Wednesday, 30 April 2014

பயணங்கள் தரும் பாடங்கள்.



எல்லாம் வல்ல இறைவன் உலகத்தின் எல்லா படைப்புகளையும் மனிதனுக்காக வேண்டிபடைத்தான் ஆனால் அந்த மனிதனை தன்னை வணங்கவும் அறிந்துகொள்ளவும் படைத்திருக்கிறான். அந்த அல்லாஹ்வை நாம் அறிந்துகொள்ளவேண்டுமானால் அவனுடைய எல்லா படைப்புகளையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். இவ்வாறு நாம் படைப்பை அறிந்து படைத்தவனை தெரிந்துகொள்வதற்கு உலகத்தின் பல பகுதிகளுக்கும் நாம் செல்லக்கூடிய சுற்றுலா உதவியாக அமையும். நம்முடைய இந்த கோடைகாலத்தின் சுற்றுலாவை இந்த நிய்யத்தில் அமைத்துக்கொண்டால் இந்த சுற்றுலாவின் மூலம் மறுமையில் சொர்க்கம் கிடைக்கும்

சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் பாடங்கள்.

حدثنا مالك بن دينار قال: أوحى الله تعالى إلى موسى، عليه السلام، أن يا موسى، اتخذ نعلين من حديد وعصا، ثم سِحْ في الأرض، واطلب الآثار والعبر، حتى تتخرق النعلان (4) وتكسر العصا

அல்லாஹ் ஒரு முறை மூஸா நபிக்கு வஹி அறிவித்தான் மூஸாவே நீங்கள் இரும்பினால் செய்யப்பட்ட செருப்பையும் ஒரு கம்பையும் எடுத்துக்கொண்டு பூமியில் சுற்றுப்பயணம் செய்து படிப்பினைகளையும் பாடங்களையும் தேடுங்கள் எதுவரை என்றால் அந்த இரும்பு செருப்புகள் கிழிந்து போகும் வரையிலும் அந்த கம்பு உடைந்து போகும் வரையிலும்.

நூல். தப்ஸீர் இப்னு கஸீர்.

சுற்றுலாவில் நாம் மிருகங்களை காணும்போது வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லா படைப்புகளும் அல்லாஹ் திக்ரு செய்கின்றன என்ற வசனத்தை எண்ணிப்பார்க்க வேண்டும்.

تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا

17:44. ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.


، عن ابن عمر ، عن عمر بن الخطاب رضي الله عنه . أن رسول الله صلى الله عليه وسلم كان في محفل من أصحابه ، إذ جاء أعرابي من بني سليم قد صاد ضبا ، وجعله في كمه ليذهب به إلى رحله فيشويه ويأكله ، فلما رأى الجماعة قال : ما هذا ؟ قالوا : هذا الذي يذكر أنه نبي ، فجاء حتى شق الناس ، فقال : واللات والعزى ما اشتملت النساء على ذي لهجة أبغض إلي منك ولا أمقت ، ولولا أن يسميني قومي عجولا لعجلت عليك فقتلتك فسررت بقتلك : الأسود ، والأحمر ، والأبيض ، وغيرهم ، فقال عمر بن الخطاب : يا رسول الله ، دعني فأقوم فأقتله ، قال : « يا عمر ، أما علمت أن الحليم كاد أن يكون نبيا » ، ثم أقبل على الأعرابي ، فقال : « ما حملك على أن قلت ما قلت ؟ وقلت غير الحق ؟ ولم تكرمني في مجلسي » قال : وتكلمني أيضا ؟ استخفافا برسول الله صلى الله عليه وسلم ، واللات والعزى لا آمنت بك أو يؤمن بك هذا الضب ، وأخرج الضب من كمه وطرحه بين يدي رسول الله صلى الله عليه وسلم ، فقال رسول الله صلى الله عليه وسلم : « يا ضب » ، فأجابه الضب بلسان عربي مبين يسمعه القوم جميعا : لبيك (1) وسعديك (2) يا زين من وافى القيامة ، قال : « من تعبد يا ضب ؟ » قال : الذي في السماء عرشه ، وفي الأرض سلطانه ، وفي البحر سبيله ، وفي الجنة رحمته ، وفي النار عقابه ، قال : « فمن أنا يا ضب ؟ » قال : رسول رب العالمين ، وخاتم النبيين ، وقد أفلح من صدقك ، وقد خاب من كذبك ، قال الأعرابي : لا أتبع أثرا (3) بعد عين والله لقد جئتك وما على ظهر الأرض أبغض إلي منك ، وإنك اليوم أحب إلي من والدي ، ومن عيني ، ومني ، وإني لأحبك بداخلي وخارجي وسري وعلانيتي : أشهد أن لا إله إلا الله ، وإنك رسول الله ، فقال رسول الله صلى الله عليه وسلم : الحمد لله الذي هداك ب

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி  உடும்பை வேட்டையாடி உடும்போடு அங்கே வந்தார். அவர் அந்த கூட்டத்தாரை கண்ட போது இது என்ன கூட்டம் என்று கேட்டார். அப்போது அவர்கள் தன்னை நபி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாரே அவருடைய கூட்டம்தான் இது என்றார்கள். உடனே அக்கிராமவாசி கூட்ட்த்தை கடந்து உள்ளே வந்தார். அவர் நபியைப்பார்த்து எந்த பெண்ணும் உம்மைவிட எனக்கு கோபமான வெறுப்பான உயிரை பெற்றெடுக்கவில்லை. என் கூட்டத்தார் எனக்கு அவசரக்காரன் என்று பெயர் சூட்டிவிடுவார்களோ என்று எண்ணாவிட்டால் உம்மை கொலைசெய்து விடுவேன் என்றார். உம்மை நான் கொலை செய்துவிட்டால் கருப்பர். வெள்ளையர். சிகப்பர். உள்ளிட்ட அனைவரும் சந்தோஷம் படுவர். இதை கேட்ட உடன் உமர் (ரலி) அவர்கள் நபியிடம் எனக்கு அனுமதி தாருங்கள் அவரை  நான் கொலைசெய்துவிடுகிறேன் என்றார் அப்போது அவரிடம் நாயகம்( ஸல்) அவர்கள் உமரே  சகிப்பு தன்மை உடையவர்தான் நபியாக இருக்க முடியும் என்பது உனக்கு தெரியாதா என்று கேட்டார்கள். அப்போது நபியவர்கள் அக்கிராமவாசியிடம் நீ இவ்வாறு சொல்வதற்கும் சத்தியத்திற்கு மாறாக பேசுவதற்கும் உம்மை தூண்டியது எது என்றும் மேலும் நீ என்னை மதிக்காமல் இழிவாக பேசியதற்கு காரணம் என்ன என்று கேட்டார்கள். அப்போது அவர் நபியிடம் சொன்னார் லாத் உஸ்ஸாவின் மீது ணையாக என்னிடம் இருக்கும் இந்த உடும்பு உம்மை ஈமான்கொள்ளும் வரை நான் ஈமான் கொள்ளமாட்டேன் என்று கூறிவிட்டு தன்னிடம் இருந்த உடும்பை நபியின் முன்னால் போட்டார். அப்போது நாயகம் உடும்பை அழைத்தார்கள் உடனே அது எல்லோரும் கேட்கும்படியாக தெளிவான அரபிமொழியில் அது கூறியது நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்.

அப்போது நபியவர்கள் உடும்பிடம் நீ யாரை வணங்குகிறாய் என்று கேட்டபோது அது சொன்னது நான் அல்லாஹ்வை வணங்குகிறேன் அவனுடைய அர்ஸ் வானத்தில் இருக்கிறது அவனுடைய ஆட்சிதான் பூமியில் இருக்கிறது. கடலிலும் பாதை அமைத்தவன் அவன் தான் சொர்க்கத்தின் அவனின் அருளும் நரகத்தில் அவனுடைய தண்டணையும் இருக்கிறது என்று சொன்னது. மீண்டும் நாயகம் அந்த உடும்பிடம் நான் யார் என்று கேட்டார்கள் அப்போது அது தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நபிமார்களில் இறுதியானவர் என்றும் கூறியதோடு உங்களை உண்மைபடுத்தியன் வென்றான் பொய்படுத்தியவன் நஷ்டமடைந்தான் என்றும் சொன்னது. இதைக்கண்ட அக்கிராமவாசி சொன்னார் இந்த அற்புதமான காட்சியை கண்டபிறகு வேறு எந்த பாதையும் நான் பின்பற்றமாட்டேன் என்று கூறியதுடன் மேலும் அவர் சொன்னார் நான் உங்களிடம் வரும்போது இந்த பூமியில் எனக்கு உங்களைவிடவும் மிக வெறுப்பானவர் யாரும் இருக்கவில்லை ஆனால் இப்போது நீங்கள் என்னிடத்தில் என் பெற்றோரை விடவும் என் கண்ணை விடவும் என் உயிரை விடவும் மிகவும் பிரியமானவராக ஆகிவிட்டீர்கள்.இன்னும் நான் உங்களை உள்ளத்தாலும் வெளிப்படையிலும் இரகசியத்திலும் பரகசியத்திலும் நேசிக்கிறேன் என்று சொல்லி கலிமாவை மொழிந்தார்.இதைக்கேட்ட நாயகம் அவர்கள் என்னை கொண்டு உனக்கு நேர்வழியை காட்டியை அல்லாஹ்விற்கே எல்லா புகழும் என்று சொன்னார்கள்.

நூல். பைஹகீ.

மலைகள் நிறைந்த பகுதிகளுக்கும். அறிவிகளுக்கும் செல்லும்போது அப்பாறைகளுக்கு இருக்கின்ற இறையச்சை நாம் சிந்திக்க வேண்டும்.

ثُمَّ قَسَتْ قُلُوبُكُم مِّن بَعْدِ ذَٰلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً ۚ وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ

2:74. இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன; அவை கற்பாறையைப்போல் ஆயின; அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின; (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு; இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு; இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை.

روي أنه مر بعض الأنبياء بحجر صغير يخرج من ماء كثير فتعجب منه فأنطقه الله تعالى فقال: منذ سمعت قوله تعالى: " وقودها الناس والحجارة " فأنا أبكي من خوفه، فسأله أن يجيره من النار فأجاره، ثم رآه بعد مدة على مثل ذلك فقال: لم تبكي الآن؟ فقال: ذاك بكاء الخوف وهذا بكاء الشكر والسرور! وقلب العبد كالحجارة أو أشد قسوة ولا تزول قسوته إلا بالبكاء في حال الخوف والشكر جميعاً

நபிமார்களில் ஒருவர் ஒரு பயணத்தில் ஒரு சிறு கல்லை கடந்து சென்றார்கள் அப்போது அக்கல்லில் இருந்து அதிகமான நீர் வெளியாகி கொண்டிருந்தது அதை அந்த நபி வியப்போடு பார்த்தார்கள். அப்போது அல்லாஹ் அந்த கல்லை பேச வைத்தான் அக்கல் இவ்வாறு பேசியது நாளை மறுமையில் நரகத்தில் எரியும் பொருளாக இருப்பது மனிதர்களும் அவர்கள் வணங்கும் கற்களும்தான் என்று எப்போது நான் அல்லாஹ்வின் வேதத்தின் சொல்லை கேட்டேனோ அப்போதிலிருந்து அல்லாஹ்வின் பயத்தால் அழுதுகொண்டிருக்கிறேன் என்று கூறியது அப்போது அந்த நபி அக்கல்லுக்கு நரக விடுதலை அளிக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டினார்கள் அல்லாஹ் அக்கல்லுக்கு விடுதலையை வழங்கினான். இதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அக்கல்லை கண்டார்கள் அப்போதும் அது அழுது கொண்டிருந்தது. அக்கல்லிடம் அவர்கள் இப்போது நீ ஏன் அழுகிறாய் என்று கேட்டார்கள் அதற்கு அக்கல் சொன்னது அன்று அழுதது அல்லாஹ்வின் அச்சத்தால். இந்த அழுகையோ இறைவனின் நன்றியின் வெளிப்பாடாகவும் ஆனந்தத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

நூல். இஹ்யா உலூமுத்தீன்.

சிறப்பான பயணத்திற்கு நாம் முன் கூட்டியே இரயில். பஸ் போன்றவைகளுக்கு டிக்கட்டை பதிவு செய்வது மறுமையின் சிறப்பான பயணத்தின் தயாரிப்பை உணர்த்துகிறது.

وعن عائشة أنهم ذبحوا شاة فقال النبي صلى الله عليه وسلم : " ما بقي منها ؟ " قالت : ما بقي منها إلا كتفها قال : " بقي كلها غير كتفها " . رواه الترمذي وصححه

ஆயிஷா நாயகி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒரு முறை நபியின் குடும்பத்தார்கள் ஒரு ஆட்டை அறுத்து தர்மம் செய்தார்கள் அப்போது (ஸல்) அவர்கள் அந்த என்ன மீதம் இருக்கிறது என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் ஆட்டின் முன் சந்துமட்டும் மிச்சம் இருக்கிறது என்றார்கள். அதைக்கேட்டு நாயகம் சொன்னார்கள் நாம் அந்த ஆட்டில் எதை பிறருக்கு வழங்கினோமோ அதுதான் இருக்கிறது. (மறுமைக்கு) நம்மிடத்தில் இருக்கும் முன் சந்தல்ல
.
நூல். திர்மிதி

பயணத்தில் விண்ணிலும் மண்ணிலும் விபத்தில்லாமல் பாதுகாப்பாக செல்லும் வாகனம் அந்த வாகனத்தை இயக்கும் ஒரு மனிதன் இருப்பதைப்போன்று உலகத்தின் எல்லா படைப்புகளையும் படைத்த ஒருவன் இருக்கிறான் என்பதை சிந்திக்க தூண்டும்.

وقيل: يا رسول الله، أي الأعمال أفضل؟ فقال " العلم بالله عز وجل " فقيل: أي العلم تريد؟ قال صلى الله عليه وسلم " العلم بالله سبحانه " فقيل له: نسأل عن العمل وتجيب عن العلم! فقال صلى الله عليه وسلم " إن قليل العمل ينفع مع العلم بالله، وإن كثير العمل لا ينفع مع الجهل بال

ஒரு முறை நபியிடத்தில் அமல்களில் சிறந்தது எது என்று கேடகப்பட்ட போது அவர்கள் அல்லாஹ்வை அறிந்துகொள்ளுதல் என்றார்கள். அதைக்கேட்ட தோழர்கள் நபியிடம் அமல்களைப்பற்றி நாங்கள் கேட்கின்றோம் ஆனால் தாங்களோ இறை கல்வி தொடர்பான பதிலை கூறுகிறீர்களே என்றார்கள் அப்போது நபியவர்கள் கூறினார்கள் நிச்சயமாக அல்லாஹ்வை அறிந்து குறைவாக செய்யப்படும் அமல் பயன் அளிக்கும். ஆனால் அல்லாஹ்வை அறியாத நிலையில் செய்யப்படும் அமல் அது அதிகமாக இருந்தாலும் பயன் அளிக்காது. என்று கூறினார்கள்.
நூல். இஹ்யா உலூமுத்தீன்.

அனையில் இருந்து பாய்ந்து வரும் தண்ணீர் ஒளி வீசும் மின்சாரம் செய்ய பயன்படுகிறது இதன் மூலம் மனிதன் பிறருக்கு உதவி செய்து வாழவேண்டும் என்ற பாடம் கிடைக்கிறது.

: قال رسول الله صلى الله عليه وسلم : " من أغاث ملهوفا كتب الله له ثلاثا وسبعين مغفرة واحدة فيها صلاح أمره كله وثنتان وسبعون له درجات يوم القيامة "

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பாதிக்கப்பட்ட மனிதனுக்கு யார் உதவிசெய்கிறானோ அல்லாஹ் அவருக்கு 73 மன்னிப்பை பதிவு செய்வான் அவற்றில் ஒரு மன்னிப்பே உலக காரியம் அனைத்தையும் சீராக்கிவிடும். மீதமுள்ள 72 மன்னிப்புகள் அவரின் மறுமை அந்தஸ்துக்கு காரணமாகிவிடும்.

நூல். மிஸ்காத்

பயணத்தில் உணவிலும் தங்குமிடத்திலும் நமக்கு கிடைப்பதைக்கொண்டு திருப்தி அடைந்து கொள்வது வாழ்க்கை பயணத்தில் அல்லாஹ் தந்ததை கொண்டு திருப்தியோடு வாழ  நம்மை தயார் செய்கிறது.

وقال صلى الله عليه وسلم: " من رضي من الله تعالى بالقليل من الرزق رضي الله تعالى منه بالقليل من العمل "

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் அல்லாஹ் தரும் குறைவான ரிஸ்கை திருப்தி அடைந்துகொள்கிறானோ அல்லாஹ் அவனிடம் இருந்து குறைவான அமலைக்கொண்டே திருப்தி அடைந்து கொள்வான்.

நூல். இஹ்யா உலூமுத்தீன்.

சூரிய உதயத்தை  சில இடங்களில் காணும் காட்சி அல்லாஹ்வின் வள்ளமையை காட்டுகிறது.

الحديث عن أسماء بنت عميس من طريقين أن النبي صلى الله عليه وسلم كان يوحى إليه ورأسه في حجر على فلم يصل العصر حتى غربت الشمس فقال رسول الله صلى الله عليه وسلم أصليت يا على قال لا فقال اللهم إنه كان في طاعتك وطاعة رسولك فاردد عليه الشمس قالت أسماء فرأيتها غربت ثم رأيتها طلعت بعد ما غربت ووقفت على الجبال والأرض وذلك بالصهباء في خيبر قال وهذان الحديثان ثابتان ورواتهما ثقات

ஒரு முறை நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ இறங்கிய போது அவர்கள் அலி (ரலி) அவர்களின் மடியின் தலை வைத்து படுத்திருந்தார்கள். அப்போது அலி (ரலி) அவர்கள் அஸர் தொழுகையை தொழவில்லை சூரியன் மறைந்துவிட்டது நபியவர்கள் அலியிடம் நீங்கள் அஸர் தொழுகையை தொழுதீர்களா என்று கேட்டபோது அவர்கள் இல்லையென்றார்கள். உடனே நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு துஆ செய்தார்கள் இறைவா அலி  (ரலி) அவர்கள் உன்னுடைய வழிபாட்டிலும் உன் தூதரின் வழிபாட்டிலும் ஈடுபட்டிருந்தார் எனவே நீ மறைந்த சூரியனை திருப்பி அனுப்பி வை என்றார்கள். இந்த நிகழ்வை கூறும் அஸ்மா நாயகி  (ரலி) கூறுகிறார்கள். மறைந்த சூரியன் மீண்டும் உதய மானதை  நான் கண்டேன்.

நூல். ஷிபா
وعن سهل
 بن معاذ عن أبيه أن النبي صلى الله عليه وسلم قال : " من كظم غيظا وهو يقدر على أن ينفذه دعاه الله على رؤوس الخلائق يوم القيامة حتى يخيره في أي الحور شاء " . رواه الترمذي وأبو داود وقال الترمذي : هذا حديث غريب

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் கோபத்தை பயன் படுத்த சக்தியிருந்தும் அதை யார் மென்று விழுங்கினார்களோ அவர்களை நாளை மறுமையில் எல்லா படைப்பின்ங்களின் முன்னிலையிலும் அழைத்து நாடிய ஹூருள் ஈன் பெண்களை தேர்வு செய்யும் படி 
அல்லாஹ் சொல்வான்.

நூல். திர்மிதி

பயணத்தில் பாதுகாப்புக்கு ஓத வேண்டிய துஆ.

وعن ابن عباس رضى الله عنهما يلتقى الخضر والياس فى كل عام فى الموسم فيحلق كل واحد منهما رأس صاحبه ويتفرقان على هذه الكلمات « بسم الله ما
شاء الله لا يسوق الخير الا الله ما شاء الله لا يصرف السوء الا الله 

கிள்ரு (அலை). இல்யாஸ் (அலை) ஆகிய இருவரும் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுடைய காலத்தில் சந்தித்து ஹஜ்ஜின் கடமையை நிறைவு செய்துவிட்டு இருவரில் ஒவ்வொருவரும் அடுத்தவரின் தலைமுடியை எடுத்துக்கொள்வார்கள் பிறகு இருவரும் கீழ்காணும் வார்த்தைகளை ஓதிவிட்டு பிரிவார்கள். இந்த நிகழ்வை கூறுகிற அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள் காலையிலும் மாலையிலும் யார் மூன்று முறை ஓதிவருகிறார்களோ அவர்களை அல்லாஹ் நெருப்பில் கறிந்து போவதை விட்டும். நீரில் மூழ்குவதை விட்டும். பொருள் திருட்டு போவதை விட்டும். இன்னும் ஷைத்தான் .பாம்புகள். தேள்கள் இவைகளின் தீங்குகளை விட்டும் பாதுகாப்பான்.

நூல். ரூஹுல் பயான்
.
சுற்றுலாவில் பூங்காகளில் நாம் காணும் மலர்ந்த மலர்களின் காட்சிகள் மனிதனை மனிதன் மலர்ந்த முகத்தோடு பார்க்க தூண்டுகிறது.

وعن أبي ذر قال : قال رسول الله صلى الله عليه وسلم : " تبسمك في وجه أخيك صدقة

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உன்னுடைய சகோதரனை புன்முறுவலோடு சந்திப்பது தர்ம்ம் என்றார்கள்.
நூல். மிஸ்காத்.