Wednesday 19 June 2013

நல்ல வாய்ப்புக்கள்

அல்லாஹுத்தஆலா மனிதவாழ்வில் நல்ல சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் எப்போதும் வழங்குவதில்லை,அது எப்போதாவது கிடைக்கும். அப்படி கிடைப்பதற்கரிய வாய்ப்பை அவன் சரியாகவும் பயனுள்ளதாகவும் கழிக்க தவறிவிட்டால் இனி எப்போதும் அதை பெறமுடியாது.

வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்
கொண்டவர்கள் உலகில் மிக உயரமான இடத்தை அடைந்திருக்கிறார்கள்.


வாய்ப்பை பயன்படுத்திய அபூஹுரைரா ரலி


عن إسماعيل بن أمية ، أن محمد بن قيس بن مخرمة ، حدثه ، أن رجلا جاء زيد بن ثابت فسأله عن شيء ، فقال له زيد : عليك بأبي هريرة ، فإنه بينا أنا وأبو هريرة وفلان في المسجد ذات يوم ندعو الله تعالى ، ونذكر ربنا خرج علينا رسول الله صلى الله عليه وسلم حتى جلس إلينا ، قال : فجلس وسكتنا ، فقال : « عودوا للذي كنتم فيه » . قال زيد : فدعوت أنا وصاحبي قبل أبي هريرة ، وجعل رسول الله صلى الله عليه وسلم يؤمن على دعائنا ، قال : ثم دعا أبو هريرة فقال : اللهم إني أسألك مثل الذي سألك صاحباي هذان ، وأسألك علما لا ينسى ، فقال رسول الله صلى الله عليه وسلم : « آمين » ، فقلنا : يا رسول الله ، ونحن نسأل الله علما لا ينسى فقال : « سبقكما بها الدوسي
المستدرك على الصحيحين

ஒருவர் ஸைத் பின் சாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்து வினவினார். அதற்கு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:

நீங்கள் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் இன்னொருவரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள்.

பிறகு அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறந்துவிடாத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.

உடனே நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே மறந்துவிடாத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்' என்று கூறினோம். அதற்கு நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "இதில் தவ்சீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு) உங்களை முந்திவிட்டார்' என்றார்கள்.
ஹாகிம்:6215

பயன்படுத்த தெரியாத கிராமவாசி

நபி ஸல் அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பியபோது ஒரு பாலை
வனத்தில் வசித்த ஒரு கிராமவாசியின் இல்லத்தில் தங்கினார்கள்,அந்த கிராமவாசி நாயகத்தை கண்னியப்படுத்தி உணவளித்தார்
அவரிடமிருந்து விடைபெறும்போது நீங்கள் மதீனா வந்தால் நம்மிடம் வாருங்கள் என்று நபி சல் அவர்கள் கூறினார்கள்.

சிலநாட்கள் கழித்து அந்த கிராமவாசி மதீனா வந்தார்.அண்ணலாரை சந்தித்தபோது அவரை கண்ணியப்படுத்தி உணவளித்தார்கள்.

பின்பு எதேனும் கேளுங்கள் தருகிறேன் என்றார்கள்,அவர் சுவனத்தை கேட்டிருக்கலாம்,
அல்லது ஷஹாதத்தை கேட்டிருக்கலாம்,அல்லது மக்பூலான துஆவை கேட்டிருக்கலாம் ஆனால் அவரோ-எனக்கு வாகனம் வேண்டும் என்றார்.
அவருக்கு வாகனம் கொடுங்கள் என நாயகம் உத்தரவிட்டார்கள்,
மீண்டும் வேறு ஏதேனும் கேளுங்கள் தருகிறேன் என்றார்கள்.
அவரோ-என் ஆடுகளை பாதுகாக்க நாய் வேண்டும் என்றார் அதையும் கொடுத்துவிட்டு வேறு ஏதேனும் கேளுங்கள் என்றார்கள்.
அந்த கிராமவாசியோ-என் குடும்பத்திற்கு பணிவிடை செய்ய வேலைப்பெண் வேண்டும் என்றார்கள்,
அதை கொடுக்க உத்தரவிட்ட நபி ஸல் அவர்கள் அந்த கிராமவாசியை நோக்கி,பனீஇஸ்ராயீலின் கிழவியை விட நீர் இயலாமல் ஆகிவிட்டீர் என்றார்கள்.
அது என்ன கிழவி? என ஸஹாபாக்கள் விளக்கம் கேட்டபோது,யூசுப் நபியின் கப்ர் தெரிந்த ஒரேபெண்ணான அவளிடம் அதை அறிவித்து தரும்படி நபி மூஸா அலை அவர்கள் கேட்க-அதை அறிவிக்கவேண்டு மானால் நான் கேட்பதை கொடுக்க வேந்தும் என்றாள்.
என்ன வேண்டும்?என்றபோது உங்களுடன் சுவனத்தில் இருக்க வேண்டும் என்றாள்,இறுதியில் அவளின் ஆசை நிறைவேரியது என்று நபி ஸல் அவர்கள் கூரினார்கள்.

தப்ரானி:

அப்படி நல்லமல்கள் செய்வதற்கும்,நற்ப்பா
க்கியங்களை பெற்றுக்கொள்வதற்கு
ம் அல்லாஹ்வால் நமக்கு வழங்கப்பட்ட நாட்களில் மிகவும் உயர்வான நாட்கள் ரமலான்.
ரமலான் நல்லமல் செய்வதற்கான ஒரு நல்லவாய்ப்பு.அதை எல்லோருக்கும் அல்லாஹ் வழங்குவதில்லை.
ஒரு முஃமினின் ஈமானிய அறுவடை காலம் ரமலான்.
கடந்த ஆண்டு நம்முடன் ரமாலானை சந்தித்தவர்களில் சிலர் இன்று நம்முடன் இல்லை.மண்ணுக்கும் மறுமைக்கும் சொந்தமாகிப்போனார்கள்.
ரமலான் ஒரு நல்ல வாய்ப்பு என்பதை புரிந்து அமல்செய்யவேண்டும் என்ற ஆவலில் தான் நபி ஸல் அவர்கள் ரமலானுக்கு முன்னால் ரமலானைபற்றிய முன்னறிவிப்பு செய்பவர்களாக இருந்துள்ளார்கள்.
உங்களிடம் கண்ணியமான மாதம் வருகிறது.
பொருமையின் மாதம் வருகிறது,சிறப்பான மாதம் வருகிறது என்றெல்ல்லாம் சொல்லியுள்ள ஹதீஸ்களை ஏராளமாக காண முடிகிறது.

أتاكم رمضان شهر مبارك،

உங்களிடம் ரமலான் வருகிறது.அது பரக்கத் செய்யப்பட்ட மாதமாகும்.என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول إذا دخل رجب: (اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان

யா அல்லாஹ்!ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் பரக்கத் செய்வாயாக ரமலானை அடையும் பாக்கியத்தை தருவாயாக என நபி ஸல் அவர்கள்  ரமலானுக்கு இரண்டுமாதங்களுக்கு முன்னால் இருந்தே துஆ செய்வார்கள் என அனஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம்முஜத்தித் அல்பஸானி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
சூரிய உதயத்தை முன்னறிவிப்புச்செய்வதற்காக அதிகாலை வெளிச்சம் முதலில் வரும்.பின்பு சிறிது நேரம் கழித்து சூரியன் உதயமாகும். அதை போலவே ரமலானின் பரக்கத்துக்களை முன்னறிவிப்புச்செய்ய ரஜபும் ஷஃபானும் வருகிறது.

ولذا كان السلف الصالح يدركون هذه النعمة ويقدرون لها قدرها فيسألون الله على ما ذكر ستة أشهر أن يبلغهم رمضان فإذا أدركوه بكوا من الفرح واجتهدوا في الطاعات ونافسوا في الخيرات وسارعوا إلى المغفرة والجنات فإذا ولَّى ودعوه بقلوب حزينة وأعين دامعة وسألوا الله ستة أشهر أخرى أن يتقبل منهم رمضان فالسنة عندهم كانت كلها رمضان ، وكان من دعائهم اللهم سلمني إلى رمضان وسلم لي رمضان وتسلمه مني متقبلاً
நம்முடைய முன்னோர்களான நல்லோர்கள் இந்த நல்ல சந்தர்ப்பத்தின் மதிப்பை புரிந்துகொண்டதால் ரமலானுக்கு ஆறு மாதம் முன்னால் இருந்தே யா அல்லாஹ் ரமலானை அடையும் பாக்கியத்தை தா என துஆச்செய்வதை வழமையாக்கிக்கொண்டவர்கள்.
ரமலானை அடைந்துவிட்டால் மகிழ்ச்சியால் அதை வரவேற்ப்பார்கள்.
ரமலானை மகிச்சியுடன் வரவேற்றால் அவர் நரகம் செல்லமாட்டார் என்றொரு நபிமொழி உண்டு.
ரமாலான் காலங்களில் வணக்கங்களில் அதிக ஈடுபாடும் போட்டும் கொண்டு ஸாலிஹீன்கள் அமல்செய்வதுடன் மன்னிப்பையும் ஜன்னத்தையும் மறவாமல் அல்லாஹ்விடம் கேட்பார்கள்.
ரமலான் விடைபெற்றால் கண்ணீர் வடித்து கவலையுடன், யா அல்லாஹ் ரமலானில் நாங்கள் செய்த அமல்களை கபூல் செய்வாயாக என  கெஞ்சி துஆச்செய்வார்கள்.
சுறுக்கமாகச்சொன்னால். அவர்களை பொருத்தவரை ஆண்டு முழுவதும் ரமலான் தான்.அதாவது ரமலானின் நினைவில் தான் அவர்களின் ஒவ்வொரு நாளும் கழிகிறது.
 ரமலானுடைய காலத்தின் மதிப்பை புரிந்துகொள்ள பின் வரும் ஹதீஸே போதுமானதாகும்.

وروى ابن ماجه بسند صحيح كما قال الألباني عن طلحة بن عبيد الله أن رجلين قَدِما على رسول الله صلى الله عليه وسلم وكان إسلامهما جميعا، فكان أحدهما أشد اجتهادا من الآخر، فغزا المجتهد منهما فاستشهد، ثم مكث الآخر بعده سنة ثم توفي، قال طلحة: فرأيت في المنام بينا أنا عند باب الجنة إذا أنا بهما، فخرج خارج من الجنة فأذن للذي توفي الآخِر منهما، ثم خرج فأذن للذي استشهد، ثم رجع إلي فقال: ارجع فإنك لم يأْنِ لك بعد، فأصبح طلحة يحدث به الناس، فعجبوا لذلك، فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم وحدثوه الحديث، فقال:" من أي ذلك تعجبون ؟ " فقالوا: يا رسول الله هذا كان أشد الرجلين اجتهادا ثم استشهد، ودخل هذا الآخِر الجنةَ قبله ! فقال رسول الله صلى الله عليه وسلم :" أليس قد مكث هذا بعده سنة ؟ " قالوا: بلى، قال :" وأدرك رمضان فصام وصلى كذا وكذا من سجدة في السنة ؟ " قالوا: بلى، قال رسول الله: صلى الله عليه وسلم : " فما بينهما أبعد مما بين السماء والأرض

தல்ஹா இப்னு உபைதில்லாஹ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இரண்டு மனிதர்கள் நபி ஸல் அவர்களிடம் வந்து ஒரேநேரத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
அவர்களில் ஒருவர் போரில் கலந்துகொண்டு இந்த தீனுக்காக உயிர் கொடுத்து போராளியானார்.
மற்றொருவர் அவருக்குப்பின்னால் ஓராண்டுகாலம் வாழ்ந்து படுக்கையில் மரணித்தார்.இந்நிலையில் கனவில் ஒரு காட்சியை நான் கண்டேன்.

சுவனத்தின் வாசலில் நான் நிற்கிறேன்
.சுவர்க்கத்திற்கு உள்ளிருந்து ஒருவர் வந்து இரண்டாவதாக மரணித்த அந்த மனிதரை உள்ளே அழைத்தார்.
உள்ளே சென்றுவிட்டார்.சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர் வந்து முதலில் மரணித்த அந்த போராளியை உள்ளே அழைத்துச்சென்றார்.
மூன்றாவது வந்த அவர் என்னைப்பார்த்து உனக்கு இன்னும் நேரம் வரவில்லை நீ திரும்பிச்செல் என்றார்.
இந்த நிகழ்வை தல்ஹா ரலி நபித்தோழர்களிடம் சொல்லிக்கொண்டிருந்த போது அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
இச்செய்தி நபி ஸல் அவர்களுக்கு கிடைத்தபோது ஸஹாபாக்களை அழைத்து ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்?என கேட்டார்கள்.
அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே!முதலில் மரணித்த போராளியை விட இரண்டாவது மரணித்தவர் எப்படி முன்னால் சுவர்க்கம்? என்று வினவினர்.
அதற்கு நபி ஸல் அவர்கள், அவருக்குப்பின்னால் இவர் ஓராண்டுகாலம் வாழ்வில்லையா?ஒரு ரமலானை சந்திக்கவில்லையா?அதில் அவர் நோன்பு நோற்கவில்லையா?தொழவில்லையா?
அப்படியானால் அவருக்கும் இவருக்கும் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் உண்டு என்றார்கள்.
எனவே ரமலானுக்கு முன் ரமலானை பயண்னுள்ளதாக கழிப்பத்தற்கான முன் திட்டத்தை தயார் செய்துகொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் பிரதான கடமையாகும்.
வீடு கட்டுவதற்கும் திருமணங்களை நடத்துவதற்கும் பலமாதங்களாக திட்டங்களை வகுக்கும்போது பாக்கியமான ரமலானை பயனுள்ளதாக மாற்றுவதற்கு அவசியம் முன் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
ஸஹாபாக்கள் ரமலானுக்காக தங்களின் பணிகளை முன்கூட்டியே செய்து முடிப்பார்களாம்.


2 comments:

  1. ALTHAMTHU LILLAH NALLA MURARSI MIKAUOM ARPUTHAM BY JALATHUDEEN YOOSUFI. PUDUKKOTTAI

    ReplyDelete
  2. Arumayana thohuppu.masha allahl.

    ReplyDelete