மனிதன் தன்னிடம், பணபலம், பொருட்பலம், படைபலம், ஆயுதபலம் போன்று எண்ணற்ற ஏதோ பலங்கள் இருக்கும் சந்தர்ப்பங்களில்
எதனையும் செய்து விடலாம் என்ற மமதை, கர்வம், இறுமாப்பு போன்றவற்றுடன் செயல்பட ஆரம்பித்து விடுகிறான். நீதி, நியாயம்,
தர்மங்களைக் குப்பையில்
தூக்கி வீசிவிடுகிறான். குழிதோண்டியும் புதைத்து விடுகிறான். தனது எண்ணத்துக்கும், நோக்கத்துக்கும் மாறான
அனைத்தையும், நீதி, நியாயமோ, தக்க காரணங்களோ இன்றி
அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இறங்கிவிடுகிறான்.
இப்படியான அநியாயங்களில் ஈடுபட்டோர் இறைவனால் அழிக்கப்பட்ட சரித்திரங்கள்
பல. அவற்றில் இருந்து நாம் எதனையும் கற்றுக்கொண்டு உள்ளோமா எனப் பார்ப்போமாயின், இல்லை என்பதே பதில்..
இது இன்றுவரை தொடர் கதையாகவே இருந்து வருகின்றது.
இதற்குப் பலியான நாடுகளும், சமூகங்களும், மனிதரும் நிறையவே உள்ளனர்.
இந்த நாள் மூலம் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு என்றாவது ஒரு
நாள் விடியல் இருக்கிறது என்ற சுபச்செய்தியும். அது போல் வரம்புமீறக்கூடியவர்களுக்குஎன்றாவது
ஒரு நாள் கடுமையான வேதனை இருக்கிறது என்பதையும் அல்லாஹ் இந்த நாளின் மூலமாக உலக மக்களுக்கு
உணர்த்துகிறான்…
இந்த நாளின் மூலமாக நாம் பெறவேண்டிய படிப்பினைகள்.
1) அநீதமாக நடந்தால் அவர்களுக்கு கடும் வேதனை உண்டு
என்ற எச்சரிக்கை..
இதற்கு உதாரணமாக இருப்பவன் இந்நாளில் அழிக்கப்பட்ட பிர் அவ்ன்.
وَجَاوَزْنَا
بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا
حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آَمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي
آَمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ آَلْآَنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ
الْمُفْسِدِينَ
فَالْيَوْمَ
نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَة ً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ
عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும்
கொடுமையும், பகைமையும் கொண்டு
அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்;
(அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும்
அவன்: “இஸ்ராயீலின் சந்ததியினர்
எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் நம்பிக்கை கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே
முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
(திருக்குர்ஆன் 10:90)
“இந்த நேரத்தில் தானா
(நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில்
திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்..( திருக்குர்ஆன்:10-91)
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய
தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; (என்று அவனிடம் கூறப்பட்டது). நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர்
நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (திருக்குர்ஆன் 10:92)
கொடுங்ககோலன் பிர்அவ்ன அல்லாஹ்வை எதிர்த்து தான் அல்லாஹ் என்று
கூறி கடைசியில் அல்லாஹ்விக் தண்டனைக்கு உட்பட்டுக் கொண்டிருந்தான். அவன் கடலில் தத்தளித்துக்
கொண்டிருந்தான் அவன் கடலில் மூழ்கப் போகிறான் அது அவனின் இறுதி நேரம்.
அக் கொடுங்கோலன்
அந்த இறுதி நேரத்தில் தன் வாயால் இவ்வாறு மொழிகிறான். மூஸாவின் றப்பை நான் ஏற்றுக்
கொள்கிறேன் முதலாம் முறை சொல்கிறான். ஆப்படியே அவன் இரண்டாம் முறையும் சொல்ல அவன் வாயை
திறக்கும் போது மலக்குகளின் தலைவர் ஜிப்ரீல் அலை அவர்கள் அவனின் வாயில் மண்ணை போடுகிறார்
அவன் மறுபடியும் அவ்வாறு சொல்லாமலிருக்க. பிர்அவ்ன் அப்படியே கடலில் மூழ்கி செத்து
மடிகிறான்.
மேற் சொன்ன சம்பவத்தை வைத்து ஒரு ஹதீஸ் இப்படி கூறுகிறது.
« قال رسول الله صلى الله عليه وسلم » قال
لي جبريل : يا محمد لو رأيتني وأنا أغط فرعون بإحدى يدي وأدس من الحال في فيه مخافة
أن تدركه الرحمة فيغفر له
ஜிப்ரீல் அலை அவர்கள் அவனை 2ம் முறை சொல்லவிடாமல் அவனின் வாயில் மண்ணை போடக்
காரணம். அந்த கொடுங்கோலனின் வார்த்தைகளால் அல்லாஹ் அவன் மீது அன்பு கொண்டு அவனை மன்னித்துவிடுவானோ
என நினைத்ததால் என்று அந்த ஹதீஸ் சொல்கிறது.
உண்மையில் இதன் மூலம் நாம் உணர வேண்டிய விஷயம் ஜிப்ரீல் அலை
அவர்கள் நம்மைவிட அல்லாஹ்வை பற்றி மிக அறிந்தவர் இன்னொரு வார்த்தையில் கூறினால் நம்மைவிட
அதிகம் அல்லாஹ்வை புரிந்து கொண்டவர். இப்படிப்பட்ட கொடுங்கோலனை அல்லாஹ் மன்னித்துவிடுவானோ
என்று எண்ணுமளவுக்கு அல்லாஹ்வின் அன்பு விசாலமானது என்று ஜிப்ரீல் அலை அவர்கள் தெரிந்து
வைத்திருக்கிறார்.அது தான் உண்மையும் அல்லாஹ்வின் அன்பு விசாலமானது. அவனுக்கே அன்பு
கிடைக்கும் என்றால் நமக்கு கிடைக்காதா..
2) அல்லாஹ்
பாவியை வைத்தும் இஸ்லாத்தை வளர்ப்பான். ஏன் பாவியின் பிணத்தை வைத்தும் கூட இஸ்லாம்
வளரும்…
அதற்கும் பிர் அவ்ன் உடல் ஓர் அத்தாட்சி.
.
في الصحيح
عنه صلى الله عليه وسلم أنه قال : « إن الله يؤيد هذا الدَّين بالرجل الفاجر
பாவியான மனிதரை கொண்டும் இந்த தீனை அல்லாஹ் வலிமை படுத்துவான்
என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவுத்
மாரிஸ் புகைல் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு
கடந்த நூற்றாண்டின் ஜெர்மன் அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி
ஃபிர்அவ்னின் அழியாத உடம்பை கண்டெடுத்தனர். இந்த உடல் எப்பொழுது மரணித்தது என்பதை அவர்கள்
அதே கார்பன் 14 சோதனை மூலம்
ஆராய்ந்து
5 ஆயிரம் வருடத்திற்கு
முன் இறந்தவன் என்று அறிவித்து அல்குர்ஆன் கூறியதை மெய்ப்பித்தனர். ஃபிர்அவ்ன் உடலில்
உள்ள கார்பன் 14 எவ்வளவு குறைந்துள்ளது
என்பதை கணக்கிட்டு அவன் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்தவன் என்று அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது
1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன்.
பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது
என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக
தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது.
இவ்வேண்டுகோலுக்கினங்க
பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை
வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள்
முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட
பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது
தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத்
தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு மாரிஸ்
புகைல் தலைமை தாங்கினார். பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக
ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இக்குழுவுக்குத் தலைமை வகித்த மாரிஸ் புகைல் .அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார்.
நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது. உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன்
கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே
இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும்
ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது. prof:Maurice பிர்அவ்னின் உடல்
கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும்இ அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை
தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார். அங்கு
குழுமியிருந்தவர்களில்
ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக ‘அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப்
பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய
இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள
முடியுமென்று கூறினார்.
அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத்
தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது
அங்கிருந்த இன்னொருவர் ‘பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும் மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும்
முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே” என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள்
மேலும் திடுக்கிட்டுப் போனார். ‘இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே
அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின்
சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள்
என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று
அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது
இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.
மாரிஸ் புகைல் அவர்கள்
அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார்.
முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன
தகவல் ‘மூஸாவைத் துரத்திச்
சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?” ‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே
அறிந்திருப்பாரோ?” ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன்
கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது. மாரிஸ் அவர்களுக்குத்
தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக்
கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். ‘பிர்அவ்னின் படைகள்
தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை” என்பது மாத்திரமே
அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது
பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை
முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை.
இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப்
பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல்
கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான்.
இந்த காலப்பகுதியில்தான் சவுதி அரேபியாவில் உடற்கூறியல் முஸ்லிம்
விஞ்ஞானிகள் குழாமின் மருத்துவ மகாநாடு நடக்கவிருந்தது. உடனே மாரிஸ் புகைல் அவர்கள்
தானும் அதில் கலந்து கொள்வதற்காக பயணப் பொதிகளுடன் சவுதி அரபியா பயணமானார்.
அங்கே, அவரின் கண்டுபிடிப்பான “பிர்அவ்ன் மூழ்கியே இறந்தான்” என்பதையும், “அவன் உடல் எந்த மாற்றமுமின்றி அப்படியே இருக்கிறது” என்பதையும் மகாநாட்டில்
வெளிப் படுத்தினார். உடனே மாநாட்டுக்கு வந்தவர்களில் ஒருவர் குர்ஆனைத் திறந்து சூராஹ்
யூனுஸின் 92வது வசனத்தை ஓதிக்காண்பித்தார்.
فَالْيَوْمَ
نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَة ً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ
عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ
“எனினும், உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு
ஒர் அத்தாட்சியாவதற்காக உன்னுடைய உடலை (அது அழியாமல்) நாம் இன்றைய தினம் பாதுகாத்துக்
கொள்வோம்" (என்று கூறினோம்.) எனினும், நிச்சயமாக மனிதர்களில் பலர் நம்முடைய (அத்தகைய) அத்தாட்சிகளைப்
பற்றியும் பராமுகமாயிருக்கின்றனர். [10:92]”
இந்த குர்ஆன் வசனத்தைக் கேட்ட, மாரிஸ் புகைல் அவர்கள், மெய்ச்லிர்த்தார்.
கண்கள் பனித்தன. மனவெழுச்சி பெற்றார். எழுந்து நின்று, அம் மகாநாட்டில் பங்கேற்றோர்
முன்னிலையில், உரத்து சத்தமிட்டு
நான் நேர்வழிக்கு வந்துவிட்டேன் என்றும், இந்த புனித குர்ஆனை முழுமையாகவே நம்புகிறேன் என்றும் சப்தமாகக்
கூறினார்...
ஒரு மருத்துவரின் ஹிதாய்த்துக்கு மகா கெட்டவனின் பிணம்..
மூன்றாவது துஆவிற்கு அதிக வலிமை இருக்கிறது என்ற பாடமும் இருக்கிறது…
இறைவன் நாடினால் இயற்கை விதிகளை மீறி அற்புதகரமாக பாதிப்புக்குள்ளான
மக்களுக்கும் தன்னிடம் பிரார்த்திப்போருக்கும் உதவிக்கரம் நீட்டவும் செய்வான் என்பது
இறைநம்பிக்கையாளர்கள் இங்கு பெறவேண்டிய பாடமாகும்..
قَالَ
قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا وَلَا تَتَّبِعَانِّ سَبِيلَ الَّذِينَ
لَا يَعْلَمُونَ
وأخرج
سعيد بن منصور عن محمد بن كعب القرظي رضي الله عنه قال : كان موسى يدعو وهرون يؤمن
، والداعي والمؤمن شريكان .
وأخرج
ابن جرير عن محمد بن كعب القرظي قال : دعا موسى وأمن هرون .
عن ابن
عباس رضي الله عنهما قال : يزعمون أن فرعون مكث بعد هذه الدعوة أربعين سنة
மூஸா நபி துஆ செய்தார்கள் ஹாருன் (அலை) அவர்கள் ஆமீன் சொன்னார்கள்.
இரண்டு நபி கேட்ட துஆவும் ஒப்புக்கொள்ளப்படுவதற்கு 40 வருடம் ஆனதாக இப்னு
அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நூல்: தப்ஸீர் இப்னு கஸீர்.
அவர்களின் துஆவின் ஆற்றலால் கடல் பிளந்தது.
மேலும் உங்களுக்காக
நாம் கடலைப்பிளந்து உங்களை நாம் காப்பாற்றி நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பிர்
அவ்னின் கூட்டாத்தாரை அதில் மூழ்கடித்தோம்.
அல் குர் ஆன்: 2:50
நாம் சங்கையான இந்த நாளில் அதிகம் துஆ செய்வதுடன் மற்ற காலங்களிலும்
துஆ கேட்பதில் தனிகவனம் செலுத்தினால் வாழ்க்கை வெளிச்சமாகும் விடியளாகும்,
நபியின் துஆவும் ஸஹாபியின் அழகும்..
நாயகம்(ஸல்)அவர்கள் ஒரு தடவை குடிக்க தண்ணீர் கேட்டார்கள். عمروبن اخطب (ரலி) என்ற தோழர். தண்ணீர் எடுத்து நபியிடம்கொடுத்தார்கள்.
அதில் ஒரு முடி இருப்பதை கண்ட அவர் அதை வெளியாக்கிவிட்டு கொடுத்தார்கள். இதைப் பார்த்த
நாயகம்(ஸல்) அவர்கள் اللهم جمله யா அல்லாஹ் அவரை அழகு நிறைந்தவராக ஆக்கிவிடு
என துஆ செய்தார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளரின் ஒருவரான அபூ நயீக் கூறுகின்றார்கள்.
قال
ابو نهيك فرءيته بعد ثلاثة وتسعين وما في رؤسه ولحيته شعرة بيضاء
நான் அவரை 93- வயதிற்கு பிறகும் கண்டேன் அவரின் தாடியிலும் தலையிலும் ஒரு முடிகூட
நரைக்காமல் மிக அழகாக இருந்தார்.
நூல்: இப்னு அபித்துன்யா..
عن ابي
هريرة قال رايت من العلا بن حضرمي ثلاث خصا
ل لم اشهد ها من احد قبله ولا بعده كنا في سفر فعطشنا عطشا شد يدا في يوم حار فد عاالله فسقنا واسقنا
அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்.நான் அலா இப்னுல் ஹள்ரமி(ரலி)
அவர்களிடம் மூன்று விஷயங்களை கண்டேன். அவருக்கு முன்போ அல்லது பின்போ யாரிடமும் அப்படிபட்ட
அம்சங்களை நான் பார்த்ததில்லை.1) நாங்கள் சுட்டெரிக்கும் வெயில்காலத்தில் பயணத்தில் இருக்கும்போது
கடுமையான தாகம் ஏற்பட்டது. அப்போது அலாஇப்னுஹள்ரமி(ரலி) அல்லாஹ்விடம் துஆ செய்தார்
உடனே மழை பொழிந்தது. உடனே நாங்கள் குடித்தோம் கால்நடைகளுக்கும் புகட்டினோம்.
2) தொடர்ந்து பயணித்தபோது
இடையில் நதி குறிக்கிட்டது நாங்கள் நின்றுவிட்டோம் ஆனால் அவரோ அல்லாஹ்விடம் துஆ செய்துவிட்டு
தண்ணீர் மீது நடந்து கடந்து சென்றுவிட்டார்.
3)நான் அவரின் ஜனாசாவில் கலந்துகொண்டேன் அவரை அடக்கம் செய்தபிறகு
அவருக்கு தபன் செயத ஆடையின் முடிச்சை அவிழ்க்காமல் விட்டுவிட்டது நினைவுக்கு வந்தது.
உடனே நாங்கள் அவரை அடக்கம் செய்த கப்ரின் செங்களை உயர்த்தினோம் அப்போது நாங்கள் கப்ரில்
உள்ளே அவரை காண முடியவில்லை..
நூல்:مجا ب الدعوة
لابن ابي الد نيا
எனவே இந்த பாக்கியமான ஆசுரா நாளில் நோன்பு நோற்று அல்லாஹ்விடம்
இருகரமேந்தி நம் வாழ்வை பிரகாசமாக்கி கொள்ளவேண்டும்..
أفضل
الصيام بعد شهر رمضان شهر الله الذي تدعونه المحرم، وأفضل الصلاة بعد الفريضة قيام
الليل”
ரமலான் மாதத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு பிறகு சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான
முஹர்ரம் மாதத்தில் வைக்கப்படும் நோன்பாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம் 1962)
عن أبي
قتادة الأنصاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: “صيام يـوم عاشوراء:
أحتسب على الله أن يكفر السنـة التي قبله”رواه مسلم
ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பு கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப்
பரிகாரமாகும் எனக் கூறினார்கள் (அபூகதாதா(ரலி)..
நூல்: முஸ்லிம் 1977)
روى
ابن أبى ليلى عن داود بن على، عن أبيه، عن جده ابن عباس، عن النبى عليه السلام فى صوم
يوم عاشورا: صوموه وصوموا قبله يومًا أو بعده،
ولا تشبهوا باليهود
ஆஷுரா நாளின் நோன்பை
நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லதுஅதற்கு பின் ஒருநாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு
மாறும்செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கின்னறார்கள்.
நூல்: அஹ்மத், இப்னு குஸைமா,பைஹகி
குடும்பத்தினர்களுக்காக தாராளமாக செலவு செலவுசெய்வது
عن أبي
هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : « من وسَّعَ على عياله
وأهلِه يوم عاشوراء وسع الله عليه سائر سنته رواه البيهقي
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்-எவர் ஆஷூரா தினத்தில்
தன் குடும்பத்தினர்களுக்காக தாராளமாக செலவு
செய்வாரோ அவருக்கு அந்த வருடம்முழுவதும் அல்லாஹ் செழிப்பை ஏற்படுத்துவான் (பைஹகீ)
عن ابن
عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم : « من اكتحل بالإِثمد يوم عاشوراء لم
يرمد أبداً »
ஆஷுரா நாளில் யார் கண்களில் சுர்மா இடுவாரோ அவருக்கு எக்காலமும்
கண்நோய் ஏற்படாது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்..
நூல்: பைஹகீ
assalamu alikkum dear brodhers your blog is very nice but againe you publish this shart and sweet that is better for us thank you with true urs aalim
ReplyDeleteExcellent
ReplyDeleteஉங்களின் மிம்பர் மலர்கள் தற்போது மலேசியாவிலும் மணம் வீசுகிறது.அல்ஹம்து லில்லாஹ்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteLast...hadees fake...
ReplyDelete