பாக்கியங்களில் சிறந்த
பாக்கியமாக இருக்கும் ஈமானை- நாம் பெறுவதற்கு என்னற்ற தியாகங்கள் புரிந்த நபி(ஸல்) அவர்கள் நம்மிடம் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை ஆனாலும் அவர்களின் மகத்தான
தியாகத்திற்கு கூலியாகவும்
நன்றியாகவும் நாயகத்தின் குடும்பத்தை நேசிக்கும் படி இறைவன் குர்ஆனில் கட்டளையிட்டான் எனவே அவர்களின் குடும்பத்தை நேசிக்காதவர்க்ள் அல்லாஹ்விடமும் நபி இடமும்
நன்றியுடையவர்களாக ஆக
முடியாது நபியின் குடும்பத்தாரைப் பற்றி மக்களுக்கு சொல்வதும் அதை அவர்கள் கேட்பதும் நமக்கு நாயகத்தின் அன்பை நிச்சயம் பெற்றுதரும் என்பதால்தான். மன்னராட்சியை ஒழித்து
மக்களாட்சியை
நிலைநாட்ட கண்களை குளமாக்கும் கர்பலாவில் போரிட்டு ஷஹீதான இமாம் ஹூஸைன்(ரலி) அவர்களின் நினைவு நாளான இன்று
நபியின்
குடும்பத்தாரை
அறிந்துக்கொள்வது
பொருத்தமாக இருக்கும் என்பதால்தான் இவ்வாரம் இந்த தலைப்பு தேர்வு செய்யப்பட்டது
انما يريد الله ليذهـب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا
‘நபியின் குடும்பத்தினரே! உங்களிலிருந்து அழுக்குகளை அகற்றி உங்களை
முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகின்றான்;.’
அல் குர்ஆன் -33. 33
மேலுள்ள இறைமறை வசனத்திற்கு விரிவுரையாளர்கள் பலர், பல்வேறு விதமான விளக்கங்களைக் கூறியுள்ளனர்;. நபி (ஸல்) அவர்கள், இவ்வசனத்திற்குறிய
சரியான விளக்கத்தை தமது வாழ்க்கை மூலமாகவும், வார்த்தை மூலமாகவும்
தெளிவு படுத்தியிருக்கின்றார்கள்.
நபிகளாரின் மனைவியருள் மற்றொருவரான உம்மு ஸல்மா நாயகி அறிவிக்கின்றார்கள்.
சூரா அஹ்ஸாபின் 33ம் வசனம்,
انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهـركم تطهيرا
எனது வீட்டில் வைத்தே இறங்கியது. அப்போது என் வீட்டில் நபிகளாருடன்
ஹஸ்ரத் அலி ஹஸ்ரத் பாத்திமா, இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ஆகியோர் இருந்தனர் நபியவர்கள்,இவர்கள் நால்வரையும் அழைத்து,
தமது போர்லையினால் அவர்களைப் போர்த்தி விட்டு,
இவ்வாறு பிரார்த்தித்தார்கள்.
اللهـم هـولاء اهل بيتي فاذهب عنهم الرجس وطهرهم تطهيرا
அல்லாஹ்வே ! இவர்களே எனது குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்தினர்.
ஆகவே, அவர்களை விட்டும் அசுத்தங்களை அகற்றி, அவர்களை பரிசுத்தவான்களாக்கி வைப்பாயாக!
உம்மு ஸல்மா நாயகி தொடர்ந்து கூறுகின்றார்கள், அவ்வேலையில் நான் போர்வையை சற்று விலக்கி, இறைத்தூதர் அவர்களே! நானும் தங்களுடன் இல்லையா ? எனக் கேட்டேன். அதற்கு பிறகு நபி ஸல் அவர்கள்
இவ்வாறு கூறினார்கள்.
انت على مكانك وانت على خير
நீங்கள் உங்களது இடத்திலேயே இருந்து கொள்ளுங்கள். நீங்கள் நன்மையிலேயே
இருக்கின்றீர்கள். திர்மிதி பாக-5 பக்-251)
தொழுகைக்கு அழைத்தல்
நபியே உங்கள் குடும்பத்தினரை தொழுது வருமாறு நீர் ஏவுவீராக!
தொழுகையின் மீது நீர் பொறுமையும் உறுதியும் கொண்டிருப்பீராக! அல்குர்ஆன் 20: 132.
மேற்படி திருவசனம் அருளப்பட்டதிலிருந்து பல மாத காலங்களாக நபிகளார்
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்காக செல்கையில் ஹஸ்ரத் அலி ஹஸ்ரத்
பாத்திமா ஆகியோரின் வீட்டைக் கடக்கும்போது இத்திருவசனத்தை தினமும் ஓதுவார்கள்.
மேலும் ஓ..அஹ்லுல் பைத்தினரே! உங்களை விட்டு அசுத்தங்களை நீக்கி
வைக்கவும் உங்களை (ப்பாவங்களை விட்டு) முற்றுமுழுதாகத் தூய்மையாக்கவுமே அல்லாஹ் விரும்புகின்றான்.
(33:33) என்ற திருவசனத்தையும்
அங்கே ஓதுவார்கள்.
நபியின் குடும்பத்தாருக்கு அல்லாவிடம் கிடைத்த மரியாதையும் உதவியும்
1 அவர்கள்
நேசிப்பது அல்லாஹ் குரானின் மூலம் நமக்கு கடமையாக்கினான்
2 தொழுகையின் கடைசி அத்தஹிய்யாதில் நபியின் குடும்பத்தார்கள் மீது சலவாத்து சொல்வது விதியாக்கப்பட்டுள்ளது சலவாத்து சொல்லாவிட்டால் அத்தொழுகையை இறைவன் ஏற்பதில்லை
عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم (من صلى صلاة لم يصل فيها على وعلى
أهل بيتى لم تقبل منه) قال الدارقطني: الصواب أنه من قول أبى جعفر محمد بن الحسين لو
صليت صلاة لم أصل فيها على النبي صلى الله عليه وسلم ولا على أهل بيته لرأيت أنها لا
تتم
3 நபியின் மீதுஅவர்களின் குடும்பத்தாரின் மீதும் சலவாத்து
சொல்லாத துஆவைஅவன் ஏற்பதில்லை
4) அல்லாஹ்வின் விஷேச உதவி.
وقد أخرج أبو يعلى عن جابر : «أن رسول الله صلى الله
عليه وسلم أقام أياماً لم يطعم طعاماً حتى شق ذلك عليه فطاف في منازل أزواجه فلم يجد
عند واحدة منهن شيئاً فأتى فاطمة فقال : يا بنية هل عندك شيء آكله فإني جائع؟ فقالت
: لا والله فلما خرج من عندها بعثت إليها جارة لها برغيفين وقطعة لحم فأخذته منها فوضعته
في جفنة لها وقالت : لأوثرن بهذا رسول الله صلى الله عليه وسلم على نفسي ومن عندي وكانوا
جميعاً محتاجين إلى شبعة طعام فبعثت حسناً أو حسيناً إلى رسول الله صلى الله عليه وسلم
فرجع إليها فقالت له : بي أنت وأمي قد أتى الله تعالى بشيء قد خبأته لك قال : هلمي
يا بنية بالجفنة فكشفت عن الجفنة فإذا هي مملوءة خبزاً ولحماً فلما نظرت إليها بهتت
وعرفت أنها بركة من الله تعالى فحمدت الله تعالى وقدمته إلى النبي صلى الله عليه وسلم
فلما رآه حمد الله تعالى ، وقال : من أين لك هذا يا بنية؟ قالت : يا أبتي هو من عند
الله إن الله يرزق من يشاء بغير حساب فحمد الله سبحانه ثم قال : الحمد لله الذي جعلك
شبيهة سيدة نساء بني إسرائيل فإنها كانت إذا رزقها الله تعالى رزقاً فسئلت عنه قالت
: هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب ثم جمع علياً والحسن والحسين وجمع
أهل بيته حتى شبعوا وبقي الطعام كما هو فأوسعت فاطمة رضي الله تعالى عنها على جيرانها2
சில
நாட்களாக சாப்பிடாமல் பசியால் வாடிய நாயகம்(ஸல்) அவர்கள் ஏதாவது சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் தன் மகள் பாத்திமா(ரலி) அவர்களின் இல்லம் வந்து எனக்கு
பசியாக இருக்கிறது ஏதாவது உணவு இருக்கிறதா என்று கேட்டபோது அங்கும் உணவு இல்லை
என்று
தெரிந்ததும்
நாயகம் திரும்பிவிட்டார்கள். பிறகு சற்று நேரத்தில் அண்டை வீட்டில் இருந்து பாத்திமா(ரலி) அவர்களுக்கு ரொட்டியும் கொஞ்சம் இறைச்சியும் வந்தது தனது வீட்டில் உள்ளோரும் பசியை தாங்கிக் கொண்டு
நபிக்கு உணவைகொடுக்க முடிவு செய்தார்கள் தன் பிள்ளைகளை அனுப்பி நபியை அழைத்து வரச்செய்தார்கள் நபிவந்து அந்த உணவை பார்த்த பொழுது பாத்திரம் முழுவதும் நிரம்பி இருந்ததுஅதை நபியும் வீட்டில்
உள்ளோரும் சாப்பிட்டு மீதி இருக்க அதை நபியின் மனைவிமார்களுக்கும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் வழங்கியும் பரக்கத்தான உணவு இருந்தது அது அண்டை வீட்டாருக்கும் வழங்கப்பட்டது
நூல்: தப்ஸீர்
இப்னு கஸீர்
குகளும் நபியின் குடும்பத்தார்களும் மலக்
ஒரு சமயம்நபி அவர்கள் அபூதர்ருல் கிபாரி (ரலி) அவர்களை அலி(ரலி) அவர்களை அழைப்பதற்காக வீட்டுக்கு அனுப்பிய பொழுது அலி(ரலி) அவர்களின் வீட்டில் திருகை கல் தானாக ஆடி மாவை தயார் செய்து கொண்டிருந்தது
இதை கண்ட அவர்கள் நபியிடம் வியப்புடன் சொன்னபொழுது நாயகம் சொன்னார்கள் يا ابا ذر اما علمت ان لله ملائكة سيا حين في
الا رض قد وكلوا بمعونة ال محمد
அபூதர்ரே இந்த பூமியில் அல்லாஹ்வின் சில மலக்குகள் சுற்றி வருகின்ரார்கள்
அவர்கள் எனது குடும்பத்தாருக்கு உதவி செய்வதற்காக அல்லாஹ்வின் மூலம் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றனர் என்றார்கள்
நூல் اسعاف الراغبين في سيرة المصطفى
தன் குடும்பத்தார் மீது நாயகம் கொண்ட பிரியம்
ஒரு
சமயம் அலி(ரலி) அவர்கள் நபி இடம்
يا رسول الله
اينا احب اليك انا ام فاطمة قال فاطمة احب
الي منك وانت اعز علي منها
நாயகமே
தாங்கள் அதிகம் நேசிப்பது என்னையா? அல்லது பாத்திமாவையா? என்று ஒரு தர்மசங்கடமான கேள்வியை கேட்டபொழுது
நபி
சொன்னார்கள் என்னிடத்தில் பிரியத்தில் முதலிடம் பாத்திமாவுக்கும் கண்ணியத்தில் முதலிடம் உங்களுக்கும் என்றார்கள்..
நூல் اسعاف الراغبين في سيرة المصطفى
وعن المسور بن مخرمة أن رسول الله صلى الله عليه وسلم قال : " فاطمة
بضعة مني فمن أغضبها أغضبني
நபி
சொன்னார்கள்
பாத்திமா
எனது உடலில் ஒரு பகுதியாவார்கள் அவர்களை கோபமூட்டியவன் என்னை கோபமூட்டியவனாக ஆகி விட்டான்;
நூல்: புகாரி. முஸ்லிம்
قال : " يا أيها الناس من آذى عمي فقد آذاني فإنما عم الرجل صنو
أبيه " رواه الترمذي
அப்பாஸ்
என்னை சார்ந்தவர் நான் அவரை சார்ந்தவன் எனது சாச்சாவை நோவினை செய்தவர் எனக்கு நோவினை செய்தவராக ஆகிவிட்டார்..
நூல்; மிஸ்காத்
ابن عباس قال : كان رسول الله صلى الله عليه وسلم حاملا الحسن بن علي
على عاتقه فقال رجل : نعم المركب ركبت يا غلام فقال النبي صلى الله عليه وسلم :
" ونعم الراكب هو " . رواه الترمذي
நபி
அவர்கள் ஹஸன்(ரலி) அவர்களை தனது தோல் புஜத்தில் அமர்ந்து செல்வதை கண்ட ஒருவர் சிறுவரே நீங்கள் வாகனிக்கும் வாகனம் மிக நல்லதாக இருக்கின்றது என்று சொன்னபொழுது நபி சொன்னார் வாகனிக்கும் வாகனமும்
அவரும் நல்லவராக இருக்கின்றார் என்றார்கள் .
நூல்; (திர்மீதி)
இமாம் ஹுஸைன் மீது நபிகொண்ட பாசம்
وعن أم
الفضل بنت الحارث أنها دخلت على
رسول الله صلى الله عليه وسلم فقالت : يا رسول الله إني رأيت حلما منكرا الليلة . قال
: " وما هو ؟ " قالت : إنه شديد قال : " وما هو ؟ " قالت : رأيت
كأن قطعة من جسدك قطعت ووضعت في حجري . فقال رسول الله صلى الله عليه وسلم :
" رأيت خيرا تلد فاطمة إن شاء الله غلاما يكون في حجرك " . فولدت فاطمة الحسين
فكان في حجري كما قال رسول الله صلى الله عليه وسلم . فدخلت يوما على رسول الله صلى
الله عليه وسلم فوضعته في حجره ثم كانت مني التفاتة فإذا عينا رسول الله صلى الله عليه
وسلم تهريقان الدموع قالت : فقلت : يا نبي الله بأبي أنت وأمي مالك ؟ قال : "
أتاني جبريل عليه السلام فأخبرني أن أمتي ستقتل ابني هذا فقلت : هذا ؟ قال : نعم وأتاني
بتربة من تربته حمراء "
உம்முல்
பழ்ள்(ரலி) அவர்கள். கூறுகின்றார்கள் நான்
ஒரு நாள் ஹுஸைன் (ரலி) அவர்களை நபியின் மடியில் வைத்தேன் சற்று நேரத்தில் நாயகம் அழுவதை கண்ட நான் காரணம் கேட்ட பொழுது அவர்கள்
எனது
சமுதாயம் எனது இந்த மகனை கொலை செய்யும் என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்ன பொழுது நான் இந்த மகனையா என்று வேதனையுடன் கேட்டேன் அப்பொழுது
அவர்கள் என்னிடம் எனது இம்மகன் கொல்லப்படும் இடத்தில் உள்ள ரத்தம் கலந்த சிவப்பு மண்ணை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார் அந்த வேதனையால் அழுதேன் என்றார்கள்
நூல்;பைஹகி
நபி குடும்பத்தார் மீது சஹாபாக்கள் கொண்ட பிரியமும் மரியாதையும்
وقال أبو بكر رضى الله عنه
والذى نفسي بيده لقرابة رسول الله صلى الله
عليه وسلم أحب إلى أن أصل من قرابتي
அபூபக்கர்(ரலி) அவர்கள் அலி(ரலி) அவர்களிடம் என் குடும்பத்தை நான் சேர்ந்து வாழ்வதை விடவும் நபியின் குடும்பமே எனக்கு மிகப் பிரியமானது என்றார்கள்
மக்கா வெற்றியின்போது ابو قحافة(ரலி) அவர்கள்
நபியின் கரம் பற்றி இஸ்லாத்தை ஏற்றபொழுது அபூபக்கர்(ரலி) அவர்கள் அழுதார்கள் நபி அவரிடம் ஏன் அழுகின்றீர்கள் என்று கேட்ட பொழுது அபூபக்கர்(ரலி) அவர்கள் சொன்னார்கள்
قال لان تكون
يد عمك مكان يده ويسلم ويقر الله عينك احب الي من ان يكون
என்
தந்தையின் கை இருக்கும் இடத்தில் உங்கள் சச்சாவின் கை இருந்து
அவர்
இஸ்லாத்தை ஏற்று அல்லாஹ் உங்கள் கண்ணை குளிர்ச்சியாக்குவது என் தந்தை இஸ்லாத்தை ஏற்பதை விடவும் எனக்கு மிகப் பிரியமானது என்றார்கள்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ
عَنْهُ
كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ
فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا
وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا قَالَ فَيُسْقَوْنَ
உமர்(ரலி) அவர்களின் காலத்தில் மழை தேடும் பொழுது அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களை தங்கள் அருகில் வைத்துக் கொண்டு இப்படி துஆ செய்வார்கள் இறைவா நபியின் காலத்தில் அவர்களை முன் வைத்து துஆ செய்தோம்
இப்பொழுது
நபியின் பிரியவர்களான அப்பாஸ்(ரலி) அவர்களை முன் நிறுத்தி உதவி தேடுகிறோம் எங்களுக்கு மழையை இறக்கு என்று துஆ செய்வார்கள் மழையை அல்லாஹ் வழங்கினான்
நூல்.
புஹாரி
உமர்(ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் தாங்கள் வாகனத்தில் செல்லும் போது அப்பாஸ்(ரலி)அவர்கள் நடந்து வருவதை கண்டால் அவர்கள் தங்களை கடந்து செல்லும் வரை வாகனத்திலிருந்து கீழே இறங்கி நிற்பார்கள். அவர்களுக்கு கண்ணியம் செய்ய வேண்டும் என்பதற்காக
நபியின் குடும்பத்தை நேசிப்பதால் நாம் பெறும் நன்மைகள்
عن النبي صلى الله عليه وسلم أنه قال : " من مات على حب آل محمد
مات شهيداً ألا ومن مات على حب آل محمد مات مغفوراً له ، ألا ومن مات على حب آل محمد
مات تائباً ، ألا ومن مات على حب آل محمد مات مؤمناً مستكمل الإيمان ، ألا ومن مات
على حب آل محمد بشره ملك الموت بالجنّة ثم منكر ونكير
எந்த
மனிதன் நபியின் குடும்பத்தை பிரியம் கொண்ட நிலையில் மரணிக்கின்றாரோ அந்த மனிதன் பரிபூரணமான முஃ மினாகவும் மன்னிக்கப்பட்டவனாகவும் ஸஹீதின் அந்தஸ்தை பெற்றவனாகவும் மரணிப்பான்
எந்த
மனிதன் நபியின் குடும்பத்தை நேசித்த நிலையில் மரணிக்கின்றானோ அம்மனிதனுக்கு மரண வேலையில் மலக்குல் மவ்த்தும் கப்ரில் முன்கர் நகீரும் சொர்க்கத்தைக் கொண்டு சுபச்செய்தி சொல்வதுடன் கப்ரில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும்
.நூல்:தப்ஸீர் கஸ்ஸாப்
அஹ்லுல்
பைத்துகளை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி
قُلْ
لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى وَمَنْ يَقْتَرِفْ
حَسَنَةً نَزِدْ لَهُ فِيهَا حُسْنًا إِنَّ اللَّهَ غَفُورٌ شَكُورٌ
• முஃமீன்களே! உங்களுக்கு
மத்தியில் நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எத்திவைக்க வேண்டியதை எத்தி வைத்ததற்காக
எவ்வித பிரதி பலனையும் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என்றாலும் எனது குடும்பத்தார்களாகிய
அஹ்லுல் பைதுகளிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும். என்பதனை தான் உங்களிடம் கேட்கிறேன்.
என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். ( சூரா: 23)
• உங்களின் குழந்தைகளுக்கு மூன்று விஷயங்களின் மீது
ஒழுக்கம் கற்பியுங்கள். உங்கள் நபியின் மீது அன்பு வைத்தல், நபியுடைய குடும்பத்தார்கள் மீது அன்பு வைத்தல்,
குர்ஆன் ஷரீஃப் ஓதி வருதல்
என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم
அவர்கள் கூறினார்கள்.
நூல். தைலமி
وعن
أبي ذر أنه قال وهو آخذ بباب
الكعبة : سمعت النبي صلى الله عليه وسلم يقول : " ألا إن مثل أهل بيتي فيكم مثل
سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها هلك " . رواه أحمد
அபூதர் அவர்கள் கஃபாவின்
வாயில் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள். “யார் என்னை தெரிந்துக்கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள்
நான் அபூதர் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
(என்னவெனில்) அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு
மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும்.
எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர்
நாசமானார்” என்று நபிகள் நாயகம்
صلى الله عليه وسلم
அவர்கள் கூற நான் கேட்டேன்.
நூல்.மிஷ்காத் 573, ஹாகிம்:
2 – 343
قال رسول الله صلى الله عليه وسلم : " أحبوا الله لما يغذوكم من
نعمه فأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي " . رواه الترمذي
• எவன் கைவசம் என் ஆத்மா
இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், எவர் அஹ்லுல் பைத்துகளாகிய உங்களை அல்லாஹ்வுக்காகவும்,
அவன் ரசூளுக்காகவும் பிரியம்
வைக்க வில்லையோ அவருடைய இதயத்தில் ஈமான் நுழையாது.
(திர்மிதி, மிஷ்காத்
570)
• அல்லாஹ்வின் அன்பைப்பெற
விரும்பினால் என்னை அன்பு வையுங்கள். எனது அன்பை பெற வேண்டுமானால் என் குடும்பத்தார்களை
அன்பு வையுங்கள்
.
(திர்மிதி, மிஷ்காத்
573)
، عن أبي سعيد قال : قال رسول الله صلى الله عليه وسلم : « والذي نفسي
بيده لا يبغضنا أهل البيت رجل ، إلا أدخله الله النار
• எவன் கைவசம் என் ஆத்மா
இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், அஹ்லுல் பைத்துகளே! நம்மை எவராவது கோபப்படுத்திவிட்டால்
அல்லாஹ் அவரை கண்டிப்பாக நரகில் நுழைத்து விடுவான்
.
நூல்..முஸ்தத்ரக்: 3 – 150)
என் மறைவுக்கு பிறகு
என் குடும்பத்தார்களுக்கு நல்லவரே உங்களில் நல்லவர்.
என்று நபிகள் நாயகம்
صلى الله عليه وسلم
அவர்கள் கூறியிருப்பது அஹ்லு
பைத்துகள் கியாமத்து நாள் வரை சங்கிலித் தொடராக வந்து கொண்டிருப்பார்கள்
நாம் அவர்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.
arumai
ReplyDeletefast shock to wahabis.very super matter jazakallah khairan kaseerah
ReplyDeleteஅருமையான கட்டுரை பயன் தர வல்லது.
ReplyDelete