அல்லாஹ்வின் படைப்புக்கள் அனைத்திலும்
ஏற்றத்தாழ்வுகள் உண்டு.அந்த ஏற்றத்
தாழ்வுகள்தான்
படைப்புக்களுக்கிடையில் சமன் செய்கிறது.அல்லாஹ் தன் படைப்புக்க
ளுக்கிடையில் அமைத்த இந்த
ஏற்றத்தாழ்வுகள் எனும் விதிக்கோட்பாட்டிலிருந்து எதுவும் தப்பாது.
வானவர்கள்,தூதர்கள்,நபித்தோழர்கள்,அவ்லியாக்கள் இவர்களில் எல்லோரும் அல்லாஹ்விடம் ஒரே அந்தஸ்தை
பெற்றவர்களல்ல.
மலக்குமார்களுக்கிடையிலும் பெரிய
வித்தியா
சங்கள் இருப்பதாக அல்லாஹ் தன் வான்மறையில் கூறுகிறான்.
اللَّهُ
يَصْطَفِي مِنَ الْمَلَائِكَةِ رُسُلاً وَمِنَ النَّاسِ إِنَّ اللَّهَ سَمِيعٌ
بَصِيرٌ } [ الحج75 ] .
அல்லாஹ் வானவர்களிலிருந்தும்
மனிதர்களிலிருந்தும் தூதர்களை அவனே தேர்வுசெய்கிறான். என்று கூறுகிறான்.
மலக்குமார்கள் அத்தனைபேரும்
பரிசுத்தமானவர்கள் தான்,எனினும் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களுக்கு அல்லாஹ்விடம்
இருக்கும் நெருக்கத்தை வேறுஎவரும் பெறவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம்.
இறைவனால் தூதர்களாக அனுப்பப்பட்ட
அத்தனை நபிமார்களும் பாவமன்னிப்பு பெற்றவர்கள்தான், எனினும் நபி ஸல் அவர்களின்
அந்தஸ்தை வேறுஎவரும் கனவில்கூட நினைத்துப்பார்க்க இயலாது என்பதை நாம் அறிவோம்.
இவ்வாறே ஐங்கால தொழுகைகளில் அதிகாலை
தொழுகையான பஜ்ர் தொழுகைக்கு அல்லாஹ்விடம் இருக்கும் மரியாதையும் கண்ணியமும் வேறு
எந்த தொழுகைக்கும் இல்லை,காரணம் வணக்கங்களில் நாம் ஏற்றுக்கொள்கிற சிரமங்கள்
அளவுக்கு கூலிகிடைக்கும் என்பது அல்லாஹ்வின் நியதியாகும்.
அன்னை ஆயிஷா ரலி அவர்களை நோக்கி நபி ஸல்
அவர்கள் கூறிய வார்த்தைகள் இங்கு சிந்திக்கத்தக்கதாகும்.
قال النبي صلى الله عليه وسلم لعائشة رضي الله عنها : ( إن لك من
الأجر على قدر
نصبك ونفقتك ) رواه الحاكم
உன் சிறமத்தின் அளவே உனக்கு கூலி கிடைக்கும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
பொதுவாக தொழுகை ஒரு முஃமினின் ஈமானிய
சாட்சியாகும்.நீங்கள் பள்ளிவாசலில் வழமையாக ஒருவரை கண்டால் அவரின் ஈமானுக்கு
சாட்சியாயிருங்கள் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.
ஈமானுக்கும் இறைமறுப்புக்கும் இடையில்
வேறுபாடு தொழுகை மூலமே பார்க்கப்படுகிறது.காரணம் அது இந்த மார்க்கத்தின் அசைக்க
முடியா தூனாகும்.
முதலாவதாக கடமையாக்கப்பட்டது தொழுகை.முதலாவதாக
உயர்த்தப்படும் அமலும் தொழுகையே,அவ்வாறே நாளை மறுமையில் முதல்விசாரணையும்
தொழுகையைபற்றியே என ஸல் அவர்கள் கூறினார்கள்.
பயணத்திலும் போர்களத்திலும் தொழுகையின்
முறைகள் மாறுபடுமே தவிர தொழுகை தவிர்க்கப்படாது.அது இந்த உம்மத்தின்
விலைமதிப்பில்லா செல்வமாகும்.அதனால் தான் அல்லாஹ்வுக்கும் அவனின்
அன்புத்தூதருக்கும் இடையில் யாருமின்றி நேரடியாக மிஃராஜில் தொழுகை வழங்கப்பட்டது.
சுக துக்கங்களில்,வெற்றி
தோல்விகளில்,ஏற்ற இறக்கங்களில் வாழ்வின் அத்தனை நொடியிலும் ஒரு உற்ற நண்பனைப்போல
ஒரு முஃமினின் வாழ்வில் தொழுகைக்கு இடமுண்டு.
كان رسول الله
صلى الله عليه وسلم إذا أهمه أمر قام إلى الصلاة لأن الله يقول ( واستعينوا بالصبر
والصلاة )
நபி ஸல் அவர்களுக்கு கவலைதரும் விஷயம்
எதுவும் நடந்துவிட்டால் உடனே தொழுகையின் பக்கம் தங்களின் கவனத்தை திருப்புவார்கள்.ஏனெனில்
பொருமையை கொண்டும்,தொழுகையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்று அல்லாஹ்
கூறுகிறான்.
நபி ஸல் அவர்கள் தங்களின் வாழ்நாளின்
இறுதிமூச்சை எண்ணிக்கொண்டிருக்கும்போது
தொழுகையின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.
தொழுகையில் நிற்கிறபோது இஸ்லாமிய
எதிரியால் கொலைசெய்யப்பட்டு மயங்கி விழுந்த உமர் ரலி அவர்கள் மயக்கம் தெளிந்த
போது-தொழுகையின் நேரம் முடிந்துவிட்டதா? என்று கேட்டார்களாம்.
தொழுகையில் பேணுதல் இல்லாத ஒரு
முஸ்லிமால் எதையும் சரியாக செய்ய முடியாது என்பது உமர் ரலி அவர்களின்
அபிப்ராயமாகும்.அதனால் தான் தன் ஆட்சியில் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கான முதல்
தகுதியாக அவர் தொழுகையில் பேணுதல் உள்ளவராக இருக்கவேண்டும் என்று கடைபி
டித்துவந்தார்கள்.
ஸாலிஹீன்களான நல்லோர்கள்
தொழுகையில் கடைபிடித்த பேனுதல்:
عن برد مولى سعيد
بن المسيب قال : ما نودي بالصلاة منذ أربعين سنة إلا وسعيد في
المسجد .
நாற்பதாண்டுகளாக பாங்கு
சொல்லப்படும்போது இமாம் ஸயீத் இப்னுல் முஸய்யப் ரஹ் அவர்கள் பள்ளிவாசலில்
இருப்பார்கள்.
كان الأعمش قريباً
من سبعين سنة لم تفته التكبيرة الأولى
இமாம் அஃமஷ் ரஹ் அவர்கள் ஏறத்தாள
எழுபதாண்டு காலமாக முதல் தக்பீரை தவறவிட்டதில்லை.
وروي عن أحد السلف
أنه كان به وجع الخاصرة ، فكان إذا أصابه أقعده عن الحركة ، فكان إذا نودي بالصلاة
يحمل على ظهر رجل ، فقيل له : لو خففت على نفسك ؟ قال : إذا سمعتم حي على الصلاة ،
ولم تروني في الصف ، فاطلبوني في المقبرة
.
நம் முன்னோர்களில் ஒருவர் கடுமையான
இடுப்பு வலியால் அவதிப்பட்டார். அந்த வலி வரும்போது அவரால் அசையக்கூட
முடியாது.இந்நிலையில் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டுவிட்டால் யாராவது அவரை
சுமந்து சென்று பள்ளியில் அமரவைப்பார்கள்.
இவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டுமா?என
அவரிடம் கேட்கப்பட்ட போது-ஹய்ய அலஸ்ஸலாஹ் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டு
தொழுகையின் ஸஃப்பில் என்னை காணாவிட்டால் என்னை கப்ரில் தேடுங்கள் என்றார்கள்.
وسمع عامر بن عبد
الله بن الزبير المؤذن وهو يجود بنفسه فقال : خذوا بيدي ، فقيل
: إنك عليل ، قال : أسمع داعي الله فلا أجيبه ؟!
فأخذوا بيده فدخل مع الإمام في المغرب
، فركع ركعة ثم مات
ஆமிர் இப்னு அப்துல்லாஹ் ரஹ் அவர்கள்
கடுமையான நோயில் பீடிக்கப்பட்டிருந்த போது தொழுகைக்காக தன் கரம்பிடித்து
அழைத்துச்
செல்லச்சொன்னார்கள்.
நீங்கள் கடுமையான நோயில் அவதிப்படு
கிறீர்கள்.இந்நிலையில்
பள்ளிக்கு செல்ல வேண்டுமா?என்றபோது-
அல்லாஹ்வின் அழைப்பாளரின் அழைப்பை
கேட்டும் என்னை பதில் கூறாமல் இருக்கச்சொல்கிறீர்களா?என்று கேட்டார்கள்.
உடனே அவரின் நண்பர்கள் அவர்
கரம்பிடித்து மங்ரிப் தொழுகைக்கு அழைத்து வந்தபோது இமாமுடன் சேர்ந்துகொண்டார்.
அத்தொழுகையிலேயே அவரின் உயிர்
பிரிந்தது.
தொழுகை விஷயத்தில் சுலைமான் அலை அவர்களின் பேனுதல்
قال تعالى : {
فَطَفِقَ مَسْحاً بالسوق والأعناق } أي فجعل سليمان عليه السلام يمسح سوقها وأعناقها
، قال الأكثرون معناه أنه مسح السيف بسوقها وأعناقها أي قطعها ، قالوا إنه عليه السلام
لما فاتته صلاة العصر بسبب اشتغاله بالنظر إلى تلك الخيل استردها
وعقر سوقها وأعناقها
تقرباً إلى الله تعالى
நபி சுலைமான் அலை அவர்கள் ஒருநாள் தன்
படையை பார்வையிடும்போது அதில் அணிவகுத்துநின்ற குதிரைகளின் காட்சி அவர்களை கவர்ந்திழுத்தது. அந்த காட்சிகளை இரசித்துக்கொண்டிருந்ததால் அஸர்
தொழுகை களாவாகிப்போனது.
தனக்கு தொழுகை களாவாகிப்போனதை
பொருத்துக்கொள்ள முடியாத நபி சுலைமான் அலை அவர்கள் அத்தனை குதிரைகளின் க்கலையும் கழுத்தையும் துண்டித்து அல்லாஹ்வுக்காக
அர்ப்பணித்தார்கள் என அல்குர்ஆன் கூறுகிறது.
عن إبراهيم التيمي
قال: كانت الخيل التي شغلت سليمان، عليه الصلاة والسلام عشرين
ألف فرس، فعقرها
(இப்னு கஸீர்)
அவர்கள் பலியிட்ட குதிரைகள் இருபதாயிரம்
என இப்ராஹீம் அத்தைமி அவர்கள் கூறுகிறார்கள்.
عَنْ شُتَيْرِ بْنِ شَكَلٍ
الْعَبْسِيِّ قَالَ سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ
لَمَّا كَانَ يَوْمُ الْأَحْزَابِ
صَلَّيْنَا الْعَصْرَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فَقَالَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَغَلُونَا عَنْ الصَّلَاةِ الْوُسْطَى صَلَاةِ
الْعَصْرِ مَلَأَ اللَّهُ قُبُورَهُمْ وَأَجْوَافَهُمْ نَارًا
கந்தக் போரில் நாங்கள் அஸர் தொழுகையை-
மக்ரிபுக்கும் இஷாவுக்கு இடைப்பட்ட நேரத்தில் தொழுதோம்,தொழுகையை
முடித்த நபி ஸல் அவர்கள்,அஸர் தொழுகையை களாவாக்க வைத்துவிட்டார்கள்.அல்லாஹ் அவர்களின்
கப்ர்களையும்,வயிறுகளையும் நெருப்பால் நிறப்புவானாக என நபி ஸல் அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்:அலி ரலி.அஹ்மத்-1182
عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَفَلَ مِنْ غَزْوَةِ خَيْبَرَ سَارَ لَيْلَهُ حَتَّى
إِذَا أَدْرَكَهُ الْكَرَى عَرَّسَ وَقَالَ لِبِلَالٍ اكْلَأْ لَنَا اللَّيْلَ
فَصَلَّى بِلَالٌ مَا قُدِّرَ لَهُ وَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ فَلَمَّا تَقَارَبَ الْفَجْرُ اسْتَنَدَ بِلَالٌ
إِلَى رَاحِلَتِهِ مُوَاجِهَ الْفَجْرِ فَغَلَبَتْ بِلَالًا عَيْنَاهُ وَهُوَ
مُسْتَنِدٌ إِلَى رَاحِلَتِهِ فَلَمْ يَسْتَيْقِظْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَلَا بِلَالٌ وَلَا أَحَدٌ مِنْ أَصْحَابِهِ حَتَّى
ضَرَبَتْهُمْ الشَّمْسُ فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَوَّلَهُمْ اسْتِيقَاظًا فَفَزِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيْ بِلَالُ فَقَالَ بِلَالٌ أَخَذَ بِنَفْسِي
الَّذِي أَخَذَ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ بِنَفْسِكَ قَالَ
اقْتَادُوا فَاقْتَادُوا رَوَاحِلَهُمْ شَيْئًا ثُمَّ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَ بِلَالًا فَأَقَامَ الصَّلَاةَ
فَصَلَّى بِهِمْ الصُّبْحَ فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ مَنْ نَسِيَ
الصَّلَاةَ فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ قَالَ
{ أَقِمْ
الصَّلَاةَ لِذِكْرِي
நபி ஸல் அவர்கள் கைபர் போரிலிருந்து
திரும்பும்போது தூக்கம் மிகைத்த காரணத்தால் ஓரிடத்தில் இரவு தங்க முடிவு செய்தார்கள்.அப்போது நபி ஸல்
அவர்கள் ஹழ்ரத் பிலால் ரலி அவர்களை அழைத்து இரவில் நீங்கள் பாதுகாப்பு பொறுப்பை
எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
ஹழ்ரத் பிலால் ரலி அவர்கள் தொழுகையில்
ஈடுபட்டார்கள்.நபி ஸல் அவர்களும்,
நபித்தோழர்களும் தூங்கிவிட்டனர்.
பஜ்ர் நேரம் நெருங்கியபோது பிலால் ரலி
அவர்களுக்கு தூக்கம் மிகைக்கவே தன் வாகனத்தில் சாய்ந்தவர்களாக தூங்கிவிட்டார்கள்.
சூரியன் சுட்டெரிக்கும்வரை நபியும்,
நபித்தோழர்களும்,பிலால் ரலி அவர்களும் நன்றாக தூங்கிவிட்டனர்.
முதலாவதாக திடுக்கிட்டு எழுந்த நபி ஸல்
அவர்கள்,பிலாலே!என சப்தமிட்டார்கள்.திடுக்கிட்டு எழுந்த பிலால் ரலி
அவர்கள்-அல்லாஹ்வின் தூதரே!உங்களை மிகைத்த தூக்கம் என்னையும் மிகைத்து விட்டது
என்றார்கள்.அப்போது நபி ஸல் அவர்கள் தம் தோழர்களை நோக்கி,இந்த
இடத்தை விட்டு வாகனத்தை கிளப்புங்கள் என்று உத்தரவிட்டார்கள்.
பின்பு சிறிதுதூரம் சென்று நபி ஸல் அவர்கள்
ஒழுச்செய்து,பிலால் ரலி அவர்களை பாங்கு சொல்ல சொன்னார்கள்.பின்பு பஜ்ர் தொழுகையை
ஜமாத்துடன் களாச்செய்தார்கள்.தொழுகையை முடித்த நபியவர்கள்-
யாரேனும் மறதியின் காரணமாக (உரிய
நேரத்தில்) தொழத் தவறிவிட்டால் அவனுக்கு நினைவு வரும்போது, (விழித்தவுடன்)
அதைத் தொழட்டும்!” என்று கூறினார்கள்.
அபூஹுரைரா ரலி :முஸ்லிம்:1097
நபி இப்ராஹீம் அலை அவர்கள் தொழுகைக்காக
அல்லாஹ்விடம் இப்படி துஆச்செய்தார்கள்
رَبِّ اجْعَلْنِي
مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக
என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய
பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"
அல்லாஹுத்தஆலா இந்த துஆவை ஒப்புக்கொண்டான்
என்பதை இன்னொரு வசனம் உணர்த்துகிறது.
وَكَانَ يَأْمُرُ
أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا
அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக்
கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார் தம் இறைவனிடத்தில்
மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
பஜ்ரும் பரக்கத்தும்
ஐங்காலத்தொழுகைகளில் பஜ்ர் தொழுகை
தனிப்பெரும் அந்தஸ்தை பெறுகிறது.
1.வானவர்கள் சங்கமிக்கும் தொழுகை பஜ்ர்
إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ
مَشْهُوداً } [ الإسراء
78 ]
நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.
அதாவது மலக்குகளால் அந்த தொழுகைக்கு
சாட்சி சொல்லப்படும்.
عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : " تَجْتَمِعُ مَلاَئِكَةُ اللَّيْلِ
وَمَلاَئِكَةُ النَّهَارِ فِي صَلاَةِ الْفَجْرِ " ، ثُمَّ يَقُولُ أَبُو
هُرَيْرَةَ : فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ : { إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ
مَشْهُوداً } [ متفق عليه ]
பஜ்ர் தொழுகையில் பகல் மலக்குகளும்
இரவு மலக்குகளும் ஒன்றுசேர்கின்ற னர் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அறிவித்த
அபூஹுரைரா ரலி அவர்கள் மேல்வசனத்தை மேற்கோள்காட்டினார்கள்.
2.அல்லாஹ்வை சந்திக்கும்
அருள்கிடைக்கும்
عَنْ جَرِيرٍ بن عبد الله رضي الله عنه قَالَ : كُنَّا عِنْدَ
النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةً - يَعْنِى
الْبَدْرَ - فَقَالَ : " إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ
هَذَا الْقَمَرَ لاَ تُضَامُّونَ _ تضارون _ فِي رُؤْيَتِهِ ، فَإِنِ
اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ
وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا " يعني الفجر والعصر ، ثُمَّ قَرَأَ : {
وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ } [
متفق عليه
]
ஒரு பதினான்காம் இரவில் நாங்கள் நபி
ஸல் அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம்.
அப்போது நபி ஸல் அவர்கள் –
நீங்கள் இன்றைய இரவில்
சந்திரனைப்பார்ப்பது போல நாளை மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பீர்கள்.அதற்கு நீங்கள்
முடிந்தவரை பஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளில் பேனுதலாக இருங்கள் என்று கூறினார்கள்
என ஜரீர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
3.அல்லாஹ்வின் பொருப்பில் வருவார்
مَنْ صَلَّى صَلاَةَ الصُّبْحِ فَهْوَ فِي ذِمَّةِ اللَّهِ
رواه مسلم ]
பஜ்ர் தொழுதவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை
பெற்றுவிட்டார் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
4.இரவு வணங்கிய கூலி வழங்கப்படும்
عن عُثْمَانُ بْنُ عَفَّانَ رضي الله عنه قال : سَمِعْتُ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : " مَنْ صَلَّى الْعِشَاءَ فِي
جَمَاعَةٍ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ ، وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي
جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ " [ رواه مسلم ]
.
இஷாவை ஜமாஅத்துடன் தொழுதவர் பாதி இரவு
நின்று வணங்கியவரைப் போலாவார்.எவர் பஜ்ரை
ஜமாஅத்துடன் தொழுதாரோ அவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவரைப்போலாவார்
5.வானவர்களின் துஆ கிடைக்கிறது
عَنْ علي بن أبي طالب رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم يَقُولُ : " مَنْ صَلَّى الْفَجْرَ ثُمَّ جَلَسَ فِي
مُصَلاَّهُ ، صَلَّتْ عَلَيْهِ الْمَلاَئِكَةُ ، وَصَلاَتُهُمْ عَلَيْهِ :
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، اللَّهُمَّ ارْحَمْهُ " [ رواه أحمد ]
.
யார் பஜ்ர் தொழுதுவிட்டு அந்த
இட்த்தில் சிறிதுநேரம் உட்கார்ந்திருப்பாரோ அவருக்காக மலக்குகள் பாவமன்னிப்பு
தேடுகின்றனர்.
யா அல்லாஹ் இவரை மன்னித்து இரக்கம்
காட்டுவாயாக என துஆச்செய்கின்றனர்.
6.பஜ்ரை விடுவது நயவஞ்சகர்களின்
அடையாளம்.
نْ أُبَىِّ بْنِ كَعْبٍ رضي الله عنه قَالَ : صَلَّى رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا
بِوَجْهِهِ فَقَالَ : " أَشَاهِدٌ فُلاَنٌ ؟ " فَقَالُوا لاَ ، فَقَالَ
: " أَشَاهِدٌ فُلاَنٌ " فَقَالُوا لاَ ، لِنَفَرٍ مِنَ الْمُنَافِقِينَ
لَمْ يَشْهَدُوا الصَّلاَةَ فَقَالَ : " إِنَّ هَاتَيْنِ الصَّلاَتَيْنِ _
الفجر والعشاء _ أَثْقَلُ الصَّلاَةِ عَلَى الْمُنَافِقِينَ
நபி ஸல் அவர்கள் பஜ்ர் தொழுகையை
எங்களுக்கு தொழவைத்துவிட்டு சில முனாபிக்குகளை கவனத்தில் வைத்து இவர் வந்தாரா?இவர்
வந்துள்ளாரா? என கேட்டுவிட்டு ,இவர்கள் யாவரும் வரவில்லை என்பதை புரிந்துகொண்டுச்சொன்னார்கள்.
பஜ்ரும் இஷாவும் நயவஞ்சகாலுக்கு
க்அஷ்டமான தொழுகை என்றார்கள்.
7.பரக்கத்தை பெற்றுத்தரும்.
قال صلى الله عليه وسلم \اللهم بارك لأمتي في بكورها
யா அல்லாஹ் அதிகாலையில் என்
உம்மத்திற்கு பரக்கத் செய்வாயாக என நபி ஸல் அவர்கள் துஆச்செய்தாரகள்.
قال ابن القيم \ونومة الصبح تمنع الرزق لانه وقت تقسم فيه
الأرزاق
சுபுஹ் தொழாமல் தூங்குவது ரிஸ்கை
தடுத்துவிடும்,ஏனெனில் அந்த நேரத்தில்தான் அன்றைய தினத்தின் ரிஸ்குகள் பங்கு
வைக்கப்படுகிறது என இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
மனிதா!துர்க்குறியை வெளியே தேடாதே,என்றைக்கு நீ பஜ்ர் தொழவில்லையோ அன்றைய தினம் உனக்கு துர்க்குறிதான்.
assalamu alaikkum jazakalla
ReplyDeleteEnter your comment...jazakala
ReplyDeleteAssalamu alaikum
ReplyDelete