நபிமார்களின் நம்பகத்தன்மைக்கு ஆதாரமாக அற்புதங்களை
நிகழ்த்திக்காட்டுவது உலகில் வந்த அத்துனை நபிமார்களும் செய்த ஒன்றே,ஆனாலும் நபி
ஸல் அவர்கள் தங்கள் வாழ்வில் வெளியிட்ட அற்புதங்கள் ஒவ்வொன்றும் மற்றெல்லா
அற்புதங்களை
விடவும் எல்லாவகையிலும் தனித்துவம் பெற்றதாகும்.
நபி ஸல் அவர்களது வாழ்வில் நடந்த மிகப்பெரும் அற்புத நிகழ்வாக
இஸ்ராவும் மிஃராஜும் அமைகிறது.நபி ஸல் அவர்கள் ஓர் இரவில் மக்காவில் அமைந்துள்ள
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அற்புதமாக அழைத்துச்
செல்லப்பட்டார்கள். இது “இஸ்ராஃ” என்று கூறப்படும். பின்னர் அங்கிருந்து ஏழு வானங்களையும் தாண்டி
விண்ணுலகப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப் பட்டார்கள். இது “மிஃராஜ்” என்று
கூறப்படும்.
மிஃராஜ் நிகழ்வு
கனவல்ல,நிஜம்.
மிஃராஜை ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒருசிலர்கள் அது கனவுதான்.என்று
கூறுகிறார்கள்.
மிஃராஜ் கனவல்ல என்று நிறுபிக்கும் ஆதாரங்கள் நூற்றுக்கணக்கில்
உண்டு.
1.கனவாக இருந்தால் அது ஒருபெரும் அற்புதமாக இருக்காது.காரணம் கனவில்
இதுபோன்ற நிகழ்வை கானுவது நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு கூட சாத்தியம்
தான்.ஆனால் இஸ்லாம் அதை மாபெரும் அற்புதமாக முன்வைக்கிறது.
" سبحان
الذي أسرى بعبده ليلاً من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه
من آياتنا إنه هو السميع البصير " [ الإسراء 1 ] .
“(முஹம்மதாகிய)
தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, நாம் சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம்
பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன்
தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறே
செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறுபவன் பார்ப்பவன்.” (17:1)
இங்கு இரு பயணங்கள் நடைபெற்றுள்ளது.ஒன்று இஸ்ரா.இதைப்பற்றியே
மேல்கூறிய வசனம் பேசுகிறது.இன்னொரு பயணம் மிஃராஜ். இதுகுறித்து சூரா நஜ்மின்
துவக்கத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் எங்கெல்லாம் சுப்ஹான எனும் சொல்லை
பயன்படுத்துகிறானோ அங்கெல்லாம் அல்லாஹ்வின் மாபெரும் அற்புதத்தை சொல்லப் போகிறான்
என்று புரிந்துகொள்ள வேண்டும்.
அவ்வாறே இங்கும் அந்த வார்த்தையை கூறியபின்னே இந்த
இஸ்ரா மிஃராஜ் நிகழ்வை குறித்து பேசுகிறான்.
2.அது கனவாக இருந்திருந்தால் அதை மக்கா காஃபிர்கள் இவ்வளவு கடுமையாக
மறுத்தி ருக்கமாட்டார்கள்.மற்றும் ஈமான் கொண்ட சிலர்கள் மீண்டும் முர்தத்தாகி
இருக்கமாட்டா ர்கள்.
أنه لما رجع إلى
مكة من ليلته أخبر بمسراه أم هانىء بنت أبي طالب أخت علي رضي الله عنه وأنه يريد أن
يخرج إلى قومه ويخبرهم بذلك لأنه ما أحب أن يكتم قدرة الله وما هو دليل على علو مقامه فتعلقت بردائه أم هانىء وقالت: أنشدك الله يا ابن
عم ألا تحدث بها قريشا فيكذبك من صدقك فضرب بيده على ردائه فانتزعه منها، قالت: وسطع
نور عند فؤاده كاد يخطف بصري فخررت ساجدة فلما رفعت رأسي فإذا هو قد خرج، قال: فقلت
لجاريتي نبعة وكانت حبشية: اتبعيه وانظري ماذا يقول، فلما رجعت أخبرتني أن رسول الله انتهى إلى نفر من قريش في الحطيم وفيهم مطعم بن
عدي وأبو جهل بن هشام فأخبرهم بمسراه.
ولما قص رسول الله خبر الإسراء على جمع من قريش أعظموا ذلك
الإسراء وصار بعضهم يصفق وبعضهم يضع يده على رأسه تعجبا - فلو كان الإسراء رؤيا منامية
لما كانت مستغربة ولما أحدثت تلك الضجة وكذبه المسلمون اللهم إلا من كان منهم قوي العقيدة
ثابت الإيمان - قال مطعم بن عدي: إن أمرك قبل اليوم كان أمرا يسيرا غير قولك اليوم،
هو يشهد أنك كاذب، نحن نضرب أكباد الإبل إلى بيت المقدس مصعدا شهرا ومنحدرا شهرا، أتزعم
أنك أتيته في ليلة واحدة؟ واللات والعزى لا أصدقك وما كان هذا الذي تقول قط، فقال مطعم:
يا محمد صف لنا بيت المقدس، فقال أبو بكر رضي الله عنه: صف لي يا رسول الله فإني قد
جئته، فجاءه جبريل بصورته ومثاله فجعل يقول باب منه في موضع كذا وباب منه في موضع كذا،
وأبو بكر رضي الله عنه يقول: أشهد أنك رسول الله حتى أتى على أوصافه.
وهذه هي الأحاديث الواردة في «صحيح البخاري» الخاصة بالإسراء
مشروحة في الهامش شرحا موجزا نقلا عن القسطلاني:
மிஃராஜ் பயணத்தை முடித்த நபி ஸல் அவர்கள் மக்கா திரும்பியபோது, முதலாவதாக அச்செய்தியை குறித்து அபூ தாலிப் அவர்களின் மகள் உம்முஹானீ ரலி அவர்களிடம் கூறினார்கள்.நான் அல்லாஹ்வின் வல்லமையை
மறைக்க விரும்பவில்லை,எனவே இதை மக்களிடம் சொல்லப்போகிறேன் என்றார்கள்.
அப்போது உம்முஹானீ ரலி அவர்கள் -என் சச்சாவின் மகனாரே! நீங்கள்
இதைப்பற்றி குரைஷிகளிடம் சொல்லத்தான் வேண்டுமா? உங்களை உண்மைப்படுத்திவர்கள் கூட
பொய்யாக்கிவிடுவார்களே! என்று அவர்களின் துண்டைபிடித்து தடுத்து நிறுத்தினார்கள்.
அதைப்பற்றி உம்மு ஹானீ ரலி அவர்கள்
நான் தடுத்தபோது என் பக்கம் வேகமாக திரும்பிய பெருமானாரின்
கல்பிலிருந்து ஒரு ஒளி என் பார்வையை மயக்கியது,உடனே நான் ஸஜ்தாவில் விழுந்துவிட்டேன்.
மயக்கம் தெளிந்து நான் எழுந்தபோது நாயகம் அங்கு இல்லை.
உடனே என் வேலைக்கார பெண்ணிடம், நபி ஸல் அவர்களை பின் தொடர்ந்து
செல்,அங்கு நடக்கும் செய்தியை என்னிடம் கொண்டுவா என்று கூறி அனுப்பினேன்.
குறைஷிகளின் ஒரு கூட்டம் ஹதீமில் அமர்ந்திருந்தனர்.அதில் அபூ
ஜஹ்ல்,முத்யிம் போன்ற தலைவர்களும் இருந்தனர்.
அங்கு சென்ற நபி ஸல் அவர்கள் தன் மிஃராஜ் நிகழ்வை துணிச்சலுடன்
கூறியது தான் தாமதம்.அங்கிருந்தவர்கள் திகைத்துப்போய்
விட்டனர்.
சிலர்கள் தங்களின் தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டனர்.
உண்மையிம் மிஃராஜ் ஒரு கனவாக மட்டும் இருந்திருந்தால் இதை இவ்வளவு
பெரிய விஷயமாக மக்கா காஃபிர்கள் எடுத்திருக்கமாட்டார்கள் என்பதை சிந்திக்க
வேண்டும்.
ஈமான் பழுதுபட்டவர்களெல்லாம் இதில் தடம் புரண்டுபோய்விட்டனர்.
எதிரிகளின் தலைவர்களில் ஒருவரான முத்யிம் இப்னு அதிய் நபி ஸல்
அவர்களிடம் வந்து இன்றைக்கு நீர் சொல்லியிருக்கும் இந்த விஷயம் நீர் பொய்யர்
என்பதற்கு போதுமான சாட்சியாகும்.ஏனெனில் ஒரு ஒட்டகப்பயணியால் மக்காவிலிருந்து
பைத்துல் முகத்தஸை அடைய ஒரு மாத காலம் தேவைப்படும்.ஆனால் நீர் ஒரே இரவில்
சென்றுவந்துவிட்டதாக கூறுகிறீர்.
பைத்துல் முகத்தஸைபற்றி எங்களுக்கு கூறுங்கள் என்றார்.அச்சபையில்
இருந்த அபூபக்கர் ரலி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே!நீங்கள்
சொல்லுங்கள்.எனக்கு தெரியும் நான் அங்கு சென்று வந்துள்ளேன் என்றார்கள்.
அப்போது ஜிப்ரயீல் அலை அவர்கள் அங்கு வந்து பைத்துல் முகத்தஸின்
தோற்றத்தை உயர்த்திகாட்டினார்கள்.அதைப்பார்த்த நபி ஸல் அவர்கள்அதன் கதவு,ஜன்னல்
பற்றி கூறினார்கள். நபி ஸல் அவர்கள்
சொல்லச்சொல்ல அபூபக்கர் ரலி நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான்
சாட்சி கூறுகிறேன் என்றார்கள்.
عن جابر بن عبد الله رضي الله عنهما أنه سمع رسول الله يقول: «لما كذبني قريش قمت في الحجر فجلا الله لي
بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه».
குரைஷிகள் என்னை பொய்படுத்தியபோது நான் ஹிஜ்ர் எனும் இட்த்தில்
நின்றேன். அப்போது அல்லாஹ் எனக்கு பைத்துல்முகத்தஸை காட்டினான்.நான் அதை பார்த்து
அதன் அடையாளங்களை கூறினேன் என்று நபி ஸல் அவர்கள் கூறுவதாக ஜாபிர் ரலி அவர்கள்
கூறுகிறார்கள்.
3. இந்த
பயணத்தில் ஜிப்ரயீல் அலை அவர்கள் என் கையை பிடித்துக்கொண்டு அழைத்துச்சென்றார்கள்
என தெளிவாகவே வருகிறது.
كَانَ أَبُو ذَرٍّ يُحَدِّثُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ فُرِجَ عَنْ سَقْفِ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ فَنَزَلَ جِبْرِيلُ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَفَرَجَ صَدْرِي ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ ثُمَّ جَاءَ
بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا فَأَفْرَغَهُ فِي صَدْرِي ثُمَّ
أَطْبَقَهُ ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ الدُّنْيَا
நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் முகட்டை பிரித்து ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்
அவர்கள் இறங்கினார்கள்.என் நெஞ்சை பிழந்து இருதயத்தை எடுத்து,அதை ஸம்ஸம்
நீரால் கழுகி,பின்பு ஞானமும்,ஈமானும் நிரப்பிய ஒரு தங்க கோப்பையை கொண்டுவந்து அதை என் நெஞ்சில் நிறப்பி
அதை மூடிவிட்டார்கள்.
பின்னர் என் கையை பிடித்துக்கொண்டு முதல் வானம் நோக்கி உயர்ந்துச்சென்றார்கள்.
அறிவிப்பவர்:அபூதர் ரலியல்லாஹு அன்ஹு:
புஹாரி:336
4.இந்த பயணம் கனவாக இருந்தால் இதில் நபியின் நெஞ்சு பிளக்கப்பட்ட
அடையாளம் எப்படி இருக்கும்?
عَنْ أَنَسٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
كَانَ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ فَأَتَاهُ آتٍ فَأَخَذَهُ فَشَقَّ صَدْرَهُ فَاسْتَخْرَجَ
مِنْهُ عَلَقَةً فَرَمَى بِهَا وَقَالَ هَذِهِ نَصِيبُ الشَّيْطَانِ مِنْكَ ثُمَّ غَسَلَهُ
فِي طَشْتٍ مِنْ ذَهَبٍ مِنْ مَاءِ زَمْزَمَ ثُمَّ لَأَمَهُ قَالَ أَنَسٌ فَلَقَدْ
كُنَّا نَرَى أَثَرَ الْمَخِيطِ فِي صَدْرِهِ
நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்க
ள்.அப்போது
ஒருவர் வந்தார்.நாயகத்தை பிடித்தார்.அவர்களின் நெஞ்சைப்பிழந்தார்.
அதிலிருந்து ஒரு சதைத்துண்டை எடுத்து வெளியே வீசிவிட்டு, இதுதான் உங்களை
ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகும் என்று கூறினார்.
பின்னர் தங்கக்கோப்பையில் ஸம்ஸம் நீரை கொண்டுவந்து நாயகம் ஸல் லல்லாஹு
அலைஹி அவர்களின் இருதயத்தை கழுகி அதை மீண்டும் உள்ளே வைத்து சேர்த்துவி ட்டார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் நெஞ்சில் தைக்கப்பட்ட அடையாளத்தை பார்த்தோம்
என்று இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பளர் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
அஹ்மத்:11771
5.இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வை தன் கண்ணால்
(கனவால் அல்ல) பார்த்தார்கள் என்பதில் மிகவும் உறுதியாக கூறுகிறார்கள்.
நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு அல்லாஹ் தன் நட்பை கொடுத்தான். நபி
மூஸா அலை அவர்களுக்கு அல்லாஹ் தன் கலாமை (பேச்சை) தந்தான்.நபி ஸல் அவர்களுக்கு
தன்னை பார்க்கும் நஸீபை தந்த்தில் உங்களுக்கு என்ன ஆச்சரியம் இருக்கிறது?என
கேட்கிறார்கள்.
وقال
ابن عباس في تفسير الآية: إنها رؤية عين، كما رواه البخاري
عَنْ
ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
{
وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ
إِلَّا فِتْنَةً لِلنَّاسِ }
قَالَ
هِيَ رُؤْيَا عَيْنٍ أُرِيَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
لَيْلَةَ أُسْرِيَ بِهِ
மிஃராஜின் போது) நாம் உமக்குக்காட்டிய காட்சியை மனிதர்களுக்கு சோதனையாகவே
தவிர நாம் ஆக்கவில்லை.என்ற வசனத்தின் விரிவுரையில் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள்-மிஃராஜ் இரவில் நபி ஸல் லல்லாஹு அலைஹி அவர்கள் பார்த்த காட்சி (புறக்)கண்ணால்
பார்த்ததாகும் என்று கூறுகிறார்கள்.
புகாரி.3599
உண்மையில் மிஃராஜ் படைத்தவனின் வல்லைமை மட்டுமே வெளிப்பட்ட இடமாகும்.
அதனால் தான் மிஃராஜ் பற்றி கூறும்போது தன் அடியாரை அழைத்துச்சென்றான் என்று
கூறுகிறான்.
நபி ஸல் அவர்களும் இந்த நிகழ்வைபற்றி நான் சென்றேன் என்று எங்கும்
கூற பார்க்க முடியவில்லை ,மாறாக நான் அழைத்துச்செல்லப்பட்டேன் என்று தான்
கூறுகிறார்கள்.
மிஃராஜ் இந்த உம்மத்துக்கு
சொல்லும் பாடம் நிறைய உண்டு.
முதலாவது:இஸ்லாம்
கூறும் நம்பிக்கை அறிவை மிஞ்சியது.
இஸ்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மார்க்கமல்ல, அதேசமயம் சில
விஷயங்கலில் அறிவை தாண்டி பக்தி முன்னிலைப்படுத்தப்படும்.
மிஃராஜை அறிவால் அளக்க நினைத்து, தடுமாறி ஈமானை பறிகொடுத்தவர்கள்
நிறைய உண்டு.
وعن عمرو بن شعيب عن أبيه عن جده قال : قال رسول الله -
صلى الله عليه وسلم - : أي الخلق أعجب إليكم إيمانا ؟ قالوا : الملائكة . قال :
وما لهم لا يؤمنون وهم عند ربهم ؟ قالوا : فالنبيون . قال : وما لهم لا يؤمنون
والوحي ينزل عليهم ؟ قالوا : فنحن . قال : وما لكم لا تؤمنون وأنا بين أظهركم .
قال : فقال رسول الله - صلى الله عليه وسلم - : إن أعجب الخلق إلي إيمانا لقوم
يكونون من بعدي يجدون صحفا فيها كتاب يؤمنون بما فيها .
ஈமானில் ஆச்சரியமான ஈமான் எது?என நபித்தோழர்களிடம் நபி ஸல் அவர்கள்
கேட்ட போது-வானவர்களின் ஈமான் என பதில் கூறினார்கள்.அப்போது நபி ஸல் அவர்கள்
அவர்களின் ஈமானில் என்ன ஆச்சரியம் உள்ளது,அவர்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தில்
இருக்கின்றனர்.அப்படியானால் நபிமார்களின் ஈமான் மிகவும் ஆச்சரியமான ஈமான் என்று
அடுத்து கூறினார்கள்.
அதைக்கேட்ட பூமான் நபி ஸல் அவர்கள்,நபிமார்களுக்கு நேரடியாக வஹி
இறங்கி க்கொண்டிருக்கிறது.அப்படியிருக்க அது எப்படி உயர்வான ஈமானாகும்?
அப்படியானால் உங்களின் தோழர்களான எங்களின் ஈமான் ஆச்சரியமான ஈமான்
என்று ஸஹாபாக்கள் கூறினார்கள்.அதைக்கேட்ட நபி ஸல் அவர்கள்,உங்கள் ஈமானில் என்ன
ஆச்சரியம் இருக்கிறது.நான் உங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.என்னை
நேரடியாக நீங்கள் காணுகிறீர்கள்.
இறுதியாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
படைப்புக்களில் என்னிடம் ஆச்சரியமான ஈமானுக்கு சொந்தக்கரர்கள் எனக்கு
பின்னால் வருவார்கள்.வேதத்தை கொண்டு நம்பிக்கைகொள்வார்கள்.
மறைவானதை கொண்டு நம்பிக்கை கொள்வது தான் ஈமானில் மிக உயர்ந்த நிலை
என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.அதனால் தான் அபூபக்கர் ரலி அவர்களை பற்றி நபி
ஸல் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
قال
رسول الله صلى الله عليه وسلم بقوله: {وما عرضت الإسلام على أحد إلا كانت له كبوة
إلا أبا بكر فإنه لم يتلعثم}.
நான் இஸ்லாத்தின் பக்கம் அழைப்புகொடுத்தபோது என்னை சந்தேகம் கொள்ளாத எவருமில்லை,ஆனால்
அபூபக்கரை தவிர.அவர் மட்டும் தான் எந்த சந்தேகமுமின்றி நம்பிவிட்டார்.
அதுபோல மிஃராஜ் விஷயத்தில் அவர்களின் நம்பிக்கையே அவர்களுக்கு
ஸித்தீக் எனும் பெயரை பெற்றுத்தந்தது.
فحينما
عاد النبي صلى الله عليه وسلم من رحلة الإسراء والمعراج وقص على قريش ما حدث ,
انطلق نفرٌ منهم إلى أبي بكر رضي الله عنه يسألونه عن موقفه من الخبر ، فقال لهم :
\" لئن كان قال ذلك لقد صدق \" ، فتعجّبوا وقالوا : \" أو تصدقه
أنه ذهب الليلة إلى بيت المقدس وجاء قبل أن يصبح ؟ \" ، فقال : \" نعم ؛
إني لأصدقه فيما هو أبعد من ذلك ، أصدقه بخبر السماء في غدوة أو روحة \" ،
فأطلق عليه من يومها لقب \" الصديق \" . عيون الأثر , ابن سيد الناس 471.
நபி ஸல் அவர்கள் மிஃராஜ் பயணத்தை முடித்து மக்கத்து காபிர்களிடம்
அதைப்பற்றி எடுத்துகூறியபோது அவர்களில் ஒரு கூட்டத்தினர் ஹழ்ரத் அபூபக்கர் ரலி
அவர்களிடம் சென்று, உம் தோழர் இவ்வாறு சொல்கிறார் என்றதும் கொஞ்சமும் யோசிக்காமல்
ஸித்தீக் ரலி அவர்கள் அவர் சொல்லியிருந்தால் அது உண்மையாகத்தான் இருக்கும்
என்றார்கள்.,
திகைத்துப்போன ம்க்காவாசிகள் ஒரே இரவில் பைத்துல் முகத்தஸ் சென்று
திரும்பிவிட்டதாக கூறுகிறாறே அதையுமா நம்புகிறீர்?என்றனர்.அதை கேட்ட அபூபக்கர் ரலி
அவர்கள் இதைவிடவும் பாரதூரமான விஷயத்தையும் நான் நம்பிக்கொண்டிருக்கிறே ன்.ஒவ்வொரு
நாளும் காலையிலும் மாலையிலும் வானத்திலிருந்து அவருக்கு வஹி வந்துகொண்டிருக்கிறது
என்று நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றார்கள்.
இரண்டாவது:சத்தியப்பாதையில்
சோதனைகள் வரும்போது அதில் தளராமல் உறுதியாக இருக்க வேண்டும் என்ற அழுத்தமான
பாட்த்தை நபி ஸல் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வே இந்த பயணத்தில் பின்வரும்
காட்சியை பார்த்தார்கள்.
ويتضح ذلك من المشهد الذي رآه النبي
صلى الله عليه وسلم لماشطة ابنة فرعون , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:لَمَّا كَانَ اللَّيْلَةُ الَّتِى
أُسْرِىَ بِى فِيهَا أَتَتْ عَلَىَّ رَائِحَةٌ طَيِّبَةٌ فَقُلْتُ يَا جِبْرِيلُ مَا
هَذِهِ الرَّائِحَةُ الطَّيِّبَةُ فَقَالَ هَذِهِ رَائِحَةُ مَاشِطَةِ ابْنَةِ فِرْعَوْنَ
وَأَوْلاَدِهَا. قَالَ قُلْتُ وَمَا شَأْنُهَا قَالَ بَيْنَا هِىَ تَمْشُطُ ابْنَةَ
فِرْعَوْنَ ذَاتَ يَوْمٍ إِذْ سَقَطَتِ الْمِدْرَى مِنْ يَدَيْهَا فَقَالَتْ بِسْمِ
اللَّهِ. فَقَالَتْ لَهَا ابْنَةُ فِرْعَوْنَ أَبِى قَالَتْ لاَ وَلَكِنْ رَبِّى وَرَبُّ
أَبِيكِ اللَّهُ. قَالَتْ أُخْبِرُهُ بِذَلِكَ قَالَتْ نَعَمْ. فَأَخْبَرَتْهُ فَدَعَاهَا
فَقَالَ يَا فُلاَنَةُ وَإِنَّ لَكَ رَبًّا غَيْرِى قَالَتْ نَعَمْ رَبِّى وَرَبُّكَ
اللَّهُ. فَأَمَرَ بِبَقَرَةٍ مِنْ نُحَاسٍ فَأُحْمِيَتْ ثُمَّ أَمَرَ بِهَا أَنْ تُلْقَى
هِىَ وَأَوْلاَدُهَا فِيهَا قَالَتْ لَهُ إِنَّ لِى إِلَيْكَ حَاجَةً. قَالَ وَمَا
حَاجَتُكِ قَالَتْ أُحِبُّ أَنْ تَجْمَعَ عِظَامِى وَعِظَامَ وَلَدِى فِى ثَوْبٍ وَاحِدٍ
وَتَدْفِنَنَا. قَالَ ذَلِكَ لَكِ عَلَيْنَا مِنَ الْحَقِّ. قَالَ فَأَمَرَ بِأَوْلاَدِهَا
فَأُلْقُوا بَيْنَ يَدَيْهَا وَاحِدًا وَاحِدًا إِلَى أَنِ انْتَهَى ذَلِكَ إِلَى صَبِىٍّ
لَهَا مُرْضَعٍ وَكَأَنَّهَا تَقَاعَسَتْ مِنْ أَجْلِهِ قَالَ يَا أُمَّهْ اقْتَحِمِى
فَإِنَّ عَذَابَ الدُّنْيَا أَهْوَنُ مِنْ عَذَابِ الآخِرَةِ فَاقْتَحَمَتْ. أخرجه
أحمد 1/309(2822) .
மிஃராஜ் பயணத்தில் ஒரு அழகிய நறுமணத்தை நுகர்ந்தார்கள்.அதற்கான
காரணம் என்ன?என ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டபோது-இது பிர்அவ்னின் மகளிடம் பணி
செய்த ஒரு ஈமானிய பெண்னின் இன்னும் அவளின் பிள்ளைகளின் கப்ரிலிருந்தும் வரும்
நறுமணமாகும் என்றார்கள்.
அப்பெண்ணைப்பற்றிய விபரத்தை நபி ஸல் அவர்கள் கேட்டபோது
பிர்அவ்னின் மகளுக்கு தலைவாரிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின்
கையிலிருந்து சீப்பு நழுவி கீழே விழுந்து விட்டது. அதை பிஸ்மில்லாஹ் என்று கூறி அப்பெண் எடுத்த போது
அதை கேட்ட பிர்அவ்னின் மகள் திடுக்கிட்டாள்.
என் தந்தை தானே ரப்பு,அப்படியிருக்க வேறு யாரின் பெயரை நீசொல்கிறாய்
என கேட்டபோது –அப்பெண், எனக்கும்,உன் தந்தைக்கும் ரப்பு அல்லாஹ் தான் என்று
கூரினாள்.இதை பிரவ்னிடம் அவள் தெரியப்ப்டுத்தியபோது பிர்அவ்ன் அப்பெண்ணையும்
அவளின் குழந்தையையும் கொதிக்கும் பாத்திரத்தில் போட்டு துன்புறுத்தி கொலை செய்ய
திட்டமிட்டான்.
அப்போது அப்பெண்-என்னையும் என் பிள்ளைகளையும் ஒரே சட்டியில் போட்டு
கொன்று விடு என்று மட்டும் கோரிக்கை வைத்தாள்.
இறுதியாக அவளின் முன்னிலையில் ஒவ்வொரு குழந்தையாக சட்டியில் போட்டு
கொலை செய்தான்.
கடைசி குழந்தை,பால்குடிக்கும் குழந்தையை அவன் பிடுங்கியபோது
அத்தாயின் உறுதி கொஞ்சம் குறைந்தது.
அப்போது அக்குழந்தை தன் தாயிடம் தாயே!நரகத்தின் வேதைனையைவிட
துன்யாவின் வேதனை மிக இலகுவானது எனவே பொருமையாயிருங்கள் என்று உபதேசம்
செய்தது. மக்காவாசிகளின் சோதனை உச்சத்தை
தொட்டபோது ஸல் அவர்களுக்கு இந்த காட்சியை ஒரு பாடமாக காட்டினான்.
மூன்றாவது:பைத்துல்
முகத்தஸ் முஸ்லிம்களின் சொத்து என்பதை முழு உம்மத்துக்கும் புரியவைக்கவே அல்லாஹ்வின்
இந்த மிஃராஜ் ஏற்பாடு.
16 மாதங்கள் முஸ்லிம்களின் கிப்லா மாத்திரமல்ல முஸ்லிம்களின் முதல்
கிப்லாவும் அதுவே.
பயணம் செய்வதற்கான மூன்று பள்ளிவாசல்களில் அதுவும் ஒன்று என நபி ஸல்
அவர்கள் கூறினார்கள்.
நான்காவது:வாழ்வின் எந்த
சோதனைக்குப்பின்னும் மகிழ்ச்சி கிடைக்கும்.எந்த கஷ்டமும் நிறந்தரமில்லை.எனும்
உண்மையை அழுத்தமாக புரியவைக்கிறது மிஃராஜ்.
இந்த தீனுக்கு அரணாகவும்,நபி ஸல் அவர்களுக்கு பாதுகாப்பாகவும் இருந்த
அபூதாலிபும் அன்னை கதிஜா ரலி அவர்களும் ஏக காலத்தில் மரணித்தார்கள்.அந்த
துக்கத்திற்கு ஆறுதலாகவும்,மக்காவும் தாயிபும் நாயகத்தை துரத்தியடித்து
வேட்டையாடியபோது அல்லாஹ் தன் இல்லத்துக்கு அழைத்தான்.
Alhamdi lilla arumai arlbutham
ReplyDeletejazakallahu khaira
ReplyDeleteஅருமை... அருமை...அருமை
ReplyDelete