Wednesday 3 July 2013

நோன்பின் தனித்துவங்கள்


பாக்கியம் நிறைந்த ரமலானை இன்னும் சில தினங்களில் சந்திக்க இருக்கிறோம்.அருள் நிறைந்த ரமலான் அல்லாஹ்வின் அருளை அள்ளிக்கொண்டு வருகிறது.

ரமலானை பெற்றவர்கள் யாவரும் பாக்கிய
வான்கள் அல்ல,அதில் பலன் பெற்றவர்களே பாக்கியசாலிகள்.

ரமலான் வேகமான வாழ்க்கையில் வேகத்தடை.கொஞ்சம் நிதானித்து வாழ்வின் ஓட்டத்தை சரியான ஓடுபாதையில் அமைத்துக்கொள்ள ரமலான் முழுமையாக பயன்படுத்தப்படவேண்டும்.

ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கும் உடல் உறுப்புக்களின் பராமரிப்பு தினமே ரமலானின் நாட்களாகும்.

சாப்பிடாமல் குடிக்காமல் இச்சையின்றி இருக்கிற அல்லாஹ்வின் தன்மைகளை கொஞ்சம் நாமும் முயற்சி செய்து, அந்த வல்ல நாயனின் அன்பை பெற்றுக்கொள்ள ரமலான் துணை செய்கிறது.

ஒவ்வொரு ரமலானும் நம் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்கடந்த ஆண்டின் ரமலானை நாம் அடைந்த பின்பு நம் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று கொஞ்சம் மனக்கண்ணில் ஓடவிட்டு பாருங்கள்.

பசித்திரு (நோன்பு)  விழித்திரு (தராவீஹ்) தனித்திரு (இஃதிகாஃப்) இதுவே ரமலானின் தாத்பரியமாகும்.

ஒரு முஸ்லிம் ரமலான் மாத வணக்கங்களின் மூலம் சுய கட்டுப்பாட்டை கற்றுக்கொள்கிறார்.

ரமலான் மாதத்தில் இரண்டு வணக்கங்கள் பிரதானமானவை

ஒன்று:பகல் வணக்கமான நோன்பு.

இரண்டு:இரவு வணக்கமான தராவீஹ்.

நோன்பின் தனித்துவங்கள்.

1.நோன்பு ஒரு நிகரற்ற வணக்கம்.

நோன்புக்கு நிகரான ஒரு வணக்கம் இல்லை என்ற காரணத்தினால் தான் அல்லாஹ்வுடன் பேசச்சென்ற நபி மூஸா அலை அவர்களை நாற்பது நாட்கள் அல்லாஹ் நோன்பு நோற்கச்சொன்னான்.

وَوَاعَدْنَا مُوسَىٰ ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً

மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழமை பெற்றது.

மர்யம் அலை அவர்களுக்கு மக்களால் ஒரு நெருக்கடி ஏற்பட்டபோது அல்லாஹ் நோன்பை நேர்ச்சை செய்யச்சொன்னான்.

فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَـٰنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا

பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்" என்று கூறும்.

முன் உள்ள சமுதாய மக்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தவும்,நெருக்கடிகளை சமாளிக்கவும் நோன்பையே பிரதான வணக்கமாக செய்து வந்திருக்கின்றனர்.அதனால் தான் நோன்பு முன்சமுதாய மக்களின் பழக்கவழக்கங்களில் இருந்திருப்பதாக பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

وفي مسند أحمد.. عن أبي إمامة -رضي الله عنه-.. أنَّ رسول الله -صلّى الله عليه وسلّم- أنشأ غزوةً يومًا.. فأقبل أبو أمامة فقال: يا رسول الله.. أدع الله لي بالشَّهادة أدخل به الجنَّة؟ فقال -عليه الصَّلاة والسَّلام-: «اللهمَّ! سلمهم وغنمهم».. قال أبو أمامة: فسلمنا وغنمنا.. قال: ثم أنشأ غزوًا ثانيًا.. فأتيته فقلت: ادع الله لي بالشَّهادة.. فقال: «اللهمَّ سلمهم وغنمهم».. قال: فلسمنا وغنمنا..
قال: ثمَّ أنشأ غزوًا ثالثًا.. فأتيته فقلت: إنّي أتيك مرَّتين قبل مرَّتي هذه.. فسألتك أن تدعو الله لي بالشَّهادة.. فقلت: اللهمَّ سلمهم وغنمهم.. فلسمنا وغنمنا.. يا رسول الله.. مرني بعملٍ .. فقال -عليه الصَّلاة والسَّلام-: «عليك بالصَّوم؛ فإنَّه لا مثل له» [صحَّحه الألباني 769 في صحيح الموارد]

அபூ உமாமா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு நாள் நபி ஸல் அவர்கள் ஒரு போருக்கு மக்களை அழைத்தார்கள்.

அப்போது நபி ஸல் அவர்களிடம் வந்த அபூ உமாமா ரலி அவர்கள்,
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு இப்போரில் ஷஹாதத் மரணம் கிடைக்கவே
ண்டும் என்று அல்லாஹ்விடம் துஆச்செய்யுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.

அதற்கு நபி ஸல் அவர்கள், யா அல்லாஹ் இவர்களை ஸலாமத்தாகவும் நல்ல ஙனீமத் பெற்றும் திரும்பி வரச்செய்வாயாக என துஆச்செய்தார்கள். அதன்படியே நாங்கள் ஆரோக்கியமாகவும்,நல்ல லாபத்துடனும் திரும்பி வந்தோம்.

பின்பு இரண்டாவது முறையாக நபி ஸல் அவர்கள் இன்னொரு போருக்காக அழைப்பு கொடுத்தார்கள்.அப்போதும் நபி ஸல் அவர்களிடம் வந்த அபூ உமாமா ரலி அவர்கள்,
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு இப்போரில் ஷஹீத் மரணம் கிடைக்க துஆச்செய்யுங்கள் என்றார்.
அதற்கும் நபி ஸல் அவர்கள், யா அல்லாஹ் இவர்களை ஸலாமத்தாகவும் நல்ல ஙஅனீமத் பெற்றும் திரும்பி வரச்செய்வாயாக என துஆச்செய்தார்கள். அதன்படியே நாங்கள் ஆரோக்கியமாகவும்,நல்ல லாபத்துடனும் திரும்பி வந்தோம்.

பின்னர் மூன்றாவது முறையாக நபி சல் அவர்கள் போருக்கு அழைத்த போது, நபி ஸல் அவர்களிடம் வந்து யா ரஸூல்ல்லாஹ்! இதுவரை இரண்டு தடவை உங்களிடம் ஷஹாதத்துக்காக துஆச்செய்யச்சொல்லி விட்டேன்.   ஆனால் நீங்கள்,  யா அல்லாஹ்! இவர்களை ஸலாமத்தாகவும் நல்ல ஙஅனீமத் பெற்றும் திரும்பி வரச்செய்வாயாக என துஆச்செய்கிறீர்கள். அப்படியானால் ஷஹாதத்தை விடவும் சிறந்த,என்னை சுவனத்தில் நுழைக்கும்படியான ஒரு அமலை எனக்கு சொல்லுங்கள் என்றார்.அதற்கு நபி ஸல் அவர்கள்,
நோன்பை பற்றிப்பிடியுங்கள்.அதற்கு நிகரான எந்த வணக்கமும் இல்லை என்றார்கள்..

இந்த உபதேசத்தை செவியுற்ற அபூ உமாமா ரலி அவர்கள் அவர்களின் வாழ்வின் ஏற்பட்ட மாற்றத்தை கவனியுங்கள்

فسمع أبو أمامة هذه الوصية .. فما رئي بعدها هو ولا امرأته ولا خادمه إلا صيامًا.
فكان النَّاس لا يرون في دراهم دخانًا بالنِّهار أبدًا.. فإذا رئي في دارهم دخان بالنَّهار.. عُرف أنَّه نزل بهم ضيفٌ.

இதற்குப்பின்னால் அவர்களும் அவர்களின் மனைவியும்,அவர்களின் பணியாளும் கூட அதிகமாக நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். எந்தளவென்றால் பகல் காலங்களில் அவர்களின் வீடுகளில் சமையல் செய்யும் புகையை பார்க்க முடியாது.ஒருவேளை அப்படி பார்க்க முடிந்தால் அவர்களின் வீட்டுக்கு விருந்தாளி வந்திருப்பார் என மக்கள் விளங்கிக்கொள்வார்கள்.

2.நோன்பு பாவங்களுக்கு பரிகாரமாகும்,ஆனால் எந்த பாவத்திற்கும் நோன்பை பலியிடப்படாது.

நாம் செய்யும் பாவங்களை அழிப்பதில் நன்மைகளுக்கு பெரும் பங்கு உண்டு,அவ்வாரே சில நேரங்களில் நம் பாவத்திற்கு பரிகாரமாக நம்முடைய வணக்கங்கள் பலிகொடுக்கப்படும்,
ஆனால் எந்த சூழ்நிலையிலும் நோன்பை அல்லாஹுத்தஆலா எந்த பாவத்திற்காகவும் பலி கொடுக்கமாட்டான்.காரணம் வணக்கங்களில் முகஸ்துதிக்கு அப்பாற்பட்டது நோன்பு மட்டும் தான்.

ஆம்! யாருக்கும் தெரியாமல் ஒருவர் தொழமுடியாது.ஜகாத் கொடுக்க முடியாது.ஹஜ் செய்ய முடியாது.ஆனால் ஒருவர் யாருக்கும் தெரியாமல் நோன்பு வைக்க முடியும்.ஒருவர் நோன்பாளி என்பதை அவர் சொன்னால் மட்டும் தான் தெரியும்.


والصَّوم كفارةٌ للخطيئات.. قال -صلّى الله عليه وسلّم- كما في الصَّحيحين: «فتنة الرَّجل في أهله وماله ونفسه وولده وجاره، يكفرها الصِّيام والصَّلاة والصَّدقة والأمر بالمعروف والنَّهي عن المنكر» [رواه مسلم 144].

ஒரு மனிதன் தன் குடும்ப விஷயத்தில்,தன் பொருளில்,தன் சுய கடமையில், தன் பிள்ளை மற்றும் தன் பக்கத்து வீட்டார் விஷயத்தில் செய்யும் பாவத்திற்கு அவனின் நோன்பு, தொழுகை, தர்மம், நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் போன்றது பரிகாரமாகிவிடும்  என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

رَوَاهُ أَحْمَد مِنْ طَرِيق حَمَّاد بْن سَلَمَة عَنْ مُحَمَّد بْن زِيَاد عَنْ أَبِي هُرَيْرَة رَفَعَهُ «كُلّ الْعَمَل كَفَّارَة إِلاَّ الصَّوْم، الصَّوْم لِي وَأَنَا أَجْزِي بِهِ

அனைத்து அமல்களும் குற்றப்பரிகாரமாகும்.
நோன்பை தவிர,காரணம் நோன்பு எனக்குரியது
.அதற்கு நான் கூலி கொடுப்பேன்.

இதன் மூலம் நோன்பு என்பது உடலுடன் சம்பந்தப்பட்டதல்ல,மாறாக அது கல்புடன் தொடர்புடையதாகும். 
நோன்பின் நோக்கத்தை பற்றி அல்லாஹ்

{لَعَلَّكُمْ تَتَّقُونَ}.. نعم {لَعَلَّكُمْ تَتَّقُونَ}.. والتَّقوى خشيةٌ مستمرةٌ..

நீங்கள் தக்வா உள்ளவர்களாக ஆகவேண்டும் என கூறுகிறான்.

إذًا الصِّيام لا يتعامل مع الفم.. ولا مع البطن.. ولا مع اليدين والرِّجلين.. وإنَّما يتعامل مع القلب.. فإذا صمت.. فتأثر بطنك فجاع..

وتأثر فمك فيبس.. وتأثر جسمك فضعف..
ولم يتأثر قلبك.. فلم يخشع.. ولم يرقَّ.. ولم ينكسر.. فما حققت الغاية من الصِّيام..
                                                      
நோன்பு என்பது வாய்,வயிறு,கை காலுடன் மட்டும் தொடர்புடையதல்ல,
நோன்பு வைத்திருப்பவரின் வயிறு பட்டினி கிடந்தது.நாவு வரண்டுபோனது, உடல் பலஹீனமானது ஆனால் உள்ளத்தில் எந்த மாற்றமும் ஏற்படாவிட்டால் அவன் நோன்பு பயனற்றது என ஒரு பெரியவர் கூறுகிறார்.

قال أبو إسماعيل الصائغ: كان أبي ومشيخة الحي إذا كان يوم صوم أحدهم، إذا أحدهم صاحب يوم الخميس والاثنين ادهن – دهن شفته حتى لا يظهر عليه أثر الصوم – ادهن وتطيب ثم خرج إلى الناس حتى لا يعلم الناس عليه أي أمارة تدل أنه صائم

அபூ இஸ்மாயீல் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
என் தந்தையும் அவர்களின் நண்பர்களும் திங்கள்,வியாழன் ஆகிய தினங்களில் நோன்புநோற்பதை வழமையாக்கி கொண்டவர்கள்.
அவ்வாறு அவர்கள் நோன்புவைக்கும்போது தங்களின் உதட்டில் எண்ணை தேய்த்துக்கொள்வார்கள்.அவ்வாறு செய்வது அவர்களை உற்சாகமாக காட்டும்.
மற்றும் நோன்பின் அடையாளத்தை மக்காளால் உணர்ந்துகொள்ள முடியாது.


وداود بن أبي هند لبث سنين يصوم يومًا ويفطر يومًا، ولم يعلم به أحد حتى أهله لم يعلموا به، كان يخرج إلى دكانه في الصباح فيأخذ من أهله طعامًا ليكون له فطورًا، فإذا كان يوم فطره أفطر عليه، وإذا كان يوم صومه تصدق به، ثم رجع بعد المغرب إلى بيته من دكانه فأكل معه فهم يظنونه يتغدى إذا رجع أو يتعشى وهو في الحقيقة إنما يفطر لأنه كان صائمًا.

தாவூத் ரஹ் அவர்கள் தங்களின் குடும்பத்தினர்களுக்கு கூட தெரியாமல் பல ஆண்டுகள் நோன்பு நோற்றார்கள்.
ஒரு நாள் நோன்பு வைப்பார்கள்.மறுநாள் விட்டுவிடுவார்கள்.
தன் இல்லத்திலிருந்து காலை உணவை எடுத்துக்க்ண்டு கடைக்கு புறப்பட்டு விடுவார்கள்.அன்று நோன்பு இல்லையானால் அதை சாப்பிடுவார்கள். நோன்பாக இருந்தால் அதை ஸதகா செய்து விடுவார்கள்.பின்பு மக்ரிபுக்கு தன் இல்லம் திரும்பிய பின் இரவு உணவை சாப்பிடுவார்கள்.இவ்வாறு தன் குடிம்பத்தினர்களுக்கு கூட தெரியாமல் நோன்பில் இக்லாஸை கடைபிடித்து வந்தார்கள்.

3.நோன்பாளி மரியாதை செய்யப்படவேண்டும்.

ஒருவர் தேவையான சந்தர்ப்பத்தில் நான் ஒரு நோன்பாளி என்று சொல்வதும் சுன்னதாகும்.

روى النِّسائي أنَّه -صلّى الله عليه وسلّم- وقع بينه وبين أم المؤمنين حفصة -رضي الله عنها- شيءٌ.. فطلها تطليقةً.
فأتاه جبريل فقال: «راجع حفصة، فإنَّها صوامةٌ قوامةٌ، و إنَّها زوجتك في الجنَّة» [حسَّنه الألباني 4351 في صحيح الجامع].. فراجعها -عليه الصَّلاة والسَّلام-.

நபி சல் அவர்களின் மனைவி ஹஃப்ஸா ரலி அவர்களை ஒரு காரணத்தினால் ஒரு தலாக் சொல்லி விட்டார்கள் அப்போது ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் நபி ஸல் அவர்களிடம் வந்து, நீங்கள் ஹஃப்ஸாவை மீட்டிக்கொள்ளுங்கள் காரணம் அவர்கள் அதிகமாக நோன்பு நோற்பவள்.அதிகமாக இரவு வணக்கம் செய்பவள் என்று கூறினார்கள்.  நபி ஸல் அவர்கள் உடனே மீட்டிக்கொண்டார்கள்.
ஒரு நோன்பாளிக்கு அல்லாஹ் கொடுக்கும் மரியாதையாகும்.

قال نافع خرجت مع عبد الله بن عمر رضي الله عنهما في بعض نواحي المدينة فوضعوا سفرة. فمر بهم راع, فقال له
عبد الله: هلم يا راعي.
فقال الراعي : إني صائم .
فقال عبد الله : في مثل هذا اليوم الشديد حرة في الشعاب ؟
قال الراعي: أبادر أيامي.
قال عبد الله: هل لك أن تبيعنا شاة ونعطيك من لحمها ما نفطر عليه ؟
قال الراعي : إنها لولاي .
قال عبد الله: فما عسى أن تقول لمولاك ؟
قال الراعي : سأقول أكلها الذئب .
فمضى الراعي وهو رافع إصبعه إلى السماء يقول: أين الله ؟
فلم يزل عبد الله بن عمر يقول: قال الراعي: فأين الله, فبعث إلى سيده فاشترى منه الراعي والغنم, فأعتق الراعي
ووهب له الغنم..
நாபிஃ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு இப்னு உமர் ரலி அவர்களுடன் மதீனாவுக்கு வெளியே பயணம் செய்த  போது ஓரிடத்தில் சாப்பிடுவதற்காக சுஃப்ராவை விரித்தார்கள்.
அப்போது அந்த பக்கம் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இடையனை கண்டு அவனையும் உண்ண அழைத்தார்கள்.
அப்போது அந்த ஆடு மேய்ப்பவனோ நான் நோன்பாளி என்றான்.
உடனே ஆச்சரியப்பட்ட இப்னு உமர் ரலி அவர்கள், இவ்வளவு கடும் வெயில் அடிக்கும் மலையடிவாரத்தில் ஆடுமேய்த்துக்கொண்டு நோன்பா?என கேட்டார்கள்.
கடும் உஷ்ணமான அந்த மறுமை நாளை குளிர்ச்சியாக்கவே இப்போது நோன்பு நோற்கிறேன் என்றானாம்.
அதை கேட்ட இப்னு உமர் ரலி அவர்கள் ஆட்டு மேய்ப்பவனிடம் உன் ஆடுகளில் ஒன்றை எனக்கு விற்று விடு.அதற்கான காசை தந்துவிடுகிறேன், நீ அந்த ஆட்டை நோன்பு திறக்க பயன்படுத்திக்கொள் என்றார்கள்.
அப்போது அவன், இவை எனக்கு சொந்தமானதல்ல என்றான்.
அதை கேட்ட இப்னு உமர் ரலி அவனை சோதிக்க, உன் எஜமான் கேட்டால் ஓநாய் சாப்பிட்டு விட்டது என்று சொல் என்றார்.
உடனே அவனோ-
வானத்தின் பக்கம் தன் விரல் நீட்டி அல்லாஹ் எங்கு இருக்கிறான்?என்றான்.
உடனே இப்னு உமர் ரலி அவர்கள் அந்த ஆட்டு இடையனின் எஜமானிடம் வந்து, அவனையும் ஆட்டு மந்தையையும் விலைக்கு வாங்கி,அவனை உரிமை விட்டு, ஆட்டு மந்தையை அவனுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் தராவீஹ் பற்றி வரும் வாரம்

7 comments:

  1. நோன்பின் மான்பு அருமை அருமை அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் உங்கலின் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக

    ReplyDelete
  2. அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் அருமை அருமை உங்கலின் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக - புதுகை சலாஹுதீன்

    ReplyDelete
  3. Arpudhamaana Thagaval
    Jazakallahu Khairan

    ReplyDelete
  4. ஒரு மனிதன் தன் குடும்ப விஷயத்தில்,தன் பொருளில்,தன் சுய கடமையில், தன் பிள்ளை மற்றும் தன் பக்கத்து வீட்டார் விஷயத்தில் செய்யும் பாவத்திற்கு அவனின் நோன்பு, தொழுகை, தர்மம், நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் போன்றது பரிகாரமாகிவிடும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

    رَوَاهُ أَحْمَد مِنْ طَرِيق حَمَّاد بْن سَلَمَة عَنْ مُحَمَّد بْن زِيَاد عَنْ أَبِي هُرَيْرَة رَفَعَهُ «كُلّ الْعَمَل كَفَّارَة إِلاَّ الصَّوْم، الصَّوْم لِي وَأَنَا أَجْزِي بِهِ

    அனைத்து அமல்களும் குற்றப்பரிகாரமாகும்.
    நோன்பை தவிர,காரணம் நோன்பு எனக்குரியது
    .அதற்கு நான் கூலி கொடுப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக அற்புதமான வார்த்தை

      Delete
  5. மிகவும் அற்புதமான பயான் அல்லாஹ் உங்களுக்கு மேலும் மார்க்க கல்வியை அதிக படுத்துவானாக.
    ஆடியோவும் தயார் செய்தால் நன்றாக இருக்கும்
    அகமது யாஸீன் உஸ்மானி

    ReplyDelete