Wednesday 25 June 2014

வசந்த ரமலானே வருக!...பெருவாழ்வு தருக



அன்பான உஸ்மானிகள் ஆன்லைன் பார்வையாளர்களுக்கு.....
அல்ஹம்து லில்லாஹ்!அல்லாஹ்வின் கிருபையால் ஒரு இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் ஜும்ஆ குறிப்பை பதிவிடும் பொறுப்பை
ஏற்றுள்ளேன்.நான் ஏற்றுள்ள பணியை தொய்வின்றி செய்வதற்கு உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டி உங்களின் துஆவை நாடி.....
                               இப்படிக்கு
                        அபூபக்கர் உஸ்மானி


அல்லாஹுதஆலா மனித சமூகத்திற்கு வழங்கியுள்ள அருட்கொடைகளை அளவிட முடியாது.எண்ணிலும் எழுத்திலும் அடங்காத அந்த பேருபகாரியின் கொடையை வார்த்தைகளால் மட்டும் வடித்துவிட முடியுமா என்ன! அவன் வழங்கிய அருட்கொடைகளில் விலைமதிப்பில்லாத காலமும் கட்டுப்படும்.

قال الشافعي ـ رحمه الله ـ :
" صحبتُ الصوفية فما انتفعتُ منهم إلاَّ بكلمتين، سمعتهم يقولون : الوقتُ سيفٌ، فإن قطعته وإلاَّ قطعك، ونفسُك إن لم تشغلها بالحقِّ شغلتك بالباطل

காலம் வாளை போன்றது.அதை நீ பயன்படுத்த தவறினால் அது உன்னை பயன்படுத்திக்கொள்ளும்,அவ்வாறே உன்னுடைய நப்ஸ்.அதை நீ நல்ல விஷயங்களில் பயன்படுத்தாவிட்டால் அது உன்னை பாவத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும்.இது ஞானவான்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடமாகும் என்று இமாம் ஷாபிஈ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பொன்று இருக்குமானால் நிச்சயமாக அது காலமாகத்தான் இருக்கும்.காலத்தின் கடமை அறிந்து செயலாற்றியவர்கள் கண்ணியமாக வாழ்ந்துமுடித்தார்கள்.

விலைமதிப்பில்லா பொழுதுகளை வீணாக கழித்தவர்கள் பெரும் நஷ்டவாளி களாக பிற்காலத்தில் தங்களை உணர்வார்கள்.நாளை மறுமையில் அதிகமாக விசாரனைக்கு உட்படுத்தப்படுவது காலங்கள் பற்றியே,பின்வரும் இருவசனங்கள் அதை தெளிவுபடுத்துகிறது

قَالَ كَمْ لَبِثْتُمْ فِي الْأَرْضِ عَدَدَ سِنِينَ

ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?" என்று கேட்பான்

رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ ۚ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ

இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்; "எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்" என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) "சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார் என்று கூறுவான்.

ஒரு புறத்தில் காலத்தின் பரக்கத்துகளும் குறைந்து வருகிறது.ஒரு ஆண்டு ஒரு மாதமாக,ஒரு மாதம் ஒரு வாரமாக,ஒரு வாரம் ஒரு நாளாக,ஒரு நாள் ஒரு மணிநேரமாக கழிந்துகொண்டிருக்கிறது.இருபத்தி நான்கு மணிநேரங்கள் போதவில்லை என்று அலுத்துக்கொள்பவர்களுமுண்டு.

மறுபுறத்தில் பொழுதுபோக்கு எனும் ஒரு சொல்லாடல் முன்னெப்போதையும் விடஇப்போதுஅதிகமாகபயன்படுத்தப்படுகிறது.விளையாட்டு,வானொளி.தொலைக்காட்சி.இணையதளங்கள்,அந்த வரிசையில் இப்போது ஷாப்பிங் கலாச்சாரமும் மக்களை ஈர்த்துவருகிறது.மக்களின் நேரங்களை கொள்ளயடிப்பதில் ஒன்றை ஒன்று போட்டிபோடுகின்றது

காசை விட காலம் கண்ணியமானது

நம்முன்னோர்கள் காசை விடவும் கவனமாக காலங்களை செலவு செய்வார்கள்

يقول الحسن البصري رحمه الله:
أدركت أقواماً كانوا على أوقاتهم أشد منكم حرصاً على دراهمكم ودنانيركم

எனக்கு தெரிந்த சில ஸாலிஹீன்கள் தங்கம், வெள்ளியை விடவும் தங்களின் நேரத்தின் மீது அதிக பேராசைக்கொண்டவர்கள் என ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் கூறிகிறார்கள்.

يقول عمر بن عبد العزيز رحمه الله:
إن الليل والنهار يعملان فيك فاعمل فيهما

இரவும் பகலும் உனக்காக வேலை செய்கிறது.அந்த இரவிலும் பகலிலும் அவனுக்காக நீ அமல் செய் என்று உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ونقل عن عامر بن قيس من التابعين
أن رجلاً قال له: تعال أكلمك، قال: أمسك الشمس ]] يعني أوقفها لي واحبسها عن المسير لأكلمك، فإن الزمن سريع المضي لا يعود بعد مروره، فخسارته لا يمكن تعويضها واستدراكها.
ஆமிர் இப்னு கைஸ் தாபிஈ ரஹ் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து பொழுது போக்குக்காக கொஞ்சநேரம் பேசுவதற்கு அனுமதி கேட்டார்.அதற்கு அன்னார்  எனக்காக சூரியனை கொஞ்சநேரம் நிறுத்து,நான் உன்னுடன் பேசுகிறேன்.  காலம் மிக வேகமாகச்செல்கிறது.அது சென்றுவிட்டால் மீண்டும் திரும்பாது.அதன் நஷ்டம் ஈடுசெய்ய முடியாதது என்று கூறினார்கள்.

அல்லாஹுத்தஆலா நம் முன்னோர்களின் நேரங்களில் பரக்கத் செய்தான்
.
جلس محمد بن جرير الطبري الإمام المؤرخ المفسر متوفى عام 330 للهجرة جلس مع طلابه ثم قال لهم: أتنشطون في كتابة التاريخ؟ قالوا له: في كم؟؟ يعني ما هي السنوات التي ستكتب فيها التاريخ ، قال : سنكتبه من عهد آدم إلى يومنا هذا ، قالوا: في كم صفحة؟ قال: في ثلاثين ألف ورقة ، قالوا: هذا مما تفنى الأعمار دون إتمامه ، ثلاثون ألف ورقة هذا عدد كبير جدا ، فاختصره لهم إلى سبعة آلاف ورقة ثم لما انتهوا من التاريخ ... انظر للتخطيط ... قال لهم: أتنشطون في كتابة التفسير ؟ قالوا له: في كم؟؟ قال: في ثلاثين ألف ورقة ، فقالوا له أيضا: هذا مما تفنى الأعمار دون إتمامه، فقال لهم: سبحان الله ماتت الهمم فاختصره لهم بنحو ما اختصر لهم التاريخ يعني في سبعة آلاف ورقة
ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாமேதை இமாம் தப்ரி ரஹ் அவர்கள் ஒரு வரலாற்று நூலை எழுதிமுடித்து தங்களின் மாணவர்களிடம்,  நான் எழுதிய வரலாற்று நூலை உங்களுக்கு கற்றுத்தரட்டுமா? என கேட்கிறார்கள்.அதற்கு அவர்களின் மாணவர்களோ,அந்த நூல் எத்தனை பக்கங்கள் கொண்டது என வினவினார்கள்.
முப்பதாயிரம் பக்கங்கள் கொண்டது என இமாம் அவர்கள் கூறியபோது பிரமித்துப்போன அவர்களின் மாணவர்கள் எங்கள் ஆயுளே முடிந்துவிடும் என்றார்களாம்.இறுதியில் அதை ஏழாயிரம் பக்கமாக சுறுக்கி கற்றுக்கொடுக்கி  றார்கள்.
அதை தொடர்ந்து அதே முப்பதாயிரம் பக்கங்களில் ஒரு தஃப்ஸீர் நூலை எழுதி அதையும் தங்களின் மாணவர்களின் முன் வைத்தபோது அதையும் சுறுக்கும் படி மாணவர்கள் வேண்டிக்கொண்டனர்.அவர்களின் வேண்கோளை ஏற்று அதையும் ஏழாயிரம் பக்கமாக சுறுக்கினார்கள்.
முப்பதாயிரம் பக்கங்களை படிப்பதற்கே மலைத்துப்போன மாணவர்களுக்கி  டையில் அதை எழுதிய இமாம் அவர்களின் காலம் எத்துனை பெரும் பரக்கத் தான வாழ்வுக்கு சொந்தமானது என்று யோசிக்கவேண்டும்?

الأمام النووي رحمه الله تعالى مات وعمره خمس وثلاثون سنة ومع ذلك الإمام النووي ترك لنا "رياض الصالحين" الذي يُقرأ في كل مسجد ، وترك لنا "المجموع" شرح المهذب بحجمه الكبير وترك لنا شرح صحيح مسلم ، مات وهو تحت الأربعين ومع ذلك انظر لهذا التأثير . قالوا عن النووي رحمه الله تعالى : كان وعمره تسع سنين يحضر في اليوم أحد عشر درسا ، درسا في التفسير و درسا في الفقه ودرسا في التوحيد و درسا في اللغة و درسا في الأدب و درسا في العروض و درسا في الشعر. يحضر أحد عشر درسا وعمره تسع سنوات
இமாம் நவவி ரஹ் அவர்கள் முப்பத்தைந்து வயதில் மரணத்தை சந்திக்கிறார் கள்.அவர்கள் இந்த உம்மத்துக்கு வழங்கிய 
رياض الصالحين  شرح صحيح مسلم போன்ற நூட்கள் நிகரில்லாத முத்துக்களாகும்.அவர்கள் தங்களின் ஒன்பதாவது வயதில் ஒரு நாளைக்கு தப்ஸீர்,பிக்ஹ்,மொழி,கவிதை என 11 பாடங்களை கற்றுக்கொள்வார்களாம்.

அல்லாஹ்வின் படைப்புக்கள் அனைத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது போல அவன் படைத்த காலங்களிலும் வித்தியாசங்கள் உண்டு.எல்லா மாதங்களும் ஒரே மாதங்கள் அல்ல,மாதங்களில் மிகச்சிறந்த மாதமாக அல்லாஹ் ரமலானை தேர்வு செய்தான்.

    விலைமதிக்க முடியாத காலம் ரமலான்

ரமலான் மாதம் மாதங்களின் இதயம்.அது சரியானால் அனைத்தும் சரியாகும்.

مثل الشهور الإثني عشر كمثل أولاد يعقوب عليه وعليهم السلام ، وشهر رمضان بين الشهور كيوسف بين إخوته فكما أن يوسف أحب الأولاد إلى يعقوب كذلك رمضان أحب الشهور إلى علام الغيوب، وكما غفر لهم بدعوة واحد منهم وهو يوسف ، كذلك يغفر ذنوب أحد عشر شهرًا ببركة رمضان
. الإمام ابن الجوزي رحمه الله

பனிரண்டு மாதங்களுக்கு உதாரணமாகிறது நபி யஃகூப் அலை அவர்களின் பிள்ளைகள் போன்றது.12 குழந்தைகளில் யூஸுப் நபிமீது தந்தை யஃகூப் அலை அவர்களுக்கு எந்தளவு பிரியம்உண்டோ அதைப்போல 12 மாதங்களில் ரமலான் மீது அல்லாஹ்வுக்கு பிரியம் உண்டு.
12 மக்களில் ஒருவரான யூஸுப் நபியின் துஆவால் எப்படி மற்றபிள்ளைகள் இறைவனின் மன்னிப்பை பெற்றார்களோ அவ்வாறே ரமலானின் பரக்கத்தால் மற்ற மாதங்களில் செய்த பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அல்லாமா இப்னுல் ஜவ்ஸி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

 கல்வி சீஸன்,பட்ஜெட் சீஸன்,கோடை சீஸன்,குற்றால சீஸன் என்று வருவது போல ரமலான் நன்மைகளின் சீஸன்.
அது ஒரு ஜெக் புக்,பிளைன் ஜெக் புக்.அதில் முப்பது இருக்கிறது.அவரவர்கள் விருப்பம் போல அதை நிறப்பிக்கொள்ளலாம்.சிலர் அதில் நூற்றுக்கணக்கில் நன்மைகளை பூர்த்திசெய்துகொள்கின்றனர்.இன்னும் சிலர் ஆயிரத்தில் இன்னும் சிலர் மில்லியனில்.வேறு சிலர் பில்லியனில் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.துர்ப்பாக்கியமாக சிலர்கள் அதை காலியாகவே திரும்ப ஒப்படைத்து விடுகின்றனர்.

ரமலான் கிடைப்பதற்கு அரிதான ஒரு மாபெரும் நிஃமதாகும்.கடந்த ஆண்டு நம்முடன் ரமலானை சந்தித்த சிலர்கள் இவ்வாண்டு கப்ரின் குடிமக்களாக ஆகிப்போனார்கள்.சென்ற ஆண்டு ஆரோக்கியமாக ரமலானை சந்தித்தவர்கள் சிலர் இவ்வாண்டு நோயின் கோரப்பிடியில் அகப்பட்டுக்கொண்டார்கள்.இதுவே கடைசி ரமலானாக இருக்கலாம் என்பது யாருக்கு தெரியும்?
நம்முடைய முன்னோர்கள் ரமலானுக்காகவே வாழஆசைப்பட்டிருக்கிறார்கள். ஆண்டு முழுவதையும் ரமலானாக வாழ்ந்த அந்த பெருமக்களுக்கு மத்தியில் ஆண்டுக்கு ஒரு ரமலானையாவது தன் மறுமைக்கு பயனுள்ளதாக கழிக்கத் தவறியவர்கள் பற்றி என்ன சொல்ல?

நீண்டநாட்கள் எதிர்பார்த்த ஒரு தம்பதியருக்கு அல்லாஹ் குழந்தையை வழங்கினால் அவர்கள்அந்த குழந்தையை எந்தளவு எதிர்பாத்திருப்பார்களோ அந்தளவு ஸஹாபாக்களும்,ஸாலிஹீன்களும் ரமலானை எதிர்பார்ப்பார்களாம்.

ரமலானுக்கு முன் நாம் செய்யவேண்டியவை என்ன?

1. ரமலான் வருகையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது

من فرح بدخول رمضان حرم الله جسده على النيران

ரமலான் வருகிறது என்று ஒருவர் சந்தோஷப்பட்டால் அல்லாஹ் அவருக்கு நரகத்தை ஹராமாக்கிவிடுகின்றான் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
ரமலான் ஒரு முஃமினை மகிழ்ச்சிப்படுத்தும் மாதமாகும்,ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில்-

قُلْ بِفَضْلِ اللَّـهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ

அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சிடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது" என்று (நபியே!) நீர் கூறும்
அல்லாஹ்வின் அருட்கொடையும்,கருனையும் மகிழ்ச்சியாக கொண்டாட தகுதியானவை என்பதை இந்த வசனம் கூறுகிறது.அப்படிப்பார்த்தால் நன்மைகளை அள்ளித்தருகின்ற ரமலானை விட ஒரு முஃமினுக்கு அருட்கொடை வேறு என்னவாக இருக்க முடியும்?

ஹழ்ரத் இக்ரிமா ரலி அவர்கள் இஸ்லாமானபோதும்,அதிய் இப்னு ஹாதம் ரலி அவர்கள் இஸ்லாமானபோதும் நபி ஸல் அவர்கள் தங்களின் அளவு கடந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஒரு முஃமின் அல்லாஹ்வின் அருட்கொடையை கானும்போதும்,அனுபவிக்கும் போதும் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தவேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகள் ரமலான் மாதத்தில் தான் நடந்துள்ளது.
உலக வரலாற்றை மாற்றியமைத்த பத்ர் வெற்றியும்,மக்கா வெற்றியும் மட்டுமல்ல, பைத்துல் முகத்தஸை ஆக்கிரமித்த சிலுவைக்காரர்களிடமிருந்து ஸலாஹுத்தீன் அய்யூபியால் அது மீட்கப்பட்டதும் ரமலானில்தான்.

 2.ரமலானை அடைந்துகொள்ள துஆச்செய்வது

ரமலானுக்காக இரண்டு மாதங்களுக்கு முன்பே துஆச்செய்யும் பழக்கம் நபி ஸல் அவர்களிடம் இருந்திருக்கிறது.

كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبلغنا رَمَضَانَ

ரஜப் மாதம் வந்துவிட்டால் நபி ஸல் அவர்கள்
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبلغنا رَمَضَانَ என்று துஆச்செய்வார்கள்.

நபித்தோழர்களோ ரமலானுக்காக ஆறுமாதம் துஆச்செய்வார்களாம்

قال معلى بن الفضل : كانوا (السلف) يدعون الله تعالى ستة أشهر أن يُبلغهم رمضان, ثم يدعونه ستة أشهر أن يتقبل منهم
.
முஅல்லா இப்னு பழ்ல் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
முன்னோர்களான நல்லோர்கள் ஆண்டு முழுவதும் ரமலானுக்காக துஆச்செய்வார்கள்.ரமலானுக்கு முந்திய 6 மாதம் ரமலானை அடைந்துகொள்ளவும், பிந்திய 6 மாதம் ரமலானின் அமலை அல்லாஹ் கபூல் செய்யவும் துஆச்செய்வார்கள்
ரமலானுக்காக அவர்கள் செய்யும் துஆ இப்படி இருக்கும் என யஹ்யா இப்னு கஸீர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்

وقال يحيى بن أبي كثير : كان من دعائهم : اللهم سَلِمني إلى رمضان, وسلم لي رمضان, وتَسَلمه مني متقبلاً
.
யா அல்லாஹ் ரமலானில் நான் ஸலாமத்தாகவும் என்னிடம் ரமலான் ஸலாமத்தாகவும் ஆக்கி,என்னிடமிருந்து அதை கபூல் செய்.
நபி சல் அவர்கள் ரமலான் பிறையை கானும் போது-
 "اللهم أهلَّهُ علينا باليُمنِ والإيمان، والسَّلامة والإسْلام، هلال خير ورُشْد، رَبِّي وربُّك الله என்ற தூஆவை ஓதுவார்கள் என ஹதீஸில் வருகிறது

جاء في سُنن "الترمذي" أنّ النبي صلى الله عليه وسلم كان إذا رأى هلال رمضان قال:
"اللهم أهلَّهُ علينا باليُمنِ والإيمان، والسَّلامة والإسْلام، هلال خير ورُشْد، رَبِّي وربُّك الله

3.திருக்குர்ஆனின் தொடர்பை அதிகப்படுத்துதல்.

அல்லாஹ் தஆலா தன் திருமறையில் ரமலானை அறிமுகம் செய்யும்போது அது திருக்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம் என்றே அறிமுகம் செய்கிறான்.

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது.என்று கூறுகின்றான்.
ஒவ்வொரு வருடம் இறக்கப்பட்ட வசனங்கள் முழுமையையும் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் நபி ஸல் அவர்களுக்கு ரமலானில் ஓதிக்காட்டுவார்கள்.

وأنس - رضي الله عنه - يقول: كان المسلمون إذا دخل شعبان أكبوا على المصاحف فقرؤوها
ஷஃபான் மாதம் வந்துவிட்டால் முஸ்லிம்கள் திருக்குர்ஆன் ஓதுவதில் அதிகம் மூழ்கிக்கிடப்பார்கள்.என அனஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்

وكان مالك بن أنس إذا دخل رمضان يفر من الحديث ومجالسه أهل العلم ويقبل على تلاوة القرآن من المصحف
.
காலமெல்லாம் ஹதீஸ் துறையில் மூழ்கியிருந்த ஹழ்ரத் மாலிக் ரஹ் அவர்கள் ரமலான் வந்துவிட்டால் தங்களின் முழு கவனத்தையும் திருக்குர்ஆன் பக்கம் திருப்புவார்கள்

عن أبى إسحاق الهمداني قال : خرج على بن أبى طالب في أول ليلة من رمضان والقناديل تزهر وكتاب الله يتلى في المساجد، فقال:\" نور الله لك يا ابن الخطاب في قبرك كما نورت مساجد الله بالقرآن
كنز العمال: 23477.
ஹழ்ரத் அலி ரலிஅவர்கள் ரமலானின் முதல் இரவில் வலம்வந்தபோது, பள்ளிவாசல்களில் விளக்கேற்றப்பட்டு திருக்குர்ஆன் வசனங்கள் ஓதி தராவீஹ் தொழவைக்கப்படுவதை கண்டு மகிழ்ச்சியுற்று- கத்தாபின் மகனே-திருக்குர்ஆனால் இறையில்லத்தை நீர் ஒளியேற்றியது போல அல்லாஹ் உம் கப்ரை ஒளிமயமாக்குவானாக என்று துஆச்செய்தார்கள்
சாதாரண நாட்களில் திருக்குர்ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மை என்றால் ரமலானில் அல்லாஹு அக்பர்!
ரமலானில் திருக்குர்ஆனை கடமைக்காகவோ அல்லது கணக்குக்காகவோ ஓதாமல் அதை இரசித்து ருசித்து ஓதவேண்டும்.
திருக்குர்ஆன் இறக்கப்பட்ட மாதத்தில் அதை ஓதுகின்றோம் எனும் உள்ளச்சத்தோடு ஓதவேண்டும்.

ﻳـــــﺮﻭﻯ ﺃﻥ ..ﺍﻻﻣﺎﻡ ﺃﺣﻤﺪ ﺑﻦﺣﻨﺒﻞ .. ﺑﻠﻐﻪ ﺃﻥ ﺃﺣﺪ ﺗﻼﻣﺬﺗﻪ ﻳﻘﻮﻡ ﺍﻟﻠﻴﻞ ﻛﻞ ﻟﻴﻠﺔ ﻭﻳﺨﺘﻢ ﺍﻟﻘﺮﺁﻥ ﺍﻟﻜﺮﻳﻢﻛﺎﻣﻼ ﺣﺘﻰ ﺍﻟﻔﺠﺮ ... ﺛﻢ ﺑﻌﺪﻫﺎ ﻳﺼﻠﻰ ﺍﻟﻔﺠﺮ ...
ﻓﺄﺭﺍﺩ ﺍﻻﻣﺎﻡ ﺃﻥ ﻳﻌﻠﻤﻪ ﻛﻴﻔﻴﺔ ﻳﺘﺪﺑﺮ ﺍﻟﻘﺮﺁﻥ ﻓﺄﺗﻰ ﺍﻟﻴﻪ ...ﻭﻗﺎﻝ :
ﺑﻠﻐﻨﻰ ﻋﻨﻚ ﺃﻧﻚ ﺗﻔﻌﻞ ﻛﺬﺍ ﻭﻛﺬﺍ ...ﻓﻘﺎﻝ : ﻧﻌﻢ ﻳﺎ ﺍﻣﺎﻡ
ﻗﺎﻝ ﻟﻪ : ﺍﺫﻥ ﺍﺫﻫﺐ ﺍﻟﻴﻮﻡ ﻭﻗﻢ ﺍﻟﻠﻴﻞ ﻛﻤﺎ ﻛﻨﺖ ﺗﻔﻌﻞ ﻭﻟﻜﻦ ﺍﻗﺮﺃ ﺍﻟﻘﺮﺁﻥ
ﻭﻛﺄﻧﻚ ﺗﻘﺮﺃﻩ ﻋﻠﻰ ..ﺃﻯ ﻛﺄﻧﻨﻰ ﺃﺭﺍﻗﺐ ﻗﺮﺍﺀﺗﻚ ... ﺛﻢ ﺃﺑﻠﻐﻨﻰ ﻏﺪﺍ
ﻓﺄﺗﻰ ﺍﻟﻴﻪ ﺍﻟﺘﻠﻤﻴﺬ ﻓﻰ ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺘﺎﻟﻰ
ﻭﺳﺄﻟﻪ ﺍﻻﻣﺎﻡ ... ﻓﺄﺟﺎﺏ ... ﻟﻢ ﺃﻗﺮﺃ ﺳﻮﻯ ﻋﺸﺮﺓ
ﺃﺟﺰﺍﺀ
ﻓﻘﺎﻝ ﻟﻪ ﺍﻻﻣﺎﻡ : ﺍﺫﻥ ﺍﺫﻫﺐ ﺍﻟﻴﻮﻡ ﻭﺍﻗﺮﺃ ﺍﻟﻘﺮﺁﻥ ﻭﻛﺄﻧﻚ ﺗﻘﺮﺃﻩ ﻋﻠﻰ
ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺬﻫﺐ ﺛﻢ ﺟﺎﺀ ﺍﻟﻰ ﺍﻻﻣﺎﻡ ﻓﻰ ﺍﻟﻴﻮﻡ
ﺍﻟﺘﺎﻟﻰ ﻭﻗﺎﻝ : ....
ﻳﺎ ﺍﻣﺎﻡ .. ﻟﻢ ﺃﻛﻤﻞ ﺣﺘﻰ ﺟﺰﺀ ﻋﻢ ﻛﺎﻣﻼ
ﻓﻘﺎﻝ ﻟﻪ ﺍﻻﻣﺎﻡ : ﺍﺫﻥ ﺍﺫﻫﺐ ﺍﻟﻴﻮﻡ .. ﻭﻛﺄﻧﻚ ﺗﻘﺮﺃ ﺍﻟﻘﺮﺁﻥ ﺍﻟﻜﺮﻳﻢ ﻋﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ
ﻓﺪﻫﺶ ﺍﻟﺘﻠﻤﻴﺬ ... ﺛﻢ ﺫﻫﺐ ﻓﻰ ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺘﺎﻟﻰ ... ﺟﺎﺀ ﺍﻟﺘﻠﻤﻴﺬ ﺩﺍﻣﻌﺎ
ﻋﻠﻴﻪ ﺁﺛﺎﺭ ﺍﻟﺴﻬﺎﺩ ﺍﻟﺸﺪﻳﺪ
ﻓﺴﺄﻟﻪ ﺍﻻﻣﺎﻡ : ﻛﻴﻒ ﻓﻌﻠﺖ ﻳﺎ ﻭﻟﺪﻯ ؟
ﻓﺄﺟﺎﺏ ﺍﻟﺘﻠﻤﻴﺬ ﺑﺎﻛﻴﺎ : ... ﻳﺎ ﺍﻣﺎﻡ ... ﻭﺍﻟﻠﻪ ﻟﻢ ﺃﻛﻤﻞ ﺍﻟﻔﺎﺗﺤﺔ ﻃﻮﺍﻝ ﺍﻟﻠﻴﻞ
ﺍﻟﻌﺒـــــــــــﺭﻩ
ﺍﻟﻘﺮﺀﺍﻥ ﻛﻼﻡ ﺍﻟﻠﻪ ﻟﻨﺎ .. ﻓﺎﻗﺮﺃ ﻛﻼﻡ ﺍﻟﻠﻪ ﺑﻘﻠﺒﻚ ﻟﻴﺲ ﺑﻠﺴﺎﻧﻚ
اللهم اجـعل القـرأن الكريـم. ربع قلوبنـا وشفاء صدورنـا
..
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்களின் மாணவர்களில் ஒருவர் இரவு முழுவதும் நின்று வணங்குவார்.அதில் ஒவ்வொரு இரவிலும் ஒரு குர்ஆன் முழுமையாக ஓதி முடித்து விடுவார்.இச்செய்தி இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்களின் கவனத்திற்கு வந்தபோது அம்மாணவருக்கு இமாம் அவர்கள் குர்ஆன் ஓதும் முறையை கற்றுக்கொடுக்க நாடினார்கள்.

அம்மாணவரை சந்திக்கச்சென்ற இமாம் அவர்கள், நீங்கள் இவ்வாறு செய்வதாக எனக்கு கிடைத்த செய்தி உண்மையா?என விசாரித்தார்கள்.அதற்கு அவர், ஆம்!உண்மைதான் என பதில் கூறினார்.
இன்று நீ இரவில் வழமைப்போல் நின்று தொழுவீராக,ஆனால் அதில் நீ ஓதும் குர்ஆன் என்னிடம் ஓதிக்காட்டுவதாக நினைத்துக்கொள்.நாளை வந்து நடந்த செய்தியை சொல் என இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள் கூறினார்கள்.

மறுநாள் அம்மாணவர் இமாமிடம் வந்தபோது இன்று எவ்வளவு ஓதினாய்? என இமாம் வினவியபோது, நான் பத்து ஜுஸ்வுகள் தான் ஓத முடிந்தது என்று அவர் பதில் கூறினார்.
சரி!இன்றைய இரவுத்தொழுகையில் நீ ஓதும் குர்ஆனை நபி ஸல் அவர்கள் கேட்கிறார்கள் என கற்பனை செய்து ஓதுவீராக என சொல்லி அனுப்பி வைத்தார்கள்.அவர் சென்றுவிட்டார்.

மறுநாள் வந்தார்.இன்று என்ன நடந்தது?என இமாம் அவர்கள் வினவியபோது இன்று ஒரு  ஜுஸ்வு மட்டும்தான் ஓத முடிந்தது என்றார்.
சரி!இன்றைய இரவுத்தொழுகையில் நீ ஓதும் குர்ஆனை அல்லாஹ் கேட்கிறான் என கற்பனை செய்து ஓதுவீராக என சொல்லி அனுப்பி வைத்தார்கள்.அவர் சென்றுவிட்டார்.

மறுநாள் அம்மாணவர் அழுதவராக வந்தார்.மகனே என்ன நேர்ந்தது? என அவரிடம் இமாம் அவர்கள் விசாரித்தார்கள்.
அதற்கு அம்மாணவர் இமாம் அவர்களே!அல்லாஹ்வின் மீது சத்தியமாக இரவு முழுவதும் ஃபாத்திஹா சூராவை கூட என்னால் தாண்ட முடியவில்லை என்று அழுதுகொண்டே கூறினார்
சகோதரர்களே! இது அல்லாஹ்வின் வார்த்தை.இதை நாவால் ஓதாமல் கல்பால் (உள்ளத்தால்) ஓதுங்கள்.
யா அல்லாஹ்!உன் கலாமை எங்களின் உள்ளங்களுக்கு வசந்தமாக்குவாயாக!நெஞ்சங்களுக்கு ஆரோக்கியமாக்குவாயாக!ஆமீன்

4.ரமலானை பரிசுத்த உள்ளத்துடன் சந்தித்தல்

سُئِل الصحابي الجليل عبدالله بن مسعود رضي الله عنه : " كيف كنتم تسقبلون شهر رمضان ؟ قال : ما كان أحدنا يجرؤ أن يستقبل الهلال وفي قلبه مثقال ذرة حقد على أخيه المسلم "
ரமலானை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்? என ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் ரலி அவர்களீடம் கேட்கப்பட்டபோது-ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் மீது அனுவளவும்பொறாமை எண்ணம் இல்லாத நிலையில் ரமலானை நாங்கள் சந்திப்போம் என்று கூறினார்கள்.

10 comments:

  1. Arumayana korvai alhamdu lillah

    ReplyDelete
  2. Assalamu Alaikum Moulana nice article wel come

    ReplyDelete
  3. Salam.hazrath,Ramalanai romba specialaha start pannivitteerhal.thodarattum ungal sevai Udal&ulla nalatthudan.jazakkallah.

    ReplyDelete
  4. அல்ஹம்து லில்லாஹ் ஹழ்ரத் மிக அருமையான துவக்கம்.உண்மையில் ரமலானை கண்ணியப்படுத்தி விட்டீர்கள். மாஷா அல்லாஹ்.

    ReplyDelete
  5. உங்களின் எழுச்சி கட்டுரை எங்கழுக்கு குலிர்ச்சி அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  6. அருமை

    ﺍﻟﺤﻤﺪ لله

    ReplyDelete
  7. மூஸா அலை அவர்கள் பூமியும் வானம் வசப்படும் எப்பொழது

    ReplyDelete