Thursday 15 May 2014

இஸ்லாமிய பார்வையில் நோயாளிகள்



மனிதனுடைய மகிழ்ச்சியை நிம்மதியை தொலைக்க கூடிய காரியங்களில் மிக முக்கியமானது அவனுக்கு வருகிற வியாதிகளாகும் வலி நிறைந்த இந்த நோயின் போது உடையாத உள்ளங்கள் மிக அரிது தான் இந்த நேரத்தில் மனிதனுக்கு மருத்துவ வழிகாட்டுதலும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் முகம் கோணாமல் சேவை செய்யும் பணியாளர்களும் தேவை அவனுக்கு தேவையான இந்த காரியங்கள் செய்யும் சிறந்த சேவையாளர்களாக நாடு முழுவதும் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களான (நர்சுகள்) சகோதர சகோதரிகள் இருக்கின்றார்கள் அருமையான இந்த செவிலியர்களின் சேவையை போற்றும் நாளாக  மே 12 ந்தேதி  அமைந்துள்ளது இந்த நேரத்தில் நோயாளிகளுக்கும் அவர்களுக்கு பணிவிடை செய்பவர்களுக்கும் இறைவனிடம் கிடைக்கும் மேன்மைகள் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
 
நோய்களால் கிடைக்கும் இறைவனின் கருணை மன்னிப்பு உயர் அந்தஸ்துகள்

وعن أبي هريرة وأبي سعيد عن النبي صلى الله عليه وسلم قال : " ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه "

முஸ்லிமான ஒருவனுக்கு ஏற்படும் சிரமம் நோய் கவலை துக்கம் நோயின் மன வேதனையிலிருந்து . அவனுடைய காலில் குத்தும் முள் உள்பட இவற்றின் மூலம் அவனுடைய பாவங்களை போக்கி விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 நூல். மிஸ்காத்.

وعن محمد بن خالد السلمي عن أبيه عن جده قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إن العبد إذا سبقت له من الله منزلة لم يبلغها بعمله ابتلاه الله في جسده أ في ماله أو في ولده ثم صبره على ذلك يبلغه المنزلة التي سبقت له من الله " . رواه أحمد وأبو داود

 அல்லாஹ்விடம் ஒரு மனிதனுக்கு உயர்ந்த அந்தஸ்து முந்தி விட்டால் (விதி) அதை அவன் தன்னுடைய நல்அமல்கள் கொண்டு அடையவில்லையானில் அல்லாஹ் அவனுக்கு அல்லது பொருள் அல்லது பிள்ளைகளால் சோதனையை ஏற்படுத்தி அதை தாங்கும் பொறுமையையும் வழங்கி அவனுக்கு தன்னிடம் முந்தி விட்ட அந்தஸ்தை அடைய செய்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல். அபூதாவூத்.
 .
وروي أن رجلا قال لموسى: يا موسى، سل الله لي في حاجة يقضيها لي هو أعلم بها، ففعل موسى، فلما نزل إذ هو بالرجل قد مزق السبع لحمه وقتله، فقال موسى: ما بال هذا يا رب ؟ فقال الله تبارك وتعالى له: (يا موسى إنه سألني درجة علمت أنه لم يبلغها بعمله فأصبته بما ترى لاجعلها وسيلة له في نيل تلك الدرجة)

 மூஸா நபி ஒரு காட்டின் வழியாக சென்ற பொழுது ஒரு மனிதனை சந்தித்தார்கள் அந்த மனிதர் நபி இடத்தில் எனக்கு ஒரு தேவை இருக்கின்றது அதை அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான் எனக்கு அது நிறைவேற அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்றார் அவர்கள் அவ்வாறே துஆ செய்தார்கள் சற்று நேரம் கழித்து அவ்விடம் அவர்கள் வந்த போது அந்த மனிதனை காட்டு விலங்கு கடித்து  கொன்ற நிலையில் கண்டு அதிர்ச்சியுடன் இறைவா இந்த மனிதனின் பிரச்சனை என்ன என்று கேட்ட பொழுது அல்லாஹ் சொன்னான் அந்த மனிதர் என்னிடம் உயர்ந்த அந்தஸ்தை கேட்டார் அவர் அந்த தகுதியை தன்னுடைய அமலை கொண்டு பெற மாட்டார் என்பது எனக்கு தெரியும் எனவே அந்த தகுதியை அவர் அடைவதற்காக நீங்கள் காணும் இந்த சோதனையை கொடுத்து அதை இவருடைய அந்தஸ்துக்கு காரணமாக ஆக்கினேன் என்றான்.

நூல். தப்ஸீர் குர்துபி

நோயும் மறுமையின் நிலையும்

وعن جابر قال : قال رسول الله صلى الله عليه وسلم : " يود أهل العافية يوم القيامة حين يعطى أهل البلاء الثواب لو أن جلودهم كانت قرضت في الدنيا بالمقاريض " . رواه الترمذي

நபி அவர்கள் சொன்னார்கள்.    உலகில் உடலாலும் இன்னும் பல்வேறு வகையிலும் சோதிக்கப்பட்டவர்களுக்கு மறுமையில் இறைவன் உயர்ந்த நற்கூலியை வழங்கும் போது உலகில் நிம்மதியாக வாழ்ந்தவர்கள் விரும்புவார்கள் நம்முடைய உடலின் தோல் உலகில் கத்தரிக்கோலால் துண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே நாமும் இந்த அந்தஸ்தை பெற்றிருக்கலாமே என்று விரும்புவார்கள்.

நூல்.  திர்மிதி

நோயும் படிப்பினையும் நோயும் ஈமானும்

وعن عامر الرام قال : ذكر رسول الله صلى الله عليه وسلم الأسقام فقال : " إن المؤمن إذا أصابه السقم ثم أعفاه الله منه كان كفارة لما مضى من ذنوبه وموعظة له فيما يستقبل . وإن المنافق إذا مرض ثم أعفي كان كالبعير عقله أهله ثم أرسلوه فلم يدر لم عقلوه ولم يدر لم أرسلوه " . فقال رجل يا رسول الله وما الأسقام ؟ والله ما مرضت قط فقال : " قم عنا فلست منا " . رواه أبو داود

நபி(ஸல்) அவர்கள் நோயை பற்றி கூறும் போது சொன்னார்கள் அல்லாஹ் ஒரு முஃமினுக்கு நோயை கொடுத்து பிறகு உடல் சுகத்தை கொடுத்து விட்டால் அது அவனுடைய கடந்த கால பாவத்திற்கு பரிகாரமாகவும் எதிற்காலத்திற்கு நல்ல உபதேசமாகவும் அமையும் முனாபிக்கான மனிதனுக்கு நோய் வந்து பிறகு அவனுக்கு உடல் சுகம் வழங்கப்பட்டால் அவன் கழுதையைப் போன்று கால் நடையைப் போன்று ஆகி விடுகின்றான் அது சேட்டை செய்கின்ற பொழுது அதை அதனுடைய உரிமையாளன் கட்டி போடுகின்றான் பிறகு அவிழ்த்து விடுகின்றான் ஆனால் அதற்கு தெரிவதில்லை ஏன்? கட்டி போட்டு பிறகு ஏன் விடுவித்தார்கள் என்று இவ்வாறு நபி சொன்ன போது ஒரு மனிதர் நோய் என்றால் என்ன இதுவரை நோய் எனக்கு வந்ததே இல்லை என்றார் உடனே நபி அவரிடம் நீ நம்மை விட்டும் விலகி விடு நீ நம்மை சார்ந்தவன் இல்லை என்றார்கள் இவர் உண்மையில் முனாபிக்காக இருந்தார்.

 நூல் .அபூதாவூத்

நோயும் அதற்கு எதிரான புலம்பலும்


وعن ابن عباس : أن النبي صلى الله عليه وسلم دخل على أعرابي يعوده وكان إذا دخل على مريض يعوده قال : " لا بأس طهور إن شاء الله " فقال له : " لا بأس طهور إن شاء الله " . قال : كلا بل حمى تفور على شيخ كبير تزيره القبور
. فقال : " فنعم إذن " . رواه البخاري

நபி அவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்க சென்றார்கள் அப்பொழுது அவர்களின் வழமைப்படி சொன்னார்கள் இந்த நோயால் உங்களுக்கு பிரச்சனை இல்லை இது உங்களின் பாவத்தை சுத்தப்படுத்த கூடியது என்றார்கள் ஆனால் அவர் சொன்னார் நீங்கள் சொல்வது போன்று அல்ல இந்த வயோதிகரின் மீது கொழுந்து விட்டு எரியும் காய்ச்சல் கப்ரில் கொண்டு போய் சேர்த்து விடும் போல் தெரிகிறது என்றார் உடனே நபி சொன்னார்கள் அப்படியானால் நீ சொல்வது போன்று அப்படியே ஆகும் என்றார்கள் அவரின் எண்ணப்படி அந்த காய்ச்சலே அவரின் மரணத்திற்கு காரணமாகி விட்டது
    
 நூல். புகாரி.

நலம் விசாரிப்பது நம் கடமை

وعن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : " حق المسلم على المسلم خمس : رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس

ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்கு செய்யும் கடமையாக 5 விஷயங்கள் இருக்கின்றது ஸலாமுக்கு பதில் சொல்வது நோயாளியை நலம் விசாரிப்பது ஜனாஸாவை பின் தொடர்வது அழைப்புக்கு பதில் சொல்வது தும்மியவனுக்கு யர்ஹமுகல்லாஹ் சொல்வது என்று நபி (ஸல்) சொன்னார்கள்.

நூல். புகாரி

நாயகமும் நலம் விசாரிப்பும்


عن أنس قال : كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند رأسه فقال له : " أسلم " . فنظر إلى أبيه وهو عنده فقال : أطع أبا القاسم . فأسلم . فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول : " الحمد لله الذي أنقذه من النار " . رواه البخاري

யூத மதத்திலுள்ள ஒரு சிறுவன் நோயுற்றிருந்தான். அவனை நோய் விசாரிப்பதற்கு சென்றிருந்த நபி(ஸல்) அவர்கள் அப்பையனின் தலைப்பக்கமாக உட்கார்ந்து அப்பையனிடம் நீர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள் எனக் கூறினார்கள். அப்பையனின் தலைப்பக்கம் நின்று கொண்டிருந்த தன் தந்தையை அப்பையன் பார்த்தான். அபுல்காசிமுக்கு கட்டுப்படு என அப்பையனின் தந்தை கூறினார். அப்பையன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். என் மூலம் அப்பையனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என கூறியவாறு எழுந்து சென்றார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ்(ரலி)

ஆதாரம் : அபூதாவூத். புகாரி

وأخرج ابن أبي شيبة وأحمد وعبد بن حميد والبخاري ومسلم والترمذي والنسائي وأبو يعلى وابن حبان وابن أبي حاتم والبيهقي في الشعب عن أنس « أن رسول الله صلى الله عليه وسلم غادر رجلاً من المسلمين قد صار مثل الفرخ المنتوف ، فقال له رسول الله صلى الله عليه وسلم : هل كنت تدعو الله بشيء؟ قال : نعم ، كنت أقول : اللهم ما كنت معاقبني به في الآخرة فعجله لي في الدنيا ، فقال رسول الله صلى الله عليه وسلم : سبحان الله . ! إذن لا تطيق ذلك ولا تستطيعه ، فهلا قلت ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار؟ ودعا له فشفاه الله

நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமான ஒருவரை நலம் விசாரிக்க சென்றார்கள் அவர் பலஹீனத்தின் காரணமாக சப்தம் குறைந்தவராக ஆகி குருவி குஞ்சு போன்று ஆகி விட்டார் நாயகம் அவரிடத்தில் நீ அல்லாவிடத்தில் ஏதேனும் துஆ செய்தாயா என்று கேட்டார்கள் அவர் ஆம் என்று கூறி விட்டு சொன்னார் இறைவா ஏதேனும் பாவத்தை கொண்டு நீ என்ன மறுமையில் தண்டிப்பதாக இருந்தால் அந்த தண்டனையை உலகிலேயே கொடுத்து விடு என்று துஆ செய்தேன் என்றார் அப்போது நபி அந்த மனிதரிடம் இறை தண்டனையை பெறுவதற்கு நீ உலகிலேயே சக்தி பெற மாட்டாய் மறுமையிலும் அந்த சக்தியை தேடாதே என்று கூறி விட்டு நீ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار என்ற துஆவை சொல்லியிருக்க வேண்டாமா என்று கேட்டார்கள் அவர் இதைக் கொண்டு துஆ செய்தார் அல்லாஹ் அவருக்கு சுகம் அளித்தான்.

நூல். தப்ஸீர் குர்துபி

நலம் விசாரிப்பின் நன்மைகள்

عاد أبو موسى الحسن بن علي ، قال : فقال له : عائدا (1) جئت أم زائرا ؟ قال : بل جئت عائدا ، قال : فقال علي رضي الله عنه : « أما إنه ما من مسلم يعود (2) مريضا ، إلا خرج معه سبعون ألف ملك يستغفرون له إن كان مصبحا حتى يمسي ، وكان له خريف (3) في الجنة ، وإن كان ممسيا خرج معه سبعون ألف ملك ، كلهم يستغفرون له ، وكان له خريف في الجنة »                                                          
அபூ மூஸா (ரலி) அவர்கள் ஹஸன் பின் அலியை நலம் விசாரிக்கச் சென்றார்கள் அங்கு அலி(ரலி) அவர்கள் அபூ மூஸாவிடம் நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று கேட்ட பொழுது அபூ மூஸா சொன்னார்கள் நான் உம்மை பார்க்க வரவில்லை நபியின் பேரரை நலம் விசாரிக்க வந்தேன் அலி (ரலி) அவர்கள் அபூ மூஸாவிடம் உங்கள் மீது எனக்கு உள்ள கோபம் நலம் விசாரிப்பது தொடர்பான ஹதீஸை கூறுவதை விட்டும் என்னை தடுக்கவில்லையா என்று கூறி விட்டு சொன்னார். நபி சொன்னார்கள் ஒரு மனிதனை நலம் விசாரிக்க சென்றால் அவன் அல்லாஹ்வின் அருகில் அருளில் மூழ்கி விடுகின்றான் அவன் நோயாளியின் அருகில் அமர்ந்து விட்டால் அந்த அருள் அவனை மிகைத்து விடும் என்றார்கள்.

நூல். பைஹகீ.

நலம் விசாரிப்பின் முறையும் அதன் ஒழுக்கமும்

وعن أبي أمامة أن رسول الله صلى الله عليه وسلم قال : " تمام عيادة المريض أن يضع أحدكم يده على جبهته

நபி அவர்கள் சொன்னார்கள் நலம் விசாரிப்பின் முழுமையாகிறது உங்களில் ஒருவர் நலம் விசாரிக்கும் போது நோயாளியின் நெற்றியின் மீது அல்லது அவருடைய கையின் மீதுதனது கையை வைத்து விசாரிக்க வேண்டும் என்றார்கள்.

நூல்.  மிஷ்காத்

وفي رواية سعيد بن المسيب مرسلا : " أفضل العيادة سرعة القيام " . رواه البيهقي في شعب الإيمان

நபி அவர்கள் சொன்னார்கள் சீக்கிரம் நலம் விசாரிக்க செல்வதே மிகச் சிறந்த நலம் விசாரிப்பு என்றார்கள்.

நூல். மிஷ்காத்
 
நோயாளியின் துஆவும் அவரை புறக்கணிப்பதால் ஏற்படும் அவரின் சாபமும்.

 وعن عمر بن الخطاب رضي الله عنه قال ك قال رسول الله صلى الله عليه وسلم : " إذا دخلت على مريض فمره يدعو لك فإن دعاءه كدعاء الملائكة " . رواه ابن ماجه

நபி அவர்கள் சொன்னார்கள் நோயாளி இடம் நீ சென்றால் அவரை உனக்கு துஆ செய்யும் படியாக ஏவுவீராக ஏனெனில் அவருடைய துஆ மலக்குகளின் துஆவை போன்று என்றார்கள்.
  
 நூல் இப்னு மாஜா

தமது வீடுகளில் நோயாளியாக உள்ள பெற்றோரையும் உறவுகள் கவனிக்காமல் உதாசினம் செய்து கொடுமைபடுத்த கூடியவர்கள் புரிந்து கொள்ளவும் அவருடைய சாபம் பொல்லாதது என்பதை புரிந்து கொள்ளவும்                       



No comments:

Post a Comment