அல்லாஹ்வின் அருள்நிறைந்த ரமலானின்
மத்திபமான நாட்கள் இறை மன்னிப்பிற்கு சொந்தமான நாட்களாகும். ரமலான் என்றால் பாவங்களை கரிக்கும் என்றுதான் பொருள்.இந்த மாதத்திற்கு தவ்பாவின் மாதம் என்றொரு பெயரும் உண்டு என்பதை
நாமறிந்துள்ளோம்.
அல்லாஹ்வின் அருள் இன்றி மன்னிப்பு ஏது?எனவே தான் ரமலானின் ஆரம்ப நாட்களில் அல்லாஹ்வின் ரஹ்மத்தை நினைவு
கூறிவிட்டு மன்னிப்பை கேட்கும்படி தூண்டுகிறான்.
அல்லாஹ்வின் படைப்புக்கள் நான்கு வகை.
நன்மை மட்டும் செய்யும் வானவர்கள்.
பாவம் மட்டும் செய்யும் ஷைத்தான்கள்
நன்மையும் பாவமும் செய்யும் மனிதர்கள்
நன்மையும் பாவமும் செய்யத்தெரியா
உயிரினங்கள்.
மனிதன் தன் பலஹீனத்தால் பாவம் செய்துவிடுகிறான்.ஆனால் தன் புத்திசாலித்தனத்தால் அல்லாஹ்விடம் மன்னிப்புத்தேடி அதை
சரி செய்துகொள்கிறான்.
அல்லாஹ்விடம் நாம் பாவங்களுக்காக
மன்னிப்பு கேட்கும் முன் அவனின் அருளின் விசாலத்தன்மையை தெரிந்துகொள்ளவேண்டும்.
இமாம் ராஸி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ் தன் அருளில் 100 ல் ஒரு சதவீதமே இந்த பூமியில் இறக்கி வைத்திருக்கிறான்.அந்த ஒரு சதவீதத்தால் பூமியில் எத்தனை பேருக்கு ஈமான்
கிடைத்திருக்கிறது?அப்படியானால் மீதமுள்ள 99 பற்றி என்ன சொல்ல?
அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உண்டு.அவை ஒவ்வொன்றும் அவனின் ஒவ்வொரு
தன்மையை குறிப்பதாகும்.ஆனால் ரஹ்மத் எனும் அவனின் அருளை
குறிப்பதற்கு ரஹ்மான்,ரஹீம் என்ற இரு பெயர்கள் உள்ளன.இதன் மூலம் அல்லாஹ்வின் அருளின் விசாலத்தன்மையை புரிந்துகொள்ள
முடியும்.
யா ஸமது!
ஒரு சிலைவணக்கம் செய்யும் ஒருவன்
கடுமையான சோதனையில் மாட்டிக்கொள்கிறான்.தன் சிலையிடம்
தன் தேவையை இரவு பகலாக முறை யிடுகிறான்.விழிப்பிலும்
தூக்கத்திலும் يا صنم என்று
கூப்பிடுகிறான்.
அப்படி ஒரு தடவை தூக்கத்தில் يا صنم என்று
அழைப்பதற்கு பதிலாக நாவு தடுமாறி يا صمد என்று கூப்பிடுகிறான்.இதை கேட்டதும் அல்லாஹுத்தஆலா
لبيك يا عبدي (என் அடியானே இதோ
பதில் சொன்னேன்) என்று பதில் கூறுகிறான். உடனே வானவர்கள்-யா அல்லாஹ்!இவன் ஒரு சிலை வணக்கம் செய்பவன். நாவு தடுமாறி யா ஸமத் என்று
சொன்னதற்காக நீ பதில் கூறுகிறாயே! எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது என்றார்கள்.
அதற்கு அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் இப்படி
சொன்னானாம்.
இவன்
يا صنم பலதடவை
அழைத்தான்.ஆனால் அவைகள் பதில் கூறவில்லை ஆனால்
ஒரு தடவைதான் என்னை அழைத்தான் நான் பதில் சொல்லி விட்டேன்.நானும் பதில் சொல்லவில்லையானால் எனக்கும் அந்த சிலைக்கும் என்ன
வித்தியாசம் இருக்கிறது?
என்று கேட்டானாம்.
பானையை உடைத்து விடுங்கள்
நபி நூஹ் அலை அவர்களின் துஆவை ஏற்று
அல்லாஹ் இந்த உலகத்தை மொத்தமாக அழித்து துடைத்து விட்டான்.
கப்பலில் பயணம் செய்த சுமார் 80 முஸ்லிம்களை தவிர ஒட்டுமொத்த மனித சமூகமும் ஒரு நபியின் துஆவுக்கு
பழியாக்கப்பட்
டது.
வெள்ளப்பிரளயமாக பெருக்கெடுத்த தண்ணீர்
வற்றி நூஹ் அலை அவர்களும் அவர்களுடன் முஃமின்களும் பயணம் செய்த கப்பல் தரை
தட்டியபோது நபி நூஹ் அலை அவர்கள்
அல்லாஹ்விடம்,
யா அல்லாஹ்! இப்போது நான் என்ன செய்ய
வேண்டும் என வினவினார் அதற்கு அல்லாஹ்
ஆங்காங்கே கிடைக்கிற களிமண்ணைக்கொண்டு மண் பாத்திரம் செய்யுங்கள் என்று கூறினாம்.
மிகுந்த சிரமத்திற்கு இடையில்
மண்பாத்திரங்கள் செய்துமுடித்து அல்லாஹ்
விடம் இப்போது என்ன செய்வது?என மீண்டும் வினவியபோது அந்த
பாத்திரங்கள் அனைத்தையும் போட்டு உடைக்கச்சொன்னானாம்.
துடித்துப்போன நபி நூஹ் அலை அவர்கள் யா
அல்லாஹ்! நான் இத்துனை சிரமங்கள் எடுத்து இதை
செய்துள்ளேன்.ஒரு நொடியில் இதை உடைக்கச்சொ ல்கிறாயே?என்றதும் அருளாளனான அல்லாஹ் சொன்னானாம்
நூஹே! என் அடியார்கள் அனைவரையும் ஒரு நொடியில் ஒட்டுமொத்தமாக
அழிக்கச்சொல்லி துஆச்செய்தாயே எனக்கு எப்படி இருக்கும்?
وَلَوْ يُؤَاخِذُ
اللَّـهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَىٰ ظَهْرِهَا مِن دَابَّةٍ
பூமியில் மனிதர்கள் செய்யும்
குற்றங்களுக்காக அல்லாஹ் பிடிக்க ஆரம்பித்தால் பூமியில் ஒரு உயிரினம் மிஞ்சாது
என்று அல்லாஹ் தன் திரு மறையில் கூறுவான்.
அல்லாஹ்வின் அடியார்களே!
அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமலான். மன்னிப்பின் பக்கம் அழைக்கிறது வாருங்கள்.நாம் செய்த பாவம் வானத்தை விட பெரியதாக இருக்கலாம். ஆனால் அவனின்
அருள் அதைவிடவும் விசாலமானது.
அல்லாஹ் மூன்று கடவுளில் மூன்றாவது
கடவுள் என்று கூறி இணைவை க்கும் கூட்டமான
கிருஸ்துவ கூட்டத்தை நோக்கி அவனின் தவ்பா அழைப்பை பாருங்கள்
أَفَلَا يَتُوبُونَ
إِلَى اللَّـهِ وَيَسْتَغْفِرُونَهُ ۚ وَاللَّـهُ غَفُورٌ رَّحِيمٌ
இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா
செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும்
இருக்கிறான்.
ஈமான் கொண்டதற்காக ஒரு ஊர் மக்களை
ஒட்டு மொத்தமாக கொளுத்திய அந்த அநியாயக்கார கூட்டத்தை நோக்கி அல்லாஹ் தவ்பாவின்
கரம் நீட்டுகிறான்.இதோ பாருங்கள்..
نَّ الَّذِينَ
فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ
وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
நிச்சயமாக, எவர்கள் முஃமினான
ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ
அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு
உண்டு
ஆண்டுக்கு ஒரு தடவை அல்லது இரு தடவை
சோதனைகள் மூலம் தவ்பாவின் பக்கம் தன் அடியானை திசைதிருப்புவதாக திருக்குர்ஆன்
கூறுகிறது.
நன்மையை வீணாக்க மாட்டேன்
وفي البخاري أن حكيم بن حزام رضي الله عنه أقبل على رسول الله صلى
الله عليه وسلم فقال :
أي رسول الله .. أرأيت أموراً كنت أتحنث بها في الجاهلية .. من صدقة
أو .. عتِاقة .. أو صلة رحم .. أفيها أجر ؟
فقال رسول الله صلى الله عليه وسلم : ( أسلمت على ما أسلفت من خير
நபி ஸல் அவர்களின் கரம் பற்றி இஸ்லாமாக
வந்த ஹகீம் இப்னு ஹிஸாம் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம்,
அல்லாஹ்வின் தூதர் அவர்களே!அறியாமை
காலத்தில் நான் தர்மம்,அடிமை யை உரிமை
விடுதல்,சொந்தங்களை அரவணைக்குதல் போன்ற நற்காரியங்களை செய்துள்ளேன்.
இப்போது நான்
இஸ்லாமாகிவிட்டேன்.
அந்த நற்காரியங்களின் நிலை என்ன?என
கேட்டார்கள்.அதற்கு அல்லாஹ்வின் தூதர்
ஸல் அவர்கள்,(அவை வீணாகாமல்) அந்த
நன்மையுடன் இஸ்லாத்திற்கு வந்துள்ளீர்
என்றார்கள்.
அல்லாஹு அக்பர்.
இஸ்லாம் கடந்த கால பாவத்தை அழித்து
சுத்தப்படுத்துகிறது.அதேநேரம் நன்மையை பாதுகாக்கிறது.அல்லாஹ்வின் தாராள தன்மையை
என்னவென்று சொல்வேன்?
நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு அடியான் ஒரு பாவத்தை செய்து
விடுகிறான்.வானவர்கள் அதை பதிவு செய்யட்டுமா?என அல்லாஹ்விடம் அனுமதி
கேட்கிறார்கள்.
அல்லாஹ்தஆலா கொஞ்சம் பொருங்கள்,அவன்
தவ்பா செய்யலாம் என்கிறான்.
மீண்டும் இரண்டாவது ஒரு பாவத்தை செய்கிறான்.இப்போதும்
மலக்குகள் பதிவு செய்ய அனுமதி வேண்டி நிற்கின்றனர்.அப்போதும் அல்லாஹுத்தஆலா
கொஞ்சம் பொருமையாக இருக்கச்சொல்கிறான்.
இப்படி ஐந்து தடவை அந்த அடியான் பாவம்
செய்து விடுகிறான்.ஆறாவது தடவை ஒரு நல்ல காரியத்தை செய்கிறான்.இப்போது அல்லாஹ் தஆலா
அவன் செய்த ஒரு நன்மைக்கு பத்தை பதிவு செய்யுங்கள்.அந்த பத்தில் ஐந்தை கொண்டு
அவனின் ஐந்து பாவத்தை அழித்துவிடுங்கள் என்று கூறுகிறான்.இதை செவிமடுத்த ஷைத்தான்
தன் தலையில் கைவைத்து ,நான் இவனை பாவம் செய்ய வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன்.ஒரு நன்மையால்
அத்தனையும் அழிந்து விட்டதே என்று புலம்புகிறான்.
உன் அடியார்களை பாவம் செய்ய தூண்டிக்கொண்டே
இருப்பேன். இது ஷைத்தான் அன்று சொன்னது.நான் அடியார்களை மன்னித்து கொண்டே
இருப்பேன்.இது அல்லாஹ் அவனுக்கு பதில் சொன்னது.
நிச்சயமாக தவ்பா செய்வதை விட்டும் நாம்
சடையும் வரை அல்லாஹ் சலைக்க மாட்டான்.
இமாம் ஹஸன் ரஹ் அவர்களிடம் ஒருவர்
வந்து ,இமாம் அவர்களே! நம்மில் ஒருவர்
பாவம் செய்கிறார்.பின்னர் தவ்பா செய்கிறார்.மீண்டும் பாவம் செய்கிறார். பின்னர்
அதற்கு தவ்பா செய்கிறார்.இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் நல்லாவா
இருக்கிறது?என்றார்.
هذا ود الشيطان இது தான் ஷைத்தானின் ஆசை.உங்களை எப்படியாவது
நிறாசைய டையச்செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறான் என்றார்கள்.
அடியானுக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள
உறவு தாயிக்கும் குழந்தைக்கும் உள்ள உறவாகும்.
ஒரு குழந்தை எத்தனை தவறு செய்தாலும்
தன் தாயிடமே தஞ்சமடையும். அதனால் தான்
தன் குழந்தையை நெஞ்சில் அணைத்துவைத்தை ஒரு தாயை காட்டி நபி ஸல் அவர்கள்,
أتُرَون هذه .. طارحة ولدها في النار
இவள் தன் குழந்தையை நெருப்பில்
போடுவாளா?என கேட்டார்கள்.அதற்கு நபி தோழர்கள்
كيف تطرحه في النار
قالوا : لا .. والله .. يا رسول الله .. لا تطرحه في النار
எப்படி போடுவாள்? அல்லாஹ்வின் தூதர்
அவர்களே நிச்சயமாக போடமாட் டாள் என்றார்கள்.
அப்போது ஸல் அவர்கள்
والله .. لله .. أرحم بعباده من هذه بولدها
அல்லாஹ்வின் மீது சத்தியம்.அல்லாஹ் தன்
அடியார்கள் மீது இந்த தாயை விட இரக்கமுள்ளவன் என்றார்கள்.
وذكر ابن قدامة في التوابين ..
أن بني إسرائيل .. لحقهم قحط على عهد موسى عليه السلام .. فاجتمع
الناس إليه ..
فقالوا : يا كليم الله .. ادع لنا ربك أن يسقينا الغيث ..
فقام معهم .. وخرجوا إلى الصحراء .. وهم سبعون ألفاً أو يزيدون ..
فقال موسى عليه السلام : إلهي .. اسقنا غيثك .. وانشر علينا رحمتك ..
وارحمنا بالأطفال الرضع .. والبهائم الرتع .. والمشايخ الركع ..
فما زادت السماء إلا تقشعاً .. والشمس إلا حرارة ..
فقال موسى : إلهي .. اسقنا ..
فقال الله : كيف أسقيكم ؟ وفيكم عبد يبارزني بالمعاصي منذ أربعين سنة
.. فناد في الناس حتى يخرج من بين أظهركم .. فبه منعتكم ..
فصاح موسى في قومه : يا أيها العبد العاصي .. الذي يبارز الله منذ
أربعين سنة .. اخرج من بين أظهرنا .. فبك منعنا المطر ..
فنظر العبد العاصي .. ذات اليمين وذات الشمال .. فلم ير أحداً خرج ..
فعلم أنه المطلوب ..
فقال في نفسه : إن أنا خرجت من بين هذا الخلق .. افتضحت على رؤوس بني
إسرائيل .. وإن قعدت معهم منعوا لأجلي .. فانكسرت نفسه .. ودمعت عينه ..
فأدخل رأسه في ثيابه نادماً على فعاله .. وقال : إلهي .. وسيدي ..
عصيتك أربعين سنة ..وأمهلتني .. وقد أتيتك طائعاً .. فاقبلني .. وأخذ يبتهل إلى
خالقه ..
فلم يستتم الكلام .. حتى ارتفعت سحابة بيضاء ..فأمطرت كأفواه القرب ..
فعجب موسى وقال : إلهي .. سقيتنا .. وما خرج من بين أظهرنا أحد ..
فقال الله : يا موسى سقيتكم بالذي به منعتكم ..
فقال موسى : إلهي .. أرني هذا العبد الطائع ..
فقال : يا موسى .. إني لم أفضحه وهو يعصيني .. أأفضحه وهو يطيعني ..
நபி மூஸா அலை அவர்களின் காலத்தில்
பனீஇஸ்ரவேலர்களுக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டது.அப்போது மக்கள் நபி மூஸா அலை
அவர்களிடம் வந்து மழைக்காக துஆச்செய்யும்படி வேண்டினார்கள்.
சுமார் எழுபதாயிரம் மக்களை ஒரு
பாலைபெருவெளியில் ஒன்று திரட்டிய நபி மூஸா அலை அவர்கள்,
யா அல்லாஹ்!எங்களுக்கு மழை
பொழிவாயாக.உன் அருளை எங்கள் மீது இறக்கிவைப்பாயாக.பால் குடிக்கும்
குழந்தைகள்.மேய்ந்து திரியும், கால்நடைகள்,வணக்கங்களில் ஈடுபடும் பெரியவர்களின்
பொருட்டால் எங்களுக்கு இறக்கம் காட்டுவாயாக என்று எவ்வளவு கெஞ்சியும் வானம் தன்
உஷ்னத்தை குறைக்கவில்லை.
அப்போது அல்லாஹ் தஆலா சொன்னான்.
நாற்பது ஆண்டுகள் பாவம் செய்த ஒருவன்
உங்கள் கூட்டத்தில் இருக்கிறான். அவனால்
உங்களின் மழை தடுக்கப்பட்டிருக்கிறது.முதலில் அவனை வெளியேற்றுங்கள் என்று
கூறினான்.
அதை செவியுற்ற நபி மூஸா அலை அவர்கள்,
பாவியே!நீ இந்த கூட்டத்தை விட்டு
வெளியேறு என்று கூறியதும் பாவம் செய்தவன் தன் இருபுறத்திலும் பார்த்தான் யாரும்
வெளியேறவில்லை.
எனவே தன்னைதான் கூறுகிறார்கள் என்று
அவன் விளங்கிக்கொண்டான். இந்த கூட்டத்தில்
இருந்தால் மழை தடுக்கப்படும்.இப்போது வெளியேறிவிட்டால் கேவலமாகிவிடும்.என்ன செய்வது?என்று
யோசித்தவன் அல்லாஹ்விடம் தவ்பா செய்ய முடிவெடுத்தான்.தன் தலையை தன் ஆடையில்
நுழைத்து யாருக்கும் தெரியாமல்
யா அல்லாஹ்!நான் நாற்பது வருடம் உனக்கு
மாறு செய்தேன்.என்னை தண்டிக்காமல் தாமிதப்படுத்தினாய்.இப்போது தவ்பா செய்ய உன் படி
ஏறி யிருக்கிறேன் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள மாட்டாயா?என்று அழுது கண்ணீர்
வடிக்கிறார்.
அவரின் கண்ணீர் பூமியை தொடும் முன்னர்
வானத்திலிருந்து அருள்மழை பூமியை நனைக்க ஆரம்பித்துவிட்டது.
யாரும் வெளியாகாமல் எப்படி மழை பொழிந்தது?என
ஆச்சரியப்பட்டு, நபி மூஸா அலை அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டபோது,
மழை தடுக்கப்பட்டவரே மழை பொழிய காரணம்
என்று சொன்னானாம்.அவர் திருந்தி என் பிரியமான அடியாராக மாறிவிட்டார் என்றும்
கூறினான்.
அப்போது நபி மூஸா அலை அவர்கள்
யா அல்லாஹ்!இப்போதாவது அந்த அடியாரை
எனக்கு அடையாளம் காட்டு என்று வேண்டுகிறார்கள்.அதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
அவர் எனக்கு மாறுசெய்த அடியாராக
இருக்கும்போதே நான் கேவலப்படுத்தவில்லை.இப்போது அவர் என் பிரியமான அடியாராக
மாறிவிட்டார் இப்போது கேவலப்படுத்துவேனா?என்றானாம்.
قال رسولُ الله
صلى الله عليه وسلم: ((كلُّ بني آدَمَ خطّاء، وخيرُ الخطّائين التوّابون)) أخرجه أحمد
والترمذي وابن ماجه.
மனிதர்கள் தவறு செய்பவர்கள்.அவர்களில்
சிறந்தவர்கள் தவ்பா செய்பவர்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
தவ்பா செய்பவர் அல்லாஹ்வின் அன்பை
பெற்றுவிடுகிறார்.காரணம் தவ்பா செய்வது நபிமார்களின் சுன்னத்தாகும்.அது தனிப்பட்ட
முறையில் மிகப்பெரும் இபாதத்தாகும்.
قال بعض العلماء:
«دعوتُ الله سبحانه وتعالى ثلاثين سنة أن يرزقني توبةً نصوحاً ثم تعجبتُ في نفسي وقلت:
سبحان الله، حاجةٌ دعوتُ اللهَ فيها ثلاثين سنة فما قُضيت إلى الآن، فرأيت فيما يرى
النائم قائلاً يقول لي: أتعجبُ من ذلك؟ أتدري ماذا تسألُ الله تعالى؟ إنما تسأله سبحانه
أن يحبك، أما سمعت قول الله تعالى (إِنَّ اللهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ المُتَطَهِّرِينَ
) [البقرة:222](5).
ஒரு அறிஞர் கூறுகிறார்.
நான் அல்லாஹ்விடம் முப்பது ஆண்டுகளாக
தவ்பா செய்து வருகிறேன்.
சுப்ஹானல்லாஹ்!அல்லாஹ்விடம் ஒரு தேவையையும் முப்பதாண்டுகளாக கேட்டு
வருகிறேன்.ஆனால் இதுவரையும் அது நிறைவேறவில்லை.
ஒருநாள் கனவில் ஒருவர் வந்து நீ ஏன்
ஆச்சரியப்படுகிறாய்?நீ அல்லாஹ்விடம் என்ன கேட்டாய்?அவனின் அன்பை
கேட்கிறாய்.அல்லாஹ் உன் மீது அன்பு வைத்துவிட்டான் என்பதற்கு அடையாளம் அவனிடம் நீ
தவ்பா செய்வது தான்.
நிச்சயமாக அல்லாஹ் தவ்பா செய்பவர்களை
நேசிக்கிறான் என்று குர்ஆனில் இல்லையா?என்றார்.
ஒருவர் இமாம் ஹஸன்பஸரி ரஹ் அவர்களிடம்
வந்து பாவத்தை முறையிட்டார்.
தவ்பா செய்யுங்கள் என்றார்கள்.
இன்னொருவர் வந்து,தன் ஊரில் மழை பொழிய
வேண்டும் என்றார்கள்.
அவருக்கும் தவ்பா செய்யுங்கள்
என்றார்கள்.
மூன்றாவது ஒருவர் வந்து,வறுமை நீங்க
என்ன செய்ய வேண்டும் என்று வினவினார்.
அவருக்கும் தவ்பா செய்யுங்கள் என்றார்கள்.
நான்காவதாக ஒருவர் வந்து,குழந்தை
இல்லை.பிள்ளை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?என்றார்.
அவருக்கும் தவ்பா செய்யுங்கள் என்று
கூறினார்கள்.
அதை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர்
நான்கு வெவ்வேறு தேவையுடன் வந்த நான்கு நபர்களுக்கும் ஒரே பதிலை சொல்கிறீர்களே?என்று
கேட்டபோது ஹ்ஸன் ரஹ் அவர்கள் இதை நான் சொல்லவில்லை, அல்லாஹ் சொல்கிறான்
என்றார்கள்.
فَقُلْتُ اسْتَغْفِرُوا
رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا
يُرْسِلِ السَّمَاءَ
عَلَيْكُم مِّدْرَارًا
وَيُمْدِدْكُم
بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا
மேலும், "நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத்
தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்" என்றுங் கூறினேன்.
"(அப்படிச் செய்வீர்களாயின்) அவன்
உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.
அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும்
கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும்
(பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.
قال أبو هريرة
رضي الله عنه: ما رأيتُ أكثرَ استغفارًا من رسول الله صلى الله عليه وسلم
நபி ஸல் அவர்களை அதிகமாக இஸ்திஃபார்
செய்பவர்களாக யாரையும் நான் பார்த்ததில்லை என அபூ ஹுரைரா ரலி அவர்கள்
கூறுகிறார்கள்.
والله، إني لأستغفِر
الله وأتوب إليه في اليومِ أكثرَ من سبعين مرة)) أخرجه البخاريّ،
ஒரு நாளைக்கு 100 தடவை நான் தவ்பா
செய்கிறேன் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு பாவமும்செய்யாத அந்த பூமான் நபி
ஸல் அவர்கள் தவ்பா செய்யும் போது பாவத்திலேயே வாழ்வை கழிக்கும் நம் போன்றவர்கள் எத்துனை
தடவை தவ்பா செய்யலாம்.?வாருங்கள் நம்பிக்கையுடன் தவ்பா செய்வோம். ரமலானில் தவ்பா நஸீப் இல்லாதவன்
சாபத்திற்குரியவன். அல்லாஹ் நம்மையும் நம் குடும்பத்தையும் ரமலானின் அருள் கொண்டு
மன்னிப்பானாக. உங்களின் ரமலான் துஆவில்
இந்த பாவியையும் சேர்த்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
assalamu alaikkum miga arputham.
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteகாலத்துக்கு தகந்த பதிப்பு
ﺟﺰﺍﻙ ﺍﻟﻠﻪ ﺧﻴﺮﺍ ﻓﻲ الدارين
alhamdhu lillah ! evlo arumayan thagavalgal!! anaithum puthiyavai!! alhamdhu lillah!!
ReplyDeleteallah thangal ilmail melum athigarikattum!!
மிகவும் .பயனுள்ள விஷயம்
ReplyDeletealhamthu lillah bayanukkuriya aayath hathees sambavankal niraintha pudiya visayankal ulla pathibbu sekaritha moulavikku nanrikal pala by a.m.abdul karreem baqavi virudhunagar 9842978668
ReplyDeleteபாவம் போக்கும் ரமலானில் அல்லாஹ் நம் அனைவர்களின் பாவத்தையிம் மன்னிப்பானாஹ மேலும் உங்களின் கல்வி ஞானத்தை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக ஆமீன்
ReplyDeletealhamthu lillah bayanukkuriya aayath hathees sambavankal niraintha pudiya visayankal ulla pathibbu sekaritha moulavikku nanrikal pala by a.m.abdul karreem baqavi virudhunagar 9842978668
ReplyDeleteMaasha allah
ReplyDelete