(அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் உலமா பெருமக்களின் பெரும் துஆவை ஆதரவு வைத்து இந்த தளத்தை ஆரம்பிக்கிறேன்.
உலமாக்களுக்கான ஜும்ஆ குறிப்பு,வஹ்ஹாபிய சிந்தனைகளுக்கு எதிரான ஆய்வு தொடர்கள்,ஆடி யோ வீடியோ உரைகள்,நவீன கால பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்,ஆண்மீக சிந்தனைகள் என பல சுவையுடன் உங்களை சந்திக்க நிறைய ஆசைப் படுகிறேன்.உங்களின் மேலான துஆவும் ஆலோசனையும் கிடைக்குமானால் இன்ஷா அல்லாஹ் தகுதியில்லாத என்னால் அதை ஓரளவுக்கு செய்யமுடியும் என்று நம்புகின்றேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்திகாமத்துடன் இதைச்செய்ய உடல் ஒத்துழைப்புக்காக துஆச்செய்யுங்கள்.)
இப்படிக்கு
அபூபக்கர் உஸ்மானி
please visit
amaliusmani.com
ஒரு மனிதன் மீது நமக்கு அன்பும் நெருக்கமும் வரவேண்டுமானால் அவன் நமக்கு செய்த உபகாரங்களை பல முறை எண்ணிபார்க்க வேண்டும்.
அது போன்றுதான் அல்லாஹ்வின் மீது மனிதனுக்கு பிரியமும் நன்றி உணர்வும் ஏற்படவேண்டுமானால் அம்மனிதன் அல்லாஹ்வின் அருட்கொடைகளை மனதில் அசைபோட்டுகொண்டே இருக்கவேண்டும்.இதைத்தான் இறைவன் குர் ஆனில் பல இடங்களில் அல்லாஹ்வின் உபகாரங்களை எண்ணிப்பாருங்கள் என்று கூறுகின்றான்
.
وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ
اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنْسَانَ لَظَلُومٌ كَفَّارٌ
அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின்
அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கிறான்.’
[அல் குர்ஆன்14:34]
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” 14:7.
عن ابن المنكدر ، قال : كان من دعاء رسول الله : « اللهم أعني على ذكرك ، وشكرك ، وحسن عبادتك »
நபி(ஸல்) அவர்கள் அதிகமாக இவ்வாறு துஆ செய்வார்கள். யா அல்லாஹ் உன்னை திக்ரு செய்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் நல்ல முறையில் உனக்கு வழிபடுவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக என்று..
الحمد راس الشكر ما شكرالله عبد لا يحمده قال رسول الله صل الله عليه وسلم
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகழ்வது நன்றிசெலுத்துவதின் தலையாகும். அல்லாஹ்வை புகழாத அடியான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவில்லை என்றார்கள்.
அல்லாஹ்வின் நிகரற்ற அருட்கொடைகளில் சில
1, இஸ்லாமிய குடும்பத்தில் நாம் பிறந்தது
2, பாவங்களின் காரணமாக உள்ளத்தில் கரும்புள்ளிகளை ஏற்படுத்தும் இறைவன் மாற்றமாக அவற்றை நமது முகத்திலும் உடலிலும் ஏற்படுத்தி நம்மை இழிவாக்கி விடாமல் காப்பாற்றியது.
3, நமது உருப்புகளை எந்த குறைபாடுகள் இன்றி படைத்தது,
، عن شهر بن حوشب ، سمعت عائشة ، تقول : « ما من عبد يشرب من الماء القراح ، فيدخل بغير أذى ، ويخرج بغير أذى ، إلا وجب عليه
الشكر
أن أبا بكر الصديق كان يقول في دعائه : أسألك تمام النعمة في الاشياء
كلها ، والشكر لك عليها ، حتى ترضى وبعد الرضا
சுத்தமான
தண்ணீரை ஒரு அடியான் குடித்து அது அவன் உடலில் நோவினை இல்லாமல் சென்று நோவினை இல்லாமல் வெளியேறினால் இதற்காக அவன்மீது அல்லாவுக்கு நன்றிசெலுத்துவது கட்டாயமாகிவிட்டது.
நூல்: இப்னு அபித்துன்யா
قال ابو بكر بن عبدالله المزني يا
ابن ادم اذا اردت ان تعلم قدر ما انعم
الله عليك فغمض عينيك
மனிதனே
அல்லாஹ் உனக்கு அருளிய அருட்கொடைகளின் மகத்துவத்தை விளங்க நாடினால் சற்றுநேரம் நீ உனது கண்ணை மூடு என்றார்கள் நாம் கண்ணை மூடினால் அடுத்த எட்டு எடுத்து வைத்து நடக்க முடியாது வாழ்க்கையே முடங்கிவிடும் அப்போது கண்ணின் மகிமை புரியும்.
நன்றி செலுத்துவதின் விளக்கமும். வகைகளும்
1)
முழு நேரமும் அல்லாஹ்வுடைய சிந்தனையோடு இருப்பது
: قال
موسى عليه السلام : « رب ، ما أفضل الشكر ؟ قال : أن
تشكرني على كل حال »
மூஸா நபி அவர்கள் அல்லாஹ்விடம் உனக்கு நான் எப்படி நன்றி செலுத்துவது என்று கேட்டபோது அல்லாஹ் சொன்னான்.எல்லா நேரங்களிலும் நீங்கள் என்னை திக்ரு செய்து கொண்டே இருக்கவேண்டும்.என்னை மறக்கவே கூடாது அவ்வாறு நீங்கள் என்னை திக்ரு செய்யும்போது நன்றியாளராகவும்
என்னை மறக்கும்போது நன்றி கெட்டவராகவும் ஆகிவிடுவீர் என்றான்.
நூல் : பைஹகீ
2) يقول مخلد بن حسين الشكر ترك المعاصي
பாவங்களை விட்டு தவிர்ந்து வாழ்வதே நன்றியாகும் என்று முஹல்லத் பின்
ஹூஸைன் கூறுகின்றார்கள்.
3)
நமது எல்லா சிறப்புகளுக்கு அல்லாஹ்வின் அருளே காரணம் என்று உணர்ந்து அவனை புகழ்வது நன்றியாகும்
عن النوّاس بن سمعان قال : سرقت ناقة رسول الله صلى الله عليه وسلم فقال
لئن ردها الله لأشكرن ربي ، فوقعت في حي من أحياء العرب فيهم امرأة مسلمة ، فوقع في
خلدها أن تهرب عليها ، فرأت من القوم غفلة فقعدت عليها ثم حركتها فصبحت بها المدينة
، فلما رأها المسلمون فرحوا بها ، ومشوا بمجيئها حتى أتوا رسول الله صلى الله عليه
وسلم فلما رأها قال { الحمد لله } فانتظروا هل يحدث رسول الله صلى الله عليه وسلم صوماً
أو صلاة؟ فظنوا أنه نسي فقالوا : يا رسول الله قد كنت قلت لئن ردها الله لأشكرن ربي
. قال : ألم أقل الحمد لله.
ஒரு தடவை நபியின் ஒட்டகம் திருடப்பட்டது . அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ் எனக்கு ஒட்டகத்தை திரும்பதந்தால்
நான் அவனுக்கு நன்றி செலுத்துவேன் என்றார்கள்.
அந்த ஒட்டகத்தை ஒரு அரபி கோத்திரத்தார்
திருடி இருந்தனர் அந்த கோத்திரத்தில் ஒரு ஸாலிஹான பெண்ணும் இருந்தால் இந்த விஷயத்தை அறிந்த அப்பெண் இரவில் அக்கூட்டத்தார் தூங்கிய நேரத்தில் அந்த ஒட்டகத்தில் ஏறி இரவோடு இரவாக பயணித்து காலையில் நபியிடம் கொண்டுவந்தார்.
அதை கண்ட நபியும் அவர்களின் தோழர்களும் சந்தோஷப்பட்டார்கள் ஒட்டகத்தை
கண்டவுடன் الحمد لله என்று கூறி அல்லாவை புகழ்ந்தார்கள் வேறு எதுவும் செய்யவில்லை ஆனாலும் இதற்கு நன்றியாக நாயகம் ஒரு நோன்பையோ அல்லது தொழுகையையோ அறிவித்து அதை செய்வார்கள்என்று
எதிர்பார்த்தார்கள்
ஆனால்
நபி அவ்வாறு செய்யவில்லை ஒரு வேலை நபி அவர்கள் தாங்கள் சொல்வதை மறந்திருப்பார்களோ என்று எண்ணிய அவர்கள் நபியிடம் நாயகமே ஒட்டகத்தை இறைவன் திரும்பத்தந்தால் நன்றி
செழுத்துவேன் என்று சொன்னீர்களே என்று
கூறிய பொழுது நபி அவர்கள் சொன்னார்கள் நான் الحمد للهஎன்று கூறவில்லையா? என்று கேட்டார்கள்.
4) இன்பம் துன்பம் அனைத்து நிலைகளிலும் அல்லாவை புகழ்வது வணங்குவதும் நன்றியாகும்
عن ابن عباس قال: (أول من يدخل الجنة يوم القيامة الذين يحمدون الله غزوجل
في السراء والضراء
சந்தோஷத்திலும் கஷ்டத்திலும்
இப்படி எல்லா நிலைகளிலும் யார் அல்லாவை புகழ்வார்களோ அவர்கள் தான் மறுமையில் முதலாவதாக சொர்க்கத்திற்கு
அழைக்கப்படுவார்கள்
இறைவனை புகழ்ந்து நன்றி செழுத்துவதால் கிடைக்கும் மேன்மைகளும் உதவிகளும்
قال: حدثنا أحمد بن خالد الشيباني، عن عيسى بن يونس، عن الأعمش، عن أبي
وائل، عن عبدالله قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال جبريل: ألا أعلمك الكلمات
التي قالها موسى صلى الله عليه وسلم حين انفلق البحر لبني إسرائيل؟ قلت: بلى بأبي وأمي.
قال. قال: اللهم لك الحمد، وإليك المشتكى، وأنت المستغاث، ولا حول ولا قوة إلا بالله.
قال عبدالله: فما تركتهن مذ سمعتهن من رسول الله صلى الله عليه وسلم.
وقال أبو وائل: ما تركتهن مذ سمعتهن من عبدالله.
وقال الأعمش: ما تركتهن مذ سمعتهن من أبي وائل.
ஒரு சமயம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் நபியே இஸ்ரவேலர்களுக்காக நைல்நதியை மூஸா நபி பிளந்த போது அவர்கள் கூறியவைகளை நான் உங்களுக்கு அறிவித்து தரவேண்டாமா ? என்று கேட்டுவிட்டு மேல்கூறப்பட்ட துஆவை கூறினார்கள்.
இறைவா உனக்கே எல்லா புகழும். சிரமத்தில் முறையிடுபவனின்
முறையீடு உன் பக்கமே உள்ளது நீயே உதவிதேட தகுந்தவன். தீமையைவிட்டு விலகவும் நன்மையைசெய்யவும் சக்தி உன்னைக்கொண்டே உள்ளது.
நான் இந்த துஆவை நபியிடம் கேட்டதில் இருந்து விட்டதேயில்லை. என்று அப்துல்லாஹ்வும். இதே போன்று அவருக்கு அடுத்துள்ள அபூவாயிலும் அஹ்மஸ்வும் கூறுகின்றார்கள்.
நூல் : துர்ருல் மன்ஸூர்
இறைவன் தந்த சோதனையிலும் நன்மையை கண்ட மேன்மக்கள்.
عن عمرو بن شعيب ، عن أبيه ، عن جده ، قال : سمعت رسول الله صلى الله
عليه وسلم يقول : « خصلتان من كانتا فيه كتبه
الله صابرا شاكرا ، ومن لم يكونا فيه لم يكتبه صابرا ولا شاكرا ، من نظر في دينه إلى
من هو فوقه فاقتدى به ، ومن نظر في دنياه إلى من هو دونه فحمد الله على ما فضله به عليه ، كتبه الله صابرا
شاكرا ، ومن نظر في دينه إلى من هو دونه ، ونظر في دنياه إلى من هو فوقه فأسف على ما
فاته ، لم يكتبه الله صابرا ولا شاكرا »
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். யாரிடம் இரண்டுகுணங்கள் இருக்குமோ அவர்களை அல்லாஹ் நன்றி உள்ளவராகவும் பொறுமையாளராகவும் பதிவு செய்வான்.
1.
தீனுடைய விஷயத்தில் தன்னைவிட மேலானவரை பார்த்து அவனை பின்பற்றினான்.
2. உலக விஷயத்தில் தன்னைவிடவும் கீழ் நிலையில் உள்ளவரை கண்டு அவனைவிடவும் தன்னை சிறப்பாக்கிய அல்லாஹ்வை புகழ்ந்தான்.
நூல் : திர்மிதி
روى - ان عيسى عليه السلام مرّ بغنى فاخذ بيده فذهب به الى فقير فقال
هذا اخوك فى الاسلام وقد فضلك الله عليه بالسعة فاشكر لله على ذلك ثم اخذ بيد الفقير
فذهب به الى مريض فاقل ان كنت فقيرا فلست بمريض ما كنت تصنع
لو كنت فقيرا مريضا فاشكر لله ثم ذهب بالمريض الى كافر فقال ما كنت تصنع لو كنت فقيرا مريضا كافرا فاشكر لله
நபி ஈஸா (அலை) அவர்கள் ஒரு செல்வந்தனை கண்டு இறைவனின் அருட்கொடையை அவனுக்கு உணர்த்த விரும்பி அவனை ஒரு ஏழையிடம் அழைத்துவந்து அவனை காண்பித்து கூறினார்கள். இவனைப்போன்று அல்லாஹ் உன்னை ஏழையாக்காமல் விட்டானே அதற்கு நீ இறைவனுக்கு நன்றிசெலுத்து என்றார்கள்.
பிறகு அந்த ஏழையை நோயாளியிடம் அழைத்து சென்று நீ ஏழையாகத்தான் இருக்கின்றாய்
நோயாளியாக இல்லை. இறைவன் இவரைப்போன்று உன்னையும் ஏழையாகவும் நோயாளியாகவும்
ஆக்கியிருந்தால் உன் நிலை என்னவாகும் எனவே அதை நினைத்து அந்த ஏழ்மைக்கு நன்றிசெய் என்றார்கள்.
பிறகு நோயாளியும் ஏழையுமான அவரை ஒரு இறைமறுப்பாளரிடம்
அழைத்துச் சென்று சொன்னார்கள். இவரைப்போன்று அல்லாஹ் உன்னை காபிராகவும் நோயாளியாகவும்
ஏழையாகவும் ஆக்கியிருந்தால் உன் நிலை என்னவாகும் . எனவே இதை நினைத்துப்பார்த்து அல்லாஹ்வுக்கு
நன்றி செலுத்து என்றார்கள்.
முஹம்மது பின் வாசிஹ் (ரஹ்) அவர்களின் காலில் ஒரு கொப்பளம் இருந்தது அதைக்கண்ட ஒருவர் உங்களின் இந்த நிலையைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன் என்று சொன்னபோது அவர்கள் சொன்னார்கள்.
நான் இந்த கொப்பளம் வந்த்தில் இருந்து இதற்கு என்று தனியாக நன்றி செய்கின்றேன் ஏன் தெரியுமா இது என் கண்ணில் வரவில்லையே அப்படி வந்திருந்தால் எவ்வளவு கஷ்டம் இப்படி வராமல் தடுத்த அல்லாஹ்வுக்கு நன்றி என்றார்கள்.
நூல் : இஹ்யா உலூமுத்தீன் பாகம்.4
இறைவனுக்கு நன்றி செலுத்த தங்களின் உயிரையே இழந்த ஸஹாபாக்கள்.
وقال ابن الكلبي: كان عمرو بن الجموح آخر الأنصار إسلاماً، ولما ندب رسول
الله صلى الله عليه وسلم الناس إلى بدر، أراد الخروج معهم، فمنعه بنوه بأمر رسول الله
صلى الله عليه وسلم لشدة عرجه. فلما كان يوم أحد قال لبنيه: منعتموني الخروج إلى بدر،
فلا تمنعوني الخروج إلى أحد! فقالوا: إن الله قد عذرك. فأتى رسول الله صلى الله عليه
وسلم فقال: يا رسول الله، إن بني يريدون أن يحبسوني عن هذا الوجه والخروج معك فيه،
والله إني لأرجو أن أطأ بعرجتي هذه في الجنة! فقال رسول الله صلى الله عليه وسلم: أما
أنت فقد عذرك الله، ولا جهاد عليك، وقال لبنيه: لا عليكم أن لا تمنعوه، لعل الله أن
يرزقه الشهادة. فأخذ سلاحه وولى وقال: اللهم ارزقني الشهادة ولا تردني إلى أهلي خائباً.
فلما قتل يوم أحد جاءت زوجه هند بنت عمرو، عمة جابر بن عبد الله، فحملته وحملت أخاها
عبد الله بن عمرو بن حرام، فدفنا في قبر واحد، فقال رسول الله صلى الله عليه وسلم:
" والذي نفسي بيده لقد رأيته يطأ في الجنة بعرجته
உஹது
போரில் கலந்து கொள்ள பேரார்வம் கொண்ட عمرو بن الجموح அவர்களை அவர்களின் பிள்ளைகள் உங்கள் மீது போர் கடமை இல்லை என்று கூறி தடுத்தார்கள்
நபியும்
போரில் உங்களுக்கு விதிவிலக்குண்டு என்றார்கள் ஆனாலும் அவர் நபியிடம் சொன்னார்
والله إني لأرجو أن أطأ بعرجتي هذه في الجنة
நாயகமே
அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் இந்த ஊனமான கால்கொண்டு சொர்க்கத்தில் நடக்க விரும்புகிறேன் என்றார்
பிறகு போர்களம் சென்றார் புறப்படும்முன்பு வீட்டில் வைத்து இப்படி துஆ செய்தார்கள்.
இறைவா
எனக்கு இப்போரில் ஷஹீதாகும் பாக்கியம் தருவாயாக நஷ்டவாளியாக வீட்டிற்கு திரும்பி அனுப்பி விடாதே அவர் எண்ணியதைப் போன்றே கொல்லப்பட்டார் அவர் ஷஹீதான பின் நபி சொன்னார்கள் சத்தியமிட்டு நான் சொல்கின்றேன் அம்ர் ஊனமுற்ற காலுடன் சொர்க்கத்தில் நடப்பதை கண்டேன் என்றார்கள்
நூல் (اسد الغابة)
இறைவனுக்கு நன்றி செலுத்தி நிறைவு காண முடியுமா..
فقال داود عليه السلام كيف
أطيق شكرك وأنت الذي تنعم علي ثم ترزقني على النعمة الشكر فالنعمة منك والشكر منك فكيف
أطيق شكرك؟ فقال جل وعلا : يا داود الآن عرفتني حق معرفتي
தாவூத்(அலை) அல்லாஹ்விடம் யா அல்லாஹ் நான் உனக்கு நன்றி செலுத்த
எப்படி சக்தி பெறமுடியும் ஏனென்றால் நீ எனக்கு உபகாரம்செய்கின்றாய் பிறகு அந்த உபகாரத்துக்கு
நன்றி செலுத்தவும் நீ எனக்கு உதவி செய்கின்றாய்.
எனவே உபகாரத்தையும் அந்த உபகாரத்துக்கு
நன்றி செலுத்துவதையும் உன்னிடமே நான் பெற்றேன் எனவே நான் உனக்கு செலுத்தும் சக்தியை
எப்படி பெறமுடியும் என்று கூறியபோது அல்லாஹ் சொன்னான். இப்பொழுதான் என்னை அறிய வேண்டிய
விதத்தில் அறிந்துகொண்டீர்கள் என்றான்..
நூல் : தப்ஸீர் தபரி.
எனவே நம்முடைய வாழ்க்கையை அழகுபடுத்தி பார்க்கும்
நம்முடைய இரட்சகனுக்கு காலம் முழுவதும் நாம் நன்றி செலுத்தினாலும் அவன் கொடுத்த பாக்கியங்களுக்கு ஈடாகாது..
அதை நம் மனதில்நிறுத்தி அல்லாவிற்ஓகு நன்றியுள்ள அடியானாக ஆக முயற்சி
செய்வோமாக ..
عن إبراهيم التيمي رضي الله عنه قال : قال رجل عند عمر رضي الله عنه
: اللهم اجعلني من القليل . فقال عمر رضي الله عنه : ما هذا الدعاء الذي تدعو به؟ قال
: إني سمعت الله يقول { وقليل من عبادي الشكور } فأنا أدعوا الله أن يجعلني من ذلك
القليل فقال عمر رضي الله عنه : كل الناس أعلم من عمر
உமர்(ரலி) அவர்கள் அருகில் இருந்த ஒருவர் என்னை குறைந்த வர்களில் ஆக்குவாக என்று துஆ செய்தார். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள் ஏன் இப்படி துஆ செய்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார்.
அல்லாஹ் குர் ஆனில் எனக்கு நன்றி செலுத்தக் கூடியவர்கள் குறைந்த வர்களே என்று கூறுகிறானே அந்த குறைந்தவர்களில் என்னையும் ஆக்குவாயாக என்றுதான் துஆ செய்தான் என்றார்.
இதனைக் கேட்டதும் உமர்(ரலி) அவர்கள் உமரை விட எல்லோரும் அறிவாளியாக இருக்கின்றார்கள் என்றார்கள்… அதாவது எனக்கு
(இந்த அறிவு கூட இல்லாமல் ஆகிவிட்டதே என்று கைசேதப்பட்டார்கள் )
நூல் :தப்ஸீர் குர்துபீ http://www.amaliusmani.com/http://www.amaliusmani.com/
அஸ்ஸலாமு அலைக்கும்.மீண்டும் வருகை தந்த உங்களுக்கு ஜசாகல்லாஹ் ஷுக்ரன்./ மிக அருமை
ReplyDeleteமௌலானா! dglyousufigal அப்துர் ரஹ்மான் எழுதுகிறேன். உலமாக்களின் ஒத்துழைப்பு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு. எங்களுக்கும் எதாவது பொறுப்புக் கொடுங்கள்! முடிந்த அளவு உதவி செய்கிறோம்
ReplyDeleteUngal pani sirakkattum
ReplyDeleteஅருமையான கட்டுரை பயன் மிக்கது. என் போன்ற ஆலிம்களுக்கு பயன் தர வல்லது.
ReplyDeleteரொம்பவும் பிரயோஜனமான கட்டுரை
ReplyDelete