Thursday 29 May 2014

பரகத்தான வாழ்வே பெரு வாழ்வு...



முஸ்லிம்கள் ஒருவர் ஒருவரிடம் துஆவை வேண்டுகின்ற பொழுது மறக்காமல் சொல்லும் ஒரு வார்த்தை வாழ்வின் பரக்கத்திற்கு துஆ செய்யுங்கள் என்பதாகும் அரபி மொழியில் அமைந்துள்ள இந்த பரக்கத் என்பதற்கு இதனுடைய முழுமையான பொருளை உள்ளடக்கிய வார்த்தை எந்த மொழியிலும் கிடைக்காது அந்த அளவிற்கு அற்புதமான வார்த்தையாக இது அமைந்துள்ளது இந்த பரக்கத்தை நாம் அதிகமாக கேட்கும் மாதங்களாக ரஜப். ஷஃபான். ரமலான் இந்த மூன்றும் அமைந்துள்ளது இந்த நேரத்தில் நமக்கு அல்லாவின் பரக்கத்தை நிலையாக தரும் செயல்களையும் அம்சங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்

நபிமார்களை மனம் கவர்ந்த பரக்கத்

قال رسول الله صلى الله عليه وسلم " بينا أيوب يغتسل عريانا فخر عليه جراد من ذهب فجعل أيوب يحثي في ثوبه فناداه ربه : يا أيوب ألم أكن أغنيتك عما ترى ؟ قال : بلى وعزتك ولكن لا غنى بي عن بركتك " . رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.  நபி அய்யூப் (அலை) அவர்கள் ஆடை இன்றி குளித்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது அவர்கள் மீது தங்க வெட்டுக்கிளி விழுந்தது உடனே அவர்கள் ஆசையுடன் தனது ஆடையில் அதை சுருட்டி எடுத்துக்கொண்டார்கள் இதை கண்ட இறைவன் அய்யூபே இதை விட்டும் நாம் உம்மை தேவையற்றவனாக ஆக்கவில்லையா.  அவர்கள் சொன்னார்கள் நீ என்னை செல்வந்தனாக ஆக்கினாய் என்றாலும் நான் உனது பரக்கத்தை விட்டும் தேவையற்றவனாக இல்லை என்றார்கள்.

நூல். புகாரி. மிஸ்காத்.

பரக்கத்தின் வாசலை திறக்கும் சாவிகள்..

وأخرج الطبراني في الدعاء عن الوليد بن عبد الله بن أبي مغيث قال : قال رسول الله صلى الله عليه وسلم « إذا دعا أحدكم فرفع يديه فإن الله جاعل في يديه بركة ورحمة ، فلا يردهما حتى يمسح بهما وجهه

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.  ஒருவர் கையை மேலே உயர்த்தி துஆ செய்தால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய கையில் பரக்கத்தையும் தனது ரஹ்மத்தையும் வைத்து விடுகின்றான் எனவே துஆ கேட்டால் இரு கைகளையும் முகத்தில் தடவும் வரை வேறு பக்கம் திரும்ப வேண்டாம் என்றார்கள் .

நூல். தப்ரானி.

வியாபாரத்தில் பரக்கத்தை தரும் அதிசய சூராக்கள்.

وروى جبير بن مطعم أن النبي صلى الله عليه وسلم قال: [ أتحب يا جبير إذا خرجت سفرا أن تكون من أمثل أصحابك هيئة وأكثرهم زادا ] ؟ قلت: نعم.
قال: (فاقرأ هذه السور الخمس من أول " قل يا أيها الكافرون " [ الكافرون: 1 ] إلى - قل أعوذ برب الناس " [ الناس: 1 ] وأفتتح قراءتك ببسم الله الرحمن الرحيم).
قال: فوالله لقد كنت غير كثير المال، إذا سافرت أكون أبدهم (4) هيئة،
وأقلهم زادا، فمذ قرأتهن صرت من أحسنهم هيئة، وأكثرهم زادا، حتى أرجع من سفري ذلك

ஜுபைர் பின் முத்ஹிம் (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்.    ஒரு முறை நபி (ஸல்) என்னிடம் நீ உன்னுடன் வியாபாரத்திற்கு வரும் மற்றவர்களை விட அழகிய தோற்றம் உடையவராகவும் நிறைய பொருட்களை பெற்றவராகவும் ஆக விரும்புகிறாயா என்று கேட்டு விட்டு சொன்னார்கள். சூரா காபிரூன் சூரா இதாஜாஅ. சூராஇக்லாஸ்.  சூராஃபலக்.  சூராநாஸ். இந்த 5 சூராக்களை தினமும் ஓதுவீராக ஒவ்வொரு சூராவையும் பிஸ்மில்லாவை கொண்டு தொடங்கி பிஸ்மில்லாவை கொண்டு முடித்து விடு என்றார்கள் ஜூபைர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். நான் பிரயாணம் செல்லும் போது தோற்றத்தால் வியாபாரத்திற்கு கொண்டு செல்லும் பொருட்களாலும் மிக சாதாரண நிலையில் இருந்தேன் இந்த நிலையில் நபி இடம் நான் கேட்ட இந்த சூராக்களை தொடர்ந்து ஓத ஆரம்பித்தேன் இதற்கு பின் நான் பிரயாணத்தில் இருந்து திரும்பும் போதெல்லாம் மற்றவரை விட தோற்றத்தால் மிக அழகுடையவராகவும் பொருளால் நிறைந்தவராகவும் பணக்காரணாகவும் நான் ஆகிவிட்டேன் வியாபாரத்திற்கும் வேலைக்கும் செல்பவர்கள் இந்த சூராக்களை ஓதினால் வியாபாரம் செழிக்கும்.

 நூல். தப்ஸீர் குர்துபி

பெற்றதை பொருந்தினால் பெறாததையும் பெறலாம்.

وقال النبي صلى الله عليه وسلم: إن الله ليبتلي العبد بما أعطاه فمن رضي بما قسم له وسع عليه ، ومن لم يرض لم يبارك له »


நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.  இறைவன் அடியானை அவனுக்கு எதை கொடுத்தானோ அதை கொண்டு சோதிப்பான் அல்லாஹ் வழங்கியதை அடியான் பொருந்திக் கொண்டால் அல்லாஹ் அவனுக்கு அதில் பரக்கத் செய்வான் அதை விசாலமாக்குவான் அல்லாஹ் கொடுத்ததை பொருந்திக் கொள்ளாவிட்டால் அல்லாஹ் அவனுக்கு பரக்கத்தும் செய்ய மாட்டான் விசாலமாக்கவும் மாட்டான் அல்லாஹ்.

நூல்.பைஹகி

سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ
اشْتَكَى ابْنٌ لِأَبِي طَلْحَةَ قَالَ فَمَاتَ وَأَبُو طَلْحَةَ خَارِجٌ فَلَمَّا رَأَتْ امْرَأَتُهُ أَنَّهُ قَدْ مَاتَ هَيَّأَتْ شَيْئًا وَنَحَّتْهُ فِي جَانِبِ الْبَيْتِ فَلَمَّا جَاءَ أَبُو طَلْحَةَ قَالَ كَيْفَ الْغُلَامُ قَالَتْ قَدْ هَدَأَتْ نَفْسُهُ وَأَرْجُو أَنْ يَكُونَ قَدْ اسْتَرَاحَ وَظَنَّ أَبُو طَلْحَةَ أَنَّهَا صَادِقَةٌ قَالَ فَبَاتَ فَلَمَّا أَصْبَحَ اغْتَسَلَ فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ أَعْلَمَتْهُ أَنَّهُ قَدْ مَاتَ فَصَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَخْبَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا كَانَ مِنْهُمَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَلَّ اللَّهَ أَنْ يُبَارِكَ لَكُمَا فِي لَيْلَتِكُمَا

قَالَ سُفْيَانُ فَقَالَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَرَأَيْتُ لَهُمَا تِسْعَةَ أَوْلَادٍ كُلُّهُمْ قَدْ قَرَأَ الْقُرْآنَ

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அபுதல்ஹா(ரலி)வின் மகன் நோயுற்றிருந்தார். ஒரு நாள் அபுதல்ஹா(ரலி) வெளியே சென்றிருந்தபோது குழந்தை இறந்துவிட்டது. இதைக் கண்ட அபூ தல்ஹா(ரலி)வின் மனைவி உடனே கொஞ்சம் உணவைத் தயார் செய்தார். பிறகு மய்யித்தை வீட்டின் ஒரு மூலையில் வைத்தார். வெளியே சென்றிருந்த அபூ தல்ஹா(ரலி) வீடு திரும்பிய உடன் மகன் எவ்வாறுள்ளான்? எனக் கேட்டார் அதற்கு அவரின் மனைவி 'அமைதியாகிவிட்டான்; நிம்மதி (ஓய்வு) பெற்று விட்டிருப்பான் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு" என பதிலளித்தார். அபூ தல்ஹா(ரலி) தம் மனைவி கூறியது உண்மைதான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார். பொழுது விடிந்து குளித்துவிட்டுத் (தொழுகைக்காக) வெளியே செல்ல நாடியபோது மகன் இறந்துவிட்டதை மனைவி கூறினார். அபூ தல்ஹா நபி(ஸல்) அவர்களோடு தொழுதுவிட்டுத் தம் வீட்டில் நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்தி செய்யக்கூடும்" என்றார்கள்.
சுப்யான்  (ரஹ்) கூறுகிறார்.
அப்துல்லாவிற்கு ஒன்பது குழந்தைகள் இருப்பதை பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்.

நூல். புகாரி.  1301 முஸ்லிம்.

ஆயுளில் பரக்கத்தே அழகிய பரக்கத்.

موسى للخضر عليهما السلام : با نبى الله ، هل تعلم ما نقص من البحر؟ قال له الخضر : لولا ما نراد فيه لأخبرتكن قال موسى للخضر : يا نبى الله ، هل من شىء ليس فيه بركة؟ قال له الخضر : نعم يا موسى ، ما من شىء إلا وفيه بركة ما خلا آجال العباد ، ومدتهم ، ولولا ذلك لفنى الناس . قال موسى : وكيف ذلك؟ قال له الخضر : أن كل شىء ينقص منهن فلا يزاد فيه ينقطع ، قال له موسى : يا نبى الله ، من أجل أى شىء أعطاك الله عز وجل من بين العباد أن لا تموت حتى نسأل الله تعالى ، واطلعت على ما فى قلوب العباد تنظر بعين الله عز وجل؟
قال له الخضر : يا موسى ، بالصبر عن معصية الله ، عز وجل ، والشكر لله ، عز وجل ، فى نعمته ، وسلامة القلب لا أخاف ولا أرجوا دون الله أحداً .

ஹிள்ரு(அலை) அவர்களிடம் மூஸா நபி கேட்டார் நீங்கள் மரணமாகமல் நிரந்தரமாக வாழும் பாக்கியத்தையும் இன்னும் அல்லாவின் பார்வை கொண்டு அடியார்களை பார்க்கும் பாக்கியத்தையும் எந்த தன்மையால் அல்லாஹ் உங்களுக்கு கொடுத்தான் அதை நீங்கள் சொன்னால் நாங்களும் அதை அல்லாவிடம் கேட்போம் என்று கூறிய பொழுது ஹிள்ரு (அலை) அவர்கள் சொன்னார்கள் அல்லாவிற்கு மாறுசெய்யாமல் பொருமையாக இருப்பது,  (பாவம் செய்யாமல் வாழ்வது) அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செழுத்துவது எந்த கெட்டதும் இல்லாமல் உள்ளத்தை அமைதி படுத்துவது அல்லாவை தவிர யாருக்கும் பயப்படுவதும் இல்லை அவனை தவிர யாரையும் நம்புவதும் இல்லை இந்த தன்மைகளால் நான் இந்த  பாக்கியம் பெற்றேன் என்றார்கள்.

நூல். தப்ஸீருல் முகாத்தல் சுலைமான்.
     
(உணவு) தட்டை பேணுவோம் தட்டில்லா உணவை பெறுவோம்

وعن جابر : أن النبي صلى الله عليه وسلم أمر بلعق الأصابع والصفحة وقال : " إنكم لا تدرون : في أية البركة ؟ " . رواه مسلم

ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள். நபி அவர்கள் சாப்பிட்ட பின் கை விரல்களையும் தட்டையும் நன்றாக வலித்து சாப்பிட சொன்னார்கள் அதில் எந்த உணவில் உங்களுக்கு பரக்கத் உள்ளது என்று நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றார்கள்.

நூல்.  மிஸ்காத்.

ஒருவர் ஒரு தட்டில் சாப்பிட்டு பிறகு அதை வலித்து உண்டால் அந்த தட்டு அவரைப்பார்த்து இப்படி சொல்கிறது. நீ என்னை ஷைத்தானை விட்டும் காப்பாற்றியது போல் அல்லாஹ் உம்மை நரகை விட்டும் விடுதலை செய்வானாக.

நூல். மிஸ்காத். பக்கம். 368.

وعن وحشي بن حرب عن أبيه عن جده : أن أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا : يا رسول الله إنا نأكل ولا نشبع قال : " فلعلكم تفترقون ؟ " قالوا : نعم قال : " فاجتمعوا على طعامكم واذكروا اسم الله يبارك لكم فيه " . رواه الترمذي

பிஸ்மில்லா சொல்லி சாப்பிட்டாலும் பலர் சேர்ந்து சாப்பிட்டாலும்  அதனால் பரகத் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல். மிஸ்காத்.

நிகாவும் பரகத்தும்.


وأخرج الخطيب في تاريخه عن جابر قال : جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يشكو إليه الفاقة فأمره أن يتزوج .


நபி இடத்தில் ஒருமனிதர் வந்து வறுமையை முறையிட்டார் அவரை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்யும்படி ஏவினார்கள்.

நூல். துர்ருல் மன்ஸூர்.

பரகத்தின் எதிரி ஹராம்.

وعن عبد الله بن مسعود عن رسول الله صلى الله عليه وسلم قال : " لا يكسب عبد مال حرام فتيصدق منه فيقبل منه ولا ينفق منه فيبارك له فيه ولا يتركه خلف ظهره إلا كان زاده إلى النار . إن الله لا يمحو السيئ بالسيئ ولكن يمحو السيئ بالحسن إن الخبيث لا يمحو الخبيث " . رواه أحمد وكذا في شرح السنة

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அடியான் ஹராமான வருமானம் ஈட்டி அதில் இருந்து தர்மம் செய்தால்  அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வதில்லை. அதில் செலவு செய்தால் அல்லாஹ் அதில் பரகத் செய்வதில்லை . அதை அவன் தனக்கு பின்னால் உள்ளவர்களுக்காக விட்டு சென்றால் அது அவனுக்கு நரகத்தை தவிர அதிகமாக்குவதில்லை.

நூல். மிஸ்காத்.

عن أبي يحيى ، مولى عمر وكان قد أدرك عمر بن الخطاب رضي الله عنه قال : ألقي على باب المسجد طعاما كثيرا ، فدخل عمر ، فرأى الطعام . قال : ما هذا ؟ قالوا : طعام جلب إلينا . قال : بارك الله فيه ، وفيمن جلبه إلينا . قالوا : يا أمير المؤمنين ، قد احتكر . قال : ومن احتكره ؟ قال : فروخ مولى عثمان ، وفروخ مولاك . فأرسل عمر فدعاهما . فقال : ما حملكما على احتكار طعام المسلمين . قالا : يا أمير المؤمنين ، نشتري بأموالنا ونبيع . قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : « من احتكر على المسلمين طعامهم ضربه الله عز وجل بجذام (1) أو بإفلاس » ، فقال فروخ عند ذلك : أعاهد الله عز وجل أن لا أعود في شراء الطعام ولا بيعه بعد قولك أبدا . فحول تجارته إلى بني مضر . وأما مولى عمر فقال : نشتري بأموالنا ونبيع . قال أبو الهيثم : زعم أبو يحيى الذي حدثني هذا الحديث أنه رأى مولى عمر هذا بعد حين مجذوما مسدوحا

அபூ யஹ்யா (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். உமர் (ரலி) அவர்களின் அடிமை பள்ளியின் வாசல் பகுதியில் நிறைய உணவுகளை போட்டு வைத்திருந்தார். அதை கண்ட உமர் (ரலி) அவர்கள் இது என்ன என்று கேட்ட போது மக்கள் சொன்னார்கள் இது நமக்காக கொண்டு வரப்பட்ட உனவு என்றார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் அந்த உணவிலும் அதை கொண்டுவந்தவர்களுக்கும் அல்லாஹ் பரகத் செய்வானாக என்றார்கள் மக்கள் மக்கள் சொன்னார்கள் அதை அவர்கள் பதுக்கி வைத்துள்ளனர் அவர்கள் யார் என்று கேட்ட போது உஸ்மான் (ரலி) அவர்களின் அடிமையும் உங்களின் அடிமையும் என்றனர். உமர் (ரலி) அவர்கள் அவ்விருவரையும் அழைத்து ஏன் இவ்வாறு செய்தீர்கள். அதற்கு அவர்கள் கூறினார்கள். நாங்கள் பொருளை வாங்கி விற்பனை செய்கிறோம். உமர் ரலி அவர்கள் அவ்விருவரிடமும் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக. யாரொருவர் முஸ்லிம்களுக்கு தேவையான உணவு பொருளை மக்களுக்கு அத்தியாவசியத் தேவையிருந்தும் அதை விற்காமல்  பதுக்கி வைக்கிறானோ அவன் மீது அல்லாஹ்  ஏழ்மையையும்.குஷ்டத்தையும் சாட்டிவிடுவான்.என்றார்கள். இதைக்கேட்டதும் உஸ்மான் (ரலி) அவர்களின் அடிமை அல்லாஹ்வின் ஆனையாக இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன் என்று கூறி ஒதுங்கிகொண்டார். ஆனால் உமர் (ரலி) அவர்களின் அடிமையோ இதில் என்ன தவறு இது வியாபாரம்தான் என்று கூறி தொடர்ந்து செய்தார். இதை அறிவிக்கும் அபூயஹ்யா (ரஹ்) கூறுகிறார். நான் உமர் (ரலி) அவர்களின் அடிமையை வெண்குஷ்டம் உள்ளவராக கண்டேன்.

நூல். இஸ்லாஹுல் மால்

No comments:

Post a Comment