"இஸ்லாம் பற்றி இஸ்லாமியர்களே
இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் சிலர் தவறாக விளக்கம்
சொல்லியே விலக்கி வைத்துவிட்டார்கள். படங்களை வீட்டில் வைத்து வணங்குவதுதான் தவறு.
ஆனால், படமே வீட்டில்
இருக்கக்கூடாது என்கிறார்கள். அப்படி விளக்கம் சொல்கிறவர்கள்தான் ரூபாய் நோட்டை
பாக்கெட்டி லேயே வைத்திருக்கிறார்கள். அதில் காந்தி படம் இருக்கிறதே.. எனவே இப்படி
தவறான விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தால் நாம் காணாமலேயே போய்விடுவோம். சினிமா
என்பது ஹராம் (தீமை) அல்ல. இதுபோன்ற ஊடகங்களை சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் ஹராம்' -கவிக்கோ
அப்துல்ரகுமான் இந்த மெசேஜை சொன்ன இடம், "தி மெசேஜ்'
என்ற
திரைப்படம் தமிழில் திரை யிடப்பட்டு குறுந்தகடாக வெளியிடப்பட்ட அக்டோபர் 12-ந் தேதி சென்னை ஃபோர் ஃப்ரேம்ஸ் திரையரங்கில்இந்த கருத்தை கூறினார்..
பாலைவனச் சிங்கம் எனப்படும் "ஒமர்
முக்தார்' படத்தைத் தந்த இயக்குநர்
முஸ்தபா அக்கட், 1976-ல் எடுத்த மற்றொரு மகத்தான படைப்பு "தி
மெசேஜ்'. முகமதுநபியின் வாழ்வையும்
இஸ்லாத்தின் வரலாற்றையும் விளக்கும் திரைக்காவியம். 35ஆண்டுகள் கடந்து தமிழில்
மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
நபியின் உருவத்தைக் காட்டாமலேயே மற்ற
கதாபாத்திரங்கள் மூலமாகவும் பிரம்மாண்டமான பட உருவாக்கத்தின் மூலமாகவும்
வரலாற்றைச் சொன்ன இப்படம் இப்போது மாஸ் கம்யூனிகேஷனால் தமிழில் மொழிமாற்றம்
செய்யப்பட்டு, ம.ம.க. எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, த.மு.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர்
ஹாஜாகனி, அண்ணா பல்கலை முன்னாள்
துணைவேந்தர் மன்னர் ஜவகர், எல்.கே.எஸ் ஜூவல்லர்ஸ்
இம்தியாஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்வில் அக்டோபர் 12-ந் தேதி வெளி யிடப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், “""சினிமா என்பது உருவாகி
நூறாண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் (தமிழக இஸ்லாமி யர்கள்) இப்போதுதான் இதற்குள்
வந்திருக்கிறீர் கள். இதனை சரியான முறையில் கையிலெடுங்கள். நீங்கள் உள்ளே வராமல்
சினிமாவை எதிர்ப்பதால்தான் வாமனப் படங்களெல்லாம் விஸ்வரூபம் எடுத்துவிடுகிறது'' என்றார்.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேசும் போது,
""இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள்
இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல,
நாங்கள்
உள்பட எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியது. பெண் சிசுக்கொலை தடுப்பு, பெண்களின் உரிமைகள், கைதிகளின் உரிமை, ஒடுக்கப்பட்டோர்
நலன் இவை பற்றியெல்லாம் முகமது நபி சொல்லியிருப்பதை எல்லோரும்
தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற கருத்துகளைக் கொண்ட படங்களை தமிழில் எடுக்க
முன்வரவேண்டும்'' என்றார்.
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும்
மதவாத அரசியல் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், அன்பையும்
சகோ தரத்துவத்தையும் வலியுறுத்தும் மார்க்கத் தையும், பிற மதத்தினருடன் இணைந்து வாழும் இங்குள்ள
இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையையும் விளக்குவதற்கு சினிமா என்ற ஆயுதம் தேவை என்ற கருத்து
படவெளியீட்டு விழாவில் பரவலாக வெளிப்பட்டது. திரைத்துறை நோக்கி தமிழக
இஸ்லாமியர்களின் பார்வை திரும்புகிற தருணம் இதுவோ!
இவ்வாராக கருத்து சொல்லி இஸ்லாமியர்கள் சினிமாத்துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் அதைவிட்டும் தூரமாகி விடக்கூடாது அது இல்லாமல் உங்களால் இருக்கமுடியாது என்று கூறி நம்மையும் சினிமாவின் பக்கம் திருப்புகிறார்கள்..
நமக்கு சாத்தியப்படுமா அந்த துரையில் இருந்துகொண்டு
பேணுதலான முஸ்லிமாக வாழமுடியுமா என்பதை பார்ப்போம்.
நேற்றைய வரலாற்றையும், நிதர்சன நிகழ்வுகளையும்,
நாளைய தொழில்நுட்பத்தையும் பாமரனுக்கும் எளிதில் சேர்க்கும்
வலிமை மிக்க ஊடகம் சினிமா என்பதை மறுக்கவியலாது.
அனைத்து மக்களையும்
எளிதில் சென்றடையக் கூடிய ஒரு தகவல் தொடர்பு சாதனம் ‘சினிமா’ என்று பட்டிமன்றம் வைக்காமல் முடிவு செய்து
விடலாம்.
அந்த அளவுக்கு சினிமா என்பது மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து விட்டது.
ஆனால் அதன் அவலநிலை அதல் பாதாளத்தில் உள்ள்து.
ஆன்டனி குயின் அழுத்தமான வார்த்தை
சினிமாத் துறையின் சர்வதேச உயர் விருதாகிய ஆஸ்கார் விருது பெற்ற ஆன்டனி குயின் (Antony Queen) சினிமா பற்றிச் சொல்லும்போது, “சினிமா என்பது கொச்சைத்தனம் கோலோச்சும் களம்” (cinema is the area of the vulgarity) என்றார்.
நடிப்புத் துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், கோடிகளில் பணம் புரண்டும் நிம்மதியற்ற வாழ்க்கை, தற்கொலைகள், அதிகமான விவாகரத்துகள், ஆபாசங்கள், இயற்கையாக ஏற்படக்கூடிய காம உணர்வை முக்கால் நிர்வாணத்துடன் நடித்து விரசத்தை தூண்டி பணத்துக்காக எதையும் செய்யும் நடிகைகள், மனிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனை கொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள், ஏகத்துவத்துக்கே வேட்டு வைக்கும் பாடல் வரிகள், தீவிரவாத செயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக் காட்சிகள், சினிமாவைப் பார்த்து கொலை செய்தேன் என்று கூறும் வாலிபர்கள்.. அப்பப்பா பட்டியல் நீள்கிறது! இதுதான் இன்றைய சினிமாவின் எதார்த்த நிலை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. ஆபாசத்தை உற்று நோக்கும் ஒருவனின் கடைசி நிலை கண்டிப்பாக விபச்சாரமாகத்தான் இருக்கும். தொடர்ந்து சினிமா பார்க்கும் ஒருவன் கடைசி வடிகால் விபச்சாரம்.
وعن أبي هريرة رضي الله عنه إن النبي صلى الله عليه وسلم قال : " لا يزني الزاني حين يزني
‘விபச்சாரனோ, விபச்சாரியோ முஃமினான
நிலையில் இருக்கும்போது விபச்சாரம் செய்வதில்லை’ எனற ஹதிஸை இந்த இடத்தில்
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சாமானியர்கள் முதல்
சாமியார்களிடம் வரை விபச்சாரம் பெருகி வருவதைப் பார்க்கும் போது எதிர்கால சமுதாயம்
பற்றிய அக்கறை கவலை கொள்ளச் செய்கிறது.
“விபசாரத்தை ஒழிக்க
முடியாவிட்டால் அதை சட்டபூர்வமாக்க வேண்டியது தானே?”
என்று அண்மையில்
உயர்நீதிமன்றம் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டியது அவசியம். இது சினிமா செய்த
சாதனை.
عن أبي هريرة، رضي الله
عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: "كُتِبَ على ابن آدم حَظّه من
الزنى، أدرَكَ ذلك لا محالة. فَزنى العينين: النظر. وزنى اللسان: النطقُ. وزنى
الأذنين: الاستماع. وزنى اليدين: البطش
‘கண்ணால் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம். காதால் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கையால் தொடுவது கை செய்யும் விபச்சாரம்.
இவை எல்லாவற்றையும் மர்மஸ்தான உறுப்பு உண்மைப்படுத்தும் அல்லது ஒதுக்கித் தள்ளிவிடும்’ – ஹதீஸின் சுருக்கம்.
சினிமாவில் நடிப்பவர்கள், மனித சமுதாயம் முழுவதையும்
அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ
وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ
“நான் கட்டாயம் பூமியில் மனிதர்களுக்கு (தவறான வழியினை) அழகு வாய்ந்ததாகக் காட்டி, அவர்கள் அனைவரையும் வழிதவறச் செய்வேன்” (15:39)
என்று திருக்குர்ஆனில் ஒரு வசனம் இடம்பெறுகிறது. இது சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஷைத்தான் அல்லாஹ்விடம் போட்ட சபதம் ஆகும்.
ஆதமின் புதல்வர்களுக்கு அசிங்கமானவற்றை அழகாக்கிக் காட்ட இப்லீஸ் கையிலெடுத்துள்ள சாதனங்களில் மிக முக்கியமானது தொலைக்காட்சியும் சினிமாவும் என்று சொல்லலாம்
சைத்தானின் ஆயுதம்.
அல்லாவுக்கு மாறு செய்த ஷைத்தான் அல்லாஹ் பூமிக்கு விரட்டிய சமயத்தில் அவன் இறைவனிடம்
சில உதவிகள் வேண்டினான் அல்லாஹ் அவனிடம் உனது வீடு குளியல் அறை என்றான்
கடைதெருக்கள் உனது இருப்பிடமாகும் என்றும் பிஸ்மில்லாஹ் சொல்லப்படாத பண்டங்கள் உனது
உணவு என்றும் போதை தருபவைகள் உனது குடிபானம் என்றும் கூறினான் இறைவா எனக்கு அழைப்பாளரை
தா என்ற பொழுது அல்லாஹ் அவனிடம் கருவிகள் தான் உனது அழைப்பாளன் என்றான் எனக்கு வேதம்
கொடு என்று ஷைத்தான் கேட்க அல்லாஹ் சொன்னான் தீய கவிதைகள் தான் உனது வேதம் என்றான்
ஒருவன் இசைப்பாட்டுக்களைக் கொண்டு
தனது சப்தத்தை உயர்த்தினால் அல்லாஹ் இவன் பக்கம் இரு ஷைத்தான்களை அனுப்பிவைக்கின்றன்.
அவ்விருவரும் அவனுடைய தோல் புஜத்தில் அமர்ந்து தனது இரு கால்களைக் கொண்டும்
அவனுடைய நெஞ்சில் அடித்து தடவுகின்றார்கள் அவன் தனது சப்தத்தை நிறுத்தும் வரை இவ்வாறு
செய்கின்றார்கள்
நூல் இஹ்யாஉலூமுத்தீன்பாகம்3
மனிதன் பொன்னான
காலத்தையும் வாழ்வையும் வீணாக்கி நல்லோர்களின் உள்ளத்தை புண்ணாக்கிய தீமைகளில் இன்று முதலிடத்தில் இருப்பது சினிமாவாகும் அல்லாவை பயந்து ஒழுக்கமான வாழ்வை உறுதிகொண்டு வெளியே சுற்றாமல் வீட்டில் அடக்கமாக இருக்கும் பெண்களையும் கெடுக்கதுடிக்கும் நாசகார சக்தி இந்த சினிமா
நம் குழந்தைகளின் நாவிலும் உள்ளத்திலும் நாம் அல்லாவை கொண்டு சேர்க்கும் முன்பே இதனுடைய விஷம் அவர்களின் உடல் முழுவதும் கலந்து அந்த பிஞ்சு உள்ளங்களை நஞ்சாக்கிவிடுகிறது
இதயத்தை கோரமாக்கும்
இதனுடைய தீமைகளை நாம் அறிந்து மனித சமூகத்தை காப்பது நம்மீது கடமையாகும் திருமறையில் இறைவன் வழி கேடர்கள் தான் தீயகவிஞர்களை
பின்பற்றுவார்கள் என்று கூறுவதின் மூலம் இசைப்பிரியர்களை கண்டிக்கின்றான் இங்கு
சொல்லப்படுகின்ற விஷயங்கள் சினிமாவையும் இசையையும்
கண்டிக்கின்றது அது டிவி. செல்போன். நெட்
ரேடியோ. இவற்றில் எதன்
மூலம் பார்கப்பட்டாலும் சரியே;
இசையும். நபியின் கோபமும்;
தொலைக்காட்சியில் வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆடல், பாடல், இசை ஆகியவற்றுடனேயே ஒளிபரப்பாகிறது. இசை என்பது மார்க்கத்தின் பார்வையில் தடை செய்யப்பட்ட
ஒன்றாகும்.
عن أَبي مَالِك الْأَشْعَرِيّ
عن النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي
أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ وَلَيَنْزِلَنَّ
أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ يَأْتِيهِمْ
يَعْنِي الْفَقِيرَ لِحَاجَةٍ فَيَقُولُونَ ارْجِعْ إِلَيْنَا غَدًا فَيُبَيِّتُهُمْ
اللَّهُ وَيَضَعُ الْعَلَمَ وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةًوَخَنَازِيرإِلَىيَوْمِالْقِيَامَةِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவர்.
அவர்கள் விபசாரம் புரிவது, (ஆண்கள்) பட்டுத்துணி அணிவது, மது அருந்துவது, இசைக் கருவிகள்
இசைப்பது ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவர்.
(ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம்-5590)
அவ்வாறே பாடகிகளின் குரலைக் கேட்பதும் நடனம் ஆடும் பெண்களைப் பார்ப்பதும் தடுக்கப்பட்ட
செயல் ஆகும்.
قد روي مرفوعا هذا المعنى
من حديث أبي موسى الاشعري أنه قال قال رسول الله صلى الله عليه وسلم:
(من استمع إلى صوت غناء لم
يؤذن له أن يسمع الروحانيين).
فقيل: ومن الروحانيون يا
رسول الله ؟ قال: (قراء أهل الجنة) خرجه الترمذي الحكيم أبو عبد الله في نوادر الاصول،
யார்(இவ்வுலகில்)பாட்டுசப்தத்தை கேட்கிறாரோ அவருக்கு சுவர்க்கத்தில் ரூஹானிய்யீன்(சுவனத்துகாரிகளின்)
சப்தத்தை கேட்க அனுமதிக்கப்படமாட்டாது.என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(அறிவிப்பாளர்:அபூமூஸா(ரலி)
நூல்: தப்ஸீர் குர்துபி
عن عائشة قالت قال رسول
الله صلى الله عليه وسلم: (من مات وعنده جارية مغنية فلا تصلوا عليه)
பாடகிகளை தன்னுடன் வைத்திருந்த ஒருவர் மரணித்துவிட்டால் அவர்மீது (ஜனாஸா) தொழவைக்காதீர்கள்
என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்..(அறிவிப்பாளர்: ஆயிசா(ரலி).
நூல்:தப்ஸீர் குர்துபி
சினிமாவும் பூகம்பமும்
حدثني أبو مالك الأشعري
، أنه سمع رسول الله صلى الله عليه وسلم ، يقول : « يشرب ناس من أمتي الخمر ، يسمونها
بغير اسمها ، يضرب على رءوسهم بالمعازف والقينات ، يخسف الله بهم الأرض ، ويجعل منهم
القردة والخنازير
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் மதுவருந்துவர்.
அவர்கள் மதுவுக்கு மாற்றுப் பெயர் சூட்டிக்கொள்வர். அவர்களின் தலைகளுக்கு மேல் வாத்தியக்
கருவிகளின் இசையும் பாடகிகளின் பாடலோசையும் ஒலிக்கும். அத்தகையோரை அல்லாஹ் பூமியில்
புதையுறச் செய்வான். அவர்களில் சிலரை அல்லாஹ் குரங்குகளாகவும் பன்றிகளாவும் உருமாற்றுவான்.
நூல். (இப்னுமாஜா-4010)
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், “இறுதிக் காலத்தில் என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் குரங்குகளாகவும்
பன்றிகளாகவும் உருமாற்றப்படுவார்கள்” என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை
என்றும்,
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும்
உறுதிமொழிவார்கள் அல்லவா?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம், அவர்கள்
நோன்பும் நோற்பர்; தொழுவர்; ஹஜ்ஜெல்லாம்கூட செய்வர்” என்றார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! பின் ஏன் அவர்களுக்கு இந்த நிலை?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் வாத்தியக் கருவிகளையும் மேளதாளங்களையும் பாடகிகளையும்
பயன்படுத்துவார்கள். மதுவருந்தவார்கள். அந்தக் குடி கூத்து கும்மாளத்திலேயே தூங்கச்
செல்வார்கள். மறுநாள் காலை வேளையில் உருமாற்றம் செய்யப்பட்டவர்களாக ஆகிவிடுவர்” என்றார்கள்
நூல். இப்னு அபித்துன்யா. அஹ்மத். பைஹகீ
இசைக்கருவிகளை
உடைத்து எரியத்தான் நான் அனுப்பப்பட்டுள்ளேன். என்று நம் நபி சொல்லியிருக்க டிவி
போன்ற இசைக்கருவிகளை உடைக்கும் பணியை செய்யவேண்டிய இஸ்லாமிய சமூதாயமே அதை நடு வீட்டில் வைத்துக் கொண்டாடுவது இதயத்தில் வலியை தருகின்றது. நாயகம் ஒழிக்க உறுதி பூண்ட இவற்றை பணம் கொடுத்து வளர்க்கும் இந்த உம்மத் நாளை மறுமையில் எந்த முகத்தைக் கொண்டு நபியை சந்திக்கும்
وأخرج
ابن
أبي
الدنيا
والبيهقي
عن
نافع
قال
: كنت
أسير
مع
عبد
الله
بن
عمر
رضي
الله
عنهما
في
طريق
، فسمع
زمارة
راع
، فوضع
أصبعيه
في
أذنيه
، ثم
عدل
عن
الطريق
، فلم
يزل
يقول
: يا
نافع
أتسمع؟
قلت
: لا
. فأخرج
أصبعيه
من
أذنيه
وقال
: هكذا
رأيت
رسول
الله
صلى
الله
عليه
وسلم
صنع
ஹள்ரத் نافع (ரலி)அவர்கள்
ஒரு நிகழ்வை சொல்கின்றார்கள்
நான் இப்னு
உமர்(ரலி)அவர்களுடன் ஒரு வழியில் செல்லும் போது ஒரு இடையனின் இசைக்கும் சப்தம் கேட்டது உடனே இப்னு உமர்(ரலி) அவர்கள் தன் இரு விரல்களையும் காதில் வைத்துக்கொண்டு
அவ்விடத்தை விட்டும் வேகமாக சென்றுவிட்டார்கள்.சற்று தூரம் சென்றபின்பு
என்னிடம் ஓநாபிஃ ஏதேனும் சப்தம் கேட்கின்றதா என்று என்னிடம் கேட்க நான் இல்லை என்று
கூறவும் உடனே காதுகளை விட்டும் கையை எடுத்துவிட்டு என்னிடம் இவ்வாறே நபி அவர்கள் செய்வதை
நான் கண்டேன் என்றார்கள்
சொர்க்கம் செல்ல வேண்டுமா ?
முஹம்மது
பின் முன் கதிர்(ரஹ்)
அவர்கள் கூறுகின்றார்கள்.
நாளை
மறுமையில் அல்லாவின் அழைப்பாழர் வீண் விளையாட்டுக்களை விட்டும் ஷைத்தானின் இசைக்கருவிகள விட்டும் தங்களை பாதுகாத்துக்கொண்டவர்கள் எங்கே என்று கேட்பார் அவர்கள் வருவார்கள் அவர்கள் கஸ்தூரி மணம் கமலும் சொர்க்கத்தின் பூங்காவில்
தங்கவைக்கப்படுவார்கள் பிறகு அல்லாஹ் மலக்குகளிடம் சொல்வான் எனது புகழையும் பெருமையையும் அவர்களின் செவிகளுக்கு கேட்கச்செய்யுங்கள் இன்னும் அவர்கள் மீது எந்த பயமும் இல்லை அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை அறிவித்து விடுங்கள் என்று கூறுவான்;
நூல்; இப்னு அபித்துன்யா.
சினிமாவின் மூலம் ஏற்படும் பதிப்புகள்
1)அந்நிய பெண்ணைப் பார்த்தல் ஆசை வைத்தல்
2) விலை மதிப்பற்ற நேரம் வீணாக்குதல்
3) பாவத்தில் பணம் செலவாகுதல்
4) டிவி மோகம் பெற்றோர் பிள்ளைகளை கண்கானிக்க விடாமல் தடுத்தல்
5) உடல் நிலை கெட்டுப்போதல். கண் பாஅர்வை மங்குதல்
6) தொழுகையின் ஆரம்ப நேரமும் சில சமயம் தொழுகையும் தவறுதல்
7) பெண்கள்
வீட்டில் உள்ளவர்களுக்கு பணிவிடை செய்யாமல் தடுத்தல்
8) ஈமானின்
ஒரு பகுதியான ஈமான் ஒட்டுமொத்தமாக குடும்பத்தை விட்டும் வெளியேறுதல்
இன்னும் பலபல பாதிப்புகள்
عن
ابن
مسعود
رضي
الله
تعالى
عنه
قال
: قال
رسول
الله
صلى
الله
عليه
وسلم
« الغناء
ينبت
النفاق
في
القلب
كما
ينبت
الماء
البقل
தண்ணீர் விளை நிலத்தை வளர்ப்பது போன்று இசை இதயத்தில் நயவஞ்சக குணங்கள் வளர்ந்து விடும்
நூல்(மிஷ்காத்)
இந்த ஹதீஸுக்கு வலு சேர்க்கும் சில செய்திகள் கீழே தரப்படுகின்றது. சினிமாவின்
சீரழிவுகள் சமீப காலத்தில் நிறைய இருந்தாலும் கூட இதை விட ஆச்சரியம் என்ன என்றால் செல்போன் இண்டர் நெட்டின் கலாச்சாரம் பரவலாக இல்லாதசுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சினிமாவின் தாக்கம் பயங்கரமாக இருந்திருக்கின்றது.
சென்னையில்
ஒரு இடத்தில் கொள்ளை அடித்த 4 மாணவர்களை காவல் துறை கைது செய்த பொழுது அந்த மாணவர்கள் கொடுத்த வாக்குமூலம் இதோ நாங்கள் 4பேரும் பத்தாம்
வகுப்பில் தோற்றுப்போனோம் இதனால் விரக்தி கொண்டு வீட்டில் பணம் திருடி மும்பை சென்றோம்
நாயகன் படத்தில் வரும் நாயகனைப் போல் வாழ்க்கை நடத்தலாம் என்ரு விரும்பினோம் நாங்கள் மர்மக் கதைகளையும் படித்துள்ளோம்
அவற்றில் வருவதுபோல் கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போட்டோம்.
தினத்தந்தி..14-8-1988.
சென்னையை அடுத்த
விருகம்பாக்கத்தில் ஒரே நாளில் 9 கொலைகள் செய்த ஜெயம்பிரகாஷ் என்பவன் கூறியது. நூறாவது நாள்
என்ற படம் பார்த்தேன் அதில் கொலை செய்யும் காட்சிகள் வந்தன அதைப்பார்த்து இந்த கொலை வெறி என் மனதில் வந்தது..
ஆஸ்ரேலியாவில் உள்ள
ஐ டி ஐ
என்ற இதய நோய் மருத்துவமனை தந்த தகவல் அங்குள்ள சர்க்கில் என்ற பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது. அது என்னவென்றால் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்துக்கு மேல் அதிகமாக டி வி பார்ப்பவர்களுக்கு ஹார்ட் அடாக் வருவதற்கு 80 சதவீதம் வாய்ப்புள்ளது.
அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா”, என மதுரை ஐகோர்ட்
கிளையில் நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி வேதனை தெரிவித்தார். - இது 2010ம் ஆண்டு செய்தி.
இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவணக் காப்பக மையம்,1953ம் ஆண்டில் நாட்டில்
பதிவான குற்றங்கள் எண்ணிக்கையையும் அதேபோல் 2011ம் ஆண்டில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு வளர்ச்சியினை(!) பட்டியலிட்டுத் தரும் விகிதாச்சாரமோ
கதிகலங்க வைக்கிறது.
கொலைக்குற்றம் - 250%, கற்பழிப்பு - 873%, ஆட்கடத்தல் - 749%, வழிப்பறி - 194% மற்றும் சமூக வன்முறை - 234% ஆக மொத்த குற்றங்களின்
வளர்ச்சி 286% வளர்ந்திருப்பதாக
புள்ளிவிபரம் அலறுகிறது.
சுற்றுச்சூழல் மாசடைவது பற்றி நாம் அதிகம்
கவலைப்படுகிறோம். நம் வீட்டுக்குமுன் யாராவது குப்பையைக் கொட்டினாலோ டயரைக்
கொளுத்தினாலோ கழிவுநீரை ஊற்றினாலோ மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார்
அளிக்கிறோம். ஆனால், மனதை
மாசுபடுத்தும் சூழலைப் பற்றிக் கவலைப்படுவதற்கு நாம் தயாரில்லை. மனதை
மாசுபடுத்துவதில் பெரும் பங்கு தொலைக்காட்சிக்கும் சினிமாவுக்கும் உண்டு.
புறச்சூழல் மாசுபட்டால் அதை அகற்ற மாற்று
வழியுண்டு. ஆனால், ஒரு
சமுதாயத்தின் மனம் மாசுபட்டால் அந்தச் சமுதாயம் மெல்லக் கொல்லும் நஞ்சை
உட்கொண்டதாகப் பொருள். படிப்படியாக அதன் அழிவு நெருங்கிவரும். அதன் நாகரீகம், பண்பாடு, மனிதாபிமானம், நாணம் எல்லாமே காலப்போக்கில் காணாமல்
போய்விடும்.
எனவே, கால்
பங்கு நன்மை முக்கால் பங்கு தீமை எனும் நிலையில் உள்ள தொலைக்காட்சியை நன்மைக்காக
மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை
இல்லாதவர்கள் அதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும். இதையே இஸ்லாம் நம்மிடம்
எதிர்பார்க்கிறது.
நாம் குடியிருக்கும் வீடு அல்லாஹ் நமக்கு
வழங்கிய அருட்கொடை. அது அமைதியும் அருளும் தவழும் இடமாக இருக்க வேண்டும். அதில்
அல்லாஹ்வுக்குப் பிடிக்காத சூழலை உருவாக்குவது நமது ஈமானைப் பலவீனப்படுத்திவிடும்.
எனவே இஸ்லாம் முழுமையாக
இசையையும்.சினிமாவையும்.தடைசெய்கிறது. அவ்விரண்டையும்
விட்டு நாம் தவிர்ந்து
இருப்போமாக. ஆமீன்
No comments:
Post a Comment