மனித இனத்தின் வாழ்வின் மன அமைதி இரு காரியங்களில் இருப்பதாக திருக்குர்ஆன் சொல்கிறது. ஒன்று இறைவனை திக்ரு செய்வது. மன்றொன்று மனைவியுடன் அன்பாக பழகுதல்.
எந்த இல்லறத்தில் மன அமைதி இருப்பதாக அல்லாஹ் சொன்னானோ அந்த இல்லறமே இன்று மனவேதனையாக மாறியதற்கு காரணம் என்ன. மனைவியின் மூலம் மகிழ்ச்சியை பெற வேண்டிய அம்சங்கள் எவை. என்பதைத்தான் இந்த வார
தலைப்பு அலசுகிறது.
மணவாழ்க்கை இன்பமாக அமைய நாம் பெறவேண்டிய தன்மைகள்.
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வது.
وعنها قالت : قال لي رسول الله صلى الله عليه وسلم
: " إني لأعلم إذا كنت عني راضية وإذا كنت عني غضبى " فقلت : من أين تعرف
ذلك ؟ فقال : " إذا كنت عني راضية فإنك تقولين : لا ورب محمد وإذا كنت علي غضبى
قلت : لا ورب إبراهيم " . قالت : قلت : أجل والله يا رسول الله ما أهجر إلا اسمك
ஆயிஷா நாயகி (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் .
ஒரு நாள் நபி ஸல் அவர்கள் என்னிடம் நீ என்மீது திருப்தியுடன் இருக்கும் நேரத்தையும் கோபத்துடன் இருக்கும் நிலையும் எனக்கு தெரியும் என்றார்கள். அப்போது நான் நபியிடம் அதை நீங்கள் எப்படி அறிந்துகொள்கிறீர்கள். என்று கேட்டேன் நாயகம் சொன்னார்கள் நீ என் மீது திருப்தியுடன் இருக்கும் போது ஒரு விஷயத்தை மறுப்பதாக இருந்தால் முஹம்மதின் ரப்பின் மீது ஆணையாக அவ்வாறு அல்ல என்று கூறுவாய். நீ என் மீது கோபமாக இருந்தால் இபுராஹிம் நபியின் ரப்பின் மீது ஆணையாக என்று சொல்வாய் என்றார்கள் அப்பொழுது நான் நபியிடம் சொன்னேன் நீங்கள் சொல்வது சரிதான் ஆனாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அந்த நேரத்தில் உங்களின் பெயரை மட்டும் தான் கூறாமல் விடுகின்றேனே தவிர எனது உள்ளத்தின் அன்பு நிறைவாக இருக்கும் என்றார்கள்.
நூல். புஹாரி . முஸ்லிம் . மிஷ்காத் (280)
இந்த புரிந்து கொள்ளாமை தான் காலம் காலமாக சண்டை தொடர காரணமாக இருக்கின்றது எனவே தம்பதிகள் வாழ்ந்து புரிய வேண்டும் ஆரம்ப காலத்தில் ஒருவர் பிறரிடம் கேட்பியினும் புரிய வேண்டும்.
இல்லற வாழ்க்கையை அவளுடன் பகிர்ந்து கொள்வதில் போதிய அக்கறையும் கவனமும் செழுத்தப்பட வேண்டும் நமது பொது வாழ்வின் சேவைகளையும் நல்அமல்களையும் அதற்கு தடையாக முன் வைப்பது நபி வழிமுறைக்கு முரணானது என்பது அறியப்பட வேண்டும்.
عن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت دخلت
عليّ خويلة بنت حكيم بن أمية بن حارثة بن الأوقص السلمية وكانت عند عثمان بن مظعون فرأى بذاذة هيئتها فقال
لي يا عائشة ما أبذ هيئة خويلة قالت فقلت يا رسول الله امرأة لا زوج لها تصوم النهار
وتقوم الليل فهي كلا زوج لها فتركت نفسها وأضاعتها قالت فبعث رسول الله صلى الله عليه
وسلم إلى عثمان بن مظعون فجاءه فقال يا عثمان أرغبت عن سنتي قال لا والله يا رسول الله ولكن سنتك
أطلب قال فإني أنام وأصلي وأصوم وأفطر وأنكح النساء فاتق الله يا عثمان فإن لأهلك عليك
حقا وإن لضيفك عليك حقا وإن لنفسك عليك حقا فصم وافطر وصل ونم.
ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்.
உஸ்மான் பின் மள்ஊனின் மனைவி குவைலா என் வீட்டுக்கு வந்தார்கள் அவர்களின் தோற்றமும் ஆடையும் பரட்டையாக அலங்காரம் இல்லாமல் இருப்பதை கண்ட நபி என்னிடம் ஏன் குவைலா இப்படி இருக்கின்றார்கள் என்று கேட்ட பொழுது நான் சொன்னேன் அவரின் கணவர்
உஸ்மான் (ரலி) பகல் முழுவதும் நோன்பு நோற்கிறார் இரவு முழுவதும் நின்று வணங்குகிறார் எனவே குவைலா கணவர் இருந்தும் அவள் அவரை இல்லாதவரைப் போன்று நினைக்கின்றாள் எனவே அவள் தன்னை அலங்காரம் செய்வதை விட்டு தன் அழகையே வீணாக்கி விட்டாள் என்று நான் கூறினேன் உடனே நாயகம் (ஸல்) அவர்கள் உஸ்மானை அழைக்க ஆள் அனுப்பினார்கள் அவர் நபி இடம் வந்தார் அவரிடம் நபி கேட்டார்கள் நீங்கள் எனது நடை முறையை வெறுக்கின்றீரா அவர் சொன்னார் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் தங்களின் சுன்னத்துகளை தேடித் தேடி செய்கின்றேன் என்றார் அப்பொழுது நாயகம் சொன்னார்கள் நான் இரவில் தூங்குகின்றேன் தொழுகையிலும் ஈடுபடுகின்றேன் நோன்பு நோற்கின்றேன் நோன்பை விடவும் செய்கின்றேன் பெண்களை நிகாஹ் செய்து அவர்களுடன் சேர்ந்து வாழ்கின்றேன் உஸ்மானே இறைவனை பயந்து கொள்ளுங்கள் உங்களின் மீது உங்களின் குடும்பத்தாருக்கு செய்ய வேண்டிய கடமையும் உங்கள் உடலுக்கு செய்ய வேண்டிய கடமையும் இருக்கின்றது எனவே நோன்பு வையுங்கள் அதை விடவும் செய்யுங்கள் இரவில் தொழுங்கள் உறங்கவும் செய்யுங்கள் .
நூல். மஜ்மவுஸ் ஸவாயித் ஹதீஸ் எண் (7610)
தனது மனைவியரின் தவறுகளை மன்னிக்கவும், சகித்துக்கொள்ளவும் நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.
عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ
اسْتَأْذَنَ أَبُو بَكْرٍ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ
عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَ صَوْتَ عَائِشَةَ عَالِيًا
فَلَمَّا دَخَلَ تَنَاوَلَهَا لِيَلْطِمَهَا وَقَالَ أَلَا أَرَاكِ تَرْفَعِينَ صَوْتَكِ عَلَى رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَحْجِزُهُ وَخَرَجَ أَبُو بَكْرٍ مُغْضَبًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ حِينَ خَرَجَ أَبُو بَكْرٍ كَيْفَ رَأَيْتِنِي أَنْقَذْتُكِ مِنْ الرَّجُلِ
قَالَ فَمَكَثَ أَبُو بَكْرٍ أَيَّامًا ثُمَّ اسْتَأْذَنَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَهُمَا قَدْ اصْطَلَحَا فَقَالَ لَهُمَا أَدْخِلَانِي
فِي سِلْمِكُمَا كَمَا أَدْخَلْتُمَانِي فِي حَرْبِكُمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ فَعَلْنَا قَدْ فَعَلْنَا
ஒரு முறை அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்)
அவர்களிடம் (வருவதற்கு) அனுமதி கோரினார்கள். அவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்தபோது ஆயிஷா(ரலி)
அவர்களின் உரத்த சத்தத்தைக் செவியுற்றார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடத்தில்
சத்தத்தை உயர்த்துபவளாக உன்னை நான் காண்கிறேன் என்று கூறி அபூபக்கர்(ரலி) ஆயிஷா(ரலி)
அவர்களை அடிப்பதற்காக பிடிக்கலானார்கள். (அப்பொழுது) நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர்(ரலி)
அவர்களை ஆயிஷா(ரலி) அவர்களை (அடிக்க விடாமல்) தடுத்து நிறுத்தினார்கள். அபூபக்கர்(ரலி)
அவர்கள் கோபமுற்றவராக வெளியே சென்றார்கள். அபூபக்கர்(ரலி) வெளியே சென்ற பிறகு நான்
அந்த மனிதரிடம் இருந்து எப்படி உன்னைக் காப்பாற்றினேன் என்பதை நீ கவனித்தாயா? என்று நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம்
கூறினார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் பல நாட்கள்(ஆயிஷா(ரலி) அவர்களின் வீட்டிற்கு வராமல்)
இருந்தார்கள். பின்பு (ஒரு முறை) அனுமதி கேட்டு(வீட்டிற்கு வந்தபோது) நபி(ஸல்) அவர்களையும், ஆயிஷா(ரலி) அவர்களையும் இணக்கமாகிக் கொண்டவர்களாக
கண்டபொழுது உங்களின் சண்டையில் என்னை கலந்துக்கொள்ளச் செய்தது போல் உங்கள் இணக்கத்திலும்
என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் சேர்த்துக்
கொண்டோம்! சேர்த்துக்கொண்டோம் என்று கூறினார்கள்.
(நூல்:அபூதாவூத்)
இல்லற வாழ்வில் சில சமயம் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது அது முற்றி போகாமல் இருக்க வேண்டுமானால் ஒருவர் கோபம் கொண்டால் இன்னொருவர் அதை சகித்துக் கொள்ள வேண்டும்.
وعن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى
الله عليه وسلم يقول وجبت محبة الله على من أغضب فحلم
நாயகம் (ஸல்) சொன்னார்கள் கோபம் உண்டான நிலையில் அவர் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்கின்றாரோ அவருக்கு அல்லாவின் பிரியம் கிடைப்பது கட்டாயமாகி விட்டது
நூல். தர்ஹீப்.
وروي عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهم
قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جمع الله الخلائق نادى مناد أين أهل الفضل
قال فيقوم ناس وهم يسير فينطلقون سراعا إلى الجنة فتتلقاهم الملائكة فيقولون إنا نراكم
سراعا إلى الجنة فمن أنتم فيقولون نحن أهل الفضل فيقولون وما فضلكم فيقولون كنا إذا
ظلمنا صبرنا وإذا أسيء إلينا حلمنا فيقال لهم ادخلوا الجنة فنعم أجر العاملين
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். மக்களை ஒன்று சேர்க்கும் மறுமை நாளில் ஒரு அழைப்பாளர் சிறப்பிற்குரியவர்கள் எங்கே என்று கேட்பார் அப்போது குறைவான சில மனிதர்கள் எழுந்து நிற்பார்கள். அவர்கள் சொர்க்கத்தை நோக்கி விரைவாக செல்வார்கள். அப்போது சொர்க்கத்தின் காவலாளியாக இருக்கும் மலக் இவர்களை தடுத்து இவ்வளவு விரைவாக வருகிறீர்களே நீங்கள் யார் என்று கேட்பார் அவர்கள் சொல்வார்கள் நாங்கள் சிறப்பிற்குரியவர்கள் என்று கூறுவார்கள். மலக்குகள் உங்களின் சிறப்பு என்ன என்று கேட்பார்கள் அப்போது அவர்கள் கூறுவார்கள் உலகில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட நேரத்தில் அதை பொறுத்துக்கொண்டோம் என்று கூறுவார்கள்.அதற்கு பின் அவர்களிடம் சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று சொல்லப்படும்.
நூல், தர்கீப். தர்ஹீப்.
ஒருவரை ஒருவர் மனமார நேசித்தல்.
உலகத்தில் அன்பிற்கு அடிமையாகாதவர் யாரும் இல்லை. அன்பை விட மனிதனை கவர்வதற்கு வேறு சிறந்த வழியும் இல்லை. தம்பதிகளில் ஒருவர் பிறரை எந்தளவிற்கு நேசிக்கின்றாறோ அந்தளவிற்கு அவர் தன் துணையின் அன்பை பெறுவார்,
وعن أبي
هريرة أن
رسول الله صلى الله عليه وسلم قال : " المؤمن مألف ولا خير فيمن لا يألف ولا يؤلف
" رواهما أحمد
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஃமின் நேசிக்க தகுந்த இடத்தில் (நிலையில்) இருக்க வேண்டும் யார் பிறரை நேசிக்கவில்லையோ இன்னும் பிறரால் நேசிக்கபடவில்லையோ அவரின் எந்த நலவும் சிறப்பில்லை.
நூல். மிஸ்காத். பக்கம். 425.
உண்மையான அன்பு என்பது திருமணம் செய்த ஆரம்பத்தில் இருப்பதைப்போன்று அவளின் உடலும் அழகும் குறைந்த பிறகும் இருக்கவேண்டும்.
ஒரு புதுமணதம்பதி திருமண செய்த ஆரம்பத்தில் சுற்றுலா சென்றனர் அப்போது ஒரு இடத்தில் மனைவியின் காலில் கல் தட்டியது அதைப்பார்த்து கணவன் வேதனைபட்டு சனியன் பிடித்த கல்லே என் மனைவியின் பாதத்தை காயப்படுத்திவிட்டாயே என்று சொன்னான். இதே ஜோடி சில ஆண்டுகள் கழித்து தங்களுடைய குழந்தைகளோடு வரும்போது மீண்டும் கல் தட்டியது இப்போது கணவன் மனைவியைப் பார்த்து சனியனே கல் இருப்பது உன் கண்ணுக்கு தெரியல என்று மனைவியை திட்டினான் இப்படிப்பட்ட போலி அன்பு கூடாது.
பிந்திய காலத்தில் ஒருவரை ஒருவர் கருணையுடன் பராமரிப்பதைத்தான் அல்லாஹ் குர ஆனில் ரஹ்மத் என்று சொல்கின்றான்.
ஒருவரையொருவர் பாராட்டுதல்.
ஒருவர் பிறரிடம் பார்க்கும் சிறந்த குணங்களையும் உயர்ந்த செயல்களையும் திறமைகளையும் பாராட்ட வேண்டும்.
وَفَضْلُ عَائِشَةَ عَلَى
النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ
மற்ற பெண்களை விட ஆயிஷா வின் சிறப்பாகிறது .மற்ற எல்லா உணவையும் விட திக்கடியின் சிறப்பைபோன்று உள்ளது என நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல். புகாரி.
தன் மனைவி ஆயிஷாவை நபியவர்கள் தக்கடியைக்கொண்டு பாராட்டியது மனைவியை பாராட்டாதவர்களுக்கு தக்க அடியாக உள்ளது.
அன்பளிப்புகளை பரிமாரிக்கொள்வது.
وعن عطاء
الخراساني
أن رسول الله صلى الله عليه وسلم قال : " تصافحوا يذهب الغل وتهادوا تحابوا وتذهب الشحناء " رواه
مالك مرسلا
அன்பளிப்பை பரிமாரிக்கொள்ளுங்கள் ஒருவரை ஒருவர் பிரியப்படுவீர்கள்.விரோதம் நீங்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல். மிஸ்காத். பக்கம்.403
வீட்டு வேலைகளில் ஒருவருக்கொருவர் துணையாக இருத்தல் .
ஆயிஷா நாயகி சொன்னார்கள்..
وعن عائشة
قالت : كان رسول الله صلى الله عليه وسلم يخصف نعله
ويخيط ثوبه ويعمل في بيته كما يعمل أحدكم في بيته وقالت : كان بشرا من البشر يفلي ثوبه
ويحلب شاته ويخدم نفسه . رواه الترمذي
நபி அவர்கள் தங்களின் கிளிந்த செருப்புகளை செப்பனிடுவார்கள் ஆடையை தைத்துக் கொள்வார்கள் உங்களில் ஒருவர் தன் வீட்டில் வேலை செய்வது போன்று வீட்டு வேலை செய்வார்கள். அவர்கள் சாதாரண மனிதரைப் போன்று இருந்தார்கள். தன் ஆடையில் பேன் ஓடுகின்றனவா என்று பார்ப்பார்கள். ஆட்டில் பால் கரப்பார்கள் தன் வேலையை தானே செய்து கொள்வார்கள் ஒருவர் தன் சகோதரனின் தேவையை கவனித்துக் கொண்டிருந்தால் அவனுடைய தேவையில் அல்லாஹ் ஆகி விடுவான்.
உலகில் யாரோ ஒருவருக்கு உதவி செய்தாலே அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்றால் மனைவிக்கும் வீட்டில் உள்ள பிறருக்கும் உதவி செய்தால் நிச்சயம் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்
மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கும் அவனின் தேவைகளையும் மனக்குறைகளையும் அறிந்து கொள்வதற்கும் நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேச வேண்டும்.
இந்த அவசர யுகத்தில் பலர் மனைவியுடன் பேசுவதற்கு கூட நேரம் ஒதுக்காத காரணத்தினால் தான் வாழ்க்கை கசந்து போகிறது நயகம் (ஸல்) அவர்களுக்கு தலைக்கு மேல் வேலை இருந்தது சிலரின் தலையை எடுக்கும் வேலையும் இருந்தது ஆனாலும்
وكان إذا صلى العشاء يدخل منزله يَسْمُر مع أهله قليلا قبل أن ينام
அவர்கள் இரவில் நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுத பின் வீட்டுக்குச் சென்று உறங்கும் முன்பு குடும்பத்தாருடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்
அல்லாஹ் வழங்கிய அருட்கொடை
حَدَّثَنَا عَبْدُ
اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ
حَدَّثَنَا وَاصِلٌ مَوْلَى أَبِي عُيَيْنَةَ عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ عَنْ يَحْيَى
بْنِ يَعْمَرَ عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ عَنْ أَبِي ذَرٍّ أَنَّ نَاسًا مِنْ
أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا لِلنَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالْأُجُورِ
يُصَلُّونَ كَمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَيَتَصَدَّقُونَ بِفُضُولِ
أَمْوَالِهِمْ قَالَ أَوَ لَيْسَ قَدْ جَعَلَ اللَّهُ لَكُمْ مَا تَصَّدَّقُونَ إِنَّ
بِكُلِّ تَسْبِيحَةٍ صَدَقَةً وَكُلِّ تَكْبِيرَةٍ صَدَقَةً وَكُلِّ تَحْمِيدَةٍ صَدَقَةً
وَكُلِّ تَهْلِيلَةٍ صَدَقَةً وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ وَنَهْيٌ عَنْ مُنْكَرٍ
صَدَقَةٌ وَفِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيَأتِي أَحَدُنَا
شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرٌ قَالَ أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ
أَكَانَ عَلَيْهِ فِيهَا وِزْرٌ فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلَالِ كَانَ لَهُ
أَجْرًا رواه مسلم
உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப்
பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு'' என்று நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத்
தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள், "(நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத்
தீர்த்துக் கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில்
அவர் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
இதற்கு விளக்கமளித்து அல்அல்பானீ (ரஹ்)
கூறுகின்றார்:
சுயூத்தி (ரஹ்) அவர்கள் தமது "இத்காருல்
அத்கார்' எனும் நூலில், ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்வது தர்மமாகும். அப்போது அவனுக்கு அது சம்பந்தமாக
எந்த எண்ணமும் இல்லாவிட்டாலும் சரியே! ஒவ்வொரு தனித்தனி உடலுறவுக்கும் இவ்வாறு நன்மையுண்டு
என்பது என் கருத்தாகும். ஆனால் அவளை முதன் முதலில் திருமணம் செய்த போதாகிலும் அவனுக்கு
அந்த எண்ணம் இருந்திருக்க வேண்டும். அல்லாஹ்வே யாவையும் அறிந்தவன் என்று கூறியுள்ளார்.
(நூல்: ஆதாபுஸ்ஸிஃபாஃப், பக்கம்: 138)
No comments:
Post a Comment