Sunday, 23 June 2013

பராஅத்தும் பாக்கியமும்


அல்லாஹ்வின் மகத்தான கருனையால் ஒரு கண்ணியமான இரவை சந்திக்க இருக்கிறோம்.
இந்த மாதமும் சரி,இந்த இரவும் சரி அல்லாஹ்விடம் மகத்தான அந்தஸ்து பெற்றதாகும்.

மாதங்களில் ரமலானுக்குப்பின்னால் மிகவும் பாக்கியங்களையும் பயனையும் கொண்ட மாதம் ஷஃபான் மாதமாகும்.

இதைப்பற்றி நபி ஸல் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
மற்ற மாதங்களுடன் ரஜபுக்கு இருக்கும் மரியாதை மற்ற வேதங்களுடன் குர்ஆனுக்கு இருக்கும் மரியாதையை போலவாகும்.

மற்ற மாதங்களுடன் ஷஃபானுக்கு இருக்கும் மரியாதை மற்ற நபிமார்களுடன் எனக்கு இருக்கும் மரியாதையை போலவாகும்.

மற்ற மாதங்களில் ரமலானுக்கு உள்ள மரியாதை மற்ற படைப்புக்களுடன் அல்லாஹ்வுக்கு இருக்கும் மரியாதையை போலவாகும்.

ஆரிபீன்களான் ஞானவான்கள் ஷஃபான் தன்னுள்ளே பொதிந்துள்ள பாக்கியங்களை பற்றி இப்படி கூறுகிறார்கள்.

ஷஃபான் ஐந்து பாக்கியங்களை தன்னுள் சுமந்து வருகிறது.
ش-شرافة        ع-علو      ب-بر  ا-الفة  ن-نور
ஆனால் இந்த மாதத்தின் கண்ணியம் குறித்து மக்களிடம் அவ்வளவு விழிப்புணச்சி இல்லை என்பதே உண்மையாகும்.

كان عمارُ - رضي الله عنه - يتهيَّأ لصوم شعبان كما يتهيَّأ لصومِ رمضانَ".

அம்மார் ரலி அவர்கள் ரமலானுக்கு தயார் ஆகுவதைப்போல ஷஃபானுக்கு தயார் ஆகுவார்கள்.

شهرُ رجب هو شهرُ الزرع، وشهرُ شعبان هو شهرُ سَقْي الزرع، وشهرُ رمضان هو شهْرُ حَصادِ الزرع،

ரஜப் விதை தூவும் மாதம்.ஷஃபான் நீர் பாய்ச்சும் மாதம்.ரமலான் அறுவடை காலம் என்று ஞானிகள் சொல்வார்கள்

ரமலானுக்க அடுத்தபடியாக ஷஃபானில் அதிகமாக நபி ஸல் அவர்கள் நோன்பு நோற்றதாக ஹதீஸ்களில் காண முடிகிறது.


عن أسامة بن زيد - رضيَ الله عنهما - أنَّه سأل النَّبيَّ - صَلَّى الله عليه وسَلَّم - فقال: يا رسول الله، لم أركَ تصوم شهرًا منَ الشهور ما تصوم في شعبان، فقال - صَلَّى الله عليه وسَلَّم -:((ذلك شهر يغفل عنه الناس بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى الله - تعالى - فأحب أن يُرْفعَ عملي وأنا صائم

ஏன் அதிகமாக ஷஃபானில் நோன்பு வைக்கிறீர்கள் என நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதற்கு பதில் சொன்ன நபி ஸல் அவர்கள் மூன்று காரணத்தை சொன்னார்கள்.

1.ரஜபுக்கும் ரமலானுக்கும் இடையில் வரும் இந்த மாதம் பற்றி மக்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லை.இது அல்லாஹ்விடம் எத்துனை மகத்துவம் வாய்ந்த்து என்பதை மக்கள் விளங்கவில்லை.

மக்கள் கவனமின்றி பொடுபோக்காக இருக்கும் நாட்களில் கவனத்துடன் நாம் செய்யும் அமலுக்கு அல்லாஹ்விடம் அதிகமான அங்கீகாரம் உண்டு.
சுவனத்தில் உங்களின் காலடி சப்தம் கேட்டேனே பிலால்! அப்படி என்ன அமல் செய்தீர்கள் என நபி ஸல் அவர்கள் பிலால் ரலி அவர்களிடம் கேட்டபோது நான் தஹிய்யதுல் ஒழுவில்(அதாவது ஒழுவின் காணிக்கை இரண்டு இரக்கஅத்) அதிக கவனத்துடன் ஈடுபட்டுவந்தேன் என்றார்கள்.

كان في بعض السلف، يستحبون إحياء ما بين العشائين - المغرب والعشاء - ويقولون هي ساعة غفلة


மஃரிபுக்கும் இஷாவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் இபாதத்தில் ஈடுபடுவதை ஸலப்கள் வழமையாக வைத்துள்ளார்கள்.அதற்கான காரணம் கேட்டபோது அது மக்கள் கவனமின்றி இருக்கும் நேரம் என்பார்கள்

2.இந்த மாதத்தில் தான் மனிதர்களின் அமல்கள் அல்லாஹ்விடம் உயர்த்தப்படுகிறது.

3.என்  அமல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படும்போது நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன் என்றார்கள்.
ஆம்! இந்த மாதம் நம்முடைய அமல்கள் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்படும் மாதமாகும்.
மலக்குகள் மனிதர்கள் செய்யும் அமல்களை மூன்று கட்டங்களாக அல்லாஹ்விடம் கொண்டு செல்கின்றனர்.
ஒவ்வொரு நாளின் அமலை,வாரத்தின் அமலை, வருடத்தின் அமலை

ورَفْعُ الأعمال إلى رب العالمينَ على ثلاثة أنواع:
- يُرفع إليه عملُ الليل قبل عمل النَّهار، وعمل النهار قبل عمل الليل.
- ويُرفع إليه العملُ يوم "الاثنين" و"الخميس".
- ويرفع إليه هذا العمل في شهر "شعبان" خاصَّةً.

பகல் அமலை இரவுக்கு முன்னும்,இரவு அமலை பகலுக்கு முன்னும் உயர்த்தப்படும்.
வாரத்தின் அமலை திங்கள் வியாழன் ஆகிய இரு தினங்கள் கொண்டு செல்லப்படும்.
வருடத்தின் அமலை ஷஃபான் மாதத்தில் குறிப்பாக பராஅத் இரவில் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்படும்.

எனவே இந்த இரவில் ஓராண்டின் அமல்கள் ஒப்படைக்கபடும் அதேநேரம் கடந்த ஆண்டின் பாவங்கள் பற்றியும் சமர்ப்பிக்கப்படும்.

عن أبي هريرة - رضي الله عنه - قال: "إذا كان هلال شعبان، دُفِع إلى ملك الموت صحيفةٌ، يَقْبض من فيها إلى شعبان من قابل، فإن الرجل ليغرس الغرس، ويبني البنيان، وينكح، ويولد له، ويظلم ويفجر، وما له في السماء اسم، وما اسمه إلا في صحيفة الموتى، إلى أن يأتي يومه الذي يُقْبض فيه".

ஷஃபானில் மலக்குல்மவ்த்திடம் ஒரு ஏடு ஒப்படைக்கப்படும்,அதில் வரும் ஆண்டில் ரூஹ் வாங்கப்படும் நபர்களின் பட்டியல் இருக்கும்.
யாருக்கு தெரியும் ஒருவர் மரம் நடுவதில் ஈடுபட்டிருப்பார்.வீடு கட்டுவதில் ஈடுபட்டிருப்பார்.திருமணம் செய்வதில் ஈடுபட்டிருப்பார், குழந்தை பாக்கியம் பெற்றிருப்பார்.ஆனால் அவரின் பெயரோ அந்த மலக்கின் மரண ஓலையில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
இதை பற்றி அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ * فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ ﴾ [الدخان: 3-4]

நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.

பராஅத்தும் படிப்பினையும்.

1.அல்லாஹ்வின் விதிமீது நம்பிக்கை கொண்டிருக்கிற அதேசமயம் நம் முயற்சியிலும் பின் தங்கக்கூடாது.
இந்த இரவில் விதி முடிவு செய்யப்பட்டு வானவர்களிடம் ஒப்படைக்கப்பட்டா   லும் அல்லாஹ்விடம் ரிஸ்குக்காக, ஆரோக்கியத்திற்காக,மன்னிப்புக்காக துஆ செய்பவர்கள் யாரும் உண்டா?என அல்லாஹ் கேட்பதாக ஹதீஸில் வருகிறது.

عن علي بن أبي طالب قال قال رسول الله  صلى الله عليه وسلم  إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلي فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر

பராஅத் இரவில் நின்று வணக்கம் செய்யுங்கள் அதன் பகலில் நோன்பு வையுங்கள்,ஏனெனில் அன்றைய இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வந்து 1.என்னிடம் மன்னிப்பு தேடுபவர் உண்டா? கேளுங்கள் மன்னிக்கிறேன்
2.என்னிடன் இரணம் வேண்டுபவர் உண்டா? வேண்டுங்கள் வழங்குகிறேன்
3.நோயில் சிக்கியவர் உண்டா? நிவாரணம் அளிக்கிறேன்.இவ்வாறு பஜ்ர் வரை அல்லாஹ் கூறுவதாக அலி ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.


عَنْ عَائِشَةَ قَالَتْ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ

அல்லாஹ் பராஅத் இரவில் முதல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடுகளுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்கள்.
திர்மிதி:670

விதிமீது பாரத்தை போட்டுவிட்டு பேசாமல் இருப்பது ஈமானல்ல.உலகில் விதி கோட்பாட்டை தெளிவாகச்சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான்.மனிதனின் முயற்சி தோல்வியடையும் இடத்தில் விதியின் சக்தியை புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் படைப்பில் மலை,காற்று,நீர் நெருப்பு இவையெல்லாம் சக்தி வாய்ந்த்துதான்,.ஆனால் இதைவிடவும் சக்திமிக்கது அல்லாஹ்வின் விதி.அந்த விதியை மாற்றியமைக்கிற மனிதனின் அமல்கள் இன்னும் கூடுதல் சக்திபெறுகிறது.

நபி(ஸல்) அவர்கள் ('பகீஉல் ஃகர்கத்' மையவாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அன்னார் ஒரு பொருளை எடுத்து அதனைத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். மேலும் அவர்கள், 'தம் இருப்பிடம் நரகத்திலா அல்லது சொர்க்கத்திலா என்று (விதியில்) எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! (அவ்வாறாயின்,) எங்கள் (தலை) எழுத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் புரிவதைக் கைவிட்டுவிடமாட்டோமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் செயலாற்றுங்கள். (உங்களில்) ஒவ்வொருவருக்கும், அவர் படைக்கப்பட்ட (நோக்கத்)தை அடைய வகை செய்யப்படும். நல்லவர்களில் உள்ளவருக்கு நல்லோரின் செயலைப் புரியவும், கெட்டவர்களில் உள்ளவருக்குக் கெட்டோரின் செயலைச் செய்யவும் வழி காணப்படும்' என்று கூறிவிட்டு, '(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர்...' எனும் (திருக்குர்ஆன் 92:5-10) வசனங்களை ஓதிக் காட்டினார்கள் .அறிவிப்பவர் அலி(ரலி) நூல்:புஹாரி

மிஃராஜ் பயணத்தில் பைத்துல்முகத்தஸின் ஒரு தூனில் தன் புராக்கை கட்டிப்போட்டதாக ஹதீஸில் வருகிறது, காரணம் விதியும் முயற்சியும் தனி பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே அதன் பொருளாகும்.

விதியை நம்பச் சொல்லும் இறைவன் தான் விதியை உண்டாக்கியது எதனால் என்ற காரணத்தையும் தன்னுடைய திருமறையில் தெளிவுபடுத்துகின்றான்
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற் காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான் திருக்குர்ஆன் (57:23)
இதனடிப்படையில் இஸ்லாம் கூறும் விதிக்கொள்கையை நம்பக்கூடிய ஒரு மனிதர் தனக்கு எவ்வளவுதான் பேறும்புகழும் பணமும் அந்தஸ்த்தும் அதிகாரமும் வந்தாலும் இவையெல்லாமே இறைவனால் நமக்கு வழங்கப்பட்டதுதான் நம்மை விட திறமைசாலிகள் பலர் இருந்தாலும் நமக்கு இறைவன் வழங்கியிருக்கின்றான் என்றால் நம்முடைய அறிவால் ஆற்றலால் கிடைத்தவையல்ல என்று நினைத்து தனக்கு கீழ்நிலையிலுள்ளவர்களை தாழ்வாகக் கருதாமல் இருக்கவும் தன்னை ஒரு பெறும் அறிவாளியாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் கருதிக்கொண்டு கர்வம் கொள்ளாமல் இருக்கவும் உதவும் அதேபோல் ஒருகாரியத்தில் தன்னுடைய முழு முயற்ச்சியைச் செலுத்தியும் அந்தக் காரியம் கைகூடவில்லை என்றாலும் இறைவன் நமக்கு நாடியது அவ்வளவுதான் ஒருவேளை இதைவிடச் சிறந்த்தை இறைவன் நமக்கு வழங்கக் கூடும் என்று என்னி மனஆறுதல
டையவும் இஸ்லாமிய விதி நம்பிக்கை உதவும்.
 இவை தர்க்க ரீதியான சில காரணங்கள் மட்டுமே இஸ்லாமிய விதிக்கொள்கையை நம்புவதால் மனித குலத்திற்க்கு என்னற்ற நன்மைகள் விளையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை

قد قالها الفاروق عمر بن الخطاب رضي الله عنه حينما صلى الناس الجمعة وجد جماعة في المسجد يقبعون جالسين في المسجد، الناس انتشروا وهؤلاء باقون، فسألهم من أنتم؟ قالوا متوكلون على الله، قال بل أنتم متأكِّلون لا متوكلون، قاعدين تتأكلوا، "لا يقعدن أحدكم عن طلب الرزق ويقول اللهم ارزقني وقد علم أن (السماء لا تمطر ذهباً ولا فضة)، إنما يرزق الله الناس بعضهم من بعض، أما سمعتم قول الله تعالى (فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الل

 பள்ளியில் ஜும்ஆ ஜமாஅத் முடிந்ததும் சிலர்கள் சென்றுவிட்டார்கள்.ஒரு சிலர்கள் அமர்ந்திருந்தார்கள்.அவர்களிடம் ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் நீங்கள் யார் என வினவினார்கள்.
நாங்கள் இறைவன்மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்றனர்.அதற்கு உமர் ரலி அவர்கள் நீங்கள் முதவக்கில் அல்ல,முதஅக்கில் என்றார்கள்.அதாவது சாப்பாட்டு ராமன்கள் என்றார்கள்.
யா அல்லாஹ் எனக்கு உணவு கொடு என்று துஆச்செய்து  விட்டு முயற்சி செய்யாமல் உட்கார்ந்துவிட்டால் எதுவும் நடக்காது.வானத்திலிருந்து தங்கமும் வெள்ளியும் ஒன்றும் பொழியாது என்றார்கள்.
2.மரணத்தின் சிந்தனையை தன்னுள் நிலைநிறுத்த மரணித்தவர்களை சந்திக்கச்சொல்கிறது.
ஜியாரத்தின் மகத்துவத்தை புரியவைத்த இரவாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُكُمْ الْآخِرَة

கப்ர்களை ஜியாரத் செய்யுங்கள்! நிச்சயமாக அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா:1558

قَالَتْ قُلْتُ كَيْفَ أَقُولُ لَهُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ قُولِي السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ
நான் ''அல்லாஹ்வின் தூதரே! கப்ராளிகளுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அஸ்ஸலாமு அலா அஹ்ரி­த் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் ல லாஹிகூன்'' என்று சொல்'' என்றார்கள்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்­ரிம்களுக்கும் சாந்தி சலாம் உண்டாவதாக! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ்வின் நாட்டப்படி உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

நூல் : முஸ்லிம் (1619)

பெண்கள் ஜியாரத்:

عن عبد الله بن أبي مليكة ، أن عائشة أقبلت ذات يوم من المقابر فقلت لها : يا أم المؤمنين ، من أين أقبلت ؟ قالت : من قبر أخي عبد الرحمن بن أبي بكر ، فقلت لها : أليس كان رسول الله صلى الله عليه وسلم نهى عن زيارة القبور ؟ قالت : نعم ، " كان قد نهى ، ثم أمر بزيارتها " *

அப்துல்லாஹ் பின் அபீ மலீகா கூறுகிறார் :
ஒரு நாள் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் மண்ணறைகளைச் சந்தித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் இறைநம்பிக்கையாளர்களின் தாயாரே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன் என்று பதிலளித்தார்கள். மண்ணறைகளுக்குச் சென்றுவரக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல் லல்லாஹு அலைஹி) அவர்கள் தடைசெய்யவில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் முதலில் தடைசெய்திருந்தார்கள். பிறகு அவற்றைச் சந்தித்துவருமாறு ஏவினார்கள் எனக் கூறினார்கள்.

நூல் : ஹாகிம் (1341)

மரணித்தவர்களும் கேட்பார்கள்:

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْمَيِّتَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ إِنَّهُ لَيَسْمَعُ خَفْقَ نِعَالِهِمْ إِذَا انْصَرَفُوا


ஒரு மய்யித் கப்ரில் வைக்கப்படும்போது தன்னை அடக்கம் செய்து திரும்பிசெல்பவர்களின் செருப்பு சப்தத்தைக் கேட்கும்.  என்று நபி ஸல் லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள்.
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு:
முஸ்லிம்:5116

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكَ قَتْلَى بَدْرٍ ثَلَاثًا ثُمَّ أَتَاهُمْ فَقَامَ عَلَيْهِمْ فَنَادَاهُمْ فَقَالَ يَا أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ يَا أُمَيَّةَ بْنَ خَلَفٍ يَا عُتْبَةَ بْنَ رَبِيعَةَ يَا شَيْبَةَ بْنَ رَبِيعَةَ أَلَيْسَ قَدْ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا فَإِنِّي قَدْ وَجَدْتُ مَا وَعَدَنِي رَبِّي حَقًّا فَسَمِعَ عُمَرُ قَوْلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يَسْمَعُوا وَأَنَّى يُجِيبُوا وَقَدْ جَيَّفُوا قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا أَنْتُمْ بِأَسْمَعَ لِمَا أَقُولُ مِنْهُمْ وَلَكِنَّهُمْ لَا يَقْدِرُونَ أَنْ يُجِيبُوا

நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் பத்ர்போரில் கொலை செய்யப்பட்ட எதிரிகளின் உடல்கள் கிடக்கும் இடத்திற்கு மூன்று தினங்களுக்கு பின்னர் வந்து-அபூ ஜஹ்லே!
உமைய்யாவே! உத்பாவே! ஷைபாவே! என அழைத்து,அல்லாஹ் எனக்கு வாக்களித்த வெற்றியை தந்துவிட்டான்.உங்களுக்கு வாக்களி
த்த தோல்வியை, மரணத்தை தந்துவிட்டானா?என கேட்டார்கள்.
அப்போது அருகில் இருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,அல்லாஹ்வின் தூதரே!அவர்கள் எப்படி செவியேற்பார்கள்?எப்படி பதில் சொல்வார்கள்?   அவர்கள் தான் செத்துபோய்விட்டனரே! என்று கூறிய போது-அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களைவிடவும் அவர்கள் நன்றாக கேட்கின்றனர்.ஆனால்  அவர்களால் பதில் சொல்ல முடியாது என்று கூறினார்கள்.
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு:
முஸ்லிம்:5121

ஈஸால் ஸவாப்  (இறந்தவர்களுக்கு நாம் செய்யும் நற்காரியம்) பலன் தருமா?

عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
وَيس قَلْبُ الْقُرْآنِ لَا يَقْرَؤُهَا رَجُلٌ يُرِيدُ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى وَالدَّارَ الْآخِرَةَ إِلَّا غُفِرَ لَهُ وَاقْرَءُوهَا عَلَى مَوْتَاكُمْ
யாஸீன் சூரா குர்ஆனின் இருதயமாகும்.அல்லாஹ்வையும் மறுமையையும் நாடி யார் அதை ஓதுவாரோ அவரின் பாவம் மன்னிக்கப்படும்.எனவே உங்களில் மரணித்தவர்களுக்காக யாஸீன் ஓதுங்கள்.என்று நபி ஸல் லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஃகல் ரலியல்லாஹு அன்ஹு
அஹ்மது:19415



عَنْ ابْنِ عَبَّاسٍ
أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ أَفَيَنْفَعُهَا إِنْ تَصَدَّقْتُ عَنْهَا فَقَالَ نَعَمْ
. رواه أبو داود.

ஒருவர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களிடம் வந்து-அல்லாஹ்வின் தூதரே!என் தாய் இறந்துவிட்டார்கள்,அவர்களுக்காக நான் தர்மம் செய்தால் அது அவர்களுக்கு பலன் தருமா?என கேட்டபோது, ஆம்! பலன் தரும் என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.நூல்:அபூதாவூது:2496
பாக்கியமான இந்த இரவை துஆவின் மூலம் அழகுபடுத்துவோமாக.







No comments:

Post a Comment