அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புள்ள உஸ்மானிகள் ஆன்லைன் இணையதள சகோதரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
நம்முடைய ஆன்லைனில் வாராந்திர ஜும்ஆ பயான் பொறுப்பை கடந்த அக்டோபர் 2013 முதல் இவ்வாரம் வரை ஒன்பது மாத காலம் மிகச்சிறப்பாக செய்துவந்த இரு உஸ்மானிகள் மெளலவி காஜா ஹுஸைன் உஸ்மானி,ஹயாத் கான் உஸ்மானி ஆகியோருக்கு பேரவை தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
இவ்விரு உஸ்மானிகளுக்கும் சிலகாலம் ஓய்வு கொடுத்து,மீண்டும் அந்த ஜும்ஆ பதிவிடும் பொறுப்பை பழையபடி அபூபக்கர் உஸ்மானியிடம் ஒப்படைக்கப்படுகிறது
இப்படிக்கு
உஸ்மானிகள் பேரவை
அன்புள்ள உஸ்மானிகள் ஆன்லைன் இணையதள சகோதரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
நம்முடைய ஆன்லைனில் வாராந்திர ஜும்ஆ பயான் பொறுப்பை கடந்த அக்டோபர் 2013 முதல் இவ்வாரம் வரை ஒன்பது மாத காலம் மிகச்சிறப்பாக செய்துவந்த இரு உஸ்மானிகள் மெளலவி காஜா ஹுஸைன் உஸ்மானி,ஹயாத் கான் உஸ்மானி ஆகியோருக்கு பேரவை தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
இவ்விரு உஸ்மானிகளுக்கும் சிலகாலம் ஓய்வு கொடுத்து,மீண்டும் அந்த ஜும்ஆ பதிவிடும் பொறுப்பை பழையபடி அபூபக்கர் உஸ்மானியிடம் ஒப்படைக்கப்படுகிறது
இப்படிக்கு
உஸ்மானிகள் பேரவை
செயல்களில் மிக மேலானது கண்மணி நாயகம் ஸல்
அவர்களின் அன்பை பெற்றுத்தரும் செயல்களாகும் . செயல்களில் மிக இழிவானது அவர்களை
விட்டும் நம்மை தூரப்படுத்தும் செயல்களாகும் இப்படிப்பட்ட செயல்களைவிட்டும்
விலகிக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.
நபியின் தொடர்பில்
இருந்தும் அன்பில் இருந்தும் மனிதனை தடுக்கும் சில செயல்பாடுகள் கீழே வரிசைப்
படுத்தப்படுகிறது அவற்றில் இருந்து தவிர்ந்து கொள்வதில் கண்டிப்பை பேணவேண்டும்.
1 வியாபாரத்தில் மோசடி.
عَنِ
ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
நபி ஸல் அவர்கள் கூறினார்கள். யார் நமக்கு மோசடி செய்வாரோ அவர்
நம்மை சார்ந்தவரல்ல.
நூல்.
இப்னுமாஜா.
عَنْ عَبْدِ اللهِ
بْنِ أَبِي جَعْفَرٍ، أَنَّ صَفْوَانَ بْنَ سُلَيْمٍ، أَخْبَرَهُ، أَنَّ أَبَا
هُرَيْرَةَ مَرَّ بِإِنْسَانٍ يَحْمِلُ لَبَنًا قَدْ خَلَطَهُ بِالْمَاءِ يَبِيعُهُ، فَقَالَ لَهُ أَبُو
هُرَيْرَةَ: " كَيْفَ لَكَ إِذَا قِيلَ لَكَ
يَوْمَ الْقِيَامَةِ: خَلِّصِ الْمَاءَ مِنَ اللَّبَنِ "
அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு மனிதரை கடந்து சென்றார்கள் .அப்போது அந்த மனிதர்
பாலில் தண்ணீரை கலந்து விற்பனை செய்துகொண்டிருந்தார். இதை கண்ட அபூஹுரைரா அவர்கள் அந்த மனிதரிடம்
கியாமத் நாளில் உன்னிடம் பாலை விட்டும் தண்ணீரை பிரித்து எடு என்று சொல்லப்பட்டால்
நீ எப்படி நடந்து கொள்வாய் என்ன செய்வாய் என்று கேட்டார்கள்.
وَنسي ان يبين
الْعَيْب وَلم يعلم مِمَّن بَاعه فَلَمَّا علم أَبُو حنيفَة بذلك تصدق بِثمن
الْمَتَاع كُله
ஷகீகுல் பல்கி
அறிவிக்கின்றார்கள் இமாம் அபூஹனிபா அவர்களின் கூட்டாளியாக பிஷ்ர் என்பவர்
இருந்தார் அவர் வியாபாரத்திற்காக மிஸ்ருக்கு சென்று இருந்தார் அவரிடம் 7௦ பட்டு
துணிகள் இமாம் அனுப்பி வைத்தார்கள் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள் அதில் இப்படி
குறிப்பிட்டு இருந்தார்கள் இந்த பட்டாடைகளில் இன்ன அடையாளமுடைய குரைவுடைய ஒரு
துணியும் உள்ளது அதை நீங்கள் விற்கின்ற பொழுது வாங்குபவரிடம் குறையை
தெளிவுபடுத்துங்கள் என்று எழுதி இருந்தார்கள் பிஷ்ரு அனைத்தையும் விற்று முடித்து
கூபாவுக்கு திரும்பினார் அவரிடம் குறிப்பிட்ட பட்டாடையில் இருந்த குறையை
மக்களுக்கு தெளிவுபடுத்தீர்களா என்று கேட்ட பொழுது அவர் நான் அதை மறந்து விட்டேன்
அப்படியே ஒன்றும் சொல்லாமல் விற்று விட்டேன் என்றார் இதன் காரணமாக இமாம் அபூஹனிபா
அந்த வியாபாரத்தில் தனக்கு கிடைத்த பணத்தில் அசலையும் லாபத்தையும் மொத்தமாக தர்மம்
செய்து விட்டார்கள் அதனுடைய அளவு 1௦௦௦
திர்ஹமாக இருந்தது அவர்கள் சொன்னார்கள் எந்த பணத்தில் சந்தேகம் புகுந்து
விட்டது அந்த பணம் எனக்கு தேவையில்லை என்றார்கள்.
நூல். இர்ஸாதுல் இபாத்.
2) குர்ஆனை கொண்டு போதுமாக்கி கொள்வது என்றார்கள்.
عَن عَائِشَة أَنالنبيّ صلى الله عليه وسلم: " لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بالقُرآن
நாயகம் (ஸல்) சொன்னார்கள். யார்
குர்ஆனை கொண்டு தேவையற்று இருக்க வில்லையோ
அவர் நம்மை சார்ந்தவரல்ல என்றார்கள் ..
நூல். துர்ருல் மன்ஸூர்.
وَأخرج
الطَّبَرَانِيّ عَن عبد الله بن عَمْرو أَن امْرَأَة أَتَت النَّبِي صلى الله
عَلَيْهِ وَسلم فَقَالَت: إِن زَوجي مِسْكين لَا يقدر على شَيْء
فَقَالَ النَّبِي
صلى الله عَلَيْهِ وَسلم لزَوجهَا: أَتَقْرَأُ من الْقُرْآن شَيْئا قَالَ: اقْرَأ
سُورَة كَذَا
فَقَالَ النَّبِي
صلى الله عَلَيْهِ وَسلم بخ بخ زَوجك غَنِي
فلزمت الْمَرْأَة زَوجهَا ثمَّ أَتَت رَسُول الله صلى الله عَلَيْهِ
وَسلم فَقَالَت: يَا نَبِي الله قد بسط الله علينا رزقنا
நபி இடம் ஒரு பெண்மணி வந்து சொன்னார்கள்
எனது கணவர் மிஸ்கீனாக இருக்கின்றார் அவரிடம் பொருளாதார வலிமை
இல்லை நபி அவர்கள் அப்பெண்ணின் கணவரிடம் நீங்கள் குர்ஆன் ஓதி வருகிறீர்களா என்று கேட்ட
பொழுது அவர் நான் இன்ன சூராக்கள் ஓதிவருகின்றேன் உடனே நாயகம் அப்பெண்ணிடம் உன் கணவர்
செல்வந்தராக இருக்கின்றார் என்று சந்தோஷத்துடன் சொன்னார்கள் இதை கேட்ட அப்பெண் தொடர்ந்து
இணைந்து வாழ்ந்தார் பிறகு சில நாள் கழித்து நபி இடம் வந்து சொன்னார்கள் நாயகமே அல்லாஹ்
எங்களுக்கு செல்வத்தை செழிப்பாக தந்து விட்டான்..
நூல். துர்ருல் மன்ஸூர்
மீசையை குரைத்தல் தாடியை வளர்த்தல்.
عَن زيد بن أَرقم
أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ: من لم يَأْخُذ من شَاربه فَلَيْسَ
منا
ஜைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் மீசையை குறைக்கவில்லையோ
அவர் நம்மை சார்ந்தவரல்ல.
நூல். துர்ருல் மன்ஸூர்.
وَأخرج ابْن أبي
شيبَة عَن عبيد الله بن عبد الله بن عبيد الله قَالَ جَاءَ رجل من الْمَجُوس إِلَى
رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَقد حلق لحيته وَأطَال شَاربه فَقَالَ لَهُ
النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم: مَا هَذَا قَالَ: هَذَا فِي ديننَا
قَالَ: وَلَكِن فِي ديننَا أَن تجز الشَّارِب وَأَن تعفي اللِّحْيَة
நபி (ஸல்) அவர்களிடம் நெருப்பை
வணங்கக்கூடியவர் வந்தார் அவர் தனது தாடியை வலித்து . மீசையை நீளமாக
வைத்திருந்தார் நபி அந்த நபரிடம் இது என்ன இப்படி செய்து இருக்கிறாயே என்று கேட்ட பொழுது
அவர் இது தான் எங்கள் மார்க்கத்தின் நடைமுறையாகும் என்றார் அவரிடம் நாயகம் சொன்னார்கள்
மீசையை வெட்டுவதும் தாடியை வளர விடுவதும் எங்கள் மார்க்கத்தின் நடைமுறை என்றார்கள்.
நூல். துர்ருல் மன்ஸூர்.
وَأخرج الْبَزَّار عَن عَائِشَة أَن رَسُول الله صلى الله عَلَيْهِ
وَسلم أبْصر رجلا وشاربه طَوِيل فَقَالَ: ائْتُونِي بمقص وَسوَاك فَجعل السِّوَاك
على طرفه ثمَّ أَخذ مَا جَاوز
நபி ஒரு மனிதரை கண்டார்கள்
அவரின் மீசை கடந்த பகுதியை நீக்கி அதை ஒழுங்கு படுத்தினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
நூல் துர்ருல்
மன்ஸுர்.
பெரியவர்களை மதிப்பது சிறுவர்களுக்கு கருணை காட்டுவது.
عن أنس بن مالك أن
شيخاً جاء يريد النبي صلى الله عليه وسلم وحوله أصحابه فأبطؤا على الشيخ أن يوسعوا
له فقال رسول الله صلى الله عليه وسلم ليس
منا من لم يوقر كبيرنا ويرحم صغيرنا.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
ஒரு பெரியவர் நபியை சந்திக்க வந்தார் நபியை சுற்றி தோழர்கள் இருந்தனர் இடம் இல்லாமல்
நின்ற அப்பெரியவருக்கு இடம் கொடுக்க தாமதித்தனர் அப்போது நபி சொன்னார்கள் பெரியவரை
மதிக்காதவரும் சிறுவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும் நம்மை சார்ந்தவரல்ல..
நூல். தாரீகுல் அஸ்பஹான்.
عَنْ أَبِي
أُمَامَةَ قَالَ: بَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ
أَبُو بَكْرٍ وَعُمَرُ، وَأَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ رَضِيَ اللهُ
عَنْهُمْ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ إِذْ أُتِيَ بِقَدَحٍ فِيهِ شَرَابٌ،
فَنَاوَلَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا عُبَيْدَةَ،
فَقَالَ أَبُو عُبَيْدَةَ: أَنْتَ أَوْلَى بِهِ يَا نَبِيَّ اللهِ. قَالَ: خُذْ
فَأَخَذَ أَبُو عُبَيْدَةَ الْقَدَحَ، ثُمَّ قَالَ لَهُ قَبْلَ أَنْ: يَشْرَبَ
خُذْ يَا نَبِيَّ اللهِ، قَالَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اشْرَبْ، فَإِنَّ الْبَرَكَةَ فِي أَكَابِرِنَا،
فَمَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُجِلَّ كَبِيرَنَا فَلَيْسَ مِنَّا»
நபியும் அவர்களுடன் அபூபக்கர் உமர் அபூஉபைதா இன்னும் சில சஹாபாக்கள்
இருந்தனர் அப்பொழுது ஒரு பாத்திரத்தில் குடிபானம் நபி இடம் வழங்கப்பட்டது அதை நாயகம்
அபூ உபைதாவிடம் கொடுத்தார்கள் அபூ உபைதா நபி இடம் நபியே அதை பெறுவதற்கு தாங்கள் தான்
மிக தகுதியானவர்கள் என்று கூறியும் நாயகம் அபூ உபைதா (ரலி)
அவர்களிடம் நீங்கள் குடியுங்கள் நிச்சயமாக பரக்கத் நம்முடைய பெரியவர்களிடத்தில்தான்
இருக்கிறது. யார் சிறுவர்களுக்கு அன்பு காட்டவில்லையோ. பெரியவர்களுக்கு
கண்ணியம் செய்யவில்லையோ அவர் நம்மை சார்ந்தவரல்ல என்றார்கள்.
நூல்.தப்ரானி
இழிவான குணங்கள்.
وَرُوِيَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(ثَلَاثَةٌ لَا يُسْتَجَابُ دُعَاؤُهُمْ: آكِلُ الْحَرَامِ، وَمُكْثِرُ
الْغِيبَةِ، وَمَنْ كَانَ فِي قَلْبِهِ غِلٌّ أَوْ حَسَدٌ لِلْمُسْلِمِينَ).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மூன்று நபர்களின் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை . ஹராமை சாப்பிடக்கூடியவன். அதிகம் புறம் பேசக்கூடியவன்.யாரின் உள்ளத்தில் முஸ்லிம் பற்றிய குரோதமும் பொறாமை இருக்குமோ அவன் நம்மை
சார்ந்தவனல்ல
நூல் தப்ஸீர் குர்துபி
நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல்
وَعَنِ
ابْنِ عَبَّاسٍ
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَلَمْ يُوَقِّرْ كَبِيرَنَا
وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ
رَوَاهُ التِّرْمِذِي
நாயகம்
(ஸல்) அவர்கள் சொன்னார்கள். பெரியவரை மதிக்காதவர்கள் சிறுவர்கள்
மீது இரக்கம் காட்டாதவர்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்காதவர்கள். .நம்மை சார்ந்தவனல்ல
நூல். பைஹகீ
وقالت عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم " عذب أهل قرية
فيها ثمانية عشر ألفاً عملهم عمل الأنبياء قالوا يا رسول الله كيف قال لم يكونوا
يغضبون الله ولا يأمرون بالمعروف ولا ينهون عن المنكر
நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
ஒரு ஊர் மக்கள் அல்லாஹ்வால்
தண்டிக்கப்பட்டார்கள் அழிக்கப்பட்டார்கள் அவர்களில் 18 ஆயிரம்
நபிமார்களைப் போன்று அமல் செய்பவர்கள் இருந்தார்கள் தோழர்கள் நபி இடம் நாயகமே அவர்களும்
ஏன் சேர்ந்து அழிக்கப்பட்டார்கள் என்று கேட்ட பொழுது நாயகம் (ஸல்) சொன்னார்கள் அவர்கள் அந்த மக்களின் மீது அல்லாஹ்வுக்காக
கோபம் கொள்ளவில்லை நன்மையை ஏவவில்லை தீமையை தடுக்கவும் இல்லை.
நூல். இஹ்யா.
பாகம். 2
தங்கள் வருகைக்கும் தங்கள் பதிவிற்க்கும் நன்றி
ReplyDelete