டும் தீங்கு போய்விட்டது என்றார்கள்
3.ஸகாத் பொருளை சுத்தப்படுத்துகிறது.

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَاللَّـهُ سَمِيعٌ عَلِيمٌ

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து ஸகாத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.

4.நாளை மறுமையில் கடுமையான தண்டனையிலிருந்து பாதுகாக்கிறது.
ஸகாத் கொடுக்காதவரின் தண்டனை பற்றி அல்குர்ஆன்:

وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّـهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
يَوْمَ يُحْمَىٰ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَىٰ بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ ۖ هَـٰذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ
இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) "இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்).

5.ஏழைகளின் துஆவை பெற்றுத்தருகிறது.
6.மற்ற பொருட்களில் பரக்கத் செய்யப்படுகிறது

எந்த பொருட்களுக்கு ஸகாத் கடமை?

1.தங்கம்     2.வெள்ளி       3.பணம்      4.வியாபார பொருட்கள்     5.விளைச்சல்கள்   6.கால்நடைகள்.
தங்கத்தில் 85 கிராம் ஸகாத்தை நிர்ணயிக்கும்.வெள்ளியில் 595 கிராம் நிர்ணயிக்கும்.பணத்திலும் வியாபார பொருளிலும் 595 கிராம் வெள்ளியின் விலை நிர்ணயிக்கும்.
கால்நடைகளில் ஒட்டகத்தில் 5 ம்-மாட்டில் 30ம்-ஆட்டில் 40 ம் வைத்திருப்பவர் ஸகாத்திற்கான நிஸாபை அடைந்தவர்.
இங்கு கூறப்பட்ட ஸகாத்தின் அளவு என்பது ஒரு மனிதனின் தேவைகள் போக உள்ள சேமிப்புகளில் கணக்கிடப்படும்.
அதனால்தான் வசிக்கும் வீடு,வாகனம்,பயன்படுத்தும் பொருட்கள் எவ்வளவு விலை உயர்ந்திருந்தாலும் அவைகளில் ஸகாத் கடமை இல்லை.
மேலும் ஸகாத் தொகை கடமையானதும் நிறைவேற்றத்தேவையில்லை.   மாறாக ஓராண்டு நிறைவு பெற்ற பின்னே நிறைவேற்ற வேண்டும்.
மேல்மிச்சமான வீடுகள்,நிலங்கள் இவைகளுக்கு ஸகாத் இல்லை.இவைகள் மூலம் வருமானம் வருமானால் அவைகளில் ஸகாத் கடமை.ஒருவேலை நிலங்களை வியாபார நோக்கத்தில் வாங்கிப்போட்டு இருந்தால் அவைகளில் ஸகாத் கடமை.
அடமான பொருளுக்கு ஹனபியில் ஸகாத் இல்லை.ஷாபியில் உண்டு.
அணியும் தங்கத்திற்கு ஹனபியில் ஸகாத் கடமையாகும்.ஷாபியில் அளவுக்கு அதிகமான நகைகளில் மட்டும் ஸகாத் கடமை.அந்த அளவு நடைமுறை கவனித்து மாறுபடும்.
கடனை பொருத்தவரை அதை கொடுத்தவரே அதற்கு சொந்தம் என்பதால் அவர் அதற்கும் ஸகாத் கொடுக்க வேண்டும்.ஆனால் ஒரு சலுகை பணம் கைக்கு வந்தபிறகும் கொடுக்கலாம்.
அட்வான்ஸ் பணத்திற்கு பணத்தை பெற்றவரே பொருப்புதாரி என்ற அடிப்படையில் வீடு,அல்லது கடைக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் பணத்திற்கு வீடு மற்றும் கடையின் உரிமையாளர் ஸகாத் கொடுக்க வேண்டும்.
ஸகாத்தின் காலத்தை ஹிஜ்ராவை கணக்கிட வேண்டுமே தவிர சூரிய கணக்கை கொண்டல்ல.
ஸகாத் பெறுபவருக்கு ஸகாத்தை முழுமையாக சொந்தமாக்க வேண்டும்

ஸகாத் பெறத்தகுதியானவர்கள்.

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّـهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّـهِ ۗ وَاللَّـهُ عَلِيمٌ حَكِيمٌ

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.