Thursday 27 June 2013

தலாக்-ஹலாலான கோபம்

சமீபகாலங்களில் இஸ்லாமிய குடும்பவியல் சட்டங்களின் மீது பொய்யான அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது.அதில் குறிப்பாக தலாக் போன்ற விஷயங்களின் எதார்த்த உண்மைகளை புரிந்துகொள்ளாமல் மக்களிடம் இஸ்லாம் பற்றி தவறாக சித்தரிக்கப்படுகிறது.

விவாகரத்தைப் பொறுத்தவரை மற்ற மதங்களைச் சார்ந்த பெண்களுக்குப் பல்வேறு பாதுகாப்புகள் உள்ளன. ஆனால் ஒரு முஸ்லீம் கணவர் தன்னிச்சையாக விவாகரத்து செய்துவிட முடியும். முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரலுமான பதர் சயீத் என்ற இஸ்லாமிய பெயர் தாங்கி பெண் வழக்கு தொடுத்துள்ளார்.

முதலில் இஸ்லாமிய சட்டங்களை விமர்சனம் செய்யும் முன்னால் அதைப்பற்றி சரியாக தெரிந்துவைத்திருக்கவேண்டும்.

இந்திய நீதி முறைச்சட்டம் பொதுவாக ஆங்கிலேய சட்டமுறைப்படியே அமையப்
பெற்றது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் குடும்ப மற்றும் மதம் சார்ந்த விஷயங்கள் தனியார் சட்டப்படியே தீர்த்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.Native law officers தேசிய சட்ட அலுவலர்கள் நீதிமன்றத்திற்கு ஆலோசனை கூறுவர்.
வாரன்ஹேஸ்டிங்க் பிரபுவின் திட்டப்படி   1772 ல் கிழக்கிந்திய கம்பெனிகள் இந்திய பகுதியை கையில் எடுத்த பொழுது, மௌலவிகளையும் பண்டிட்களையும் நீதிமன்றம் வந்து ஆஜராகி சட்ட உதவி ஆலோசனை வழங்கி நீதி நிர்வாகத்திற்கு துணை புரிய  வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டனர். 1780 ல் முறைச் சட்டப்பிரிவு 27 ன் படி முஸ்லிம்களின் திருமணம்- பாகப்பிரிவினை  போன்ற மத சார்ந்த விஷயங்கள் குர்ஆனுடைய சட்டப்படியே தீர்க்கப்பட வேண்டும். கருத்து வேறுபாடின்றி அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவான இஸ்லாமிய சட்டப்படி அனைத்து முஸ்லிம்களும் வாழ வழி செய்யும் ஷரிஅத் Act பாஸாகி முஹம்மதியர் சட்டம் (mohamadiyar law) இந்தியாவில் செயல்படுத்தப்பட்டது.

இந்திய சட்டங்கள் இரண்டு வகை
 கிரிமினல் சட்டம் குற்றவியல் சட்டம்
சிவில் சட்டம்     - உரிமையியல் சட்டம்

இந்திய சுதந்திரம் பெற்ற பின் 1949 நவம்பர் 26 ல் அரசியல் சாசனம் இயற்றி அதில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அரசியல் சாசனம் விதி எண் 26 ன் படி இந்தியர்கள் அவரவர் விரும்பிய மதத்தின்படி வாழலாம் என்கிறது. மதச்சார்பற்ற இந்தியாவில், குற்றவியல் சட்டம் எல்லா மதத்தவருக்கும் பொதுவானது.

சிவில் உரிமையியல் சட்டத்தை பொருத்தவரை அனைத்து மதத்தவரும் அவரவர் சார்ந்த மதக் கோட்பாட்டின்படி செயல்படலாம்.

இதில் திருமணம், விவகாரத்து, ஜீவனாம்சம், உயில், சொத்துப்பரிவினை , மஹர் ( திருமணம் நன்கொடை), அறக்கட்டளை சொத்து, வளர்ப்பு பிள்ளை, அன்பளிப்பு, வக்ஃப், போன்ற சில விஷயங்கள் மட்டும் அவரவர் சார்ந்த மதத்தின் தனியார் சட்டத்தின் படி  செயல்பட அரசியல் சாசனமே உரிமை வழங்கியுள்ளது. விதி எண் 26 ல் இதன்படி இந்தியாவில் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்திற்கு இந்திய சட்ட வடிவு தான் முஸ்லிம் தனியார் சட்டம் அல்குர்ஆன் ஹதீஸ் இஜ்மா, மற்றும் கியாஸ் என்று ஷரிஅத்தின் அடிப்படை மூலாதாரங்களிலிருந்து ஆய்வு செய்து பெறப்பட்ட சட்டங்களை கொண்ட நான்கு மத்ஹபுகளில் முகலாயர்கள் பின்பற்றி அபூஹனீபா (ரஹ்) அவர்களின் மத்ஹபின் படி எழுதப்பட்ட சட்ட நூல்களான ஹிதாயா, பதாவா ஆலம்கீரி போன்ற முக்கிய கிதாப்களை மையப்படுத்தி வரையப்பட்டதே முஸ்லிம் தனியார் சட்டம்.

முஸ்லிம் தனியார் சட்டத்தை பொருத்தவரையில் அல்லாஹ்வின் சட்டமே எல்லா காலமும் ஒரு முஸ்லிம் அமல்படுத்தவேண்டும் என்பது அல்லாஹ்வின் உறுதியான கட்டளையாகும்.அதை மாற்றவோ,திருத்தவோ, யாருக்கும் அருகதை கிடையாது.அதை மீறி அதில் கை வைத்தால்,அல்லது அதை வைக்க நினைத்தால் முஸ்லிம்கள் உயிரை கொடுத்தேனும் அதை மீட்பார்கள்.
இதை தான் ஷாபானு முதல் இம்ரானா வரை உலகம் கண்டது.

முதலில் விவாகரத்து போன்ற விஷயங்களில் இஸ்லாம் கனவனுக்கு அதிகாரம் வழங்கியிருப்பது உண்மைதான்.அதேசமயம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று உடனடியாக தலாக்கை பயன்படுத்துவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
இஸ்லாத்தை பொருத்தவரையில் தலாக் என்பது உயிரை காப்பாற்றும் இறுதி கட்ட முயற்சியாகும்.ஒரு சக்கரை நோயாளி தன் உயிரை காப்பாற்ற காலை எடுப்பதுபோல, மனதளவில் ஒத்துவராமல் கசந்துப்போய்விட்ட குடும்ப வாழ்க்கையில் ஆணிடமிருந்து பெண்ணுக்கு பெற்றுத்தரும் உரிமையாகும். ஒருவகையில் இதையும் கூட இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியிருக்கும் உரிமையாகவே பார்க்கப்படவேண்டும்.

வாழ்வில் விவாகரத்தை தவிர்ப்பதற்கான அத்துனை வழிமுறைகளையும் இஸ்லாம் கையாள்கிறது என்பதை இஸ்லாமிய குடும்ப
வியல் சட்டங்களை ஆய்வு செய்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

இஸ்லாமிய இல்லங்களில் மட்டும் தான் விவாகரத்து மிக மிக  குறைவாக நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது.,காரணம் இஸ்லாம் அதற்காக வகுத்திருக்கிற கடுமையான சட்டங்கள் தான்.
தலாக் ஷைத்தானின் மிகப்பெரும் ஆயுதமாகும்.
அதைமுறையின்றி  கையில் எடுப்பவன் அல்லாஹ்வின் சோதனைக்குள்ளாக்கப்படுவான் மாத்திரமல்ல அல்லாஹ்வின் சாபத்திற்குறியவன் என்று மார்க்கம் சொல்கிறது.

தேவையின்றி,அவசியமின்றி தன் கணவனிடம் தலாக் கேட்கும் ஒரு பெண் சுவனத்தின் வாடையை கூட நுகரமாட்டாள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் அர்ஷை நடுங்கச்செய்யும் மாபெரும் பாவமாக தலாக்கை இஸ்லாம் போதிக்கிறது.

أخرج الأمام مسلم في صحيحه عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ  صلى الله عليه وسلم : ((إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً  يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ قَالَ الْأَعْمَشُ أُرَاهُ قَالَ فَيَلْتَزِمُهُ

இப்லீஸ் ஒவ்வொரு நாளும் தன் சிம்மாசனத்தை கடலில் அமைத்து, தன் படைகளை மக்களை வழிகெடுக்க அனுப்பி வைக்கிறான்.

அவனின் படைகள் படைகள் அவனிடம் திரும்பி வந்து தான் வழிகெடுத்ததை சொல்லிக்கொண்
டிருக்கும் போது  அவர்களில் ஒரு ஷைத்தான் வந்து-
நான் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினையை உண்டு பன்னிவிட்டேன் என்றதும், அவனை அழைத்து தன் பக்கத்தில் இப்லீஸ் வைத்துக்கொள்வான் என ஹதீஸில் வருகிறது.

இஸ்லாம் கூறும் அறிவுரைகள்.

பார்வையை மாற்றிப்பாருங்கள்.

உங்கள் துணைவியரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு குணம் சரியில்லாத போது சோர்ந்துபோகாமல், அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களின் பக்கம் உங்களின் கவனத்தை திருப்புங்கள் என்று கூறுகிறது..  
நூறு சதவீதம் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாகுவது சுவனத்துப்பெண்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.
அழகு இல்லை,அறிவு இருக்கலாம்.அன்பு இருக்கலாம்.உங்களை புரிந்து நடக்கலாம்.
பணம் இல்லை.ஆனால் உங்களின் மீது பாசம் இருக்கலாம்.நற்குணம் இருக்கலாம்.பணிவு இருக்கலாம்.

فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا ﴾ [النساء: 19
நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்

لاَ يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا، رَضِيَ مِنْهَا آخَرَ" مسلم
ஒரு முஃமினான ஆண் ஒரு முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒருகுணம் வெறுக்கும்படியிருந்தால் இன்னொரு குணம் நல்ல குணம் இருக்கும் அதை கொண்டு திருப்திபட்டுக்கொள்ளுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

نَّ رَجُلًا جَاءَ إلَى عُمَرَ يَشْكُو إلَيْهِ خُلُقَ زَوْجَتِهِ فَوَقَفَ بِبَابِهِ يَنْتَظِرُهُ فَسَمِعَ امْرَأَتَهُ تَسْتَطِيلُ عَلَيْهِ بِلِسَانِهَا وَهُوَ سَاكِتٌ لَا يَرُدُّ عَلَيْهَا فَانْصَرَفَ الرَّجُلُ قَائِلًا إذَا كَانَ هَذَا حَالَ أَمِيرِ الْمُؤْمِنِينَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَكَيْفَ حَالِي فَخَرَجَ عُمَرُ فَرَآهُ مُوَلِّيًا فَنَادَاهُ مَا حَاجَتُك يَا أَخِي فَقَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَشْكُو إلَيْك خُلُقَ زَوْجَتِي وَاسْتِطَالَتَهَا عَلَيَّ فَسَمِعْتُ زَوْجَتَكَ كَذَلِكَ فَرَجَعْت وَقُلْت إذَا كَانَ هَذَا حَالَ أَمِيرِ الْمُؤْمِنِينَ مَعَ زَوْجَتِهِ فَكَيْفَ حَالِي فَقَالَ لَهُ عُمَرُ إنَّمَا تَحَمَّلْتُهَا لِحُقُوقٍ لَهَا عَلَيَّ إنَّهَا طَبَّاخَةٌ لِطَعَامِي خَبَّازَةٌ لِخُبْزِي غَسَّالَةٌ لِثِيَابِي رَضَّاعَةٌ لِوَلَدِي وَلَيْسَ ذَلِكَ بِوَاجِبٍ عَلَيْهَا وَيَسْكُنُ قَلْبِي بِهَا عَنْ الْحَرَامِ فَأَنَا أَتَحَمَّلُهَا لِذَلِكَ فَقَالَ الرَّجُلُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ وَكَذَلِكَ زَوْجَتِي قَالَ فَتَحَمَّلْهَا يَا أَخِي فَإِنَّمَا هِيَ مُدَّةٌ يَسِيرَةٌ 

ஹழ்ரத் உமர் ரலி அவர்களிடம் ஒரு மனிதர் தன் மனைவியின் தீய குணத்  தை முறையிட வந்து ஜனாதிபதி உமர் ரலி அவர்களின் வாசலில் காத்து நின்றார்.அப்போது உள்ளே உமர் ரலி அவர்களின் மனைவி உமர் ரலி அவர்களை சப்தமிட்டு கடும் வார்த்தையால் பேசிக்கொண்டி
ருந்ததை செவியுற்று திடுக்கிட்டுப்போனார்.
ஜனாதிபதி நிலையே இப்படி என்றால் நாம் அவரிடம் முறையிட்டு என்ன பயன்? என்று எண்ணியவராக இடத்தை காலி செய்தார்.
அப்போது எதார்த்தமாக வெளியே வந்த உமர் ரலி அவர்களிடம் என்ன விஷயம்? என விசாரித்தார்கள்.
அவர் தான் வந்த நோக்கத்தயும் இப்போது திரும்பிச்செல்லும் காரணத்தையும் கூறியபோது உமர் ரலி அவர்கள் தன்னிலை விளக்கம் தந்தார்கள்.
என் மனைவியின் கடும் சொல்லை நான் தாங்கிக்கொள்கிறேன் ஏன் தேரியுமா? எனக்காக அவள் சமையல்காரியாக தன்னை மாற்றிக்கொள்கிறா ள்.என் ஆடைகளை துவைப்பதில் தன்னை வண்ணாத்தியாக மாற்றிக்கொள்கி  றாள்.என் குழந்தைக்கு தன் இரத்த்த்தை பாலாக கொடுக்கிறாள்.நான் ஹராமான வழியில் சென்றுவிடாமல் என்னை காப்பாற்றுகிறாள்.எனக்காக அவள் இவ்வளவு தியாகம் செய்யும்போது அவளுக்காக நான் ஏன் இந்த சின்ன சொல்லை தாங்க்க்கூடாது?என்றார்கள்.


பொருமையை கடைபிடியுங்கள்.

ஒரு முஸ்லிம் தன் வாழ்வின் வெற்றியும் நற்பெயரும் குடும்பவாழ்வை எப்படி நடத்துகிறோம் என்பதை பொருத்தே அமைகிறது.
உங்களை நல்லவர் என்று உங்களின் மனைவி சொன்னால் மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
வணக்கங்களை விடவும் வாழ்க்கைக்கு அதிகபட்ச பொருமை அவசியமாகும்.
ஆண் பெண்ணுக்கான இந்த உறவு காலத்தை கடந்த அஸ்லிய்யான உலகில் ஆரம்பமானது.இந்த உறவின் முடிவு காலத்தை கடந்த அபதிய்யான சுவனத்தில் முடியக்கூடியது.
அதற்காக உலகில் நடக்கும் இந்த ஒப்பந்தம் பற்றி அல்குர்ஆன் உறுதியான ஒப்பந்தம் என்று கூறுகிறது.அதனால்தான் நம்முடைய ஸாலிஹீன்களான  நல்லோர்கள் ஒத்துவராத குடும்ப வாழ்வையும் கூட அல்லாஹ்வுக்காக பொருத்துக்கொண்டு வாழ்ந்தார்கள்.

وقال ابن الجوزي: "شكا لي رجل من بغضه لزوجته ثم قال: ما أقدر على فراقها لأمور، منها كثرة دينها علي وصبري قليل

என் மனைவியின் மீது எனக்கு கடுமையான வெறுப்புண்டு.ஆனால் அதற்காக என் மனைவியை பிரிய என்னால் முடியாது,காரணம் என்னைவிடவும் அவள் தீன் பற்றுள்ளவள்.எனக்கு பொருமை மிகவும் குறைவாக இருக்கிறது என்று ஒருவர் தன்னிடம் சொன்னதாக இப்னு ஜவ்ஸி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قول ابن القيم رحمه الله: "تزوج رجل بامرأة، فلما دخلت عليه رأى بها الجدري، فقال: اشتكيتُ عيني، ثم قال: عميتُ، فبعد عشرين سنة، ماتت ولم تعلم أنه بصير (أعمى)، فقيل له في ذلك، فقال: كرهت أن يحزنها رؤيتي لما بها. فقيل له: سبقت الفتيان

நான் திருமணம் செய்த என் மனைவியின் உடலில் அம்மநோயின் தழும்புகள் இருந்தன..அதை நான் பார்த்தபோது என்னை நான் பார்வைதெரியாத
வனாக அவளுக்கு காட்டிக்கொண்டேன்.
நான் என் மனைவியுடன் இருபது ஆண்டுகாலம் குடும்பம் நடத்தினேன், அதற்குப்பின்னால் அவர்கள் மரணித்துவிட்டார்கள்.
என் மனைவி உயிருடன் வாழ்ந்தகாலம் வரை எனக்கு பார்வை தெரியும் என்பது அவளுக்கு தெரியாது.ஏனெனில் அவளின் உடலில் இருக்கும் இந்த நோயை நான் பார்த்தேன் என்பது தெரிந்தால் கவலைப்படுவாள் என்று அந்த மனிதர் கூறியதாக இப்னுல்கைய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிரார்கள்.

ذكر أحد الشيوخ المتأخرين قال: "إن زوجتي هذه مضى على زواجي منها أربعون سنة، وما رأيت يوماً سارَّاً، وإنني من اليوم الأول من دخولي بها، عرفت أنها لا تصلح لي بحال، ولكنها كانت ابنة عمي، وأيقنت أن أحداً لا يمكن أن يحتملها، فصبرت، واحتسبت، وأكرمني الله منها بأولاد بررة صالحين

ஒரு பெரியவர் கூறுகிறார்.
நான் என் மனைவியுடன் நாற்பது வருடம் குடும்பம் நடத்தினேன்.ஆனால் ஒரு நாள் கூட சந்தோசமாக வாழ்ந்ததில்லை.அல்லாஹ்வுக்காக நான் பொருமையாக வாழ்ந்தேன்.அதன் பிரதிபலனாக ஸாலிஹான மக்களை அப்பெண்மூலம் அல்லாஹ் எனக்கு தந்தான்.


وابتلي أحد الصالحين بامرأة ناشز، لم يعرف معها إلا النكد والكدر، فصبر عليها ثلاثين سنة، فقيل له: "ما ضرك لو طلقتها؟". قال: "أخشى إن طلقتها أن يبتلى بها غيري فتؤذيَه"

ஒரு குணம்கெட்ட பெண்ணுடன் முப்பது ஆண்டு வாழ்ந்த ஒரு பெரியவரிடம் இப்படி சிரமத்துடன் வாழவேண்டுமா?தலாக் சொல்லி விடலாமே?என கேட்டபோது, நான் தலாக் சொல்லி இப்பெண்ணை வேரொருவர் திருமணம் செய்து அவரும் இப்பெண்ணால் துன்பப்படக்கூடாதென்று நான் பொருமையை கடைபிடிக்கிறேன் என்றார்கள்.
குடும்ப வாழ்க்கை கசந்து ஒரு கட்டத்தில் வேறு வழியில்லை எனும் நிலையில் தலாக் தான் தீர்வு என்ற இறுதிநிலையில் கனவனுக்கு அந்த அதிகாரத்தை வழங்குகிறது.
நிக்காஹ்வை ஏற்றுக் கொண்டவனே தான் அதை விடுவிக்கவும் வேண்டும் என்பது தானே அறிவார்ந்த முறை அதுவும் எடுத்த எடுப்பில் அல்ல. விவாகரத்துக்கு முன்பு இஸ்லாம் நான்கு முறைகளை கூறுகிறது.

1 மனைவிக்கு உபதேசம் செய்ய வேண்டும்.
2.படுக்கையறையை விட்டும் பிரித்து வைக்க வேண்டும்
3.காயப்படுத்தாமல் முகம் அல்லாத பகுதியில் லேசாக அடிக்க வேண்டும்
4 சமாதானப் பேச்சுவார்த்தை இரு குடும்பத்தார்கள் மத்தியில் மூலம் நடத்தி சுமூக தீர்வு காண்பது

இந்த நான்கு முறைகளை சுமூகம் ஏற்படாவிட்டால் மட்டுமே விவாகரத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது அதுவும் முதலாவதாக மனைவி மாதவிடாய் சுத்தமாகி அவனுடன் உறவு கொள்ளாமல் ஒரு தலாக் மட்டும் விட வேண்டும் இத்தா முடிவடைவதற்குள் மீட்டி விட வேண்டும்.

தலாக்கின் வகைகள்
1.     அஹ்ஸன் மிகச் சிறந்த முறை
2.     ஹஸன் சிறந்த முறை
3.     பித்அத் நூதன முறை
 அஹ்ஸன் என்றால் சிறந்த முறை என்பது பொருள் மனைவி மாதவிடாய் வந்து சுத்தமான பின்பு அவளுடன் உறவு கொள்ளாத நிலையில் ஒரு தலாக் கூறி அவளை விவாகரத்து செய்து விடுவதாகும்.
ஹஸன் என்றாலர் சிறந்த முறை என்பது பொருள். இது உடலுறவு கொள்ளப்பட்ட மனைவியை ஒவ்வொரு மாதவிடாய்க்கும் பிறகும் சுத்தம் பெற்றதும் ஒவ்வொரு தலாக்காக மூன்று மாதவிடாய்க்கு மூன்று தலாக் கூறுவதாகும்.

பித்அத் என்றால் நூதன முறை என்பது அதன் பொருள்.ஒரே சமயத்தில் ஒரே தடவையில் மனைவியை மூன்று தலாக் விட்டு விடுதாகும். இவ்வாறு கூறுபவர் குற்றவாளி. எனினும் தலாக் நிகழும்.




2 comments:

  1. நல்ல பதில் பதுருக்கு சாட்டை அடி இனியாவது சமூக விரோதிகள் திருந்தட்டும் .... புதுகை ஜலாஹுதீன் யூசுபி

    ReplyDelete
  2. இதுபோன்ற.அறிவுஇல்லாதஜிவிற்க்கு.உங்களைபோன்றஆலிம்கலின்சேவைரொம்பவே.தேவை

    ReplyDelete