Thursday 5 June 2014

ஆலிம்களின் நிகரில்லாத சேவைகள்.





இந்த உலகில் எண்ணற்ற பல முஸ்லிம் சகோதரர்கள் சேவையாற்றுகின்றார்கள். ஆலிம்களும் சேவை செய்கின்றனர். ஆனாலும் சேவையில் உச்சநிலையை பெற்றவர்கள் ஆலிம்கள்தான். ஏனெனில் மற்ற எல்லா நண்பர்களும் சேவைமாத்திரம்தான் செய்கின்றனர். ஆனால் ஆலிம்கள்தான் சேவையும்செய்கின்றனர். சேவையாளர்களையும் உருவாக்குகின்றனர். இந்த சமுதாயத்தில் யாரெல்லாம் சேவைசெய்கின்றார்களோ அவர்கள்  ஏதேனும் ஒரு ஆலிமுடைய பேச்சில். எழுத்தில். நட்பில்தான் பெற்றிருப்பார். சேவையை வாழ்க்கையில் ஒரு பகுதியாக ஏற்படுத்திக்கொண்டு வாழும் இவ்வுலகில் சேவை செய்வதையே வாழ்க்கையாக ஆக்கிகொண்ட சமுதாயம்தான் ஆலிம்கள்.   ஆலிம்களின் உலகில் முன்னோடி சேவையாளர்கள் திருக்குர் ஆனை நூல் வடிவில் தந்த நபித்தோழர் ஸைத் பின் ஸாபித்தும் (ரலி). நபியின் ஹதீஸ்களை வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்பணித்த அபூஹீரைரா (ரலி) அவர்களும்.அந்த ஹதீஸ்களை கிதாப் வடிவில் இஸ்லாமிய உலகிற்கு தந்த இமாம் புகாரி (ரஹ்) போன்ற ஹதீஸ் கலையின் தியாகிகலும் எவ்வித தேடலும் சிரமமும் இன்றி மார்க்கத்தின் பிக்ஹூ சட்டங்களை அறிந்து இஸ்லாமிய கடமைகளை சீராக நிறைவேற்ற வழி வகுத்த அறிவுக் கொடை வள்ளல்கலான மத்பின் நான்கு இமாம்களும் இவர்கள் அனைவரும் ஆலிம்களின் முன்மாதிரி சேவையாளர்கள்..

ولما نزل العذاب بقوم يونس عليه السلام لجأوا الى عالم فيهم كان عنده من العلم شىء وكان يونس ذهب مغاضبا فقال لهم قولوا يا حى حين لا حى يا حى محيى الموتى يا حى لا اله الا أنت فقالوها فكشف عنهم العذاب

யூனுஸ் நபியின் கூட்டத்தாரை இறைவனின் வேதனை சூழ்ந்த போது அந்த நேரத்தில் யூனுஸ் நபி தன் சமுதாயத்தின் மீது கோபம் கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருந்தார்கள். அவர்களில் ஒரு ஆலிம் இருந்தார் அவரிடம் மக்கள் ஒதுங்கினார்கள் அவர் மக்களிடம்

حى حين لا حى يا حى محيى الموتى يا حى لا اله الا أنت 

 இந்த திக்ரை சொல்லுங்கள் என்றார் அவர்கள் அதை சொன்னார்கள் எனவே அவர்களை விட்டும் அல்லாஹ் வேதனையை நீக்கினான் அவர்களும் ஈமான் கொண்டார்கள்.

நூல். ரூஹுல் பயான்.

கோடிகளையும் லட்சங்களையும் நோக்கமாகக் கொண்டு கல்வியை தேடும் இவ்வுலகில் தியாகத்திற்கும் அர்பணிப்பிற்கும் ஏழ்மைக்கும் பெயர் போன இந்த மார்க்கக் கல்வியை அல்லாஹ் ரஸூலை நோக்கமாகக் கொண்டு தேடும் சமுதாயம் தான் இந்த ஆலிம்கள் இவர்களின் இந்த நிலைக்கு காரணம் இவர்களின் கல்வி வழி காட்டியான ஜ்ரத் அலி(ரலி) அவர்களின் வாழ்க்கை தான்.

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ واله وَسَلَّمَ: "يَا أَبَا حَسَنٍ أَيَّمَا أحب إليك خمسمائة شَاةٍ وَرِعَاؤُهَا أَوْ خَمْسُ كَلِمَاتٍ أُعَلِّمُكُهُنَّ تَدْعُو بِهِنَّ؟ ".
قَالَ عَلِيٌّ: أَمَّا مَنْ يُرِيدُ الآخَرَةَ فَلْيُرِدِ الْكَلِمَاتِ وَأَمَّا مَنْ يُرِيدُ الدُّنْيَا فيريد خمسمائة شاة ورعاؤها قَالَ: "فَمَا تُرِيدُ يَا أَبَا حَسَنٍ؟ " قَالَ: أُرِيدُ الْكَلِمَاتِ قَالَ: "تَقُولُ: اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَطَيِّبْ لِي كَسْبِي وَوَسِّعْ لِي فِي خُلُقِي وَقَنِّعْنِي بِمَا قَضَيْتُ لِي وَلا تُذْهِبْ نَفْسِي إِلَى شَيْءٍ صَرَفْتَهُ عَنِّي".

அலி(ரலி) அவர்கள் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடம்   ஒருநாள் 500 ஆடுகளை தருவேன் அல்லது 5 வார்த்தைகளை கற்றுத் தருவேன் அதில் உனது தீனுக்கும் உலகிற்கும் ஈடேற்றம் இருக்கின்றது. இரண்டில் எது வேண்டும் என்று கேட்ட பொழுது  நான் சொன்னேன் 500 ஆடுகள் அதிகம் தான் என்றாலும் தாங்கள் எனக்கு 5 வார்த்தைகளை கற்றுக் கொடுங்கள் என்று கேட்டேன் அப்பொழுது அவர்கள் இந்த துஆவை சொன்னார்கள்.

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَطَيِّبْ لِي كَسْبِي وَوَسِّعْ لِي فِي خُلُقِي وَقَنِّعْنِي بِمَا قَضَيْتُ لِي وَلا تُذْهِبْ نَفْسِي إِلَى شَيْءٍ صَرَفْتَهُ عَنِّي".

நூல்;ஹயாதுஸ் ஸஹாபா


சத்தியத்தை நிலை நாட்ட உயிர் நீத்த சர்தார் நபியின் வாரிசுகள்..

ஹிஜ்ரி 700ல் ஹிராத் என்ற பகுதியில் வாழ்ந்த சுல்தான் முயிஸ்ஸூத்தீன் ஹூஸைன்  அவர்களின் காலத்தில் வாழ்ந்த நிஜாமுத்தீன் அப்துர் ரஹீம் என்ற பெயர் கொண்ட இமாம். அரசர் அவரின் மார்க்க தீர்ப்பை ஏற்றுக் கொள்பவராக இருந்தார் இந்த நிலையில் ஹிராத்திற்கு அருகில் வாழ்ந்த நாடோடிகளான ஒரு பெரிய கூட்டத்தார் பல அநீதிகள் செய்து மார்க்கத்தின் பல சட்டங்களையும் மறுத்தார்கள் எனவே நிஜாமுத்தின் அவர்கள் அந்த மக்களை காபிர் என்று சொல்லி மார்க்க தீர்ப்பு வழங்கினார்கள் இதனால் கடும் கோபம் கொண்ட நாடோடிகள் ஒன்று திரண்டு போர் செய்ய அந்த இமாமின் ஊரான ஹிராத்திற்கு வந்தார்கள்   ந்த நேரத்தில் அவர்களை எதிர்த்து போர் செய்யும் வலிமையை சுல்தான் ஹூஸைன் பெற்றிருக்கவில்லை எனவே அவர் கோட்டையில் ஒளிந்து கொண்டார் இந்நிலையில் எதிரிகள் சார்பில் அரசரை சந்தித்த ஒருவர் சொன்னர் எங்களை நோக்கி காபிர் என்று தீர்ப்பளித்த நிஜாமுத்தீனை கொள்வது தான் எனவே நீங்கள் உங்கள் ஊரையும் மக்களையும் பாதுகாக்க வேண்டுமானால் அவரை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்றார் இதை கேட்டு முடிவு எடுக்க தடுமாரிய அரசர் இறுதியில் பெரிய ஆபத்தில் இருந்து தப்பிக்க சிறிய ஆபத்து ஏற்பது கூடும் என்ற அடிப்படையில் இமாமை எதிரிகளிடம் ஒப்படைக்க வந்தார்கள் இந்த முடிவை இமாம் நிஜாமுத்தீன் ஏற்றுக் கொண்டார்கள் அந்த தீயவர்களுக்கு எதிரான தனது தீர்ப்பில் இருந்து பின் வாங்கவில்லை பிறகு அந்த இமாம் வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது மார்க்கமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நன்றாக குளித்து புத்தாடை உடுத்தி தலைப்பாகை அணிந்து சொர்க்கம் தரும் அந்த மரண அழைப்பை ஏற்று ஊரிலிருந்து வெளியேறினார்கள் எதிரிகள் அவரை கொன்றார்கள் ஹிஜ்ரி 738ல் அவர் ஷஹீதானார்கள் 
.
நூல். ஷரஹுல் விகாயா.

மக்களுக்கான ஆலிம்களின் சேவை அவர்களின் பிறப்பிற்கு முன்பே துவங்கி விட்டது அவர்களின் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து. அவர்களின் பின்பும் அது தொடர்கிறது
தாயின் கருவரையில் மனிதன் வாழும் போதே அவன் பூரண சுகத்துடன் பிறக்க வேண்டும் என்று ஆலிம் துஆ செய்கின்றார் அவன் பிறந்த பிறகு அவனுக்கு பெயர் சூட்டல் கல்வி போதித்தல் திருமணம் செய்து வைத்தல் குழந்தை பேறு கிடைக்க துஆ செய்தல் அவனுக்கு நோய் வந்தால் ஓதி பார்த்தல் அவனுடைய வியாபாரம் செழிக்க பிரார்த்தித்தல் இப்படி அவனுடைய இன்ப துன்பங்கள் அனைத்திலும் இறைவனுக்காக பங்கெடுக்கும் ஆலிம்கள் அந்த மனிதனுக்கு மரணத்திற்கு பின்னும் எல்லோரும் அவனை மறந்த பிறகும் கூட தினமும் காலை அல்லது தொழுகைக்குப் பின் தொழுகையாளிகளை தன்னுடன் நிறுத்தி கொண்டு கப்ரு ஜியாரத்தின் வழியாக இறந்த சகோதரருக்காக துஆ செய்கின்றார்.

மறுமையிலும். சொர்க்கத்திலும். தொடரும் ஆலிம்களின் சேவை.

وقال رسول الله صلى الله عليه وسلم " إذا كان يوم القيامة يقول الله سبحانه للعابدين والمجاهدين: ادخلوا الجنة، فيقول العلماء بفضل علمنا تعبدوا وجاهدوا، فيقول الله عز وجل: أنتم عندي كبعض ملائكتي اشفعوا تشفعوا فيشفعون ثم يدخلون الجنة "

நபி அவர்கள் சொன்னார்கள் கியாமத்தில் அல்லாஹ் வணக்கசாலிகளையும் போரில் கலந்த போராளிகளையும் பார்த்து நீங்கள் சொர்க்கம் செல்லுங்கள் என்பான் அப்பொழுது உலமாக்கள் இறைவா அவர்கள் எங்கள் இல்மை கேட்டு தான் வணங்கினார்கள் போரிட்டார்கள் அப்படி இருக்கின்ற பொழுது நீ எங்களுக்கு முந்தி அவர்களை சொர்க்கம் அனுப்புகின்றாயே ஏன் என்று கேட்பார்கள் அல்லாஹ் நீங்கள் என்னிடம் எனது சில மலக்குகளின் அந்தஸ்தில் உள்ளீர்கள் எனவே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கூறுவான் அந்த உலமாக்கள் மக்களுக்கு ஷபாஅத் செய்து அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்புவார்கள் அதற்குப் பின் அவர்கள் சொர்க்கம் செல்வார்கள்,

நூல். இஹ்யா.

وقال يحيى بن معاذ: العلماء أرحم بأمة محمد صلى الله عليه وسلم من آبائهم وأمهاتهم. قيل: وكيف ذلك؟ قال لأن آباءهم وأمهاتهم يحفظونهم من نار الدنيا وهم يحفظونهم من نار الآخرة

எஹ்யா பின் முஆது (ரஹ்) சொன்னார்கள்.  உலமாக்கள் நபியின் உம்மத்தாருக்கு அவர்களின் தந்தை . தாயை விடவும் அதிகம் கருணை காட்டுகின்றார்கள் ஏனெனில் அவர்களின் பெற்றோர் அம்மக்களை உலகத்தின் நெருப்பை விட்டும் தான் பாதுகாக்கின்றார்கள் ஆலிம்களோ மறுமையின் நெருப்பை விட்டும் பாதுகாக்கின்றார்கள்.

நூல். இஹ்யா.              


2 comments:

  1. cq;fs;dkf;dkhgfkld;hz,fh;sjkew[oufrika;hncv

    ReplyDelete
  2. Allah alimgalin sevaiyai porundhikkolvanaha.iru ulahilum avarhalukku ganniyatthai koduppanaha.aameen.

    ReplyDelete