Thursday, 12 June 2014

இறைநேசத்தை பெற முயற்சி செய்வோம்.



 மனிதன் பிறப்பில் இருந்து இறப்புவரை எத்தனையோ விஷயங்களை ஆசைபடுகிறான். முயற்சி செய்து அதையும் பெற்றுக்கொள்கின்றான். சிறுவனாக இருந்தபோது வாலிபத்தை ஆசைக்கொண்டான் பிறகு தொடர்ந்து திருமணம் குழந்தைபேறு சொத்து சுகம் பட்டம் பதவி  இது போன்ற பல விஷயங்களை விரும்புகின்றான் அவன் விரும்பிய அனைத்தையும் ஓரளவு அடைந்து கொண்டான் அதில் மனநிறைவையும்  கொண்டான்.
ஆனால் வேதனை என்னவென்றால் ஒரு விஷயத்தை மட்டும் அவன் ஆசை கொள்ளவும் இல்லை அதை தேடவும் இல்லை அதில் மாத்திரம் அவன் எந்த வளர்ச்சியும் இன்றி ஒரே இடத்தில் ஒரே தரத்தில் நின்று கொண்டு இருக்கின்றான் அது தான் அல்லாஹ்வின் தொடர்பையும் அன்பையும் பெறுகிற விஷயம்.

 இதில் பெரும்பாலான மனிதர்கள் எந்த வளர்ச்சியும் காணவில்லை அதற்காக எந்த ஒரு உபரியான அமலை அதிகப்படுத்துவம் இல்லை பாவத்தை விட்டும் விலக முயற்சிப்பதும் இல்லை.

அல்லாஹ்வின் அன்பை நாடுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..

முதலில் அல்லாஹ்வின் அன்பையும் அவனுடைய தொடர்பையும் பெற்று தரும் அமல்களையும் அப்படிப்பட்ட வாழ்வையும் ஆசைப்படுவது..

أنس قال : كان رسول الله صلى الله عليه وسلم يدخل على أم حرام بنت ملحان وكانت تحت عبادة بن الصامت فدخل عليها يوما فأطعمته ثم جلست تفلي رأسه فنام رسول الله صلى الله عليه وسلم ثم استيقظ وهو يضحك قالت : فقلت : ما يضحكك يا رسول الله ؟ قال : " ناس من أمتي عرضوا علي غزاة في سبيل الله يركبون ثبج هذا البحر ملوكا على الأسرة أو مثل الملوك على الأسرة " . فقلت : يا رسول الله ادع الله أن يجعلني منهم فدعا لها ثم وضع رأسه فنام ثم استيقظ وهو يضحك فقلت : يا رسول الله ما يضحكك ؟ قال : " ناس من أمتي عرضوا علي غزاة في سبيل الله " . كما قال في الأولى . فقلت : يا رسول الله ادع الله أن يجعلني منهم . قال : " أنت من الأولين " . فركبت أم حرام البحر في زمن معاوية فصرعت عن دابتها حين خرجت من البحر فهلكت . متفق عليه


அனஸ்(ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்..
 நாயகம்(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டிற்கு சில சமயம் செல்பவர்களாக இருந்தார்கள் (அவர் உபாதா(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார் நபிக்கு மஹ்ரமான உறவாகவும் இருந்தார்) ஒரு நாள் நபி அவர்களின் வீட்டில் நுழைந்தார்கள் அவர்கள் நபிக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 இந்த நிலையில் (ஸல்) அவர்கள் தூங்கி விட்டார்கள் பின்பு சற்று நேரத்தில் சிரித்துக் கொண்டே கண் விழித்தார்கள் நபி இடம் உம்மு ஹராம் சிரிப்பிற்கான காரணத்தைக் கேட்டார்கள் நாயகம் சொன்னார்கள் அல்லாஹ்வின் பாதையில் போருக்கு செல்கின்ற என் உம்மத்தில் சிலர் எனக்கு கனவில் எடுத்துக் காட்டப்பட்டார்கள் அவர்கள் சிம்மாசனத்தில் அரசர்கள் அமர்ந்திருப்பதைப் போன்று அமர்ந்து கொண்டு உற்சாகத்துடன் கடலில் நடுவில் பயணம் செய்து கொண்டு இருக்கின்றார்கள் உம்மு ஹாராம் சொல்கின்றார்கள் இதை கேட்ட நான் நபி இடம் அந்த கூட்டத்தில் அல்லாஹ் என்னை சேர்க்க துஆ செய்யுங்கள் என்றேன் உடனே அவர்களுக்காக நபியும் துஆ செய்தார்கள். மீண்டும் நபி உறங்கி சிரித்துக் கொண்டே கண் விழித்து அதே போன்று இன்னொரு கனவை கண்டதாக சொன்னார்கள்.

 அப்போதும் நான் மீண்டும் நபி இடம் இந்த கூட்டத்தில் அல்லாஹ் என்னை சேர்க்க துஆ செய்யுங்கள் என்றேன் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நீ முதல் கூட்டத்தை சேர்ந்தவனாக இருக்கின்றாய்.

 உம்மு ஹராம்  (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) ஆட்சியில் அவர்கள் கடலில் இருந்து வெளியேறி வாகனத்தில் அமர்ந்த பொழுது கீழே விழுந்து மரணித்து விட்டார்கள்..
  
 நூல். மிஷ்காத். புகாரி.

அல்லாஹ்வை அடையும் விஷயத்தில் உம்மு ஹராமுக்கு இருந்ததைப் போன்ற ஆசை நமக்கும் இருக்க வேண்டும்..

இந்த தொடர்பு பெற இரண்டாவது விஷயம் அல்லாஹ்விடம் உயர் அந்தஸ்தை பெறுவதற்கான வழிகளை தேடிக் கொண்டே இருக்க வேண்டும்..

وقال شقيق البلخي طلبنا خمسا فوجدناها في خمس طلبنا النور في القبر فوجدناه في قيام الليل وطلبنا جواب منكر ونكير فوجدناه في قراءة القرآن وطلبنا الجواز على الصراط فوجدناه في الصدقة وطلبنا الري يوم القيامة فوجدناه في صيام النهار وطلبنا البركة في الرزق فوجدناه في صلاة الضحى

ஷகீகுல் பல்கீ (ரஹ்சொன்னார்கள்
   
நாங்கள்  5  காரியங்களுக்கான பரிகாரத்தை தேடினோம் அதை நாங்கள்   5ல்  பெற்றுக் கொண்டோம். உணவின் பரக்கத்தை தேடினோம். அதை லுஹா தொழுகையில் பெற்றுக் கொண்டோம். கப்ரின் ஒளியை தேடினோம் .அதை இரவுத் தொழுகையில் பெற்றுக் கொண்டோம். முன்கர் நகீர் கேள்விகளுக்கு பதிலை தேடினோம். அதை குர்ஆன் ஓதுவதில் பெற்றுக் கொண்டோம். ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடக்க வழி தேடினோம். அதை நோன்பிலும் தர்மத்திலும் பெற்றுக் கொண்டோம். கியாமத்தின் நிழலை தேடினோம். அதை உலகத்தை விட்டும் விலகி தனித்து வாழ்வதில் பெற்றுக் கொண்டோம்.உணவில் பரகத்தை தேடினோம் அதை லுஹா தொழுகையில் பெற்றுக்கொண்டோம்..

3 வது.. அதற்காக முயற்சி சிரமம் மேற்கொள்வது

உயிருடன் திரும்புவது நிச்சயமில்லை என்று தெரிந்தும் ஸஹாபாக்கள் போருக்குச் சென்றார்கள் தாங்கள் விதவை ஆனாலும் பரவாயில்லை இஸ்லாம் வெல்ல வேண்டும் என்று முடிவு செய்து நபித் தோழியர்கள் தங்கள் கணவன்மார்களை போருக்கு அனுப்பியது தங்களை பராமரிக்க வேறு பிள்ளைகள் இல்லாத நிலையிலும் சஹாபாக்கள் தங்கள் மக்களை போருக்கு அனுப்பியது இஸ்லாத்தின் உயர்வுக்காக இறைத் தொடர்பை பெறுவதற்காக அவர்கள் தங்களையும் தங்களை சார்ந்த எல்லாவற்றையும் இழந்தது இவை அனைத்தும் அல்லாவின் அன்பை பெறுவதில் அவர்கள் மேற்கொண்ட முயற்ச்சியின் வெளிப்பாடுகளாகும்.

மன்னவனிடம் மாண்பு பெற மண்ணில் புரண்ட ஸஹாபி..

 عن طلحة قال : انطلق رجل ذات يوم فنزع ثيابه ، وتمرغ في الرمضاء ، ويقول لنفسه ذوقي نار جهنم ، أجيفة بالليل وبطالة بالنهار ؟ قال فبينا هو كذلك إذ أبصر النبي صلى الله عليه وسلم في ظل شجرة ، فاتاه فقال : غلبتني نفسي ، فقال له النبي صلى الله عليه وسلم : أما لقد فتحت لك أبواب السماء ، ولقد باهى الله بك الملائكة ، ثم قال لاصحابه : تزودوا من أخيكم ، فجعل الرجل يقول : يا فلان ادع لي ، فقال له النبي صلى الله عليه وسلم عمهم ، فقال : اللهم اجعل التقوى زادهم ، واجمع على الهدى أمرهم ، فجعل النبي صلى الله عليه وسلم يقول : اللهم سدده ، فقال : واجعل الجنة مآبهم).

தல்ஹா பின் உபைதுல்லா (ரலி) சொல்கின்றார்கள்
 ஒருநாள் பகல் நேரத்தில் ஒரு ஸஹாபி வீட்டில் இருந்து வெளியேறினார் அவர் தனது மேலாடையை கழற்றி விட்டு சுடு மணலில் தரையில் புரண்டார்.  அவர் தனது நப்சுடன் இவ்வாறு பேசினார் நரகத்தின் நெருப்பை போன்ற இந்த உஷ்ணத்தை நீ நன்றாக சுவைத்து கொள் நீ இரவில் எந்த அமலும் செய்யாமல் பிணத்தை போன்று கிடக்கின்றாய் பகலையும் வீணாக்கிக் கொண்டு இருக்கின்றாய் என்று சொன்னார் அவர் இந்த நிலையில் மர நிழலில்  நபியை கண்டு அவர்களிடம் வந்து நாயகமே என் மனம் என்னை மீறி செயல்படுகிறது எனவே தான் இவ்வாறு செய்தேன் என்று கூறிய போது நபி அந்த தோழரிடம் இப்பொழுது வானத்தின் எல்லா வாசல்களிலும் உனக்காக திறக்கப்பட்டது அல்லாஹ் உன்னை குறித்து மலக்குகளிடம் பெருமை பாராட்டி பேசினான் என்றார்கள் பிறகு தோழர்களிடம் உங்களுடைய இந்த சகோதரரிடத்தில் உங்களுக்கு வேண்டியதை தேடிக் கொள்ளுங்கள் என்றார்கள் உடனே ஒரு மனிதர் அவரிடம் எனக்கு துஆ செய்யுங்கள் என்றார். நபி (ஸல்) அவரிடம் எல்லோருக்கும் துஆ செய்யுங்கள் என்றார்கள் இறைவா இவர்களின் உணவாக தக்வாவை நீ ஆக்கு இவர்களின் காரியங்கள் அனைத்தையும் நேர்வழியின் மீது ஒன்றினைத்து விடு என்று அவர் துஆ செய்தார் இதை கேட்ட நாயகம் யா அல்லாஹ் இவரை நேரான பாதையில் நிலைத்திருக்க செய்துவிடு இவர்கள் அனைவரின் தங்குமிடமாக சொர்க்கத்தை ஆக்கிவிடு என துஆ செய்தார்கள்.

நூல். ஹயாதுஸ்ஸஹாபா. பாகம். 4.

இறைத்தொடர்பை பெறும் விஷயத்தில் ஏற்படும் தடைகளும் அதை தகர்க்கும் வழிகளும்.

முதல் தடை நப்ஸாகும்.

நப்ஸை கட்டுப்படுத்த அதன் மீது சுமையான அமல்களில் அதை ஈடுபடுத்த வேண்டும். மேலும் அது சீராக அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்.

இரண்டாவது தடை ஷைத்தான்.
 
இவனை வீழ்த்த ஒரே வழி எல்லா நேரமும் அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டே இருக்கவேண்டும்.


وَفِي حَدِيثِ أَنَسٍ { إنَّ الشَّيْطَانَ وَاضِعٌ خُرْطُومَهُ عَلَى قَلْبِ ابْنِ آدَمَ فَإِنْ ذَكَرَ اللَّهَ خَنَسَ وَإِنْ نَسِيَ الْتَقَمَ قَلْبَهُ


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக ஷைத்தான் தனது மூக்கை (ஆதிக்கத்தை) மனிதனுடைய உள்ளத்தின் மீது வைத்திருக்கின்றான் அவன் அல்லாஹ்வை திக்ரு செய்யும்போது அவன் பலகீனமாகிவிடுகின்றான். அவன் அல்லாஹ்வை மறந்தால் அந்த உள்ளத்தில் தங்கிவிடுகின்றான்.

நூல். தர்கீப்.தர்ஹீப்.

மூன்றாவது தடை பாவங்கள். அதனால் ஏற்படும் பின்னடைவுகள்..

இதற்கு தீர்வு என்னவென்றால் பாவம் செய்யாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். பாவம் செய்துவிட்டால் உடனே செய்த பாவத்தை வருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடிவிட வேண்டும்.

عن نافع عن ابن عمر رضي الله عنهما أن عثمان رضي الله عنه أصبح فحدث الناس فقال إني رأيت رسول الله صلى الله عليه وسلم في المنام فقال يا عثمان أفطر عندنا فأصبح صائماً وقتل من يومه.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் எதிரிகளால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது ஒரு நாள் காலையில் மக்களிடம் கூறினார்கள் நேற்று இரவு கனவில் நபியை கண்டேன்  நபி என்னிடம் கூறினார்கள் உஸ்மானே நீ நம்மிடத்தில் நோன்பு திறக்க வந்துவிடு என்று கூறினார்கள். என சொன்ன உஸ்மான் (ரலி) அவர்கள் அன்று நோன்பு வைத்திருந்தார்கள் அன்று மாலைக்குள் கொல்லப்பட்டார்கள்

நூல். அல்பிதாயா வந்நிஹாயா.

سعيد بن عبد العزيز قال: قال بلال حين حضرته الوفاة: " من الهزج "
غداً نلقى الأحبه ... محمداً وحزبه
قال: تقول امرأته: واويلاه! قال: يقول هو: وافرحاه!.

ஸயீத் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பிலால் (ரலி) அவர்களுக்கு மரண நேரம் வந்த போது அவர்கள் கூறினார்கள். நாளை நான் முஹம்மது நபி(ஸல்) அவர்களையும்  அவர்களின் தோழர்களையும்  சந்திப்போம் என்றார்கள். அவரின் மனைவி எங்களி ன் கைசேதமே என்றார். பிலால் (ரலி) அவர்களோ  சந்தோஷமே என்றுகூறி சந்தோஷத்துடன் மரணத்தை ஏற்றார்கள்.

நூல். ஹுல்யதுல் அவ்லியா.




1 comment:

  1. அல்ஹம்து லில்லாஹ் நல்லதொரு உபதேசம். இன்ஷா அல்லாஹ் நாமும் இறை நெருக்கம் பெற முயற்சிப்போம்.

    ReplyDelete