மனிதனுடைய
ஈமானை வலிமைபடுத்தக்கூடிய அம்சங்களாக சில குணங்கள் இருப்பதைப்போன்று ஈமானை சிதைக்க கூடிய அம்சங்களாக சில குணங்கள் இருக்கின்றன அந்த இழிவான குணங்களை நாம் அறிந்து அதை விட்டு விலகி கொள்ளவேண்டும்.
அல்லாஹ் நல்லோர்களின் தன்மைகளை தன் திருமறையில் கூறுவான்.
وَاذْكُرْ فِي الْكِتَابِ
إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَبِيًّا
(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக!
நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
அல்குர் ஆன். 19.54
مِّنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ
صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ ۖ فَمِنْهُم مَّن قَضَىٰ نَحْبَهُ وَمِنْهُم
مَّن يَنتَظِرُ ۖ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا
. முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள
வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக்
கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து
சிறிதும் மாறுபடவில்லை.
அல் குர் ஆன். 33:23
தீயவர்களின் தன்மையை நபி (ஸல்)அவர்கள்
தெளிவுப்படுத்தினார்கள்.
وقال أبو هريرة: قال النبي
صلى الله عليه وسلم " ثلاث من كن فيه فهو منافق،وإن صام وصلى وزعم أنه مسلم: إذا
حدث كذب وإذا وعد أخلف
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் 3 குணங்கள் யாரிடத்தில் இருக்கின்றனவோ அவன் நயவஞ்சனாக இருக்கின்றான் அவன் நோன்பு தொழுகை ஹஜ் உம்ரா இவற்றையெல்லாம் செய்திருந்தாலும் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டாலும் சரியே அந்த குணங்கள் பேசினால் பொய் சொல்வான் வாக்களித்தால் மாறு செய்வான் நம்பினால் மோசடி செய்வான்
.
நூல்
. கன்சுல் உம்மால்.
வாக்கை காப்பாற்றுவதில் நபியின் பேணுதல்
روي أن رسول الله صلى الله
عليه وسلم كان وعد أبا الهيثم بن التهيان خادماً؛ فأتى بثلاثة من السبى فأعطى اثنين
وبقي واحداً، فأتت فاطمة رضي الله عنها تطلب منه خادماً وتقول: ألا ترى أثر الرحى بيدي؟
فذكر موعده لأبي الهيثم فجعل يقول " كيف بموعدي لأبي الهيثم؟ فآخثره به على فاطم
பணிவிடைக்கு
ஆள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்ட அபுல் ஹைதம் (ரலி) அவர்களுக்கு நபி அவர்கள் ஒரு பணியாளரைத் தருவதாக வாக்களித்திருந்தார்கள் இதற்குப் பின் நபி இடத்தில் 3 போர் கைதிகள் கொண்டு வரப்பட்டனர் இதனையறிந்து நபி இடம் பணியாளரை தேடி பெற்று செல்ல பாத்திமா (ரலி) அவர்கள் வந்து தனது கரத்தை காட்டி எனது கரம் திருகை ஆட்டி காய்த்து போய்விட்டது. எனவே எனக்கு ஒரு பணியாளரை தாருங்கள் என்று கேட்டபோது நபி அவர்கள் அபுல் ஹைசருக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவு கூர்ந்துவிட்டு சொன்னார்கள்.நான் உனக்கு அந்த பணியாளரை கொடுத்துவிட்டால் அபுல் ஹைதமிற்கு நான் கொடுத்த வாக்குறுதியை எப்படி காப்பாற்றுவது என்று கேட்டார்கள். பாத்திமா நாயகிக்கு பணியாளரை கொடுக்கவில்லை.
நூல்.
இஹ்யா உலூமுத்தீன். பாகம்.3 பக்கம். 130
வாக்கு மாற்றமும் நபியின் சாபமும்.
ويل لمن وعد ثم أخلف ، ويل
لمن وعد ثم
أخلف ، ويل لم وعد ثم أخلف.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். வாக்களித்து மாறு செய்பனுக்கு நாசம் உண்டாகட்டும் என்று மூன்று தடவை கூறினார்கள்.
நூல். கன்சுல்
உம்மால். 6865
உலகை ஆளும் வாய்ப்பு எதனால் கிடைத்தது .
وأخرج ابن أبي حاتم عن بكر بن مضر ، أن هشام بن عبد الملك سأله عن ذي القرنين
: أكان نبياً؟ فقال : لا ، ولكنه إنما أعطي ما أعطي بأربع خصال كان فيه : كان إذا قدر
عفا ، وإذا وعد وفى ، وإذا حدث صدق ، ولا يجمع اليوم لغد
.
ஹிஸாம் பின்
அப்துல்மலிக் என்ற ஆட்சியாளர் பக்ரிப்னு முளர் என்ற
அறிஞரிடம் துல்கர்னைன் (அலை)
பற்றி
கேட்டார். அதற்கு அவர் சொன்னார். துல்கர்னைன் அவர்கள் உலகை ஆண்ட நான்கு பேரில் ஒருவர் ஈஸா நபிக்கு முன்பு வாழ்ந்ததாகவும் இன்னும் இப்ராஹிம் (அலை) அவர்களின் காலத்தில் அவர் நபி இல்லை ஆனாலும் சாலிஹான ஒரு ஆட்சியாளர் தான் அவருக்கு கொடுக்கப்பட்ட சிறப்புகளுக்கு காரணம் அவரிடம் இருந்த 4
தன்மைகள் தான் சக்தி இருந்தும் தனக்கு தீங்கு செய்தவரை மன்னித்தார் வாக்குறுதியை நிறைவேற்றினார் உண்மையை சொன்னார் இன்றைய வேலையை மறுநாள் சேர்க்காமல் இன்றே முடித்து விடுவார் இவை தான் அவரின் உயர்வுக்கு காரணம் என்றார்..
நூல்.
துர்ருல் மன்ஸூர்.
வாக்குறுதிக்கு அல்லாஹ் கொடுத்த முக்கியத்துவம்.
وَقَالَ ابْنُ عَبَّاسٍ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا لَيْسَ الْعَنْبَرُ بِرِكَازٍ هُوَ شَيْءٌ دَسَرَهُ الْبَحْرُ
وَقَالَ الْحَسَنُ فِي الْعَنْبَرِ وَاللُّؤْلُؤِ الْخُمُسُ فَإِنَّمَا جَعَلَ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الرِّكَازِ الْخُمُسَ لَيْسَ فِي الَّذِي يُصَابُ
فِي الْمَاءِ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ
بْنِ هُرْمُزَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا مِنْ بَنِي إِسْرَائِيلَ سَأَلَ بَعْضَ بَنِي
إِسْرَائِيلَ بِأَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارٍ فَدَفَعَهَا إِلَيْهِ فَخَرَجَ فِي
الْبَحْرِ فَلَمْ يَجِدْ مَرْكَبًا فَأَخَذَ خَشَبَةً فَنَقَرَهَا فَأَدْخَلَ فِيهَا
أَلْفَ دِينَارٍ فَرَمَى بِهَا فِي الْبَحْرِ فَخَرَجَ الرَّجُلُ الَّذِي كَانَ أَسْلَفَهُ
فَإِذَا بِالْخَشَبَةِ فَأَخَذَهَا لِأَهْلِهِ حَطَبًا فَذَكَرَ الْحَدِيثَ فَلَمَّا
نَشَرَهَا وَجَدَ الْمَالَ
. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்களில் ஒருவர் தம் சமூகத்தைச் சேர்ந்த சிலரிடம் ஆயிரம்
தீனார் கடன் கேட்டார். (அதற்கு ஒருவர் இசைந்து) அவருக்குப் பணத்தைக் கொடுத்தார். கடன்
வாங்கியவர் கடல் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், கடலில் செல்ல எந்த வாகனமும் கிடைக்கவில்லை. எனவே, ஒரு மரக்கட்டையை எடுத்து அதில் துளையிட்டு ஆயிரம் தீனாரையும்
அதில் வைத்து அடைத்து கடலில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார். ஒரு நாள் அவருக்குக்
கடன் கொடுத்த மனிதர் வெளிக் கிளம்பி (அவ்வழியே) வந்தபோது மரக்கட்டை ஒன்று கிடப்பதைக்
கண்டு அதை (எரிப்பதற்கு) விறகாகத் தம் வீட்டிற்கு எடுத்து வந்தார். அதை(க் கோடாரியால்)
பிளந்தபோது தம் பொருளைப் பெற்றார்."
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல். புகாரி. 1498
வாக்கை நிறை வேற்றுபவருக்கு நபி கொடுத்த வாக்கு
اضمنوا لي ستا من أنفسكم
أضمن لكم الجنة : اصدقوا إذا حدثتم ، وأوفوا ، إذا وعدتم وأدوا إذا ائتمنتم ، واحفظوا
فروجكم وغضوا أبصاركم ، وكفوا أيديكم
நபி
அவர்கள் சொன்னார்கள் என்னிடம் யார் 6 விஷயங்களில் பொறுப்பு எடுத்து நிறைவேற்றுவாரோ அவருக்கு நான் சொர்க்கத்தை பொறுப்பு
எடுக்கின்றேன்
என்றார்கள் பேசினால் உண்மையை பேசுவான் வாக்களித்தால் நிறைவேற்றுவான் நம்பப்பட்டால் அதை நிறைவேற்றுவான்
பார்வையை தாழ்த்துவான் இண உறுப்பை பாதுகாப்பான் தன் கையை பிறருக்கு 6 தீங்கு செய்யாமல் தடுத்துக் கொண்டான் இப்படியெல்லாம் செய்பவனுக்கு நான் ஜன்னத்தை பொறுப்பு எடுப்பேன் என்றார்கள்
நூல்;
கன்ஜுல் உம்மால்
வாக்குறுதியை மீறாமல் இருக்க நபி கேட்ட துஆ
عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ
بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي
أَعُوذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا
تَسْتَعِيذُ مِنْ الْمَغْرَمِ فَقَالَ إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ
وَوَعَدَ فَأَخْلَفَ
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் "அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க
மின் அதாபில் கப்றி, வ அஊது பிக
மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வ அஊது பிக
மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, அல்லாஹும்ம
இன்னீ அஊது பிக்க மினல் மஃஸமி வல்மஃக்ரம்" (இறைவா! உன்னிடம் நான் சவக்குழியின்
வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம்
நான் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும்
உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம்
பாதுகாப்புக் கோருகிறேன்) என்று பிரார்த்திப்பார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி
(ஸல்) அவர்களிடம், "தாங்கள் கடன்படுவதிலிருந்து
(இவ்வளவு) அதிகமாகப் பாதுகாப்புக் கோரக் காரணம் என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மனிதன் கடன்படும்போது
பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு
செய்கிறான்" என்று பதிலளித்தார்கள்
நூல். புகாரி
வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஸஹாபாக்களின் நிலை
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ
اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ قَدْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ قَدْ أَعْطَيْتُكَ
هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا فَلَمْ يَجِئْ مَالُ الْبَحْرَيْنِ حَتَّى قُبِضَ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَمَرَ أَبُو
بَكْرٍ فَنَادَى مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
عِدَةٌ أَوْ دَيْنٌ فَلْيَأْتِنَا فَأَتَيْتُهُ فَقُلْتُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي كَذَا وَكَذَا فَحَثَى لِي حَثْيَةً فَعَدَدْتُهَا فَإِذَا
هِيَ خَمْسُ مِائَةٍ وَقَالَ خُذْ مِثْلَيْهَا
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இறந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அலா
இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூ பக்ர்(ரலி), 'யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தர வேண்டியதிருந்தால் அல்லது
நபியவர்களின் தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர்
நம்மிடம் வரட்டும் (அவரின் உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)" என்று கூறினார்கள்.
(இந்த அறிவிப்பைக் கேட்டு) நான், 'எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும்
தருவதாக நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்" என்று கூறினேன்.
- 'இப்படிக் கூறும்போது, தம் இரண்டு கைகளையும் ஜாபிர்(ரலி) மூன்றுமுறை விரித்துக் காட்டினார்கள்"
என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) கூறினார் - அபூ பக்ர்(ரலி) என் கையில்
(முதலில் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும்
பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள்.
நூல். முஸ்லிம்
வாக்குறுதியை நிறை வேற்றியதால் நபி பாராட்டை பெற்றார்.:
قَالَ الْمِسْوَرُ فَقَامَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعْتُهُ حِينَ تَشَهَّدَ ثُمَّ
قَالَ أَمَّا بَعْدُ فَإِنِّي أَنْكَحْتُ أَبَا الْعَاصِ بْنَ الرَّبِيعِ فَحَدَّثَنِي
فَصَدَقَنِي
நான் நபி(ஸல்) அவர்களின் உரையைச் செவியுற்றேன். அவர்கள் பனூ
அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகன் ஒருவரை (அபுல் ஆஸை) நினைவு கூர்ந்து அவர்
(அவரின் மாமனாரான) தன்னுடன் நலன் மருமகனாக நடந்து கொண்டதைப் பாராட்டிப் புகழ்ந்து
பேசினார்கள். அப்போது அவர்கள், 'அவர் என்னிடம்
பேசினார். (பேசிய படி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார், அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்" என்று கூறினார்கள்.
நூல். முஸ்லிம்.
நியாயமான காரணம் சொல்லலாம்
وكان بعض السادات يغتم إذا وعد حتى يفي
فعن معاذ بن العلا قال سال رجل أبا عمرو بن العلا بن العلا حاجة فوعده بها ثم إن الحاجة
تعذرت على أبي عمرو فلقيه الرجل بعد ذلك فقال له أبو عمرو وعدتني وعدا تنجزه فقال أبو
عمرو فمن أولى بالغم قال أنا قال لا بل أنا قال الرجل وكيف ذلك أصلحك الله قال لأني
وعدتك وعدا فإبت بفرح الوعد وإبت أنا بهم الإنجاز فبت ليلتك فرحا مسروا، وبت ليلتي
مفكرا مهموما ثم عاق القدر عن بلوغ الإرادة فلقيتني مدلا، ولقيتك محتشما، أخرجه الخرائطي
அபூ அம்ருல் அலா விடம்
ஒரு மனிதர் உதவி கேட்டார். அவர் தருவதாக வாக்களித்தார். ஆனால் இடையில் ஏற்பட்ட சிரமத்தால்
அதை நிறைவேற்றுவது சிரமமானது. அந்த மனிதர் அபூஅம்ரை சந்திது “ அபூ அம்ரு சொன்ன வாக்கை
நிறைவேற்றுங்கள் என்றார். தன்னுடைய சூழ்நிலையை புரிய வைக்க அபூ அம்ரு சொன்னார். நம்மில்
அதிக கவலையுடையவர் யார்? அவர் சொன்னார் நான் தான். அபூ அம்ரு சொன்னார் இல்லை.
உனக்கு நான் வாக்களித்தவுடன் நீ வாக்குறுதியின் சந்தோஷமா தோடு திரும்பிச் சென்று விட்டாய்.
நான் அதை நிறைவேற்ற வேண்டுமே என்ற கவலையோடு திரும்பினேன், நீ இரவு நிம்மதியாக
தூங்கினாய். நானோ சிந்தனையிலும் கவலையிலும் கழித்தேன். நேரம் வந்து விட்டது. நீயோ பகிரங்கமாக
வருகிறாய் நான் தயங்கி உன்னைச் சந்திக்கிறேன்,
No comments:
Post a Comment