Thursday 22 May 2014

ஸஹாபாக்களும் ஈமானும்.




நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வழங்கிய பாக்கியங்களில் மகத்தானது மிஹ்ராஜ் பயணமாகும். அந்த பயணம் தரும் படிப்பினைகளில் அது உணர்த்தும் விஷயங்களில் மிக முக்கியமானது ஸஹாபாக்களின் வலிமையான ஈமானை விளங்குவதாகும். விஞ்ஞானத்தின் வாடையோ வானில் பறப்பதற்கான கருவியோ இல்லாத காலத்தில் நபி  (ஸல்) ஸஹாபாக்களிடம் ஒரு மாதத்தின் தொலை தூரமான பைத்துல் முகத்தஸிற்கும் பிறகு 7 வானங்கள் கடந்து இறைவனின் சன்னிதானத்திற்கும் தான் பூத உடலுடன் ஒரே இரவில் சென்று வந்ததாக சொன்ன பொழுது அந்த தோழர்கள் எந்த சந்தேகமும் கடுகு அளவும் இல்லாமல் ஏற்றுக் கொண்டார்களோ அந்த தன்மை அவர்களின் 100 சதவீத ஈமானுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

சஹாபாக்களின் ஈமான் குறித்து திருக் குர்ஆனின் கூற்று.

وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ ۚ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَٰكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ ۚ أُولَٰئِكَ هُمُ الرَّاشِدُونَ

அறிந்துகொள்ளுங்கள்: நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்

  لَّا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ

58:22. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.

வள்ளல் நபியும் வானளாவிய சஹாபாக்களின் ஈமானும்.

عن الحارث بن مالك الأنصاري؛ أنه مر برسول الله صلى الله عليه وسلم فقال له: "كيف أصبحت يا حارث؟" قال: أصبحت مؤمنا حقا. قال: "انظر ماذا (2) تقول، فإن لكل شيء حقيقة، فما حقيقة إيمانك؟" فقال: عَزَفَت نفسي عن الدنيا، فأسهرت ليلى، وأظمأت نهاري، وكأني أنظر إلى عرش ربي بارزا، وكأني أنظر إلى أهل الجنة يتزاورون فيها، وكأني أنظر إلى أهل النار يَتَضاغَوْن فيها، فقال: "يا حارث، عرفت فالزم" ثلاثا

ஹாரிஸா (ரலி) அவர்கள் நபியை கடந்து சென்றார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் நீர் எப்படி காலையை அடைந்தாய் என்று கேட்ட பொழுது அவர் சொன்னார் நான் உண்மையான முஃமீனாக காலையை அடைந்தேன் என்றார். அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் நீ சொல்வதை நன்றாக சிந்தித்துப் பார். ஒவ்வொரு வஸ்துக்கும் ஒரு ஹகீகத் இருக்கின்றது உனது ஈமானின் ஹகீகத் என்ன என்று கேட்டார்கள் அவர் கூறினார் .உலகத்தை விட்டும் என் உள்ளத்தை விலக்கி  கொண்டேன். இரவில் வணக்கத்தையும் பகலில் நோன்பையும் அமைத்துக் கொண்டேன். நான் அல்லாஹ்வின் அர்ஷை நேரடியாக பார்ப்பவனைப் போன்று உள்ளேன். சொர்க்க வாசிகள் தங்களுக்கு மத்தியில் சந்தித்துக் கொள்வதையும் நரகவாசிகள் தங்களுக்கு இடையில் ஓலமிட்டு அழுவதையும் நான் பார்கின்றேன் என்றார்  அப்போதுஅவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஹாரிஸே நீர் ஈமானை அறிந்து கொண்டீர் இதை அப்படியே பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் என்றார்

நூல்.  தப்ஸீர் இப்னு கஸீர்

சஹாபாக்களின் ஈமான் பற்றி சஹாபாக்கள்

والإيمان في قلوبهم أعظم من الجبل

இப்னு உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
 சஹாபாக்களின் உள்ளத்தில் இருந்த ஈமான் மலையை விடவும் பிரம்மாண்டமானதாக இருந்தது என்றார்கள்

நூல். மிஸ்காத்.

கண் ஒளி தந்த கல்பின் ஒளி.

زنيرة الرومية. كانت من السابقات إلى الإسلام، أسلمت في أول الإسلام، وعذبها المشركون. قيل: كانت مولاة بني مخزوم، فكان أبو جهل يعذبها. وقيل: كانت مولاة بني عَبْد الدار، فلما أسلمت عَمِيت، فقال المشركون: أعمتها اللات والعزى لكفرها بهما! فقالت: وما يدري اللات والعزى من يعَبْدهما، إنما هذا من السماء، وربي قادر على رد بصري، فأصبحت من الغد ورد الله بصرها، فقالت قريش: هذا من سحر مُحَمَّد. ولما رأى أبو بكر رضي الله عنه ما ينالها من العذاب، اشتراها فأعتقها، وهي أحد السبعة الذين أعتقهم أبو بكر

ஸின்னீரா (ரலி) அவர்கள். ஆரம்பகாலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவர். அவர்களை காபிர்கள் வேதனை செய்தார்கள். இன்னொரு கூற்றின் படி அபூ ஜஹ்ல் வேதனை செய்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த வேதனையால் அவர்களின் கண் குருடாகிவிட்டது. அப்போது காபிர்கள் சொன்னார்கள். நம்முடைய தெய்வமான லாத்.உஸ்ஸாவை மறுத்ததால் அவ்விரண்டும் இவரின் கண்களை குருடாக்கிவிட்டது என்று. அப்போது ஸின்னீரா சொன்னார்கள் லாத் உஸ்ஸாவுக்கு தன்னை வணங்குபவர்களை அறிந்து கொள்ள முடியாது இது வானில் உள்ளவனின் வேலையாகும் எனது ரப்பு எனது பார்வையை மீட்டித் தர சக்தி பெற்றவன் என்று சொன்னார்கள் அவர்கள் சொன்னது போன்று மறுநாள் காலையில் அவர்கள் கண்பார்வையை பெற்றார்கள் இதை கண்ட காபிர்கள் இது முஹம்மதின் சூனிய வேலை என்றார்கள் அவர்கள் படும் இந்த வேதனையை கண்ட அபூபக்கர்(ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள்.

நூல். உஸ்துல் காபா

ஈமானிடம் தோற்ற தந்தை.

قَالَ السُّدِّيُّ: نَزَلَتْ فِي [عبد الله بن «2»] عبد الله بن أبي، جَلَسَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَرِبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاءً، فَقَالَ لَهُ: بِاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا أَبْقَيْتَ مِنْ شَرَابِكَ فَضْلَةً أُسْقِيهَا أَبِي، لَعَلَّ اللَّهَ يُطَهِّرُ بِهَا قَلْبَهُ؟ فَأَفْضَلَ لَهُ فَأَتَاهُ بِهَا، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ: مَا هَذَا؟ فَقَالَ:
هِيَ فَضْلَةٌ مِنْ شَرَابِ النَّبِيِّ صَلَّى الله عليه وسلم جئتك بها تشر بها لَعَلَّ اللَّهَ يُطَهِّرُ قَلْبَكَ بِهَا.
فَقَالَ لَهُ أَبُوهُ: فَهَلَّا جِئْتَنِي بِبَوْلِ أُمِّكَ فَإِنَّهُ أَطْهَرُ مِنْهَا. فَغَضِبَ وَجَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! أَمَا أَذِنْتَ لِي فِي قَتْلِ أَبِي؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«بَلْ تَرْفُقُ بِهِ وتحسن إليه».

அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நபியின் சமூகத்தில் இருந்தார்கள் அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் குடித்தார்கள் அவர்களிடம் அப்துல்லா  (ரலி) அவர்கள்  நாயகமே அல்லாஹ்வை முன் வைத்து நான் சொல்கின்றேன் தாங்கள் குடித்து மீதம் வைத்த பாலை நான் எனது தந்தைக்கு (அப்துல்லா இப்னு உபய் இப்னு சலூன்) நான் புகட்டுவேன் அதன் மூலம் அவருடைய உள்ளத்தை அல்லாஹ் பரிசுத்தப்படுத்துவான் என்றார்கள் பாலை மீதம் வைத்துக் கொடுத்தார்கள் அதை அவர் தன் தந்த்தையிடம் கொண்டு வந்தார் அவரின் தந்தை அப்துல்லா இது என்ன என்று கேட்டார்கள் அவர் சொன்னார் இது நபி குடித்த பாலின் மிச்சம் அதை நீங்கள் அருந்தி அதன் மூலம் உங்கள் உள்ளத்தை அல்லாஹ் பரிசுத்தமாக்கலாம் என்பதற்காக கொண்டு வந்தேன் என்றார். உடனே அவருடைய தந்தை சொன்னார் நீ உனது தாயின் சிறுநீரை கொண்டு வந்திருக்கக் கூடாதா அது இதை விடவும் என்னிடம் மிகவும் பரிசுத்தமானதாக இருக்குமே என்றார் இதை கேட்டு கோபம் கொண்ட அப்துல்லா நபி இடம் வந்து நாயகமே எனது தந்தையை கொலை செய்ய அனுமதிக்கமாட்டீர்களா என்று கேட்டார்கள். அதை கேட்ட நபி அவர்கள் அவரிடம் நீஉனது தந்தையிடம் மென்மையாக உபகாரத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.
        
 நூல்:(தப்ஸீர் குர்துபி)

ஈமானும் அது தந்த உணவு சாமானும்

عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ: أَنَّ الْأَشْعَرِيِّينَ أَبَا مُوسَى وَأَبَا مَالِكٍ وَأَبَا عَامِرٍ فِي نَفَرٍ مِنْهُمْ، لَمَّا هَاجَرُوا وَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ وَقَدْ أَرْمَلُوا «1» مِنَ الزَّادِ، فَأَرْسَلُوا رَجُلًا مِنْهُمْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ، فَلَمَّا انْتَهَى إِلَى بَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَهُ يَقْرَأُ هَذِهِ الْآيَةَ" وَما مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُها وَيَعْلَمُ مُسْتَقَرَّها وَمُسْتَوْدَعَها كُلٌّ فِي كِتابٍ مُبِينٍ" فَقَالَ الرَّجُلُ: مَا الْأَشْعَرِيُّونَ بِأَهْوَنِ الدَّوَابِّ عَلَى اللَّهِ، فَرَجَعَ وَلَمْ يَدْخُلْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِأَصْحَابِهِ: أَبْشِرُوا أَتَاكُمُ الْغَوْثُ، وَلَا يَظُنُّونَ إِلَّا أَنَّهُ قَدْ كَلَّمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَعَدَهُ، فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ أَتَاهُمْ رَجُلَانِ يحملان قصعة بينها مَمْلُوءَةً خُبْزًا وَلَحْمًا فَأَكَلُوا مِنْهَا مَا شَاءُوا، ثُمَّ قَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: لَوْ أَنَّا رَدَدْنَا هَذَا الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَقْضِيَ بِهِ حَاجَتَهُ، فَقَالُوا لِلرَّجُلَيْنِ: اذْهَبَا بِهَذَا الطَّعَامِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّا قَدْ قَضَيْنَا مِنْهُ حَاجَتَنَا، ثُمَّ إِنَّهُمْ أَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا رَأَيْنَا طَعَامًا أَكْثَرَ وَلَا أَطْيَبَ مِنْ طَعَامٍ أَرْسَلْتَ بِهِ، قَالَ:" مَا أَرْسَلْتُ إِلَيْكُمْ طَعَامًا" فَأَخْبَرُوهُ أَنَّهُمْ أَرْسَلُوا صَاحِبَهُمْ، فَسَأَلَهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ مَا صَنَعَ، وَمَا قَالَ لَهُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:" ذلك شي رزقكموه ال

அஷ்ஹரி கூட்டத்தை சார்ந்த அபூமூஸா அபூமாலிக் அபூஆமிர் இன்னும் சிலர் தங்கள் ஊரிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த பொழுது அவர்கள் கொண்டு வந்த உணவு பயணத்தின் இடையில் காலியான பொழுது அவர்கள் நபி இடம் உணவை பெற்று வர ஒருவரை மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்கள் அவர் வேகமாக கிளம்பி பயணித்து மஸ்ஜிதுன் நபவியின் வாசலை அடைந்த பொழுது நபி அவர்கள்  என்ற வாசகத்தை சஹாபாக்களிடம் ஓதுவதை கேட்டார் இதை கேட்டவுடன் அவர் மனதில் இப்படி நினைத்தார் அஷ்ஹரி கூட்டத்தார் ஊர்ந்து செல்லும் பிராணிகளை விடவும் மட்டமானவர்கள் அல்ல நிச்சயம் அல்லாஹ் நமக்கு உணவு தருவான் நாம் நபி இடம் கேட்க வேண்டாம் என்று `நினைத்து எதுவும் கேட்காமலேயே தன் கூட்டத்தாரிடம் சென்றார் அவர் தனது கூட்டத்தாரிடம் சொன்னார் நீங்கள் சோபனம் பெறுங்கள் உங்களிடம்      உணவு தேடிவரும்  என்றார் . அப்போது அவர்கள் நபி அவர்கள் உதவி செய்வதாக வாக்களித்து அனுப்பி இருப்பார்கள் என்று நினைத்து கொண்டார்கள் இந்த நிலையில் இரு மனிதர்கள் ஒரு பெரிய தட்டு நிறைய ரொட்டியையும் இறைச்சியையும் கொண்டு வந்து கொடுத்தார்கள் அதை பெற்று அவர்கள் அனைவரும் சாப்பிட்டார்கள் ஆனாலும் அந்த உணவு பரக்கத்தாக இருந்தது எனவே அவரகள் அந்த உணவை நபி இடமே திரும்ப அனுப்ப முடிவு செய்து அதை கொண்டு வந்த இருவரிடமும் சொன்ன பொழுது அவர்கள் எங்கள் வேலை முடிந்து விட்டது என்று சொல்லி விட்டு செண்றார்கள் இதற்கு பின் நபி இடம் வந்த அவர்கள் நீங்கள் அனுப்பியதை போன்ற பரக்கத்தான சுவையான உணவை நாங்கள் பார்த்தது இல்லை என்று பாராட்டிய பொழுது நபி நான் எதையும் அனுப்பி வைக்கவில்லை என்றார்கள் அப்பொழுது அவர்கள் நடந்த அனைத்தையும் நபிக்கு கூறினார்கள் அதை கேட்ட நாயகம் சொன்னார்கள் அந்த ரிஸ்கை அல்லாஹ் உங்களுக்கு விஷேசமாக  தந்திருக்கின்றான் என்றார்கள்
                                                                  நூல்;(துர்ருல் மன்சூர்)

ஸஹாபாக்களைப்பற்றி நபிகளார்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَسُبُّوا أَصْحَابِي فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نَصِيفَه

இறைத்தூதர் . அவர்கள் கூறினார்கள் என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும், என் தோழர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி)

 நூல். புஹாரி 3673.

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنْ النَّاسِ فَيَقُولُونَ فِيكُمْ مَنْ صَاحَبَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُونَ نَعَمْ فَيُفْتَحُ لَهُمْ ثُمَّ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنْ النَّاسِ فَيُقَالُ هَلْ فِيكُمْ مَنْ صَاحَبَ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُونَ نَعَمْ فَيُفْتَحُ لَهُمْ ثُمَّ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ فَيَغْزُو فِئَامٌ مِنْ النَّاسِ فَيُقَالُ هَلْ فِيكُمْ مَنْ صَاحَبَ مَنْ صَاحَبَ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُونَ نَعَمْ فَيُفْتَحُ لَهُمْ

மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார் மீது படையெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், உங்களிடையே இறைத்தூதர் . அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா? என்று கேட்பார்கள். ஆம், இருக்கிறார்கள் என்று (போரிடச் சென்ற) அவர்கள் பதில் சொல்வார்கள். உடனே, போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்), உங்களிடையே இறைத்தூதர் அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கிறார்களா? என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள், ஆம், இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். உடனே அவர்களுக்கும் வெற்றியளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதருடைய தோழர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களுடன், தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ஆம், இருக்கிறார்கள் என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்.    அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ(ரழி)

நூல். புஹாரி 3649

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُ النَّاسِ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ يَجِيءُ قَوْمٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ وَيَمِينُهُ شَهَادَتَهُ
قَالَ إِبْرَاهِيمُ وَكَانُوا يَضْرِبُونَنَا عَلَى الشَّهَادَةِ وَالْعَهْدِ وَنَحْنُ صِغَارٌ

மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். பின்னர், ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தை முந்திக் கொள்ளும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி)

நூல்.புஹாரி 3651  

No comments:

Post a Comment