Thursday, 10 April 2014

நல்லோர்களுக்கு வாக்களிப்போம்.


عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان
 رواه مسلم

தீமையை கையால் தடுங்கள் முடியாவிட்டால் நாவால் தடுங்கள் இயலாவிட்டால் உள்ளத்தால் வெறுங்கள் என்றார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.

நூல். முஸ்லிம்.

இந்த அற்புதமான ஹதீஸைக்கொண்டு அமல் செய்து தீமைகளையும் தீயவர்களையும் ஒழிப்பதற்கும் மதவாதிகளையும் மனித இனத்தின் விரோதிகளையும் தலைதூக்கமுடியாமல் செய்வதற்கும்  நமது கையால் வாக்களித்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான சிறந்தவாய்ப்புதான் தேர்தல் என்பது இதை நாம் சந்திக்கயிருக்கும் இந்த நேரத்தில் ஆட்சியாளர்களின் குணங்கள் எப்படி  இருக்க வேண்டும்  எத்தகைய தன்மை உடையவர்களை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியமாகும்.

முதலில் ஆட்சியாளர்கள் காலம் சென்ற முன்மாதிரி தலைவர்களின் வரலாறை படிக்க வேண்டும்.

أنه قال: لسالم بن عبد الله بن عمر: اكتب لي سيرة عمر حتى أعمل بها

உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்கள் கலீபா பொருப்பை ஏற்றபோது ஸாலிம் இப்னு அப்துல்லாவுக்கு கடிதம் எழுதினார்கள் எனக்கு உமர் (ரலி) அவர்களின் வரலாறை எழுதி அனுப்புங்கள் நான் அவர்களைப் போன்று ஆட்சி செய்யும் பாக்கியம் பெற வேண்டும்

நூல்;அல்பிதாயா வந் நிஹாயா

எல்லா மதத்தவர்களையும் மனமார நேசிக்க வேண்டும் உதவ வேண்டும்

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஒரு கூட்டத்தாரின் வாசலை கடந்து சென்றப் பொழுது அங்கே வயதான. பார்வை பாதித்த ஒருவர் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார் உமர் அவரை விசாரித்து அவர் யூதர் என்பதை தெரிந்து கொண்டு அவரிடம் நான் பார்க்கும் இந்த நிலையின் பக்கம் உன்னை கொண்டு வந்தது எது என்று கேட்ட பொழுது அவர் சொன்னார் நான் அரசாங்கத்திற்கு வரி கட்டுவதற்காகவும் எனது தேவை அடைந்து கொள்வதற்காகவும் வயோதிக தன்மை காரணமாகவும் நான் யாசகம் கேட்டு வருகின்றேன் என்றார் இதைக் கேட்டு கருணையுடன் அவரின் கை பிடித்து உமர் (ரலி) அவர்கள் அந்த நபரை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று சில பொருட்களை கொடுத்தார்கள் இதற்கு பின் அவரை பைத்துல்மால் பொறுப்புதாரியிடம் அனுப்பி வைத்துச் சொன்னார்கள் இவரையும் இவரைப் போன்றவரையும் கவனித்து உதவி செய்யுங்கள் ஏனெனில் அவரின் இளமையின் உழைப்பை நாம் உறிஞ்சி விட்டு அவரின் வயோதிக காலத்தில் அவருக்கு உதவாமல் விடுகின்ற பொழுது நாம் அவரிடம் நேர்மையாக நடந்து கொண்டதாக ஆகாது என்றார்கள்

நூல். ஸக்சிய்யத்து உமர்(ரலி)

 தலைவர்  இறையச்சம் உள்ளவராகவும் சுனாமி பூகம்பம் பஞ்சம் வெள்ளம் போன்ற பேரிடர்கள் தொடராமல் பாதுகாக்கும் ஆன்மீக பலம் உடையவராக இருக்க வேண்டும்.

عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ
كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا قَالَ فَيُسْقَوْنَ

உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஞ்சம் ஏற்படும் சமயங்களில் நபியின் சாச்சா அப்பாஸ்(ரலி) அவர்களை தன் அருகில் வைத்து கொண்டு இப்படி துஆ செய்வார்கள் இறைவா இதற்கு முன்பு நாங்கள் மழை தேடுகின்ற பொழுது எங்கள் நபியின் துணை கொண்டு மழை கேட்டிருக்கின்றோம் நீ அதை தந்திருக்கின்றாய் இப்பொழுது நாங்கள் நபியின் சாச்சாவை கொண்டு மழை தேடுகின்றோம் மழையை வழங்கு என்று துஆ செய்வார்கள் உடனே மழை இறங்கி விடும்.

நூல். புகாரி. மிஸ்காத்.

நீதியான அதிகாரிகளை ஊக்கப்படுத்த வேண்டும் அவரின் நேர்மையான நிலைபாடு தனக்கு எதிராக இருந்தாலும் அவரை பழிவாங்கக் கூடாது.

عن الشعبي قال: اشترى عمر فرسا من رجل على أن ينظر إليه، فأخذ الفرس فسار به فعطب، فقال لصاحب الفرس: خذ فرسك، فقال: لا ! فاجعل بيني وبينك حكما، قال الرجل: نعم ! شريح، قال عمر: ومن شريح ؟ قال: شريح العراقي، قال: فانطلقا إليه فقصا عليه القصة، فقال: يا أمير المؤمنين رد كما أخذت أو خذ بما ابتعته، فقال عمر: وهل القضاء إلا هذا ؟ سر إلى الكوفة فقد وليتك قضاءها، فإنه لاول يوم عرفه يومئذ.

ஜனாதிபதி உமர்(ரலி) அவர்கள் ஒருவரிடம் ஒரு குதிரையை விலைக்கு வாங்கினார்கள் பிறகு அதன் மீது அமர்ந்து சென்றார்கள் சற்று தூரம் போனவுடன் அது நொண்ட ஆரம்பித்தது . உடனே குதிரையை திரும்பி கொண்டு வந்து அதை ஒப்படைத்து தன் பணத்தை திரும்ப கேட்டார்கள் அவர் அதை மறுத்தார் உமர்(ரலி) அவர்கள் அப்படியானால் நமக்கு மத்தியில் விவகாரம் பேச நீதிபதியை ஏற்படுத்துங்கள் என்றார்கள் அவர் ஈராக் வாசியான ஷூரைஹ் என்பவரை நீதிபதியாக நியமிக்கலாம் என்றார்கள் உமருக்கு அவர் அறிமுகமே இல்லை ஆனாலும் ஏற்றுக் கொண்டார்கள் ஷூரைஹ் சொன்னார் உமர் (ரலி) அவர்களிடம்  தாங்கள் எப்படி குதிரையை வாங்கினீர்களோ அப்படியே திரும்ப கொடுத்து  நீங்கள் கொடுத்ததை அப்படியே வாங்கிகொள்ளுங்கள். இதனைக்கேட்ட உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் உங்களை போன்ற நீதியாளர் தான் எனக்கு தேவை நான் உங்களை கூபாவின் நீதிபதியாக நியமிக்கின்றேன் அங்கே செல்லுங்கள் என்றார்கள்.

நூல் அல்பிதாயா வன் நிஹாயா

தன் குறையை ஏற்பவராக இருந்து பிறருடைய குறையை மறைப்பவராக இருக்கவேண்டும்.

عن الشعبي قال: اشترى عمر فرسا من رجل على أن ينظر إليه، فأخذ الفرس فسار به فعطب، فقال لصاحب الفرس: خذ فرسك، فقال: لا ! فاجعل بيني وبينك حكما، قال الرجل: نعم ! شريح، قال عمر: ومن شريح ؟ قال: شريح العراقي، قال: فانطلقا إليه فقصا عليه القصة، فقال: يا أمير المؤمنين رد كما أخذت أو خذ بما ابتعته، فقال عمر: وهل القضاء إلا هذا ؟ سر إلى الكوفة فقد وليتك قضاءها، فإنه لاول يوم عرفه يومئذ.

 ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஒரு நாள் ஜூம்ஆ தொழுகைக்கு  சென்றார்கள் செல்லும் பாதையில் அப்பாஸ்(ரலி) அவர்களின் வீடு இருந்தது அந்த வீட்டின் குளாய் வழியாக தண்ணீர் உமர் (ரலி) அவர்களின் மீது விழுந்தது எனவே அதை களற்றும் படி உத்தரவிட்டார்கள் அது களற்றப்பட்டது இதை அறிந்த அப்பாஸ்(ரலி) அவர்கள். உமர்(ரலி)  அவர்களிடம் இந்த குளாயை இந்த இடத்தில் நபி தனது கரத்தால் வைத்தார்கள் அதை நீங்கள் எப்படி எனது அனுமதி இல்லாமல் களற்றலாம் என்று கேட்டார்கள் உடனே உமர்(ரலி) அவர்கள்  சொன்னார்கள். அப்படி என்றால்  அந்த குளாயை உங்கள் கரத்தால் நீங்கள் பொறுத்துங்கள் அதற்காக நீங்கள் ஏறி நிற்பதற்கு நான் ஏணியாக இருப்பேன் என்றார்கள்..

நூல் அல்பிதாயா வன் நிஹாயா

அவர் மக்கள் பணியை தூய இதயத்துடன் ரகசியமாக செய்ய வேண்டும் விளம்பரப்படுத்தக் கூடாது  

ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள் இரவின் இருள் சூழ்ந்த நேரத்தில் தன் வீட்டிலிருந்து வெளியேறி வேறு ஒரு வீட்டில் நுழைந்தார்கள் இதை தல்ஹா (ரலி) அவர்கள் பார்த்து விட்டார்கள் மறுநாள் காலையில் தல்ஹா நேற்று இரவில் ஜனாதிபதி உமர் சென்ற அந்த வீட்டுக்கு சென்றார்கள் அங்கே பார்வ்சையற்ற வயதான பெண்மனி மட்டும் அமர்ந்திருந்தார் அப்பெண்ணிடம் தல்ஹா கேட்டார் நேற்று இரவு உங்கள் வீட்டுக்கு வந்த அந்த மனிதரின் விஷயம் என்ன என்று கேட்டார் அவள் சொன்னாள் நேற்று மட்டும் அல்ல இவ்வளவ்வு நாட்களாக அவர் தான் என்னை பாதுகாத்து வருகின்றார்கள் அவர் என் வாழ்க்கையை சீராக்கும் பொருட்களை கொண்டு வருவார் என் பிரச்சனைகளை போக்கி என் தேவைகளை நிறைவேற்றி தருவார் என்று கூறினார்கள்

நூல். ஸக்சிய்யத்து உமர்(ரலி)

தீயவர்களை தேர்தலில் தலைவராக  தேர்ந்தெடுப்பதால் தனி மனிதனுக்கும் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள்
عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم
وإذا جارت الولاة قحطت السماء.

பொறுப்பாளிகள் குற்றம் புரிந்தால் நாட்டில் மழை தடைப்பட்டு பஞ்சம் வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல். தர்ஙீப். தர்ஹீப்

பொறுத்தமான ஒருவர் உள்ள நிலையில் தவறு செய்யக்கூடியவர்கள் ஆட்சிக்கு வர உதவியாக இருந்தால் அல்லாஹ். ரஸுல். முஃமின்கள் அனைவருக்கும் மோசடி செய்தவராக ஆகி விடுவார்.

وعن جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال لكعب بن عجرة أعاذك الله من إمارة السفهاء قال وما إمارة السفهاء قال أمراء يكونون بعدي لا يهتدون بهديي ولا يستنون بسنتي فمن صدقهم بكذبهم وأعانهم على ظلمهم فأولئك ليسوا مني ولست منهم ولا يردون على حوضي ومن لم يصدقهم بكذبهم ولم يعنهم على ظلمهم فأولئك مني وأنا منهم وسيردون على حوضي

நபி(ஸல்)  அவர்கள் கஹ்பு பின் உஜ்ரா (ரலி)  என்ற ஸஹாபி இடம் சொன்னார்கள் முட்டாள்களின் ஆட்சியை விட்டும் நான் உனக்காக அல்லாவிஹ்டம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று கூறிய பொழுது. அவர் முட்டாள்களின் ஆட்சி என்றால் என்ன என்று கேட்டார். அப்போது நபி (ஸல்)  அவர்கள் சொன்னார்கள் எனக்குப் பின் சில தலைவர்கள் வருவார்கள் என் வழியை பின்பற்ற மாட்டார்கள் எனது நடைமுறையை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் அவர்களின் பொய்களைக் கொண்டு அவர்களை உண்மைப் படுத்தி அவர்களின் அநீதிக்கு துணை போகக்  கூடியவர்கள் என்னை சார்ந்தவர்கள் அல்ல நான் அவர்களை சார்ந்தவன் அல்ல அவர்கள் மறுமையில் எனது ஹவ்லுல் கவ்சருக்கு வர மாட்டார்கள்
  
நூல்; தர்கீப் தர்ஹீப்

عن حذيفة أن النبي صلى الله عليه وسلم قال : " والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعنه ولا يستجاب لكم " . رواه الترمذي

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.    நீங்கள் நன்மையை ஏவிக்கொண்டும் தீமையை தடுத்துக்கொண்டே இருங்கள் அவ்வாறு இல்லையானால் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது வேதனையை இறக்ககூடும் அப்போது நீங்கள் அவனை அழைப்பீர்கள் அவன் உங்களுக்கு பதில் அளிக்கமாட்டான்.

நூல். தர்ஙீப். தர்ஹீப்.

தீய ஆட்சியாளர்களுக்கு நபியின் எச்சரிக்கை.

وعن عائشة قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " اللهم من ولي من أمر أمتي شيئا فشق عليهم فاشقق عليه ومن ولي من أمر أمتي شيئا فرفق بهم فارفق به " . رواه مسلم

யா அல்லாஹ் என் உம்மத்தின் காரியங்களுக்கு பொருப்புதாரியாக நியமிக்கபட்டவன் அவர்களுக்கு சிரமத்தை கொடுத்தால் நீயும் அவனுக்கு சிரமத்தை கொடு. அவன் அவர்களிடம் அன்பாக நடந்துகொண்டால் நீயும் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்.என நபி (ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்..

நூல். மிஸ்காத்

وعن ابن عباس أيضا رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال من ولي شيئا من أمور المسلمين لم ينظر الله في حاجته حتى ينظر في حوائجهم

முஸ்லிம்களின் காரியங்களுக்கு யார் பொருப்பு ஏற்பானோ அவன் அவர்களின் தேவைகளை கவனிக்கும் வரை அல்லாஹ் அவனின் தேவையை கவனிப்பதில்லை என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

நூல். தர்ஙீப்.தர்ஹீப்
.  
எனவே நல்லோர்களை தேர்ந்தெடுத்து நல்லோர்கள் ஆட்சிக்கு வர உதவியாக இருந்து நாமும் நம் நாடும் வளம் பெற உதவியாக இருக்க அல்லாஹ் அருள் செய்வானாக ஆமீன்..                  

6 comments:

  1. طلحة مصباحي10 April 2014 at 03:09

    جزاكم الله خيرا كثيرا

    ReplyDelete
  2. Innum konjam kooduthalaana thahavalhalai thanthirukkalam..
    Alhamdhu Lillah..
    Allah ungalin muyarcchikku narkooli vazhanguvaanaaha!
    Aameen..

    ReplyDelete
  3. JAINUDEEN ANVARI10 April 2014 at 21:34

    ALHAMDU LILLAH NALLA VISHAYAM JAZAKALLAHU HAIRAN KASIRAN FIDDARAN...

    ReplyDelete
  4. Barakallahu Fe ilmika.Aameen

    ReplyDelete